Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதற்கு நாம் தயாராக இருக்கின்றோமா?

Featured Replies

மேல நான் சொன்ன கருத்து உங்களை மனதில் வைத்து கூறவில்லை திடீர் திடீர் என்று முளைத்த நடுநிலையாளர்களையே கூறினேன்...

உண்மைக்கும் பொய்க்கும், அடக்கு முறைக்கும் விடுதலைக்கும் இடையில் எங்கே இருக்கிறது நடு நிலமை?

நடு நிலமை என்பது வேசம்.அடக்க முற்படுபவன் அடக்குபவனை ஏமாற்றப் போடும் வேடம் தான் நடு நிலமை.

அடக்குபவன் பக்கம் இருப்பவன் நடு நிலமையாளன்.

  • Replies 63
  • Views 8.6k
  • Created
  • Last Reply

போராட்ட ஆரம்ப காலங்களின் பொழுதே கரந்தடி மூலம் (கெரில்லா போர்முறை) வெற்றி அடைய முடியாது மக்கள் போராட்டம் தான் விடுதலையை வென்று தரும் என்று முழக்கம் இட்ட பலர் உண்டு.ஆனால் அப்படி கூறிய போராட்ட குழுக்கள் எல்லாம் இப்ப வெளிநாட்டில் இருந்து மீண்டும் அதையே பல்லவியை பாடீனம் போல இருக்கு.

வன்னியிலும் புலத்திலும் மக்கள் தான் போராடுகிறார்கள்.உலகில் மக்களின் ஆதாரவில் நடக்கும் போராட்டங்களே வெற்றி பெறுகின்றன.புலிகளே மக்கள் , மக்களே புலிகள்.ஒன்று பட்ட மக்களின் எழுச்சியே போராட்டத்தைப் பலப்படுத்தும்.இதைப் புலத்தில் உள்ள போராட்டக் குழுக்கள் சொல்ல வில்லை, வன்னியில் இருந்து அரசியற் துறைப் பொறுப்பாளார் முதல் எல்லோரும் சொல்கிறார்கள்.ஏனெனில் மக்களின் ஆதரவுடன் நடை பெறும் போரட்டமே வெற்றி பெறும். கரந்தடி என்பதும் மக்களின் போராட்டத்தின் ஒரு வடிவமே. ஆயுதப்போரும் மக்கள் போராட்டத்தின் ஒரு வடிவமே.

போராட்ட வடிவம் காலம்,இடம்,சூழல் கருதி மாறுபடும் ஆனால் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

இலங்கை அரசு தனது எல்லா வளங்களையும் இராணுவத்துக்கானது எண்று மாற்றுவதில் வெற்றி கண்டு வருகிறான்.. முக்கியமாக மருத்துவம், காவல், பொருளாதாரம், அரசுடமைகள் எல்லாமே... இண்று போருக்கானதாகவும் தமிழர்களுக்கு எதிரானதானதாகவும் கொண்டு உள்ளான்...

ஆனால் நாங்கள்..???? இண்டைக்கும் அடக்கு முறை எண்டால் என்ன.? மாதம் 30 பவுன்ஸ் குடுத்தம் அதுக்கு யாழ்ப்பாணத்தை பிடிப்பினமோ.? இல்லை வன்னியை விட்டு போடுவினமோ எண்டு பட்டி மண்றம் வைத்து கொண்டு இருக்கிறம்...

பாதுகாப்பு அமைச்சு செய்திகளை அடிப்படையாக கொண்ட செய்திகள் வேண்டும் எண்றே கொண்டுவந்து போட்டு மக்களின் உளவியலை சிதைக்க முற்படுவோருக்கு கூட பதில் அளிக்கும் திறன் இல்லாது இருக்கிறோம்...!!

நாங்கள் வெற்றி பெறுவோம் எனும் நம்பிக்கை என்பது இல்லாமல் என்ன கோதாரியையும் செய்ய மனம் வராது எண்டதை விளங்கி கொள்ளாதா சில அடிமுட்டாள்களின் கொச்சை படுத்தல்கள், கிண்டல்களை சகித்து கொள்வது யாழுக்குள் கூட பழகி விட்டது...

இதன் அடிப்படையில் தமிழர்கள் பாதுகாப்பு அமைச்சு சொல்லும் செய்திகளை மட்டும் கேட்டு தமிழ் தளங்களை பார்க்காது இருந்தால், இலங்கை அரசு போடும் பிச்சை தீர்வு விரைவில் கிட்டும்...

அதுவரை வரும் கட்டுரைகளையும், அருஸ், இதயச்சந்திரன், வன்னியன் போண்ற கட்டுரையாளர்களின் முதுகை சொறிந்து கொண்டு இருப்போம்....!!!

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு அமைச்சு செய்திகளை அடிப்படையாக கொண்ட செய்திகள் வேண்டும் எண்றே கொண்டுவந்து போட்டு மக்களின் உளவியலை சிதைக்க முற்படுவோருக்கு கூட பதில் அளிக்கும் திறன் இல்லாது இருக்கிறோம்...!! தயா,

நாங்கள் அரச பிரச்சாரத்தை இங்கு முன்னெடுக்கும் புல்லுருவிகளுக்கு பதிலளிக்க முடியாமல் இல்லை. ஆனால், நாங்கள் எதை எழுதினாலும் இங்குள்ள சில மேதாவிகள்(?!) உடனேயே சனநாயகம், மாற்றுக் கருத்து, நடுநிலமை என்று கூப்பாடு போட்டுக்கொண்டு இந்தப் புல்லுருவிக்கு வக்காலத்து வாங்க வந்து விடுகிறார்கள். இந்தத் தெம்பில் அந்தப் புல்லுருவியும் தன்னால் இணைக்கக் கூடிய அனைத்து அரச பிரச்சார செய்திகளையும் சைக்கிள் காப்பில் இணைத்து விடுகிறது.எதிர்க்கருத்து எழுதிய நாங்கள் இந்த சனநாயகவாதிகளால் முட்டாள்களாகக்கப்பட அரச பிரச்சாரம் தொடர்கிறது.

தமிழ்நாட்டு நிவாரணப் பொருட்கள் உருமறைப்புச் செய்யப்படுவதாக செய்தி இணைக்கப்பட்டால், உடனேயே "இந்திய நிவாரணப் பொருட்கள் வன்னிக்கு அனுப்பப்பட்டன" என்று டக்கிளஸ் அல்லது சிங்கள அமைச்சர் பாணியில் மறுப்பறிக்கை இங்கு இணைக்கப்படுகிறது !

ஆண்டான்குளம் பிடிச்சாச்சு, ஆத்தையின்ர குளம் பிடிச்சாச்சு , புலிப் பாசறை பிடிச்சாச்சு எண்டு முழுவீச்சில் அரச , ராணுவ பிரச்சாரம் நடக்கிறது. உந்த சாய்மனைக் கதிரைக் காரர் சுருட்டைக் கடிச்சுக்கொண்டு சனநாயகமும், நடுநிலமையும் பேசிக்கொண்டிருக்கட்டும். அவையின்ர ....இக்குப் பின்னால இருந்து புல்லுருவிகள் தங்கட காரியத்தைக் கொண்டு போகட்டும்!

நாங்கள் அரச பிரச்சாரத்தை இங்கு முன்னெடுக்கும் புல்லுருவிகளுக்கு பதிலளிக்க முடியாமல் இல்லை. ஆனால், நாங்கள் எதை எழுதினாலும் இங்குள்ள சில மேதாவிகள்(?!) உடனேயே சனநாயகம், மாற்றுக் கருத்து, நடுநிலமை என்று கூப்பாடு போட்டுக்கொண்டு இந்தப் புல்லுருவிக்கு வக்காலத்து வாங்க வந்து விடுகிறார்கள். இந்தத் தெம்பில் அந்தப் புல்லுருவியும் தன்னால் இணைக்கக் கூடிய அனைத்து அரச பிரச்சார செய்திகளையும் சைக்கிள் காப்பில் இணைத்து விடுகிறது.எதிர்க்கருத்து எழுதிய நாங்கள் இந்த சனநாயகவாதிகளால் முட்டாள்களாகக்கப்பட அரச பிரச்சாரம் தொடர்கிறது.

ரகுநாதன்

அவர்களையும் எதிர்க்க வேண்டியதுதான்....!! எதை செய்தாலும் தீவிரமாக செய்பவர் நீங்கள்... உங்களிடம் இருந்து இப்படியான பதிலை உண்மையாகவே எதிர்பார்க்கவில்லை...!!

உங்களது நிலை தவறு எண்று நீங்கள் நினைக்கும் வரை உங்களது நிலைப்பாட்டில் தீவிரமாக இருப்பது தவறு அல்ல... கருத்து சொல்வது கூட உங்களது சுதந்திரம்..

கடைசியாக அவர்கள் யாழில் தேசியத்தை வழர்க்க முடியாது எண்று அறைகூவல் விடும்வரை விடக்கூடாது... :)

  • கருத்துக்கள உறவுகள்
:) யாழில் தேசியத்தை வளர்க்கக்கூடாது என்று இவர்கள் கேட்குமளவிற்கு நிலமை வராது. ஏனென்றால் இங்கு துரோகிகளையும், போலி சனநாயகவாதிகளையும் விட தமிழ்த் தேசியத்தை உண்மையாக நேசிக்கும் பலர் இருக்கிறோம். அப்படியொரு நிலமை வருமென்றால் யாழ்க்களமும் நின்றுவிடும்.

இது நிஐம்

புலம்பெயர்ந்த ஊடகங்களின் படைப்புகள் மற்றும் தாயகத்தில் இருந்து (வெளியுலகை நோக்கி) வெளிவந்த படைப்புகளில் அறிதிப் பெரும்பான்மையானவை இராணுவவியல் சாயம் பூசப்பட்டது. அவற்றிற்கு உண்மையான படைத்துறை இராணுவ பெறுமதி இருக்கிறதோ இல்லையோ அவற்றின் தொனி சாயம் என்பவை அப்படி ஒரு வெளித் தோற்றப்பாட்டைத்தான் கொடுக்கும். போராட்டம் மாத்திரமல்ல தமிழீழம் தமிழர்கள் என்றாலே அவற்றிற்கான அடையாளங்கள் பிரதிநிதித்துவங்கள் உதாரணங்கள் என இராணுவச் சாயத்தில் தான் இன்று காணக் கூடியதாக இருக்கிறது.

போராட்டத்தின் இன்றைய பிராந்தியம் தாண்டி சர்வதேச மயப்படுத்தப்பட்ட வழர்ச்சி நிலை படை வலுச்சமநிலை, நடை முறை அரசு இராசதந்திரம் அங்கீகாரம் என்று முழங்கியபடி பொருத்தமற்ற முறையில் மலினமாக செய்யும் இராணுவ படைத்துறைப் பிரச்சாரங்கள் எதிரிக்கும் 3 ஆம் தரப்பிற்கும் எமது போராட்டத்தின் பலவீனங்களை நன்றாக எடுத்துச் சொல்கிறது.

அதை அவர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நாடுகளிற்கிடையிலான பலப்பரீட்சை என்பது குறித்த காலவரை அட்டவணையோடு பள்ளி பரீட்சை மாதிரி நடப்பதில்லை. ஒவ்வொரு படி நிலையிலும் அடைந்த முன்னேற்றங்களை பாதுகாக்க தக்கவைக்க தொடர்ச்சியாக வளங்கள் செலவிடப்பட வேண்டும். அவற்றைப் பழம்பெருமை பேசி அச்சுறுத்தி கட்டுரை எழுதிக் காப்பாற்ற முடியாது.

போராட்டத்தில் முன்னகர்வு வழர்ச்சி ஏற்படும் போது அதைத் தாங்கும் மக்களும் அதன் தற்போதைய எதிர்கால தேவைகள் இலக்குகளிற்கு ஏற்ப தம்மை transform பண்ண வேண்டும். அதற்கான எந்தவித அறிகுறிகளும் எமது சிந்தனைகள் எழுத்துக்கள் படைப்புகளில் இல்லை. சிறீலங்கா உட்பட போராட்டா எதிர்ப்புச்சக்த்திகளின் கச்சிதமான நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப தெருச்சண்டியர்களாக கருணா குழுவை நக்கலடிக்கும் பிரபா குழுவாகத்தான் 2004 நடுப்பகுதியில் இருந்து எம்மை முற்று முழுக்க மாற்றி வைத்திருக்கிறோம்.

எல்லைகளை கடந்து உலகெங்கும் பரந்து விரிந்திருக்கும் தமிழ்தேசிய ஊடக அரட்டை உலகை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள சிந்தனைகள் எழுத்துக்கள் படைப்புகள் எல்லாமே

strategic -> tactical -> operational என்பவற்றில் operational அல்லது அதற்கும் பெறுமதி அற்றவையானதாகத்தான் இருக்கிறது. இதிலும் அறுதிப் பெரும்பான்மையானவை இராணுவ படைத்துறை சாயம் பூசிய நகைப்பிற்குரிய புலம்பல்கள்.

அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், இராசதந்திரம், ஊடகத்துறை, கல்வித்துறை, வரலாறு, சட்டத்துறை, தொழிநுட்பம், கலை என்பவற்றில் தமிழ்தேசிய கண்ணோட்டத் தோடு ஏதாவது மருந்துக்கும் காணக் கூடியதாக இருக்கிறதா?

இது தாயகத்தின் போராட்டத்தின் இன்றைய எதிர்காலத் தேவைகளின்பால் உள்ள மோசமான பலவீனமும் ஆகும்.

அதாவது போராட்டம் 1 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களையும் 22000 மேற்பட்ட மாவீரர்களையும் கொடுத்து இந்தளவிற்கு வழர்ந்தாலும் அதை தக்க வைத்து அடுத்த படி நிலைக்கு நகர்த்த முடியாத எமது ஒட்டுமொத்த தேசியத்தின் இயலாமை.

இந்த இயலாமையை 2001 இல் யுத்த நிறுத்தம் உருவான காலம் முதல் கருணா பிளவு அதை அன்றில் இருந்து இன்று வரை எதிர்கொள்ளும் முறையிலும் காணலாம். அதற்கு அப்பால் சிறீலங்கா நிழல் யுத்தமாக ஆரம்பித்து முழு அளவிலான ஆக்கிரமிப்பு யுத்தமாக மாறி போர் நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்து முன்னகருவதை நாம் ஊடக அரசியல் இராசதந்திர ரீதியில் எதிர்கொள்ளும் முறையிலும் காணலாம்.

எமது புலம்பல்கள் hurbristic ஆக தொடங்கி இன்று rehtorical ஆக மாறியிருக்கிறது இனி whining ஆக மாறுமா இல்லாயான என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இவற்றை அவதானிக்கும் எதிரிக்கும் 3 ஆம் தரப்புகளிற்கும் தெரியும் எமது ஒட்டுமொத்த தேசிய எழுச்சியின் பலத்தின் வீச்செல்லை என்ன அதன் குறைபாடுகள் என்ன வென்று.

புலிகள் எப்ப புலம்பெயர்ந்தவர்களை குசிப்படுத்தும் entertainers ஆக மாறினார்களோ அன்றே போராட்டம் ஒரு பாரிய பின்னடைவைச் சந்தித்துவிட்டது சிறீலங்காவிற்கு பாதையை திறந்து விட்டுவிட்டார்கள். சிறீலங்கா அந்தப்பாதையில் தனது நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப முன்னேறுகிறது.

தமிழ்தேசியம் தமிழீழ நிலப்பரப்பை மீட்டு அங்கீகாரத்தைப் பெற்று அதை தக்க வைப்பதற்கான தேவைகள் பல வகைப்பட்டது. அவற்றை உணர்ந்து அவை நோக்கி இயங்குவதற்குரிய படி எமது மனிதம் வளம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அவற்றை நிவர்த்தி செய்ய பல வருடங்கள் முதல் கிட்டத்தட்ட அரை சந்ததியாகுதல் தேவை. அதை நிறைவேற்றாது தாயகத்தில் மாவீரர்களின் எண்ணிக்கை 40000 ஆனாலும் இலக்கை அடைய முடியாது. அவ்வாறு அடைய முயற்சிப்பது நிலங்களை மீட்பது முயற்சிப்பது சிறீலங்காவிற்குத்தான் சாதகமாக முடியும்.

சிங்களவர்களின் தேசிய எழுச்சி ஒன்றை எதிர்கொள்ளாது நாம் யுத்தத்தில் இறுதி வெற்றியை அடைந்து கொடி நாட்டிவிடலாம் என்று கனவு காண்கிறோம். சிங்கள் தேசிய எழுச்சியின் ஆரம்பத்தை இன்று காண்கிறோம்.

போராட்டத்தை ஆதரிக்காது இருப்பவர்கள் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் உட்பட எல்லாத் தமிழர்களிற்கும் இருக்கும் தெரிவு ஒன்றுதான். அது அடுத்த 2..3 வருடங்களில் அது உணரப்படும் ஆனால் புலிகளின் இராணுவ சாகசங்களால் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கும் விடுதலைப் புலிகள் ஒரு பாய்ச்சல் நடத்தி இழந்த பகுதிகளை உடனடியாக மீட்டு எடுப்பார்கள் என்பதைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம். படையினரை விடுதலைப் புலிகளே உள்ளே இழுக்கின்றார்கள் என்றும், அவர்களை அழித்து ஒழிக்கப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பில் மட்டுமே நாம் இருக்கின்றோம்.

எமக்கு எது இனிப்பாக இருக்கிறதோ, அதை மட்டுமே பேசுகிறோம்.

* மாவிலாறில் ஒரு அங்குல நிலத்தையும் இராணுவம் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம். (எழிலன்)

* கிழக்கில் எமது கை ஓங்கியே இருக்கிறது. இராணுவம் பெரும் பின்னடைவை சந்திருக்கும். எமது ஆயுதம் ஒன்றைப் பாவித்தாலே இராணுவ முகாம்கள் இருந்த இடம் தெரியாது போகும். (தளபதி ரமேஷ்)

* தமிழீழத்தின் கட்டுமானங்களை சிறீலங்கா விமானப்படை தொட்டும் பார்க்க முடியாது. (மாவீரர் தமிழ்செல்வன்)

* எனி யுத்தம் தென்னிலங்கையில் தான். எமது மண்ணில் அல்ல. (மாவீரர் தமிழ்செல்வன்)

* வன்னிக்குள் படை நகர்ந்தால் அதுதான் அவர்களுக்கு இறுதி அத்தியாயம். (பா. நடேசன்)

* அவர்கள் மடுவுக்கு வந்தால் நாம் மதவாச்சியில் நிற்போம். ( இளந்திரையன்)

* வன்னிக்குள் ஒரு அகலக்கால் பதிக்கவே அனுமதிக்கிறோம். அதற்கான விளைவை படைத்துறை சந்திக்கும். (பா.நடேசன்)

* வன்னியில் தந்திரோபாயப் பின்வாங்கலையே புலிகள் செய்கிறார்கள். (பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி.)

* இறுதிப் போர் குறுகிய காலத்தில் பல முனைகளிலும் இருக்கும். (பொட்டு அம்மான்)

* அடுத்து வரும் சில மாதங்களில் வன்னி உட்பட நிலங்கள் மீட்கப்படும்.. விடிவு விரைந்து வரும். (லண்டன் பொங்கு தமிழில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்)

* போர் என்று அரசு போகுமானால் நானே முதல் போராளியாகிப் போராடுவேன். (பாராளுமன்ற உறுப்பினர் கிசோர்)

இவை தவிர.. ஈழக்கிழவன்.. காலக்கண்ணாடி.. அவசிய அறிக்கை என்று வந்து நம்பிக்கைகளைக் கொட்டினது.. யார்..??!

இதைத்தவிர.. அரூஸ்.. புரூஸ்.. அவுஸ்திரேலிய சபேசன்.. ஐரோப்பிய சபேசங்கள்... ஆட்டுப்பால் அத்தாஸ்.. எல்லாரும்.. எழுதித் தள்ளிச்சினம். சனமும் வாசிச்சுப் போட்டு மெய்மறந்து இருந்தது உண்மை தானே. சனத்தை மெய்மறக்கச் செய்தது.. விடுதலைப்புலிகளின் தலைமையல்ல.

தலைவர் தனது கடந்த ஆண்டு மாவீரர் தின உரையில்.. மக்கள் எதிர்பார்த்தது போன்று போர் பிரகடனம் செய்யவோ.. தமிழீழப் பிரகடனம் செய்யவோ.. சவால் விடவோ இல்லை. மாறாக அவரின் பேச்சு பிராந்திய அரசுகளின் சர்வதேச அரசுகளின் அணுகுமுறை பற்றியே இருந்தது. அதுதான் அவசியம்.

புலிகள் ஒன்றும்.. அமெரிக்கா அல்ல. பலம் பொருந்திய வல்லரசுகளுடன் மோதி தமிழீழம் அமைக்க. ஆயுதப் போராட்டம் என்பது மட்டுப்படுத்திய வளத்துடனேயே நடக்கிறது. அதை இராஜதந்திர அரசியல் நகர்வுகளோடு ஒருங்கிணைத்துச் செல்லும் போதுதான் சிங்களப் பேரினவாதத்தின் தமிழருக்கு எதிரான தமிழீழத்துக்கு எதிரான இராணுவ மற்றும் அரசியல் நகர்வுகளை வெற்றி கொள்வது பற்றி யோசிக்கலாம். தலைவர் இதை உணர்ந்திருந்தபடியால் தான் வாய்ச்சவடால் விடவில்லை. தெளிவாக தனது உரையை தந்திருந்தார். இப்பவும் தருவார்.

இன்றைய வன்னியின் நிலை... போராட்டத்தை 1987 - 90 காலப்பகுதிக்குரிய நிலைக்கு நகர்த்தும் அறிகுறிகளையே காட்டி நிற்கின்றன. இராணுவம் முழு வன்னியையும் ஆக்கிரமிக்கும். அத்தோடு புலிகள் தரப்பில் இருந்து மிகவும் மட்டுப்படுத்திய வளத்தோடு தலைமறைவு ஆயுதப் போராட்டம் தொடரும்

இச்சந்தர்ப்பத்தில்.. சிறீலங்கா அரசிற்கு.. அரசியல் அழுத்தங்களை அதிகரிக்கக் கூடிய வகைக்கு தமிழ் மக்கள் தான் விடுதலைப்புலிகளோடு இணைந்து இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

வன்னி முழுக்கப் பிடிபட்டாலும்.. விடுதலைப்புலிகளை ஒழிக்க முடியாது. ஆனால் அவர்களின் செயற்பாடுகள் பெருமளவில் மட்டுப்படுத்தப்படும். அவ்வேளையில் தமிழர் பகுதிகளில் தேர்தல்கள் நடக்கும். பொதுத்தேர்தலும் வரும். அதில் அரசு தமிழீழ விரோத சக்திகளை தமிழர் பிரதிநிதிகளாக்கி ஜனநாயகம் என்ற போர்வையில் பாராளுமன்றில் இருந்தும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளிலும் இருத்தும்.. அவர்களும் கதிரையில் அமர்வார்கள்.

தமிழ் தேசிய ஆதரவாளர்கள்.. விடுதலைப்போராட்ட பங்காளிகள் பலர் மண்ணில் புதைக்கப்படுவார்கள்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்ற கோட்பாடு எழாத வகைக்கு சிங்கள குடியேற்றங்கள்.. சிங்கள நிர்வாகமயமாக்கல் வடக்கு கிழக்கில்.. சகோதரத்துவம் வளர்ப்பு என்ற போர்வையில் நிகழும்.

இத்தனையையும் தமிழ் மக்கள் எவ்வாறு விடுதலைப்புலிகள் இல்லாது எதிர்கொண்டு முறியடிக்கப் போகின்றனர் என்பதுதான் இன்றுள்ள முக்கிய கேள்வி. அதற்கான தயார்படுத்தல்கள் என்ன செய்யப்பட்டுள்ளன.. என்றால் ஏதும் இல்லை..!

வெறும் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்ட நேரத்துக்கு இத்தனை தியாகங்களாலும் வளர்க்கப்பட்ட போராட்டம் நிர்க்கதியாவதை தவிர்க்க மக்களை சரியாக வழிநடத்திச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. வெறும் மாயை வலைக்குள் மக்களைச் சிக்க வைத்திருந்ததன் விளைவு.. சிங்கள பேரினவாத அரசுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்க முனையும் சர்வதேச சக்திகளுக்குமே வாய்ப்பாக அமைந்துவிட்டுள்ளது.

1989 இல் ஈரோஸூடு புலிகள் நகர்த்திய காய்நகர்த்தலே பெரும் உலக வல்லரசான இந்தியப்படையினரோடு போராடி முடிந்து போனார்கள் என்று கருதிய புலிகளுக்கு உயிர் கொடுத்தது. மீண்டும் அப்படி ஒரு நிலை வரத்தான் போகிறது. ஆனால் இம்முறை சிங்கள அரசின் காய் நகர்த்தல்கள்.. புலிகளின் கடந்த கால காய் நகர்த்தல்களை நன்கு அவதானித்து சாதுரியமாக புலிகள் மீண்டும் தலையெடுக்காத வகைக்குரிய மாதிரியே அமையும்.

இதையெல்லாம் முறியடிக்க வேண்டியவர்களாக தமிழ் மக்களே... உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி வாழும் தமிழ் மக்களே இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அதை எப்படிச் செய்யப் போகின்றனர்.. அதற்கான வழிமுறைகள் என்னென்ன.. என்பதெல்லாம்.. இருளடைந்த பகுதிக்குள் உள்ள எரியா விளக்குகளாகவே இருக்கின்றன.

இதையெல்லாம் சிந்திக்காமல் இன்னும் இன்னும் இராணுவ வெற்றி பற்றிய மாயைக்குள் சிக்க வைத்து மக்களைச் சீரழிப்பதுதான்.. இன்றைய நிலையிலும் வேதனையாக இருக்கிறது. அதற்கு விடுதலைப்புலிகளில் சிலர் வெளியிட்ட கருத்துக்களும்.. ஊடகங்கள் பரப்பி வந்த கருத்துக்களுமே முக்கிய காரணம்.

உண்மையைப் பேசி யதார்த்தப் பாதையில் மக்களை நகர்த்திச் சென்றிருந்தால்.. இன்று மக்கள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க இன்னும் இன்னும் தம்மை அதிகளவு தயார்படுத்த வைத்திருந்திருக்க வாய்ப்புக் கிடைத்திருக்கும்.

மக்களை இராணுவ வெற்றி.. இறுதி யுத்தம் என்ற மாயைக்குள் கட்டிவைத்து மாண்டது.. தமிழர்களும்.. அவர்களின் போராட்டமுமே என்ற நிலையே இன்று தோன்றிக் கொண்டிருக்கிறது. இது இன்று அரசாலும் துரோகிகளாலும் பிரச்சார ரீதியாக மக்களிடம் எடுத்தும் சொல்லப்படுகின்றது. இதற்கு காரணம் யார்..???!

சிங்களவன்.. 5 ஆண்டுகளாக அமைதிக்காலத்தில் வாய்ச்சவடாலை விட தனது படைத்துறையை எத்துணை மடங்கு பலப்படுத்தி வைத்திருந்திருக்கிறான் என்பதற்கும் மேலாக சர்வதேச சமூகத்தை எந்தளவுக்கு தன்னோடு இணைத்துக் கொண்டுள்ளான். அதுவும் இத்தனை மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் மத்தியிலும். ஆனால் நாம்..???!

மாயைப் பலத்தோடு தமிழீழ விடுதலையைப் பற்றி இறுதிப் போர் பற்றி சிங்களவனை உசுப்பேத்தி உசுப்பேத்தி இருந்ததையும் தொலைத்து நிற்பதுதான் இன்றைய யதார்த்தம்..! எனியாவது சிந்திப்போமா..???! :o:unsure:

ஒருவேளை இதையெல்லாம் பொய்யாக்கி புலிகள் அசுர பலத்தோடு இராணுவ வெற்றிகளை பெற்றுத் தந்தாலும்.. மக்களை நெருக்கடிகளுக்குள் வாழ எதிரியின் இராணுவ மற்றும் அரசியல் இராஜதந்திர நகர்வுகளுக்கு ஏற்ப அவற்றை முறியடிக்க பழக்கி வைத்திருப்பதான் எதிரியின் சூழ்ச்சிகளை முறியடித்து மக்களின் பலத்தை ஒருங்கிணைத்து சர்வதேசத்துக்கு எமது மக்களின் வேட்கையைக் காட்டி எமக்கான விடுதலைக்கான அவர்களின் ஆதரவைக் கோர முடியும்.

அதைவிடுத்து.. டக்கிளஸ் தேவானந்தாவையும்.. கருணாவையும் பற்றிப் பேசிக் கொண்டு திட்டிக் கொண்டு.. மக்களை அவர்கள் விலைபேச அனுமதித்துவிட்டு நாம் வாழாதிருப்பின் எப்படி... எம் பக்கமுள்ள நியாயம் சர்வதேசத்தைப் போய் சேரும்.

புலம்பெயர்ந்த மக்களும் சரி தாயக மக்களும் சரி கொள்கையாக தமிழீழத் தனியரசை வகுத்துக் கொண்டு அதை நோக்கி அனைத்துவித நெருக்கடிகளுக்குள்ளாலும் அவற்றை திறமையாக எதிர்கொண்டு செயற்பட தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இராணுவ வெற்றிகளை மையமாக மட்டும் கொண்டு போராட்டத்தில் வெற்றி காண முடியாது. தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டம் கூட ஒரு துண்டு நிலப்பரப்பும் இன்றித்தான் போராடி வென்றது. வியட்நாம் போராட்டம் கூட காடுகளை மையமாகக் கொண்டே போராடி வென்றது. ஆனால் அங்கு தலைவர்களை விட மக்கள் அதிகம் போராட்டத்தை நகர்த்திச் சென்றார்கள்.. போராளிகள்.. நெருக்கடிகளுக்குள் வீழ்ந்த போது. நெல்சன் மண்டேலா சிறையில் இருக்கத்தான் தென்னாபிரிக்கப் போராட்டம் வெற்றி கண்டது. நெல்சன் மண்டேலா இல்லை என்று மக்கள் சோர்ந்திருந்து வெள்ளையின ஆட்சியாளர்களுக்கு விலை போய் இருப்பின்.. போராட்டம் வென்றிருக்குமா..!

அதேவேளை விடுதலைப்புலிகளையும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிரியின் அனைத்து வித காய் நகர்த்தல்களையும் நெருக்கடிகளையும் மக்கள் எதிர்கொள்ள அவர்களைத் தயார் செய்வதே இன்றைய கட்டாய தேவை..! :)

Edited by nedukkalapoovan

அதேவேளை விடுதலைப்புலிகளையும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிரியின் அனைத்து வித காய் நகர்த்தல்களையும் நெருக்கடிகளையும் மக்கள் எதிர்கொள்ள அவர்களைத் தயார் செய்வதே இன்றைய கட்டாய தேவை..! :lol:

இதுதான் உண்மை.

ஆனால், இதுவரையான காலத்தில் மக்களை ஒருவித கற்பனையுலகத்தில் வைத்திருப்பதால், அவர்களைத் தெளிவுபடுத்தவேண்டியது முதற்பணியாக இருக்கிறது. அதற்கான முயற்சியை யாழ்கள நண்பர்கள் தங்கள் சுற்றுவட்டத்திலேயே ஆரம்பித்தால் என்ன? (என்னுடைய வீட்டிலேயே இந்தப் பிரச்சனை இருக்கிறது. அதனால் நான் ஆரம்பித்துவிட்டேன்) யாராவது வந்து செய்வார்கள் என்று பார்ப்பதைவிட நாங்களே எங்களால் முடிந்ததைச் செய்வதுதான் சரி.

'கொள்கைகள், தீர்மானங்களால் பயனில்லை, அவை செயல்வடிவம் பெறாதவரை"

  • 1 month later...

* மாவிலாறில் ஒரு அங்குல நிலத்தையும் இராணுவம் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம். (எழிலன்)

* கிழக்கில் எமது கை ஓங்கியே இருக்கிறது. இராணுவம் பெரும் பின்னடைவை சந்திருக்கும். எமது ஆயுதம் ஒன்றைப் பாவித்தாலே இராணுவ முகாம்கள் இருந்த இடம் தெரியாது போகும். (தளபதி ரமேஷ்)

* தமிழீழத்தின் கட்டுமானங்களை சிறீலங்கா விமானப்படை தொட்டும் பார்க்க முடியாது. (மாவீரர் தமிழ்செல்வன்)

* எனி யுத்தம் தென்னிலங்கையில் தான். எமது மண்ணில் அல்ல. (மாவீரர் தமிழ்செல்வன்)

* வன்னிக்குள் படை நகர்ந்தால் அதுதான் அவர்களுக்கு இறுதி அத்தியாயம். (பா. நடேசன்)

* அவர்கள் மடுவுக்கு வந்தால் நாம் மதவாச்சியில் நிற்போம். ( இளந்திரையன்)

* வன்னிக்குள் ஒரு அகலக்கால் பதிக்கவே அனுமதிக்கிறோம். அதற்கான விளைவை படைத்துறை சந்திக்கும். (பா.நடேசன்)

* வன்னியில் தந்திரோபாயப் பின்வாங்கலையே புலிகள் செய்கிறார்கள். (பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி.)

* இறுதிப் போர் குறுகிய காலத்தில் பல முனைகளிலும் இருக்கும். (பொட்டு அம்மான்)

* அடுத்து வரும் சில மாதங்களில் வன்னி உட்பட நிலங்கள் மீட்கப்படும்.. விடிவு விரைந்து வரும். (லண்டன் பொங்கு தமிழில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்)

* போர் என்று அரசு போகுமானால் நானே முதல் போராளியாகிப் போராடுவேன். (பாராளுமன்ற உறுப்பினர் கிசோர்)

இவை தவிர.. ஈழக்கிழவன்.. காலக்கண்ணாடி.. அவசிய அறிக்கை என்று வந்து நம்பிக்கைகளைக் கொட்டினது.. யார்..??!

இதைத்தவிர.. அரூஸ்.. புரூஸ்.. அவுஸ்திரேலிய சபேசன்.. ஐரோப்பிய சபேசங்கள்... ஆட்டுப்பால் அத்தாஸ்.. எல்லாரும்.. எழுதித் தள்ளிச்சினம். சனமும் வாசிச்சுப் போட்டு மெய்மறந்து இருந்தது உண்மை தானே. சனத்தை மெய்மறக்கச் செய்தது.. விடுதலைப்புலிகளின் தலைமையல்ல.

தலைவர் தனது கடந்த ஆண்டு மாவீரர் தின உரையில்.. மக்கள் எதிர்பார்த்தது போன்று போர் பிரகடனம் செய்யவோ.. தமிழீழப் பிரகடனம் செய்யவோ.. சவால் விடவோ இல்லை. மாறாக அவரின் பேச்சு பிராந்திய அரசுகளின் சர்வதேச அரசுகளின் அணுகுமுறை பற்றியே இருந்தது. அதுதான் அவசியம்.

புலிகள் ஒன்றும்.. அமெரிக்கா அல்ல. பலம் பொருந்திய வல்லரசுகளுடன் மோதி தமிழீழம் அமைக்க. ஆயுதப் போராட்டம் என்பது மட்டுப்படுத்திய வளத்துடனேயே நடக்கிறது. அதை இராஜதந்திர அரசியல் நகர்வுகளோடு ஒருங்கிணைத்துச் செல்லும் போதுதான் சிங்களப் பேரினவாதத்தின் தமிழருக்கு எதிரான தமிழீழத்துக்கு எதிரான இராணுவ மற்றும் அரசியல் நகர்வுகளை வெற்றி கொள்வது பற்றி யோசிக்கலாம். தலைவர் இதை உணர்ந்திருந்தபடியால் தான் வாய்ச்சவடால் விடவில்லை. தெளிவாக தனது உரையை தந்திருந்தார். இப்பவும் தருவார்.

இன்றைய வன்னியின் நிலை... போராட்டத்தை 1987 - 90 காலப்பகுதிக்குரிய நிலைக்கு நகர்த்தும் அறிகுறிகளையே காட்டி நிற்கின்றன. இராணுவம் முழு வன்னியையும் ஆக்கிரமிக்கும். அத்தோடு புலிகள் தரப்பில் இருந்து மிகவும் மட்டுப்படுத்திய வளத்தோடு தலைமறைவு ஆயுதப் போராட்டம் தொடரும்

இச்சந்தர்ப்பத்தில்.. சிறீலங்கா அரசிற்கு.. அரசியல் அழுத்தங்களை அதிகரிக்கக் கூடிய வகைக்கு தமிழ் மக்கள் தான் விடுதலைப்புலிகளோடு இணைந்து இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

வன்னி முழுக்கப் பிடிபட்டாலும்.. விடுதலைப்புலிகளை ஒழிக்க முடியாது. ஆனால் அவர்களின் செயற்பாடுகள் பெருமளவில் மட்டுப்படுத்தப்படும். அவ்வேளையில் தமிழர் பகுதிகளில் தேர்தல்கள் நடக்கும். பொதுத்தேர்தலும் வரும். அதில் அரசு தமிழீழ விரோத சக்திகளை தமிழர் பிரதிநிதிகளாக்கி ஜனநாயகம் என்ற போர்வையில் பாராளுமன்றில் இருந்தும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளிலும் இருத்தும்.. அவர்களும் கதிரையில் அமர்வார்கள்.

தமிழ் தேசிய ஆதரவாளர்கள்.. விடுதலைப்போராட்ட பங்காளிகள் பலர் மண்ணில் புதைக்கப்படுவார்கள்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்ற கோட்பாடு எழாத வகைக்கு சிங்கள குடியேற்றங்கள்.. சிங்கள நிர்வாகமயமாக்கல் வடக்கு கிழக்கில்.. சகோதரத்துவம் வளர்ப்பு என்ற போர்வையில் நிகழும்.

இத்தனையையும் தமிழ் மக்கள் எவ்வாறு விடுதலைப்புலிகள் இல்லாது எதிர்கொண்டு முறியடிக்கப் போகின்றனர் என்பதுதான் இன்றுள்ள முக்கிய கேள்வி. அதற்கான தயார்படுத்தல்கள் என்ன செய்யப்பட்டுள்ளன.. என்றால் ஏதும் இல்லை..!

வெறும் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்ட நேரத்துக்கு இத்தனை தியாகங்களாலும் வளர்க்கப்பட்ட போராட்டம் நிர்க்கதியாவதை தவிர்க்க மக்களை சரியாக வழிநடத்திச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. வெறும் மாயை வலைக்குள் மக்களைச் சிக்க வைத்திருந்ததன் விளைவு.. சிங்கள பேரினவாத அரசுக்கும் எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்க முனையும் சர்வதேச சக்திகளுக்குமே வாய்ப்பாக அமைந்துவிட்டுள்ளது.

1989 இல் ஈரோஸூடு புலிகள் நகர்த்திய காய்நகர்த்தலே பெரும் உலக வல்லரசான இந்தியப்படையினரோடு போராடி முடிந்து போனார்கள் என்று கருதிய புலிகளுக்கு உயிர் கொடுத்தது. மீண்டும் அப்படி ஒரு நிலை வரத்தான் போகிறது. ஆனால் இம்முறை சிங்கள அரசின் காய் நகர்த்தல்கள்.. புலிகளின் கடந்த கால காய் நகர்த்தல்களை நன்கு அவதானித்து சாதுரியமாக புலிகள் மீண்டும் தலையெடுக்காத வகைக்குரிய மாதிரியே அமையும்.

இதையெல்லாம் முறியடிக்க வேண்டியவர்களாக தமிழ் மக்களே... உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி வாழும் தமிழ் மக்களே இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அதை எப்படிச் செய்யப் போகின்றனர்.. அதற்கான வழிமுறைகள் என்னென்ன.. என்பதெல்லாம்.. இருளடைந்த பகுதிக்குள் உள்ள எரியா விளக்குகளாகவே இருக்கின்றன.

இதையெல்லாம் சிந்திக்காமல் இன்னும் இன்னும் இராணுவ வெற்றி பற்றிய மாயைக்குள் சிக்க வைத்து மக்களைச் சீரழிப்பதுதான்.. இன்றைய நிலையிலும் வேதனையாக இருக்கிறது. அதற்கு விடுதலைப்புலிகளில் சிலர் வெளியிட்ட கருத்துக்களும்.. ஊடகங்கள் பரப்பி வந்த கருத்துக்களுமே முக்கிய காரணம்.

உண்மையைப் பேசி யதார்த்தப் பாதையில் மக்களை நகர்த்திச் சென்றிருந்தால்.. இன்று மக்கள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க இன்னும் இன்னும் தம்மை அதிகளவு தயார்படுத்த வைத்திருந்திருக்க வாய்ப்புக் கிடைத்திருக்கும்.

மக்களை இராணுவ வெற்றி.. இறுதி யுத்தம் என்ற மாயைக்குள் கட்டிவைத்து மாண்டது.. தமிழர்களும்.. அவர்களின் போராட்டமுமே என்ற நிலையே இன்று தோன்றிக் கொண்டிருக்கிறது. இது இன்று அரசாலும் துரோகிகளாலும் பிரச்சார ரீதியாக மக்களிடம் எடுத்தும் சொல்லப்படுகின்றது. இதற்கு காரணம் யார்..???!

சிங்களவன்.. 5 ஆண்டுகளாக அமைதிக்காலத்தில் வாய்ச்சவடாலை விட தனது படைத்துறையை எத்துணை மடங்கு பலப்படுத்தி வைத்திருந்திருக்கிறான் என்பதற்கும் மேலாக சர்வதேச சமூகத்தை எந்தளவுக்கு தன்னோடு இணைத்துக் கொண்டுள்ளான். அதுவும் இத்தனை மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் மத்தியிலும். ஆனால் நாம்..???!

மாயைப் பலத்தோடு தமிழீழ விடுதலையைப் பற்றி இறுதிப் போர் பற்றி சிங்களவனை உசுப்பேத்தி உசுப்பேத்தி இருந்ததையும் தொலைத்து நிற்பதுதான் இன்றைய யதார்த்தம்..! எனியாவது சிந்திப்போமா..???! :(:lol:

ஒருவேளை இதையெல்லாம் பொய்யாக்கி புலிகள் அசுர பலத்தோடு இராணுவ வெற்றிகளை பெற்றுத் தந்தாலும்.. மக்களை நெருக்கடிகளுக்குள் வாழ எதிரியின் இராணுவ மற்றும் அரசியல் இராஜதந்திர நகர்வுகளுக்கு ஏற்ப அவற்றை முறியடிக்க பழக்கி வைத்திருப்பதான் எதிரியின் சூழ்ச்சிகளை முறியடித்து மக்களின் பலத்தை ஒருங்கிணைத்து சர்வதேசத்துக்கு எமது மக்களின் வேட்கையைக் காட்டி எமக்கான விடுதலைக்கான அவர்களின் ஆதரவைக் கோர முடியும்.

அதைவிடுத்து.. டக்கிளஸ் தேவானந்தாவையும்.. கருணாவையும் பற்றிப் பேசிக் கொண்டு திட்டிக் கொண்டு.. மக்களை அவர்கள் விலைபேச அனுமதித்துவிட்டு நாம் வாழாதிருப்பின் எப்படி... எம் பக்கமுள்ள நியாயம் சர்வதேசத்தைப் போய் சேரும்.

புலம்பெயர்ந்த மக்களும் சரி தாயக மக்களும் சரி கொள்கையாக தமிழீழத் தனியரசை வகுத்துக் கொண்டு அதை நோக்கி அனைத்துவித நெருக்கடிகளுக்குள்ளாலும் அவற்றை திறமையாக எதிர்கொண்டு செயற்பட தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இராணுவ வெற்றிகளை மையமாக மட்டும் கொண்டு போராட்டத்தில் வெற்றி காண முடியாது. தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டம் கூட ஒரு துண்டு நிலப்பரப்பும் இன்றித்தான் போராடி வென்றது. வியட்நாம் போராட்டம் கூட காடுகளை மையமாகக் கொண்டே போராடி வென்றது. ஆனால் அங்கு தலைவர்களை விட மக்கள் அதிகம் போராட்டத்தை நகர்த்திச் சென்றார்கள்.. போராளிகள்.. நெருக்கடிகளுக்குள் வீழ்ந்த போது. நெல்சன் மண்டேலா சிறையில் இருக்கத்தான் தென்னாபிரிக்கப் போராட்டம் வெற்றி கண்டது. நெல்சன் மண்டேலா இல்லை என்று மக்கள் சோர்ந்திருந்து வெள்ளையின ஆட்சியாளர்களுக்கு விலை போய் இருப்பின்.. போராட்டம் வென்றிருக்குமா..!

அதேவேளை விடுதலைப்புலிகளையும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிரியின் அனைத்து வித காய் நகர்த்தல்களையும் நெருக்கடிகளையும் மக்கள் எதிர்கொள்ள அவர்களைத் தயார் செய்வதே இன்றைய கட்டாய தேவை..! :)

இப்படியே கதைதத்துக்கொண்டிருப்போமேயா

எமது பலத்தில் வைத்துள்ள அளவுக்கு மீறிய நம்பிக்கையைவிட எமது பலவீனத்தை எவ்வழியிலும் சீர்படுத்தி தோல்விகளை குறுகிய காலத்தில் பெரும் வெற்றியாக்குவதே தற்போது உள்ள காலத்தின் கடமை..

எதிரியும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை 5வருடகாலமாக்கியதே வெளினாடுகளின் துணையுடன் தனது பலயீனங்களை சீர்படுத்த... அவனுக்கு சட்ட பூர்வமான ஒரு நாடு என்பது ஒரு சாதகம்..

எமக்கு தன்னம்பிக்கையும், உலகத்தமிழரின் ஆதரவு, என் நேரமும் உயிரை இழக்கத்தயாராக உள்ள போராளிகள் என்பன பலம்.

பலயீனங்கள் பல உள்ளன... இதில் முக்கிய ஒன்று எதிரிக்கு நாம் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று எமது மக்களுக்கு சொல்லபடுபவை எல்லாம் எதிரியால் மிக அவதானமாக சீரியசாக கவனிக்கப்பட்டு அதற்கேற்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தனியாகவோ வேறு நாடுகளின் உதவியுடனோ தன்னை தயார்படுத்த உதவியுள்ளது... அதனைவிட உளவு நடவடிக்கைகள்.. தொலைபேசி தொடர்புகள் தொடக்கம்..... நடமாட்டஙள் வரை கேடு அவதானிக்கப்பட்டு வருகிறது..

எனவே இரகசியம் காத்தல், மக்கள் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்... எனவே எதிர்காலத்தில் உடன் இப்படியான பிரச்சனைகளுக்கு முடிவு காண வேண்டியது மிக அவசியம்.. அத்துடன்

காலத்தின் தேவைகளை உடன் நிறை வேறுவதில் எல்லோரும் தோள் கொடுத்தல்..மிக அவசியம்.. இப்படி பலவிதமான பலயீனங்கள் உடன் களையப்படவேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.