Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டன் வெண்புறா அமைப்பு நடத்தும் பொங்கல் விழா - 2009

Featured Replies

ஓ சோத்துப் பாசல் சேகரிச்சவைக்கு கோழிக்குருமா ஆட்டுக் குருமா தானே நாபகத்துக்கு வரும் .

நான் கேள்விப் பட்டிருக்கிறன் என்று தான் குறிப்பிட்டேன். இப்ப அவசரப்பட்டு நீங்கள் சோத்துப் பாசல் சேகரித்த கதையை போட்டுடைத்திட்டியள். அதுசரி அதிலை என்ன குருமா இருந்தது??:D ஆடா?? கோழியா?? :D:D

நான் கேள்விப் பட்டிருக்கிறன் என்று தான் குறிப்பிட்டேன். இப்ப அவசரப்பட்டு நீங்கள் சோத்துப் பாசல் சேகரித்த கதையை போட்டுடைத்திட்டியள். அதுசரி அதிலை என்ன குருமா இருந்தது??:D ஆடா?? கோழியா?? :D:D

வசம்பு போதும் குசும்பு நிறுத்திடியோய் :D

Edited by வடிவேலு

தமிழர் அள்ளி கொடுக்கிறதை கண்ணீர் வெள்ளம் நிதி சேகரிப்பில் பார்த்திருப்பியள். ஒழுங்கு செய்தவையே தீபம் தொலைக்காட்சியில் வந்து கவலைப்பட்டார்கள். 2 இலட்சம் தமிழர் இருக்கிற பிரித்தானியாவில் ஜரோப்பாவில முழுக்க வந்த நிதி 80000 பவுன்ஸ் வரையில் தான் என்றார்கள்.

பிறகு வெண்புறாவும் தனது நிதிதேவைக்கு செய்யும் ஒரு கலை நிகழ்வை இன்றைய கட்டத்தில் வேண்டாம் என்றால் யார் நிதி உதவி செய்ய முன்வருவார்கள்?

நிகழ்வின் செலவுகள் யாவும் வர்த்தக நிறுவனங்களே உதவி செய்கின்றன. சேரும் நிதி நிச்சயமாக மக்களுக்கு உதவும் என்பதில் சந்தேகம் கொள்ள தேவை இல்லை.

காலத்தின் தேவைக்கு ஏற்ப செய்யாத உதவி என்றைக்கும் பயன் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுவும் அந்த 80,000 இல் பழைய மாணவர்சங்கங்கள் கோவில்கள் ஆகியவற்றின் பங்களிப்புகளை கழித்தால் ஒரு பத்துகூட தேறாது.

Edited by ukraj

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் இந்தக் கணக்கு வழக்குத் தேவையா?

இவ்வறான நிகழ்ச்சிகளை நானும் முன்பு அதிகம் வரவேற்பது இல்லை. மக்களிடம் நேரடியாக சென்று இடம்பெயரும் மக்களுக்கு உதவும் படி கேட்டால் உதவி செய்வார்கள் தானே என்று விமர்சித்திருக்கிறேன். நீங்களும் உங்களுக்கு தெரிந்தவர்களும் உதவுவதை கண்டு எல்லாரும் அவ்வாறு செய்வார்கள் என்று நினைப்பது தவறு. யதார்த்த நிலை முற்றிலும் வித்தியசமானது.

எமது தேசியத்திற்கு பாதிக்கும் என்று செல்லி உண்மைகளை மறைப்பதால் அது மேலும் சிக்கலுக்குதான் செல்லும். என்னெனில் உதவி செய்யாதவார்கள் தங்கள் உதவிசெய்ததாக மற்றவர்களுக்கு தம் சுயருபத்தினை மறைப்பதற்கு பொய் கூறுகிறார்கள். இதனை கேட்கும் மற்றவார்களும் எல்லோரும் கொடுக்கிறார்கள், வங்குகின்ற பணத்தினை என்ன செய்கிறார்கள் என்று எண்ணுகிறார்கள்.

ஆனால் நிலமையே வேறு. மன்னரில் மக்கள் இடம்பெயர்ந்த போது அவர்களுக்கு உதவுவதற்காக எல்லோரினாலும் உதவமுடியும் என்பதற்காக ஒரு 5 பவுண் அதிஷ்டலாப சீட்டு விற்பனை செய்யப்பட்டது. இதனை விற்றபோது எற்பட்ட அனுபவத்தில் சிலதை எழுத விரும்புகிறேன். தயவுசெயது கருத்தினை நீக்க வேண்டாம் என்று வேண்டுகிறேன்.

இடம்பெயரும் மக்களுக்கு உதவும் படி புலம்பெயர்ந்த மக்களிடம் கேட்டால் அவர்களின் பதிலிருந்து அவர்களை நான்கு வகையாக பிரிக்கலாம்

1. இடம்பெயரும் மக்களின் அவலத்தினை கண்டு புனர்வாழ்வு அமைப்புகளை தேடிசென்று தமாகவே உதவுவார்கள்.

2. இவ் அமைப்புகள் சென்று கேட்கும் போது எதுவித எதிர்பேச்சு இன்றி உதவுவார்கள்.

3. இவ் அமைப்புகள் சென்று கேட்கும் போது அவர்களிடம் பல கேள்வியளை கேட்டும் அவர்கள் சலிப்படையாது நின்று விளக்கங்களை கொடுத்தால் இனி இவர்களை கழட்டி விடமுடியாது என்று உதவுவார்கள்.

4.ஆயிரம் தடவை கேட்டாலும் தமக்கு என்ன என்று உதவமால் இருப்பவார்கள்.

முதல் மூன்று வகையில் அடங்கும் மெத்த புலம்பெயர்ந்தவார்கள் 25% தான் வரும். மிச்சம் 75% யும் 4 வது வகையில்தான் அடங்குகிறார்கள். இங்கு கூறிப்பிடுவது தேசியத்திக்கு உதவுகிறவார்கள் பற்றி இல்லை. இடம்பெயரும் பெயர்ந்த எம் உறவுகளுக்கு உதவும் எங்கள் மக்களின் மனநிலை பற்றியது.

லண்டனில் 5 பவுண் ஒரு பெரிய தொகை இல்லை. எல்லொரினாலும் கொடுக்க கூடியது .இந்த 4 வது வகையினார் கூறும் வார்த்தைகள்.

1. ஒம் தம்பி எங்களுக்கு இடம்பெயர்ந்த கஷ்டம் தெரியும், நாங்களும் அனுபவத்திருக்கிறோம், ஆனால் இப்ப என்ன செய்வது நாங்களும் கஷ்டத்தில் தான் இருக்கிறோம் எங்களால் உதவ முடியாது.

2. உங்களுக்கு வேறு வேலை இல்லையா எல்லாத்துக்கும் வந்து கொண்டு.

3. ஒரு நக்கல் சிரிப்பு

4.உதை எப்படி அனுப்ப போகிறியாள், எங்களினால் தரமுடியாது.

5.நாங்களே கடனில் உள்ளோம். நீங்கள்தான் எங்களுக்கு புனர்வாழ்வு தரவேண்டும் என்று திருப்பி கேட்கிறார்கள்.

6.கணவர் அல்லது மனைவி இப்ப இல்லை. அவர் வரவேண்டும் என்ன செல்வார் என்று தெரியாது

7.நாங்கள் சின்னதொகை கொடுப்பது இல்லை கொடுத்தால் பெரிதாகதான் கொடுப்போம். ஆனால் இப்ப தரமுடியாது. என்னும் பல எழுதமுடியாதவை.

இப்படியான சீட்டுகளை விற்பதற்ககே அல்லது உண்டியல் குழுக்குவதற்கே பலர் இளைஞர் முன் வருவதில்லை. காராணம்

1. இதனை செய்வதை இழிவாக அல்லது தங்களுக்கு கௌரவ குறைவாக நினைக்கிறார்கள்.

2. பொம்பிளை பிள்ளைகளுக்கு முன் கேட்க வெட்கம்.

பல கடைகாரரை விற்க செல்லி கேட்டால் வேண்டி ரில்லுக்கு கீழ் வைத்திவிட்டு அப்படியே திருப்பி தருகிறார்கள்.

ஒரு 5 பவுணுக்கே இப்படி என்றால் நிலமையை நினைத்துப்பருங்கள்.

ஆனால் இப்படியான நிகழ்வுக்கு 20 பவுணுக்கு இல்லை 50 பவுணுக்கும் எடுக்க இவர்கள் எல்லோரும் தயராக இருக்கிறார்கள். பெரும்பாலனார் பணம் கொடூப்பதனால் தமக்கு என்ன இலாபம் என்றுதான் கணக்கு பார்க்கிறார்கள். நிலைமைகள் மாறும் போது நாங்களும் அவ்வழி சென்றுதான் என்ன இலக்கினை அடைய முடியும்.

தனியார்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சியினை நடத்தி அவர்கள்தான் உழைக்கிறார்கள். நாட்டுமக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

புலத்தில், ஈழத்தில் உள்ள தமிழ்மக்களில் அககுறைந்தது 75% மக்கள் நான் நாம் என்ற சுயநல மூடியை உடைத்து எம்மக்கள் எம்மினம் என்று பொதுநலம் உள்ளவார்கள் ஆக எப்ப மாறுகின்றார்களே அப்பதான் தமிழீழம் மலரமுடியும். உதட்டலவில் அல்லது புலிகள் ஓரு வெற்றியை பெறும்போதுதான் தமிழீழம் வேண்டும் என்று நினைத்தால் அது கற்பனையிலேயே சத்தியம்.

.

Edited by உமை

சத்தியமான உண்மை.

.

[

என்ன எல்லோரும் மௌனம் ஆகிவிட்டீர்கள்

நீங்கள் எப்பவும் சீரியசாக எழுதினா மொளனமாகாமல் வேறை என்ன செய்யிறது?

வன்னியில் மக்கள் அவல வாழ்வு: தைப்பொங்கல் விழா கொண்டாட்டங்களை நிறுத்துமாறு "புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்பு" கோரிக்கை

[ திங்கட்கிழமை, 12 சனவரி 2009, 11:49.23 AM GMT +05:30 ]

சிறிலங்காவின் அகோர போர் வெறியினால் வன்னியிலே மக்கள் தாங்கொணா வேதனையை அனுபவிப்பதால் தைப்பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் நிறுத்துமாறு புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்பு கோரியுள்ளது.

இதன் அமெரிக்கா, ஐரோப்பிய, அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் நேற்று இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

மக்கள் மிகநெருக்கமாகக் குவிந்துள்ள வன்னிப்பகுதி மீதான கடும் தாக்குதல்களுக்கு சிறிலங்காவின் ஒட்டுமொத்த இராணுவமும் தயாராகி வரும்வேளையில், அவ்வமைப்பின் பிரதிநிதிகள் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

வன்னியிலுள்ள தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா இராணுவத்தின் இன அழிப்புத் தாக்குதலைத் தடுக்கக்கூடிய அழுத்தம் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே வரமுடியும். சிறிலங்காவினால் நடத்தப்படும் இனத்தேசியப் போரானது புதுடில்லியின் மூலோபாயத்திலும் அதன் உலகப் பங்காளிகளின் தந்திரோபாயப் பங்களிப்புடனும் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தின் மீது கொண்டிருந்த மிகச்சிறிய நம்பிக்கையையும் இழந்துவிட்டனர். சிறிலங்காப் படைகள் கிளிநொச்சியை ஆக்கிரமித்த பின்னர் அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளே அவர்களையும், அவர்களது புவிசார், நலன்சார் செயற்பாடுகளையும் அம்பலப்படுத்திவிட்டன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d...d426QV3b02ZLu3e

காசுக்கு என்றால் பொங்கள் கொண்டாடலாமோ? யார் இந்த புலம்பெயர் மக்கள்?பெயரில் பொங்கள் கொண்டாட வேண்டாம் என்று சொன்னது? அது வென்புறாக்கு பொருந்த்தாதோ? கி கி

  • கருத்துக்கள உறவுகள்

:unsure:" மொத்தத்தில் கறக்கிறது மட்டும் தான் குறி " :unsure:

கறப்பதும் ஒரு குறியாக இருக்கலாம் தானே. :):unsure:

தாயகத்தில் உள்ள மக்களை பராமரிக்க அவர்களது உணவு மருத்து தேவைகளை பூர்த்தி செய்ய இடம்பெயரும் பொழுது வாகன சேவைகளை வழங்க என்று எல்லாவற்றிற்கும் பணம் தான் அடிப்படைத்தேவை.

சிறீலங்கா (உலக உணவுத்திட்டம் உட்பட) தனது நிவாரண பங்களிப்புகளை நிறுத்தி தடையை இறுக்கினால் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் எல்லாத்துக்கும் நம்பியிருப்பது தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தைத் தான்.

தாயகத்து நிலமை கவலைக்கிடம் என்று எல்லாவற்றையும் நிறுத்துகிறோம் என்று பொங்கி எழுந்து அவசரமாக தேவைப்படும் நிதிகளை திரட்டுவதற்கான அரிய சந்தர்ப்பங்களையும் மூடிவிட்டு நிலமை எல்லை மீறிய பிறகு கவலைப்பட்டு பயனில்லை.

வெண்புறா ஒன்றும் உல்லாச மாளிகை கட்டுவதற்காக நிதித் திரட்டல் செய்ய இந்த நிகழ்வை ஒழுங்கு செய்யவில்லை.

நமக்கு முன் இன்று இருப்பது ஒரு delicate balancing act. நிதித் திரட்டல் சந்தர்ப்பங்கள் தவறவிடப்படக் கூடாது. எமது பொருளாதார பலம் தான் எமது மக்களின் அத்தியாவசிய தேவைகளை இன்று பூர்த்தி செய்யப் போகிறது. அதை திரட்டுவதற்கு உரிய வழிகள் அனைத்தும் உச்சமாக பயன்படுத்தப்பட வேண்டும், அது இசை நிகழ்ச்சியாக இருந்தாலும். அதே வேளை தாயகத்து அவலங்கள் பற்றிய உண்மை நிலை அறியப்பட்டு பரந்து பட்ட பரப்புரைகளும் நடக்க வேண்டும். 2 நடவடிக்கைகளுமே அவசியமானவை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குறுக்ஸ். எனது கருத்தும் அதுவே. மக்கள் அங்கு பட்டினியில் சாகும் போது அது செய்ய கூடாது , இது செய்ய கூடாது. யார் ஒழுங்கு பண்ணினது? இவை மற்ற ***மோ நடத்துகினம் என எரியும் வீட்டில் கொள்ளி பொறுக்காமல் உதவி செய்ய எத்தனிப்பவர்களை விட்டு விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:)" மொத்தத்தில் கறக்கிறது மட்டும் தான் குறி " :unsure:

சரி. கறப்பதாக இருக்கட்டுமே... உமக்கு எனன்ன பிரச்சனை அதில்... மக்களுக்கு எதற்காக நடத்தப்படுகின்றது என்று தெரியும். அதைப் பற்றி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். உங்களின் வேலையைச் செய்கின்றீர்களா

தாயகத்தில் உள்ள மக்களை பராமரிக்க அவர்களது உணவு மருத்து தேவைகளை பூர்த்தி செய்ய இடம்பெயரும் பொழுது வாகன சேவைகளை வழங்க என்று எல்லாவற்றிற்கும் பணம் தான் அடிப்படைத்தேவை.

சிறீலங்கா (உலக உணவுத்திட்டம் உட்பட) தனது நிவாரண பங்களிப்புகளை நிறுத்தி தடையை இறுக்கினால் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் எல்லாத்துக்கும் நம்பியிருப்பது தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தைத் தான்.

தாயகத்து நிலமை கவலைக்கிடம் என்று எல்லாவற்றையும் நிறுத்துகிறோம் என்று பொங்கி எழுந்து அவசரமாக தேவைப்படும் நிதிகளை திரட்டுவதற்கான அரிய சந்தர்ப்பங்களையும் மூடிவிட்டு நிலமை எல்லை மீறிய பிறகு கவலைப்பட்டு பயனில்லை.

வெண்புறா ஒன்றும் உல்லாச மாளிகை கட்டுவதற்காக நிதித் திரட்டல் செய்ய இந்த நிகழ்வை ஒழுங்கு செய்யவில்லை.

நமக்கு முன் இன்று இருப்பது ஒரு delicate balancing act. நிதித் திரட்டல் சந்தர்ப்பங்கள் தவறவிடப்படக் கூடாது. எமது பொருளாதார பலம் தான் எமது மக்களின் அத்தியாவசிய தேவைகளை இன்று பூர்த்தி செய்யப் போகிறது. அதை திரட்டுவதற்கு உரிய வழிகள் அனைத்தும் உச்சமாக பயன்படுத்தப்பட வேண்டும், அது இசை நிகழ்ச்சியாக இருந்தாலும். அதே வேளை தாயகத்து அவலங்கள் பற்றிய உண்மை நிலை அறியப்பட்டு பரந்து பட்ட பரப்புரைகளும் நடக்க வேண்டும். 2 நடவடிக்கைகளுமே அவசியமானவை தான்.

ஆரம்பத்தில் இது பற்றி எனக்கு வேறு கருத்தே இருந்தது. ஆனால் இப்போது இந்த திரியில் உள்ள சில பதில்களை படித்த பின்னும், குறுக்ஸ் ஸின் பதில்களை படித்த பின்பும் இவ் வெண்புறா நிகழ்ச்சியையும், அதை போன்ற அமைப்புகளால் (எம் மக்களுக்காக உண்மையாகவே தொண்டாற்றும்) நிகழ்த்தப் படும் நிகழ்ச்சிகளையும் ஆதரிக்கீன்றேன்

சரி. கறப்பதாக இருக்கட்டுமே... உமக்கு எனன்ன பிரச்சனை அதில்... மக்களுக்கு எதற்காக நடத்தப்படுகின்றது என்று தெரியும். அதைப் பற்றி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். உங்களின் வேலையைச் செய்கின்றீர்களா

தூயவன், இந்த விவாதம் ஆரோக்கியமாக போகும் போது மீண்டும் அதனை விதண்டாவாதம் போக்கில் எடுத்துச் செல்லும் பதில்களை எழுதுவது அவசியமா?... உங்களை போன்ற உண்மையான தமிழ் தேசிய ஆதரவாளர்கள் செய்ய வேண்டியவை நிறைய இருக்கு... ஒரு நண்பனாக இதனை கூறுகின்றேன்

தாயகமக்களுக்கு என பதிந்து சேவை செய்யும் நிறுவனங்களை யாரும் சந்தேகம் கொள்ள தேவை இல்லை. கொடுக்கும் பணம் அந்த மக்களின் வாழ்வுக்காக ஏதோ ஒரு வகையில் தாய்மண்ணுக்கு போய் சேர்கின்றன.

இந்திறுவனங்கள் நிதி சேர்க்க எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுங்கள்... வெண்புறா நிகழ்வின் அனுமதி சீட்டு விற்கதொடங்கி விட்டார்கள். அனைவரும் வாங்கி ஆதரவு கொடுங்கள்.

வெண்புறாவிற்கு வேறூ எந்த நிதியும் திரட்டும் வாய்ப்பு இல்லை. அனைவரும் ஆதரவு கொடுப்போம்......

தமிழர் புனர்வாழ்வுகழகம்

செஞ்சோலை காப்பகம்

காந்தரூபன் அறிவுச் சோலை

நவம் அறிவுக்கூடம்

இனிய வாழ்வு இல்லம்

தமிழீழ மகளிர் அமைப்பு

தமிழ் இளையோர் அமைப்பு இவை எல்லாம் தாயக மக்களின் சுபீட்ச வாழ்வோடு தங்களை அர்ப்பணித்த நிறுவனங்கள். உதவிகள் பெருமளவு தேவை அனைவரும் கைகொடுப்போம்

Edited by நேசன்

நன்றி... டிக்கெட்டினை ஒன்லைன் மூலம் வாங்க முடியுமா? முடியுமாயுன், நாம் இங்கிருந்து கொண்டு (கனடா) கூட வாங்ககூடியதாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே அல்லலுறும் உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற மனம் கொண்டவர்கள் 0044 (0)208 672 4100 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு தங்களின் பங்களிப்பினை வழங்கலாம்.

வெண்புறா 0044 (0) 208 672 4100

www.whitepigeonuk.org

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.