Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படைத்தரப்பைச் சேர்ந்தவரை மீட்க புலிகளிடம் பேச்சுவார்த்தை: சிறிலங்கா இராணுவப் பேச்சாளளர்

Featured Replies

படைத்தரப்பைச் சேர்ந்தவரை மீட்க புலிகளிடம் பேச்சுவார்த்தை: சிறிலங்கா இராணுவப் பேச்சாளளர்

[புதன்கிழமை, 24 டிசெம்பர் 2008, 06:20 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்]

கிளாலி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) இடம்பெற்ற மோதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையினை அரசாங்கம் மேற்கொள்ளும் என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப் புலிகள் வசம் உள்ளவர் படைத்தரப்பைச் சேர்ந்தவர். அவரை விடுவிப்பது தொடர்பான முயற்சிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் வசம் படைத்தரப்பைச் சேர்ந்தவர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக தொடர்புகளை மேற்கொள்ளவுள்ளோம்.

எனினும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடான பேச்சுக்கள் இதுவரை தொடங்கப்படவில்லை என்றார் அவர்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பேச்சுவார்த்தைக்கும் முதலில் ஆயுததை கீழே போடவேணும் எண்டு ஏதாவது நிபந்தனையோ?

கிளாலி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) இடம்பெற்ற மோதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையினை அரசாங்கம் மேற்கொள்ளும் என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

தயவு செய்து அந்த சிங்களவனை விடுதலை செய்து போட்டோவுக்கு போசு கொடத்து உங்கட மனிதாபிமானம் நல்லெண்ணத்தை வெளியிடுங்கோ மோட்டு மகிந்த உடனேயே வன்னியில இருக்கிற படைகளை உடன பின்வாங்குவான்..... சனம் சந்தோசப்படும்.

இறுதியாக தமிழனுக்கு மனிதாபிமானமும் நல்லெண்ணமும் தான் மிஞ்சப் போகுது !

  • கருத்துக்கள உறவுகள்

கிளாலி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) இடம்பெற்ற மோதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையினை அரசாங்கம் மேற்கொள்ளும் என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு ஒன்று என்றவுடன் , நெஞ்சு எவ்வளவு படக்கு , படக்கு என்று அடிக்கின்றது . :(

சிங்களவர்களை மட்டுமல்ல தமிழர்களையும் நன்றாக பூசி மெழுகிக்கொள்கின்றது சிங்கள அரசு

உண்மைதான் களத்தில் போராடும் இராணுவததிற்கு மனதளவில் உற்சாகத்தை வழங்க சிங்கள அரசு எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கத்தயங்காது.

எத்தனையோ இராணுவத்தை பலிக்கடாவாக்கும் அரசு ஒருவரை மீட்க இழப்புகளை சந்திக்குமா ?, கேள்விக்குறிதான்

எங்கடை பிடிபட்ட மூண்டு பிள்ளையளையும் விடச்சொல்லிகேட்கலாம் இவனை விடுறதாயிருந்தாலென்ன ???

புதியவன்.. சொல்றேனென்டு கோபிக்கவேண்டாம்..

புலி படத்தையும்போட்டு நீங்களே இப்படி தூக்கியெறிஞ்சு பேசுறியள்.. எனக்கு விளங்கேல்ல..

காத்திருந்து எதிர்பாரத்து கொஞ்சம் இளைச்சுப்போனியல் போல.

இப்பதெரியுதோ..வன்னிக்களத்தில படையெடுத்து நிக்கிற மகிந்த கூட்டத்துக்கும் இதேபிரச்சனைதான்..

அதாலை சோர்வடையாதேயுங்கோ... எல்லாம் ஒரு தந்திரம் தான்... எங்கடைபக்கம் வெற்றிநிச்சயம்..

சோர்வடையாமல் எமது தோழர்களையும் சோர்வடைய வைக்காமல் தோல்வியிலும் ஆக்கபுர்வமாக இருப்போம்..நம்புங்கள் இறுதி வெற்றி நமதே..

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் பசியில் வாடும் மக்களுக்கான உணவு மற்றும் மருந்து பொருட்கள் ஒழுங்காக வழங்கப்பட வேண்டும் என்பதை அரசு உறுதிப்படுத்தினால் பிடித்த இராணுவத்தை விடலாம் என கேட்கலாம்.

வன்னியில் பசியில் வாடும் மக்களுக்கான உணவு மற்றும் மருந்து பொருட்கள் ஒழுங்காக வழங்கப்பட வேண்டும் என்பதை அரசு உறுதிப்படுத்தினால் பிடித்த இராணுவத்தை விடலாம் என கேட்கலாம்.

heheh :rolleyes::lol:

எத்தனையோ இராணுவங்களைப் பலிகொடுத்த அரசுக்கு இவர் மேல் மட்டும் ஏன் அக்கறை???

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ இராணுவங்களைப் பலிகொடுத்த அரசுக்கு இவர் மேல் மட்டும் ஏன் அக்கறை???

தமிழச்சி ,

இவர் உயிருடன் பிடிபட்டமையால் , தற்போதைய இராணுவதரப்பின் சில நிலைமைகளை கூறலாம் என்ற அச்சமும் ,

இவரை அரசு மீட்க முயற்சிக்கவில்லை என்றால் , போரிட்டுக் கொண்டிருக்கும் இராணுவத்தினர் தரப்பில் சோர்வும் ஏற்பட்டு விடலாம் என்றும் ,

அரசு இவரை விடுவிக்க முயற்சிக்கவில்லை என்று சிங்கள ஊடகங்களும் , சிங்கள பொது சனங்களும் கூற ஆரம்பிக்க முதல் , அரசு தானே முந்திக்கொண்டது என நினைக்கின்றேன் .

பல பக்கத்தாலும் யோசித்து காயை நகர்த்தியுள்ளது .இவரை விடுவிக்க எவ்வளவு மனச்சுத்தியுடன் செயல்படுவார்கள் என்பது வேறு விஷயம் .

போரிடும் இராணுவத்தினருக்கு எதுவும் அறிவிக்கப்படுவதில்லை. இப்படியான ஒரு இராணுவ வீரன் உயிருடன் பிடிபட்டிருக்கிறான் என்பது கூட அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். களமுனையில் அதற்கேற்ற வசதிகள் அவர்களுக்கு இருக்காது.

பிரச்சனை அரசிற்குத்தான். ஆட்சேர்ப்பு, ஏனைய அரசியற் கட்சிகளின் அழுத்தம், மக்களின் அழுத்தங்களில் இருந்து தப்பிக்கவே இந்த நிகழ்வு. விடுதலைப்புலிகள் இந்த விடயத்தை வெளிப்படுத்தாதிருந்தால் இறந்தவர்களிலோ, காணாமல் போனவர்களிலோ ஒருவராக இவர் இருந்திருப்பார்.

இவரை மீட்டபதால் என்ன நன்மையெனில் விடுதலைப்புலிகள் தம்மை வற்புறுத்தி வாக்குமூலம் பெற்றார்கள் என்பதையும் விடுதலைப்புலிகள் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இவர் வாயாலே சொல்ல வைத்து பிரசாரப்படுத்தி ஆட்சேர்ப்பை மேற்கொள்ளவே.

புதியவன்.. சொல்றேனென்டு கோபிக்கவேண்டாம்..

புலி படத்தையும்போட்டு நீங்களே இப்படி தூக்கியெறிஞ்சு பேசுறியள்.. எனக்கு விளங்கேல்ல..

காத்திருந்து எதிர்பாரத்து கொஞ்சம் இளைச்சுப்போனியல் போல.

இப்பதெரியுதோ..வன்னிக்களத்தில படையெடுத்து நிக்கிற மகிந்த கூட்டத்துக்கும் இதேபிரச்சனைதான்..

அதாலை சோர்வடையாதேயுங்கோ... எல்லாம் ஒரு தந்திரம் தான்... எங்கடைபக்கம் வெற்றிநிச்சயம்..

சோர்வடையாமல் எமது தோழர்களையும் சோர்வடைய வைக்காமல் தோல்வியிலும் ஆக்கபுர்வமாக இருப்போம்..நம்புங்கள் இறுதி வெற்றி நமதே..

யு.கே உங்களுடன் கோபிக்கவில்லை ஆனாலும் நம்பிக்கையோ அற்றோ அல்லது மற்றவர்களையும் நம்பிக்கை இழக்க செய்ய வேண்டும் என்றோ கருதவில்லை ஆனாலும் கடந்த காலங்களில் இருந்து நாம் பெற்ற அனுபவங்களில் இரந்து பாhத்தால் தெரியும் தமிழர் தரப்பு எப்பவுமே நல்லெண்ணம் நல்லெண்ண சமிஞ்ஞை மனிதாபிமானம் என்று தான் திரும்ப திரும்ப சொல்கிறொமே தெவிர எமது மக்களிற்கு எவரும் காட்டியதாக இது வரை வரலாறு வரவில்லை . .....

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை தடை செய்வது தொடர்பாக சிறிலங்கா முப்படைத் தளபதிகளுடன் மகிந்த ஆலோசனை

திகதி: 25.12.2008 // தமிழீழம் // [எல்லாளன்]

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது தொடர்பாக சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளுடன் அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடி வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளை தடை செய்வது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், மூத்த அமைச்சர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய மகிந்த, தற்போது படை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகின்றது.

அதேவேளை, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி மகிந்த தலைமையிலான ஆளும் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்புடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உடன்படிக்கை ஒன்றை செய்யவுள்ளது.

இந்த உடன்படிக்கையின் பின்னர் விடுதலை புலிகளை தடை செய்வது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட வேண்டும் என்பது விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி மகிந்த அரசாங்கத்திற்கு விதித்த நிபந்தனைகளில் முக்கியமானது எனவும் அதன் அடிப்படையிலேயே உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும

எனினும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடான பேச்சுக்கள் இதுவரை தொடங்கப்படவில்லை என்றார் அவர்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் மீது குண்டைப் போட்டுவிட்டு எப்படி பேச்சுக்கள் நட்த்துவது??

இதுஎல்லம் சிங்கள மக்களுக்கான கண் துடைப்பு..

24_12_08_paranthan_07.jpg

Red Cross marked roof of the Holy Cross Convent bombed by the SLAF

24_12_08_paranthan_01.jpg

SLAF bombardment on Holy Cross Convent in Paranthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.