Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியாபாரியா பூசாரியா??

Featured Replies

அட இது எங்கே நடந்தது. அதையும் ஒருக்கால் எடுத்து விடுங்கோ........

வசம்பு அவர்களே அந்த கோயில் எங்கே விலாசம் எல்லாம் எழுதலாம். படங்கள் கூட தரலாம் பிறகு அதுக்கும் எப்படியும் ஒரு வழி பண்ண நீங்களே விமர்சனம் எழுதி சிங்கள தூதுவனின் ஒற்றர்கள் மூலம் புலி முத்திரை குத்தி விடுவீர்கள்.

அக் கோவில் கடந்த வருடம் மாத்திரம் வன்னி, பூநகரி பிரதேச மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு கோடி ரூபா தமீழழக்காசு முதலீடு செய்துள்ளதாக அவர்களது கோயில் தகவல் பலகையில் படங்களுடன் அடியார்களின் பார்வைக்கு வெளியே வைத்துள்ளார்கள். இன்றைய தகவலின் படி அந்த தொழிற்சாலைகளில் ஒன்றான செங்கட்டி உற்பத்தி நிறுவனம் இன்று அல்லல் படும் மக்களுக்கு தற்காலிக இடம் பெயர்ந்தோர் குடிகளின் தடுப்பு சுவருக்கு கற்களை இலவசமாக வழங்குகிறது. அறிந்த வரையில் 60 பேர் வரை வாழ்வாதாரம் இந்த தொழிற்சாலை மூலம் பெறுகிறார்கள்.

இக்கோயில் சிங்களதூதுவனுக்கு ஒரு சிவராத்திரி அன்று இரவு 12.45 மணிக்கு அழைத்து வந்து கௌரவித்தார்கள். அவர் வந்த நேரம் அடியார்கள் அங்கு அதிகமாக இல்லை. பல நிர்வாக உறுப்பினரும் சமூகமாகவில்லை. கதை வெளியே வந்தவுடன் நிர்வாகத்திற்குள்ளேயே அடிபாடு. யார் அவரை கூட்டி வந்தவர்கள் என்று.நிர்வாகத்தில் பலருக்கு தெரியாது தூதுவரை கூட்டி வந்த விசயம். ஒரு கோடாரிபாம்பு தான் மும்மரமாக இதை செய்துள்ளார். கூட்டத்தில் அவரை நீக்குமாறு அடியார்கள் கேட்ட போது நிர்வாகம் முடியாது என்று சொல்லி விட்டது . அதன் பின் முழு அடியார்களின் வாக்கெடுப்புடன் நிர்வாகம் செயல் இழக்க வைக்க பட்டு. புதிய நிர்வாகம் தற்காலிகமாக இயங்கியது. பின் தேர்தல் மூலம் புதியநிர்வாகம் பொறுப்பேற்றது. தேர்தலில் பழைய நிர்வாக உறுப்பினர்களும் போட்டி இட்டார்கள். வெற்றி பெற முடியவில்லை.

புதிய நிர்வாகம் புதிய சிந்தனையுடன் செயலாற்றியதால் வருமானத்தின் ஒரு பகுதி அல்லல் படும் ஈழமக்களுக்கு உதவுதென யாப்பின் மூலமே எழுத்தில் பதியப்பட்டுள்ளது.. இனி தொடர்ந்து வரும் புதிய நிர்வாகமும் அந்த நடைமுறையை பின்பற்றும். இல்லையேல் கருனை உள்ளம் கொண்ட யாராவது ஒரு அடியார் கூட்டத்தில் கேட்பார் . யாப்பின் படி நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும். ஏனென்றால் கோயில் ஒரு தனியாரினது இல்லை. அங்கத்தவரை பதிந்து இந்து மக்களை பிரதிநிதுவபடுத்து கிறது.

ஒருமாலை போட்டதனால் வந்த மாற்றம் தான் இவை எல்லாம்.

தியாகி திலிபன் சொன்னது போல் மக்கள் விழிப்படைய வேண்டும். எதிரியின் சூழ்ச்சியை முறியடிக்கலாம். இது புலம் பெயர் தேசத்து தமிழருக்கும் பொருந்தும்.

  • Replies 98
  • Views 14.8k
  • Created
  • Last Reply

நியாயம் பார்த்து , சிந்திச்சு கதைப்பவர் எண்டு தான் நினைத்தேன் , உறுதிப்படுத்த தான் இது தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தேன். இவ்வாறு எத்தனை பேரிடம் ஆதாரம் கேட்டாரோ???

மற்றும் படி இவ்வாறானவர்களிடம் விவாதம் செய்வது பொய் வேலை. புகை ஒத்துவராது எண்டெல்லாம் ரீல் விட்டவர்கள்.

Edited by பல்லவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல்லவன் விவாதம் இன்னமும் கொஞ்சம் போனால்ப்பிறகு எசியன் ரிறிபுன் மற்றும் தூதரக இணையத்தளங்களின் இணைப்பினை கொடுக்கலாமென நினைத்தேன் நீங்களே இணைத்து விட்டீர்கள்.நான் முன்னரே இணைத்திருந்தால் ஏதோ என்னுடைய சொந்தப் பிரச்சனைக்காக பழிவாங்கவே இப்படியொரு பதிவைப் போட்டதாகவோ அல்லது ஏதோ நான் கோயிலை புடுங்கி அதிலை பூசை செய்யப்போறதாய் திசை திருப்பி விட்டிருப்பார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு அவர்களே அந்த கோயில் எங்கே விலாசம் எல்லாம் எழுதலாம். படங்கள் கூட தரலாம் பிறகு அதுக்கும் எப்படியும் ஒரு

வழி பண்ண நீங்களே விமர்சனம் எழுதி சிங்கள தூதுவனின் ஒற்றர்கள் மூலம் புலி முத்திரை குத்தி விடுவீர்கள்.

அக் கோவில் கடந்த வருடம் மாத்திரம் வன்னி, பூநகரி பிரதேச மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு கோடி ரூபா தமீழழக்காசு முதலீடு செய்துள்ளதாக அவர்களது கோயில் தகவல் பலகையில் படங்களுடன் அடியார்களின் பார்வைக்கு வெளியே வைத்துள்ளார்கள்.

நேசன் இந்தக் கோயில் விவகாரத்தினைத்தான் எழுதியிருந்தேன் ஆனால் அதன் புதிய நிருவாகம் இப்பபொழுது நன்றாக நடப்பதனால் அந்தக் கோயிலின் பெயரை நான் எழுதவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்துக்கு வந்த சிறிலங்கா அணியினரை ஈலிங் கனக துர்க்கை அம்மனுக்கும் ஒருவர் கூட்டிக் கொண்டு வர இருந்தார். சிறிலங்கா அணி கோவிலுக்கு வரும் நேரத்தில், கோவிலில் இருந்த பக்தை ஒருவர், கோவிலில் உள்ள எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி, கோவிலுக்கு சிறிலங்கா அணி வந்தால் எனது உடலுக்கு நெருப்பு மூட்டுவேன். எனது உடலைத் தாண்டித்தான் சிறிலங்கா அணி கோவிலுக்கு செல்லும் என்றார். அதாவது கோவிலுக்கு வரும் சிறிலங்கா அணி கும்பிட மட்டும் வர நினைக்கவில்லை. தங்களின் பிரச்சாரத்தை உலகுக்குச் சொல்வதற்காகவே கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தது. அப்பெண்மணியின் முடிவினால் சிறிலங்கா அரசு நடாத்தவிரும்பிய பிரச்சாரமொன்று தோல்வியில் முடிவடைந்தது.

கந்தப்பு அன்று அதனைச் செய்த அந்த அக்கா எனக்கு பழக்கமானவர்தான் ஆனால் அவரைப் போலவே பக்தியும் அதே நேரம் உண்மையான தமிழ் உணர்வும் உள்ளவர்கள் எத்தனைபேர் ?? எல்லாரிற்கும் பக்தி மட்டும் கண்ணை மறைத்துள்ளது. தமிழ்உணர்வு மாயையாகவே உள்ளது.

சிங்கள பேரினவாத அரசு தமிழர்களின் விடுதலை போராட்டத்திற்கு எதிரான தனது பொய்ப்பிரச்சாரத்திற்கு எமது கோவில்களை

பயன்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்கிவிடாது, கோவில்களை நிர்வகிப்பவர்கள் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும்.

தமிழர்களின் விரலாலே தமிழர்களின் கண்ணை குத்தும் சிங்களத்தின் நரித்தனத்திற்கு

தமிழர்களின் எந்தவொரு நிறுவனமும் பலியாகிவிடக் கூடாது!!!

இதற்கு முன்பு ஒரு தடவை இந்த படங்கள் யாழ்களத்தில் இணைக்கப்பட்ட பொழுதே இதையொத்த கருத்தை பதிந்துள்ளேன் என நினைக்கிறேன்

Edited by vettri-vel

வாங்கோ வாங்கோ :unsure:

வாங்கோ வாங்கோ :unsure:

வந்து பலப்பல வருடங்கள் ஆகிவிட்டது சாத்திரியாரே!!! :)

இதற்கு முன்பு ஒரு தடவை இந்த படங்கள் யாழ்களத்தில் இணைக்கப்பட்ட பொழுதே இதையொத்த கருத்தை பதிந்துள்ளேன் என நினைக்கிறேன்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே ஒருசிலர் நீதிமன்றத்தில் வழக்காடுவது போல் ஆதாரம் கேட்டு வாதாடுகின்றார்களே தவிர எதிரிகளின் ஒருசில நடவடிக்கைகளை சிந்திக்க தவறி விடுகின்றனர்.

சில வேளைகளில் அடுத்த முறை மகிந்த அவர்களும் இரகசியமாக வந்து கம் கோவில் பண்டாரி ஐயருடன் பொன்னாடை போர்த்தி படம் எடுத்து உலகில் தங்களுக்கு சார்பான போலி நல்லெண்ண கொள்கைகளை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.

அதுசரி கம் கோயில் ஐயர் அஞ்சாறு மாடி வீடுகளை இந்தியாவிலை வாடைகைக்கு விட்டிருக்கிறாராம் உண்மையோ :) ஏனெண்டால் இஞ்சை குளிர் தொடங்கிட்டுது அங்கை போய் வெய்யில்வெக்கையோடை அந்தமாதிரி :unsure: இருக்கலாமெண்டு யோசிக்கிறன் அதுதான் ஏதும் அவரிட்டை அரை விலைக்கு கேட்டுப்பாக்கலாமெண்டு :o

எடியே சாத்து 150 யூரோ கைமாத்தாய் தரேலுமே பக்கத்து காணி மலிவுவிலைக்கு வருது :D

சில வேளைகளில் அடுத்த முறை மகிந்த அவர்களும் இரகசியமாக வந்து கம் கோவில் பண்டாரி ஐயருடன் பொன்னாடை போர்த்தி படம் எடுத்து உலகில் தங்களுக்கு சார்பான போலி நல்லெண்ண கொள்கைகளை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.

நன்றி கு.சா! நினைவூட்டியதற்கு!! :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கு.சா! நினைவூட்டியதற்கு!! :unsure:

நீங்கள் நன்றி தெரிவித்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமாக 'நான்' பொதுநலத்துக்காக கடை வைத்தேன்.. பெயர் 'மாந்தர் கடை'. கடையில் எனக்கென்ன அக்கறை? எனது மூலதனம் இல்லைத்தானே.. சம்பளத்துக்கு வேலை ஆள்.. அவர் சாமான்களின் விலையில் ஒரு சதமும் குறைக்கமாட்டார்.. வருபவர்களை வரவேற்கமாட்டார்.. வாங்கினால் வாங்கு.. இல்லாட்டி போ.. அவருக்கு சம்பளம் வரும்தானே.. மரக்கறிகள் அழுகி குப்பைக்கு போகும்.. ஆனால் வாராவாரம் மரக்கறியள் வரும்.. குப்பைக்கு போனால் என்ன.. எங்கை போனால் என்ன.. மூலதனம் என்ரை இல்லைத்தானே..?

நான்தான் இங்கை பொறுப்பு.. மனுசி கல்விக்கு பொறுப்பு.. ரண்டுபேரும் பென்சிலதான் சேவை செய்யுறம்.. ஆனால் நான்தான் வேலைக்கு போறனான்.. இப்ப மனித நேய கொலக்சனுக்கு வீடு வீடா போறம்.. என்னோட வேலை செய்யுறவங்க வீட்டையும் போனம்.. 'உனக்குத்தான் தெரியுமே.. இந்த சம்பளத்தில வருமானத்துக்கும் பார்க்க செலவு.. விருப்பம் இருந்தாலும் வசதி இடம் கொடுக்குதில்லையே!' என்கிறார்கள்.. உண்மைதான்.. என்ரை சம்பளம்தானே அவைக்கும்.. ஆனா நாங்கள் 'பென்சில'..!!

வணக்கம் சோழியன் கோயில் கதைக்குள் நீங்கள் ஒரு மக்கள் கடையைப் பற்றியும் மற்றும் புனi;வாழ்வுக் கழகத்திறகாக பணம் சேர்க்கும் ஒருவரைப் பற்றியும் (நிறுவனங்களின் பெயரை மாற்றி) குற்றச் சாட்டினை வைத்துள்ளீர்கள். உங்களிற்கும் யெர்மனியில் அவைகளிற்கு பொறுப்பானவர்களை தெரிந்திருக்கும் அல்லது அவைகளின் விபரங்களை எனக்கு தனி மடலில் அல்லது தொலை பேசியில் தெரியப் படுத்தவும் சம்பத்தப் பட்டவர்களிற்கு தெரியப் படுத்துகிறேன். எனவே தெடார்ந்து கம் கோயில் நிருவாகம் பற்றி தொடர்ந்து கருத்தாடுவோம் நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒருபுறம்....... இன்னொன்று அது ஜேர்மனி டோட்மூண்ட் நகரில் இருக்கும் தமிழ் கடைகளுக்கு எல்லாம் கோபுரம் போல் ஒரு வர்த்தக மாளிகை. ஏன் சிறிய பல்பொருள் அங்காடி என்றே கூறலாம். அப்படி மாபெரும் பணச்செலவில் ஆரம்பிக்கபட்டது தான் இந்த தமிழ்க்கடை. கோபுரம் போல் இந்த தமிழ்க்கடையின் உரிமையாளரும் ஹம் காமாட்சி அம்பாள் பிரதம குருக்களும் பங்காக நடத்துகின்றனர். பிராமணனின் கோட்பாட்டையே விற்கும் இவர் போன்றோரை விபச்சாரிகளாக கருதுவதே சிறந்தது.

உங்கடை இலைமறை காய் கலைஞன் தேவராசாவும் கம் ஐயருக்கு வக்காளத்து வாங்கிறார்

http://www.tamilmtv.com/view_video.php?vie...amp;category=mr

உதாரணமாக 'நான்' பொதுநலத்துக்காக கடை வைத்தேன்.. பெயர் 'மாந்தர் கடை'. கடையில் எனக்கென்ன அக்கறை? எனது மூலதனம் இல்லைத்தானே.. சம்பளத்துக்கு வேலை ஆள்.. அவர் சாமான்களின் விலையில் ஒரு சதமும் குறைக்கமாட்டார்.. வருபவர்களை வரவேற்கமாட்டார்.. வாங்கினால் வாங்கு.. இல்லாட்டி போ.. அவருக்கு சம்பளம் வரும்தானே.. மரக்கறிகள் அழுகி குப்பைக்கு போகும்.. ஆனால் வாராவாரம் மரக்கறியள் வரும்.. குப்பைக்கு போனால் என்ன.. எங்கை போனால் என்ன.. மூலதனம் என்ரை இல்லைத்தானே..?

சில தமிழர்கள் தமிழ் கடைக்கு போனால் மரக்கறிகளை எடுத்துப்பார்த்து இது என்ன மெல்லீசா இருக்கு, இது என்ன காய்ந்து போய் இருக்கு, குறைச்சு போட மாட்டிங்களோ, தொகையாய் எடுத்தால் என்ன விலை போடுவீங்கள், என்ன கறித்தூளுக்கை ஓடை அரைச்சு போடுறாங்களாம், தமிழ்கடையளிலை

டேற் முடிஞ்ச சாமாங்களை விக்கிறாங்களாம் உங்களிட்டை என்ன மாதிரி, இப்படி தேவை இல்லாத பிரச்சனைகளை தமிழ்க்கடைகளில் போய் ஏற்படுத்துவார்கள். பின் எதையுமே வாங்காமல் ஒரு கறிவேப்பிலை பைகட்டை எடுத்துகொண்டு போய்விடுவார்கள். இதனால் ஏற்கனவே கொதிப்படைஞ்சு போய் இருக்கும் கடைக்காரர்கள் சிலவேளைகளில் நீங்கள் போகும் போது வரவேற்காமல் விட்டிருக்கலாம். அடுத்தது சாமான்களில் எப்படி விலையை குறைப்பது? இன்று ஜேர்மனியில் போட்டி காரணமாக வாங்கிய விலைக்கே சாமான்களை விற்கும் நிலையில் இருக்கின்றனர். சிலர் வாங்கிய விலையிலும் குறைவாகவே விற்கின்றனர்.

இப்பொழுது சராசரி ஜேர்மனியில் எல்லா நகரங்களிலும் தமிழ்கடைகள் இருக்கின்றது. ஆனாலும் சிலர் நடந்து கொள்வது வேடிக்கையாக இருக்கும். மொஞ்சன்கிளட்பாக்கில் வசிக்கும் ஒருவர் அங்கு இருக்கும் கடையில் பொருட்களை வாங்காது டோட்மூண்ட் போவார் ஏன்னென்றாலாம் டோட்மூண்டில் சாமான்கள் மலிவாம். 10 கிலோ பசுமதி அரிசி, 2 போதல் கிங்ஸ் தூள், வேறு சுவைச்சரக்குகள் என சில சாமான்களை வாங்குவார். கேள்வி என்னவென்றால் மொஞ்சன்கிளட்பாக்கில் இருந்து டோட்மூண்ட் போக எவ்வளவு எரிபொருள் தேவை? அதன் விலை என்ன? இந்த சாமான்களை டோட்மூண்டில் வாங்குவதால் எவ்வளவு பணம் மிச்சம் பிடிக்கின்றார்? அங்கும் போய் நாம் மொஞ்சன்கிளட்பாக்கில் இருந்து காரில் வருகின்றோம் குறைத்து போடுங்கள் என்று அடம் பிடிப்பார்கள்.

பொதுவாக தமிழர்கள் வரவேற்பதில் குறை சொல்லும் அளவுக்கு நடப்பதில்லை. ஆனாலும் இப்படியானர்வர்கள் கொடுக்கும் தொல்லையினால் கடைக்காரார்கள் கொதிப்படைந்து இருப்பதனால் சிலவேளை குறிப்ப்ட்ட நண்பர் போகும் போதும் கடைக்காரர் கடுப்பில் இருந்திருந்தபடியால் வரவேற்காது விட்டிருக்கலாம். இல்லை நண்பரே இந்த மாதிரி பார்ட்டியோ யார் கண்டது?

நான் தான் இங்கை பொறுப்பு.. மனுசி கல்விக்கு பொறுப்பு.. ரண்டுபேரும் பென்சிலதான் சேவை செய்யுறம்.. ஆனால் நான்தான் வேலைக்கு போறனான்.. இப்ப மனித நேய கொலக்சனுக்கு வீடு வீடா போறம்.. என்னோட வேலை செய்யுறவங்க வீட்டையும் போனம்.. 'உனக்குத்தான் தெரியுமே.. இந்த சம்பளத்தில வருமானத்துக்கும் பார்க்க செலவு.. விருப்பம் இருந்தாலும் வசதி இடம் கொடுக்குதில்லையே!' என்கிறார்கள்.. உண்மைதான்.. என்ரை சம்பளம்தானே அவைக்கும்.. ஆனா நாங்கள் 'பென்சில'..!!

ஒரு கணம் யோசிச்சு பாருங்கள். இங்கு ஜேர்மனியில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மாதாந்த நிதி சேகரிப்போர் இவாறான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். பணம் சேகரிப்போர் ஒரு வீடு வாங்கினால், கார் வாங்கினால், அல்லது விடுமுறையில் வேறு நாடுகளுக்குச் சென்றால் நண்பர் கூறியமாதிரி தான் சிலர் பேசிக்கொள்வார்கள். இது எரிச்சலின் வடிவம் என்பதில் ஐயம் இல்லை. நாம் அவ்வாறான ஒரு செயலைச் செய்ய முன்வராத போது இன்னுமொருவன் தனக்கு நடக்ககூடிய பிரதி கூலங்களையும் பொருட்படுத்தாது இவாறான ஒரு சேவையை செய்யும் இடத்தில் நாம் இப்படி கட்டூக்கதைகளை கட்டிவிடுவது எந்த விதத்தில் நியாயம்?

பி.கு: புலம் பெயர்ந்த நாடுகளில் எதுவித முன் கட்டணங்களும் இன்றி சில இடங்களில் வீடு, கார், தளபாடங்கள் போன்றவற்றை வாங்கும் வசதி உண்டு என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

மன்னிக்க வேண்டும் இது பூசாரியா வியாபாரியா என்ற தலைப்பில் நடக்கும் விவாதம் நண்பர் ஒருவர் சொன்ன கருத்துக்கு தான் எனது மனதில்பட்ட கருத்தை சொன்னேன். இதனை நான் திசை திருப்புவதாக யாரும் நினைக்க வேண்டாம். தலைப்போடு தொடர்வோம். இல்லையேல் இதற்காக கள பொறுப்பாளரின் துணையோடு வேறு தலைப்பில் தொடருவோம்.

Edited by mathuka

உங்கடை இலைமறை காய் கலைஞன் தேவராசாவும் கம் ஐயருக்கு வக்காளத்து வாங்கிறார்

விளம்பரங்கள் என்று அவர்கள் கொடுக்கும் போது தமிழ் எம் ரீவி இணையம் அதனை வெளியிடுவதில் தப்பு ஏதும் இல்லை என்று நினைக்கின்றேன். நீங்கள் கூறும் நபருக்கும் கோவிலுக்கும் தொடர்புகள் இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் அது அவரின் தனிப்பட்ட பிரச்சினை. எனக்கு இப்படியான செயல்களை இன்றைய நிலையில் ஹம் ஆலயம் செய்வது சரி என படவில்லை. அது அவருக்கு சரியாக பட்டிருக்கலாம் இது ஒவ்வொருவருடைய மன விருப்பு.

அத்துடன் தமிழ் எம் ரீவி இணையத்தில் அங்கத்தவராக இருப்போர் தாம் விரும்பியவற்றை இணைக்கலாம். அதற்கு அந்த இணையம் இடம் அளித்திருக்கின்றது

Edited by mathuka

மதுகா! கடைக்காரர்களைப்பற்றியும் வாடிக்கைகாரர்களைப்பற்றியும

அடுத்தது.. நான் சாதாரண சம்பளத்தில் வேலை செய்கிறேன்.. எனக்கும் மனைவிக்கும் இரண்டு 'பென்ஸ்' கார் வாங்குகிறேன்.. அது கடனில் வாங்கியதாகவும் இருக்கலாம். நான் பென்ஸ் காரில் சைக்கிளில் வேலைக்கு செல்பவனிடம் போய் 'பங்களிப்பு' கேட்டால்.. அவனது மனதில் முதலில் என்ன தோன்றும்..?

மற்றும்படி இங்கே எரிச்சல் பொறாமை என்ற உணர்வுகளுக்கு இடமில்லை. சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் சாதாரண உணர்வுகள்தான் இவை. மற்றும்படி கட்டுக்கதைகளை இங்கே இடவேண்டிய அவசியம் எனக்கில்லை.

ஒருவர் பென்ஸ் காரில் சென்று பங்களிப்பு கேட்டாலோ அல்லது நடந்து சென்று பங்களிப்பு கேட்டாலோ கொடுப்பவருக்கு அது தேவை இல்லாத விடயம். ஏனெனில் கொடுப்பவர் எமது தாயகத்துக்கே கொடுக்கின்றார். அந்த பென்ஸ்காரில் வந்தவருக்கு அல்ல. அடுத்தது இந்த புலம் பெயர் நாடுகளில் எவரும் சாப்பிட கூட முடியாத ஏழைகள் கிடையாது. எல்லோருக்கும் உணவுகள் கிடைக்க வழி செய்கின்றார்கள். தலைவர் மாவீரர் தின உரையில் சொன்னது மாதிரி ஆசை எனும் சகதியில் விழுந்தே மனிதன் பெரும் கஸ்டத்தின் பிடியில் சிக்கிவிடுகின்றான். சுருக்கமாக சொன்னால் அவர் அவர் தமது சொந்த இச்சைகளினால் இழுப்புண்டு தான் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனரே தவிர அது யாராலும் அவர்கள் தலையில் பலவந்தமாக சுமத்தபடவில்லை.

ஒருவன் அப்படி வாழ்கின்றான் அல்லது இப்படி வாழ்கின்றான் என்று நாம் நினைப்பது. அது பொறாமையின் வெளிப்பாடே. நம் நாட்டவர்கள் சொல்வார்கள் போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்க கூடாதென்று. போட்டி எண்ற ஒன்று மனதிலே நாம் பொறாமை கொள்ளும் போது தான் உதிக்கின்றது. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் மக்களின் பணத்தில் தொடங்கப்பட்ட கடை. மக்களின் பணத்தில் சம்பளம் வழங்கப்படுகிறது. வாங்கும் சம்பளத்துக்கு மேசையில் இருந்து காசு வாங்கி லாச்சியில் போட்டால் மாத்திரம் போதாது.. வாடிக்கையாளர்களை வரவேற்க வேண்டும்.. பொருட்களை விற்பனை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். மக்களின் பணம் அழுகிய மரக்கறிகளாய் குப்பையைக்கு போனால், மக்கள் தமது பாதையை மாற்ற அதுவே காரணமாகிறது. இது நான் கண்டு கேட்ட ஓரிரு தடவைகள் பார்த்த அனுபவம்.

இது உண்மை என்றால் உடன் உரிய இடத்துக்கு (உங்கள் அருகின் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு) தகவல் சொல்லிவிடுங்கள். அவர்கள் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படுத்துவார்கள்.

இதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். 2006 ஆண்டு புதுக்குடியிருப்பில் நிகழ்ந்த ஒரு சம்பவம். அங்கு மக்கள் குடியிருப்புக்கு அருகில் ஒரு படமாளிகை. அங்கு படம் திரையிடுவதற்கு வேண்டிய மின்சாரத்தை பிரத்தியேக மின் பிறப்பாக்கிகள் மூலமே பெறப்பட்டது. அந்த மின் பிறபாக்கி பொருத்தப்பட்ட பேரூந்து எமக்கு தெரிந்தவர்களின் வீட்டுகு அருகில் தான் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த நேரம் மாணவர்கள் கா. பொ. த உயர்தர தேர்வுக்காக தம்மை தயார்படுத்தும் காலம். அத காலத்தில் திரையரங்கில் மாலையில் பெரிதாய் பாடல்களை போடுவார்கள். போதாகுறைக்கு மின்பிறபாக்கி இயந்திரத்தின் இரச்சல். அவர்களால் கல்வி பாதிக்கப்படுகின்றது.

இதனை திரையரங்கு உரிமையாளரிடம் கூறிய போது அவர் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது அம்மா நீங்கள் வேண்டும் என்றால் நான் சொல்லும் இடத்தில் ஒரு வெறும் காணி இருக்கின்றது அங்கு போய் கொட்டில் கட்டி இருங்கள் என கூறினார். அவர்கள் பின்னர் காவல்துறைடம் இது பற்றி முறையிட்டனர். அது பெரிதாக அங்கு எடுபடவில்லை காரணம் அங்கு இருந்த காவல்துறை உப பரிசோதகர் உறவினன் தான் இந்த திரை அரங்கு உரிமையாளர். காவல்துறையினரும் திரையரங்கு உரிமையாளர் தெரிவித்த தீர்வு யோசனையையே முன் மொழிந்தனர். இவர்களால் எதுவித பயனும் இல்லை என்ற முடிவுக்கு வந்து அவர்கள் வீடுமாற இருந்த வேளை ஒரு எதிர்பாரா சந்திப்பு.

தமிழ் தேசிய தொலைக்காட்சியின் ஒரு இளம் கவிஞன் ஒருவரை எதிர்பாராமல் சந்திக்க நேரிட்டபோது அவர் மூலமாக தேசிய தலைவருக்கு இது பற்றி எழுத்து மூலம் தகவல் சொல்லப்பட்டது. சரியாக மூன்றே மூன்று நாள் திரையரங்கு சீல் வைக்கப்பட்டது. காவல்துறை உப பரிசோதகர் மேலதிக விசாரணைகளுக்காக உள்வாங்கப்பட்டார். தேசியத்தலைவரிடம் இருந்து அவர்கள் செயலுக்காய் மன்னிப்பு கோரும் மடல் ஒன்று இவர்கள் கையில் வந்தடைந்தது.

Edited by mathuka

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளம்பரங்கள் என்று அவர்கள் கொடுக்கும் போது தமிழ் எம் ரீவி இணையம் அதனை வெளியிடுவதில் தப்பு ஏதும் இல்லை என்று நினைக்கின்றேன். நீங்கள் கூறும் நபருக்கும் கோவிலுக்கும் தொடர்புகள் இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் அது அவரின் தனிப்பட்ட பிரச்சினை. எனக்கு இப்படியான செயல்களை இன்றைய நிலையில் ஹம் ஆலயம் செய்வது சரி என படவில்லை. அது அவருக்கு சரியாக பட்டிருக்கலாம் இது ஒவ்வொருவருடைய மன விருப்பு.

அத்துடன் தமிழ் எம் ரீவி இணையத்தில் அங்கத்தவராக இருப்போர் தாம் விரும்பியவற்றை இணைக்கலாம். அதற்கு அந்த இணையம் இடம் அளித்திருக்கின்றது

எனவே பிறரின் தகவல்களுக்கோ அல்லது எதிர்க்கருத்துக்களுக்கோ பதிலளிக்காமல் வாசித்துவிட்டு அப்படியே போங்கள்

எனவே பிறரின் தகவல்களுக்கோ அல்லது எதிர்க்கருத்துக்களுக்கோ பதிலளிக்காமல் வாசித்துவிட்டு அப்படியே போங்கள்

காரணம்??

உங்களுக்கும் எனக்கும் விருப்பம் இல்லை என்பதற்காக இன்னொருவர் அதனை எதிர்க்க வேண்டிய தேவை இல்லை என் நினைக்கின்றேன். அது அவரவர் விருப்பம். நாம் ஹம் கோவிலின் செயற்பாடுகள் பற்றியே பேசுகின்றோமே தவிர தமிழ் எம் ரீவி இணையம் பற்றி அல்ல என நினைக்கின்றேன்.

Edited by mathuka

ஒருவர் பென்ஸ் காரில் சென்று பங்களிப்பு கேட்டாலோ அல்லது நடந்து சென்று பங்களிப்பு கேட்டாலோ கொடுப்பவருக்கு அது தேவை இல்லாத விடயம். ஏனெனில் கொடுப்பவர் எமது தாயகத்துக்கே கொடுக்கின்றார். அந்த பென்ஸ்காரில் வந்தவருக்கு அல்ல. அடுத்தது இந்த புலம் பெயர் நாடுகளில் எவரும் சாப்பிட கூட முடியாத ஏழைகள் கிடையாது. எல்லோருக்கும் உணவுகள் கிடைக்க வழி செய்கின்றார்கள். தலைவர் மாவீரர் தின உரையில் சொன்னது மாதிரி ஆசை எனும் சகதியில் விழுந்தே மனிதன் பெரும் கஸ்டத்தின் பிடியில் சிக்கிவிடுகின்றான். சுருக்கமாக சொன்னால் அவர் அவர் தமது சொந்த இச்சைகளினால் இழுப்புண்டு தான் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனரே தவிர அது யாராலும் அவர்கள் தலையில் பலவந்தமாக சுமத்தபடவில்லை.

ஒருவன் அப்படி வாழ்கின்றான் அல்லது இப்படி வாழ்கின்றான் என்று நாம் நினைப்பது. அது பொறாமையின் வெளிப்பாடே. நம் நாட்டவர்கள் சொல்வார்கள் போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்க கூடாதென்று. போட்டி எண்ற ஒன்று மனதிலே நாம் பொறாமை கொள்ளும் போது தான் உதிக்கின்றது. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இது உண்மை என்றால் உடன் உரிய இடத்துக்கு (உங்கள் அருகின் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு) தகவல் சொல்லிவிடுங்கள். அவர்கள் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படுத்துவார்கள்.

இதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். 2006 ஆண்டு புதுக்குடியிருப்பில் நிகழ்ந்த ஒரு சம்பவம். அங்கு மக்கள் குடியிருப்புக்கு அருகில் ஒரு படமாளிகை. அங்கு படம் திரையிடுவதற்கு வேண்டிய மின்சாரத்தை பிரத்தியேக மின் பிறப்பாக்கிகள் மூலமே பெறப்பட்டது. அந்த மின் பிறபாக்கி பொருத்தப்பட்ட பேரூந்து எமக்கு தெரிந்தவர்களின் வீட்டுகு அருகில் தான் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த நேரம் மாணவர்கள் கா. பொ. த உயர்தர தேர்வுக்காக தம்மை தயார்படுத்தும் காலம். அத காலத்தில் திரையரங்கில் மாலையில் பெரிதாய் பாடல்களை போடுவார்கள். போதாகுறைக்கு மின்பிறபாக்கி இயந்திரத்தின் இரச்சல். அவர்களால் கல்வி பாதிக்கப்படுகின்றது.

இதனை திரையரங்கு உரிமையாளரிடம் கூறிய போது அவர் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது அம்மா நீங்கள் வேண்டும் என்றால் நான் சொல்லும் இடத்தில் ஒரு வெறும் காணி இருக்கின்றது அங்கு போய் கொட்டில் கட்டி இருங்கள் என கூறினார். அவர்கள் பின்னர் காவல்துறைடம் இது பற்றி முறையிட்டனர். அது பெரிதாக அங்கு எடுபடவில்லை காரணம் அங்கு இருந்த காவல்துறை உப பரிசோதகர் உறவினன் தான் இந்த திரை அரங்கு உரிமையாளர். காவல்துறையினரும் திரையரங்கு உரிமையாளர் தெரிவித்த தீர்வு யோசனையையே முன் மொழிந்தனர். இவர்களால் எதுவித பயனும் இல்லை என்ற முடிவுக்கு வந்து அவர்கள் வீடுமாற இருந்த வேளை ஒரு எதிர்பாரா சந்திப்பு.

தமிழ் தேசிய தொலைக்காட்சியின் ஒரு இளம் கவிஞன் ஒருவரை எதிர்பாராமல் சந்திக்க நேரிட்டபோது அவர் மூலமாக தேசிய தலைவருக்கு இது பற்றி எழுத்து மூலம் தகவல் சொல்லப்பட்டது. சரியாக மூன்றே மூன்று நாள் திரையரங்கு சீல் வைக்கப்பட்டது. காவல்துறை உப பரிசோதகர் மேலதிக விசாரணைகளுக்காக உள்வாங்கப்பட்டார். தேசியத்தலைவரிடம் இருந்து அவர்கள் செயலுக்காய் மன்னிப்பு கோரும் மடல் ஒன்று இவர்கள் கையில் வந்தடைந்தது.

வாதிட வேண்டுமானால் வாதிட்டுக் கொண்டே போகலாம். 1986ம் ஆண்டில் கையெழுத்தில் சஞ்சிகை வெளியிட்டவன்.. சிலதை சொன்னேன்.. கிடைத்தது மாற்றம்.. என்ன தெரியுமா? 'சோழியான்' துரோகி. நீதிமன்றத்திற்குகூட கூப்பிட்டார்கள்.. ஒன்றும் செய்ய முடியவில்லை.. என்ன.. இப்ப துரோகி என்றவர்கள்தான் துரோகியென வெளியில் மெளனிகளாக நிற்கிறார்கள். ஆனால் ஒன்று.. செய்வோம்.. அவதானமாக செய்வோம்.. கொடுப்பவைகள் சுரண்டப்பட்டால்.. அவர்களைத் தவிர்த்து உரிய வழியில் கொடுப்போம். அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காரணம்??

உங்களுக்கும் எனக்கும் விருப்பம் இல்லை என்பதற்காக இன்னொருவர் அதனை எதிர்க்க வேண்டிய தேவை இல்லை என் நினைக்கின்றேன். அது அவரவர் விருப்பம். நாம் ஹம் கோவிலின் செயற்பாடுகள் பற்றியே பேசுகின்றோமே தவிர தமிழ் எம் ரீவி இணையம் பற்றி அல்ல என நினைக்கின்றேன்.

ஓமோம் ஒருபக்கம் எங்கடை சனம் இருக்க இடமில்லாமல் ஓடித்திரியுதுவள் எண்டு அவலக்குரலிடுவம்

மற்றப்பக்கம் அம்மன் கோயிலுக்கு மடம் கட்ட காசு தண்டுவம் அதுக்கு நீதிநியாங்களும் சொல்லுவம்

ஓமோம் ஒருபக்கம் எங்கடை சனம் இருக்க இடமில்லாமல் ஓடித்திரியுதுவள் எண்டு அவலக்குரலிடுவம்

மற்றப்பக்கம் அம்மன் கோயிலுக்கு மடம் கட்ட காசு தண்டுவம் அதுக்கு நீதிநியாங்களும் சொல்லுவம்

இரண்டுக்கும் ஏதும் தடைகள் உள்ளனவா? :o

மூட நம்பிக்கையில் மூழ்கி இருப்போரே இவ்வாறான பூமி தானம் பொன் தானம் போன்றவற்றில் ஈடுபாடுடையவர்களாக இருப்பார்கள். இதில் என்ன வேடிக்கை இருகின்றது. யார் கண்டது உங்கள் ஆத்துக்காரி பக்திப்பழம் என்றால் நீங்களும் அழுது அழுது கொடுகத்தான் செய்வீர்கள் :D:D . அல்லது ஏற்கனவே கொடுத்துவிட்டீர்களோ யார் அறிவர்? கடவுளை நம்பும் இவ்வாறான பழங்கள் தாயகத்துக்கு நிதி கொடுப்பதை பாவம் என்பர். எமது பணம் தான் கொலை செய்ய உதவுகின்றது என்று ஒரு கதையை அவிழ்த்து விடுவார்கள். நாம் ஒரு கொலையை செய்ய உடந்தையாய் இரோம் என அவர்கள் போராட்டத்துக்கு எது விதத்திலும் உதவி செய்ய முன்வரார் சும்மா இப்படி களத்தில் வந்து அழுபவர்கள் போல் அழுவார்கள். ஆனால் என்ன பெடியள் பேயடி நாயடி அடிக்கிறாங்களாம் என்று வாய் சவடால் விடுவார்கள்.

எமது கலாச்சாரத்தில் கடவுள் நம்பிக்கையும் உள்ளடக்கப்படுவதால் அப்படி கொடுப்பது தவறில்லை என்று நினைக்கின்றேன். எமாந்தவன் அங்கு கொடுக்கின்றான் புத்திசாலிகள் எங்கு கொடுப்பது சாலச் சிறந்தது என்று யோசிப்பார்கள். யோசித்து கொண்டே இருப்பார்கள். எங்கும் கொடுக்க மாட்டார்கள்.

என்னய்யா மனம். அண்மையில் தான்சிரிலங்கன் தூதுவரை அழைத்து பொன்னாடை போர்த்த கம் அம்மன் கோயில்

சென்ற கிழமை வன்னியில் அல்லறும் மக்களுக்கான கூட்டு பிரார்த்தனை செய்தவையாம் தமிழ் தொலக்காட்சியும் அந்த தகவலை செய்தியில் சொன்னார்கள்.

என்னய்யா நடகிறது. எவ்வளவு இரண்டும் நேர் எதிரான செயல்கள்.

பிராமணன் தனது வருமானத்திற்காக கோயிலையும், செத்து மடியும் மக்களையும் வைத்து பணம் உழைக்கிறான்.

அதுக்கு அறிவு கெட்ட தமிழ் முண்டங்கள் பெருவாரியாக போனவையாம்.

அன்று நடந்த அர்ச்சனைகாசு உண்டியல் காசு எல்லாம் யாருக்கு போனது?

ஏன் இப்படி தமிழர் யோசிக்காமல் அலைகிறார்கள். ஏன் இலகுவாக ஏமாளிகளாகப்படுகிறார்கள்.?

போர்க்குணம் கொண்ட தன்மானம் உள்ள மக்கள் என்று தலைவர் யாரை சொல்கிறார்"

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி

உங்களைப் போன்றவர்கள் சிலரின் செயற்பாடுகளினால்த் தான்,பலர் தேசியத்திற்கு எதிராக மாறிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

வசம்பண்ணா..... அப்போ இவர்கள் யார் தம்மை வந்து மாற்றுவார்கள் என்று காத்துகொண்டு இருக்கின்றார்களா. தேசியத்துக்கு எதிராக மாறுவதற்கு?

தேசியம் என்றால் என்ன என்பது பற்றி தெளிவில்லாத ஆறுஅறவில்லா மனிதவடிவிலான மிருகங்கள் எம்மோடு கூடியிருந்தால்தான் எமக்கு ஆபத்து. அவர்களை எதிரிகளோடு சேர்த்துவிடுவதே புத்திசாலிதனம். அது சாத்ரியார் மூலம் நிறைவேறினால் அவரை பாரட்டவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா மனம். அண்மையில் தான்சிரிலங்கன் தூதுவரை அழைத்து பொன்னாடை போர்த்த கம் அம்மன் கோயில்

சென்ற கிழமை வன்னியில் அல்லறும் மக்களுக்கான கூட்டு பிரார்த்தனை செய்தவையாம் தமிழ் தொலக்காட்சியும் அந்த தகவலை செய்தியில் சொன்னார்கள்.

என்னய்யா நடகிறது. எவ்வளவு இரண்டும் நேர் எதிரான செயல்கள்.

பிராமணன் தனது வருமானத்திற்காக கோயிலையும், செத்து மடியும் மக்களையும் வைத்து பணம் உழைக்கிறான்.

அதுக்கு அறிவு கெட்ட தமிழ் முண்டங்கள் பெருவாரியாக போனவையாம்.

அன்று நடந்த அர்ச்சனைகாசு உண்டியல் காசு எல்லாம் யாருக்கு போனது?

ஏன் இப்படி தமிழர் யோசிக்காமல் அலைகிறார்கள். ஏன் இலகுவாக ஏமாளிகளாகப்படுகிறார்கள்.?

போர்க்குணம் கொண்ட தன்மானம் உள்ள மக்கள் என்று தலைவர் யாரை சொல்கிறார்"

நேசன் அந்த நிகழ்வு பற்றிய துண்டுப் பிரசுரம் எனக்கும் கிடைத்தது அந்த நிகழ்வு நடந்து முடியும்வரை காத்திருந்தேன் எனவேஅந்த நிகழ்வு விபரங்களையும் இணைக்கிறேன் நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.