Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சி சமரில் படையினரின் மேலதிக இழப்புக்களை நிரூபித்த புலிகள்: இந்திய றோ முன்னாள் செயலாளர் பி.இராமன்

Featured Replies

கிளிநொச்சி சமரில் படையினரின் மேலதிக இழப்புக்களை நிரூபித்த புலிகள்: இந்திய றோ முன்னாள் செயலாளர் பி.இராமன்

[வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2008, 06:30 மு.ப ஈழம்] [ப.தயாளினி]

கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ள தகவல்களை விட புலிகள் தெரிவித்திருக்கும் தகவல்கள் உண்மையாக இருப்பதாகத் தெரிகிறது என்று இந்திய றோவின் முன்னாள் செயலாளர் பி. இராமன் கூறியுள்ளார்.

கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

புத்தாண்டுக்கு முன்னர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம் என்ற சிறிலங்கா படைத் தளபதி பொன்சேகாவின் உறுதிமொழியை நம்பி புதிதாக படையணிகளில் சேர்க்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மரணத்தை முத்தமிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

(1940-களில் நடைபெற்ற) கொரிய போரிலும் கூட இதே போன்றதொரு உறுதியை ஜெனரல் டக்ளஸ் மாக் ஆர்தர் கூறியிருந்தார். தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் போரில் வடகொரியா மற்றும் சீனப் படைகளுக்கு எதிராக போரிட்டு வந்தன. அப்போது "நத்தார் நாளுக்கு முன்னதாக போரை முடித்து வீடுகளுக்குத் திரும்புவோம்" என்று மாக் ஆர்தர் உறுதிமொழி அளித்திருந்தார்.

"நத்தார் நாள்" வந்தது..சென்றது... ஆனால் வடகொரியர்களும் சீனர்களும் மிகக் கடுமையாகப் போராடினர்.

மீண்டும் மாக் ஆர்தர் அதேபோன்ற உறுதிமொழியைத் தர "எந்த ஆண்டு நத்தார் நாளில் வீட்டுக்குத் திரும்புவது?" என்ற விரக்தியான கேள்வி எழுந்தது. அந்த போர்க் களத்தில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் கிளிநொச்சி புறநகர்ப் பகுதிகளில் கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

சிறிலங்கா படைத்தரப்புக்கும் புலிகளுக்கும் குறிப்பிடத்தக்க இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. போர்க் களங்களில் ஒவ்வொரு தரப்பும் இழப்புக்களை குறைத்துக் கூறுவது உண்டுதான். ஆனால் சிறிலங்கா படைத்தரப்பு வெளிப்படுத்துவதைவிட புலிகள் கூறுவது உண்மைக்கு நெருக்கமானதாக உள்ளது.

சிறிலங்கா படைத்தரப்பினர் 170 பேரை கொன்றுவிட்டதாக புலிகள் தெரிவித்திருந்தனர்.

படைத்தரப்போ 25 பேரை மட்டுமே இழந்திருந்ததாக கூறியது.

ஆனால் விடுதலைப் புலிகளோ கொல்லப்பட்ட 36 படையினரின் படங்களை வெளியிட்டு மேலதிக இழப்புக்களை படைத்தரப்புக்கு ஏற்படுத்தியதை நிரூபித்திருக்கின்றனர்.

இருதரப்பிலும் கடுமையான போர் நடந்து இளையோர் பலர் உயிரிழந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளைவிட சிறிலங்கா தரப்பு பெரும் எண்ணிக்கையிலான படையப் பொருட்களை இழந்திருக்கின்றன. புலிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் அந்த படையப் பொருட்கள் அவர்களின் கைகளுக்குச் சென்றுள்ளது.

பாரிய ஒரு இலக்குடன் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களாக புலிகள் போர்க்களத்தில் நின்றனர். சிறிலங்கா படைத்தரப்பிடமிருந்து படையப் பொருட்களை அவர்கள் கைப்பற்றினாலும் ஆயுதப் பற்றாக்குறை உள்ளது.

சிறிலங்கா படையினரின் வான் தாக்குதல்களுக்கு பதிலடியான வான் தாக்குதல்களை புலிகள் நடத்தவில்லை.

சீனா மற்றும் ஈரான் நிதியுதவியுடன் ஆயுதங்களை சிறிலங்கா பெரும் எண்ணிக்கையில் குவித்தது. ஆனால் புலிகளை ஒப்பிடுகையில் படையினர் நன்கு பயிற்றுவிக்கப்படவில்லை.

போரை எதிர்பார்த்து பல வாரங்களுக்கு முன்னரே புலிகள் கிளிநொச்சி அலுவலகங்களை விட்டு வெளியேறிவிட்டனர். கிளிநொச்சியில் இப்போது எதுவும் இல்லை. ஆனால் சிறிலங்கா படையினருக்கு மரண முற்றுகைக் களமாக அது உள்ளது. எது மரண முற்றுகைக் களம் என்பது புலிகளுக்கு தெரியும். சிறிலங்கா படைத்தரப்புக்கு தெரியாது. இதுவே புலிகளுக்கு சாதகமானதாக உள்ளது என்று அதில் பி.இராமன் தெரிவித்துள்ளார்.

புதினம்

எது மரண முற்றுகைக் களம் என்பது புலிகளுக்கு தெரியும். சிறிலங்கா படைத்தரப்புக்கு தெரியாது.

சரியானதொரு வரி

The SL Army has the advantage of numbers and arms and ammunition procured with funds from China and Iran, but its soldiers are not as well-motivated and as well-trained as those of the LTTE.

http://www.southasiaanalysis.org/papers30/paper2986.html

உவர் சீனாவிட்டியும், ஈரானிட்டையும் ஆயுதங்களை வாங்கிப்போட்டு இந்திய படைகளிடம் ஒழுங்காக பயிற்ச்சியை பெறாததால் வந்த இழப்பு எண்டுறார்...!!

புரியுது "எலி" ஏன் அம்மணமாக ஓடுது எண்டு....!!

Edited by தயா

அதே போல் புலிகள் ஆயுதப்பற்றாக்குறையால் அவதிப்படுவதாகவும் கூறியுள்ளார் ...அதை நிவர்த்தி செய்வது யார் பொறுப்பு?????

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல் புலிகள் ஆயுதப்பற்றாக்குறையால் அவதிப்படுவதாகவும் கூறியுள்ளார் ...அதை நிவர்த்தி செய்வது யார் பொறுப்பு?????

இதற்கு யாரும் பதிலெழுத மாட்டார்கள் நண்பNh

இங்கு பலருக்கு

புரியாதமாதிரித்தான் இருக்கும் தங்களின் கேள்வி

அதே போல் புலிகள் ஆயுதப்பற்றாக்குறையால் அவதிப்படுவதாகவும் கூறியுள்ளார் ...அதை நிவர்த்தி செய்வது யார் பொறுப்பு?????

இராணுவத்திடமிருந்து கைப்பற்றும் ஆயுதங்களைக் கொண்டே புலிகள் சண்டையிடுகிறார்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. ராமன் குறிப்பிடும் ஆயுதப் பற்றாக்குறை வான்வழித் தாக்குதலை முறியடிக்கும் வழி. அது நிவர்த்திக்கப் படவேண்டியது நம்மால்தான முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னமொ தலைவர் இருக்கிறார் அவருக்கு தெரியும் எதை எங்கை இருந்து கொன்டு வர வேனும் என்று

புலத்தில் இருக்கும் நாங்கள் காசை கிள்ளி குடுக்காமல் அள்ளி அள்ளிக் கொடுப்போம்

தலைவரின் கைய பலப்படுத்துவோம்..

ஒரு மனதுடன் இருப்போம்.. தமிழ் ஈழம் மலரும் என்று......

வாழ்க தமிழ் வெல்க ஈழம்...

Edited by kuddipaiyan26

என்னமொ தலைவர் இருக்கிறார் அவருக்கு தெரியும் எதை எங்கை இருந்து கொன்டு வர வேனும் என்று

புலத்தில் இருக்கும் நாங்கள் காசை கிள்ளி குடுக்காமல் அள்ளி அள்ளிக் கொடுப்போம்

தலைவரின் கைய பலப்படுத்துவோம்..

ஒரு மனதுடன் இருப்போம்.. தமிழ் ஈழம் மலரும் என்று......

வாழ்க தமிழ் வெல்க ஈழம்...

இதை தான் நானும் நினைத்தேன்... ஒன்றுபடுவோம்...

  • கருத்துக்கள உறவுகள்

If the LTTE loses the battle [at Kilinochchi], it could mark the beginning of its end as an insurgent force, but not as a terrorist organisation. If the SL Army wins, it will be a Pyrrhic victory.

A Pyrrhic victory (IPA: /ˈpɪrɪk/) is a victory with devastating cost to the victor.

The phrase is named after King Pyrrhus of Epirus, whose army suffered irreplaceable casualties in defeating the Romans at Heraclea in 280 BC and Asculum in 279 BC during the Pyrrhic War. After the latter battle, Plutarch relates in a report by Dionysius:

The armies separated; and, it is said, Pyrrhus replied to one that gave him joy of his victory that one more such victory would utterly undo him. For he had lost a great part of the forces he brought with him, and almost all his particular friends and principal commanders; there were no others there to make recruits, and he found the confederates in Italy backward. On the other hand, as from a fountain continually flowing out of the city, the Roman camp was quickly and plentifully filled up with fresh men, not at all abating in courage for the loss they sustained, but even from their very anger gaining new force and resolution to go on with the war.[1]

In both of Pyrrhus's victories, the Romans lost more men than Pyrrhus did. However, the Romans had a much larger supply of men from which to draw soldiers, so their losses did less damage to their war effort than Pyrrhus's losses did to his.

http://en.wikipedia.org/wiki/Pyrrhic_victory

pyrrhic victory எண்டதை தானே பாரிய பசளை வெற்றிச் செய்தி எண்டு தமிழில நாங்கள் சொல்லிறது? அதாவது ஒருவரையும் திரும்பிப் போகவிடாது கதையை முடிச்சு புதைச்சு பசளை ஆக்கிற வெற்றி. அதுவும் மிக விரைவில் எதிர்பார்க்கலாம் புலம்பெயர்ந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை தான் நானும் நினைத்தேன்... ஒன்றுபடுவோம்...

ஒம் அக்கா ஒன்றுபடுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

என்னமொ தலைவர் இருக்கிறார் அவருக்கு தெரியும் எதை எங்கை இருந்து கொன்டு வர வேனும் என்று

புலத்தில் இருக்கும் நாங்கள் காசை கிள்ளி குடுக்காமல் அள்ளி அள்ளிக் கொடுப்போம்

தலைவரின் கைய பலப்படுத்துவோம்..

ஒரு மனதுடன் இருப்போம்.. தமிழ் ஈழம் மலரும் என்று......

வாழ்க தமிழ் வெல்க ஈழம்...

குட்டி பையனின் வார்த்தைகள் தான் யதார்த்தநிலை.

  • கருத்துக்கள உறவுகள்

pyrrhic victory எண்டதை தானே பாரிய பசளை வெற்றிச் செய்தி எண்டு தமிழில நாங்கள் சொல்லிறது? அதாவது ஒருவரையும் திரும்பிப் போகவிடாது கதையை முடிச்சு புதைச்சு பசளை ஆக்கிற வெற்றி. அதுவும் மிக விரைவில் எதிர்பார்க்கலாம் புலம்பெயர்ந்தவர்கள்.

பசளை என்று வரும் போது மலமும் சேர்த்து தான் வருகிறது நண்பரே. இதை தான் மேற்கு நாடுகள் பூக்கண்டு நட பாவிக்கிறார்கள் . கொஞ்சம் விளக்கமுடன் சொன்னால் நன்றாக இருக்கும்.

இராணுவத்தின் மீதான சிறு வெற்றி சிறு சந்தோசத்தை மட்டும் தரலாம். சிறிலங்கா அரசு அரசியல் ,ராஜதந்திர ரீதியாக பல படிகளை தாண்டியுள்ளது என்பது தான் உண்மைநிலை.

ஆக இப்போது உள்ள நிலைமையில் தமிழர் கூட்டணி, தமிழ் நாட்டு அரசியல் வாதிகள், மேலை நாட்டில் அரசியல் அங்கத்துவம் பெற்றவர்கள் மிக உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.