Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேய்முனை, வலைப்பாடு பகுதிகளை கைப்பற்றியதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவிப்பு

Featured Replies

  • தொடங்கியவர்

Sri Lanka army says seizes entire west coast

Sat Nov 15, 2008 11:25am IST

COLOMBO, Nov 15 (Reuters) - Sri Lanka's military on Saturday said it had seized the entire western coast of the Indian Ocean island, capturing the strategic Pooneryn area where Tamil Tiger artillery had kept soldiers at bay.

"We have completely taken over Pooneryn. We have gone up to the town, and control the roads from Pooneryn to Paranthan," military spokesman Brigadier Udaya Nanayakkara said. "We didn't find any artillery, because they must have taken those pieces away or hidden them." (Reporting by Bryson Hull; Editing by Jeremy Laurence)

http://in.reuters.com/article/domesticNews...15?rpc=401&

  • Replies 92
  • Views 9.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடமிருந்து பூனேரியை கைப்பற்றிய ராணுவம்

சனிக்கிழமை, நவம்பர் 15, 2008

கொழும்பு: விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய நகரான பூனேரி (Pooneryn) இன்று ராணுவத்திடம் வீழ்ந்தது.

வடக்கு இலங்கையில் உள்ள பூனேரி நகருக்குள் ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவு இன்று காலை நுழைந்துவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், வேறு விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

ராணுவத்தின் மிக முக்கியத் தளமாக விளங்கிய பூனேரி நகரை 1993ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தி கைப்பற்றினர்.

அதிலிருந்து புலிகள் வசமே இருந்த இந்தப் பகுதியை ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி இப்போது மீட்டுள்ளது. பூனேரி நகரை பிடித்துள்ளதால் வட மேற்கு கடல் பகுதி ராணுவத்தின் வசம் வந்துள்ளது. இதன்மூலம் யாழ்பாணத்தை அடைய ராணுவத்துக்கு புதிய பாதை கிடைத்துள்ளது.

இதுவரை யாழ்பாணத்துக்கு படைகளையும் சப்ளைகளையும் வான்வெளி மார்க்கமாகவே ராணுவம் அனுப்பி வந்தது.

பூனேரியைத் தொடர்ந்து கிளிநொச்சியை நோக்கிய ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாகியுள்ளது. ஆனால், புலிகள் கடும் எதிர் தாக்குதல் நடத்தி வருவதால் முன்னேற முடியாமல் தவித்து வருகிறது ராணுவம்.

இப்போது வட கிழக்கே அக்கரையான்குளம், மாங்குளம், பலாவி, நல்லூர் ஆகிய இடங்களில் இரு தரப்பினரும் கடும் போரில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று பேய்முனை மற்றும் வலைப்பாடு ஆகிய கிராமங்களை புலிகளிடம் இருந்து பிடித்து விட்டதாக ராணுவம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதல் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமாக தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

பூநகரி என்ன முழுக்க போனாலும் கவலை இல்லை. காரணம் பாதுகாக்கப்பட வேண்டியது போராளிகளின் உயிர்கள் அதுதூன் எமக்கு தற்போது தேவை காரணம் இழப்புகள் தற்போது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று . . கள நிலவரம் புரிந்தவர்களிற்கும் தலைவனின் கடந்தகால திட்டங்கள் புரிந்தவர்களிற்கும் மொத்தத்தில் விடுதலைப்புலிகளை முற்றுமுழுதாக நம்புவர்களிற்கும் எதிரியின் இடப்பிடிப்பு இழப்பாக இருக்கப்போவதில்லை. காரணம் ஒரு போராளியின் உயிர் எவ்வளவு விலையானது என்பது இந்த காலகட்டத்தில் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

களமாடும் வேங்கைகளிற்க வாழ்த்துக்களை தெரிவிப்போம். எதிரி எதைப்பிடித்தாலும் கவலை வேண்டாம். அவன் எமது வீட்டிற்குள்தான் வருகின்றான் என்பதனை மீண்டும் மீண்டும் நினைவில் வைத்துக்கொள்வோம். நாம் எதிரியின் வீட்டிற்குள் சென்றால்தான் எமக்கு ஆபத்து இது எமக்கு வெற்றிதான்.

இந்த மாதம் எமது புனித மாதம் தயவுசெய்து அந்த மாவீரர்களிற்கு மரியாதைகளை செலுத்திக்கொள்ளுங்கள். போராடத்தான் முடியவில்லை அவர்களிற்கான எமது கடமைகளையாவது செய்துகொள்வோம்

பரணி

உங்களுடைய இந்த கருத்துடன் எனக்கும் மாற்று கருத்து இல்லை.நிச்சயமாக தமிழர்களுக்கு இது புனிதமான மாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
அப்ப ஒருநாளைக்கு 129,600 ரொக்கட்டுக்கள் அடிக்கிறாங்கள் போல...... என்னே அறிவு..... தம்பிக்கு எந்த ஊர்? இடிவிழுந்தபட்டியா? அப்புறம் அது என்ன 10 நாள் கணக்கு? கப்பல் பாகிஸ்தானில் இருந்துதான் வருது எண்டு என்ன நிச்சயம்? அது சோமாலியாவில் இருந்தோ, இந்தியாவில் இருந்தோ வரலாம்.... யாழ், வர, வர, பொய்ப்பொத்தலாகிக்கொண்டிருக
  • கருத்துக்கள உறவுகள்

பூநகரியைக் கைப்பற்றிய இராணுவம், அப்படியே பரந்தனை நோக்கி நகர்ந்து பின்னர் ஆனையிறவையும் விரைவில் கைப்பற்றலாம் என்று "ஆய்வாளர்" டி.பி. ஜெயராஜ் ஆருடம் கூறியுள்ளார். A9க்கு மேற்குப் புறமான வன்னியின் பகுதிகள் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் தொடர்ந்து இருக்கத்தான் செய்யும். சிங்கள இராணுவம் தொடர்ந்தும் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது இதற்காகத்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புநகரி 93 இல் கைப்பற்றப்படவில்லை. 96 இல் இராணுவம் தானாக விலகியது.

  • கருத்துக்கள உறவுகள்

:) சயந்தன்,

நீங்கள் சொல்வது தவறு. 1993 இல் தவளை என்கிற பாரிய அழித்தொழிப்புச்சமரில் பூநகரித்தளம் புலிகளால் துடைத்தழிக்கப்பட்டது. இதன்போது 1100 சிங்களச் சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள். 400 புலிகளும் வீரமரணம் அடைந்தார்கள். ஆனால் பின்னர் புலிகள் இந்தப்பகுதியிலிருந்து விலகிக்கொள்ள ராணுவம் சத்தமின்றி இங்கு உள்நுழைந்தது. பின்னார் யாழ்க்குடா கைப்பற்றப்பட்டபின்னர் தாமாகவே அங்கிருந்து வெளியேற புலிகள் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

புலிகளுக்கு முதன் முதலில் அதீத வெற்றியைக் கொடுத்த தவளைச் சமர் பற்றி நீங்கள் அறியாமல் இருந்தது ஆச்சரியமே ?!வரலாற்றை எதற்கும் புரட்டிப் பாருங்கள், சிலவேளை உங்களுக்குப் புரிந்தாலும் புரியும் !

  • கருத்துக்கள உறவுகள்
Army handed over their positions in the area to IPKF in 1987 and regained them in 1992 in Operations Valampuri 1 and 2. In 11 November 1993 , LTTE made an attempt to capture the Poonaryn camp. In mid 1996 , the camp was withdrawn by the Army as a tactical measure .
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் ஆங்கிலச் செய்தியில் 93 கார்த்திகை மாதத்தில் பூநகரியைக் கைப்பற்ற புலிகள் முயன்றதாக எழுதுகிறார்கள். அது தவறு. அது புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டதே உண்மை. அதன் பிறகு அப்போதிருந்த ராணுவத் தளபதி சிசில் வைத்தியரத்ன "தோல்வி காணும் ஒரு ராணுவத்துக்குத் தளபதியாக இருக்க விரும்பவில்லை" என்று பதவி விலகியதும் வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரிக் கூட்டுப்படைத் தளம் 11.11.93 இலிருந்து மூன்று நாட்களாக நடாத்தப்பட்ட "ஒபேறசன் தவளை" தாக்குதல் நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகளால் தகர்த்தழிக்கப்பட்டது என்பது உண்மைதான்.

http://www.viduthalaipulikal.com/file/docs/2005/07/44-03.pdf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரிவாக எழுதாதது எனது தவறுதான்.

93 இல் புலிகள் ஒபரேசன் தவளையில் பூநகரி இராணுவத் தளத்தை துடைத்தழித்தார்கள் என்பது தெரிந்த விடயம் தான். ஆயிரக்கணக்கான இராணுவம் இறந்தது என்பதும் நீருந்து விசைப்படகுகள் புலிகளிடம் வந்து சேர்ந்தன என்பதுவும் உண்மையே.

ஆனால் அதுவொரு அழித்தொழிப்புச் சமரேதவிர நில மீட்பு சமரல்ல. தாக்குதலை முடித்துக் கொண்டு படையணிகள் உடனடியாகவே திரும்பி விட்டன. ஒரு ரி 55 ரக டாங்கி கைப்பற்றப்பட்டது முக்கியமானது.

95 தொடக்கத்தில் சந்திரிகாவுடன் பேச்சு நடந்த போது பூநகரியூடான பாதையை திறக்கும் வகையில் இராணுவத்தினர் பூநகரியில் சில மீற்றர் தூரம் பின்னகர்ந்திருக்கும் படி கேட்கப்பட்டது. அதை சந்திரிகா அரசு நிராகரித்து விட்டது.

1996 இறுதிப்பகுதிவரை இராணுவமே அப்பகுதியைத் தக்கவைத்திருந்தது. 1996 இல் முல்லைத்தீவு மீதான ஓயாத அலைகள் ஒன்று வெற்றியைத் தொடர்ந்து கிளிநொச்சியைக் கைப்பற்ற சத்ஜெய என்ற பெயரில் நடவடிக்கையை 3 கட்டங்களாக நடத்தி கிளிநொச்சியைக் கைப்பற்றியது இராணுவம். ஆனால் கைப்பற்றிய கையோடு பூநகரியை விட்டு தாமாகவே இராணுவத்தினர் பின்வாங்கி விட்டனர். இது நடந்தது 1996 ஒக்டோபர் மாதம். (அடுத்த மாவீரர் நாளுக்கான தாக்குதல் பூநகரி மீதுதான் என்று தகவல் அறிந்ததாலேயே பின்வாங்கினர் என்று சிலர் சொல்லக் கேள்வி.)

பின் 1998இல் மன்னாரையும் பூநகரியையும் இணைக்க மேற்கொள்ளப்பட்ட ரணகோச 1.2., நடவடிக்கையின் போது (இதுவும் முறியடிக்கப்பட்டது) பூநகரி படைத்தள பின்வாங்கல் ஒரு முட்டாள்தனமான வேலையென பல ஆய்வாளர்களால் கூறப்பட்டது.

வரலாற்றை புரட்டி பார்க்கையில் இதுதான் தெரிகிறது. ஆகவே 93 இல் புலிகள் கைப்பற்றவில்லை. 96 இல் இராணுவம் பின்னகர்ந்தது என சொன்னது தவறா......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனையிறவு மீதான தாக்குதலை ஆ.க.வெ தாக்குதல் என்றே கூறியுள்ளனரே தவிர எங்கேயும் தோல்வியடைந்த தாக்குதல் என்று குறிப்பிடவில்லை.

இராணுவத்தினர் நாள் ஒன்றிற்கே ஆயிரம் ஆட்லெறிகளுக்கு மேலாக பாவிக்கும் செய்தி உங்களை ஏனோ வந்தடையவில்லை.

இனி இன்றய நிலையில் மன்னாரிலிருந்து பூநகரி வரைக்கும் இராணுவம் வந்திட்டுது. இனி "பூநகரியில் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு" என்ற செய்திதான் வரும்.

இனி யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவத்தினரும் சேர்ந்து முன்னேற முயலும் போது என்ன நடக்கும் என்பதை சற்று சிந்தியுங்கள்.

முல்லைத்தீவு இராணுவ முகாமீதான தாக்குதலுக்கு பக்ககலமாக இருந்தது யாழ் மாவட்ட மக்களின் இடப்பெயர்வே. அதே போல ஜயசிக்குறு மீதான தாக்குதலுக்கு பலமாக இருந்தது வன்னியில் இடம்பெற்ற இடப்பெயர்வே.

ஒவ்வொரு தடவையும் மக்கள் பாரியளவில் இடம்பெயரும் போதுதான் புதிதாக இணைபவர்களின் எண்ணிக்கையும் மக்களின் பங்களிப்பும் உயர்வாக இருக்கும்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மக்களின் பங்களிப்பென்பது புலிகளுக்கு மிகச் சவாலாகவே உள்ளது. அதனாலேயே கட்டாய பாதுகாப்பு பயிற்சியில் தொடங்கி இப்போது கட்டாய ஆடசேர்ப்பில் வந்து நிற்கிறது. எப்பொழுது புலிகள் கட்டாய பயிற்சி அளித்தார்களோ அன்றிலிருந்து இன்று வரை அவர்களால் பாரிய வெற்றியை அரசியலிலும் சரி போர் முனையிலும் சரி பெறமுடியவில்லை.

எனவே இப்போது வன்னிப் பகுதியிலுள்ள பெருமளவான மக்கள் புலிகளை கேள்விக்குறியிடனே பார்க்கின்றனர். அதே நேரத்தில் புலம்பெயர் மக்களின் மனமோ தமது புலம்பெயர் இருப்பை உறுதி கொள்ளவும் பொருளாதார விருத்திக்காகவும் இரட்டை வேடம் பூண்டுள்ளது. இதன் வெளிப்பாட்டை இவ்வருட மாவீரர் தினத்தில் கண்கூடாக நோக்கலாம்.

(மாதம் 30 பவுண்ஸ் கொடுத்ததாலும் கதைக்கலாம் கொடுக்காவிட்டாலும் கதைக்கலாம் அதை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.)

Edited by ukraj

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(மாதம் 30 பவுண்ஸ் கொடுத்ததாலும் கதைக்கலாம் கொடுக்காவிட்டாலும் கதைக்கலாம் அதை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.)

கதைக்கலாம். தாராளமா கதைக்கலாம்

ஆனா அதை கண்டு கொள்ளத் தேவையில்லை

அதனாலேயே கட்டாய பாதுகாப்பு பயிற்சியில் தொடங்கி இப்போது கட்டாய ஆடசேர்ப்பில் வந்து நிற்கிறது. எப்பொழுது புலிகள் கட்டாய பயிற்சி அளித்தார்களோ அன்றிலிருந்து இன்று வரை அவர்களால் பாரிய வெற்றியை அரசியலிலும் சரி போர் முனையிலும் சரி பெறமுடியவில்லை.

எனவே இப்போது வன்னிப் பகுதியிலுள்ள பெருமளவான மக்கள் புலிகளை கேள்விக்குறியிடனே பார்க்கின்றனர். அதே நேரத்தில் புலம்பெயர் மக்களின் மனமோ தமது புலம்பெயர் இருப்பை உறுதி கொள்ளவும் பொருளாதார விருத்திக்காகவும் இரட்டை வேடம் பூண்டுள்ளது. இதன் வெளிப்பாட்டை இவ்வருட மாவீரர் தினத்தில் கண்கூடாக நோக்கலாம்.

மன்னிக்கவும். உங்களின் எஜமானர்கள் கற்று கொடுத்ததை இங்கு எழுதுகின்றீர்களா? புலிகள் கட்டாய இராணுவ பயிற்சி கொடுகின்றார்கள் என சொல்லும் நீங்கள் தமிழ் தேசிய விடுதலை போராட்டம் பற்றி எழுதுவதற்கோ அல்லது அதன் மீதான விமர்சனம் வைப்பதற்கோ அருகதை அற்றவர். ஆரம்பத்தில் நீங்கள் விளங்காம கதைகின்றீர்கள் என நினைத்தேன்.. ஆனால் இப்பதான் உங்களின் சுயரூபம் தெரிகின்றது.

இப்படி ஊடக விபச்சாரம் செய்வதிலும் விட தலையிற்கு முக மூடி போட்டுக் கொண்டு, காட்டி கொடுப்பாளராக பூநகரி வரை போயுள்ள ஆக்கிரமிப்பாளருடன் இணைந்து கொள்ளுங்கள். அதுவே உங்களுக்குரிய இடம்

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறவுகள்

:D சயந்தன்,

புரிகிறது. 93 இல் தளம் கைப்பற்றப்பட்டது. நிலப்பகுதி மீட்கப்படவில்லை.

நான் ஏதோ பூநகரித் தளம் 93 தக்கப்பட்டதையே நீங்கள் இல்லையென்கிறீர்களோ என்று நினைத்து விட்டேன்.தவறுதான்.

நன்றி !

  • கருத்துக்கள உறவுகள்

:D மிகவும் ஒரு சிக்கலான விடயம் பற்றி யூ கே ராஜ் கருத்து எழுதியிருக்கிறார்.

கட்டாய ராணுவப் பயிற்சியென்பதும், ஆள்சேர்ப்பு என்பதும் வன்னியில் நடந்ததா இல்லையா என்று இப்போது கருத்து மோதுவது தருணமில்லை.

புலிகள் அப்படிச் செய்திருந்தாலும் அதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. அங்கு வசிக்கும் மக்களைக் காக்கவே அவர்கள் அப்படிச் செய்திருக்கலாம். அதற்காகப் புலிகள் இன்று பிவாங்குவதன் காரணம் இந்த ஆள்சேர்ப்புத்தான் என்றால் அது முழங்காலுக்கும், மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடு விடயம்.

ஆகவே விமர்சிப்பதை நிறுத்திவிட்டு இனி மேற்கொண்டு முன்னேறும் வழிகளைப் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

எழுதலாம் தான் நுணா. ஆனால் நான் எழுதிறதைப் பார்த்துட்டு, சரிநிகரில் இராணுவ கட்டுரைகளை தொடர்ந்து எழுதி கொண்டு வந்த டி.சிவராம் அண்ணாவின் ஆவி கூட என்னை மன்னிக்காது. பரவாயில்லையா?

இல்லை நிழலி. நீங்கள் சரிநிகரில் எழுதியதாக எங்கோ சொன்ன நினைவு. பிழையாக விளங்கி விட்டீர்களோ தெரியாது. எழுத்தாற்றல் உள்ள நீங்கள் நிறையவே எழுதலாம். தராக்கியின் இடத்தை கூட நீங்கள் விரும்பினால் நிரப்பலாம் என்ற கருத்துப்பட தான் எழுதி இருந்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.