Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27997

Edited by பண்டிதர்

உண்மையான தமிழன்

நான் இதை வரவேற்று அந்த உணர்வாளனிற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். எம்மிலும் பலர் இருக்கின்றார்கள் எங்கே தங்களை இனம்காட்டலாம் என்றுதான் முன்வருவார்களேயொழிய இப்படியான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் எங்களுக்காக சாகத்துனிந்த தமிழன் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கலெல்லாம் வெட்கித்தலைகுனியவேண்டும்

திருமாவளவன் அண்ணாவின் இந்த முயற்சியை வரவேற்கிறேன்!

ஆனால்.. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முதல் நெடுமாறன் ஜயாவுக்கு நடந்தது போல் ஒரு உறுதிமொழியுடன் நின்றுவிடாது அனைவருடைய ஆதரவும்பெற்று இந்திய அரசை செயற்படத் தூண்டவேண்டும் என்பதே எனது அவா!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கினமெல்லோ லண்டனுக்கு ஓடிவாறது நோர்வுக்கு ஓடுறது சுவிசுக்குப் பாயிறதெண்டு தமிழால் தமிழருக்கு அறிக்கையும் விட்டு பேட்டீயும் குடுத்திட்டு பாராளுமன்றத்துக்கு கடிதம் அனுப்பீட்டு இந்தியாவில போய் நிண்டு பேட்டி குடுக்கிறதை நிப்பாட்டீட்டு திருமாவளவன் போலை யாராவது ஒரு எம்.பி உப்பிடியொன்றைச் செய்யலாம். ஆனால் உதெல்லாம் செய்யாமல் அறிக்கையளா விட்டுக்கொண்டிருப்பினைக்க

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று காந்தி இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்.

இந்தியாவை நம்பி உண்ணா விரதமிருக்க எவ்வளவு துணிவு வேண்டும். இது ஒரு விஷப்பரீட்சை.

வாகும் வரைக்கும் விட்டாலும் விட்டுடுவாங்கள். அப்பிடியே போறபோக்கில நெடுக்கையும் ஒருக்கா இருத்துவமா? :lol:

புலத்தில் தற்போதும் தம்மை முன்னிலைப்படுத்துவதிலேயே இருக்கின்றார்களேயொழிய போரட்டத்திற்கும் போராளிகளிற்கும் ஏதுவாக செய்ய யாரும் முன்வரப்போவதில்லை. மற்றவர்களையும் செய்ய அனுமதிக்கப்போவதுமில்லை. பெயர் வரவேண்டும் அதைத்தான் விரும்புகின்றார்கள்.

வெட்கத்தை விடடுச்சொன்னால் எங்கடை ஆக்கள் பேசாமல் சாகலாம்

மனதைக் கலங்க வைக்கிறது. இந்த உணர்வு எமக்கில்லையே....!!!

ஈழத்திழினம் என்றும் நன்றியுணர்வுடன் உங்களைப் போற்றும்.

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவன் அவர்களின் ஈழத்தமிழர் பற்றுறுதிக்கு தலை வணங்குகின்றோம். இதே அகிம்சை வழியில் எடுக்கப்பட்ட எமது மக்களின் போராட்டங்கள்.. கீழ்த்தரமாக அணுகப்பட்ட நிலையே இந்திய மத்திய அரசின் கடந்த கால வரலாறு..! அது திருமா விடயத்திலும் நடக்காது இருக்க வேண்டுவோமாக..!

தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களை உண்ணாவிரதம் இருக்கவில்லை என்று திட்டுவது பிரயோசனமற்றது. அனைத்துவகையான அகிம்சை வழிமுறைகளும் தந்தை செல்வா போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டு தோற்ற நிலையில் தான் நாம் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்தோம். இந்தியாவுடனான எல்லா அகிம்சைப் போராட்டங்களும் எங்களைப் பொறுத்தவரை பிரயோசனமற்றவையாகவே அமைந்து விட்டிருக்கின்றன. மீண்டும் மீண்டும்.. அவற்றில்.. ஈடுபடுவது எம்மைப் பொறுத்தவரை மக்களை ஏமாற்றும் செயலாகவே நோக்க வேண்டி இருக்கும்.

இன்றைய எமது தேவை.. எமது மக்களின் கோரிக்கைகளின் நியாயங்களை சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்வதாகும். அதை நாம் மட்டுமன்றி உலகத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் போதே.. ஈழத்தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளின் பின் உலகத்தமிழினம் திரண்டு நிற்கிறது என்ற செய்தியை சர்வதேசத்துக்கு நாம் கொண்டு செல்ல முடியும். அந்த வகையில் திருமாவின் முயற்சி.. வரவேற்கப்பட வேண்டியது மட்டுமன்றி.. தகவலாக உலகெங்கும் காவிச் செல்லப்பட வேண்டியதும் அவசியமாகும்.

எம்மவர்களில்.. சிலர்.. சிங்கள படைகளினால் எமது மக்கள் அழிக்கப்பட்டு.. அவர்களின் வாழ்விடங்கள் நொருக்கப்பட்டு.. பாதை திறப்பதைக் கூட மகிழ்ச்சியோட வரவேற்பதாக அறிக்கை விடும் நிலையில் இருக்கின்றனர். அதுமட்டுமன்றி... எமது மக்கள் சிங்கக் கொடியை உயர்த்திப்பிடிக்க தூண்டப்படும் நிலையில்.. ஏதோ வடக்குக் கிழக்கு மக்கள் ஏ வகை வீதிகளுக்காக போராட்டம் ஆரம்பித்தது போல.. எம்மவர்களே அரசின் பிரச்சாரங்களுக்கு முண்டு கொடுப்பது ஈழத்தில் மும்மரமாக நடக்கும் இவ்வேளையில்.. சிறீலங்கா பாராளுமன்றம் சென்ற உறுப்பினர்கள் வகை தொகையின்றி கொல்லப்பட்டுள்ள நிலையில்.. மக்கள் சார்பாக உரிமைக் குரல் கொடுக்க இருக்கும் ஒரு சிலரையும் இழப்பின்.. அது... சிறீலங்காவில் இருந்து எழக் கூடிய எமது மக்களின் உண்மைக் குரல்களை எல்லா வகையிலும் அடக்கிவிட்டதாகவே அமையும். அது அரச (இந்திய, அமெரிக்க.. சிங்களப் பேரினவாத அரச) பிரச்சாரங்களும்.. அரச சார்பு ஒட்டுக்குழுக்களின் குரல்களும் மக்களின் குரல்களாக உலகுக்கு இனங்காட்டப்படவே வகை செய்யப்படும். அது ஆபத்தானதாகும்..! அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அமைதியான ஆனால் காத்திரமான குரல்கள் சர்வதேசத்தை நோக்கி ஒலிப்பது அவசியம்...! அவர்கள் அதைச் செய்வார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை குற்றம் சாட்டுவதை நிறுத்தி எங்களால் என்ன செய்ய முடியும் என்னதைப் பற்றி யோசியுங்கள்.

புலம்பெயர் மண்ணில் எங்களால் அடையள உண்ணாவிரதம் இருக்க முடியாதா...,?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா திருமாவளவன் அவர்களே உங்கள் தமிழர் பற்றுறுதிக்கு தலை வணங்குகின்றோம்.

உங்கள் தம்பியில் ஒருவனாக் கேட்டுக் கொள்கிறேன் இந்த வில்லங்கப் பரீட்சையை மீண்டும் ஒருதரம் ஆராய்ந்து முடிவெடுங்கள். ஏனெனில் உங்களைப் போன்றோரை நாங்கள் இழக்கவிரும்பவில்லை, அதே நேரம் மீண்டும் தமிழக அரசியல் வாதிகள் "கோமாளிகள்" என்று எங்களை மாற்றான் இழிவு படுத்துவதையும் விரும்பவில்லை.

திருமாவளவன் அவர்களின் ஈழத்தமிழர் பற்றுறுதிக்கு தலை வணங்குகின்றோம். இதே அகிம்சை வழியில் எடுக்கப்பட்ட எமது மக்களின் போராட்டங்கள்.. கீழ்த்தரமாக அணுகப்பட்ட நிலையே இந்திய மத்திய அரசின் கடந்த கால வரலாறு..! அது திருமா விடயத்திலும் நடக்காது இருக்க வேண்டுவோமாக..!

திருமாவுக்கு நன்றிகள் பலகோடி

எங்கள் திலீபன் அண்ணாவை இழந்தது போல இவரையும் இழக்காமல் இருக்க வேண்டும்..

இப்படி ஒரு துணிவு..வீரம் எத்தனை பேருக்கு வரும்

ஒரு நிஜ போர் வீரனை பார்க்கின்ற்றோம்..

ஏற்கனவே திலீபன் அண்ணா , அன்னை பூபதியை இழந்தோம் ,

திருமா அவர்கள் என்றும் தமிழினத்துக்கு தேவை

தமிழினத்தின் தவிப்பை, ஒரு தமிழனால்தான் உணரமுடியும்.

அன்றிருந்து இன்றுவரையிலும் எமக்காக உண்மையாக குரல் கொடுக்கும் ஒரு சில விரல்விட்டு எண்ணக் கூடிய தமிழக தலைவர்களில் ஒருவர். எதற்கும் அஞ்சாமல் தன் கொள்கையை தனது இலட்சியத்தை விடாப்பிடியாக கொண்டு செல்பவர். காந்தியுடன் அஹிம்சாவாதம் பாரத்தில் மரணித்து விட்டது. அந்த மண்ணில் உண்ணாவிரதத்தால் ஏதும் சாதிக் முடியுமா?? சந்தேகம் தான். எனினும் திருமா அவர்களே எமக்காய் குரல் கொடுக்கும்உங்களுக்கு ஈழத்தமிழர் சார்பில் நன்றிகள்.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உணர்வுக்கு தலெவணங்குகிேராம்

திருமாவளவன் ஐயா எப்போது காந்தி இறந்தாரோ அன்றே அகிம்சையும் சேர்த்தே இறந்து விட்டது.

மேலும் உங்களுடைய சேவை எமக்கு தேவைப்படுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று காந்தி இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்.

இந்தியாவை நம்பி உண்ணா விரதமிருக்க எவ்வளவு துணிவு வேண்டும்.

இது ஒரு விஷப்பரீட்சை.

இப்படித்தான் எனக்கும் தோன்றியது. 'திலீபன் அண்ணாவுக்கு 'இந்திய அரசு கொடுத்த மரியாதை தெரியாதா?!!!...'அஹிம்சை நாடு என்று பெயர். ஆனால் நடப்பதெல்லாம்?!!!

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் இந்தியா உடனடியாக தலையிட்டு சிறீலங்காவில் தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் போரை உடனடியாக நிறுத்தவேண்டும் எனகோரி சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் நிகழ்த்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இப்போராட்டத்திற்கான நேரம், இடம், காலம் என்பன விரைவில் அறியத்தரப்படும் எனவும் தெரியவருகிறது.

http://www.pathivu.com/news/1265/34//d,view.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வுள்ள தமிழன், போராட்டம் எதிர்பார்க்கும் விளைவுகளை தர வாழ்த்துக்கள்.

அண்மையில் கருணாநிதியோடு சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி திலீபன், அன்னை பூபதி க்கு ஏற்பட்ட நிலைமை மீண்டும் வரக்கூடாது.

உயிரின் விலை நாம் அறியாதது இல்லை.

உண்ணாவிரத போராட்டம் வெற்றிக்கு வழிவகுக்கட்டும்.

அவரது முயற்சி திருவினையாகட்டும்.

புலத்தில் தற்போதும் தம்மை முன்னிலைப்படுத்துவதிலேயே இருக்கின்றார்களேயொழிய போரட்டத்திற்கும் போராளிகளிற்கும் ஏதுவாக செய்ய யாரும் முன்வரப்போவதில்லை. மற்றவர்களையும் செய்ய அனுமதிக்கப்போவதுமில்லை. பெயர் வரவேண்டும் அதைத்தான் விரும்புகின்றார்கள்.

வெட்கத்தை விடடுச்சொன்னால் எங்கடை ஆக்கள் பேசாமல் சாகலாம்

இதுதான் உண்மை

இந்த நேரத்தில் இன்னமும் கூத்தும் கும்மாளமும் போடுறாங்கள்.

படங் காட்டுறாங்கள்

என்ன கொடுமை

மேடைப் பேச்சுகளையும் களியாட்டங்களையும் பார்க்க போன கூட்டத்தில

10 சதவீதமாவது அங்கு நம் உறவுகள் பதறும் போது சேர்ந்து ஒரு உண்ணாவிரத நிகழ்வை நடத்தவில்லை.

பாவம் சில இளைஞர்கள் மட்டும் புலத்தில் உண்ணாவிரதமிருந்ததோடு சரி.

வெல்லுற பக்கத்துக்கு சாயிற கூட்டம் நம்ம கூட்டம்.

ஏசு நாதரை காட்டிக் கொடுத்தது யூதாஸ்தான்

ஆனால் ஏசுவையே தெரியாதென்றவர்கள் ஏனைய சீடர்கள்

அதுமாதிரி ஒரு நிலமை வரும் போல இருக்கு....

இந்திய தமிழனையும் டில்லி இந்தியனாக வித்தியாசம் தெரியாது திட்டித் தீர்த்த தமிழர்கள்

நாக்கை பிடிக்கிக் கொண்டு சாகவேண்டும்.

அவன் எமக்காக உண்ணாவிரதம் இருந்து சாகத் துணிகிறான்.

அன்றும் தீயிட்டு தன்னைத் தானே மாய்த்துக் கொண்டான்.

கூட்டணிக்காரர்கள் தம்மைக் காக்க இந்தியா வந்துட்டாங்களாம்.

இனி 1983ல் வந்தது போல தங்கினாலும் தங்கிடுவாங்க.

அகப்பட்டுக் கொண்ட அப்பாவி தமிழர்களும்

நமக்கு ஆதரவான தமிழ்நாட்டு தமிழர்களும் சாகப்போறாங்கள்.

நாங்க பார்த்து ரசிக்கப் போறம்.

இல்லையென்றால் இணையத்தில மட்டும் போராட்டம் நடத்தப் போறம்.

பொய்யான தகவல்களை வழங்கி ஆக்களை ஏமாத்தின ஏமாத்துற இணைய சுத்துமாத்துகள் இல்லாமல் போய்

உண்மைகளை உலகுக்கு தெரிவித்து அபயம் தேட வேண்டிய தருணம் இது.

பலமுள்ளவன் தப்பிடுவான். பாவம் அந்த அப்பாவி மக்கள். மனதை வருடும் உண்மை இவை.

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் " தியாக தீபம் திலீபன் அவ்ரகளையும், 21 ஆண்டுகளின் முன் அன்னை பூபதித் தாய் அவர்களையும் அகிம்சை துடிதுடிக்கக் கொன்று போட்டதேயன்றி வேறெதுவும் நடந்துவிடவில்லையென்பதே யதார்த்தமாகும். அதேபோல் யாழ் குடாநாடு இடம்பெயர்ந்தபோது தன்மான உணர்வு கொண்ட இளைஞனான அப்துல் ரகூப் அவர்கள் தனக்குத் தானே தீமூட்டிய போது , ஒப்புக்காகவாவது எதையும் செய்யாத இந்திய அரசு உங்களது உயிரையா, அதுவும் ஈழத்தமிழருக்காகவா, என்று ஏளனமாக்கிக் கொன்றுவிடும். இவர்கள் மகாத்மா காந்தியை தமிழீழத்திலே கொன்று புதைத்துவிட்டார்கள். இப்போது தமிழினத்தைப் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவளவு நயவஞ்சகமான அரசொன்று உலகிலே இருக்கிறதே என்று எண்ணுவதைத் தவிர வேறேதுமில்லை. எனவே மதிப்பிற்குரிய திரு தொல். திருமாவளவன் அவர்களே நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியளிக்கட்டும். அல்லது ஆயிரமாயரம் மாவீரர்களுடன் நீங்களும் ......

இப்படியானதொரு சிந்தனையே எநதத் தமிழனுக்கும், அதாவது மானமுள்ள தமிழனுக்கு வரும்.

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.