Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பளை, கிளாலி இராணுவ நிலைகள் நோக்கி புலிகள் ஆடடிலெறி தாக்குதல்

Featured Replies

பளை, கிளாலி இராணுவ நிலைகள் நோக்கி புலிகள் ஆடடிலெறி தாக்குதல் - படைதரப்பு அதிர்ச்சியில்

திகதி: 10.03.2009 // தமிழீழம் // [எல்லாளன்]

யாழ்ப்பாணம் பளை, கிளாலி, மற்றும் முகமாலை முன்னரங்க நிலைகளிலுள்ள படை முகாம்களை நோக்கி நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஏ-9 வீதியை இலக்குவைத்து நேற்றிரவு ஆரம்பித்த எறிகணைத் தாக்குதல்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல்வரை நீடித்திருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.

விடுதலைப் புலிகள் வீசிய எறிகணைகளில் பல சிறீலங்கா படையினரது முகாம்களிலும், முகாம்களிற்கு அருகிலும் வீழ்ந்து வெடித்துள்ளன. விடுதலைப் புலிகள் எறிகணை வீசியபோது சிறீலங்கா படையினரை ஏற்றிய 25 வரையிலான பேரூந்துகள் யாழ் குடாநாட்டிற்கு ஏ-9 பாதையூடாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதால், விடுதலைப் புலிகளின் இலக்கு இந்தப் பேரூந்துகளாக இருக்கலாம் என படைத்தரப்பு எண்ணுகின்றது.

ஏனெனில் உணவுப் பொருள்கள் அடங்கிய பாரவூர்திகள் தென்மராட்சியைச் சென்றடைய முன்னர், படையினரை ஏற்றிய 25 பேரூந்துகளும் தென் பகுதியில் இருந்து அங்கு வந்து சேர்ந்து விட்டதாக கூறப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலைத் தொடர்ந்து கிளாலி முன்னரங்க நிலைகளுக்கு அண்மையாக இருந்த மக்கள், மற்றும் விடத்தல்பளை, உசன் போன்ற பிரதேச மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்ட போதிலும், பொதுமக்கள் அற்ற படையினரது முகாம்கள் அமைந்துள்ள பகுதிகள் நோக்கியே விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

முன்னரும் பல தடவைகள் தென்மராட்சியிலுள்ள மிருசுவில், வரணி, மற்றும் பலாலி படைத்தளங்கள் நோக்கி துல்லியமான எணிகணைத் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர்.

ஏ-9 நெடுஞ்சாலை ஊடாக யாழ் குடாநாட்டிற்கான உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக அறிவித்த சிறீலங்கா அரசும், அதன் படைகளும், அந்த உணவுப் பாரவூர்திகளின் கவசத்துடன், யாழ் குடாநாட்டிற்கான படையினர், மற்றும் படைத்துறை வழங்கலை மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தகவல் விடுதலைப் புலிகளுக்கு எவ்வாறு தெரிய வந்தது என்றும் விடுதலைப் புலிகள் இலக்கு வைத்து நீண்ட தூரம் ஆட்டிலெறித் தாக்கதலை நடத்துவது எவ்வாறு என்று குழப்பத்திலும் சிறீலங்கா படைத்தரப்பு தற்பொழுது இருப்பதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Artillery attacks on Pa’lai, Mukamaalai, Ki’laali areas

[TamilNet, Tuesday, 10 March 2009, 13:16 GMT]

Large number of artillery shells said to be launched by Liberation Tigers of Tamil Eelam (LTTE) since Monday midnight fell and exploded near A9 road in Pa’lai and Mukamaalai, until Tuesday afternoon, sources in Thenmaraadchi said. Around 22 lorries loaded with goods which started to Jaffna along A9 road around 11:00 a.m Monday are yet to reach Naavatku’li but 25 buses carrying Sri Lanka Army (SLA) soldiers have reached Thenmaraadchi along A9 route around Tuesday afternoon, the sources added.

Shells fell and exploded in Pa’lai, Mukamaalai, Ki’laali areas earlier held by LTTE.

Many of them fell and exploded near SLA bases in the area.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28676

  • தொடங்கியவர்

இதைத்தான் காலையில் ஒரு இணையத்தளம் வேற மாதிரி எழுதியிருந்ததோ??

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ 60 சதுர கி.மீற்றருக்கை புலிகள் முடக்கப்பட்டுள்ளார்கள் என்றாங்கள். உந்த ஆட்டிலறி எங்கை இருந்து வந்தது என ஆராயபோகினம் மகிந்த ஆட்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ 60 சதுர கி.மீற்றருக்கை புலிகள் முடக்கப்பட்டுள்ளார்கள் என்றாங்கள். உந்த ஆட்டிலறி எங்கை இருந்து வந்தது என ஆராயபோகினம் மகிந்த ஆட்கள்.

மாஜாசாலத்தில் இதுவும் ஒன்றோ?

  • கருத்துக்கள உறவுகள்

உணவுப்பொருள் என்று ............யமகிங்கரர்களை கொண்டு போனால் இது தான் நடக்கும் ...

  • கருத்துக்கள உறவுகள்

600 பேரை உள்ளடக்கிய விடுதலைப்புலிகளின் அணி ஒன்று புதுக்குடியிருப்பு வடக்குப்பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தின் முன்னனி நிலைகளை உடைத்துக்கொண்டு உள் நுழைந்ததாகவும் அவர்களில் 200பேர் மீளவும் தங்களது கட்டுப்பாட்டு பகுதிக்கு திரும்பிவிட்டதாகவும் 200வரையான பேர் முன்னரனை உடைக்கும் முயற்சியில் இறந்துவிட்டதாகவும் எஞ்சிய 200வரையானோர் இப்பொழுதும் இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நிற்பதாகவும் அவர்களில் ஓர் அணியே 10 - 12 கிமீ நீளமான பிரதேசத்தை கடந்து முன்னர் இடம்பெயர்ந்த மக்களை தங்கவைப்பதற்காக கிளிநொச்சியில் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட இடைத்தங்கல் முகாம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த 130மிமீ ஆட்லறி நிலைகளை கைப்பற்றி அவற்றின் மூலமே பளை,முகமாலை மற்றும் ஏ9 வீதிப்பகுதிகளில் இருந்த இராணுவநிலைகளை தாக்கியபின் அவற்றை அழித்துவிட்டனர் என இராணுவசார்பு இணையம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆரோ மூன்டாம் வாய்ப்பாடு மட்டும் தெரிஞ்ச ஒரு ஆள் டிபன்ஸ் வயரிலை ஆய்வு எழுதியிருக்கறார். 600பேராம் அது மூண்டாப் பிரிஞ்சு அதிலை ஒரு பிரிpவிலை 200 வெளிக்கிட்டு போக, அதிலை 200 சாக 200 தப்பியோட 200 இன்னும் நிண்டு அடிபடுதாம். ஆக 200ஐ மூண்டாலை பெருக்கினால் 600. இந்த 600 அடிக்கடி இராணுவ தளபதி சொன்ன 700 இலும் 100 குறைவு! நாளைக்கு அவர் 300 புலிதான் வன்னியிலை இருக்கினம் இன்னும் 3 மாதத்திலை முடிச்சிடுவம் என கதையளப்பார்.

ஏனுங்கோ...அப்படியே defencewire இற்கு ஒரு நன்றியை தெரிவிக்கிறது...

நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்

போராட்டம் , கவனம் , களத்தில் எழுதுதல் இவற்றோடு சேர்ந்து கொஞ்சம் கடவுளை , ஆண்டவனை , இறைவனை , பகவானை கூட வேண்டுங்கள் . நம்மவர் வெல்ல வேண்டும் என்று . ஏனெனில் பிரார்த்தனைக்கும் வலு உண்டு என்பது நிருபிக்கப்பட்ட உண்மை . நினைவு அலைகளே சக்தியாக உருவெடுக்கிறது . பிரார்த்தனைகள் நமது நம்பிக்கைகள் வலுப்பெறசெய்யும் . வலுபெற்ற நம்பிக்கையே வெற்றிக்கான சக்தியை உருவாக்கும். நாளை நமதே . வெற்றி நம்முடனே

ஆரோ மூன்டாம் வாய்ப்பாடு மட்டும் தெரிஞ்ச ஒரு ஆள் டிபன்ஸ் வயரிலை ஆய்வு எழுதியிருக்கறார். 600பேராம் அது மூண்டாப் பிரிஞ்சு அதிலை ஒரு பிரிpவிலை 200 வெளிக்கிட்டு போக, அதிலை 200 சாக 200 தப்பியோட 200 இன்னும் நிண்டு அடிபடுதாம். ஆக 200ஐ மூண்டாலை பெருக்கினால் 600. இந்த 600 அடிக்கடி இராணுவ தளபதி சொன்ன 700 இலும் 100 குறைவு! நாளைக்கு அவர் 300 புலிதான் வன்னியிலை இருக்கினம் இன்னும் 3 மாதத்திலை முடிச்சிடுவம் என கதையளப்பார்.

ஒரு வாரத்திற்கு முன்புதான் 600 பேர்தான் மிச்சம், 48 மணித்தியாலத்தில முடிச்சிடலாம் எண்டெல்லாம் கதையளந்தவர்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.