Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் தின உரையில் தலைவா பிரபா சொல்லப் போவதென்ன?

Featured Replies

அடுத்தடுத்து படையினரிடம் வீழ்ச்சிடையும் கேந்திர இடங்கள், படையினரின் விரைவான முன்னேற்றம், உக்கிரமான விமான மற்றும் பீரங்கித் தாக்குதல்கள், இலட்சக்கணக்கான மக்களின் பெயர்வு அலவலம் என்று முன்னேப்போதும் இல்லாத நெருக்கடிக்குள் இருந்தாவர்று எதிர்வரும் 27ம் திகதி தலைவர் வே. பிரபாகரன் மாவீரர் நாள் உரையை நிகழ்த்தவிருக்கிறர்.

புலிகள் இயக்கம் இதுவரை சந்தித்திராதளவுக்கு நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கின்ற நிலையில் புலிகளின் தலைவர் இந்த நிலையிட்டு என்ன சொல்லப் போகிறார்? புலிகளின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று அறியும் ஆதங்கம் தமிழ்மக்களிடத்தில் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் எழுந்திருக்கிறது.

தலைவர் பிரபாகரன் வருடாந்தம் மாவீரர் தினத்தன்று நிகழ்;த்துகின்ற உரை புலிகள் இயக்கத்தின் கொள்கை விளக்க உரையாக அமைவது வழக்கம். அதாவது கடந்த வருட நிகழ்வுகளின் தாக்கங்கள் குறித்த கருத்துகளும் அடுத்த வருடத்துக்கான கொள்கைப் பிரகடனமாகவும் இந்த உரை அமைவதுண்டு.

இந்தியப் படைகளின் காலத்தில் புலிகள் சந்தித்த நெருக்கடிக்குப் பின்னர் நிலங்களைத் தக்கவைப்பதில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கின்ற தருணத்தில் இந்த வருட உரை இடம் பெறவுள்ளது.

மட்டு, திருமலை, அம்பாறை யாழ். மன்னார், வவுனியா போன்ற இடங்களில் இருக்கின்ற மாவீரர் துயிலும் இல்லங்கள் இம் முறை சுடரேற்ற முடியாத நிலை இவை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன.

இப்போது கிளிநொச்சி, கனகபுரம், விசுவமடு, முல்லைத்தீவின் முள்ளியவளை, யாழ்.உடுதுறை மற்றும் மணலாறின் சில கல்லறைத் தோட்டங்கள் மடடுமே புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்குதான் மாவீரர் நாளில் சுடரேற்றும் நிகழ்வு நடைபெறப் போகின்றது.

இந்த முக்கியமான கால கட்டத்தில் தலைவர் பிரபாகரனின் உரை மிகவும் முக்கியத்துவத்துடன் எதிர்பார்க்கப்படுகின்ற அதேNளை இந்த உரையை எவ்வாறு நிகழ்த்துவதென்ற நெருக்கடி அவருக்கு இருக்கவே செய்யும்.

கடந்த வருட உரையில் இலங்கை அரசின் போர் வெறிக் கொள்கைக்கு, சர்வதேசமே காரணமாக இருப்பதாக குற்றம் சாட்டியிருந்த பிரபாகரன், தமிழ்மக்களின்; சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் தார்மீக நியாயாத்தைப் புரிந்து கொண்டு சர்வதேசம் அதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் சர்வதேசத்தின் காதில் இது எந்தத் தாக்கத்;தையும் ஏற்படுத்தவில்லை. ஏதோ பெயருக்கு அவ்வப்போது இணைத்;தலைமை நாடுகள் என்ற பெயரில் கூட்டப்பட்ட கூட்டங்கள் இராணுவத் தீர்வு சாத்தியமற்றதென்ற வழக்கமான ஆலோசனையோடு முடிந்து போனதே தவிர, இப்போது இலங்கைப் போரை மேற்குலக நாடுகள் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் இந்தப் போர் தொடர்பாக பிரபாகரன் எடுக்கப் போகின்ற முடிவு என்ன என்ற கேள்வி எழுகிறது? இதற்கான பதில் பலரினதும் எதிர்பார்ப்புக்குரிய விடயமாகியிருக்கிறது.

இந்தப் போர் நீண்டு செல்லுமர்? தொடர்ச்சியாக நிலங்களை இழந்து வந்திருக்கின்ற புலிகள் இயக்கத்தின் நிலை எவ்வளவு காலத்திற்கு இப்படியே இருக்கும்? புலிகள் இயக்கம் எதற்காக இன்னமும் தற்காப்பு நிலையிலேயே இருக்கின்றது? தாக்குதல் நிலையில் இருந்து செயற்படக்கூடிய பலம் புலிகளிடம் இல்லையா? போன்ற கேள்விகளுக்கு இந்த வருட மாவீரர் தின உரையில் பதில் கிடைக்கும் என்று பலரும் நம்புகின்றனர்.

தற்காப்பு நிலையில் தான் இருக்கிறோம் என்று தொடர்ச்சியாகப் புலிகள் கூறி வந்திருக்கின்ற நிலையில் அவர்களின் ஆளுகைப் பரப்பு சுருங்கிப் போயிருக்கிறது. இது புலிகளின் பலத்தின் மீதான கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது.

புலிகள் பலம் குறைந்து போகவில்லை என்பது வேறு விடயமாக இருப்பினும் சாதாரண மக்களின் பார்iவியில் புலிகளின் பலம் குறித்த சந்தேகம் கேள்வி எழுந்திருப்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்தக் கட்டத்தில் பிரபாகரனின் இந்த வருட மாவீரர் தின உரையானது புலிகள் இயக்கத்தின் பலத்தை அவர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அமையும் என்றே எதிhபார்க்கலாம்.

அதேவேளை சர்வதேசத்தின் நெருக்குதல் காரணமாகவே புலிகள் இயக்கம் தற்காப்பு நிலையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும் இந்த வருட மாவீரர் தின உரை போர்ப் பிரகடனத்தை வெளியிடும் வகையில் அமையும் என்ற எதிர்ப்பார்புக்கள் சிலரிடம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், புலிகளின் இந்த நீண்ட விட்டுக் கொடுப்பு அல்லது பின்வாங்கலுக்கு தந்திரோபாய பின்நகர்வு என்ற வாhத்தை பொருத்தமானதாக இருக்கு என்று சாதாரண மக்கள் நம்பும் நிலையில் இல்லை.

எனவே போரின் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் ஓர் உரையை அடுத்த கட்டத்தில் புலிகள் இயக்கம் என்ன செய்யப் போகிறது என்ற விளக்கத்தையே பலரும் எதிர்பார்க்கின்றனர். அதே வேளை இந்த உரையில் முக்கியமாக சர்வதேசத்தை நோக்கி தெளிவான சில முடிவுகளை புலிகள் அறிவிக்கக்கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது.

சர்வதேசத்தின் விருப்பு வெறுப்புகளுக்காக இழந்தது போதும் என்ற தொனிப்பட இந்த வருட உரையில் சில விடயங்கள் தெளிவுபடுத்தப்படும் சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரிகிறது.

போரை நிறுத்துவதில் இலங்கை அரசை வழிக்குக் கொண்டுவருவதில் அல்லது இலங்கை மீதான கண்டிபபான நடவடிக்கை எடுப்பதில் சர்வதேசம் தவறிப் போயிருப்பதை பிராபாகரன் தனது உரையில் முக்கியமான குற்றச்சாட்டாக முன்வைக்கும் சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

சர்வதேசத்தின் நிலைப்பாடுகள், அணுகுமுறைகளில் காணப்படும் தொய்வான தன்மையே இலங்கை அரசின் தீவிர இராணுவப் போக்குக்கு காரணம் என்று புலிகள் உறுதியாக நம்புகின்றனர். எனவே அவர்கள் தமது கண்டனத்தை சர்வதேசத்தை நோக்கியும் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

அடுத்து தமிழகத்தில் ஈழத்தமிழுக்கு ஆதரவான எழுச்சி தொடர்பாக நன்றிபூர்வமான கருத்துக்களை வெளியிடுவதுடன் நின்று விடாது அத்தகைய ஆதரவை பிரபாகரன் தொடர்ந்து வழங்குமாறு வேண்டி நிற்பதாகவும் அவரது உரை அமையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

தமிழகத்தில் தற்போது கொளுந்து விடடெரியும் ஈழத்தமிழர் ஆதரவுப் பிரச்சினை மேலும் உத்வேகப்படுத்தும் வகையில் புலிகளின் தீர்க்கமான கருத்துக்கள் இந்த மாவீரர் தினத்தில் வெளியாகலாம்.

இவற்றோடு புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவது முக்கியமான தேவையாகவும் தலைவர் பிரபாவுக்கு இருக்கிறது. ஏனென்றால் அவர்களின் நிதிப்பங்களிப்பு புலிகளின் இயக்கத்தின் உயிர்வாழ்வுக்கு முக்கியமானது.

இன்றைய நிலையில் நம்பிக்கை தளர்ந்து போயிருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பிரபாகரனின் மாவீரர் நாள் உரை மிகவும் முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

சொல்லை விடவும் செயலில் வேகம் காட்டுபவர் பிரபாகரன். ஆகையால் இன்றைய நெருக்கடியை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை அவர் வார்த்தைகளால் சொல்லிக் கொண்டிருபாரா என்ற சந்தேகமும் உள்ளது.

ஆனால், சொல்லிலோ செயலிலோ இந்தக் கேள்விக்களுக்கு தமிழ் மக்கள் விடை தேடிக்கொண்டிருப்பது உண்மை.

அதே வேளை சர்வதேசம் புலிகளின் நிலைப்பாடுகளை அறிய ஆசைப்படுகிறது. மஹிந்த ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்து பேச்சு நடத்த வருமாறு விடுத்து வரும் அழைப்புகளின் பின்னனியில் புலிகளின் நிலைப்பாட்டை அறிய சர்வதேசம் ஆசைப்படுகிறது. இதற்கான பதில் பிரபாகரனின் உரையில் நிச்சயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எனவே தான் கடந்த காலங்கைள விடவும் இம்முறை மாவீரர் தின உரை கனதியானதாக இருக்கும் என்பது பொதுவான கணிப்பு.

கார்வண்ணண்

நன்றி : வீரகேசரி

நவம்பர் 27 வரை பொறுத்திருங்கள்........

Edited by vidivelli

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க பாருங்கோ தலைவர் இதச்சொல்லப்பொறார் அதச்சொல்லப்போறார் என்டு குழப்ிபறதுக்குத்தான் கூட ஆக்கள் போல 27 ம் திகதி பார்க்கத்தான போறம் பேந்தென்ன ?

:unsure::) தொடங்கிட்டாங்கையா தொடங்கிட்டாங்கள். :o:D

சரிதாக்காவின் கருத்தைத்தான் நானும் சொல்ல நினைத்தேன், அவங்க முந்திட்டாங்க.

இங்கு இன்னுமொரு ஆய்வாளர் வருவார் பாருங்கோ,

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா! கிளம்பிட்டாங்கய்யா! கிளம்பிட்டாங்க!

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஆய்வாளரும் தமக்குத் தெரிந்த வரையில் மாவீரர் உரை வரைவதும், உரையின் பின்னர் வியாக்கினம் எழுதுவதும் வழமையான விடயங்கள்தானே..

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஆய்வாளரும் தமக்குத் தெரிந்த வரையில் மாவீரர் உரை வரைவதும், உரையின் பின்னர் வியாக்கினம் எழுதுவதும் வழமையான விடயங்கள்தானே..

ஆய்வுகள் எழுதுவது ஆய்வாளர்களின் வேலை

அதை அவர்கள் செய்யும்போது...........

அதிமேதாவிகளின் வேலை என்ன..........???

இப்படி ஏதாவது எழுதாவிட்டால் அதிமேதாவி என்று எப்படி காட்டுவது.........???

அதுதான். இல்லாவிட்டால் இந்த அறிவாளிகளின் தலை சுக்குநூறாக வெடித்துவிடும்...........

உண்மையில் இத்தனை வருட மாவீர் உரையை

எந்த ஆய்வாளரும் எந்த அதிமேதாவியும்

அருகில் போனதாககூட சரித்திரம் இடையாது

அருகில் போனதாககூட சரித்திரம் கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தின உரையில் தலைவா பிரபா சொல்லப் போவதென்ன?

அதை தலைவர் சொல்லட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தின உரையில் தலைவா பிரபா சொல்லப் போவதென்ன?

தெரியாது..! :(:lol::lol::D:lol:

"சொல்லை விடவும் செயலில் வேகம் காட்டுபவர் பிரபாகரன். ஆகையால் இன்றைய நெருக்கடியை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை அவர் வார்த்தைகளால் சொல்லிக் கொண்டிருபாரா என்ற சந்தேகமும் உள்ளது."

இப்படி இறுதியில் எழுதி எல்லோரையும் ஏமாற்றிவிட்டார் ஆய்வாளர். :lol: :lol: ...........

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் உரையின் பின்புதான் ஆய்வாளர்களினால் வியாக்கியானங்கள் கூறமுடியும்.

அதற்குமுன்பு எல்லாமே ஒரு ஊகம்தான். இருந்தாலும் தலைவர் மாவீரர்களை நினைவுகூருவார் என்பது உறுதி.

Edited by Valvai Mainthan

தலைவர் மாவீரர்களை நினைவுகூருவார் என்பது உறுதி.

:lol: :lol: ................ :lol:

Edited by Iraivan

ஆகா...

ஆரம்பிச்சிட்டாங்கையா ஆரம்பிச்சிட்டாம்க்க....

இண்டைக்கு 24 இன்னும் ஒரு 3 நாள் பொறுக்கமுடியாதா?... தலைவர் எங்கெருந்தெண்டாலும் உரையாற்றுவார், எங்கெருந்தெண்டு உரையாற்றப்போரார் எண்டு நீங்களேனையா உளத்திறிங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் உரையின் பின்புதான் ஆய்வாளர்களினால் வியாக்கியானங்கள் கூறமுடியும்.

அதற்குமுன்பு எல்லாமே ஒரு ஊகம்தான். இருந்தாலும் தலைவர் மாவீரர்களை நினைவுகூருவார் என்பது உறுதி.

தலைவர் மாவீரர்களை நினைவுகூருவார் என்பது உறுதி.

இந்த ஙாற்றாண்டின் மாபெரும் கண்டுபிடிப்பு

ஒரு சின்ன சந்தேகம் !

நாங்கள் எல்லோரும் தலைவர் "பிரபாகரன்" என்று மரியாதையாகத்தானே சொல்லுவோம்.

இவர் மட்டும் என்ன "பிரபா" என்று சொல்லுறார் ? இவர் என்ன மாமனா இல்லை மச்சானா ?

தலைவர் என்ன சொல்லுவார் எண்டு ஊகிப்பதில் இவர்களுக்கு என்ன லாபம் ?

மொத்தத்தில நீங்கள் சொல்வது போல 27 ம் திகதி மாலை தலைவர் சொல்லத்தானே போறார் :lol:

பிறகென்ன அவசரம் ? பொறுமையாக இருக்கவிடுங்களேன் !!!

Edited by யசி

ஒன்றைத் தயார் படுத்திக் கொள்வதால் அதற்கு வலிமை அதிகம். அவ்வாறானதுதான் மாவீரர் உரையும். என்ன சொல்லப் போகிறார் என்பதை உலகமே எதிர் பார்த்திருக்கிறது. பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. இது தமிழர் சார்ந்த விடயமாக இருந்து, இன்று உலகம் என்னவாயிருக்கும் என்ற அங்கலாய்ப்புடன் காத்திருக்கும் விடயமாகிவிட்டது.ஆனாலும் களத்திலுள்ளவர்களால் சில விடயங்கள் கோடிட்டுக் காட்டப்படும் அதுவும் இம்முறையில்லை.

Edited by Iraivan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா தலைவர் அதச்செய்வார் இதச்செய்வார் என்டு குழப்புறதுதான் உங்களோட வேலையா சொல்லேக்க தெரியும் தான முதலில நீங்கள் என்ன சொல்லப்போறியல் என்ன செய்யப்போறியல் என்டு பாருங்கோ சும்மா தலைவர் என்ன செய்ப்போறார் என்டு குழப்பாதெங்கோ தயவுசெய்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.