Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மும்பாய் தாக்குதல் எதிரொலி: இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல்- எம்.கே.நாராயணன் பதவி விலகல்

Featured Replies

பாதுகாப்பு செயலாளர் நாராயணனனும் ராஜினாமா

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 30, 2008, 17:28

RSS இலவச நியூஸ் லெட்டர் பெற thatsTamil Bookmarks

MK Narayanan

டெல்லி: இந்தியா இதுவரை பார்த்ததிலேயே மிக மட்டமான தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணனும் தனது பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார்.

ஆனால், வேறு ஆலோசகரை தேர்வு செய்யும் வரை இவரது ராஜினாமா கிடப்பில் போடப்படும் என்று தெரிகிறது.

வெளியுறவுச் செயலாளராக இருந்து பிரதமர் ராஜிவ் காந்தி உள்பட பல பிரதமர்களை இலங்கை, காஷ்மீர், அமெரிக்க உறவு உள்ளிட்ட பல விஷயங்களில் தவறாக வழி நடத்திய ஜே.என்.தீட்சித் இம்முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

வழக்கம் போலவே பிரதமர் மன்மோகன் சிங்கையும் தவறாகவே வழி நடத்தி வந்தார். திடீரென அவர் மறையவே 2005ம் ஆண்டு இந்தப் பொறுப்பு எம்.கே.நாராயணனிடம் வழங்கப்பட்டது. இது நிலைமையை இன்னும் மோசாக்கியது.

இந்திரா காந்தி குடும்பம், காங்கிரஸ் கட்சி ஆகியோரின் ஜால்ரா என்பதைத் தவிர நாராயணனுக்கு பெரிய தகுதி ஏதும் இருந்ததில்லை.

இந்திரா குடும்பத்துக்கு நெருக்கம் என்பதால் இருமுறை இன்டெலிஜென்ஸ் பீரோவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1992ம் ஆண்டில் இவர் ஓய்வு பெற்றார். 2004ம் ஆண்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கி்ன் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். தீட்சித் மறைந்த பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரானார்.

பாலக்காட்டைச் சேர்ந்தவரான இவர் தான் தேசிய பாதுகாப்பு விஷயத்தில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு உதவி வந்தவர். இருவரும் சேர்ந்து காட்டிய பொறுப்பின்மையும் செயலின்மையும் தான் நாட்டை இந்த அளவுக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது.

மீண்டும் வருவாரா பிரிஜேஷ் மிஸ்ரா?:

நாராயணன் மீது சமீப காலமாவே பிரதமர் நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் பாஜக ஆட்சியில் பிரதமர் வாஜ்பாயின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ராவுடன் பிரதமர் மன்மோகன் சிங் அவ்வப்போது ஆலோசனைகள் நடத்தி வந்தார்.

அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்த விஷயத்தில் இவர் பிரதமருக்கு பெரும் உதவியாக இருந்தார்.

மேலும் பாஜக ஆட்சியில் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் மிகுந்த தீவிரம் காட்டியவர். யாருக்கும் அஞ்சாதவர், வாஜ்பாயோ-அத்வானியோ.. யாருக்கும் ஜால்ரா போட மாட்டார். மனதில் பட்டதை சொல்லிவிடுவார். இதனால் இவர் மீது வாஜ்பாய்க்கு அதீத மரியாதை உண்டு.

குறிப்பாக ஐபி மற்றும் ரா அதிகாரிகளை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் மிஸ்ரா.

நேற்று கூட நாராயணனுடன் மிஸ்ராவையும் உடன் வைத்துக் கொண்டு தான் முக்கிய ஆலோசனையை நடத்தினார் மன்மோகன் சிங்.

இதற்கிடையே நாராயணனுக்குப் பதிலாக வேறு ஆலோசகரை தேர்வு செய்யும் வரை அவரையே பதவியில் நீடிக்குமாறு பிரதமர் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

மிஸ்ராவையே மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக்க வேண்டும் என்று கூட கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஐபி தலைவரும் பதவி இழக்கிறார்?:

அதே போல இன்டலிஜென்ஸ் பீரோ உளவுப் பிரிவின் இயக்குனர் பி.சி. ஹல்தர், உள்துறைச் செயலாளர் மதுக்கர் குப்தா ஆகியோரும் ராஜினாமா செய்யுமாறு பிரதமரால் உத்தரவிடப்படுவார்கள் என்று தெரிகிறது.

http://thatstamil.oneindia.in/news/2008/11...ayanan-too.html

இந்தியாவின் வர்த்தக நகரங்களில் ஒன்றான மும்பாயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

பொறுப்புள்ள அமைச்சர் என்ற அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு பதில் சொல்லும் வகையில் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அமைச்சர் சிவராஜ் பட்டீல் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் என புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, மும்பாய் தாக்குதலின் எதிரொலியாக தனது பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து விலகிய எம்.கே நாராயணன் இந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த இருவரும் தமது பதவி விலகல் கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளித்துள்ளனர்.

அதேவேளை, இந்திய பாதுகாப்பு மற்றும் உல்லாச பயண துறைகளுடன் தொடர்புபட்ட வேறு பல உயரதிகாரிகளும் தமது பதவிகளிலிருந்து விலகவுள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடைக்கிட நல்ல செய்திகளும் வருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

Narayanan continues to be NSA: PMO

Press Trust of India

Sunday, November 30, 2008 7:00 PM (New Delhi)

The Prime Minister's Office on Sunday scotched speculation about National Security Adviser M K Narayanan quitting in the wake of terror strikes in Mumbai.

"These reports about resignation are wrong. Narayanan continues to be the NSA," a PMO official said while reacting to media reports that he had quit.

Earlier, reports suggested that Narayanan on Sunday submitted his resignation to Prime Minister Manmohan Singh following the terror attacks in Mumbai, and that the PM had not decided to accept the resignation.

http://www.ndtv.com/convergence/ndtv/mumba...5&type=News

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா வியாழன் மாறுவதற்கு முதல் சனி மாறிட்டுதே :)

மாறேல்ல ...

Edited by நிரூஜா

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உட்துறை அமைச்சராக சிதம்பரம் சிவராஜ் பட்டேல், நாராயணன் ராஜினாமா

மும்பை சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டேல் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். மும்பை சம்பவத்தில் சுமார் 200 பேர் பலியானதுடன் 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதனையடுத்து மேற்படி இருவரும் பதவி விலக வேண்டுமென இந்தியாவில் எதிர்ப்பலைகள் உருவானதையடுத்தே இவர்கள் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தாங்கள் தார்மீகப் பொறுப்பேற்பதாகதமது இராஜினாமா கடிதத்தில் இவர்கள் தெரிவித்துள்ளனர். பட்டேலின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு உடன் அனுப்பிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது இடத்துக்கு நிதியமைச்சராகப் பதவி வகித்த பி. சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனின் இடத்துக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படாததால் அவர் புதியவர் ஒருவரை நியமிக்கும் வரையில் தொடர்ந்தும் பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தியாவின் பாதுகாப்புத்துறையில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. உட்துறை செயலாளர், உளவுத்துறைத் தலைவர், கடலோரப் பாதுகாப்புத்துறை தலைவர் உட்பட பலர் மாற்றப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜெய்ப்பூர், பெங்களூர், அகமதாபாத் மற்றும் டில்லி ஆகிய நகரங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதல்களை தொடர்ந்து மத்திய உட்துறை அமைச்சர் சிவராஜ் பட்டேல் தேசிய பாதுகாப்பு ஆலேசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு கடல் மார்க்கமாக மும்பைக்கு வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் பல்வேறு இடங்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார்கள். மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல், ஓபராய் ஹோட்டல், நரிமன் இல்லம் ஆகியவற்றுள் நழைந்து அங்கிருந்தவர்களை தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டுக் கொன்றனர்.

மேலும் தாஜ், ஓபராய் மற்றும் நரிமன் இல்லத்திற்குள் இருந்தவர்கள் தீவிரவாதிகள் பணையக் கைதிகளாகவும் பிடித்து வைத்திருந்தனர். இதையடுத்து தேசிய பாதுகாப்பு படையின் கமாண்டோ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்களை மீட்டனர்.

மேலும் அந்த 3 இடங்களிலும் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று தாஜ், ஓபராய் மற்றும் நரிமன் இல்லம் ஆகிய இடங்களை தீவிரவாதிகளின் பிடியிலிருந்து கமாண்டோ வீரர்கள் மீட்டனர். சுமார் 60 மணி நேரம் நடைபெற்ற இந்த கடும் சண்டையில் 22 வெளிநாட்டவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், கமாண்டோ வீரர்கள் உட்பட சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளின் தாக்குதல்களில் 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்த வந்தவர்களில் 9 பேர் கொல்லப்பட்டு ஒருவர் பிடிபட்டுள்ளார்.அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

ஏற்கெனவே ஜெய்ப்பூர், அகமதாபாத், டில்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களின் போதும் சிவராஜ் பட்டேல் மீது இத்தகைய குற்றச்சாட்டை முக்கிய எதிர்க்கட்சியான பி.ஜே.பி மட்டுமின்றி காங்கிரசின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் கூறின.

சிவராஜ் பட்டேல் பதவி விலக வேண்டும் என்றும் அவர் உட்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் மும்பை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சிவராஜ் பாட்டேலுக்கு எதிர்ப்பு அதிகரித்தது.

டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சிவராஜ் பட்டேல் உட்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தியாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிவராஜ் பட்டேல் தாம் பதவி விலக தயாராக இருப்பதாக கூறியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறி சிவராஜ் பட்டேல் பாதுகாப்பு தேசிய ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்.

இவர்கள் தமது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

சிவராஜ் பாட்டேலின் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்துள்ள பிஜேபியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், இது மட்டும் போதாது என்றும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முற்றிலும் பதவி விலக வேண்டும் என்றும் கூறியுள்ளளார்.

இதனிடையே சிவராஜ் பட்டேலைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கும் பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது.

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு காங்கிரஸ் தலைமை அவரை கேட்டுக் கொண்டிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

-வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

M.K. Narayanan resigns over Mumbai terror

November 30th, 2008 - 5:32 pm ICT by IANS -

New Delhi, Nov 30 (IANS) National Security Adviser (NSA) M.K. Narayanan Sunday submitted his resignation to Prime Minister Manmohan Singh following the terror attacks in Mumbai, sources in the Prime Minister’s Office (PMO) said.The prime minister is yet to accept Narayanan’s resignation, the sources told IANS.

http://www.thaindian.com/newsportal/uncate..._100125449.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டிசம்பர் 6இல் குரு மாறுவதாக சொன்னார்கள் அவர் மாறும் போது இவரையும் மாற்றி விட்டுப்போனால் குருவுக்கு கோடி புண்ணியம். :):D:lol::)

  • கருத்துக்கள உறவுகள்

குரு மாறினாலும் நாராயணன் மாற மாட்டார். பிச்சை பாத்திரம் ஏந்தும் மலையாளிகள் தான் மீண்டும் மீண்டும். என்றாலும் இந்திரா காங்கிரஸ் தலையில் துண்டோடு திரிவதாக கதை. :):)

  • கருத்துக்கள உறவுகள்

:) இந்திய வல்லரசுக்கனவு பலிப்பதற்கும் புலிகளோடு தமிழ் மக்களும் சேர்ந்து அழிக்கப்படுவதற்கும் என்ன சம்பந்தம் ? அது நடக்கவேண்டும் என்று ஏன் ஆசைப்படுகிறீர்கள்??

சிலவேளைகளில் என்ன எழுதுகிறீர்கள் என்றே புரிவதில்லை ! புலம்பெயர்ந்த மந்தைககளுக்கு உங்கள் சிந்தனையின் ஆழம் புரிவதற்கு சந்தர்ப்பமில்லைத்தான் !

நாராயனா நாராயணா...... எல்லாமே உன் லீலைதானா?

கள்வனடா நீ.....

நாராயனா நாராயணா......

  • கருத்துக்கள உறவுகள்

"இது இன்னொரு மேட்டர். நம்ப நாட்டுக்கு பாதுகாப்பு ஆலோசகரா இருக்காரே, எம்.கே. நாராயணன். அதான்பா இலங்கைத் தமிழர் விஷயத்துல சிங்கள அரசுக்கு ஆதரவா செயல்பட எல்லா உதவியும் கொடுக்க, ஆலோசனை செய்துக்கிட்டு வர்றதா சொல்றாங்களே, அதே நாராயணன் தான். நானும் நடுத்தெருவுக்கு போயிடறேன்னு அவரும் பிரதமர்கிட்ட ராஜினாமா லெட்டரை கொடுத்திருக்காராம். பிரதமர்தான் ஆத்தாடி நீ எம்புட்டு திறமைசாலி. உன் அறிவு யாருக்கு வரும். உன்னைய இழக்க விருப்பமில்லையே. கொஞ்சம் பொறு அப்படீன்னு சொல்லியிருக்காராம். அதாவது இன்னும் நிறையத் தாக்குதல் நடக்கட்டும். மக்கள், காங்கிரசுக்கு சுத்தமா சமாதி கட்டிடுவாங்க. அப்புறமா உன் ராஜினாமா லெட்டரை வாங்கிக்கிறேங்கிறாராம் பிரதமர். நாடு நல்லா உருப்படும்பா..." என்றார்.

- குமுதம் முச்சந்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.