Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடும் வேதனையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா முனிவர் இப்ப கதையில இறங்கிவிட்டார் என்று பார்க்கிறியளே நம்மட பொடியங்கள் செய்யுற வேலையை பார்க்க முடியல்ல அதுதான் இந்த கதை[வெளிநாட்டில ]

வணக்கம் சாமித்தம்பி அண்ணே என்ன மகன் வெளிநாடு போக போறான் போல ஓம் சிவன் .நல்லாத்தான் படித்தான் ஆனால் இங்கு வேலை எடுக்கிற என்றால் சும்மாவா என்ன!! அதுவும் நம்மட தமிழ் சனங்களுக்கு வேலை கொடுக்கிறதென்றால் ஒரு வேண்டா வெறுப்பாத்தானே பார்க்கிறாங்கள் அதுதான் சும்மா இங்கு இருந்து என்ன செய்யிறது ஆளை வெளிநாட்டுக்கு அனுப்புவம் என்று பார்க்கிறன் இங்க அவனுக்கு பயந்து இவனுக்கு பயந்து இருக்கிறத்தை விட அங்க போனால் கொஞ்சம் நம்ம நிம்மதியாக இருக்கலாம் தானே...அது சரி அவ்வளவு காசுக்கு எங்க போவியள் . என்ன செய்யுற சிவன் ஒரு வாய் சோறு தாற நிலத்தைதான் விற்க வேண்டும் மனிசிர கழுத்தில காதில கிடக்கிறதையும் .இனி அந்த பிள்ளைகளிர பெயருல கிடக்கிற கொஞ்ச காசையும் தான் எடுக்கவேண்டும் .ஏன் அண்ணே இந்த நிலத்தை விற்கவேண்டும் விற்க வேண்டாம் நான் ஒரு இடத்தில வட்டிக்கு காசு வேண்டி தாரன் அப்படியா நல்ல விசயம் தான் ஆனால் நல்ல இடமாக இருக்கவேண்டும் என்ன இல்லாட்டி மாதாமாதம் வட்டிக்காசு கொடுக்காவிட்டால் குடிஎழுப்பி போடுவார்கள் என்ன ஓம் அண்ணே எனக்கு தெரியும்தானே ..சாமியரும் எனக்கு இந்த நிலத்தை விற்க மனசு இல்ல பாரு என்ன செய்யுறது கஸ்ரம் தான் என்று சொல்லி இருவரும் கதைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர்

ஒரு வழியாக பணத்தை திரட்டி மகனை வெளிநாடு அனுப்ப முடிவு செய்து விட்டார்.வீட்டில் தம்பி உன்னை நம்பித்தான் நான் இவ்வளவு கடனையும் பட்டிருக்கேன் அங்க போய் நல்ல படியா உழைத்து அனுப்ப வேணும் அதற்க்கு சரி போட அம்மாவும் தம்பி அங்க போனவுடன் நல்லா சாப்பிடவேணும் ,தலைக்கு எண்ணெய் வைக்கவேணும். உன்னை நம்பித்தான் ரெண்டு தங்கச்சிகளும் இருக்கிறாளுகள் என்று அம்மா சொல்ல தலையை ஆட்டிக்கொண்டு.சரி நண்பர்களுக்கு விருந்து [பார்ட்டி] வைக்கவேணும் காசு ஒரு ஜந்தாயிரம் கொடுங்கோ என்றதும் சாமியருக்கு கொஞ்சம் கடுப்புத்தான் ஊர்சுற்றும் உலக்கைகளுக்கு விருந்து வேறு என்று புறுபுறுத்துக்கொண்டு ஒரு மூவாயிரம் கொடுத்தார் தீபனும் கிடைத்த காசை பெற்று நண்பர்களுக்கு விருந்து வைத்து விட்டுக்கு வருகிறான்.வந்து உறங்கிவிடுகிறான் அடுத்தநாள் காலை அம்மா எல்லா உடுப்புக்களையும் மடித்து விட்டு பனடோல் ,சித்தாலபே ரெண்டும் இந்தபையில இருக்கு தம்பி சரி அம்மா பின்நேரம்தானே வெளிக்கிடுவோம் அப்போ எல்லாம் செய்யலாம் தானே என்றதும் அம்மாவோ பின்நேரம் நேரம் இல்லை சொந்த காராக்கள் எல்லோருட்டையும் சொல்லவேணும் எல்லோரிடமும் சொல்லிவிட்டு மாலை ஆறு மணிக்கு புறப்பட ஆரம்பித்தனர் அம்மாவின் முகத்தில் அழுகையும் தங்கைகளின் முகத்தில் ஏக்கமும் தெரிய எல்லோருக்கும் கையசைத்து புறப்பட்டான் தன் தந்தையுடன்

கொழும்பு வந்த பின்புஒரு விடுதியில் தங்கி அடுத்த நாள் காலையில்தான் விமானம் புறப்படுமாம் என்று இவனை அனுப்பும் தரகர் சொன்னதும் அப்பாவும் மகனுக்கு போற நாடு கொஞ்சம் அப்படி இப்படித்தான் நாமதான் கொஞ்சம் சுதாகரித்து நடந்து கொள்ள வேண்டும் கூறுகிறார் அவனும் ஒன்றும் பேசாமல் கொஞ்சநேரம் தூங்கி விட்டு விமான நிலையத்திற்க்கு சென்றனர் அங்கு சென்று தனது பொதிகளை காட்டிவிட சோதனை இட்டவன் தேங்காய் எண்ணெய் போத்தலை கொண்டு போக முடியாது என்று சொல்லி பறித்து வைத்து விடுகிறான் தீபனும் மற்ற சாமான்களை எடுத்து தன் அப்பாவுக்கு கையசைத்துக்கொண்டு மறைந்து செல்கிறான்

விமானம் புறப்பட்டு அந்த நாட்டை அடைந்ததும் இவனை அழைக்க யாரும் வரவில்லை இவனும் வெளியாகி ஒரு கதிரையில் இருக்கும் போது இவனது பெயரை ஒரு குரல் உச்சரிக்க இவனும் கையசைத்து சைகை காட்டி அந்த நபரோ தீபனின் கடவுச்சீட்டை வாங்கிக்கொண்டு ஆளையும் ஏற்றிக்கொண்டு அவர்களின் நிறுவன தங்குமிடத்திற்க்கு செல்கின்றனர் அங்கு சென்றதும் அந்ததங்குமிட பொறுப்பாளரிடம் அவன் எனக்கு சிறி லங்கா ஆட்களின்ர அறைதான்[ரூம்] வேண்டும் என்று கேட்க அவரும் அவனை அழைத்துகொண்டு ஒரு அறையை காட்டி விட்டு இதில் எல்லாம் உங்கட நாட்டுக்காரர்தான் என்று சொன்னதும் மனதில் ஒரு தெம்பு ஏற்பட்டது பின்பு ஒரு கட்டிலை காட்டி இதுதான் உனக்கு என்று சொன்னவுடன் தனது பயண பொதிகளை கட்டில் மேல் வைத்துவிட்டு உடனே கடைக்கு சென்று தான் வைத்திருந்த டொலரை அந்த நாட்டு நாணயமாக மாற்றி வீதியோரத்தில் நிற்க்கும் தொலை பேசியில் அம்மா அப்பாவுடன் பேசிக்கொள்கிறான் தான் நல்ல படியா வந்து சேர்ந்தாகவும் நம்மட நாட்டுகாரங்களின் அறையில் தான் தங்கியிருப்பதையும் கூறினான் சாப்பாடு நிறுவன சாப்பாடுதான் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறி விட்டு வருகிறான் அறைக்கு வந்து ஒரு சின்ன தூக்கம் போக மாலை எட்டு மணியாக அந்த அறையில் தங்கியிருக்கும் அந்த நபர்கள் வந்ததும் யார்ரா இது புதுசா இருக்குது ஆளை எழுப்பு என்றதும் முளித்துகொண்டு தீபன் எள என்ன தம்பி புதுசா வந்ததோ இவனும் ஓம் அண்ணன் என்று சொல்ல நாங்கள் மூன்று பேர்தான் இங்க இவர் சுகுமார் திருகோணமலை, இவர் நந்தன் மட்டக்களப்பு,மற்றது நான் சேகர் நானும் மட்டக்களப்புத்தான் நீங்கள் எந்த ஊர் தம்பி நான் வவுனியா அண்ணன் அப்படியா எதுவரைக்கும் படித்திருக்காய் நான் ஏ/எல் வரைக்கும் படித்திருக்கன் என்று சொல்ல சுகுமாரும் நம்மட பெரியவருட்ட சொல்லி தம்பிக்கு நல்ல வேலை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூட்டி கொண்டு தீபனுக்கு கஸ்ரம் இல்லாதவேலை வாங்கி கொடுத்தனர்

தீபனும் வேலைக்கு போக ஆரம்பித்தான் நன்றாக சம்பாதித்தான் அண்ணாக இருந்தவர்கள் நல்ல நண்பர்களாக மாறினார்கள் .விடுமுறை நாட்களில் வெளி இடங்களுக்கு செல்வது நிழல் படங்கள் எடுத்துக்கொள்வதுமாக இருந்தனர் தீபனும் எடுத்த படங்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் வீட்டாருக்கும் சந்தோசம் ஒரு வழியாக ஒரு தங்கைக்கு கல்யாணம் நடந்து விட்டது கடன் சுமையும் இறங்கிவிட்டது என்று பெருமூச்சு விட்டு கொண்டான் ஒரு நாள் வேலைக்கு போய் வரும் போது தீபனை விட்டு அவர்களது நிறுவன வாகனம் சென்றுவிடுகிறது அவனோ பேருந்தில் ஏறி பயணம் செய்யும் போது நண்பனின் அழைப்பு வரும் போது உள்ளே தமிழில் பேசுகிறான் பேசிய பின்பு [ஒயா லங்காவ] நீங்கள் சிறிலங்காவா என ஒரு பெண்ணின் குரல் கேட்க இவனும் ஓம் என்று சொல்ல தானும் சிறி லங்காதான் தன்பெயர் நிலானி என்றும் சிங்களம் என்றும் கூறுகிறாள் பேருந்தினுள் இருவருமாக பேசி கொண்டிருக்கும் போது அவள் இறங்கும் இடம் வர இதுதான் என்னுடைய தொலைபேசி இலக்கம் என்று கொடுத்துவிடுகிறாள் இவனும் இலக்கத்தை சேமித்துக்கொண்டு அதற்கு ஆணொருவரின் பெயரை வைத்துவிடுகிறான் பின்பு நடந்ததை தனது நண்பர்களிடம் கூறுகிறான் அதற்க்கு அவர்களோ தீபன் இங்கு இப்படி விசயங்கள் அதிகம் கொஞ்சம் கவனா இரு முதலில் பழகுவாள்கள் பின்பு காசை கறந்து போட்டு விடுவாள்கள் என்று எச்சரித்தனர்............ஆனால் தீபனுக்கோ பழக பழக இனித்துவிட்டது ஒவ்வொரு நாழும் தொலைபேசியில் உரையாடுவது இதனால் தொலைபேசி அட்டைகளுக்கு காசு கரைந்துகொண்டு சென்றது..இதனால் நண்பர்களுக்குள் பிரச்சினை ஏற்பட ஆரம்பித்தது அவர்களுடன் பேசுவதை குறைத்துக்கொண்டான். வேலைக்கு போய்வந்து குளிக்க சென்ற போது அவர்கள் வீட்டில் இருந்து அழைப்பு வரவே சுகுமார் அதனை எடுக்க அவனது அம்மா யாரு மகனா என்று கேட்க இல்லை அம்மா நான் அவர்ர நண்பன் என்று சொன்னதும் அப்படியா மகன் தம்பி அவன்கிட்ட கொஞ்சம் சொல்லுங்கோவன் வீட்டுக்கு பேச சொல்லி சரி நான் சொல்கிறேன் அவன்கிட்ட என்று அழைப்பை துண்டித்துகொண்டான் தீபன் வந்ததும் என்ன தீபன் வீட்டுக்காரங்களோட ஏன் கதைக்கிறல்ல நீ அதற்க்கு நந்தன் அவனுக்கு அதுக்கெல்லாம் எங்க நேரம் இங்க கதைக்கிறதென்றால் இஸ்ரம் என்ன தீபன் என்று சொல்ல எதுவும் பேசாமல் அன்று இரவு வெளியில் செல்கிறான் கேட்டதற்க்கு பதில் சொல்லாமல் உடனே நண்பர்கள் அனைவரும் பட்டுதிருந்தினால்தான் இதுக்கெல்லாம் மருந்து என்று சொல்லிவிட்டு தூங்கிவிட்டனர்

மறு நாள் காலை நாட்டிலிருந்து சேகருக்கு அழைப்பு வருகிறது அவனின் தங்கை ஒருத்தி அண்ணன் காசு அனுப்பி நான்கு மாதங்கள் ஆகிவிட்டன அவனை நம்பி அப்பா வேற வயலை எடுத்துவிட்டார் செய்வதற்க்கு பணம் அனுப்புறன் என்று சொல்லியிருந்தான் ஆனால் அனுப்பவில்லை கேட்டால் கம்பனி [நிறுவனம்] சம்பளம் கொடுக்கவில்லை என்று சொல்கிறான் என்றதும் உன்மையை சொல்ல முடியாமல் அப்படியா நான் அவனிடம் கேட்டு சொல்கிறேன் என்று அவளிடம் பதில் சொல்கிறான் சேகர் தீபன் வந்ததும் நண்பர்கள் மூவரும் தீபனை விசாரிக்க தீபனும் உன்மையை சொல்ல மூன்று பேரும் ஆடி போகின்றனர் அதாவது அவள் மூன்று மாத கற்பிணியாம் என்று சொல்கிறாள் எனக்கும் பயமாக இருக்கிறது என்னிடம் ஒவ்வொரு நாழும் காசு கேட்கிறாள் வைத்தியருட்ட போகணுமாம் கருவை கலைக்க உடனே நாங்கள் உனக்கு எத்தனை தடவை சொன்னோம் கேட்டாயா என்று சொல்ல தீபனோ விம்மி விம்மி அழுதான் இப்ப அழுது என்ன பிரயோசனம் என்று கூற சரி சரி அழாத நாளைக்கு போய் அந்த பெண்ணை பார்ப்போம் என்று சொல்லி சமாதானபடுத்தி விட்டனர் காலையில் அங்கே புறப்பட்டு சென்ரதும் அவள் இல்லை இவர்கள் வருவதைக் கண்டு அவளோ ஒளித்துவிட்டாள். அவன் அழைப்பு கொடுத்தற்க்கு தான் வேலையில் இருப்பதாகவும் இப்போது வரமுடியாது எனவும் பதில் கொடுத்தாள் இவர்களோ திரும்பி விட்டனர் பின்பு தீபனுக்கு தொலைபேசியில் தான் இன்று வைத்தியசாலைக்கு சென்றதாகவும் அவர்கள் இதை அரசாங்க வைத்தியசாலையில் செய்யமுடியாது என்று கூறுகிறார்கள் தனியார் வைத்தியசாலைக்கு செல்ல [ இலங்கை காசு ஒரு லட்சத்துடன் வா] நீமட்டும் தனியா வா என்று கூற தீபனும் தன் சம்பளத்தையும் எடுத்து தொலைபேசியையும் விற்று அங்கு செல்கிறான் தனியாக இது நண்பர்களுக்கு தெரியாது அவளோஅங்கு ஒரு நாடகமாடி அவனது பணத்தை பறித்து விட்டு இப்ப சரி ஊசி போட்டிருக்கார் இதோ மருந்தும் கொடுத்திருக்கார் அவனிடம் காட்டி தன்ர பாட்டில் அவள் செல்கிறாள் தீபனோ செய்வதறியாது முளித்துக்கொண்டு திரும்புகிறான் .அவன் வந்ததும் சேகரோ உன்ட அம்மாவுக்கு உடம்பு சரி இல்லையாம் உடனே புறப்பட்டு வரவேண்டும் என்று தொலைநகல் வந்திருக்கிறது உடனே செல்ல தயாராயிரு என்றதும் தீபனோ நடந்தவற்றை கூறுகிறான் தற்போது என்னிடம் பணம் இல்லை என்றதும் உனது சேவைக்காசு உண்டு மற்றதுநாங்களும் உனக்கு தருகிறோம் எடுத்து சென்று உன் அம்மாவை பாரு முதலில் இந்த விசயங்கள் அங்கு தெரிந்தால் உங்கட குடும்பத்தின்ர மானம் மரியாதை என்னத்திற்காகிறது என்று சொல்லி அனுப்பி வைத்தனர் அப்போது சேகரோ தீபன் காசு உழைக்கிறது என்றால் சும்மா அல்ல ஒன்றை இழந்துதான் இன்னொன்றை பெற வேண்டும் இங்க வந்து தூக்கத்தை இழந்து ,குடும்பத்தின் நல்லது கெட்டதை இழந்துதான் நாங்கள் இங்கு இருக்கிறோம் வெறும்பத்து பதினைந்து நிமிட அற்ப ஆசைக்கு ஆசைப்பட்டால் இப்படித்தான் வாழ்க்கையை தொலைத்துவிட்டு அலையவேண்டியதுதான் என்று சொல்லி அங்கே போய் அம்மா அப்பாவுக்கு ஒரு நல்ல பிள்ளையாய் இரும் என்று சொல்லி அனுப்பிவைத்தனர் தீபனை

தீபனோ வீடு வந்ததும் மரண படுக்கையில் தாயை பார்த்து தன்சுமைகள் எல்லாவற்றையும் கண்ணீராக இறக்கி விடுகின்றான் இவனை கண்டதும் தாய்க்கு ஒரு தெம்பு ஏற்பட்டு குண்மடகிறாள் மூன்று வாரங்கள் கழிந்த பின் தன் தந்தையுடன் மண்வெட்டியுடன் வயலுக்கு செல்கிறான் தீபன் தன் குடும்பத்திற்க்கு உன்மையாக உழைக்கவேண்டும் என்பதற்க்காக

சிறு நேரத்தில் நாம் செய்யும் தவறு நம் வாழ்க்கையை கேள்வி குறியாக்கின்றது

இது உன்மை கதை பெயர்கள் யாவும் கற்பனை

[சிக்கி சீர்ழியாதீர்கள் நண்பர்களே]

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முனி...........கதை ரொம்ப பாவமாக இருக்கு...........இள வயசு போல அனுபவ பாடத்தை போல சிறந்த ஆசான் யாருமில்லை. இந்த காலத்தில பிரச்சினைகளை விலை கொடுத்து வாங்குபவர் தான் அதிகம். எதையும் அளவோடு வைத்து கொள்வது தான் நன்று.நல்ல அனுபவ கதை.அறிந்ததை பகிர்ந்தமைக்கு நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ இந்தளவோடையாவது போச்சுதே.வியாதி ஒன்றும் இல்லாமல்.முனி அனுபவப்பகிர்வுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி முனிவர்! பாலைவனத்தில இதைமாதிரி நிறையக் கதைகள் மலிந்துதான் கிடக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுது என்ற மாதிரி ,

தீபன் , தன் நண்பர்கள் மூலம் திருந்தி குடும்பத்தை கவனிக்க புறப்பட்டமை ஆறுதலை தருகின்றது .

ஒரு படிப்பினையை கதையாக தந்த முனிவருக்கு , நன்றி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முனி...........கதை ரொம்ப பாவமாக இருக்கு...........இள வயசு போல அனுபவ பாடத்தை போல சிறந்த ஆசான் யாருமில்லை. இந்த காலத்தில பிரச்சினைகளை விலை கொடுத்து வாங்குபவர் தான் அதிகம். எதையும் அளவோடு வைத்து கொள்வது தான் நன்று.நல்ல அனுபவ கதை.அறிந்ததை பகிர்ந்தமைக்கு நன்றி..

நன்றி நிலாமதியக்கா

இன்னும் திருந்தாமல் இப்படியேதான் திரியுறாங்கள் அதுதான் வேதனை :lol:

ஏதோ இந்தளவோடையாவது போச்சுதே.வியாதி ஒன்றும் இல்லாமல்.முனி அனுபவப்பகிர்வுக்கு நன்றி.

நன்றி சகிவன்

வியாதி வந்தால் கூட சொல்லவா போறாங்கள் :D<_< [வெள்ளம் வரும் அணை கட்ட வேண்டும்]

அது அவர்களுக்கு விளங்கவேண்டும் அதுக்காகவே இந்த கதையை எழுதினேன்

இணைப்புக்கு நன்றி முனிவர்! பாலைவனத்தில இதைமாதிரி நிறையக் கதைகள் மலிந்துதான் கிடக்கு....

நன்றி சுவி

நீங்கள் சொல்வது உன்மையே :lol:

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுது என்ற மாதிரி ,

தீபன் , தன் நண்பர்கள் மூலம் திருந்தி குடும்பத்தை கவனிக்க புறப்பட்டமை ஆறுதலை தருகின்றது .

ஒரு படிப்பினையை கதையாக தந்த முனிவருக்கு , நன்றி .

நன்றி தமிழ் சிறி முனிவர்ர கதையையும் வாசித்தற்க்கு :lol:

இதை விட மோசமாகவும் நடந்தது அதை நான் விபரிக்க விரும்பவில்லை :D

Edited by muneevar

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதை வாழ்த்துக்கள் முனிவர்.எல்லா வேதனையும் துறக்க வேண்டும் என்றால் கடசியா முனிவரா தான் மாற வேண்டும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தன் :D

நல்லதொரு கதை வாழ்த்துக்கள் முனிவர்.எல்லா வேதனையும் துறக்க வேண்டும் என்றால் கடசியா முனிவரா தான் மாற வேண்டும். :D

என்னை போலவா :D:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.