Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நாவின் அழுத்தத்தினால் போர்நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளது சிறிலங்கா அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30/03/2009, 17:14 [ கொழும்பு நிருபர் மயூரன் ]

ஐ.நாவின் அழுத்தத்தினால் போர்நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளது சிறிலங்கா அரசு!

வன்னியில் சிக்கியுள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருவதற்கும் அந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தற்காலிகமான தாக்குதல் நிறுத்தமொன்றை அறிவிக்கவுள்ளதாகவெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் வெண்டுகோளுக்கு பதிலாக அரசாங்கம் இதனை அறிவித்திருந்தாலும் அது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்று எதிர்காலத்தில் இடம்பெறும் விடையங்களை வைத்தே தீர்மானிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த போர் நிறுத்தம் எப்போது மேற்கொள்ளப்படும் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஐ.நா, அமெரிக்கா, பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத செயற்பாடுகளை கண்டிக்கும் அதேசமயத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக போர் நிறுத்தம் ஒன்றை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

எனினும் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் எந்த ஒரு வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டிற்கும் அடிபணியப் போவதியில்லை என தெரிவித்த ஒரு சில தினங்களில் வெளிவிவகார அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

PATHIVU

Edited by கறுப்பி

கடவுளே! கடவுளே! சிறீ லங்கா அரசின் பிரச்சாரத்திற்கு வேறு ஊடகங்கள் தேவையில்லை! நம்ம ஊடகங்களே போதும். அவர்கள் அறிவித்தது போர் நிறுத்தமல்ல! தாக்குதல் ஓய்வு! அதாவது முன்னர் அறிவித்தது போல் 48மணி நேரம் கொடுத்து மக்களை வெளியேற சொல்வார்கள். அனால் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல் தொடரும்! புலிகள் மக்கள் மத்தியிலிருந்து தாக்குகிறார்கள் என்று வேறு சொல்வார்கள். நாங்கள் அதையும் செய்தியாக போடுவம்! வாழ்க சனநாய் அகம்! தொடரும் இன அழிப்பு!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பியக்கா இவ்வளவு நாளும் எங்க போயிருந்தனீங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்நிறுத்தம் ஏதும் இல்லை. இன்று திங்கட்கிழமை கூட 112 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=54971&hl=

இந்திய தேர்தலுக்கான காலகட்டத்தில் எம்மவர்களை மேலும் அரசியல் ரீதியில் பலவீனமாக்க செய்யப் படும் இன்னொரு சதி. தற்காலிக போர் ஓய்வு எந்த விதத்திலும் நன்மை தராது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடன்-போர் நிறுத்தம் குறித்து இலங்கை பரிசீலனை

செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2009, 10:36 [iST]

கொழும்பு: உலக அளவில் அதிகரித்து வரும் நெருக்கடி காரணமாக தற்காலிகமாக சண்டையை நிறுத்தி, அப்பாவித் தமிழர்கள் வெளியேற அனுமதி கொடுப்பது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

இந்த தற்காலிக சண்டை நிறுத்தத்தின்போது அப்பாவித் தமிழர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்ச மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்காலிக சண்டை நிறுத்தம் குறித்த விவரங்கள் விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.

இலங்கை வெளியுறவு செயலாளர் பலித கொகனா கூறுகையில், அப்பாவி மக்கள் வெளியேற வகை செய்யப்படும். இதை எப்படி செய்வது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார்.

அப்பாவித் தமிழர்களைக் கொத்துக் கொத்தாக இலங்கைப் படைகள் கொன்று குவித்து வருகின்றன. இதற்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் இலங்கை படைகள் இனப்படுகொலையை அரங்கேற்றி வருகின்றன.

ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இலங்கையின் போக்கை கடுமையாக கண்டித்து வருகின்றன.

உலக நாடுகளில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நடத்தி வரும் போராட்டங்களும் உலக சமுதாயத்தின் கவனத்தை இலங்கையின் பக்கம் திருப்பி வருகின்றன. இதனால் இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சண்டை நிறுத்தம் செய்ய வேண்டும். அப்பாவிகள் வெளியேற வழி செய்ய வேண்டும். அப்பாவிகளைக் கொல்லக் கூடாது என்று இலங்கைக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

'கடனுக்காக' சண்டை நிறுத்தம்?

அதேசமயம், இலங்கை அரசின் இந்த முடிவுக்கு இன்னொரு காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச நிதியத்திடம் இலங்கை பல நூறு கோடி கடன் கேட்டுள்ளது. இந்த சமயத்தில், தமிழர்கள் படுகொலை விஸ்வரூபம் எடுத்து வருவதால், கடன் தொகை கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவும் இப்போதைக்கு சண்டையை நிறுத்தி விட்டு, கடன் தொகை கைக்கு வந்தவுடன் மறுபடியும் தாக்குதலை தொடரலாம் என இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2 மாதங்களில் மட்டும் 3000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 7000 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐ.நா. கூறியுள்ளது. காஸாவில் நடந்த அநியாய படுகொலைகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் நிலை ஹிட்லர் காலத்தை விட மிகக் கொடுமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2009/03...rian-pause.html

பதிவுகாரருக்கு ... ஜேர்மனியர்களுக்கு ஆங்கில மொழிமாற்றத்தில் அலாதி பிரியம்!!

  • கருத்துக்கள உறவுகள்

வணங்காமண் கப்பல் போய் சேரும் போது போர் நிறுத்தம் செய்கிறார்களா பார்ப்போம். அப்போது இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்றும் பார்ப்போம்.இவர்களின் இரட்டை வேடத்தை தோலுரிக்கத் தான் வணங்காமண் கப்பல் புறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைக்கு ஐநா வையும் உலகையும் கொண்டு வந்தவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாமே.

இன்று வரை சிறீலங்காப் படையினரை தமிழர் நிலத்தை விட்டு வெளியேற்ற நாம் சர்வதேசத்தை கோரவும் இல்லை. அது தொடர்பாக எமது குரல்களை எழுப்பவும் இல்லை.

அதுமட்டுமன்றி இழப்புக்களை காட்டி போர் நிறுத்தத்தை வழியுறுத்தும் நாமே எவ்வகையான போர் நிறுத்தம் எமக்கு வேண்டும் என்பதையும் சொல்லவில்லை.

இந்தியா நடத்தும் இந்தப் போர் இந்தியா எம்மீது ஏவிவிட்டுள்ள இரண்டாவது போர். 1987 இல் ஒன்று. இன்று ஒன்று. அன்று அதுவா தோற்று ஓடியது. இன்று சிங்களவனையும் பழிவாங்கி எம்மையும் பழிவாங்கிறது. முட்டாள் சிங்களவனும் முட்டாள் தமிழனும் ஒருத்தனை ஒருத்த அடிச்சிக்கிட்டு சாக.. அயல்நாட்டான் எம்மை வைச்சு அரசியல் பண்ணிக்கிறான். இதுதான் இன்றைய எமது போராட்டத்தின் நிலை..! இதற்கான வாய்ப்பை வழங்கியவர்களும் நாமே. :mellow::D

வணங்காமண் கப்பல் போய் சேரும் போது போர் நிறுத்தம் செய்கிறார்களா பார்ப்போம். அப்போது இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்றும் பார்ப்போம்.இவர்களின் இரட்டை வேடத்தை தோலுரிக்கத் தான் வணங்காமண் கப்பல் புறப்படுகிறது.

எத்தினை தரம் தான் தோலுரிச்சுக்கிட்டே அதுக்காக நாம் செத்துக்கிட்டே இருக்கப் போறம்....???! முன்னர் தோலுரிச்சவை காணாதா..??! :(:lol: :lol:

Edited by nedukkalapoovan

இந்த நிலைக்கு ஐநா வையும் உலகையும் கொண்டு வந்தவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாமே.

இன்று வரை சிறீலங்காப் படையினரை தமிழர் நிலத்தை விட்டு வெளியேற்ற நாம் சர்வதேசத்தை கோரவும் இல்லை. அது தொடர்பாக எமது குரல்களை எழுப்பவும் இல்லை.

அதுமட்டுமன்றி இழப்புக்களை காட்டி போர் நிறுத்தத்தை வழியுறுத்தும் நாமே எவ்வகையான போர் நிறுத்தம் எமக்கு வேண்டும் என்பதையும் சொல்லவில்லை.

இந்தியா நடத்தும் இந்தப் போர் இந்தியா எம்மீது ஏவிவிட்டுள்ள இரண்டாவது போர். 1987 இல் ஒன்று. இன்று ஒன்று. அன்று அதுவா தோற்று ஓடியது. இன்று சிங்களவனையும் பழிவாங்கி எம்மையும் பழிவாங்கிறது. முட்டாள் சிங்களவனும் முட்டாள் தமிழனும் ஒருத்தனை ஒருத்த அடிச்சிக்கிட்டு சாக.. அயல்நாட்டான் எம்மை வைச்சு அரசியல் பண்ணிக்கிறான். இதுதான் இன்றைய எமது போராட்டத்தின் நிலை..! இதற்கான வாய்ப்பை வழங்கியவர்களும் நாமே. :mellow::(

எத்தினை தரம் தான் தோலுரிச்சுக்கிட்டே அதுக்காக நாம் செத்துக்கிட்டே இருக்கப் போறம்....???! முன்னர் தோலுரிச்சவை காணாதா..??! :(:D:lol:

பல்வேறு நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட "உரிமைப்போர்" எழுச்சிப் பேரணி 4 அடிப்படை விடயங்களை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டது. அதில், "தமிழீழப் பகுதியிலிருந்து சிங்கள இராணுவம் வெளியேறவேண்டும்! என்கிற கோரிக்கையும் ஒன்று. "சிங்கள இராணுவமே தமிழீழத்தை விட்டு வெளியேறு" என்று மக்கள் அந்த நிகழ்வுகளில் கோசம் எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது. அந்தந்த நாட்டு பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்ட மனுவும் இந்தக் கோரிக்கையை உள்ளடக்கியதே. :lol:

பின்வரும் பதாகைகள் குறிப்பிட்ட அந்த நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்டவை:

support_tamil_eelam_poster23.jpg

support_tamil_eelam_poster24.jpg

support_tamil_eelam_poster25.jpg

இது பயன்படுத்தினார்களோ தெரியாது:

support_tamil_eelam_poster26.jpg

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட "உரிமைப்போர்" எழுச்சிப் பேரணி 4 அடிப்படை விடயங்களை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டது. அதில், "தமிழீழப் பகுதியிலிருந்து சிங்கள இராணுவம் வெளியேறவேண்டும்! என்கிற கோரிக்கையும் ஒன்று. "சிங்கள இராணுவமே தமிழீழத்தை விட்டு வெளியேறு" என்று மக்கள் அந்த நிகழ்வுகளில் கோசம் எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது. அந்தந்த நாட்டு பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்ட மனுவும் இந்தக் கோரிக்கையை உள்ளடக்கியதே. :lol:

பின்வரும் பதாகைகள் குறிப்பிட்ட அந்த நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்டவை:

support_tamil_eelam_poster23.jpg

support_tamil_eelam_poster24.jpg

support_tamil_eelam_poster25.jpg

இது பயன்படுத்தினார்களோ தெரியாது:

support_tamil_eelam_poster26.jpg

நான் குறிப்பிடுவது எமது பிரதான குரலாக யுத்த நிறுத்தம் இருப்பது போன்று தமிழீழ நிலப்பரப்பை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப் படைகளை வெளியேற்ற நாம் ஸ்திரமான தொடர்சியான குரல்களை எழுப்பவும் இல்லை; அது தொடர்பாக தெளிவுறுத்தல்களை முன் வைத்து சர்வதேசத்தை நோக்கி நாம் செல்லவும் இல்லை. 10 தோட 15 பிடிக்கிற அல்லது போடுற கோசமானதல்ல சிங்களப் படைகளை வெளியேற்றும் கோரிக்கை என்பது.

சிறீலங்கா அரசு.. முன் வைக்கும் பிரதான கோரிக்கை.. மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிப்பதும் மக்களை வெளியேற்றுவதையுமே. வேறெதையும் அல்ல. ஆனால் நாம் அந்த மக்கள் வெளியேற்றக் கோரிக்கையை நிராகரிக்கக் கூடிய காரணங்களையும் அதேபோன்ற ஆனால் சிறீலங்கா அரசுக்கு சவாலாக அமையக் கூடிய கோரிக்கைகளையும் முன்னிறுத்தவில்லை. வெறும் கோசங்களாக பதாதைகளாக இருப்பது அல்ல முக்கியம். எமது கோரிக்கைகளின் முன்னிலைக்கு இவை வரவேண்டும். அப்போதுதான் உலகம் அதை உற்று நோக்கும்.

கிழக்குத்தீமோர் பிரச்சனையில் கூட இந்தோனிசியப் படைகளின் வெளியேற்றமும் அவுஸ்திரேலிய நியூசிலாந்துப் பட்டைகளின் பிரச்சன்னமும் வழியுறுத்தப்பட்டு வந்தது போன்று நாம் சிறீலங்காப் படைகளின் வெளியேற்றத்தையும் சிறீலங்காப் படைகளின் இருப்பு எமக்கு பாதுகாப்பற்றது என்பதையும் சரியான சான்றுகளோடு உலகின் முன் நிலை நிறுத்த வேண்டும்.

சிறீலங்கா படைகளின் இருப்புக்குள் தான் 1983 இனக்கலவரம் நிகழ்ந்தது. பல்வேறு படுகொலைகள் நிகழ்ந்தன. செம்மணிப்படுகொலைகளும் அங்கு தான் நிகழ்ந்தன. அப்படியான படைகளின் ஆக்கிரமிப்புக்குள் எப்படி மக்கள் இடம்பெயர்வதால் பாதுகாப்பைப் பெறமுடியும்.

இன்றைய போராட்டங்கள் சர்வதேச கவனத்தைப் பெற்ற செம்மணிப் படுகொலை முன்னிறுத்தப்படுவதும் இல்லை. கிழக்கில் நடத்த படுகொலைகள் முன்னிறுத்தப்படுவதும் இல்லை. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் நடக்கும் அட்டூழியங்களை நாம் தெளிவாகச் சொன்னால் மட்டுமே மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் போகச் சொல்லும் சர்வதேசத்தின் கருத்துக்களை முறியடிக்க முடியும். அவர்களை உண்மையான மனிதாபிமான அணுகுமுறை குறித்து சிந்திக்க வைக்க முடியும்.

வெறும் பதாதைகளை பிடிப்பது அல்ல முக்கியம். எமது கருத்துக்களில்.. குரல்களில் இவை முதன்மை பெற வேண்டும். அப்போதுதான் சர்வதேசத்தின் கவனம் அவற்றின் திசையில் அமையும். பலமான ஆதாரங்கள் இருந்தும் பலர் சுட்டிக்காட்டத் தவறிவிடுகின்றனர்.

செம்மணிப் படுகொலைகள் சரி.. போர் நிறுத்த ஒப்பந்த காலப் படுகொலைகள்.. அதன் பின்னான யாழ்ப்பாணப் படுகொலைகள் எதுவுமே இன்று முன்னிறுத்தப்படுவதில்லை. வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்கள் மட்டும் மடிவதாக மட்டுமே உலகம் தோற்றம் காட்டுகிறது. நாமும் அதற்கு ஏற்றார் போல் மெத்தனமாக இவ்விடயங்களில் முக்கியமளிக்கின்றோம். இது போதாது என்பதே எனது கருத்து..! நாம் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள்.. கடந்த கால அழிவுகள் தொடர்பில் பலமான காத்திரமான குரலை முன்னிலைப்படுத்தி எழுப்ப வேண்டியவர்களாக இருக்கிறோம். அதன் பின்னணியில் இராணுவ வெளியேற்றம் குறித்தும் நாம் வலியுறுத்த வேண்டும்..! :mellow:

Edited by nedukkalapoovan

உண்மைதான் நெடுக்காலபோவான்.

இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடந்த நடக்கும் இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றிய கோசங்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். இதனூடாக இராணுவம் தமிழீழ நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியதற்கான சூழ்நிலையை தோற்றுவிக்க வேண்டும். தனியே போர்நிறுத்தம்் என்பது மக்களை வெளியேற்றி புலிகளை தனிமைப்படுத்தி அழிப்பதற்கான சிறீலங்கா இந்திய கூட்டுச்சதியாகவே அமையும்.

சமாதான நகரம் என மேற்குலகால் வர்ணிக்கப்பட்ட திருகோணமலையில் 2006 ம் ஆண்டில் அரசபடைகளுடன் ஒத்துழைப்புடன் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனக்கலவரம் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடந்த இனஅழிப்பிற்கான அண்மைக்கால பதிவாகும்.

யுத்த நிறுத்தத்துக்கான அழைப்புப்பொய்யாம் மகிந்த சமரசிங்க சொன்னவராம்.... அது வெறும் வதந்தியாம்.

வதந்தி பரப்பினதுக்கு கேகலியவை பிடிப்பாங்களோ? :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களுக்காவே போரை மகிந்த அரசாங்கம் நிறுத்த தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

அனைத்துலக நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் நிதியை கடன் பெறுவதற்காகவே அரசாங்கம் போரை நிறுத்தும் நாடகம் ஒன்றை ஆடுவதாகவும அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நன்றி புதினம்.

Edited by nunavilan

ஐ நா விற்கும் அல்வா, இந்தியாவிற்கும் அல்வா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.