Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்கா இராணுவம் தாக்கி மக்கள் பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகோர எறிகணை மற்றும் வெடிகணைத்தாக்குதலில் இருந்து தப்ப இராணுவத்தின் பிரதேசம் நோக்கி நகர்ந்த மக்கள் மீது இராணுவம் கண்டபடி நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 17 பொதுமக்கள் பலியாகி சுமார் 69 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

பொதுமக்கள் மீது பழிதீர்க்கும் தாக்குதலை நடத்திவிட்டு அதைப் புலிகள் மீது சுமத்தி இராணுவம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. இவ்வாறு நேற்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதை.. தற்கொலைத்தாக்குதலில் பொதுமக்கள் இறந்ததாக சிறீலங்கா சிங்கள அரசும் அதன் பயங்கரவாத இராணுவமும் குற்றம்சாட்டி இருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

---------------

17 civilians dead following LTTE fire, 69 injured - SLA

The army have recovered 17 bodies of civilians who were killed while attempting to crossover to government controlled areas under LTTE fire. The number of civilians injured has increased to 69 and two children have been confirmed to be among the dead.

டெயிலிமிரர்.எல்கே

கொலைசெய்துவிட்டு அதன் பழியைப்போடும் சிங்களத்தின் குட்டு வெளிச்சமாகும்.. விரைவில்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொலைசெய்துவிட்டு அதன் பழியைப்போடும் சிங்களத்தின் குட்டு வெளிச்சமாகும்.. விரைவில்...

என்னதான் இனிமேல் வெளிச்சத்துக்கு வந்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லைப்போலை கிடக்கு :huh:

  • கருத்துக்கள உறவுகள்

பொஸ்னியாவில் நிகழ்ந்த இனச்சுத்திகரிப்பை போலவே ஒரு இனச்சுத்திகரிப்பை சிங்களம் தொடங்கிவிட்டது வெள்ளம் வருமுன்னே அணை போடவெண்டும், இனச்சுத்திகரிப்பு நடத்துவதற்கு தடையாக இதுவரை விடுதலை புலிகள் இருந்தார்கள் இப்போது தமிழனுக்கு யாருமில்லை எனெனில் தமிழனின் பலமே அவனை காத்து வந்தது அதில் ஒரு தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது ஈழத்தில் உள்ள தமிழ் மக்கள் முழுமையாக சிங்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் நிலை உருவாகிவிட்டது.

ஒரு தனித்துவமான தேசியமாக இல்லாமல் செய்துவிட்டால் தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரும் என்ற தீர்மானத்துடன் சிங்களம் இயங்குகிறது அதன் அண்மைய நடவடிக்கைகள் கூட அதனை புலப்படுத்துகின்றன.

பொஸ்னியாவில் எவ்வாறு ஆண்களை எல்லாம் அழித்து விட்டு பெண்களை முகாம்களில் வைத்து வன்முறைகளில் ஈடுபட்டதுடன் 3 மாதம் வரை அவர்களை தடுப்பு முகாம்களிலேயே வைத்து 3 மாதத்தின் பின்னர் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையின் பின்னரே விடுதலை செய்தனர் அதன் மூலம் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்ற தன்மையை நீக்கி நீண்ட கால அடிப்படையில் ஒரு போராட்டத்தை ஒடுக்க முயற்சித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் இதனைப்பற்றி எழுதுவது சங்கடமானது அதனால் இதற்கு மேல் எதுவும் கூறவில்லை.

உலகம் இன்று சிங்களம் பக்கமே உள்ளது எமது பலமே எம்மை காக்கும் அதற்கு படைபல ரீதியாக தமிழர் தரப்பு பலம் பெற வேண்டும் அதற்கான பணத்தை இந்தியாவோ வேறு எந்த நாடோ தராதூ நாம் தான் அதற்கான ஏற்பாட்டை செய்யவெண்டும்

சீனாவில் ஆரம்பத்தில் ஆடம்பரத்திருமணம் செய்யும் தம்பதியினரை சிறையில் இட்டனராம் ஆனால் இன்று அந்த நிலையில்லை உலகமே பொருளாதார நெருக்கடியில் தவித்த போது சீனா நிமிர்ந்து நிற்கிறது.

எமது சராசரி திருமணம் ஒன்று 30,000 - 35,000 அமெரிக்க டொலர்களை ஏப்பம் விடுகிறது, அத்துடன் அது முடிந்து விடுகிறதா? அனுமார் வால் போல் ரிசப்சன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அனிவசரி பிறகு பிள்ளைகளின் பிறந்த நாள் எண்டு நீண்டு கொண்டு போகும் இந்த வைபவங்கள் தவிர்க்க முடியாதவையே ஒவ்வொரு வைபவமும் குறைந்தது 3000 டொலர்களையாவது தின்றுவிடும்.

ஊரில் உள்ள உறவுகளுக்காக நாம் உண்ணாவிரதமும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு விட்டு எமது சராசரி வாழ்க்கையை கவனிக்கப்போய் விடுவோம் ஒவ்வொரு நாளும் எமது உடன்பிறப்புகள் மடிகின்றன இருப்பினும் நாம் எமது கொண்ட்டட்டங்களை நிறுத்தினோமா? ஏனெனில் பொராட்டம் நீண்டு செல்லும் இதற்காக எமது சந்தோசங்களை குறைக்கவேண்டுமா? என்ற நியாமான சிந்தனைதான் இதற்கு காரணம்.ஒரு வருடம் எமது பிறந்த நாளை கொண்ட்டாடாவிட்டால் என்ன எல்லோரும் சேர்ந்து வடம் பிடித்து இந்த தேரை இழுத்துவிட்டு எல்லொரும் அடுத்த வருடமே சந்தோசமாகக் கொண்ட்டடுவோம்.

தமிழ் நாட்டில் பிறந்த சகோதரர்கள் தன்னினம் சாதாரணமாக்த்தன்னைப் போல வாழ முடியவில்லை என்று தமது உயிரையே விடும் போது எங்களால் சின்ன சந்தோசத்தை விட முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

படையினரின் புதிய வகைப் படுகொலை: இன்று 17 பேர் சுட்டுக்கொலை

[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2009, 12:58.01 PM GMT +05:30 ]

நேற்று தற்கொலைத் தாக்குதல் எனப் புதிய கதையொன்றைக் கட்டவிழ்த்துவிட்டு, தப்பிவரும் மக்கள் மீது தமது வன்முறைக்கு வழிதேடிக்கொண்டுள்ள சிறீலங்காப் படையினர், இன்று நடத்திய தாக்குதலில் 17 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அகோர எறிகணை மற்றும் வான் தாக்குதலில் இருந்து தப்பி இராணுவத்தின் ஆக்கிரமிப்புப் பிரதேசம் நோக்கி நகர்ந்த மக்கள் மீது சிறிலங்கா இராணுவம் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 17 பொதுமக்கள் பலியாகியுள்ளதுடன், சுமார் 69 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இடம்பெயர்ந்து வந்தவர்கள் மீது படையினர் தாக்குதலை நடத்திவிட்டு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளனர். இதன்போது கொல்லப்பட்ட இரு குழந்தைகள் உட்பட 17 பேரது உடலங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ள படைதரப்பு, 69 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அத்துடன், தற்போது படையினர் வசம் அகப்படுபவர்கள் தரம் பிரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றனர். ஹிட்லிரின் இன அழிப்புக் காலத்தில் கைது செய்யப்பட்ட மக்கள் இவ்வாறே தரம் பிரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டு பல்வேறு விதங்களில் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/view.php?2a26QVR4b...2g2hF2cc4Vj06ae

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனோட சேந்து வாழ நினைக்கிற தமிழ் ஆக்களுக்கு .. இந்த செய்தி ஒரு பாடமாய் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனோட சேந்து வாழ நினைக்கிற தமிழ் ஆக்களுக்கு .. இந்த செய்தி ஒரு பாடமாய் இருக்கும்

சிங்களவனோட சேந்து வாழ ஏலாது

சேர்ந்து போகவேணும்............???

அதாவது சோர்ந்து போகணும்

அப்படியென்றால் சோரம் போகணும் என்று அர்த்தம்...............

அப்ப அடிபணியவேணும் எண்டுறீங்கள்??? ஏன் அதுக்கு சாகலாமே??? தமிழன் மண்டியிட்டு வாழணும் எண்டது விதியில்லை....

Edited by யாழ்நிலவன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அடிபடையவேணும் எண்டுறீங்கள்

அடிபணியவேண்டும் என்கிறீர்களா?

அல்லது அடிபடவேணும் என்கிறீர்களா?

தெளிவில்லை கேள்வியில்.......

அல்லது எழுத்துப்பிழையா????????

இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளே நீங்கள் என்ன செத்த பிணங்களா ?

எத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகள் இருந்தும் என்ன பயன் ?

அவரவர் அரசியல் என்னும் சாக்கடையை விளம்பரப்படுத்தவே உங்களின் தொ(ல்)லைக்காட்சிகள்.

எங்குமே இல்லாத "தொலைக்காட்சிகளிடையிலான யுத்தம்" இந்தியாவில் மட்டும்தான் உள்ளது.

நாள்தோறும் நாலு காசுக்குக்கூட பிரியோசனம் இல்லாத பல நிகழ்ச்சிகளை வழங்கும் அன்பானவர்களே...

உங்களின் தொப்புள்க்கொடி உறவுகளுக்காக தற்போது தமிழகமே திரண்டுள்ளது, ஆனால் நீங்கள் மட்டும் பின்நிற்பது ஏன் ?

நாள்தோறும் உங்கள் அயல் நாட்டிலே உங்கள் உறவுகள் செத்து மடிகிறார்கள், சாவின் விழிம்பிலே நிற்கிறார்கள்.

பச்சிளங் குழந்தைகள் பாசத்தை அறியமுன் பாடைக்கு போகிறார்கள்

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்க ஒரு பாயின்றி, நாள்தோறும் பதுங்கு குழிகளுக்குள் பயத்தோடு அடைந்து கிடக்கிறார்கள்.

கேட்ப்பதற்கு யாரும் இல்லை, நாங்கள் கத்துகிறோம், வீதி வீதியாய் சென்று கெஞ்சுகிறோம், கண்டுகொள்ள யாருமில்லை.

சர்வதேசமே ! சிங்கள அரக்கர்களை தட்டிக்கேட்க வக்கில்லாத தலைவர்களே !

இதுதான் உங்கள் மனித நாகரீகமா ?

அன்பான தொலைக்காட்சிகளே, உங்களுக்கும் கேட்க்கவில்லையா ? இல்லை கேட்டும் செவிடர்களாக நடிக்கறீர்களா ?

அண்மையில் காஸாவில், இஸ்றேல் தாக்குதல் நடத்த, காஸாவில் நடப்பவற்றை அனைத்து அரபு தொலைக்காட்சிகளும்

அதையே, அமை மட்டுமே ஒளிபரப்புச் செய்தன. அது உலகெலாம் சென்றடைந்தது, உரியவர்களை ஈாத்தது.

ஆனால் !!! நீங்கள் என்ன செய்கறீர்கள் ? உங்கள் உறவுகளுக்காக, தமிழ்பேசும் உறவுகளுக்காக என்ன செய்கிறீர்கள் ???

குறைந்த பட்சம் உங்கள் செய்திகளிலாவது "உண்மையை" ஒளிபரப்ப முடியாது என்றால், எதற்காக உங்கள் சேவை ???

வெளிநாட்டு ஊடகங்கள்கூட தயங்காமல் உண்மையை உரைக்கின்றன, உங்களால் மட்டும் முடியாது என்றால் ???

நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது ?

உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.

உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".

உங்களுக்கு "கோஃபி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".

உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".

உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".

உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".

உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".

உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?".

உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி".

உங்களுக்கு "ச ரி ங ம" எங்களுக்கு "சா நீ தமிழா".

உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்".

உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".

உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்".

உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".

உங்களுக்கு "ராணி மஹா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".

அன்பானவர்களே, எம்மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை வெளிக்காட்டுங்கள்.

உண்மைகளைத் தயங்காமல் ஒளிபரப்புங்கள்.

அவர்களை சாவின் வழிம்பில் இருந்து காப்பாற்றுங்கள்.

மத்திய அரசின் நாடகத்தை அம்பலப்படுத்துங்கள்.

உலகத்தின் கவனத்தை எமைநோக்கித் திருப்புங்கள்.

நன்றி.

தாயகன்.

இதை யாழ் இணையம் அனுமதிக்குமா தெரியாது, இருந்தாலும் என் மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன்.

அனுமதித்தால் இதை புதிய தலைப்பில் போடலாமா ?

Edited by தாயகன்

  • கருத்துக்கள உறவுகள்

Tigers deny firing at civilians, accuse SLA, urge for international monitors

Categorically denying reports by the Sri Lankan military officials in Colombo that the Tigers had fired at the fleeing civilians in Vanni, Puthukkudiyiruppu Divisional Political Head of the LTTE, C. Ilamparithy told TamilNet Wednesday that Sri Lanka Army (SLA) commando teams had entered the 'safety zone' in Udaiyaarkaddu and Chuthanthirapuram and had opened fire killing civilians and causing injuries to many in their attempt to forcibly move the civilians into the hands of the SLA. "Sri Lankan military machinery, which has relentlessly killed and maimed thousands of civilians during the past four weeks, is now engaged in a propaganda drive to divert the mounting pressure on the Colombo government by the International Community," Mr. Ilamparithy charged.

"Our political head has repeatedly urged the International Community to act to ensure the safety of the civilians, their access to humanitarian supplies and medical care," said the former LTTE political head of the Jaffna district.

"The 'safety zone' unilaterally announced by the Colombo government has been turned to a killing field by the Sri Lankan military," he said and called on the International Community to act fast to ensure "an internationally guaranteed and protected safety zone for Vanni civilians in the very place where they live."

Ilamparithy was engaged in organising refuges for civilians who were fleeing further into LTTE controlled territory in Puthukkudiyiruppu.

"Colombo is committing the worst crimes of humanity, by killing and maiming hundreds of civilians every day within the 'safety zone', and by indiscriminately bombing medical installations," he said and added that by refusing food and medicine to thousands of people, the Rajapaksa regime was using food and medicine as weapons of war.

"The people of Tamil Nadu and the diaspora Tamils, fully aware of the plight of their brethren, have been exerting pressure on the IC to act before it is too late."

"As pressure is mounting on all fronts, the Colombo government has let lose vicious propaganda," he said.

The International Community must ensure presence of international protection and monitoring authorities to ensure the safety of the civilians, including the wounded patients and their guardians who accompany them, Ilamparithy said.

"The civilians are scared of the reports of torture, harassment and separation of young members of the civilian population from their families."

-TamilNet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.