Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு மலர்ச்சாலையில் சிறிலங்கா படையினரின் 250 உடலங்கள்: முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர

Featured Replies

குறுக்காலபோவான் வாங்கோ

வடிவங்கள் மாறலாம், மூலம் மாறலாம்.. ஆனால் செய்தி மட்டும் மாறாது. இத்துடன் இச் செய்தி 3 தடவை அல்லது அதற்கு மேல் இணைக்கப்பட்டு விட்டது. வெற்றி செய்திகள் மூலம் மட்டுமே விடுதலை தாகத்தினை வளர்க்க முயலும் ஊடக போக்கிரித்தனம் இது

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவான் வாங்கோ

அவர் நல்ல செய்தி வந்தா இந்த பக்கம் வர மாட்டார் :unsure::huh:

புலிகலை அங்கை அடிச்சிட்டினமாம் இங்கை அடிச்சிட்டினமாம் என்ர உடன அவர் தான் முதலாவதுஆலா வந்து நிப்பார் யாழ் களத்தில :rolleyes::huh:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

:huh: குறுக்கற்ற பிரச்சனையே வேற. சனத்தை ஒருமாதிரி யதார்த்தத்தை உணரப்பண்ணி உந்த கனவுகளையும், கற்பனைகளையும் ஆசைகளையும் தூக்கி எறியப்பண்ணி, நிஜ உலகுக்க கொண்டு வரேக்க, இவங்கள் வேற 250 சவம், 450 சவம் எண்டு சனத்தை மறுபடியும் கனவுலகத்துக்குள்ள தள்ளப் பாக்கிறாங்கள் எண்டதுதான் அது.

அதுவும் ஒருவகையில் சரிதான். ஏனெண்டால், உங்க இருக்கிற ஆக்கள் இருக்கேலாத வருத்தத்தில தங்கட ஆசைகளை "கள நிலவரம்" என்ற போர்வையில் எழுதித் தள்ளி, அதைச் சனம் உண்மையெண்டு நம்பி, இந்தா, அந்தா யாழ்ப்பாணம் பிடிச்சாச்சு எண்டு கனவு கண்டு கொண்டு இருந்த காலமும் இருந்திச்சு. அது இப்ப கொஞ்சம் கொஞ்சமாக மாறி சனத்துக்கு உண்மை நிலவரம் தெரிய ஆரம்பிச்சிருக்கு. அதுக்குள்ள 250, 450 எண்டு கணக்குக் காட்டினா அந்தாளுக்கு விசர் வருமோ வராதோ ?

  • கருத்துக்கள உறவுகள்

250, 450, 910 என்று கணக்குக் காட்டி என்ன பிரயோசனம்?

மகிந்த ராஜபச்ச மிகவும் சிறந்தமுறையில் காய்களை நகர்த்தி தமிழர்களுக்கு ஒன்றுமில்லாத தீர்வை மன்மோகனுடன் சேர்ந்து தரப்போகின்றார் என்று தமிழ்நெற் சொல்லுகின்றது.

அரசியல் ரீதியாக தமிழரை அடக்க முதலில் இராணுவ ரீதியாகப் புலிகளை அடக்கி ஒடுக்கி ஒரு சிறு பகுதிக்குள் இருக்கப் பண்ணவேண்டும். அதனை இவ் வருடத்திற்குள் செய்யத்தான் சிங்கள இராணுவத்தினர் தொடர்ந்து பலிகொடுக்கப்படுகின்றனர் ( கூடவே பல போராளிகளும் வீரமரணமடைகின்றனர்). ஆனால் யுத்தத்தில் சிங்கள இராணுவம் வெல்ல முடியாது என்று உணர்த்தவே புலிகள் தற்காப்புப் போரில் ஈடுபட்டுள்ளனர். இப்படி யுத்தம் நீளும்போது சிலவேளை யுத்த நிறுத்தம் இரு பகுதி மேலும் திணிக்கப்படவும் சாத்தியமுள்ளது.

இந்த நிகழ்வுகள்தான் இனித் தொடரும். அது பரந்தனைப் பிடித்தாலும், கிளிநெச்சியை அடைந்தாலும், சிதைக்கப்பட்ட ஒரு இராணுவத்தால் அங்கு நிலை கொள்ள முடியாதிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
:huh: சிங்கள அரசுக்கு 450, 910 என்பதெல்லாம் பெரிய இழப்பில்லை. 160,000 துருப்புக்களை படையில் சேர்த்து வைத்திருப்பதே பலி கொடுப்பதற்காகத்தான். இந்த இழப்புகள் ராணுவத்தின் முன்னகர்வைத் தடுக்குமா என்றால் சந்தேகந்தான். ஆக இரு நாடுகளின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக நடத்தப்படும் இந்த யுத்தத்தில் எமது போராளிகளை நாம் முடியுமானளவிற்கு பாதுகாப்பதே சிறந்தது. ஏனெறால் சிங்கள ராணுவம் தனது பக்க இழப்புகள் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.இந்த நிலையிலும் புலிகள் நடத்தும் வீரம் செறிந்த எதிர்ச்சமர் போற்றத்தக்கது !

மங்கள + புதினம் = மொத்தம்

200 + 50 = 250

குறுக்காலபோவான் வாங்கோ

ஆள் நரகத்தில் இருந்து வர கொஞ்சம் நேரமெடுக்கலாம். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் நல்ல செய்தி வந்தா இந்த பக்கம் வர மாட்டார் :D:D

புலிகலை அங்கை அடிச்சிட்டினமாம் இங்கை அடிச்சிட்டினமாம் என்ர உடன அவர் தான் முதலாவதுஆலா வந்து நிப்பார் யாழ் களத்தில :D:rolleyes:

சரியாச் சொன்னீங்கள் குட்டிப்பையா .

இராணுவ அணி ஒன்றுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாம்

November 21, 2008

பரந்தனில் 270 பேரை கொன்ட இராணுவக்குழுவிற்கு என்ன ஆனது??. அந்த இராணுவ அணியைத் தேடிச் சென்ற மற்றைய அணி மீதும் புலிகள் நடத்திய தீடீர்த் தாக்குதலில் மேலும் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பரந்தனில் 270 பேரை கொன்ட இராணுவக்குழு முன்னேறியபோது அவர்களை முன் நகரவிட்டு புலிகள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டிருப்பதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் , பரந்தனில் உள்ள சில இராணுவக்குழுக்களுடன் முற்றாக தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாக, இராணுவ வட்டாரங்கள் பகிரங்கமாக அறிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அத்துடன் படையினர் கைப்பற்றிய முக்கிய பிரதேசம் ஒன்றை மீண்டும் விடுதலைப் புலிகள் கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.(இதனை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை) ஒரு வாரத்திற்குள், மட்டும் குறைந்தது 927 படையினரை இலங்கை இராணுவம் இழந்துள்ளது.

http://www.athirvu.com/knews/articleback.php?newsid=2718

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னடா இது புதிசாயிருக்கு

ஏன்பா இப்டி ரீலு விடுறீங்க?

ஆனையிரவு முதல்தரம் அடிக்கேக்க எங்கடபக்க ஸ்கோர் 1500?

முரளி அண்ணை

ஆனையிறவு மீதான ஆகாய கடல் வெளி நடவடிக்கையின் போது வீரச்சாவடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 602. படைமுகாம் மீதான தாக்குதல் மற்றும் வெற்றிலைக்கேணி கட்டைக்காடு பகுதிகளில் தரையிறங்கி ஆனையிறவு நோக்கி முன்னேறிவந்த படையினருடனான மோதல்கள் மற்றும் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதல்கள் என துணைப்படை வீரர்கள் சிலர் உட்பட மொத்தம் 602 போராளிகளே வீரச்சாவடைந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்பா இப்டி ரீலு விடுறீங்க?

அக்கோய் இது ரீலும் இல்லை ஒன்டும் இல்லை . இது உண்மை உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

வடபோர் முனை கிளாலி, முகமாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 250 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என பிராதான எதிர்க்கட்சியான ஐ.தே.க தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறீ ஜயசேகர தெரிவிக்கையில்:-

நேற்று வியாழக்கிழமை கிளாலி, முகமாலைப் பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர மோதலில் சிறீலங்காப் படையினர் 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் அநுராதபுரம், கொழும்பு மருத்துவமனைகளில் உள்ள நோயாளர்களை வீடுகளுக்கு அனுப்பி அங்கு படையினருக்கு சிகிற்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

குருநாகலில் கடந்த வாரம் மட்டும் 48 சடலங்கள் எடுத்துவரப்பட்டு கும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவர்களின் சாவு வீடுகளுக்கு இறுதி கிரிகைககளில் கலந்துகொண்டேன்.

பூநகரியைக் கைப்பற்றி அதனை பெருவெற்றியாக அறிவித்த சிறீலங்கா அரசாங்கம் முகமாலையில் நடந்த இழப்புகள் குறித்து ஏவும் பேசாமல் இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் முகமாலைப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் பதுங்குளிகள், மற்றும் முன்னரங்க நிலைகளில் அதிசக்தி வாய்ந்த குண்டு வெடிப்பதால் அதில் பல படையினர் சிக்குண்டு பலியாகியுள்ளதாக மற்றொரு தகவல் தெரிவித்து்ளளது. அத்துடன் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலை நோக்கி முன்னேறிய சிறீலங்காப் படையினரின் அணி ஒன்று காணாமல் போயுள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது.

http://www.pathivu.com/news/609/34/250/d,topnews_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ அணி ஒன்றுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாம்

பரந்தனில் 270 பேரை கொன்ட இராணுவக்குழுவிற்கு என்ன ஆனது. அந்த இராணுவ அணியைத் தேடிச் சென்ற மற்றைய அணி மீதும் புலிகள் நடத்திய தீடீர்த் தாக்குதலில் மேலும் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பரந்தனில் 270 பேரை கொன்ட இராணுவக்குழு முன்னேறியபோது அவர்களை முன் நகரவிட்டு புலிகள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டிருப்பதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் , பரந்தனில் உள்ள சில இராணுவக்குழுக்களுடன் முற்றாக தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாக, இராணுவ வட்டாரங்கள் பகிரங்கமாக அறிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அத்துடன் படையினர் கைப்பற்றிய முக்கிய பிரதேசம் ஒன்றை மீண்டும் விடுதலைப் புலிகள் கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.(இதனை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை) ஒரு வாரத்திற்குள், மட்டும் குறைந்தது 927 படையினரை இலங்கை இராணுவம் இழந்துள்ளது

www.tamilwin.com

Edited by kuddipaiyan26

தப்பியவர்கள் வந்து தகவல் சொல்லும் வரை, அரசு காத்திருக்க வேண்டும். தொடர்பில்லை, காணவில்லை என்றால் அந்த இராணுவக் குடும்பத்திற்கு இனிக் காசில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.