Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் கிளி. பிடித்த கொண்டாட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3zeitn45wf31bh45tgwd3m55_03.JPG

3zeitn45wf31bh45tgwd3m55_02.JPG

3zeitn45wf31bh45tgwd3m55_04.JPG

புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள் கனடாவின் ரொரண்டோவில் ஸ்காபுரோ என்ற இடத்தில் கிளிநொச்சி வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.

உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள் சம்பைன் உடைத்து கிளி. வெற்றியைக் கொண்டாடியதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

படங்கள்: டெயிலிமிரர்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள் கனடாவின் ரொரண்டோவில் ஸ்காபுரோ என்ற இடத்தில் கிளிநொச்சி வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.

ஸ்காபுரோவில் தானே அதிக தமிழர்கள் வாழ்கிறார்கள் .

அங்கு இவர்கள் கொண்டாட என்ன நெஞ்சழுத்தம் வேண்டும் . :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்காபுரோவில் தானே அதிக தமிழர்கள் வாழ்கிறார்கள் .

அங்கு இவர்கள் கொண்டாட என்ன நெஞ்சழுத்தம் வேண்டும் . :(

அவை சோகத்தில விழுந்து படுத்திருப்பினம்.. இல்ல.. அவங்களும் அவங்கட போராட்டமும்.. நாங்களாவது இஞ்ச வந்து சேர்ந்திட்டமே என்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்திருப்பினம். :(

Edited by nedukkalapoovan

நெடுக்கு உம்மை நினைச்சாப் பாவமா இருக்கு.....

ஏன் கனடா விசயத்தில கிணத்துத் தவளையா இருக்கிறீர்?

இந்தப் படத்தில நிக்கிற கைக்கூலீஸைபத்தி அடியும் நுனியும் தெரியாதா? எல்லாம் தெரிஞ்ச ஆஅளண்டு நினைச்சன் இவ்வளவுதானா? :(

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்கம், மற்றும் 14வது ஒழுங்கைப் பகுதிகளில் பெரிய அளவு கத்திக் கொண்டு ஓடித் திரிந்தார்கள். அப்பகுதியிலும் அதிக தமிழ்மக்கள் இருக்கின்றார்கள் எனத் தெரிந்து.... இருப்பினும், சிங்கக் கொடி வாகனத்தின் கண்ணாடியை மறைக்கின்றது எனக் காவற்துறை அவர்களுக்கு டிக்கட் வழங்கியது

இவ்வளவு நாளும் நாம் கொண்டாடியதை பார்த்து வயிறு எரிந்தவர்களுக்கு இப்போது தான் சந்தர்ப்பம் வந்துள்ளது. அனேகமாக லண்டன், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகளில் இவ்வகையான கொண்டாட்டங்கள் நடக்கின்றன்.

இதனை பார்த்து குய்யோ முய்யோ என்று அரட்டுவதிலும், நெடுக்ஸ் போன்று புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் லண்டன், கனடா தமிழர் என வேறுபாடுகளை வளர்த்து தமிழ் தேசியத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்களை செய்வதிலும் நேரத்தை செலவழிக்காது எமது கோபத்தையும், ஆத்திரத்தையும் காத்திரமான வழிகளில் தமிழ் தேசிய போராட்டத்திற்கு மேலும் பலம் கொடுக்கும் வகையில் வெளிப்படுத்துவோம். எம்மை சீண்டவும், எமக்கு இடையே பிரதேச வாரியாக, நாடுகள் வாரியாக கசப்புணர்வுகளை வளர்க்கவும் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் இனம் கண்டு நிதானமாக செயலாற்ற வேண்டும். எமது ஒவ்வொருவரினது கோபமும் அடைகாக்கப் பட்டு, சிங்கள கொடூர பேரினவாததினை எதிர்க்கும் ஓர்மமாக கருக் கொள்ளல் வேண்டும்.

இவ்வளவு நாளும் நாம் கொண்டாடியதை பார்த்து வயிறு எரிந்தவர்களுக்கு இப்போது தான் சந்தர்ப்பம் வந்துள்ளது.

என்னத கொண்டாடிகொண்டு திரிஞ்சநீங்க? :(

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவாவது திருந்துவினமா, யாழ் கள சிறி லங்கா "சிற்றிசன்ஸ்"? ஓஹோ, அவை சுவிஸ் கொண்டாட்டத்தில பிஸியா இருந்திருப்பினம் போல. :(

  • கருத்துக்கள உறவுகள்

அவை சோகத்தில விழுந்து படுத்திருப்பினம்.. இல்ல.. அவங்களும் அவங்கட போராட்டமும்.. நாங்களாவது இஞ்ச வந்து சேர்ந்திட்டமே என்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்திருப்பினம். :icon_mrgreen:

முக்கியமாக நெடுக்கு ஒரு விசயத்தை கவனிக்கவேண்டும்;

அதாவது கனடிய இளைஞர்களை புரியாமல் பேசுகின்றீர்கள், இன்று இந்த இளைஞர்கள் இதைப்போன்ற விடயங்களை நிதானமாக அணுகுகின்றார்கள் என்றால் அதைப்பார்த்து இங்குள்ள பெரியோர்கள் பிரமித்துள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் நீங்கள் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

இதைவிடச்சுருக்கமாக சொல்லப்போனால், அவர்களிடம் நீங்கள் கற்கவேண்டிய விடயங்கள் நிறையவுண்டு.

தயவுசெய்து இணைஞர்களைத்தூண்டும் வகையில் இதைப்போன்ற கருத்துக்களை தவிர்த்துக்கொள்ள முயற்சியுங்கள்.

வெண்றவன் கொண்டாடுகின்றான் கொண்டாடட்டும். அதில் தப்பேதும் இல்லையே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக நெடுக்கு ஒரு விசயத்தை கவனிக்கவேண்டும்;

அதாவது கனடிய இளைஞர்களை புரியாமல் பேசுகின்றீர்கள், இன்று இந்த இளைஞர்கள் இதைப்போன்ற விடயங்களை நிதானமாக அணுகுகின்றார்கள் என்றால் அதைப்பார்த்து இங்குள்ள பெரியோர்கள் பிரமித்துள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் நீங்கள் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

இதைவிடச்சுருக்கமாக சொல்லப்போனால், அவர்களிடம் நீங்கள் கற்கவேண்டிய விடயங்கள் நிறையவுண்டு.

தயவுசெய்து இணைஞர்களைத்தூண்டும் வகையில் இதைப்போன்ற கருத்துக்களை தவிர்த்துக்கொள்ள முயற்சியுங்கள்.

வல்லை அண்ணா.. உங்கள் கனடிய இளைஞர்கள் மீது பெரியவர்களே அசைக்க முடியாத பிரமிப்பூட்டும் நம்பிக்கை கொண்டிருப்பதாகச் சொல்லி விட்டு.. பின்னர்.. இளைஞர்களைத் தூண்டிவிடும் கருத்துக்களை வைக்க வேண்டாம் என்றீங்களே. ஒரே பந்தியில்.. உங்களின் முரண்பாட்டை பலவீனத்தை சொல்லிட்டீங்களே..!

எமது கருத்து எதிர்பார்ப்பது.. நீங்கள் உடனடியாக சிங்களவர்களுக்கு அருகில் புலிக்கொடியோடு போய் நிற்க வேண்டும் என்பதல்ல.

இந்த வெற்றியின் பின்னால் எமது தேசம் சந்தித்த அழிவுகள்.. மக்கள் இழப்புக்களை தமிழர்கள் அதிகம் வாழும் அதே அரங்கில் வெளிப்படுத்தி இருக்கலாம். அப்போதுதான் உலகுக்கு இந்த வெற்றியின் பின்னால் இருந்த இனவெறியின் உண்மை முகம் கொஞ்சம் என்றாலும் தெரிய வந்திருக்கும். குறிப்பாக கனடாவில் வாழும் குறிப்பிட்ட மக்களுக்கு தெரிய வந்திருக்கும். ஏன் அதில் கலந்து கொண்ட சிங்களவர்களுக்கே தெரிய வந்திருக்கும்.

பெரும் போரைச் செய்த அசோகன்.. மாளிகை விட்டு போர்க்களம் வந்து பேரழிவுகளைக் கண்ட பிந்தானாம்.. ஆன்மீகவாதியானான்.

இந்த வெற்றிக்களிப்பின் பின்னால் எத்தனை தமிழ் சொந்தங்களின் தசைகள்... கிழிக்கப்பட்டுள்ளன.. எவ்வளவு சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.. எத்தனை துயரங்கள் உணரப்பட்டுள்ளன.. என்பது பலருக்கும் இன்னும் தெரியாது. புதுவருடத்தன்று கூட உடல் கிழிந்து மடிந்து போயினர் மக்கள். இன்றைய இந்த கொடியாட்டத்தை முறியடிக்கச் சொல்லவில்லை நாம்.

தாயகக் கள யதார்த்தத்தை அதே ஜனநாயக வழியில் அதே களத்திற்கு கொண்டு வந்திருப்பின்.. இந்த வெற்றிப் பிரச்சாரங்களின் பின்னால் உள்ள மனித அவலங்களை வெளி உலகுக்கு இன்னும் விசாலமாகக் காட்டி இருக்கலாம் என்பதே என் கருத்து..!

இதில் ஆத்திரப்பட்டு ஆவேசப்பட்டு.. அடிதடியில் இறங்குவதல்ல.. எமது எதிர்பார்ப்பு.

வெற்றி கொண்டாட்டம் முடிந்த பின்.. படங்களைக் காவித் திரிவதிலும்.. வெற்றிக் கொண்டாட்டம் செய்பவர்களுக்கு அவர்களின் அறியாமையை இனங்காட்டுதல் அவசியம். அதையும் மீறி அவர்கள் கொண்டாடின் அவர்களின் இனவெறியை அவர்களே உலகுக்கு எடுத்துச் சொல்வதாகி விடும்..! அதற்கான வாய்ப்பை உருவாக்கி இருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

நான் எவரும் 100% வினைத்திறனுள்ள செயற்திட்டத்தை தாயகம் நோக்கிச் செய்வதாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். வெளிநாடுகளில் வாழும் யூத தலைமுறையினர் எவ்வாறு இனப்பற்றோடு வாழ்கின்றனரோ.. அதே உணர்வு எம்மவருக்கு வர வேண்டும். எவ்வாறு வெளிநாடுகளில் பிறந்து வாழும் முஸ்லீம்கள் மதப்பற்றை அறுக்க முடியாது வாழ்கின்றனரோ அதே உணர்விலும் அதிக உணர்வு எம்மவருக்குள் வர வேண்டும்.

அவர்கள் (இளையவர்கள்) அதைச் செய்ததே பெரிய காரியம் என்று எவரின் முயற்சிக்கும் எல்லையிடவோ.. அபரிமித பரிமானமிடவோ நான் முனைய மாட்டேன். அது முயற்சிகளை மட்டுப் படுத்தும் செயலாகவே அமையும்..! கனடிய இளைஞர்கள் மட்டுமல்ல.. உலகெங்கும் வாழும் தமிழ் இளைய சமூகம் சாதிக்க இன்னும் இன்னும் இருக்கிறது..! அதற்கான முயற்சிகள் இன்னும் இன்னும் அதிகரிக்க வேண்டும். அதேவேளை முயற்சிகள்.. ஊக்கங்கள் இளைஞர்களுக்கு மட்டுமானதல்ல. எல்லாத் தமிழர்களுக்குமானதாகவும் இருக்க வேண்டும். அதுதான் இனப்பற்றை வளர்க்கும். தேசத்தின் விடிவை நமதாக்கும். தேசம் பற்றிய அறியாமையில் வாழும் இளைய சமூகம் ஒன்றும் எம்மத்தியில் உண்டு..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு! நீங்க ஒரு கருத்தை முன்வைக்கின்றபோது அதன் வெளித்தோற்றத்தை மட்டும்தான் இங்கு பலர் அவதானிப்பதுண்டு.

ஆனால் அதற்கு ஒரு நெடுநோக்கமான, ஆழ்ந்த நோக்கமுண்டு என்பதை என்னைப்போன்ற ஒருசிலரால் மட்டும்தான் புரிந்துகொள்ளமுடியும் என்று நம்புகின்றேன்.

ஆனால் மேலே உங்களால் குறிப்பிட்ட விடயங்கள் இளைஞர்களின் மனங்களில் வேறுவிதமாக பதிந்துவிடக்கூடாது என்பது தான் எனது எதிர்பார்ப்பு.

இங்கு கடந்தகால கசப்பான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என்பதில் நாம் அவதானமாக சில நடவடிக்கைகளை நகர்த்த வேண்டியிருக்கின்றது.

வெளிப்படையாக கூறுவதாயின் இளைஞர்களின் சில அசட்டுத்தனமான, அதாவது குழுக்களுக்கிடையான மோதல்களும். எமது விடுதலை சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு மிகவும் பாதகமாக இருந்துள்ளது.

ஆனால் கடந்த சில வருடங்களாக இதே இளைஞர்கள் தான் தேசியப்போராட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார்கள் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியளிக்கின்றது.

பழைய இளைஞர்களாக இருந்திருந்தால், மேலே உங்களால் குறிப்பிட்ட அந்த நிகழ்வின் எதிர்தாக்கம் பயங்கர விளைவாக இருந்திருக்கும்.

ஆனால் எமது இளைஞர்கள் எங்களது தலைவரின் எதிர்பார்ப்பை புரிந்து, எம்மினத்தின் விடுதலைக்காக சில விடயங்களை சகிர்த்துக்கொள்ள பழகிவிட்டார்கள்.

ஆகவேதான் தயவுசெய்து இணைஞர்களைத்தூண்டும் வகையில் இதைப்போன்ற கருத்துக்களை தவிர்த்துக்கொள்ள முயற்சியுங்கள் என்று குறிட்டேன்.

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.