Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் : புதிய அதிபர் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் : புதிய அதிபர் யார்?

on 03-11-2008 03:15

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். இத்தேர்தலில் ஒபாமா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல் 4ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.

கடும் போட்டி

இவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடிநசன் கட்சி சார்பில் ரேடியோ தொகுப்பாளர் சக் பால்ட்வின், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினி, சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.இருப்பி

  • Replies 66
  • Views 5.9k
  • Created
  • Last Reply

அவர் இவராக இருக்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

எனது எதிர்பார்ப்பு ஒபாமாவின் வெற்றி. உலகிற்கு ஏதாவது உருப்படியா செய்து அமெரிக்காவின் கெட்டுப் போய் கிடக்கும் பெயரை மாற்ற முனைவார் என்ற கோணத்தில்..! :)

கருத்து கணிப்புகளில் முன்னிலைகளில் இருக்கும் ஒபாமா நிறவெறிக்கு பலியாகி ஒரு வேளை வெற்றி ஈட்டாமல் இருக்கலாம். ஆனால் மக்கெயினின் வெற்றி அமரிக்காவின் மீதான மதிப்பை கட்டாயம் பாதிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமா வெள்ளை மாளிகைக்கு வருவார் என்று நினைக்கின்றேன் .

நுணாவிலான் , ஈழப்பிரியன் மறக்காமல் வாக்கு போட்டுவிடுங்கள் .

ஒபாமா அதிபராக வருவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்-ஒபாமா முன்னிலை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. லேட்டஸ்ட் சிஎன்என் கருத்துக் கணிப்பின்படி ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பராக் ஒபாமா குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

ஒரு மாதம் முன்பு 18 சதவீதம் வரை அதிக வாக்கு வித்தியாசத்தில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜான் மெக்கெயினை விட முன்னிலையில் இருந்தார் ஒபாமா. தேர்தல் நெருங்க நெருங்க இந்த வித்தியாசம் குறைந்து கொண்டே வருகிறது.

இந் நிலையில் நாளை (4ம் தேதி) தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஒபாமா வெறும் 6 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் முன்னிலையில் உள்ளதாகத் தெரிகிறது.

இருந்தாலும் அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளரான ஒபாமா வென்றுவிடுவார் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

நாட்டின் 44வது அதிபரைத் தேர்ந்தெடுக்க நாளை தான் 50 மாகாணங்களிலும் முறைப்படியான தேர்தல் நடக்கிறது. (இருப்பினும் சில மாகாணங்களில் சில பகுதிகளில் வாக்குப் பதிவு முன்பே தொடங்கி நடைபெற்று வருகிறது.)

அமெரிக்காவின் மாறுபட்ட டைம் சோனுக்கு ஏற்ப 50 மாகாணங்களிலும் நாளை வேறுபட்ட நேரங்களில் வாக்குப் பதிவு துவங்கும்.

நன்றி தற்ஸ் தமிழ்

இதுவரை வந்த கருத்துக் கணிப்புக்களின் படி ஒபாமா முன்னிலையில் இருக்கின்றார். ஆனால் ஒபாமா கறுப்பினத்தவர் மற்றும் முஸ்லீம் என்ற பிரச்சாரத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் பார்ப்பார்கள். இவற்றை வைத்து இதுவரை செய்த பிரச்சாரங்களினால் ஒபாமாவிற்கு பெரிதளவில் பாதிப்புக்கள் வரவில்லை. ஆனால் இனியும் வராதென்று நிச்சயமாகக் கூறவும் முடியவில்லை.

ஒரு வேளை முதற்கட்டத் தேர்தலில் ஒபாமாவிற்கு சாதகமான நிலை வந்து, இரண்டாம் கட்டத் தேர்தலில் பாதிப்புக்களும் வரலாம். ஒபாமா இந்தத் தேர்தலில் ஜெயித்து அமெரிக்க வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டுமென்றே பலர் எதிர்பார்க்கின்றார்கள். ஒபாமா ஜெயித்து வந்தால் ஒருவேளை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் கென்னடி, ஜிம்மி கார்டர் போல் உலக மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம். மற்றும் படி அவரை இயக்கப் போவது அமெரிக்க உளவுத்துறையான C I A தான்.

பொறுத்து பார்க்கலாம். இறுதிவரை திகிலாகவே இருக்கும் போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒபாமா வந்தால் உலகநாடுகள் கொஞ்சம் நிம்மதியாக சீவிக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது எதிர்பார்ப்பும் ஒபாமாவின் வெற்றி.

ஆனால் அவரை வாழவிட்டால் போதும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி யார் பராக் ஒபமாவா ? ஜோன் மெக்கெயினா ?

வீரகேசரி நாளேடு 11/3/2008 9:49:09 PM - உலகெங்கும் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. வாக்களிப்பு உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணி முதல் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் 44வது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க அமெரிக்காவின் 51 மாநிலங்களையும் சேர்ந்த சுமார் 130 மில்லியன் மக்கள் நாளை உத்தியோகபூர்வமாக வாக்களிக்கவுள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருந்தால் அதற்குத் தகுந்தவாறு நேரத்தை நீடித்துக் கொள்ள அனைத்து மாகாண உள்ளூர் நிர்வாகத்துக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடியிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். அவ்வப்போது யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். மாகாண வாரியாகவும் முன்னிலை அறிவிக்கப்படும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதிய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜோன் மெக்கெயினும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினெய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பராக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.

இவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் வானொலி தொகுப்பாளர் சக் பால்ட்வினும், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினியும், சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

இருப்பினும், ஜோன் மெக்கெயின்ஒபாமா இடையே தான் நேரடிப்போட்டி நிலவுகிறது.

ஜனாதிபதி தேர்தலுடன் துணை ஜனாதிபதி தேர்தலும் இன்று நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலையொட்டி, கடந்த ஜுன் மாதம் ஜோன் மெக்கெயினும், ஒபாமாவும் அவரவர் கட்சி வேட்பாளர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, வாக்காளர்களிடம் இருவரும் பிரசாரம் செய்யத் தொடங்கினர்.

நாளை தேர்தல் நடப்பதையொட்டி, இருவரும் இறுதிக்கட்ட வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். ஜோன் மெக்கெயின், வேர்ஜினியா மாநிலத்தில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். இந்த மாநிலத்தில், 1964 ஆம் ஆண்டில் இருந்து குடியரசு கட்சிதான் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு ஜோன் மெக்கெயின் பிரசாரம் செய்கையில், கருத்து கணிப்பில் பின்தங்கி இருந்தாலும், முன்னேறி வருவேன் என்று கூறினார்.

நெவடா, கொலராடோ, மிசோரி ஆகிய மாநிலங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமா இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். இவை கடந்த தேர்தலில் புஷ்சுக்கு வெற்றி தேடித்தந்த மாநிலங்கள் ஆகும். ஒபாமா தனது பிரசாரத்தின்போது, எங்களுக்கு சாதகமான அலை வீசுகிறது, இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன், அமெரிக்காவில் முழுமையாக மாற்றத்தை கொண்டு வருவோம், எங்களால் முடியும் என்று கூறினார்.

ஒமாமாவின் பாட்டி இன்று மரணமடைந்தார். புற்றுநோயால்? அவதியுற்றுந்த அவரை தனது தேர்தல் வேலைகளுக்கு மத்தியிலும் ஒமாமா அவருடன் இருநாட்களை கழித்தது குறிப்பிடத் தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது எதிர்பார்ப்பும் ஒபாமாவின் வெற்றி.

ஆனால் அவரை வாழவிட்டால் போதும்

இனம் இனத்தோடைதான் சேருமாம். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனம் இனத்தோடைதான் சேருமாம். :icon_mrgreen:

ஏன் கொலை முயற்சி ஏதாவது நடக்கிறதா? :D:D

இனம் இனத்தோடைதான் சேருமாம். :rolleyes:

நாசி நாட்டில் இருந்து இருந்து குணமும் அபடியே வருகிறது :lol::D

ஒபாமாவின் வெற்றி அமெரிக்க மக்களை மீண்டும் உலகலில் கெளரவப்படுத்தும்.

ஒபாமாவின் தோல்வி அமெரிக்காவை தலைகுனியசெய்யும்.................

பார்க்கலாம்.......

ஒபாமாவின் வெற்றி அமெரிக்க மக்களை மீண்டும் உலகலில் கெளரவப்படுத்தும்.

ஒபாமாவின் தோல்வி அமெரிக்காவை தலைகுனியசெய்யும்.................

பார்க்கலாம்.......

ஒபாமாவின் வெற்றி அமெரிக்க மக்களை மீண்டும் உலகலில் கெளரவப்படுத்தும்.

ஒபாமாவின் தோல்வி அமெரிக்காவை தலைகுனியசெய்யும்.................

பார்க்கலாம்.......

ஒபாமாவின் வெற்றி அமெரிக்க மக்களை மீண்டும் உலகலில் கெளரவப்படுத்தும்.

ஒபாமாவின் தோல்வி அமெரிக்காவை தலைகுனியசெய்யும்.................

பார்க்கலாம்.......

ஒபாமாவின் வெற்றி அமெரிக்க மக்களை மீண்டும் உலகலில் கெளரவப்படுத்தும்.

ஒபாமாவின் தோல்வி அமெரிக்காவை தலைகுனியசெய்யும்.................

பார்க்கலாம்.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் முடிவுகள் எப்பொழுது வெளியாகும் :icon_mrgreen: ?

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை , உங்களுக்கு 5 ம் திகதி தெரியவரலாம் என்று நினைக்கின்றேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை , உங்களுக்கு 5 ம் திகதி தெரியவரலாம் என்று நினைக்கின்றேன் .

அதென்ன எனக்கு மட்டும் 5 ம் திகதி அப்ப எல்லாருக்கும் எப்ப தெரியும் :icon_mrgreen::rolleyes::lol: ?

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன எனக்கு மட்டும் 5 ம் திகதி அப்ப எல்லாருக்கும் எப்ப தெரியும் :icon_mrgreen::rolleyes::lol: ?

சுப்பண்ணை , அமெரிக்க தேர்தல் முடிவு வெளிவரும் போது நீங்கள் நல்ல நித்தா கொண்டு கொண்டிருப்பீர்கள் , :D

விடிய எழும்பி பார்க்க 5 ஆம் திகதி ஆகிவிடும் .

6 ம் திகதிக்குள்ளை எல்லாருக்கும் தெரிய வரும் . :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை , அமெரிக்க தேர்தல் முடிவு வெளிவரும் போது நீங்கள் நல்ல நித்தா கொண்டு கொண்டிருப்பீர்கள் , :rolleyes:

விடிய எழும்பி பார்க்க 5 ஆம் திகதி ஆகிவிடும் .

6 ம் திகதிக்குள்ளை எல்லாருக்கும் தெரிய வரும் . :lol:

அப்பிடியோ சங்கதி அப்பசரி. நான் நினைச்சேன் நான் அமெரிக்காவுக்கு முக்கியமான ஆளாக்கும் அதால எனக்கு எல்லாருக்கும் தெரியக்குமுதல் தெரியுமாக்கும் என்று :icon_mrgreen::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் முடிவுகள் எப்பொழுது வெளியாகும் :icon_mrgreen: ?

எனக்கு கிடைத்த நெருங்கிய அமெரிக்க தொடர்புகள் மூலம்(பழைய கள்ளுக்கொட்டில் கூட்டாளி ஒருத்தன் உங்க இருக்கான்) அறியவருவது தேர்தல் முடிவுகள் தேர்தல் முடிந்த பின்னர்தான் தெரிய வருமாம். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு கிடைத்த நெருங்கிய அமெரிக்க தொடர்புகள் மூலம்(பழைய கள்ளுக்கொட்டில் கூட்டாளி ஒருத்தன் உங்க இருக்கான்) அறியவருவது தேர்தல் முடிவுகள் தேர்தல் முடிந்த பின்னர்தான் தெரிய வருமாம். :icon_mrgreen:

அய்..ய்...ய்...ய்...ய்... ....ஊ ...ஊ ..ஊ...... ஊ.... கு .....கு.... கு.... சபா முடியல :lol::rolleyes:

முதலாவது முடிவு:

டிக்ஸ்வில்லி நொட்ச் (Dixville Notch, New Hampshire)எனும் சிறு கிராமத்தில் நேற்று நள்ளிரவே தேர்தல் வாக்களிப்பு நிலையம் திறக்கப்பட்டு மக்கள் வாக்களித்தமையால் அதன் முடிவுகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கிராமத்தின் முடிவுதான் அனேக காலங்களில் முதல் முடிவாக அறிவிக்கபட்டு வந்துள்ளது என சி.என்.என் சொல்கின்றது. அதே போல இதன் முடிவுகள் அனேகமாக முழு அமெரிக்க முடிவுகளிற்கு கட்டியம் கூறுவதாகவும் கூறுகின்றது.

ஒபாமா: 15

மக்கெய்ன்: 06

நன்றி சி.என்.என்

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறவுகள்

ஒமாமாவின் பாட்டி இன்று மரணமடைந்தார். புற்றுநோயால்? அவதியுற்றுந்த அவரை தனது தேர்தல் வேலைகளுக்கு மத்தியிலும் ஒமாமா அவருடன் இருநாட்களை கழித்தது குறிப்பிடத் தக்கது.

2366576hz5.jpg

Obama Grandmother

This photo provided by the presidential campaign of Sen. Barack Obama, D-Ill., shows Obama in 1979 during his high school graduation in Hawaii with his grandmother Madelyn Lee Payne Dunham. Sen. Obama says his grandmother died Monday, Nov. 3, 2008. (AP Photo/Obama Presidential Campaign)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.