Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றுப் பொருட்கள்: இனவழிப்பு இலங்கை அரசின் பொருட்களுக்கு மாற்றாக....

Featured Replies

சும்மா இலங்கை பொருட்களை புறக்கணியுங்கள் புறக்கணியுங்கள் என்று சொன்னால் எங்கட சனம் ஒரு மாதிரி முறைத்து பார்க்குது....யானை சோடாவுக்கும், மலிபன் பிஸ்கெட்டுக்கும், அங்கர் பால்மாவுக்கும் பதிலாக என்னத்தை use பண்ணுவது என்று கேள்வி கேட்குது

உண்மையில் இவற்றிற்கு மாற்றீடான பொருட்களை நாம் அறிமுகப்படுத்தும் வரை இவற்றின் நீண்டகால தாக்கம் குறைவாக இருக்கும் என்று நம்புகின்றேன். கொல்லப்படும் மக்களின் அவலங்களை பார்த்து இலங்கை சாமான்களை வாங்காமல் விடும் சனம் கூட நீண்ட காலத்தில் அதனை தொடர முடியாமல் விடலாம்....எனவே அதற்கான மாற்று பொருட்களை அதன் பெயர்களை பரிந்துரைத்தால் (Suggest) என்ன?

என் முதல் வரிசை (list)

1. Anchor Milk powder (அங்கர் பால் மா)

2. Necto soda (Elephant mark): யானை சோடா (குடிச்சு முடிய நாக்கில் சிவப்பு வரவேண்டும்.)

3. Lemon Puff (லெமன் பவ்): மெலனின் பதார்த்தம் கூடியதாய் கண்டறியப் பட்ட இந்த பிசுகோத்துக்கு மாற்றீடு முக்கியம்

4. கட்ட சம்பல் (சிங்களத்தில் கட்டா சம்போல்): இதற்கு மாற்றீடாக நிருவின் சம்பல் உண்டு...ஆனால் உப்பு கொஞ்சம் கூட...வேறு எந்த Brand இனை பயன்படுத்தலாம்?

5. MD Products (இதில் நெல்லிக்காய் சாறில் இருந்து பலாப் பழ பானம், wood apple jam வரைக்கும் அடங்கும்)

தயவு செய்து இதற்கான மாற்றீடு பொருட்களை தரவும்... கெஞ்சி கேட்கின்றேன்.... எமது 'இனவழிப்பு லங்காவின் பொருட்களை புறக்கணி போராட்டத்தில் இதுவும் முக்கிய அம்சம்)

நீங்களும் உங்களுக்கு தேவையான் மாற்றீடுகளை இங்கு தாருங்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள எதுவுமே பால்மா தவிர்த்து வாழ்வின் அத்தியாவசிய பொருட்களாக தெரியவில்லை . நீங்கள் கூறுவது எதோ வாழ்வின் மூலாதான பொருட்களுக்கு மாற்று கேட்பது போல் இல்லது . புறக்கணிப்பு என வரும்போது கொஞ்சம் தியாகம் செய்யும் மனப்பான்மை வேண்டும் . தியாக மனப்பான்மையே இன்றி புறக்கணிப்பு சாத்தியம் கம்மி . உணவே உண்ண வேண்டாம் என சொன்னால்தான் தவறு . உணவில் சிலவற்றை குறைத்து கொள்க என கூறினால் தவறில்லை . மேலும் புறக்கணிப்பவருக்கும் பொருளாதார நன்மையே . எனினும் அடிப்படை செய்முறை தெரிந்த பின் அதற்குரிய மாற்று பொருட்களையும் நான் பின்னர் பட்டியல் இடுகிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்குள்ள ஒரு கடையில் உள்ள விற்பனை பொருட்களில் பெரும்பாலும் இலங்கை மற்றும் இந்திய பொருட்களே இருக்கிறது. அணைத்து இலங்கை பொருட்களுக்கும் இணையான இந்திய பொருட்கள் இருக்கும் என்று நினைக்கிறன்.

http://www.nsrstore.com/index_files/Page500.htm

( இந்த பகுதியில் நம் மக்கள் யாரும் இருந்தால், இலங்கை பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்க்க தக்கபடி பேசிப் பாருங்கள் )

1. Anchor Milk powder (அங்கர் பால் மா)

புலம்பெயர் நாடுகளில் பால் கிடைக்கிறது எதற்கு பால் மா

2. Necto soda (Elephant mark): யானை சோடா (குடிச்சு முடிய நாக்கில் சிவப்பு வரவேண்டும்.)

இது வெறித்தனம் வேண்டுமானால் நாக்கை கடித்தால் சிவப்பு வரும் இதற்கு மாற்றீடாக எத்தனையோ புலத்தில் இருக்கிறது

3. Lemon Puff (லெமன் பவ்): மெலனின் பதார்த்தம் கூடியதாய் கண்டறியப் பட்ட இந்த பிசுகோத்துக்கு மாற்றீடு முக்கியம்

இதுவும் பல இருக்கிறது சில விசுக்கோத்துகளுக்கு புரியாது

4. கட்ட சம்பல் (சிங்களத்தில் கட்டா சம்போல்): இதற்கு மாற்றீடாக நிருவின் சம்பல் உண்டு...ஆனால் உப்பு கொஞ்சம் கூட...வேறு எந்த Brand இனை பயன்படுத்தலாம்?

இதற்கு பச்சை மட்டையால் தான் தரவேண்டும்

5. MD Products (இதில் நெல்லிக்காய் சாறில் இருந்து பலாப் பழ பானம், wood apple jam வரைக்கும் அடங்கும்)

இதை விட சிறந்த தரமான சுத்தமாக நவீன பதன்படுத்தலுடன் தயாரிப்புக்கள் புலம் பெயர்நாடுகளில் இருக்கிறது

இதை விட உங்களுக்கு சுடச் சுட வேண்டுமானல் வவுனியா அகதி முகாமில் சிங்களம் கொடுக்கிறது போனால் தருவார்கள்

1. புலம்பெயர் நாடுகளில் பெரியவர்கள் பாலை உட்கொள்வதே நல்லது. குழந்தைகளுக்கு சிறந்த பால்மா மேற்கத்தைய தயாரிப்புகளே உள்ளது. Anchor, Australia தயாரிப்பு packed by ஸ்ரீலங்கா. நீங்கள் வாங்கும் போது பாவனைக்கு உதவாத பண்டமாகவே மாறி இருக்கலாம்.

2. Necto = Koolkid

3. Lemon puff: try some Arab stores, they have similar biscuts.

4. கட்ட சம்பல், வீட்டில் செயதல் உடல் நலத்துக்கும் நல்லது.

5. MDஐ விட தரமான, உடல் நலத்துக்கும் சிறந்த பொருட்கள் Food basics, Ethnic food section இல் உள்ளது.

மீன், மரக்கறி வகைகளுக்கு ஒரு மாற்றுவழியை நீங்கள் சொல்லுங்களேன்?

Video[old] : Mark & Spencer large cloth factory moved to Sri Lanka

A former British textile worker has travelled to Sri Lanka to see what happened to the job she lost.

http://news.bbc.co.uk/player/nol/newsid_64...w=nb&mp=rm#

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. Anchor Milk powder (அங்கர் பால் மா)

புலம்பெயர் நாடுகளில் பால் கிடைக்கிறது எதற்கு பால் மா

2. Necto soda (Elephant mark): யானை சோடா (குடிச்சு முடிய நாக்கில் சிவப்பு வரவேண்டும்.)

இது வெறித்தனம் வேண்டுமானால் நாக்கை கடித்தால் சிவப்பு வரும் இதற்கு மாற்றீடாக எத்தனையோ புலத்தில் இருக்கிறது

3. Lemon Puff (லெமன் பவ்): மெலனின் பதார்த்தம் கூடியதாய் கண்டறியப் பட்ட இந்த பிசுகோத்துக்கு மாற்றீடு முக்கியம்

இதுவும் பல இருக்கிறது சில விசுக்கோத்துகளுக்கு புரியாது

4. கட்ட சம்பல் (சிங்களத்தில் கட்டா சம்போல்): இதற்கு மாற்றீடாக நிருவின் சம்பல் உண்டு...ஆனால் உப்பு கொஞ்சம் கூட...வேறு எந்த Brand இனை பயன்படுத்தலாம்?

இதற்கு பச்சை மட்டையால் தான் தரவேண்டும்

5. MD Products (இதில் நெல்லிக்காய் சாறில் இருந்து பலாப் பழ பானம், wood apple jam வரைக்கும் அடங்கும்)

இதை விட சிறந்த தரமான சுத்தமாக நவீன பதன்படுத்தலுடன் தயாரிப்புக்கள் புலம் பெயர்நாடுகளில் இருக்கிறது

இதை விட உங்களுக்கு சுடச் சுட வேண்டுமானல் வவுனியா அகதி முகாமில் சிங்களம் கொடுக்கிறது போனால் தருவார்கள்

நல்ல பதில்கள் :o:(:D:( :( :D :D :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அனை;தது தமிழ் வர்த்தகர்களும் இந்த வேண்டுகோளின் உண்மையையும், நியாயத்தைப் புரிந்து கொண்டு நிச்சயம் ஒத்துழைப்பார்கள் என நம்புவோமாக

  • தொடங்கியவர்

1. Anchor Milk powder (அங்கர் பால் மா)

புலம்பெயர் நாடுகளில் பால் கிடைக்கிறது எதற்கு பால் மா

2. Necto soda (Elephant mark): யானை சோடா (குடிச்சு முடிய நாக்கில் சிவப்பு வரவேண்டும்.)

இது வெறித்தனம் வேண்டுமானால் நாக்கை கடித்தால் சிவப்பு வரும் இதற்கு மாற்றீடாக எத்தனையோ புலத்தில் இருக்கிறது

3. Lemon Puff (லெமன் பவ்): மெலனின் பதார்த்தம் கூடியதாய் கண்டறியப் பட்ட இந்த பிசுகோத்துக்கு மாற்றீடு முக்கியம்

இதுவும் பல இருக்கிறது சில விசுக்கோத்துகளுக்கு புரியாது

4. கட்ட சம்பல் (சிங்களத்தில் கட்டா சம்போல்): இதற்கு மாற்றீடாக நிருவின் சம்பல் உண்டு...ஆனால் உப்பு கொஞ்சம் கூட...வேறு எந்த Brand இனை பயன்படுத்தலாம்?

இதற்கு பச்சை மட்டையால் தான் தரவேண்டும்

5. MD Products (இதில் நெல்லிக்காய் சாறில் இருந்து பலாப் பழ பானம், wood apple jam வரைக்கும் அடங்கும்)

இதை விட சிறந்த தரமான சுத்தமாக நவீன பதன்படுத்தலுடன் தயாரிப்புக்கள் புலம் பெயர்நாடுகளில் இருக்கிறது

இதை விட உங்களுக்கு சுடச் சுட வேண்டுமானல் வவுனியா அகதி முகாமில் சிங்களம் கொடுக்கிறது போனால் தருவார்கள்

உங்களைப் போன்றவர்கள் விடும் வெறும் வெத்து வேட்டு கோஷத்தினால் மக்களை சலிப்படைய வைக்க மட்டும் தான் முடியும். கொஞ்ச காலம் கத்திவிட்டு பிறகு 'உந்த மக்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்காது' என்று பழியை புலம் பெயர் மக்கள் மீது சுமத்த தான் உங்களால் முடியும்

தொடர்ச்சியாக பயன்படுத்தப் பட்டுகொண்டு இருக்கும் ஒரு பொருளை வேண்டாம், நிராகரியுங்கள் என்று சொல்லும் போது அதற்கான மாற்றீடு தொடர்பான விடயங்களை முன்வைத்தல் அதன் நீண்ட கால பயன்களைத் தரும். இன்று மக்களின் பேரவலத்தினை பார்த்து இலங்கை அரசின் மீது ஏற்பட்டுள்ள உச்ச கட்ட வெறுப்பில் வேண்டாம் என்று நிராகரிக்கப் படும் பொருட்கள் அவலத்தின் தீவிரம் குறைந்து போகும் காலகட்டத்தில் மக்களால் மீண்டும் பயன்படுத்த தொடங்கும் சாத்தியங்கள் அதிகம். எம் நிராகரிப்பால் ஏற்படுத்தப் படக் கூடிய சிறு பொருளாதார பாதிப்பு / ஏற்றுமதி மூலம் இலங்கை அரசிற்கு கிடைக்கும் அன்னிய செலவாணி பாதிப்பு நிரந்தரமாக்கப் பட வேண்டும். அதற்கான பல வழிகளில் இந்த மாற்றீடு தொடர்பான சிந்தனை முக்கியமாக எனக்கு படுகின்றது. இலங்கைப் பொருட்களை தம் கடைகளில் வைத்து விற்பவர்களுக்கு இந்த மாற்றீடான பொருட்கள் தொடர்பான அறிவினை வழங்கும் போது அவர்களை 'சிறி லங்கா பொருட்களை புறக்கணி' எனும் போராட்டத்திற்குள் உள்வாங்குவது இலகு

Edited by நிழலி

  • தொடங்கியவர்

1. புலம்பெயர் நாடுகளில் பெரியவர்கள் பாலை உட்கொள்வதே நல்லது. குழந்தைகளுக்கு சிறந்த பால்மா மேற்கத்தைய தயாரிப்புகளே உள்ளது. Anchor, Australia தயாரிப்பு packed by ஸ்ரீலங்கா. நீங்கள் வாங்கும் போது பாவனைக்கு உதவாத பண்டமாகவே மாறி இருக்கலாம்.

2. Necto = Koolkid

3. Lemon puff: try some Arab stores, they have similar biscuts.

4. கட்ட சம்பல், வீட்டில் செயதல் உடல் நலத்துக்கும் நல்லது.

5. MDஐ விட தரமான, உடல் நலத்துக்கும் சிறந்த பொருட்கள் Food basics, Ethnic food section இல் உள்ளது.

மீன், மரக்கறி வகைகளுக்கு ஒரு மாற்றுவழியை நீங்கள் சொல்லுங்களேன்?

வழக்கம் போல் உங்களின் பதில்களும் இணைப்புகளும் பிரயோசனமானவையாகவே இருக்கின்றன. நன்றிகள்

1. புலம்பெயர் நாடுகளில் பெரியவர்கள் பாலை உட்கொள்வதே நல்லது. குழந்தைகளுக்கு சிறந்த பால்மா மேற்கத்தைய தயாரிப்புகளே உள்ளது. Anchor, Australia தயாரிப்பு packed by ஸ்ரீலங்கா. நீங்கள் வாங்கும் போது பாவனைக்கு உதவாத பண்டமாகவே மாறி இருக்கலாம்.

அநேக கடைகளில் expired ஆன இலங்கைப் பொருட்கள் தான் இருக்கின்றது. விற்பவர்கள் எம் தமிழ் முதலாளிகள், அதிலும் தமிழ் தேசியம் தொடர்பான போராட்டங்களில் முன்னிற்பவர்கள். எனவே அவர்கள் மீது authorities இடம் போய் முறைப்பாடு செய்ய மனம் வருவது இல்லை. கனடாவில் அநேகமான கடைகளில் பால் பைக்கற்றுகளும் (கனடா தேசத்து) விற்கப்படுகின்றன...இலங்கை பால் மாக்களும் விற்கப்படுகின்றன. இந்தவகையான பால்மா பக்கற்றுக்கு பதிலாக வேறு நாட்டு பால்மா விற்கும் போது நிச்சயம் மக்களால் அது மெல்ல மெல்ல பயன்படுத்த தொடங்கப் படும்.

2. Necto = Koolkid

3. Lemon puff: try some Arab stores, they have similar biscuts.

எம் தமிழ் கடைகளில் இவற்றை வைத்து (இலங்கை பிஸ்கற்றுகள் தவிர்ந்த ஏனையவை) விற்க ஊக்குவிக்க வேண்டும். இலங்கை பிஸ்கற்றுகளில் அநேகமானவை எந்த தரக்கட்டுப் பாட்டு பரிசோதனைகளுக்கும் உட்படாதவை. உடலுக்கு மிக கேடானவை

4. கட்ட சம்பல், வீட்டில் செயதல் உடல் நலத்துக்கும் நல்லது.

என்னைக் கேட்டால் கட்ட சம்பல் என்பதே உடலுக்கு கேடானது என்பேன். காரணம் அதன் உறைப்பும் உப்பும். ஆனால் அதிகமாக விற்கப்படும் இலங்கைப் பொருட்களில் இதுவும் முக்கிய இடத்தினை பிடித்து இருக்கு

5. MDஐ விட தரமான, உடல் நலத்துக்கும் சிறந்த பொருட்கள் Food basics, Ethnic food section இல் உள்ளது.

...அவற்றில் மட்டும் அல்ல..இலங்கையர்களின் கடை தவிர்ந்த ஏனைய எல்லா கடைகளிலும் MD தவிர்ந்த தரமான, உடல் நலத்துக்கும் சிறந்த பொருட்கள் விற்கின்றனர். ஆனால் எம் தமிழ் கடைகளில் மாற்றீடாக எதனையும் காணமுடியுது இல்லை.

இலங்கையிலிருந்து வரும் பொருட்கள் அத்தியாவசியமானவை என்று தோன்றவில்லை. இவற்றையெல்லாம் அங்கிருக்கும் போது நாளாந்தம் எவரும் பாவித்ததில்லை. இவற்றைப் புறக்கணிப்பது ஒன்றும் பெரிய விடயமில்லை. நாங்கள் இருக்கும் நாட்டில் இலங்கைப் பொருட்கள் எதுவுமே இறக்குமதி செய்யப்படுவதில்லை. இலங்கையைச் சேர்ந்த எல்லாத் தரப்பினரும் இங்கே வாழ்கிறார்கள். இங்குள்ள பொருட்களைத்தான் நாம் பயன்படுத்துகிறோம்.

மேற்குலக நாடுகளின் பொருட்கள் மிகத் தரமானவை. அவற்றைப் பாவிப்பது சுலபமான வழி. இது எங்கள் மக்களால் எடுக்கப்பட வேண்டிய தீர்மானம். மக்களால் புறக்கணிக்கப்படும் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப நல்ல விடயம் தான் நான் இதில ஒண்டையும் வாங்கினதும் இல்ல சாப்பிட்டதும் இல்ல இங்க ஒரேயொருக்கா பரோட்டா வாங்கினான் அத ஒடைச்சுப்போட்டுத்தான் அதன் கவரை பார்த்தனான் அது இந்தியா என்று போட்டிருந்தது நல்ல காலம். எங்கட சனம் ஏன் இப்படி சொறிலங்கா பொருட்களுக்கு அலையுதுகள் என்டு தெரியேல அது இல்லாமல் இருக்க முடியாதா என்ன

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேவொறு பகுதியில் ஏற்கனவே எழுதியுள்ளேன்...

இலண்டனில் உள்ள பல இறக்குமதியாளர்களுடன் கதைத்தபோது பலர் தயாராகவே உள்ளனர். சிலர் தான் வியாக்கியானம் கதைத்தார்கள்.

நான் கதைத்தபோது ஏற்றுக் கொண்ட நிறுவனங்களில் ஒரு நிறுவனம் செயலிலும் காட்டியுள்ளனர்.

இந்த நிறுவனத்தினர் இலங்கையிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளதாக மக்களுக்கு அறிவித்தும் இருக்கிறார்கள்.

வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு :

இலங்கையில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை எமது நிறுவனம் நிறுத்தி உள்ளது.

கீழ் உள்ள இணைப்பில் அதனை பார்க்க முடியும்.

http://www.nsrstore.com/index.htm

மற்றயது

1. அங்கர் பால் மா - சட்டப்படி இலண்டனில் விற்க முடியாது. இதனை நான் கதைத்தபோது ஒரு நிறுவனத்தினர் கூறினர். இதற்குரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2. யானை சோடா - இதற்கு மாற்றீடு கேட்பது முட்டாள் தனம். இங்கு பல வகை குளிர்பானங்கள் உண்டு.

3. லெமன் பவ் - இது உடலுக்கு கேடு எனவே தவிர்ப்பது நல்லது. நிருவின் சொந்த உற்பத்தி இருக்கிறது. ஆனால் அதுவும் இலங்கையில் தயாரானதே.

4. கட்ட சம்பல் - MD யை தவிர்த்து.. மற்ற நிறுவனங்களின் நிரு,காவேரி,மாதங்கி,என்.எஸ்.ஆர

் ஆகியவற்றின் தயாரிப்புகள் உள்ளன. ஆனால் இலங்தையில் உற்பத்தி செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்யுங்கள்

5. MD Products - இந் நிறுவனத்தின் பொருட்களை முற்று முழுதாக தவிர்ப்பதே நல்லது.

மேலும் இலண்டனில் மக்கள் கடையினர் மீனையும் அங்லோ ஏசியன் மற்றும் ஓரு சிங்களவர் (பெயர் தெரியவில்லை) மரக்கறிகளையும் இலங்கையிருந்து ஏயா லங்கா காகோ மூலம் இறக்குமதி செய்கின்றனர்.

(மேலும் பலர் இருக்கலாம் எனக்கு தெரியவில்லை)

அத்துடன் இன்று இரவு இது தொடர்பாக கூட்டம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எல்லோரும் வருவார்கள் என்று எதிர்பார்;கிறோம்.

இறக்குமதியாளர்களும் வர்த்தக நிறுவனத்தினரும் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இங்கு இரண்டு விடயங்கள் தான் தொக்கி நிற்கின்றன.

1) தமிழ் இறக்குமதியாளர்கள் ஒற்றுமையாக இலங்கையிருந்து பொருட்களை இறக்குமதி செய்யாது விடுவது.

2) தமிழ் வர்த்தக நிறுவனங்கள் சிங்கள இறக்குமதியாளர்களிடமிருந்து பொருட்களை வாங்க மறுப்பது.

இவை இரண்டும் நடந்தால் இலங்கைப் பொருட்களை முற்று முழுதாகவே புறக்கணிக்கலாம்.

பார்ப்போம் இரவு என்ன நடக்கிறது என்பதை.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டம் போட்டு தெளிவு படுத்துவது நல்ல விஷயம். ஆனா லெமன் பf , நெக்ரோவுக்கெல்லாம் மாற்றீடு கொடுத்தால் நல்ல விளைவு வருமெண்டு நம்ப என்னால் இயலவில்லை. ஒரு செயற்கை சாயத்துக்காக (நெக்ரோவில் அது தானே இருக்கு?) தமிழனைக் கொல்ல நாங்கள் காசு கொடுப்போம் எண்டு யாராவது நினைத்தால் அதுகள் அப்படியே போகட்டும் எண்டு விட்டு விடுங்கள். வர்த்தகர்களிடம் பேசிப் பாருங்கள். (மேலும் நெக்ரோ இல்லாமல் யாரும் சாகப் போவதில்லை, அதைக் குடித்தால் தான் சாவுக்குரிய காரணங்கள் நெருங்கி வர வாய்ப்புண்டு! :wub: )

Edited by Justin

தயவு செய்து இதற்கான மாற்றீடு பொருட்களை தரவும்... கெஞ்சி கேட்கின்றேன்....

இதெல்லாம் இல்லாமல் வாழமுடியாதா? :o நிழலி நான் உங்களிடம் இருந்து இதை எதிர்பர்க்கவில்லை... ஒருவேளை நக்கலுக்கு எழுதியிருக்கிறீர்களா? :wub:

வணக்கம்,

அனைவரினதும் கருத்துக்களை வாசிக்க நேரம் கிடைக்கவில்லை. எண்டாலும்... தலைப்பின் அடிப்படையில் நான் கூற விரும்புகின்ற கருத்து:

சிறீ லங்கா பொருட்களை புறக்கணிக்கும் அதேவேளை அதற்கு மாற்றீடான பொருட்களை தமிழர் போராட்டத்திற்கு ஆதரவான சக்திகளிடம் - நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள தமிழ் வர்த்தகர்கள் முயற்சி செய்யவேண்டும்.

எமக்கு தோள்கொடுக்கும் தமிழ்நாட்டில் இருந்து சிறீ லங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்கு மாற்றீடான பொருட்களை கண்டுபிடித்து அவற்றை நம்மவரிடையே அறிமுகம் செய்யலாம்.

இதேபோல் மொரீசியஸ் தீவில் கூட நமக்கு ஆதரவாக பேரணிகள் செய்கின்றார்கள். மொரீசியஸ் தீவில் இருந்து லாபகரமான முறையில் பெற்றுக்கொள்ளக்கூடிய சிறீ லங்கா பொருட்களிற்கு மாற்றீடான பொருட்களை எம்மவரிடையே அறிமுகம் செய்யலாம்.

இதேபோல் மலேசியா நாட்டில் எமக்கு ஆதரவுக்குரல் இருக்கின்றது. மலேசிய உற்பத்திப் பொருட்கள், மலேசிய விமான சேவை இவற்றை நம்மவர்கள் அதிகளவில் பாவிக்கதக்க வகையில் வெளிநாடுகளில் சந்தை நிலவரத்தை உருவாக்கலாம்.

எமக்கு எதிரானவர்களை எமக்கு ஆதரவானர்களை ஊக்குவிப்பதன் மூலம் முறியடிக்கலாம் என்பது எனது எண்ணம்.

வியாபாரத்துறையில் இருப்பவர்கள், வர்த்தகர்கள் இதற்கான முயற்சியில் தனியாகவோ கூட்டாகவோ ஈடுபடவேண்டும்.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக கனடாவில் கட்டாயம் ஏதாவது செய்து செய்து சிறிலங்கா பொருட்களை நிற்பாட்ட வேண்டும் .110 மில்லியன் டொலர் வருடத்துக்கு இலங்கைக்கு போவதை நிறுத்த வேண்டும். முக்கியமாக பொருட்களை விற்பவர்கள் இறக்குமதி செய்வதை நிறுத்தினால் நுகர்வோர் பதிலீடாக வேறு பொருட்களை தாங்களாகவே தேடி வாங்குவார்கள்.

கடலுணவுகள் Trinadad போன்ற நாடுகளில் இருந்து வருவதாக கேள்விப்பட்டேன். நான் சொல்வது சரியா?

  • தொடங்கியவர்

இதெல்லாம் இல்லாமல் வாழமுடியாதா? :o நிழலி நான் உங்களிடம் இருந்து இதை எதிர்பர்க்கவில்லை... ஒருவேளை நக்கலுக்கு எழுதியிருக்கிறீர்களா? :wub:

வசி....மீண்டும் என் பதிவை வாசியுங்கள்..... புரியும் யாரிற்கு என்று

இந்த மாற்றீடு தொடர்பான கேள்வி எனக்கானதல்ல.....ஆனால் கடை முழுதும் இலங்கை பொருட்களை பரப்பி விற்றுக் கொண்டு தமிழ் தேசியம் பேசும் வியாபார முதலைகளுடன் கதைப்பதற்கு....

தனிப்பட்ட ரீதியில் வல்லாரை தவிர எந்த இலங்கைப் பொருட்களையும் நான் வாங்குவதில்லை (இப்ப அதனையும் நிப்பாட்டியாச்சு)..அதன் காரணம் நான் இலங்கையை விட்டு வந்து 8 வருடம் ஆவதால் (மத்திய கிழக்கில் இருந்ததால்)....சிலர் எனக்காக இந்த கேள்வியை முன்வைக்கின்றேன் என சாரப் பட பதில் எழுதியுள்ளனர்...அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

மற்றது

நன்றி கலைஞன்....சரியாக புரிந்து கொண்டமைக்கு

உண்மைதான். வர்தகர்கள் 'மக்கள் விரும்புகிறார்கள்' என்ற பல்லவியையே தொடர்ந்து பாடுகிறார்கள்!

விளக்கத்திற்கு நன்றி நிழலி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. Anchor Milk powder (அங்கர் பால் மா)

புலம்பெயர் நாடுகளில் பால் கிடைக்கிறது எதற்கு பால் மா

2. Necto soda (Elephant mark): யானை சோடா (குடிச்சு முடிய நாக்கில் சிவப்பு வரவேண்டும்.)

இது வெறித்தனம் வேண்டுமானால் நாக்கை கடித்தால் சிவப்பு வரும் இதற்கு மாற்றீடாக எத்தனையோ புலத்தில் இருக்கிறது

3. Lemon Puff (லெமன் பவ்): மெலனின் பதார்த்தம் கூடியதாய் கண்டறியப் பட்ட இந்த பிசுகோத்துக்கு மாற்றீடு முக்கியம்

இதுவும் பல இருக்கிறது சில விசுக்கோத்துகளுக்கு புரியாது

4. கட்ட சம்பல் (சிங்களத்தில் கட்டா சம்போல்): இதற்கு மாற்றீடாக நிருவின் சம்பல் உண்டு...ஆனால் உப்பு கொஞ்சம் கூட...வேறு எந்த Brand இனை பயன்படுத்தலாம்?

இதற்கு பச்சை மட்டையால் தான் தரவேண்டும்

5. MD Products (இதில் நெல்லிக்காய் சாறில் இருந்து பலாப் பழ பானம், wood apple jam வரைக்கும் அடங்கும்)

இதை விட சிறந்த தரமான சுத்தமாக நவீன பதன்படுத்தலுடன் தயாரிப்புக்கள் புலம் பெயர்நாடுகளில் இருக்கிறது

இதை விட உங்களுக்கு சுடச் சுட வேண்டுமானல் வவுனியா அகதி முகாமில் சிங்களம் கொடுக்கிறது போனால் தருவார்கள்

வணக்கம். இது காலாகாலமாக நடக்கும் விவாதம்.

தமிழ்குரலின் நியாயம் சரியானது. மற்றயது நாம் ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம் சாட்டுவதில் பலன் ஏதும் இல்லை. எம்முடைய ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட கடமையாக எடுத்துக்கொண்டால் விரைவில் கூடிய பலன் கிடைக்கும்.

சிலர் வணிக நிலையங்களையும் குற்றம் சாட்டுவார்கள். அவர்கள் தமிழ்த்தேசியத்தவர்களாகவும் இருக்கலாம் அல்லது தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்களாகவும் இருக்கலாம்.

இவர்கள் பொதுவாக இலாபத்தை குறிக்கோளாய் கொண்டிருப்பார்கள். ஆகவே நாம் தான் தனி நபர் முடிவுகளாக வெற்றி நிச்சயம்.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு

என்பதுபோல நாம் ஒவ்வொருவரும் முடிவெடுப்போம்.

அண்மையில் முல்லத்தீவு மேலதிக அரச அதிபரின் அறிக்கை வாசித்தால் புரியும் எவை கட்டாயம் தேவை என்பது. ஆகவே சிங்கள பாசிச பயங்கரவாத அரசினால் உற்பத்தி செய்யப்பட்டு மேலத்தேய நாடுகளுக்கு(அதாவது எமக்கு) ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை வாங்காமல் விடுவது மிகவும் சுலபம். எல்லாம் மனதை பொறுத்த விடையம்.

எம்மக்களுக்கு 10 உருபாய் கொடுப்பதிலும் பார்க்க எதிரிக்கு அதாவது சிங்கள பாசிச பெளத்த பயங்கரவாத அரசிற்கு 1 உரூபாய் கொடுக்காமல் இருந்தால் அதுதான் கூடிய பலனை தரும். 600-700 மில்லியன் வங்கிக்கடன் கேட்ட பயங்கரவாத அரசிற்கு 17 மில்லியன் தான் கிடைத்தாம். இதைவிட தற்போது அரசிடம் உள்ள பணம் இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவெ இதுதான் நல்ல தருணம் இலங்கை அரசின் பொருளாதரத்தை மீண்டும் நன்றாக பலவீனப்படுத்த. அல்லது தமிழ் மக்கள் என்று கூறிக்கொள்ளும் நாமே சிங்கள பாசிச பெளத்த பயங்கரவாத அரசிற்கு முட்டுக்கொடுக்க வேண்டுமா?

முடிவெடுங்கள் தமிழ் மக்களே.

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக கனடாவில் கட்டாயம் ஏதாவது செய்து செய்து சிறிலங்கா பொருட்களை நிற்பாட்ட வேண்டும் .110 மில்லியன் டொலர் வருடத்துக்கு இலங்கைக்கு போவதை நிறுத்த வேண்டும். முக்கியமாக பொருட்களை விற்பவர்கள் இறக்குமதி செய்வதை நிறுத்தினால் நுகர்வோர் பதிலீடாக வேறு பொருட்களை தாங்களாகவே தேடி வாங்குவார்கள்.

கடலுணவுகள் Trinadad போன்ற நாடுகளில் இருந்து வருவதாக கேள்விப்பட்டேன். நான் சொல்வது சரியா?

எங்கிருந்து இந்த தரவை எடுத்தீர்கள்...? 110 மில்லியன் டொலர்கள் என்பது ?

இங்கு மிக பெரிய நிரு நிறுவனத்தின் வருடாந்த விற்பனை புரள்வு 1 மில்லியன் பவுண்கள். (இந்தியா இலங்கை உள்ளடக்கியது)

  • தொடங்கியவர்

எம்மக்களுக்கு 10 உருபாய் கொடுப்பதிலும் பார்க்க எதிரிக்கு அதாவது சிங்கள பாசிச பெளத்த பயங்கரவாத அரசிற்கு 1 உரூபாய் கொடுக்காமல் இருந்தால் அதுதான் கூடிய பலனை தரும். 600-700 மில்லியன் வங்கிக்கடன் கேட்ட பயங்கரவாத அரசிற்கு 17 மில்லியன் தான் கிடைத்தாம். இதைவிட தற்போது அரசிடம் உள்ள பணம் இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மிக மிக சரியான கருத்து

மீரா,

கீழேயுள்ள ஏதாவதொரு இணைப்பை சொடுக்குங்கள். மில்லியன் கனடாவில் இருந்து போகும் வழியும், நிறுவனங்களைப் பார்த்தல் எமக்குள்ள பணியின் பழுவும் புரியும்.

http://www.ic.gc.ca/cgi-bin/sc_mrkti/cid/c...type=by_country

http://www.ic.gc.ca/cgi-bin/sc_mrkti/cid/cid_e.cgi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. Anchor Milk powder (அங்கர் பால் மா)

2. Necto soda (Elephant mark): யானை சோடா (குடிச்சு முடிய நாக்கில் சிவப்பு வரவேண்டும்.)

3. Lemon Puff (லெமன் பவ்): மெலனின் பதார்த்தம் கூடியதாய் கண்டறியப் பட்ட இந்த பிசுகோத்துக்கு மாற்றீடு முக்கியம்

4. கட்ட சம்பல் (சிங்களத்தில் கட்டா சம்போல்): இதற்கு மாற்றீடாக நிருவின் சம்பல் உண்டு...ஆனால் உப்பு கொஞ்சம் கூட...வேறு எந்த Brand இனை பயன்படுத்தலாம்?

5. MD Products (இதில் நெல்லிக்காய் சாறில் இருந்து பலாப் பழ பானம், wood apple jam வரைக்கும் அடங்கும்)

இவைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டியவை. இவைகளை நிறுத்துவது பெரிய சவாலாக எனக்குத் தெரியவில்லை. இந்தச் சிறிய தியாகத்தைக்கூடச் செய்யமுடியவில்லையென்றால் போராட்டம், தமிழீழம் என்ற கதையே கதைக்கக் கூடாது. நாங்கள் அதற்கு அருகதை அற்றவர்கள்.

ஆனால் சவால் நிறைந்தது எதுவென்றால் அரிசி மா, சிவத்தப் பச்சை அரிசி, புழுங்கல் அரிசி (நாடு), போன்றவை. எனக்குத்தெரிந்த மட்டில் சிவப்பரிசி ஸ்ரீலங்காவிலிருந்து மட்டும் தான் கிடைக்கிறது. வெள்ளை அரிசிதான் அநேகமாக இந்தியா மற்றும் பல நாடுகளில் காணப்படுகிறது. எது இல்லாமையும் எங்கட சனம் இருக்கும் ஆனா புட்டு, இடியப்பம் இல்லையெண்டா கஷ்டம் தான். ஆகவே இதற்கான மாற்றீடு தேவை. அல்லது மக்கள் வெள்ளை அரிசி அல்லது கோதுமைக்கு பழக்கப்படவேண்டும்.

மிளகாய்த்தூளை பொறுத்தவரையில் தற்போது இலங்கையிலிருந்துதான் வருவதாகச் சொல்கின்றார்கள். ஆனால் மிளகாய் இலங்கையை விட பல இடங்களில் கிடைக்கக்கூடியது.

மீன், நண்டு, மற்றும் பல கடலுணவு வகைகளுக்கும் தாராளமாக மாற்றீடு உண்டு. சீனர்களின் கடையில் பலவகையான மின்கள் விற்கப்படுகின்றன. ஆனால் எங்கட சனம் ஊர் விளை அப்பிடி இப்பிடி எண்டு நிக்கும். ஆனால் கொள்கை போராட்டம் என்று வரும்போது இவைகளை விடும் மனப்பக்குவத்தை மக்கள் பெற்றாக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மீரா,

கீழேயுள்ள ஏதாவதொரு இணைப்பை சொடுக்குங்கள். மில்லியன் கனடாவில் இருந்து போகும் வழியும், நிறுவனங்களைப் பார்த்தல் எமக்குள்ள பணியின் பழுவும் புரியும்.

http://www.ic.gc.ca/cgi-bin/sc_mrkti/cid/c...type=by_country

http://www.ic.gc.ca/cgi-bin/sc_mrkti/cid/cid_e.cgi

100 மில்லியன் டொலர்கள் என்னபது இலங்கையிலிருந்து கனடாவின் மொத்த இறக்குமதியின் தொகை. இது புடவை, தேயிலை றப்பர் மற்றும் பல பொருட்களை உள்ளடக்கியது.

இத் தொகையில் தழிழர்களின் பங்களிப்பு 5 வீதத்திற்கு குறைவானதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.