Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசியல் தலைவர்களைக் குறிவைக்கும் சிறிலங்காத் தூதரகம்

Featured Replies

குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த செய்தி

இலங்கைப் போரில் அப்பாவி ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்கவேண்டும்' என்று தமிழகத்திலிருந்து முதலில் குரல் கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான். இந்நிலையில், 'என்னை பாலியல் மோசடி செய்து எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்' என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் மீது பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியிருக்கிறார் ஈழத்துத் தமிழ்ப்பெண் ஒருவர். அவர் விரல் நீட்டிக் குற்றம் சாட்டியிருப்பது சி.மகேந்திரனை நோக்கி. தகவல் கிடைத்ததும் விசாரணையில் இறங்கினோம்.

தர்மகுமாரி... இலங்கையில் பிறந்த ஈழத்துத் தமிழ்ப்பெண். திருமணத்திற்குப் பிறகு புலம்பெயர்ந்து தென் ஆப்பிரிக்காவில் செட்டில் ஆனவர். இவர்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைத் தலைவர் சி.மகேந்திரன் மீது இப்படியொரு பகிரங்கப் பாலியல் குற்றச்சாட்டைக் கிளப்பியிருக்கிறார். என்னதான் நடந்தது என்நு நாம் தர்மகுமாரியைச் சந்தித்துப் பேசினோம்.

"நானும் எனது கணவரும் தென் ஆப்பிரிக்காவில் ஆரம்பத்தில் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தோம். எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். இடையில் எனக்கும் எனது கணவருக்கும் கருத்துமோதல் வந்ததால் விவாகரத்துப் பெற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தோம். அங்கு நடந்த முதல்கட்ட கவுன்சிலிங்கில் சிறிதுகாலம் இருவரும் பிரிந்திருந்தால் கருத்து வேற்றுமை நீங்க வாய்ப்புள்ளது என்று ஆலோசனை சொன்னார்கள்.

அதன்படி இருவரும் பிரிந்துவாழ முடிவு செய்தோம். என் குழந்தைகள் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள விரும்பியதால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியா வர முடிவு செய்தேன். அப்போது எங்களுக்குத் தெரிந்த சோமசுந்தரம் என்பவர் மூலம் தஞ்சையில் உள்ள அம்பிகாபதி என்பவர் அறிமுகமானார். அவரது உதவியுடன் பத்து வருடங்களுக்கு முன்னால் இந்தியா வந்து சென்னை பெசன்ட் நகரில் குடியேறினேன். அம்பிகாபதி மூலம்தான் எனக்கு மகேந்திரனின் நட்பு கிடைத்தது. எங்களது நட்பு சிறித காலத்திற்குப் பிறகு காதலாக மலர்ந்தது. அப்போது அவர், 'உன்னைப் போல் நானும் என் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறேன். நான் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களில் ஊறியவன். பெண்களுக்கு எதிரான் பிரச்சனைகளுக்காகப் போராடுபவன். அதனால் உன்னைக் கைவிடமாட்டேன்' என்று அவருடைய அம்மா மீது சத்தியம் செய்து மோதிரம் மாற்றி, நெற்றியில் திலகமிட்டு என்னை மணந்து கொண்டார்.

அவர் அடிக்கடி என் வீட்டிற்கு வந்து சென்றது குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை. மகேந்திரனும் குழந்தைகளை அனுப்பிவிடுமாறு சொன்னதால், தென்ஆப்பிரிக்காவில் உள்ள அவர்களது அப்பாவிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டேன். இந்நிலையில் எனக்கு விவாகரத்தும் கிடைத்துவிட்டது. அதனால் என் முதல் கணவரிடம் இருந்து கிடைத்து வந்த பண உதவி நின்று போய்விட்டது.

அதன்பிறகு மகேந்திரனும் என் வீட்டிற்கு வருவதை அடியோடு நிறுத்திவிட்டார். பதினொரு மாதம் காத்திருந்து பார்த்துவிட்டு கடந்த ஜனவரி மாதம் அவரது கட்சி அலுவலகத்திற்கு அவரைத் தேடிச் சென்றேன். 'இங்கு எதற்கு வந்தாய்?' என்று மகேந்திரனும் அங்கிருந்த திருமலை என்பவரும் என்னை அடித்து உதைத்து விரட்டினார்கள். காயமடைந்த நான் போலிசுக்குச் செல்வதாகச் சொன்னேன். பயந்துபோன அவர், என்னை வைத்துக் காப்பாற்றுவதாகவும் அதற்கு அவரது மனைவியின் அனுமதி வாங்குவதாகக் கூறி அவரது மனைவி பங்கஜத்திடம் அழைத்துச் சென்றார்.

தி.நகரில் ஆசிரியர் பணி செய்துகொண்டிருந்த அவரது மனைவியோ, என்னை ஆபாசமாகத் திட்டித் தீர்த்துவிட்டார். இதனால் மனமுடைந்த நான் கோயம்புத்தூர் சென்றுவிட்டேன். ஆனாலும் மகேந்திரன் என்னை விடுவதாக இல்லை. எனக்குத்தொடர்ந்து போன் செய்து, 'இந்தியாவை விட்டு ஓடிவிடு! இல்லையென்றால் கொலை செய்துவிடுவுன்' என்று அவரும் அவரது சகாக்களான திருமலை, லெனின் ஆகியோரும் மிரட்டினர். இதனால் பயந்துபோன நான் கோயம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவர்களோ அதை வாங்க மறுத்துவிட்டனர். கம்யூ. கட்சித் தலைவர்களான தா.பாண்டியன், டி.ராஜா ஆகியோரிடம் இது குறித்து நான் முறையிட்டபோது, 'மகேந்திரனின் சொந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது' என்று சொல்லிவிட்டனர். பரதனுக்குப் புகார் அனுப்பியும் எந்தப் பதிலுமில்லை.

மகேந்திரன் என்னிடம் பணத்திற்காகத்தான் பழகியிருக்கிறார். அவருடைய மகனின்் படிப்புச் செலவிற்காகவும், தி.நகரில் வீடு வாங்கவும் மூன்று லட்சத்திற்்கு மேல் பணம் கொடுத்திருக்கிறேன். நான் தென். ஆப்பிரிக்கா சென்றிருந்தபோது என் வீட்டில் இருந்த டீ.வி, வாஷிங்மிஷின் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் அவர் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டார். எனக்குப் பணம் கூட பொருட்டல்ல. எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்" என்று குமுறித் தீர்த்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் சி. மகேந்திரன் என்ன பதில் சொல்கிறார்? அவரிடமே கேட்டோம். "பி.பி.சி. தமிழோசையில் உலக ஊடக முக்கியப் பிரிவில் பணியாற்றும் ஆனந்தி என்பவர் மூலம்தான் எனக்கு தர்மகுமாரி அறிமுகமானார். நான் ஈழத்தமிழர்களுக்காக பல உதவிகளைச் செய்துவருகிறேன். அந்்த வகையில்தான் இவருக்கும் உதவி செய்தேன். எனது கல்லூரி வாழ்க்கையிலிருந்து அரசியல் வாழ்க்கை வரை நான் சிறுதவறுகூட செய்தது கிடையாது. அப்படித் தவறு செய்திருந்தால் பகிரங்கமாக ஒப்புக்கொள்வேன். எனக்கு தமிழகத்தில் எத்தனையோ பிரபலங்களைத் தெரியும். வெறும் மூன்று லட்ச ரூபாய்க்காகவா இந்தப் பெண்ணை நான் ஏமாற்றப் போகிறேன்?

நான் என் மனைவியுடன் சேர்ந்துதான் வாழ்ந்து வருகிறேன். அந்தப் பெண்ணோ நாங்கள் பிரிந்து வாழ்வதாகச் சொல்லியிருக்கிறார். அதிலிருந்தே தெரியவில்லையா அந்தப் பெண் சொல்வது அப்பட்டமான பொய்யென்று. இதில் ஏதோ சதி இருக்கிறது. சமீபத்தில் இலங்கை ராணுவத்தளபதி பொன்சேகா, 'தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களை 'அரசியல் கோமாளிகள்' என்று நையாண்டி செய்திருந்தார். இந்நிலையில் 'தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பெண்கள் விஷயத்தில் மோசமானவர்கள் என்று சித்தரிப்பதற்காகக்கூட இலங்கைத் தூதரகம் சதிவேலையில் இறங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றேன். ஏனென்றால், இந்தப் பெண் இலங்கைத் தூதரகத்தில் பணிபுரிந்தவர். அவரது மகள்கள் இலங்கைத் தூதரக விழாக்களில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்தப் பெண்ணுக்கு இப்போது யார் பண உதவி செய்வது? எந்த மாதிரி விசாவில் இந்தப் பெண் இந்தியா வந்திருக்கிறார் என்பதையெல்லாம் ஆராய வேண்டும்.

ஈழப்பிரச்சனையை முதன் முதலில் கிளப்பியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான். அதனால் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று அவதூறு பரப்புவதற்காக இப்படியான செய்திகளைப் பரப்புகிறார்கள். என்னைத் தொடர்ந்து பல அரசியல் தலைவர்களுக்கு இது போன்ற பிரச்னை வந்தாலும் வியப்பதற்கில்லை" என்றார் அவர்.

நானா ஹம்ஸாவின் ஆட்டங்கள் இந்திய மத்திய அரசிற்கு தெரியாமலோ அல்லது ஆதரவில்லாமலோ நடக்க வாய்ப்பில்லை!!

மொத்தத்தில் ராஜபக்ஸ/பொன்சேகாக்கள் கணித்த மாதிரி தமிழக தலைவர்கள் "நல்ல ஜோக்கர்களே"!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொக்குவிலைச் சேரந்த முத்துக்குமாரசாமியின் (வயது 86, தற்போதைய வதிவிடம் ஹவுன்சிலோஈ லண்டன்) மகளான மேற்படி பெணமணி அப்படியொன்றும் செல்வந்தர் அல்ல என்பதும், சில வருடங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற இந்தப் பெண்ணின் மகளின் நடன அரகேற்றத்துக்கு, தென்னாபிரிக்காவின் சிறிலங்காத் தூதுவர் கலந்து கொண்டார் என்பதும் லண்டனில் உள்ள அவரது சகோதரி ஜெயக்குமாரி (61 வயது) மூலம் தெரியவந்துள்ளது.

மெனோபோஸ் முடிஞ்ச வயசில் (56 வயது) காதலும் .. காமமும் ... ஹம்சாவுடன் சேர்ந்து டெல்லியும் ஆடும் திருவிளையாடலா இது ..

அடுத்ததா எந்த "ஈழத்து" ஆச்சி கிளம்பப்போறா .. நான் நெடுமாறனோடை ஆலிங்கனம் செயயிறனான் என்று சொல்லியபடி ...

Edited by MI7

நன்றிகள் M17 தகவலுக்கு ...

எம் மத்தியில் மக்கையர்கரசிகளும், மகேஸ்வரிகளும், பத்மினிகளும், இராஜேஸ்வரிகளும், ..... இருக்கும் மட்டும் மகேந்திரன் என்ன இராமர்களும் தப்ப முடியாது!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் தமிழீழ ஆதரவலைகளை குழப்புவதிற்கு புலிகளின் பெயரில் குண்டுகள்தான் வெடிக்கும் என்று நான் எதிர்பார்த்திருந்தேன்.

ஆனால் இப்படியுமா?

அட கடவுளே!

எனது கணிப்பு தவறிவிட்டதே.

3 லட்சம் வேணுமெண்டா அவர் ஜெயவுக்கு ஒரு கும்புடு போட்டிருப்பார் 3 என்ன 30 தே கிடைச்சிருக்கும், இந்தியாவில வோசிங் மெசின் இல்லையெண்டு அங்க பாவிச்ச பள்சுகளையா இவர் வாங்கி இருப்பார்?

இவாவை சரியான முறையில் விசாரிச்சா உண்மை தானா வெளில வரும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐந்து நட்சத்திர ஹொட்டேல் ஒன்றில் பத்திரிகையாளர்களை (பரபரப்பு செய்தி வெளியிடும்) அழைத்து விசயத்தை (பொய்களை) கக்கிவிட்டு தர்மகுமாரி, மொரிசியஸ் சென்று அங்கிருந்து தென் ஆபிரிக்காவிற்கு சென்றுவிட்டதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னமொருக்கா ஒரு தமிழக முதல்வரிட்ட மத்திய அரசின் முக்கிய புள்ளி ஒருவர் தவறாக நடக்க முபட்டாரெண்ட ஒரு செய்தி ஞாபகத்துக்கு வந்தது, அதுதான் எழுதுகிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே இந்தச் செய்தியில் உள்ள தர்மகுமாரி தென்னாபிரிக்காவிலும் இந்தியாவிலும் இலங்iகைத்தூதரக அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக்கொண்டிரப்பவர். இவர் யாழ்ப்பாணத்தில் கொக்குவிலை பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை பெயர் முத்துக்குமாரசுவாமி இவர்களது குடும்பத்தில் 7 பெண்களும் 3 ஆண்களையும் கொண்ட குடும்பம் . இவரது குடும்ப உறவினர்களுடன் தொடர்பு கொண்ட பொழுது இவரது நடவடிக்கைகள் காரணமாக இவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் இவருடன் தொடர்புகளை வைத்திருக்கவில்லைதெரிவித்த

Edited by sathiri

சாத்திரி சாதிரிதான்... மிச்சத்தையும் கண்டுபிடிச்சு வெளியிடுங்கோ..... தர்மகுமாரி இனி எந்தவீட்டு கதவையும் தட்டக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் M17 தகவலுக்கு ...

எம் மத்தியில் மக்கையர்கரசிகளும், மகேஸ்வரிகளும், பத்மினிகளும், இராஜேஸ்வரிகளும், ..... இருக்கும் மட்டும் மகேந்திரன் என்ன இராமர்களும் தப்ப முடியாது!!!!!

ஆனால் மங்கையர்கரசி அவர்கள் இவர்களில் வித்தியாசமானவர்

தயவு செய்து வரலாறு தெரியாமல் குளப்பவேண்டாம்

துரோகம் செய்தவர்கள் வரிசையில் வேண்டுமானால் இவரை இணைக்கலாம்

ஆனால் உங்கள் கருத்து அடிப்படையில் மங்கையர்கரசி அவர்கள்

எம்மால் மதிக்கப்படுபவர்

pg3mx6.jpg

Edited by Nellaiyan

கற்புக்கருங்கலத்தின் பெயர் தர்மகுமாரி. வயது 56. ஊர் கொக்குவில்.

உதோடு சேர்த்து 7 பெண்களையும், 3 ஆண்களையும் பெற்ற தந்தையார் தற்போது கவுன்ஸிலோஈஸ்ற் வயோதிபர் இல்லமொன்றில் இருக்கிறாராம். முன்னால் கணவன் பொறியியலாளராக தென் ஆபிரிக்காவில் வேலை செய்கிறவராம். கணவனிடம் விவாகரத்தில் பெற்ற காசில் இந்தியா சென்ற இடத்தில் தான் ஹம்ஸா வளைத்தவராம்!!

மற்றும்படி இந்து நட்சத்திர ஹொட்டேலில் செய்தியாளர் மாநாடு நடத்துமளவிற்கு வசதி கிடையாதாம். எல்லாம் நானா ஹம்ஸாவின் திருவிளையாடல்தான்!!!

சாத்திரியார்...... முயற்சிக்கு வாழ்த்துக்கள்! ஆனால் இவற்றை இயலுமானவரை தமிழக ஊடகங்களினூடு வெளிக்கொணர முயலவேண்டும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தன்னுடைய மகளின் நடன அரங்கேற்த்திற்கு தென்னாபிக்காவில் இலங்கைத் தூரக அதிகாரியை சிறப்பு விருந்தினராய் அழைத்திருந்தார். ஆனால் அங்கு இலங்கை தூதரக அதிகாரி வரக்கூடாது என தென்னாபிரிக்காவில் தமிழ் ஆர்வலர்கள் ஒரு போராட்டமே நடத்தியிருக்கிறார்கள்.இவர் தமிழ் நாட்டு பத்திரிகைகளிற்கு செவ்வி கொடுத்த உடனேயே அந்த நாட்டிலிலிருந்து வெளியேறிவிட்டார். தென்னாபிரிக்காவிற்கும் போனதாய் தகவல்கள் இல்லை. மொறிசியஸ் தீவுகள் அல்லது றெயுனியனில் பகுதிகளில் ஏதோ ஒரு நாட்டில் தலைமறைவாகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். அனேகமாக இவரை இலங்கைத்தூதரகம் எங்காவது ஒருநாட்டில் வைத்து பராமரிக்கலாம்.மிகுதி விபரங்கள் முயற்சி செய்கிறேன்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

கற்புக்கருங்கலத்தின் பெயர் தர்மகுமாரி. வயது 56. ஊர் கொக்குவில்.

உதோடு சேர்த்து 7 பெண்களையும், 3 ஆண்களையும் பெற்ற தந்தையார் தற்போது கவுன்ஸிலோஈஸ்ற் வயோதிபர் இல்லமொன்றில் இருக்கிறாராம். முன்னால் கணவன் பொறியியலாளராக தென் ஆபிரிக்காவில் வேலை செய்கிறவராம். கணவனிடம் விவாகரத்தில் பெற்ற காசில் இந்தியா சென்ற இடத்தில் தான் ஹம்ஸா வளைத்தவராம்!!

மற்றும்படி இந்து நட்சத்திர ஹொட்டேலில் செய்தியாளர் மாநாடு நடத்துமளவிற்கு வசதி கிடையாதாம். எல்லாம் நானா ஹம்ஸாவின் திருவிளையாடல்தான்!!!

சாத்திரியார்...... முயற்சிக்கு வாழ்த்துக்கள்! ஆனால் இவற்றை இயலுமானவரை தமிழக ஊடகங்களினூடு வெளிக்கொணர முயலவேண்டும்!!!

நெல்லையன் அவரது தந்தையாருடன் தொடர்பு கொள்ள முயற்சித்தேன் ஆனாலும் 7 பெண்கள் 3 ஆண்களென பிள்ளைகள் இருந்தும் வயோதிபர்மடத்தில் இருக்கும் ஒருவருடன் தெடர்பு கொண்டு அவரை மனஅழுத்த்திற்:கு ஆளாக்க விரும்பவில்லை. ஆனார் விபரங்களை சேகரித்து தமிழக ஊடகங்கனின் கவனத்திற்கும் கொண்டுவருவது எமது எல்ருடையதும் பொறுப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தர்மக்கா !!!!!!!!!!!!!!!!! நீங்களுமா ???? அதுவும் இந்த வயதில்???

  • தொடங்கியவர்

இது தமிழகத்தில் ஆரம்பித்துள்ளது. புலம்பெயர் நாடுகளுக்கும் தொற்றுவதற்கு வாய்ப்புள்ளது. வதந்திகளை நாம் நம்பாமல் இருத்தல் வேண்டும்.

தர்மக்கா !!!!!!!!!!!!!!!!! நீங்களுமா ???? அதுவும் இந்த வயதில்???

பணம் பாதாளம்வரை பாயும் :rolleyes::unsure::D

படத்தோடு செய்தி வந்திருப்பதால், காணும் இடத்திலெல்லாம் இனி அவவுக்குப் பூசைதான் நடக்கும் என்று நினைக்கிறேன். எவ்வளவு காலத்திற்குத்தான் சிறிலங்காவின்ர கைக்குள்ள இருக்க முடியும்???

  • தொடங்கியவர்

தர்மகுமாரியா? மர்மகுமாரியா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச்செயலாளர் சி.மகேந்திரன் மீது கூறப்பட்ட திடீர்(!)பாலியல் குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 'இது சிங்கள அரசின் சதி' என்கிற ரீதியில் பல்வேறு விவாதங்களையும் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே சி.மகேந்திரன் நமக்களித்த பேட்டியில், 'என் மீது பாலியல் குற்றம்சாட்டிய தர்மகுமாரி எந்த மாதிரி விசாவில் இந்தியாவிற்கு வந்தார்? அவருக்குப் பண உதவி செய்தது யார்? என்பதையெல்லாம் ஆராயவேண்டும்' என்று கூறியிருந்தார்.

அவருடைய கேள்விகளுக்கான விடையை தர்மகுமாரியிடமே கேட்க, அவரது செல்போனுக்குத் தொடர்பு கொண்டபோது அது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. அவர் எங்கிருக்கிறார் என்று விசாரித்தபோது வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டார் என்ற தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மகேந்திரனின் கேள்விக்கான விடையைத் தேடும் முயற்சியில் நாம் இறங்கியபோது கிடைத்த, மர்மமும் பரபரப்புமான தகவல்கள் இதோ! தர்மகுமாரி முதன்முதலில் தன் குழந்தைகளுடன் இந்தியா வந்தது யாருடைய தயவில், எந்த மாதிரியான விசாவில் வந்தார் என்ற விவரம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இரண்டாவது முறையாக, அதாவது தனது குழந்தைகளை தென் ஆப்ரிக்காவில் விட்டுவிட்டு மீண்டும் இந்தியா வந்தபோது, 'சைவ சித்தாந்தம்' படிப்பதற்காக வருவதாக விசா பெற்றுள்ளார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தது, கோவை பேரூரில் உள்ள ஒரு மடத்தினர்தான் என்கிறார்கள்.

பேரூரில் உள்ள அந்த மடத்தினர் மொரிஷியஸ் தீவுக்குச் சென்றிருந்தபோதுதான் தர்மகுமாரியைச் சந்தித்தார்களாம். அந்தப் பழக்கத்தின் அடிப்படையில்தான் தர்மகுமாரி இந்தியா வர அவர்கள் ஏற்பாடு செய்தார்களாம். அதன்படி தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'சைவ சித்தாந்தம்' டிப்னமோ படிப்புப் பயில கடந்த 2006ஆம் ஆண்டு தர்மகுமாரி விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பப்படிவத்தின் எண் 1540. இது அஞ்சல்வழிப் படிப்பு. கோவை பேரூரில் உள்ள அந்த மடத்தில்தான் சைவ சித்தாந்தத்திற்கான பயிற்சி மையம் உள்ளது. அதனால் ஏற்கனவே அறிமுகமான அதே மடத்தில் தங்கியிருக்கிறார் தர்மகுமாரி. மடத்தில் தர்மகுமாரி தங்கியிருந்தபோது, அங்கிருந்த ஆசிரியர்களுடன் வம்புச் சண்டையில் ஈடுபடுவாராம்.

மேலும், மடத்தில் அவர் தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க அடிக்கடி வெளிநாட்டவர்கள் பலர் வந்து செல்வார்களாம். இதனால் விருந்தாளிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு கோவை ராமநாதபுரத்தில் உள்ள மின காஸ்ட்லியான ஒரு அபார்ட்மெண்டில் வாடகைக்குக் குடியிருந்திருக்கிறார். வீட்டு வாடகை மட்டும் பத்தாயிரம் ரூபாயாம். இதனைத் தவிர சாப்பாடு, போக்குவரத்து உட்பட மாதத்திற்கு இருபத்தைந்தாயிரத்திற்கும் மேல் செலவாகுமாம்.

மேலும் அவரைப் பற்றி விசாரித்தபோது, தர்மகுமாரியின் உறவினர் ஒருவர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணிபுரிந்து வருகிறாராம். அதன் மூலம் அவருக்கு இலங்கைத் தூதரக அதிகாரிகளிடம் தொடர்பு கிடைத்திருக்கிறது. அதாவது தர்மகுமாரியின் மகளுடைய பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு தென் ஆப்பிரிக்க இலங்கைத் தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவரே வந்துசெல்லும் அளவிற்கு நெருக்கம் இருந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

ஐம்பத்தெட்டு வயதான தர்மகுமாரிக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்களாம். அடிக்கடி ஆண் நண்பர்களை மாற்றுவது அம்மணிக்கு சகஜமாம். இந்நிலையில்தான், 'தர்ம குமாரிக்கு மகேந்திரனுடன் அறிமுகம் இருந்ததை அறிந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் உள்கட்சிப் பகையைத் தீர்த்துக் கொள்ள தர்மகுமாரியைப் பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொண்டார்' என்றும் கட்சிவட்டாரங்களில் பேசப்படுகிறது. அதனால்தான் 'தன்னை ஏமாற்றிய நபருடன் சேர்த்து வையுங்கள்' என்றெல்லாம், கூறாமல் சம்பந்தமேயில்லாமல் 'அவரைக் கட்சியிலிருந்து நீக்குங்கள்' என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் பரதனுக்கு அனுப்பிய புகார் கடிதத்தில் தர்மகுமாரி குறிப்பிட்டிருக்கிறார்' என்பதை இதற்குச் சான்றாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

'மேலும் அதே கடிதத்தில் ஐம்பது லட்சம் வரை மகேந்திரனுக்குக் கொடுத்திருக்கிறேன் என்று குறிப்பிட்ட தர்மகுமாரி பத்திரிகை பேட்டியின்போது மூன்று லட்சம் கொடுத்தேன் என்று கூறியிருக்கிறார். இதிலிருந்தே அந்த அம்மணியின் புளுகும் பித்தலாட்டமும் அம்பலமாகியுள்ளது' என்கிறார்கள்.

இவையெல்லாம் ஓருபுறமிருக்க, தர்மகுமாரி குறித்து அவரது கணவர் நாகலிங்கம் என்ன சொல்கிறார்? தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.

"கடந்த 1982ஆம் ஆண்டு எனக்கும் தர்மகுமாரிக்கும் திருமணம் நடந்தது. சந்தோஷமான குடும்பச் சூழலில்தான் மூன்று குழந்தைகள் பிறந்தன. அவள் நிறைய பொய் பேசுவாள். அடிக்கடி பணம் கேட்டுச் சண்டை போடுவாள். இதனால் எங்களுக்குள் கருத்துவேறுபாடு எழுந்து 2007_ல் விவாகரத்து ஆனது. அவள் இந்தியாவில் இருக்கும் வரை நான் தான் செலவிற்குப் பணம் அனுப்பினேன். என்னுடைய குழந்தைகளை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பே என்னிடம் ஒப்படைத்துவிட்டாள். விவாகரத்தின் போது இருநூறு ஆயிரம் ரேன்ட்கள் (தென்ஆப்பிரிக்க பணம். இந்திய மதிப்பில் எட்டுக் கோடி ரூபாய் இருக்கலாம் என்கிறார்) கொடுத்தேன். யாழ்ப்பாணத்தில் இருந்த வீட்டை விற்று மொத்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டாள். அவள் இந்தியாவில் இருந்தபோது சைவ சித்தாந்தம் படிப்பதாகச் சொன்னாள். அதைத் தவிர அவள் வேறு என்னென்ன செய்துகொண்டிருந்தாள் என்று தெரியாது. அவள் தர்மகுமாரியா? மர்மகுமாரியா? தெரியவில்லை. விவாகரத்திற்குப் பிறகு எங்களுக்குள் எந்தத் தொடர்பும் கிடையாது. அவள் தற்போது தென்ஆப்பிரிக்கா வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தியாவில் அவளுக்கு உதவி செய்த மகேந்திரன் மீது அவள் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பதை அறிந்து வருத்தப்பட்டேன். அவள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு உண்மையாக இருக்கமானால், அவள் ஏன் தென் ஆப்பிரிக்காவிற்கு ஓடிவந்திருக்கவேண்டும்?" என்றார்.

யோசிக்க வேண்டிய விஷயம்தான்!

இந்தவார குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த செய்தி

இதில் கூறப்பட்ட பல விடயங்கள் எமக்கு ஏற்கனவே தெரிந்தவைதான். இருந்தாலும் இந்தியப் பத்திரிகையிலும் இவை வெளிவந்துள்ளதைத் தெரியப்படுத்த இங்கு இணைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.