Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு அமெரிக்கா கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு அமெரிக்கா கோரிக்கை

Saturday, 03 January, 2009 12:13 PM

.

வாஷிங்டன், ஜன. 3: இலங்கையில் தமிழர்கள் பிரச்சனை மற்றும் அவர்களது நியாயமான கோரிக்கைகள் குறித்தும் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

.

விடுதலைப் புலிகளின் தலைநகராக செயல்பட்டு வந்த கிளிநொச்சியை கைப்பற்றியிருப்பதாக இலங்கை அரசு நேற்று அறிவித்த நிலையில் அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கார்டன் டுகிட் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இலங்கை அரசு நேற்று ராணுவ ரீதியிலான நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளது என்று கூறிய அவர், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வகையில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சு நடத்த வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும் கூறினார்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் அமைதியாக திர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியதை நேற்று அறிவித்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாலைச்சுடர்

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி வீழ்ச்சி.. சர்வதேசத்துக்கு ஒரு காத்திரமான செய்தியைக் கொண்டு போகும். அதாவது சிங்கள அரசு தமிழர்களின் உரிமைக்கான கோரிக்கைகளை இராணுவ ரீதியில் எதிர்கொள்கிறதே தவிர விடுதலைப்புலிகளை அல்ல என்பதுதான் அது..! அதை தெளிவுறுத்த வேண்டிய பொறுப்பும் புலம்பெயர் சமூகத்தைச் சாரும்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர் எல்லாம் சோகத்தில் சுருண்டு போயிருக்கினம்.

சிங்கள அரசு தமிழர் பிரச்சினையை இராணுவ ரீதியில் தீர்க்கத்தான் பார்க்கின்றது என்று இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர் தமிழர் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. இந்த நாடுகளால் சிங்கள அரசு மீது பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கவைக்க அழுத்தங்களைப் பிரயோகிக்கமுடியாது.. அல்லது பிரயோகிக்க விருப்பம் இல்லை. புலிகளுடன் பேசவேண்டும் என்று சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்பு வார்த்தைகள்..

இராமன் கிளிநொச்சியின் வீழ்ச்சி பற்றி எழுதிய கட்டுரையில் இருந்து..

In an unconventional warfare, there is no victory day when the war definitively ends with the adversary vanquished once and for all. Victory comes invisibly when the insurgent or terrorist organisation either realises that continued fighting or violence is no longer a viable option as it happened in Mizoram or when it totally loses the support of the people on whose behalf it claims to be fighting the State as it happened in the case of Khalistani terrorism in Punjab.
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர் எல்லாம் சோகத்தில் சுருண்டு போயிருக்கினம்.

சிங்கள அரசு தமிழர் பிரச்சினையை இராணுவ ரீதியில் தீர்க்கத்தான் பார்க்கின்றது என்று இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர் தமிழர் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. இந்த நாடுகளால் சிங்கள அரசு மீது பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கவைக்க அழுத்தங்களைப் பிரயோகிக்கமுடியாது.. அல்லது பிரயோகிக்க விருப்பம் இல்லை. புலிகளுடன் பேசவேண்டும் என்று சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்பு வார்த்தைகள்..

இராமன் கிளிநொச்சியின் வீழ்ச்சி பற்றி எழுதிய கட்டுரையில் இருந்து..

அவை கேட்கினமோ இல்லையோ உலகிற்கு நியாயம் என்ற ஒன்றைச் சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

சிங்களவன் புலிகளை அடிக்கும் போது பயங்கரவாதி என்றான் ஆனால் இடங்களைப் பிடிக்கும் போது தமிழர்கள் தனிநாடு கேட்பது சிங்கள மண்ணில் என்றெல்லோ வெளிப்படையாகச் சொல்லுறான். ஆக தமிழர்களின் கோரிக்கைதான் இராணுவ ரீதியில் அணுகப்படுகிறதே தவிர.. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்பது ஒரு சாட்டு...! இதை ரகசியமாக வைத்துக் கொள்ள நினைக்கின்றன சில நாடுகள். அதைத் தெளிவுபடுத்த வேண்டியது எமது கடமை. நியாயத்தின் பக்கத்தையும் காட்டத்தானே வேண்டும்...! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் நியாயபூர்வ கோரிக்கையின் அடிப்படையில் பேசவும் - அமெரிக்கா

சனி, 03 ஜனவரி 2009, 14:05 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்]

தமிழ் மக்களின் நியாயபூர்வ கோரிக்கையின் அடிப்படையில் சிறீலங்கா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சி நகரை சிறீலங்கா படையினர் கைப்பற்றியிருப்பதாக அறிவித்துள்ள நிலையில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்து விடுவோம் என சிறீலங்கா அரசு கூறிவரும் நிலையில், இந்தியா உட்பட அனைத்துலக நாடுகள் அமைதி காத்து வருகின்றன.

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளதால் எழுந்துள்ள இராசரீக கருத்து முரண்பாடுகளின் மத்தியில், ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்காது அமெரிக்கா கண்துடைப்புக் கோரிக்கையை வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடுவோம் என சிறீலங்கா அரசு வழங்கியுள்ள உத்தரவாதம் காரணமாகவே இந்தியா, நோர்வே உட்பட அனைத்து நாடுகளும் பேச்சுவார்த்தை பற்றி பேசாது மெளனித்து இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேவேளை, கிளிநொச்சி நகரில் இருந்து தந்திரோபாய ரீதியில் பின்வாங்கினாலும் போராட்டம் தொடரும் என, அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இதன்மூலம் கிளிநொச்சி நகரில் இருந்து பின்வாங்கும் திட்டத்தை விடுதலைப் புலிகள் ஏற்கனவே தீர்மானித்து விட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் நியாயபூர்வ கோரிக்கையின் அடிப்படையில் பேசவும் - அமெரிக்கா

அது என்ன என்று அமெரிக்காவுக்கு தெரியும் போல் உள்ளது அவர்களது அறிக்கை.

அப்படியாயின் அதையும் சொல்லலாமே???????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி போடு விசுகு ..........

கழுதைக்கு(சிஙகளம்) உபதேசம் காதிலே ஓதினாலும்

அபயக் குரலே குரல்

பென்மன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனை இடிக்கவரும் மாட்டின் கொம்புக்கு வலித்து விடக்கூடாதே என்ற கவலையில் வாழும் அமெரிக்கா.

திருமுகத்தில் குட்டையும் பட்டையுமாய் விளங்கும் வெள்ளைத் தேவாங்கு ஒன்று தமிழினத்தின் உணர்வுகளும் மனிதவுரிமைக்குள் சேர்க்கப்படலாமாம்!

புலம்பெயர் தமிழர் எல்லாம் சோகத்தில் சுருண்டு போயிருக்கினம்.

சிங்கள அரசு தமிழர் பிரச்சினையை இராணுவ ரீதியில் தீர்க்கத்தான் பார்க்கின்றது என்று இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர் தமிழர் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. இந்த நாடுகளால் சிங்கள அரசு மீது பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கவைக்க அழுத்தங்களைப் பிரயோகிக்கமுடியாது.. அல்லது பிரயோகிக்க விருப்பம் இல்லை. புலிகளுடன் பேசவேண்டும் என்று சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்பு வார்த்தைகள்..

இந்த அழுத்தத்தை அமரிக்க இந்திய போன்ற நாடுகள் கடுமையாக இனி பிரயோகிக்க முனையும். இது ஒருவிதத்தில் சிங்களத்தின் ராணுவ வழிக்கு பக்கபலமாக இருந்த தங்களது நியாயத்துக்கு புறம்பான செயற்பாட்டை நியாயப்படுத்த உதவும் அதே நேரம் நகரத்தை எல்லையாக கொண்டு ராணுவம் நிற்கும் போது அந்த எல்லைக்குள் மக்களை மீள வருவிக்க ஒரு உத்தியாக அமையும். மக்களிடமிருந்து புலிகளை பிரிப்பதே சிங்களத்துக்கு இறுதியான வெற்றி என்பதற்கு என்னுமொரு பேச்சுவார்த்தை நாடகம் நிச்சயம் அவர்களுக்கு தேவைப்படும். மக்களற்ற கிளிநொச்சியை பிடித்ததில் எந்த வெற்றியும் இல்லை என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிகின்றது. அதை வெற்றியாக்கவே இனி முனைவார்கள். அவலப்படும் மக்களை மையமாக வைத்து அவர்கள் தங்களது காய்களை நகர்த்துவதை உடைப்பதில் புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்புகள் காத்திரமானதாகும். இந்த நாடுகள் ஒரு நாசகார காரணத்தை திரைமறைவில் கொண்டு அழுத்தங்களை பிரயோகிக்கும் போது முதலில் இலங்கை அரசு குற்றவாளியாக சிறிதளவேனும் சித்தரிக்கப்படும் பின்னர் அந்த குற்றம் தமிழர் தரப்பு மீது திட்டமிட்ட முறையிலும் எதிர்பார்க்கப்பட்ட வகையிலும் திரும்பும். இவர்கள் ஆரம்பத்தில் போடும் துருப்புச் சீட்டுக்களை எமக்கு சாதகமாக மாற்ற முனைவேதே எமது தெரிவாக இருக்க வேண்டும். தொடர்ச்சியான இவர்கள் விழையாட்டில் நாம் மல்லுக்கட்ட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் நியாயபூர்வ கோரிக்கையின் அடிப்படையில் பேசவும் - அமெரிக்கா

அது என்ன என்று அமெரிக்காவுக்கு தெரியும் போல் உள்ளது அவர்களது அறிக்கை

விடுதலைப்புலிகளை சிறிலங்கா அரசு அடுத்த வாரம் உத்தியோகபூர்வமாக தடை செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க அரசு சிறிலங்காவை விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

தடைசெய்ப்பட்ட ஒரு அமைப்புடன் செய்யப்படும் பேச்சுவார்த்தை, தடைசெய்த நாட்டிலும் சர்வதேச அளவிலும் சட்டரீதியாக செல்லுபடியாகாது. சிறிலங்கா முதலில் தடை செய்துவிட்டு பின் தடையை நீக்கி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நினைத்தால், தடை செய்வதிலும் பார்க்க தடையை நீக்குவது சிரமமானதாக இருக்கும். ஆகவே விடுதலைப்புலிகள் சிறிலங்காவில் தடைசெய்யப்பட்டால், அதன் பிறகு தீர்வு ஈழத்தமிழருக்கு தனிநாடு தவிர மாற்று இருக்காது. ஈழத்தமிழ் மக்களின் நியாயமானதும் சட்டபூர்வமானதுமான கோரிக்கைகளை சிறிலங்கா நிறைவு செய்ய முடியாத நிலையில், மேற்படி கோரிக்கைகளின் நியாயபூர்வமான சட்டபூர்வமான நிலைப்பாட்டை புரிந்து கொண்டுள்ள நாடுகள் தமிழீழத்தை அங்கிகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படக்கூடிய சாத்தயம் விடுதலைப்புலிகளை சிறிலங்கா தடை செய்வதன் மூலம் உருவாக கூடும். அமெரிக்க அரசின் கோரிக்கைக்கான காரணம் இந்த சூழ்நிலையாகவும் இருக்கலாம்.

Edited by Jude

ஜுட் அண்ணா,

புல்லரிக்குது.... எப்பிடி அண்ணா உங்கலால...... ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.