Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியை மீறியது சிறிலங்கா அரசு; மீண்டும் தமிழர்கள் மீது தாக்குதல்: 21 பேர் படுகொலை; 121 பேர் காயம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று இந்தியாவுக்கு வாக்குறுதி வழங்கி 12 மணிநேரத்துக்குள்ளாகவே தமிழ் மக்கள் 10 பேரை சிங்கள அரசு படுகொலை செய்துள்ளது.

இன்று புதன்கிழமை பிற்பகல் 1:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:30 நிமிடம் வரை இடைவிடாத எறிகணைத் தாக்குதல்கள் நடைபெற்றதாக வன்னி தகல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று இந்தியாவுக்கு வாக்குறுதி வழங்கி 12 மணிநேரத்தில் வன்னிப்பெரு நிலப்பரப்பில் தமிழ் மக்கள் 21 பேர் மகிந்த அரசாங்கத்தின் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தி வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புக்கு சென்று நேற்று செவ்வாய்க்கிழமை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார்.

ஆனால், 12 மணி நேரத்தில் அதுவும் பிரணாப் முகர்ஜி கொழும்பில் இருந்து புதுடில்லிக்கு புறப்பட்டு ஒரு மணி நேரத்தில் வன்னியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்ததாக கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தும் இருந்தார்.

இந்த நிலையிலேயே "மக்கள் பாதுகாப்பு வலய"ப் பகுதிகளான உடையார்கட்டு, மூங்கிலாறு, தேவிபுரம், சுதந்திரபுரம், வல்லிபுனம் ஆகிய பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கி தாக்குதல்கள் மக்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாக அவதானிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவில் உள்ள காந்தி சிறுவர் பராமரிப்பு இல்லம் மீது இன்று புதன்கிழமை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை, உடையார்கட்டு, தேவிபுரம், வல்லிபுனம் பகுதிகளில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் 45 பேர் புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு மருத்துவமனை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தகவல் தருகையில்,

இன்று வரையில் காயமடைந்தவர்களில் 556 பேர் மருத்துவமனையில் தற்போதும் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 200 பேர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா கொண்டு செல்லப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

வன்னியில் உள்ள அமெரிக்க மிசன் திருச்சபையின் முறிகண்டி பங்குத்தந்தை மதகுருவான ஆனந்தராஜாவும் இன்றைய எறிகணைத் தாக்குதலில் காயமடைந்துள்ளார். இவரின் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் விழுந்த எறிகணையினால் காயமடைந்த இவருடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இந்த 3 பேரும் முறிகண்டி திருச்சபையில் கல்வி பயலும் மாணவர்கள் என்று மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

source:www.puthinam.com

கடவுளே.... காலையில் 46 பேர் (ஏற்கனவே காயமடைந்தவர்களில்) பலி என்ற செய்தி, இப்போது 23 பேர் பலி என்கின்ற செய்தி. மொத்தமாக இன்று மட்டும் (இது வரைக்கும் அறிய கிடைத்த எண்ணிக்கையின் படி) 69 பேர் பலி

இந்த எண்ணிக்கை நிச்சயம் தினம் தினம் கூடும்

இந்தியாவும் அனைத்துலகும் கைவிட்டு விட்டனர் என்பது 100% மிக தெளிவாக தெரிந்து போன விடயம்.புலிகள் தாக்கி இராணுவத்தினரை விரட்டியடிப்பதனை தவிர வேறு எந்த வழிகளும் இல்லை.

ஆனால் அதற்கான காலமும் களமும் எல்லை மீறி போய்விட்டதாகவே எண்ணுகின்றேன். நம்பிக்கை வைப்பதற்கான எந்த ஒரு சான்றையும் காண்பதற்கில்லை

ஏற்கனவே 'பயங்கரவாதிகளின்' தீவிர ஆதரவாளர்கள் என்று அநியாயமாய் முத்திரை குத்தப் பட்டுள்ள இம் மக்களின் பகுதியிற்குள்ளும் இராணுவம் புகும் போது ஏற்படப் போகும் பாரிய அனர்த்தம் பெரும் அவலமாக மாறப் போகின்றது.

அதனையும் நாம் பார்து கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுவதை தவிர வேறு வழியில்லை.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று இந்தியா வெளியுறவு அமைச்சருக்கு வாக்குறுதி வழங்கி 12 மணி நேரத்துக்குள்ளாகவே தமிழ் பொதுமக்கள் 23 பேரை சிங்கள அரசு எறிகணை வீசி படுகொலை செய்துள்ளது. மேலும் 121 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று புதன்கிழமை பிற்பகல் 1:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:30 நிமிடம் வரை இடைவிடாத எறிகணைத் தாக்குதல்கள் நடைபெற்றதாக வன்னி தகல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புக்கு சென்று நேற்று செவ்வாய்க்கிழமை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தபோது ஜனாதிபதி இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார். இது தொடர்பாக பிரணாப் முகர்ஜி கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தும் இருந்தார்.

ஆனால், 12 மணி நேரத்தில் அதுவும் பிரணாப் முகர்ஜி கொழும்பில் இருந்து புதுடில்லிக்கு புறப்பட்டு ஒரு மணி நேரத்தில் வன்னியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலேயே "மக்கள் பாதுகாப்பு வலய"ப் பகுதிகளான உடையார்கட்டு, மூங்கிலாறு, தேவிபுரம், சுதந்திரபுரம், வல்லிபுனம் ஆகிய பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கி தாக்குதல்கள் மக்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாக அவதானிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவில் பாரதிபுரம் உள்ள காந்தி சிறுவர் பராமரிப்பு இல்லம் மீது இன்று புதன்கிழமை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மற்றும் சுதந்திரபுரம் பிரதேசத்தில் உள்ள தென்இந்திய திருச்சபை (அமெரிக்கன் மிஸன்) தேவாலயத்தை இலக்குவைத்து தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர். இதன்போது மதகுருவான பங்குத்தந்தை ஆனந்தராசாவும் மேலும் மூன்று பேரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 2004 ம் ஆண்டு சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட் சிறுவர்களைப் பராமரிக்கும் செந்தளிர் இல்லம் மற்றும் வயோதிப பெண்கள் புனர்வாழ்வு அபிவிருத்தி நிலையம் என்பனவற்றை நோக்கியும் ஆடலறி தாக்குதலை சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, உடையார்கட்டு, தேவிபுரம், வள்ளிபுனம் பகுதிகளில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் 45 பேர் புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு மருத்துவமனை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

அத்துடன் இன்று வரையில் காயமடைந்தவர்களில் 556 பேர் மருத்துவமனையில் தற்போதும் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 200 பேர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா கொண்டு செல்லப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இந்தியாவிற்கு வாக்கு மூலம் கொடுத்ததா? இணையத்திற்கு வர கொஞ்சம் பிந்தினால் இதெல்லாம் நடக்குமா?

அப்படி சொல்ல சொல்லி கொடுத்ததே இந்தியாதானே...... தமிழ் மக்கள் மீது பிரணப்முர்ஜிகோவிற்கு உள்ள கருணையை நினைத்தாலே கண்கலங்குது கட்டி தழுவிட வேண்டுமென மனம் துடிக்குது. புலிகள் மீது பழி போட சொந்தநாட்டு தமிழக மீனவரையே சிங்கள காடையருடன் கூடி கொன்றொளித்த வாயா இதெல்லாம் பேசுது? கேட்பவன் கேனையனாக இருந்தால் எருமை மாடும் ஏறோபிளேன் ஓட்டுமாம். எமை அந்த அளவிற்கு நினைத்துவிட்டார்கள்....... எத்தனை துயர்வரினும் தர்மம் தலைசாய மட்டாது. இதை காலம் அவர்களுக்கு நின்று சொல்லட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.புலிகள் தாக்கி இராணுவத்தினரை விரட்டியடிப்பதனை தவிர வேறு எந்த வழிகளும் இல்லை.

ஆனால் அதற்கான காலமும் களமும் எல்லை மீறி போய்விட்டதாகவே எண்ணுகின்றேன். நம்பிக்கை வைப்பதற்கான எந்த ஒரு சான்றையும் காண்பதற்கில்லை

கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலிகள்

களம் கண்டஞ்சியதுண்டா!

எங்கள் நிலத்தில் புலிகள் எதிரியை அழித்த

நிகழ்வும் ஒன்றா இரண்டா!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியது சிறிலங்கா என்று வரவேண்டும். இப்படுகொலைக்கு உதவி புரிவதே காந்தியம் என்று பொய் பேசும் கிந்தியா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் மக்களின் அளவு கடந்த நம்பிக்கைகக்கு எப்பிடி பாராட்டுவது என்று தெரியவில்லை. நாங்கள் தூதுவராலயங்கள் முன் நின்று ஆர்பாட்டம் செய்கின்றோம் போராடுகின்றோம், கவனயீர்ப்பு செய்கின்றோம். அதற்க்கு காரணம் அவர்கள் எம்மீது இரக்கம் காட்டி போரா உடனே நிறுத்தி, சமாதானத்தை கொண்டு வந்து தமிழீழத்தை அங்கீகரப்பார்கள் என்ற நம்பிக்கையில் அல்ல!

மாறாக அவர்களுக்கு நமக்கும் ஒரு பிரச்சினை இருக்கின்றது என்பதையும் அங்கே தாயகத்தில் இருக்கும் மக்கள், போராளிகள் தனித்தில்லை என்பதையும் எடுத்துரைக்கவே!

நாங்கள் மட்டுமே எமது மக்களின் அவலத்தை பற்றி அக்கறைப்பட முடியும். எங்களால் மட்டுமே இதன்கான விடையை எழுத முடியும். எம்மால் மட்டுமே எம் மக்களின் அவலத்தை போக்க முடியும்.

அதற்க்கு நாம் அனைவரும் ஒன்றாக ஓரணியில் திரள வேண்டும்.!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ மக்கள் அனைவரும் உலகத்தினரால் பாதுகாக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை போய்விட்டது. சிங்கள அரசிடம் சென்றால் அவன், இளவயதினரைக் கொல்கின்றான். பெண்களை இரகசியமாக வல்லுறவு செய்கின்றான்.

சுயமான பாதுகாப்பை ஒவ்வொரு தமிழனும் ஏற்படுத்த வேண்டும். செல், அல்லது குண்டுமழை பொழியும்Nபுhது அதில் ஏற்படும் இரத்தப் போக்கினைக் குறைக்க, ஒவ்வொரு வன்னித் தமிழ்மக்களும் கையில் சாரம், வேட்டி, முதலானவற்றையோ, காயப்பட்டவரைத் தூக்க வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்றுமே புரியவில்லை

இந்தியாவுக்கு யார்???; எப்ப??? எதுக்கு ??? ஏன்??? .....வாக்குறுதி கொடுத்தவ..........

செய்யிறவனுக்கே இன்னொருவன் எப்படி வாக்குறுதி கொடுக்கிறது

உண்மையில் எமது நிலைமையையும் எமது எதிர்பார்ப்புக்களையும் எமது அபிலாசைகளையும் பார்த்து உலகம் எம்மை மிகவும் கேவலமாக கணக்கிட இப்படியான எம்முடைய நடவடிக்கைகள்தான் காரணம்

எம்மை ஒரு சொல்லோடே கூட பலமாதங்களுக்கு பேக்காட்டமுடியும்......????

உதாரணத்திற்கு பாருங்கோ

கருணாநிதி அவர்களின் அரசியல் பற்றி எமக்கு எல்லோருக்கும் நன்கு தெரியும்?????

ஆனால் ஏதாவது ஒன்றைச்சொல்லியே எத்தனை மாதங்கள் எம்மை காக்க வைத்துவிட்டார்

இன்னும் வைத்தியசாலையால் வந்து ஐயா ஏதாவது....??? கிழப்பார் என்று தவம் கிடக்கின்றோமா இல்லையா???

இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியை மீறியது சிறிலங்கா அரசு; மீண்டும் தமிழர்கள் மீது தாக்குதல்: 21 பேர் படுகொலை; 121 பேர் காயம்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......நல்ல தலைப்பு.......

...... இது ஒரு உண்மைச் சம்பவம் .......

....... இந்தியாவினால் அரங்கேற்றப்பட்ட மாத்தையாவின் சதிக்கால கட்டத்தின் .... பின் ..... வழித்துத் துடைத்துப் பிடிக்கப்பட்டார்கள். அப்போது இச்சதியுடன் தொடர்புடைய மாட்டிய பலரில் சிலர் இந்திய புலனாய்வுத்துறை இராணுவ முக்கியஸ்தகர்கள்.

இந்தப் பிடிபட்ட இந்திய புலாய்வுத்துறை இராணுவ அதிகாரிகள், எமது நாட்டுக்கு வந்தது ராஜீவ் காந்தியின் கொலையின் பின்போ, இல்லை இந்திய அமைத்திபடைக்காலத்திலோ அல்ல!!!!!! அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் 80களில் யாழ் இருந்த போதே வந்து விட்டவர்கள். வியாபார ஸ்தாபனங்களை அமைத்து தமது வேலைகளை(?) நடத்தி வந்தவர்கள்.

இவர்களில் இரு கப்ரன் தர இந்திய அதிகாரி, பருத்துறை தம்பசட்டியில் வியாபார நிலையம் தொடங்கி, வீடு வாசல்கள் வாங்கி இரண்டோ மூன்று கல்யானமும் கட்டியிருந்தவராம்.

இறுதியில் மாத்தையாவுடன் .............

இந்திய சதியின் இன்னொரு ... நிச்சயம் வரலாறு ஒருநாள் கூறும் "அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மரணத்தின் பின்னணியை" .........

இப்படி எம்மீதுள்ள இந்திய காதல் ராஜீவ் மரணத்தின் பின் ஏற்பட்டதல்ல. இவர்களின் சதிகள் தொடங்கியது ராஜிவின் உயிருடனன் இருந்த போதே!!! இன்று ராஜீவ் என்றொரு மாயையுடன் ........ ஈழத்தமிழின அழிப்பை அதே இந்திய வல்லாதிக்கம் ......

ஒன்று மட்டும் உண்மை, ராஜீவ் இறந்ததால் மட்டுமல்ல, உயிருடன் இருந்திருந்தால் கூட எமது அழிவுகள், இந்தியாவினால் தொடர்ந்தே இருந்திருக்கும்!!!!

எமது வாழ்வு அழிந்து போனாலும், ஒரே ஒரு நிம்மதி படிப்பினையை கொடுத்தோம்! அதனை ஒட்டிப் வாழ் நாள் பூராக பெருமைப் படுவோம்!!

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.