Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமா உண்ணாவிரதம்: பல இடங்களில் வன்முறை, பஸ்கள் எரிப்பு-உடைப்பு

Featured Replies

திருமா உண்ணாவிரதம்: பல இடங்களில் வன்முறை, பஸ்கள் எரிப்பு-உடைப்பு

விடு தலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் தமிழகத்தி்ல் பல்வேறு மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொடர் உண்ணாவிரம் இருந்து வருகிறார்.

சென்னை மறைமலை நகரில் உண்ணாவிரதம் இருந்து வரும் திருமாவளவனுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் அங்கு கூடியுள்ளனர்.இதற்கிடையே மதுரை, கடலூர், சேலம், புதுச்சேரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

மதுரை புறநகர் பகுதியில் 3 அரசு பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டது. மதுரையில் இருந்து மாத்தூர் சென்ற அரசு டவுன் பஸ் மீது குருத்தூர்பட்டி என்ற இடத்தில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பஸ் தீ பிடித்துக் கொண்டது. பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர். அலங்காநல்லூரில் இருந்து அழகர்கோவில் சென்ற பஸ்சை சத்திரப்பட்டி அருகே சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். இதில் பஸ் முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. கும்பல் பஸ்சை மறித்ததுமே பயணிகள் இறங்கிவிட்டதால் உயி்ர்ச் சேதம் ஏற்படவில்லை.

மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து அலங்காநல்லூருக்கு நேறறு இரவு டவுன் பஸ் போய்க்கொண்டிருந்தது. அப்போது, மாலப்பட்டி என்ற இடத்தில் பஸ்சை மறித்த ஒரு கோஷ்டியினர், பயணிகளை கட்டாயப்படுத்தி கீழே இறக்கினர். பின்னர் பஸ்சுக்கு தீவைத்து விட்டு தப்பினர். அதே போல மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு ஆங்காங்கே அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. அண்ணாநகர், செல்லூர், ஒத்தக்கடை, கோரிப்பாளையம், செக்கானூரணி, கே.புளியங்குளம், அவனியாபுரம் ஆகிய இடங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட பஸ்கள் கல் வீச்சில் சேதமடைந்தன.

பழனியில் இருந்து மதுரைவந்த அரசு பஸ்சை சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே நேற்றிரவு ஒரு கும்பல் வழிமறித்து கல்வீசி தாக்கியது. பின்னர் பயணிகளை இறங்கச் சொல்லிவிட்டு அதன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பஸ்சின் இருக்கைகள் எரிந்து நாசமாயின. இதனால் மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேர பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று காலையில் மீண்டும் பஸ்கள் ஓடத் தொடங்கின.

இந் நிலையில் இன்று காலையும் சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பண்ருட்டி மற்றும் கடலூர் பகுதிகளில் 18 பஸ்கள் கல் வீச்சில் சேதமடைந்தன. காராமணி குப்பம் அருகே பஸ் மீது கல்வீசப்பட்டதில் அந்த பஸ்சில் பயணம் செய்த சுகுணா என்ற கர்ப்பிணி காயமடைந்தார்.

பண்ருட்டியில் இருந்து கடலூர் சென்ற அரசு டவுன் பஸ், கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே வந்தபோது ஒரு கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பஸ்சின் பின் பக்க டயர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையடுத்து டிரைவரும், கண்டக்டரும் பயணிகளை கீழே இறங்குமாறு கூறி இறக்கி விட்னர்.

இதையடுத்து அக்கும்பல் பஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது. இந்த சம்பவங்களையடுத்து கடலூரில் நேற்றிரவு 10 மணிக்கு மேல் பெருமபாலான பஸ்கள் நிறுத்தப்பட்டன. பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் 2வது நாளாக பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் உடைப்பு தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதே போல மேட்டூரை அடுத்த கொளத்தூரில் நேற்று மாலை அரசு பஸ் உடைத்து நொறுக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. அரூரில் இருந்து ஊத்தங்கரை சென்ற தனியார் பஸ் மீது தீர்த்தமலை அருகே சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

புதுவையில் இருந்து சென்னை புறப்பட்ட தமிழக அரசு பஸ்சை புதுவையில் அண்ணாசிலை அருகே சிலர் மறித்தனர். இதையடுத்து டிரைவர் மாற்றுப்பாதையில் பஸ்சை ஓட்டினார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் பஸ் மீது கல்வீசியும், இரும்பு பைப்களாலும் தாக்கி உடைத்தனர்.

சென்னையில் பெரியார் நகரில் இருந்து பிராட்வேக்கு நேற்று இரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் நடராஜ் தியேட்டர் எதிரே பஸ்ஸை வழி மறித்து சிலர் தாக்கினர். இதில் பஸ்சின் பின் புற கண்ணாடி உடைந்தது. இதற்கிடையே கடலூர் மாவட்ட பஸ்களில் ”உண்ணாவிரதம் இருக்கும் திருமாவளவனை காப்பாற்று” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நன்றி: தட்ஸ் இந்தியா (17.01.2009)

  • கருத்துக்கள உறவுகள்

விதைத்தவினையை இந்தியா அறுவடை செய்யும் நேரம் ஆரம்பமாகிறதா....?????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை : சென்னை மறைமலைநகரில் 3வது நாளாகத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

இலங்கையில் நடைபெற்றுவரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, தொல்.திருமாவளவன் இன்று 3வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழு ஒன்று பரிசோதனை மேற்கொண்டது. அதில் ரத்த அழுத்தம் குறைவாக இருப்பது தெரியவந்தது. தொல்.திருமாவளவன் மிகவும் சோர்வாகக் காணப்படுவதாகவும், அவருக்கு 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை நடைபெற்றுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, திருமாவளவன் கைது செய்யப்பட்டதாக மதுரையில் இன்று வதந்தி பரவியதை அடுத்து, அவரது கட்சியினர் மீண்டும் வன்முறையில் ஈடுபட்டதால், அங்கு பதற்றம் நிலவியது.

நன்றி: குமுதம் இந்தியா (17.01.2009)

விதைத்தவினையை இந்தியா அறுவடை செய்யும் நேரம் ஆரம்பமாகிறதா....?????????

ஓம் ஓம் விடுதலைச் சிறுத்தைகள் சுத்தி வளைச்சு இந்தியாவுக்கு கும்மாங்குத்து குத்தபோகினம். புலிகள் மிச்சத்துக்கு BMP1 ஆலை விளாசப் போகினம் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் ஓம் விடுதலைச் சிறுத்தைகள் சுத்தி வளைச்சு இந்தியாவுக்கு கும்மாங்குத்து குத்தபோகினம். புலிகள் மிச்சத்துக்கு BMP1 ஆலை விளாசப் போகினம் :lol:

தமிழ் நாட்டில் சுனாமி எழும்பும் போலதான் இருக்கு :D:( :(

உண்ணாவிரதம் இருப்பதத குழப்புவதுக்கு காங்க்ராஸுக்கு காரணம் தேவை தானே அதுக்கு இவர்களாகவே வழிமைத்து கொடுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேறு ஒன்றும் செய்யமுடியாது மத்திய அரசு அலுவலகங்களை முடக்குவது ஒன்றே முடிந்த காரியம்.

உண்ணாவிரதமிருக்கும் திருமாவளவன் உயிருடன் வாழவிடவேண்டும்... தற்போதைய இலங்கையுடன் சேர்ந்த சதி செய்யும் மலையாளிகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்திய கொள்கைகளின் படி தமிழகத்தில் என்ன நடந்தாலும் யார் யார் இறந்தாலும்கவலையில்லை புலிகள் அழிந்து இலங்கை இராணுவம் தமிழர்பகுதிமுழுவதும் கைப்பற்ற வேண்டும்..

இதற்கேற்ற வேலைகள் அரங்கு ஏற்றப்படுகின்றன..

தமிழகமக்கள் பாதிக்கப்படாத போரட்டங்கள் கொண்டு நடத்தப்படல் வேண்டும், மத்தியரசின் நடவடிக்கைகளில் மக்களிற்கு விழிப்பு உணர்ச்சி ஏற்படுத்தல் மூலம் அகிம்சை முறையில் எதிர்வரும் தேர்தலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி தமிழக தமிழ்மக்களில் உண்மையான ஈடுபாடு உள்ள கட்சியை பலமாக்குதல் மூலம் மத்தியில் மலையாளிகள், தமிழருக்கு எதிரான கொள்கை உடையவர்களை அகற்ற முடியும்.. எனவே தமிழக மக்கள் மிகத்தெளிவாக ஒற்றுமையாக செயல் படவேண்டிய நேரம்... உணர்ச்சிகளை விட அறிவிற்கு வேலை கொடுக்க வேண்டும்.. தமிழக மீனவர்கள் 600பேருக்கு மேல் கொலை செயப்பட்டும் வேடிக்கை பார்க்கும் மத்தியரசு.. இந்த உதாரணம் ஒன்றே போதும்... இலஙையரசும் நன்றாக மத்திய்ல் ஊடுருவியுள்ளது.. தமிழருக்கு எதிராக செயல்படுபவர்களை கையில் போட்டுள்ளது.. உண்ணவிரதம் போரட்டங்கள் எல்லாம் மக்கள் பாதிக்கதவரையில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் ஆனால் மத்தியரசில் கல்லில் நார் உரிப்பது போல்தான்..

சுதந்திர போர் என்பது போய் இண்டைக்கு போர் வேண்டாம் நாயை பிடியுங்கோ நிலைமைக்குள் திட்டமிட்டு மக்களை கொண்டு சென்று கொண்டு இருக்கிறார்கள் சிலர்... இது அப்பட்டமான நயவஞ்சகம்...

பொது மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்பதுதான் இண்றைய வேண்டுகோளும் தேவையும்... வேண்டு கோள்கள் இலங்கை அரசால் ஏற்று கொள்ள பட மாட்டாது என்பதுதான் உண்மை... அதன் மூலம் இலங்கை அரசை தமிழ் மக்கள் விரோத அரசாக அடையாளப்படுத்துங்கள் என்பதுதான் காலத்தின் தேவை...

புலிகளுடன் போரை நிறுத்துங்கள் எனும் வேண்டு கோள்களும் கூட மக்களின் அவலம் நீக்க பட வேண்டும் எனும் அர்த்ததில் தோய்ந்ததே தவிர புலிகள் பலவீன பட்டு போய் விட்டார்கள் அவர்களால் முடியாது நிறுத்துங்கள் என்பதாக இல்லை...

புலிகள் பலவீனர்களாக ஒரு போர் நிறுத்தம் வந்தாலும் அது நிரந்தரமானதாகவும் நியாயமாகவும், உண்மையான தீர்வை தருவதாகவும் அமையாது எனும் உண்மையை சில மர மண்டைகள் புரிந்து கொள்ள வேண்டும்...

இதை சிலர் திசை திருப்பி புலிகளின் போர் வடிவங்களை கோவலப்படுத்துதல் கண்டிக்க பட வேண்டியது... முதுகெலும்பு உள்ள எல்லா தமிழனுக்கும் புரிய வேண்டியது...

உண்ணாவிரதம் இருப்பதத குழப்புவதுக்கு காங்க்ராஸுக்கு காரணம் தேவை தானே அதுக்கு இவர்களாகவே வழிமைத்து கொடுக்கிறார்கள்.

உண்ணா விரதம் அமைதியான முறையில் ஆனால் உணர்வு பூர்வமாக ஈழத் தமிழனின் உரிமைக்கு கைகொடுக்கும் போராட்டமாக அமையாதவிடத்து, இது வெறும் தீவிரவாதமாக முத்திரை குத்தப் பட்டு செயலிழக்க வைக்கப் படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து அலங்காநல்லூருக்கு நேறறு இரவு டவுன் பஸ் போய்க்கொண்டிருந்தது. அப்போது, மாலப்பட்டி என்ற இடத்தில் பஸ்சை மறித்த ஒரு கோஷ்டியினர், பயணிகளை கட்டாயப்படுத்தி கீழே இறக்கினர். பின்னர் பஸ்சுக்கு தீவைத்து விட்டு தப்பினர். அதே போல மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு ஆங்காங்கே அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. அண்ணாநகர், செல்லூர், ஒத்தக்கடை, கோரிப்பாளையம், செக்கானூரணி, கே.புளியங்குளம், அவனியாபுரம் ஆகிய இடங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட பஸ்கள் கல் வீச்சில் சேதமடைந்தன.

பழனியில் இருந்து மதுரைவந்த அரசு பஸ்சை சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே நேற்றிரவு ஒரு கும்பல் வழிமறித்து கல்வீசி தாக்கியது. பின்னர் பயணிகளை இறங்கச் சொல்லிவிட்டு அதன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பஸ்சின் இருக்கைகள் எரிந்து நாசமாயின. இதனால் மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேர பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று காலையில் மீண்டும் பஸ்கள் ஓடத் தொடங்கின.

இந் நிலையில் இன்று காலையும் சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பண்ருட்டி மற்றும் கடலூர் பகுதிகளில் 18 பஸ்கள் கல் வீச்சில் சேதமடைந்தன. காராமணி குப்பம் அருகே பஸ் மீது கல்வீசப்பட்டதில் அந்த பஸ்சில் பயணம் செய்த சுகுணா என்ற கர்ப்பிணி காயமடைந்தார்.

இப்படியான செய்கைகளை புலனாய்வுத்துறையே செய்து , மக்களுக்கு சிரமத்தை கொடுத்து , திருமாவளவன் அவர்களின் உண்ணாவிரதத்தை திசை திருப்ப முனையலாம் .

இப்படியான செய்கைகளை புலனாய்வுத்துறையே செய்து , மக்களுக்கு சிரமத்தை கொடுத்து , திருமாவளவன் அவர்களின் உண்ணாவிரதத்தை திசை திருப்ப முனையலாம் .

எடுத்ததற்கெல்லாம் புலனாய்வுத்துறையிலேயே பழியைப் போட்டு விட முடியாது. பல இணையத்தளங்களில் வந்த செய்திகளில் திருமாவளவனின் கட்சியினரே வன்முறையில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். அது உண்மையாயின் திருமாவளனுக்குத் தான் அவப்பெயரை உண்டாக்கும் என்பதை அவரது கட்சித் தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் இப்படியான வன்முறைகள் இலங்கைத் தமிழர்களுக்காக ஆதரவு தரும் தமிழ் நாட்டு மக்களின் மனநிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்திவிடும்.

...புலிகளுடன் போரை நிறுத்துங்கள் எனும் வேண்டு கோள்களும் கூட மக்களின் அவலம் நீக்க பட வேண்டும் எனும் அர்த்ததில் தோய்ந்ததே தவிர புலிகள் பலவீன பட்டு போய் விட்டார்கள் அவர்களால் முடியாது நிறுத்துங்கள் என்பதாக இல்லை...

புலிகள் பலவீனர்களாக ஒரு போர் நிறுத்தம் வந்தாலும் அது நிரந்தரமானதாகவும் நியாயமாகவும், உண்மையான தீர்வை தருவதாகவும் அமையாது...

இந்த நிலை திடீரெனத் தோன்றியதல்ல, இந்த மக்கள் இடம்பெயர்வதொன்றும் புதியதுமல்ல. இராணுவம் கிழக்கை முற்றாக ஆக்கிரமித்து மன்னாரில் போருக்கான முஸ்தீபுகளில் ஈடுபடும் போதே இதற்கான அத்திவாரம் இடப் பட்டு விட்டது.

இராணுவம் அடைந்த சில வெற்றிகளையும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடனான அதனது இராணுவ பலத்தையும் மதிப்பிட்டு, சில சர்வதேச நிறுவனங்கள் ஏற்கனவே இப்போது ஏற்பட்டிருக்கும் மனித அவலம் குறித்து எச்சரித்திருந்தனர் (சில வேளை அவர்கள் வேறு மதிப்பீடுகளுடன் இந்த எச்சரிக்கையை செய்திருக்கலாம்)

இந்த மனித அவலம் தொடர்பாக யாழ் களத்திலும் சிலர் தமது முன்னனுமானங்களை செய்திருந்தனர். புலிகள் முற்றாக நிலப் பகுதிகளை இழந்தாலும் தொடர்ந்து போராட்டத்தை ஆதரிக்க நாம் தயாரா? என்ற வகையில் கூட விவாதம் நடந்தது.

இப்போது போர்நிறுத்தம் பற்றி முழக்குபவர்கள் மடு, விடத்தல் தீவு, நாச்சிக்குடா பின்னர் பூநகரி என்று விழுந்த போது என்ன புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

இறுதிப் போர்

உள்ளே விட்டடிக்கும் தந்திரம்

தேள் வடிவ வியூகம்

புலிகள் கிழித்த கோடு இன்னும் இராணுவத்தால் அடையப் படவில்லை. முட்டினா இருக்கு விளையாட்டு

ஊள்ளே இழுத்து அள்ளிச் செல்லும் சுனாமி

கிளிநொச்சி பாதுகாக்கப் பட வேண்டுமாயின் கிளிநொச்சியைச் சுற்றி 'பண்ட்' அமைத்து மட்டும் சாதித்து விட முடியாது. இது புலிகளுக்கும் நன்கு தெரிந்த விடயம் தான். பூநகரி விழுந்த போது கிளிநொச்சியின் பாதுகாப்பு கேள்விக்குள்ளானது. அப்போதாவது இந்த மனித அவலம் உணரப் பட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான வன்முறைகளை இந்திய மத்திய அரசும் இந்திய உளவுப் பிரிவும் தூண்டிவிட்டு.. திருமாவின் உண்ணாவிரதத்தை, வன்முறைகளைக் காட்டி தமிழக அரசைக் கொண்டு அதிகாரபலத்தால் அடக்கிவிடவே முனைவர். எனவே தமிழக மக்களும் விடுதலைச் சிறுத்தைகளும் பொறுமை காத்து.. அவர்களின் தலைவரின் உயரிய எண்ணம் அகிம்சை முறையில் ஈடேற ஒத்துழைப்பதே நன்று..! தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கச் செய்வது அவர்களுக்கு ஈழத்தமிழர் மீது வெறுப்பை ஊட்டுவதாகவும் அமைந்துவிடும்..! :D

தமிழகத்தில் பொதுமக்கள் உடைமைகள் மற்றும் அரச உடமைகளுக்கு சேதம் விளைவிப்பது தமிழீழ அதரவாக அமையாது.

அது நிச்சயம் எமக்கு ஆதரவாக இருக்கிற மக்களை ஒடுக்கவே வழியமைக்கும்.

இது கவனமாக கையாள வேண்டியதொன்று. இதனால் டில்லி மகிழவே செய்யும்.

தமிழக மக்களின் குரலை கணக்கெடுக்காத டில்லி அரசு.

நிச்சயம் இதை எமக்காக பேசுவோரையும் ஆதரவாக இருப்போரையும் சிறையிட்டு ஒடுக்க முயலும்.

எனவே இது போன்ற செயல்கள் எமது ஆதரவுகளை பலவீனமடையச் செய்யும். கவனம்.

இந்த நிலை திடீரெனத் தோன்றியதல்ல, இந்த மக்கள் இடம்பெயர்வதொன்றும் புதியதுமல்ல. இராணுவம் கிழக்கை முற்றாக ஆக்கிரமித்து மன்னாரில் போருக்கான முஸ்தீபுகளில் ஈடுபடும் போதே இதற்கான அத்திவாரம் இடப் பட்டு விட்டது.

இராணுவம் அடைந்த சில வெற்றிகளையும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடனான அதனது இராணுவ பலத்தையும் மதிப்பிட்டு, சில சர்வதேச நிறுவனங்கள் ஏற்கனவே இப்போது ஏற்பட்டிருக்கும் மனித அவலம் குறித்து எச்சரித்திருந்தனர் (சில வேளை அவர்கள் வேறு மதிப்பீடுகளுடன் இந்த எச்சரிக்கையை செய்திருக்கலாம்)

இந்த மனித அவலம் தொடர்பாக யாழ் களத்திலும் சிலர் தமது முன்னனுமானங்களை செய்திருந்தனர். புலிகள் முற்றாக நிலப் பகுதிகளை இழந்தாலும் தொடர்ந்து போராட்டத்தை ஆதரிக்க நாம் தயாரா? என்ற வகையில் கூட விவாதம் நடந்தது.

இப்போது போர்நிறுத்தம் பற்றி முழக்குபவர்கள் மடு, விடத்தல் தீவு, நாச்சிக்குடா பின்னர் பூநகரி என்று விழுந்த போது என்ன புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

இறுதிப் போர்

உள்ளே விட்டடிக்கும் தந்திரம்

தேள் வடிவ வியூகம்

புலிகள் கிழித்த கோடு இன்னும் இராணுவத்தால் அடையப் படவில்லை. முட்டினா இருக்கு விளையாட்டு

ஊள்ளே இழுத்து அள்ளிச் செல்லும் சுனாமி

கிளிநொச்சி பாதுகாக்கப் பட வேண்டுமாயின் கிளிநொச்சியைச் சுற்றி 'பண்ட்' அமைத்து மட்டும் சாதித்து விட முடியாது. இது புலிகளுக்கும் நன்கு தெரிந்த விடயம் தான். பூநகரி விழுந்த போது கிளிநொச்சியின் பாதுகாப்பு கேள்விக்குள்ளானது. அப்போதாவது இந்த மனித அவலம் உணரப் பட்டதா?

இது எல்லாம் நடந்தது புலிகளின் பலவீனத்தால் எண்று நிறுவ நினைக்கிறீர்களா...???? இல்லை யூரியுப்பில் போர்கள காட்ச்சிகளை இணைக்காது இருந்தால் ஏதாவது நாடு ஓடி வந்து அங்கீ கரித்து இருக்கும் எண்று நினைக்கிறீர்களா...??

மனித அவலத்தை புலிகளோ இல்லை தமிழ் மக்களோ விரும்பி எதிர் நோக்க இல்லை... இராணுவ பலப்பிரயோகத்தின் தன்மைக்கு ஏற்ப இண்றைய நிலைக்கு சிறந்த முடிவை எடுக்க வேண்டியது புலிகளின் பணி.. அதுக்கு ஏற்ப நகர வேண்டியதுதான் பிரச்சாரப்படுத்தல்... தங்களின் நோக்கம் என்ன என்பதை சொல்லி அதன் பாதையில் போரை நடத்துவது அல்ல புலிகளின் பாணி... ஆனாலும் ஒரு வகை பிராச்சார படுத்துகிறார்கள்...

நாளை வன்னிக்குள் இருக்கும் மக்கள் எல்லாம் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரலாம்.. அப்போதும் அவலங்கள் நிகழும்.. தேர்தல்கள் நடக்கும்... சிறீலங்க அரசின் நிழல் அரசு கூட உருவாகும்... அப்போதும் போராட்டம் தொடரும்... அப்போதும் புலிகள் பலமாக தான் இருப்பார்கள்... இருக்க வேண்டும்... அது மட்டும்தான் தீர்வை நோக்கி எல்லாரையும் சிந்திக்க தூண்டும்...

மற்றும் படி போர் நிலபர படங்கள் வீடியோகளை வெளியிடாது விட்டு, அதை பார்த்து தமிழ் மக்கள் இராணுவத்துக்கு( அடக்கு முறை இராணுவம்.?) ஏற்படும் அழிவில் மகிழவில்லை எனும் செய்தி சர்வதேச அளவில் அவர்களுக்கு ஒரு செய்தியை சொல்லும்... அந்த செய்தி என்ன என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் ஓம் விடுதலைச் சிறுத்தைகள் சுத்தி வளைச்சு இந்தியாவுக்கு கும்மாங்குத்து குத்தபோகினம். புலிகள் மிச்சத்துக்கு BMP1 ஆலை விளாசப் போகினம் :)

இப்படி தண்ணிக்கு பின்னால கருத்தெழுத வந்தால் வாசகர்களுக்கு எரிச்சல்தான் மிச்சமாகும்.

இது எல்லாம் நடந்தது புலிகளின் பலவீனத்தால் எண்று நிறுவ நினைக்கிறீர்களா...???? இல்லை யூரியுப்பில் போர்கள காட்ச்சிகளை இணைக்காது இருந்தால் ஏதாவது நாடு ஓடி வந்து அங்கீ கரித்து இருக்கும் எண்று நினைக்கிறீர்களா...??

... தங்களின் நோக்கம் என்ன என்பதை சொல்லி அதன் பாதையில் போரை நடத்துவது அல்ல புலிகளின் பாணி... ஆனாலும் ஒரு வகை பிராச்சார படுத்துகிறார்கள்...

அதுவல்ல நான் சொல்ல வந்த விடயம். இப்போது போர் நிறுத்தம் செய்யப் பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துபவர்கள் அதன் தேவையை திடீரென உணர்ந்தவர்கள் போல் திகைத்து நிற்கின்றனர். ஆனால் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது விஸ்பரூபம் எடுத்து நிற்கிறது. இதை ஆரம்பத்தில் உணர்ந்து கொள்ள பலருக்கும் விருப்பம் இருக்கவில்லை அல்லது 'வெற்றி போதை' அவர்களை உண்மையை நம்ப விடவில்லை. தூக்கம் கலைந்து இவர்கள் பேசும் யதார்த்தம் வெளி உலகால் (சிங்கள தேசம் உட்பட என்பது சொல்லத் தேவையில்லை) ஏளன பார்வையுடனேயே நோக்கப் படுகிறது. இதற்கான பொறுப்பை கற்பனையான வெற்றி போதையூட்டியவர்களே ஏற்க வேண்டும்.

இராணுவ வெற்றிகளை வெளியிடுவதில் அடிப்படையில் தவறு இல்லை. ஆனால் அதற்கு கொடுக்கப் படும் முன்னுரிமை கொடுக்கப் படும் தரம், அது மட்டுமல்லாது அதிலேயே கிறங்கிப் போன பல இரசிகர்கள் தமது கடமையை மறந்து திருப்தி கொள்ளும் மனப் பாங்கு என்பவை சம்பந்தமாகவே விமர்சனம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அவசியமான ஒன்றே. இப்படி நடத்தாவிடின், மத்தியஅரசு கண்டுகொள்ளாமையைத் தான் தொடரும்.

திருமா அவர்கள் மேற்கொள்கின்ற உண்ணாவிரதம், மத்தியஅரசு குறித்தான உண்மை முகத்தினைத் தமிழக மக்களுக்குக் காட்டவே. அது போர் பற்றிய அவாவவில் இருப்பதையும், சிறிலங்கா அரசுக்கு அது உதவிக் கொண்டிருக்கின்றது என்பதையும் வெளிப்படுத்தவே.

மற்றும்படி உடனே மத்தியஅரசு போர்நிறுத்தத்தைக் கொண்டு வந்து தமிழ்மக்களைக் காப்பாற்றும் என்று யாரும் நினைத்திடக் கூடாது.

ஆனால், வரலாற்றில் இக்கண்டுகொள்ளாமை மத்தியஅரசுக்கு சில பாடங்களைப் படிப்பிக்கும்..

Edited by தூயவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.