Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கொரு சந்தேகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் கட்டுவது எதுக்காக?

Edited by sagevan

  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் கட்டுவது எதுக்காக?

இதென்னக் கேள்வி? கல்யாணமாகத்தான்! :(

கலியானம் கட்டுவது எதுக்காக?

ஐயோ இது என்ன கொடுமை சஜீவன் நீங்கள் ஒகேயா? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ இது என்ன கொடுமை சஜீவன் நீங்கள் ஒகேயா? :(

சஜீவன் இந்த பிள்ளை ஓகே போல கல்யாணம் கட்டி பாருங்க புரியும்.

கலியானம் கட்டுவது எதுக்காக?

என்ன குழந்தை பெற்று குடும்பத்தை பெருக்கவா இருக்கும்??????????

  • கருத்துக்கள உறவுகள்

'பரமபதம்" என்றொரு விளையாட்டு. ஏணியும், பாம்பும் அதில் பலப்பல அளவுகளில் இருக்கும். அதில் ஏணியில் ஏறுவதைவிட பாம்பின் வாய்க்குள் விழுவதுதான் அதிகம். அதற்காக முயற்சியை யாரும் விடுவதில்லை. திரும்பத் திரும்ப ஏறி ஏறி விழுவதுதான் வழக்கம்.

இளமையில்தான் இந்த விளையாட்டில் ஏறுவது;, இறங்குவதும், விழுவதும் , எழும்புவதும். ஆனால் இதையெல்லாம தாண்டி பிள்ளைகள் கடமைகள் என முடித்துவிட்டு துணையுடன் கரம் கோர்த்து ஏணியையும் எட்டி உதைத்துவிட்டு பாம்பையும் எத்தித் தள்ளிவிட்டு சேர்ந்து நடக்கும்போதுதான் அதன் அர்த்தம் புரியும். அந்தப் பழமரத்துக்கு முதல் இடும் விதைதான் கலியாணம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பூமிப்பந்தில் மனிசனைத்தவிர வேறெந்த உயிரினமும் கலியாணம் என்று கட்டுறதில்ல. ஆனால் இனத்தைப் பெருகுது.. வாழுது... இறக்குது.

மனிதனும் அதையேதான் செய்கிறான். அதை விட தனக்குத்தானே நிறைய ஏற்றத்தாழ்வுகளை வகுத்து அடிபட்டு அழிஞ்சும் போகிறான். இந்த இலட்சனத்தில் கலியாணம் என்பது மனிதன் அரங்கேற்றும் ஏமாற்று வித்தை. அதுதான் உண்மை..! :(

சஜீவன் இந்த பிள்ளை ஓகே போல கல்யாணம் கட்டி பாருங்க புரியும்.

பிரசாந் தள்ளாத வயதில் எனக்கு ஏன் கல்யாணம்... என்னோட கிழவனுக்கு தெரிந்தால் உங்களை அடிக்க வர போறார்.... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேக்கு டவுட்டா இருக்குது வேறமாதிரி திங்பன்னிப்போட்டன் அண்ணே நீங்கள் வேறமாதிரி ஆள் இல்லத்தான :(

என்ன குழந்தை பெற்று குடும்பத்தை பெருக்கவா இருக்கும்??????????

கூட்டவோ, பெருக்கவோ இருக்காது, கலியாணம் கட்டாமேல குழந்தை பெற்று குடும்பத்தை பெருக்ககிறவர்கள் எல்லா சமுகத்திலும் உள்ளனர்.

உடல், உள ரீதியான பாதுகாப்பிற்காக கலியாணம் கட்டுவது என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன சஜீவன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இவன் இப்படி மொட்டடையாய் கேட்டுப்போட்டு போட்டானே என்று குழம்மபிறது விழங்குது.சரி விசயத்துக்கு வாறன்.எமது சமூகத்தில் கலியானம் என்பது ஒரு இன்பகரமான,எதிர்பார்ப்புகள் நிறைந்த விடையமாகவே இருந்து வந்துள்ளது.காரனம் ஆணுக்கு பெண் வாடையோ அல்லது பெண்ணுக்கு ஆண் வாடையோ கலியானம் கட்டினால்தான் கிட்டும்.(இப்பவெல்லாம் இதுகளுக்கும் கலியானத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பது வேறு விசயம்.)அடக்கி வைச்ச ஆசைகளையும்,பொத்தி வைச்ச ரசனைகளையும் கொட்டித்தீர்க்கும் காலம் வரும்.அதுக்குப்பின் அவரவர் ரசனைகளுக்கேற்ப காதலாகி கசிந்துருகிவினம்.அந்த உருக்கத்தினால் உண்டாகும் வாரிசுகளை நல் வழியில் வழர்த்தெடுக்க முயற்சிப்பினம்.இதுவே திருமணத்துக்கான பொதுவான காரணங்களாக இருந்து வந்துள்ளது.ஆனால் இப்ப சேர்ந்து உழைத்து மற்றவனை விட கூட சொத்து சேர்ப்பதுக்கும் தான் பெரும்பாலாநோர் கலியானம் கட்டுகினம் போல இருக்கு உதாரனத்துக்கு முன்பு ஒரு தம்பதியினனரின் உரையாடல் பின் வருமாறு இருக்கும்,

கணவண்--சரி நாண் வேலைக்கு போட்டு வாறன்.

மனைவி--என்னங்கோ இண்டைக்கு லீவு போடுங்கோவன்.

கணவன்--எனக்கு மடடும் என்ன உன்னை விட்டுட்டு போகவேனும் என்று விருப்பமா.

மனைவி--சரி சரி அப்ப கொஞ்சம் கெரியா வரப்பாருங்கோ.

இப்ப அதுவும் இங்க புலம் பெய் நாடுகளில்(பெரும்பாலான) உரையாடல்கள் பின்வருமாறு இருக்கும்.

கணவன்--சரி நான் வேலைக்கு போட்டு வாறன்.(இதைக்கேக்க மனைவி வீடடிலிருக்வேனுமே.இருந்தால்)

மனைவி--ஆடிக்கொன்டிருக்காமல் ஓடுங்கோ.5 நிமிசம் பிந்தினாலும் அரை மணித்தியால காசு துலைஞ்சிடும்.

கணவன்--நான் அபடியே பின்நேர வேலையும் முடிச்சுதான் வருவன்.நீரும் கெரியா ஓடும்.

மனைவி--ம்ம்,அவதிப்படாமல் நின்று ஒரு அரை மணத்தியாலம் கூடச்செய்து போட்டு வாங்கோ.

இதுக்கு கலியானம் என்று ஒன்று தேவையா?சரி இதுகளையும் விடுவம்.இப்ப இங்க இருக்கிற தம்பதிகளில (பெரும்பான்மையான)பெண்களுக்கு தனது கணவனின் விருப்பு வெறுப்புகள் எது என்று தெரியாது.ஆனால் அடுத்தவளிட்ட எத்தினை பவுண் நகை இருக்குது,என்ன உடுத்துறாள் என்ன பூசுறாள்,அளின் வீடு எவளவு சதுர மீற்றர் என்பது எல்லாம் அத்துப்படி.அதே மாதிரி (பெரும்பாண்மையான ஆண்களுக்கு)தனது மனைவியின் விருப்பு வெறுப்புகள் தெரியாது.ஏன் மனைவிக்கு எங்கை எங்கை மச்சம் இருக்குது என்று கூடத்தெரியாது.ஆனால் மற்றவனுக்கு எவளவு சம்பளம்,அவன் எத்தினை வேலை செய்கிறான்,அவன்ரை கார் என்ன விலை.அது எவளவு கி.மீ ஓடிட்டுது என்டதல்லாம் அத்துப்படியாக இருக்கும்.இதை விட பிள்ளைகள் சம்பந்தமான போட்டிகள் அவையின்ரை பிள்ளை என்ன செய்யுதோ அதை தன்ரை பிள்ளையும் செய்ய வேனும்.அது என்ன என்று ஒரு விளக்கமும் இருக்காது.இந்த லூசுகளின்ரை போட்டடியால அந்த பிஞ்சுகளின் உணர்வுகள் பந்தாடப்படும்.இப்படி மற்றவனுக்காக தான் வாழ வேண்டும்,காசு பணம் சேர்பது தான் வாழ்க்கை என்றால் ஏன் கலியானம் கட்ட வேனும்.பேசாமல் தனிய இருந்து 24 மணி நேரமும் உழைக்கலாமே.

பி.கு---இது நான் கண்ணால கன்டது மற்றும் சில உரையாடல்களை கேட்டதன் விளைவு தான் மேலுள்ள எனது சந்தேகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொன்னவை உண்மையே இன்று பல வீடுகளில் நடக்கும் சம்பவங்கள் தான். இப்படியாக போகும் வாழ்க்கையில் உங்களுக்கு வந்த சந்தேகம் எனக்கும் சரியாத்தான் தெரியுது.

ம்ம்ம்ம்........இந்த விசயத்திலை நான் ரொம்ப அதிர்ஷ்ட சாலியப்பா. என் மனைவி இருக்காளே. தவம் இருந்து கிடைத்த வரம் போல.

சரி..சரி உங்கண்டை சாட்டிலை யாழ் மூலம் என் மனுசிக்கும் நன்றியை சொல்லி விடுவம்.

சஜீவனுக்கும் நன்றி(இப்படி நான் என் மனைவிக்கு நன்றி சொல்ல சந்தர்ப்ப சூழலை தந்ததுக்கு)

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண வெளிநாட்டுக்கு வந்தவையில 75% ஆன ஆக்கள் ஊரில வேலைவிட்டி இல்லாம சுத்திக்கிட்டு இருந்த ஆக்கள்... ஓல் பெயில்விட்ட ஆக்கள... ஏல்ல தட்டுப்பட்ட ஆக்கள்.. மதகில/மதிலில உக்காந்திருந்த ஆக்கள்.. றோட்டில சைக்கிளில சுத்தின ஆக்கள்.. மோட்டர் சைக்கிளில பெட்டையளை/பெடியளை கலைச்சுத் திரிஞ்ச ஆக்கள்.. மற்றும் மத்திய கிழக்கில வேலை செய்யப் போய் வேலையை விட்டிட்டு.. அகதியா போகலாம் என்று ஓடி வந்த ஆக்கள்.. (உண்மையா இராணுவ நெருக்குவாரத்தால வந்தாக்கள் ஒரு 25% தான் இருக்கும்) இவைதான் இப்பத்தைய புலம்பெயர் சமூகத்தின் முக்கிய குடும்ப உறுப்பினர்கள்.

இவர்களிடம் போய் குடும்பம் என்றால் என்ன.. அதனை எப்படி பராமரிக்கிறது.. கலியாணம் என்றால் என்ன.. மனைவி என்றால் என்ன.. கணவன் என்றா என்ன என்ற விளக்கத்தோட குடும்பம் அமைக்கச் சொல்ல முடியுமா அண்ண.

அவைக்கு தேவை காசு. அதை வைச்சு.. நாலு பேருக்கு காட்ட ஒரு வாழ்க்கை அமைஞ்சா காணும். இவர்களிடம் போய்.. அன்பு.. பாசம்.. கருணை.. தயவு.. புரிந்துணர்வு.. ஒற்றுமை.. அமைதி.. மகிழ்ச்சி.. பற்றி குடும்ப தத்துவங்கள் பேசினால்.. அவையறியாப் பேச்சு.. மேடைக்கு ஆகாது என்ற கணக்கில தான் முடியும்.

( அன்று ஒரு புலம்பெயர் நாட்டில் தமிழ் குடும்பம் வீட்டுக்கு குழந்தை பிறப்புத் தொடர்பாக வைத்திய, சுகாதார உதவி வழங்கச் செல்ல வேண்டி ஏற்பட்டது. அந்தக் குழந்தை படுக்க வைக்கப்பட்டிருந்த தொட்டிலில் குழந்தை ஒரு மூலையில்.. தொட்டிலின் மறுமூலையில்.. துவாய்.. போச்சிப் போத்தல்.. பால்மா ரின்.. குழந்தை விளையாட என்று பெரிய ஒரு பொம்மை.. (குழந்தை பிறந்து 5 கிழமைதான்).. குழந்தையின் நப்பி.. இப்படி பெரும் பொருட் குவியல் கிடந்தது. போன எமக்கு அதிர்ச்சிதான் மிச்சம். இன்னொரு வீட்ட போன.. அந்த அம்மாவுக்கு குழந்தை பிறப்பின் பின்னான மன அழுத்தம். அதைக் கணவர் இனங்காணமால் விட அது முத்தி அந்தம்மாக்கு சொந்தப் பிள்ளை மீதே வெறுப்பு. இப்போ பிள்ளையை பிரிச்சு.. குழந்தைகள் நலக் காப்பகத்தில் சேர்க்க பரிந்துரைத்து இருக்குது. இப்படி நம் தமிழர் வீடுகளிலும் ஆபிரிக்கர்களின் வீடுகளிலுமே அதிகம் அவதானிக்க முடியுது. இதுகளுக்கு ஏன் ஒரு கலியாணம்.. குழந்தை குட்டி..???! குடும்பம் என்றது சிலர் நினைக்கினம்.. பெட்டை பொடியை கலியாணம் செய்து கொடுக்கிறதோட அமைச்சிடும் என்று. அதற்கும் ஒரு அடிப்படை அறிவு அவசியம். அது பல புலம்பெயர்ந்தவர்களிடம் இல்லை..! இன்னும் சிலது பிள்ளைகளை கண்டிக்க வேண்டிய இடத்தில் கூட கண்டிப்பதில்லை. ஊரில எங்க அம்மா அப்பா இப்படி வளர்க்கல்லையே என்றிட்டு... பிள்ளைகள் மீது அளவுக்கு அதிகமான செல்லம் கொடுக்கினம். அதுவும் ஆபத்தே..! ) :(

இதுதான் யதார்த்தம்..! வேணும் என்றால் ஒரு கணக்கெடுப்பு எடுத்துப் பார்ப்போம் வாங்கோ..! :lol:

Edited by nedukkalapoovan

நீங்கள் சொன்னவை உண்மையே இன்று பல வீடுகளில் நடக்கும் சம்பவங்கள் தான். இப்படியாக போகும் வாழ்க்கையில் உங்களுக்கு வந்த சந்தேகம் எனக்கும் சரியாத்தான் தெரியுது.

ம்ம்ம்ம்........இந்த விசயத்திலை நான் ரொம்ப அதிர்ஷ்ட சாலியப்பா. என் மனைவி இருக்காளே. தவம் இருந்து கிடைத்த வரம் போல.

சரி..சரி உங்கண்டை சாட்டிலை யாழ் மூலம் என் மனுசிக்கும் நன்றியை சொல்லி விடுவம்.

சஜீவனுக்கும் நன்றி(இப்படி நான் என் மனைவிக்கு நன்றி சொல்ல சந்தர்ப்ப சூழலை தந்ததுக்கு)

என்ன பிரசாந் நன்றி சொல்லுவதை பார்த்தால் உங்க மனைவி இங்க இருப்பது போல அல்லாவ இருக்கு???? உண்மையோ? :(

  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் கட்டுவது எதுக்காக?

யாருக்கு தெரியும் :(

யாருக்கு தெரியும் :(

நல்ல பதில்...காலையில் மூடு அவுட்லை இருந்தன் இந்த் பதிலை பார்த்த பிறகு சிரிக்கமால் இருக்க முடிய வில்லை... நன்றி கறுப்பி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ண வெளிநாட்டுக்கு வந்தவையில 75% ஆன ஆக்கள் ஊரில வேலைவிட்டி இல்லாம சுத்திக்கிட்டு இருந்த ஆக்கள்... ஓல் பெயில்விட்ட ஆக்கள... ஏல்ல தட்டுப்பட்ட ஆக்கள்.. மதகில/மதிலில உக்காந்திருந்த ஆக்கள்.. றோட்டில சைக்கிளில சுத்தின ஆக்கள்.. மோட்டர் சைக்கிளில பெட்டையளை/பெடியளை கலைச்சுத் திரிஞ்ச ஆக்கள்.. மற்றும் மத்திய கிழக்கில வேலை செய்யப் போய் வேலையை விட்டிட்டு.. அகதியா போகலாம் என்று ஓடி வந்த ஆக்கள்.. (உண்மையா இராணுவ நெருக்குவாரத்தால வந்தாக்கள் ஒரு 25% தான் இருக்கும்) இவைதான் இப்பத்தைய புலம்பெயர் சமூகத்தின் முக்கிய குடும்ப உறுப்பினர்கள்.

இவர்களிடம் போய் குடும்பம் என்றால் என்ன.. அதனை எப்படி பராமரிக்கிறது.. கலியாணம் என்றால் என்ன.. மனைவி என்றால் என்ன.. கணவன் என்றா என்ன என்ற விளக்கத்தோட குடும்பம் அமைக்கச் சொல்ல முடியுமா அண்ண.

அவைக்கு தேவை காசு. அதை வைச்சு.. நாலு பேருக்கு காட்ட ஒரு வாழ்க்கை அமைஞ்சா காணும். இவர்களிடம் போய்.. அன்பு.. பாசம்.. கருணை.. தயவு.. புரிந்துணர்வு.. ஒற்றுமை.. அமைதி.. மகிழ்ச்சி.. பற்றி குடும்ப தத்துவங்கள் பேசினால்.. அவையறியாப் பேச்சு.. மேடைக்கு ஆகாது என்ற கணக்கில தான் முடியும்.

நெடுக்கு அண்ணா இதன் மூலம் நீங்கள் எதை சொல்ல வருகிறீர்கள்?

ஓ எல்,ஏ எல்ல தட்டுப்பட்டவர்களுக்கு அறிவில்லை அல்லது அவர்கள் திருமணம் செய்யக்கூடாதா? இல்லை அவர்களால் சந்தோசமாக வாழ முடியாது என்று சொல்கிறீரா? அல்லது நீங்கள் படித்தவர் உங்களைப்போல் படித்தவர்கள் மட்டும் தான் திருமணம் செய்யலாம்,புரிந்துணர்வோடு நடக்கலாம் என்கிறீர்களா? அல்லது மதகில் இருந்தவர்கள்,பெட்டை,பொடியனுக

்கு பின்னலை திரிஞ்சவர்கள் எல்லாரும் கூடாதவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா? அல்லது மத்தியகிழக்கு நாடுகளில் வேலை பார்ப்பது தரக்குறைவு என்று சொல்ல வருகிறீரா?

இல்லை நீங்கள் சொன்ன 75சதவிகிதம் பேரும் திருமணம் செய்யக்கூடாது என்கிறீரா?

சரி நீங்கள் சொன்னமாதிரி பார்த்தாலே இவர்கள் ஓ எல்,ஏ எல் படிக்க முடியாததற்கு அல்லது அதுக்கு மேல் படிக்க முடியாமல் போனதற்கு காரணம் எம் நாட்டின் கல்விச்சட்டம், தமிழர் மீதான சிங்களவனின் அடக்குமுறை,வறுமை. மற்றது ஏன் எம் சகோதரர்கள் மத்திய கிழக்கிற்கு செல்கின்றனர் குடும்ப வறுமை. உங்களைப்போல் வசதியானவர்கள் ஜரோப்பிய நாடுகளுக்கு வந்துவிட்டால். கஸ்ரப்பட்டவர்கள் என்ன செய்ய?

என் எம் இளைய சமுதாயம் மதிலிலும்,மதகிலும் இருக்குது? அவர்களுக்கு வேலை இல்லை வேலை இருந்தால் ஏன் வீதியில் நிற்க வேண்டும்?

அப்புறம் விலங்குகளுக்கு கூட அவற்றின் துணைகளை பார்க்கும் சக்தி இருக்கும் போது ஓஎல்,ஏஎல் படிக்கத மனிதரிடம் அன்பு,பாசம்,கருணை இல்லை என்கிறீரா இல்லை படித்தவர்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்கிறீரா? அப்படி என்றால் விலங்குகளுக்கெல்லாம் யாராவது பாடம் நடத்தினார்களா? ஒரு சேவல் நாய்க்குட்டிகளை பராமரிக்கிறது தாய் பன்றி இறந்து போக குட்டிகளுக்கு நாய் பால் கொடுக்கிறது, தாயை பிரிந்து,அல்லது கன்றை பிரிந்து பசு கூட பிரிவால் அழுகிறதே. எறும்புக்கு வரிசையாக போக சொல்லி யார் பாடம் நடத்தினார்கள்? இப்படி நிறைய சம்பவங்களை பார்க்கிறோம்,கேட்கிறோம். இப்படி இருக்கையில் நீங்கள் சொன்னது போல சிலர் இருக்கிறார்கள் தான் அதுக்காக ஒட்டுமொத்த 75 வீதத்தினரும் கல்யாணம் செய்ய கூடாதவர்கள் என்று நியாயப் படுத்த முனைகிறீர்களா?

என்ன பிரசாந் நன்றி சொல்லுவதை பார்த்தால் உங்க மனைவி இங்க இருப்பது போல அல்லாவ இருக்கு???? உண்மையோ? :(

சுஜி யாழுக்கு வந்து போவா ,,.. இதையெல்லாம் சொன்னால் உங்கள் குடும்ப விசயத்தை யாழில் எழுத இது கேளிக்கை தளம் இல்லை என்று சொல்வார்கள். அது உண்மைதானெ

சரி விடுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு அண்ணா இதன் மூலம் நீங்கள் எதை சொல்ல வருகிறீர்கள்?

ஓ எல்,ஏ எல்ல தட்டுப்பட்டவர்களுக்கு அறிவில்லை அல்லது அவர்கள் திருமணம் செய்யக்கூடாதா? இல்லை அவர்களால் சந்தோசமாக வாழ முடியாது என்று சொல்கிறீரா? அல்லது நீங்கள் படித்தவர் உங்களைப்போல் படித்தவர்கள் மட்டும் தான் திருமணம் செய்யலாம்,புரிந்துணர்வோடு நடக்கலாம் என்கிறீர்களா? அல்லது மதகில் இருந்தவர்கள்,பெட்டை,பொடியனுக

்கு பின்னலை திரிஞ்சவர்கள் எல்லாரும் கூடாதவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா? அல்லது மத்தியகிழக்கு நாடுகளில் வேலை பார்ப்பது தரக்குறைவு என்று சொல்ல வருகிறீரா?

இல்லை நீங்கள் சொன்ன 75சதவிகிதம் பேரும் திருமணம் செய்யக்கூடாது என்கிறீரா?

சரி நீங்கள் சொன்னமாதிரி பார்த்தாலே இவர்கள் ஓ எல்,ஏ எல் படிக்க முடியாததற்கு அல்லது அதுக்கு மேல் படிக்க முடியாமல் போனதற்கு காரணம் எம் நாட்டின் கல்விச்சட்டம், தமிழர் மீதான சிங்களவனின் அடக்குமுறை,வறுமை. மற்றது ஏன் எம் சகோதரர்கள் மத்திய கிழக்கிற்கு செல்கின்றனர் குடும்ப வறுமை. உங்களைப்போல் வசதியானவர்கள் ஜரோப்பிய நாடுகளுக்கு வந்துவிட்டால். கஸ்ரப்பட்டவர்கள் என்ன செய்ய?

என் எம் இளைய சமுதாயம் மதிலிலும்,மதகிலும் இருக்குது? அவர்களுக்கு வேலை இல்லை வேலை இருந்தால் ஏன் வீதியில் நிற்க வேண்டும்?

அப்புறம் விலங்குகளுக்கு கூட அவற்றின் துணைகளை பார்க்கும் சக்தி இருக்கும் போது ஓஎல்,ஏஎல் படிக்கத மனிதரிடம் அன்பு,பாசம்,கருணை இல்லை என்கிறீரா இல்லை படித்தவர்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்கிறீரா? அப்படி என்றால் விலங்குகளுக்கெல்லாம் யாராவது பாடம் நடத்தினார்களா? ஒரு சேவல் நாய்க்குட்டிகளை பராமரிக்கிறது தாய் பன்றி இறந்து போக குட்டிகளுக்கு நாய் பால் கொடுக்கிறது, தாயை பிரிந்து,அல்லது கன்றை பிரிந்து பசு கூட பிரிவால் அழுகிறதே. எறும்புக்கு வரிசையாக போக சொல்லி யார் பாடம் நடத்தினார்கள்?

இப்படி நிறைய சம்பவங்களை பார்க்கிறோம்,கேட்கிறோம். இப்படி இருக்கையில் நீங்கள் சொன்னது போல சிலர் இருக்கிறார்கள் தான் அதுக்காக ஒட்டுமொத்த 75 வீதத்தினரும் கல்யாணம் செய்ய கூடாதவர்கள் என்று நியாயப் படுத்த முனைகிறீர்களா?

நல்லது. இப்படிக் கேட்கனும் என்றதிற்காகத்தான் எழுதினன்.

1. கலியாணம் என்றதை அர்த்தப்படுத்த வேலை இருக்கோ இல்லையோ அடிப்படை குடும்ப அறிவு வேணும் மக்களுக்கு. அது பலருக்கு இல்லை. அதை நான் நேரடியாக கண்டிருக்கிறேன்.

எப்படியானவர்களிடம் குடும்ப அறிவு இல்லை அல்லது அதைத் தேடிப் பெறுவதற்கான ஆர்வம் இல்லை என்று தேடிய போது மேற்படி பின்னணி உள்ளவர்களிடம் அது குறைவாக உள்ளமை அவதானிக்கப்பட்டிச்சு. அதைத்தான் வரிசைப்படுத்தினன். காரணம்.. அவர்கள் குடும்பம் பற்றிய அறிவின்றியே குடும்பங்களை அமைக்கின்றனர்.

நாய் குட்டி போட்டு வளர்ப்பதும்.. மனிதன் குழந்தை பெற்று வளர்ப்பதும் அடிப்படையில் இனவிருத்தி என்றாலும்.. மனித குடும்ப வாழ்வியல் என்பது நாயில் இருந்து வேறுபட்டது. இந்த அடிப்படையை புரிஞ்சுக்கனும். இல்ல எல்லாமே குழப்பமாகிடும்.

2. குடும்பம் என்பது ஒரு பெண்ணும் ஆணும் கூடி வாழ்ந்து குழந்தை பெறுவதில் மட்டுமல்ல. அந்தக் குடும்பம் என்பதுதான் சமூகத்தின் அடிப்படை அலகு. ஒவ்வொரு குடும்பத்தின் நிலையும் உயர்வாக இருந்தால் தான் சமூகம் செழிப்பாக இருக்கும்.

கல்வி அறிவு.. சமூக அறிவு.. பொது அறிவு.. நிர்வாக.. அறிவு. பொருளாதாரம் என்று பலதரப்பட்ட அம்சங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருப்பின் அந்தக் குடும்பம் மட்டுமல்ல அந்தக் குடும்பங்கள் சார்ந்த சமூகமும் செழிப்போடு இருப்பதைக் காண்கிறம்.

ஏன் எம்மவர்களிடையேயே.. கொஞ்சம் படிச்சவை.. படிக்காத ஆக்களோட கூடி சமூகமாக இருக்க விரும்பினம் இல்லை. வெள்ளைக்காரன் குப்பையா இருந்தாலும் அவன் கூட ஒட்டிறதை பெருமையா நினைக்கினம். ஏன் இந்த நிலை..??!

இதற்கு அடிப்படைக் காரணம்.. குடும்பங்களின் நிலைகள். அறிவூட்டமுள்ள குடும்பங்கள் தரத்தில் சிறப்பாக இருக்க அறிவூட்டமற்ற குடும்பங்கள் தரத்தில் தாழ்ந்திருக்க சமூக ஏற்றத்தாழ்வு வருகுது. அடிப்படை பண வசதிகள் இருப்பினும்.. அறிவூட்டம் என்பது முக்கியம். பணத்தைக் கூட பயனுள்ள வழியில் செலவு செய்ய.

எமது சமூகத்தில் இன்று அடிப்படை குடும்ப அறிவற்ற பல குடும்பங்களைக் காண முடிகிறது. இதற்குக் காரணம்.. இடம்பெயர்வுகளும்.. கல்வி அறிவைப் பெறும் ஆர்வமின்மைகளும். பணத்தை எப்படியும் சம்பாதிச்சிட்டால் வாழ்ந்திடலாம் என்ற நிலையும். இது ஆரோக்கியமான குடும்ப நிலைக்கு உகந்ததல்ல என்பதுதான் என் கருத்து.

நான் குடும்பஸ்தன் அல்ல. அதனால் எனக்கு என்னைப் பற்றி இந்த வகையில் அளவீடு செய்ய முடியல்ல. இருந்தாலும்.. எண்ண அளவில் எனக்கென்று ஒரு குடும்பம் இருப்பின் அது சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்புச் செய்யக் கூடிய ஒரு குடும்பமாக அமைய வேண்டும் என்பதே விருப்பம். அதற்காக நான் மெத்தப்படிச்ச அறிவாளி என்பதல்ல எடுகோள். எமது சமூகத்தரம் இதர உயர்நிலைச் சமூகங்களுக்கு ஈடாக அமையனும் அதுதான் வீட்டிற்கும் நாட்டிற்கும் நலம் என்பதால் அப்படி எண்ணிக் கொள்கிறேன். அதற்கு அமையும் குடும்பங்கள் குடும்ப அறிவூட்டம் பெற்றவையாக அடிப்படை சமூக கல்வி பொருளியல் அறிவைக் கொண்டவையாக அல்லது அவற்ரைப் பெறும் ஆர்வத்தைக் கொண்டவையாக இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.

குடும்பம் என்பது இரண்டு நபர்களுக்குள் இயங்கினும்.. மொத்த சமூகத்திற்குமான அடிப்படை அலகு என்ற சிந்தனை.. மதில் மேல குந்தி இருக்கிறவனுக்கும்.. மதகு மேல இருக்க்கிறவனுக்கும் வர வாய்ப்பில்லை. ஆனால் அவனும் அதைப் பெற முடியும். ஆர்வம் காட்டினால் மட்டுமே. அதைச் செய்யனும் அனைவரும். அறிவு என்பது எப்போதும் பெறப்படக் கூடியது. ஆனால் எம்மவர்கள் வசதிகள் அமைந்திருந்தும் பெற முனைவதில்லை.. என்பதே எனது ஆதங்கம். இந்த ஆதங்கம் நிகழ்கால தரிசன உண்மைகளில் இருந்து பிறந்தவை. கற்பனையில் அல்ல..! :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு அண்ணா நீங்கள் சொன்னது சரியே இதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் இதற்குரிய காரண,காரியங்களுக்கான தீர்வு தான் நம்மிடையே தேவை.

இன்று அடிப்படை குடும்ப அறிவு பலருக்கு இல்லாமல் இருப்பதற்கான காரணம் எமது கல்வித்திட்டமே. அதாவது எனக்கு தெரிந்த வரையில் இலங்கை,இந்தியா போன்ற நாடுகளின் கல்வித்திட்டம் வெறும் பரீட்சைக்கு மாணவர்களை தயார்ப் படுத்த உதவுதே தவிர வாழ்க்கைக்கு உதவுவது குறைவாகவே எனக்கு தெரிகிறது இது என் தனிப்பட்ட கருத்தே.

ஆனால் மேலைத்தேச நாடுகளைப் பொறுத்தவரை வாழ்க்கைப் பாடமாகவே இருக்கிறது.

உதாரணமாக மேலைத்தேய நாடுகளில் பாலியல் அடிப்படைக்கல்வி ஆனது மூன்றாம்,நான்காம் ஆண்டுகளிலேயே கற்பிக்கப் படுகின்றன. ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரை

ஏ எல் படிக்கும் மாணவர்கள் பலருக்கே தெரியாது. அதாவது அடிப்படை உடலியல்,உடலியங்கியல் தொழிற்பாடுகள் குறித்து ஏ எல் அதாவது பத்தொன்பது,இருபது வயது மாணவனுக்கு தெரியாத போது அடிப்படை குடும்ப அறிவு இல்லாமல் போவதற்குரிய காரணம் புரிகிறதல்லவா?

உண்மையில் ஓ எல்,ஏ எல் பாடப் புத்தகங்களில் சிறிதளவு சேர்க்கப்பட்டிருப்பினும் அதை படிப்பிப்பது மிகமிக அரிது. உண்மையில் நான் படிக்கும் போது ஏ எல் இல் பாடசாலையில்

ஒரு ஆசிரியை உயிரியல் படிப்பித்ததால் எங்களுக்கு சொல்லித் தரவே இல்லை நாங்கள் பரீட்சைக்காக தனியார் வகுப்பில் அதுவும் மேலோட்டமாக படித்தோம், பின்னர் மருத்துவம்

படிக்கும் போதுதான் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதாவது பாலியல் அல்லது அடிப்படை குடும்ப அறிவு பற்றி தெரிந்துகொள்ள நினைப்பதையே எமது சமூகம் தவறாக பார்த்தால்

அடிப்படைக் குடும்ப அறிவு எப்படி வரும்?

மற்றது கல்வி கற்றவர்களில் சிலர் தாம் மட்டும் தான் பெரியவர்கள் என்ற நினைப்பு அத்துடன் இவர்கள் தாம் தகுதியில் கூடியவர்கள் என்று நினைக்கிறார்கள் தமக்கு தெரிந்தவற்றை சொல்லி கொடுப்போம் அல்லது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதல்ல அத்தோடு வெள்ளைக்காரனுடன் பழகுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.

அத்தோடு எமது பண்பாடுகளை மறந்து அவர்களின் கலாச்சாரத்தோடு வாழப்பழகி விட்டார்கள். இதை பெருமையாக நினைக்கிறார்கள்.

அத்தோடு மேலைத்தேசத்தில் திருமணம் என்பதும் சரி,விவாகரத்தும் சரி சர்வசாதாரணமான ஒரு விடயம் ஆனால் இப்படி மேலைத்தேச கலாச்சாரத்தோடு ஒன்றி போனவர்களில் பலரும் இப்படி இருக்கினம் ஆனால் இதனைப் பார்த்து அடுத்த சந்ததியும் அதேவழியை பின்பற்ற போகிறதே என்பதை யாரும் நினைக்கவில்லை இது நாகரீகத்தின் வளர்ச்சி என வேறு சொல்கிறர்கள்.

என்னவோ கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர். புரிந்துணர்வும்,விட்டுக்கொட

Edited by prasaanth

ம்ம்ம்ம்........இந்த விசயத்திலை நான் ரொம்ப அதிர்ஷ்ட சாலியப்பா. என் மனைவி இருக்காளே. தவம் இருந்து கிடைத்த வரம் போல.

சரி..சரி உங்கண்டை சாட்டிலை யாழ் மூலம் என் மனுசிக்கும் நன்றியை சொல்லி விடுவம்.

சுஜி யாழுக்கு வந்து போவா ,,.. இதையெல்லாம் சொன்னால் உங்கள் குடும்ப விசயத்தை யாழில் எழுத இது கேளிக்கை தளம் இல்லை என்று சொல்வார்கள். அது உண்மைதானெ

சரி விடுங்க.

:D யாழுக்கு வந்து போவா, :lol: அடஅடஅட இருந்தாலும் ஐஸ் பெரிய கிலோ கணக்கிலதான் வச்சிட்டியள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களிடம் போய் குடும்பம் என்றால் என்ன.. அதனை எப்படி பராமரிக்கிறது.. கலியாணம் என்றால் என்ன.. மனைவி என்றால் என்ன.. கணவன் என்றா என்ன என்ற விளக்கத்தோட குடும்பம் அமைக்கச் சொல்ல முடியுமா அண்ண.

அவைக்கு தேவை காசு. அதை வைச்சு.. நாலு பேருக்கு காட்ட ஒரு வாழ்க்கை அமைஞ்சா காணும். இவர்களிடம் போய்.. அன்பு.. பாசம்.. கருணை.. தயவு.. புரிந்துணர்வு.. ஒற்றுமை.. அமைதி.. மகிழ்ச்சி.. பற்றி குடும்ப தத்துவங்கள் பேசினால்.. அவையறியாப் பேச்சு.. மேடைக்கு ஆகாது என்ற கணக்கில தான் முடியும்.

இப்படிப்பட்டவர்களை கண்டுகொண்டுதான் இருக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

'பரமபதம்" என்றொரு விளையாட்டு. ஏணியும், பாம்பும் அதில் பலப்பல அளவுகளில் இருக்கும். அதில் ஏணியில் ஏறுவதைவிட பாம்பின் வாய்க்குள் விழுவதுதான் அதிகம். அதற்காக முயற்சியை யாரும் விடுவதில்லை. திரும்பத் திரும்ப ஏறி ஏறி விழுவதுதான் வழக்கம்.

இளமையில்தான் இந்த விளையாட்டில் ஏறுவது;, இறங்குவதும், விழுவதும் , எழும்புவதும். ஆனால் இதையெல்லாம தாண்டி பிள்ளைகள் கடமைகள் என முடித்துவிட்டு துணையுடன் கரம் கோர்த்து ஏணியையும் எட்டி உதைத்துவிட்டு பாம்பையும் எத்தித் தள்ளிவிட்டு சேர்ந்து நடக்கும்போதுதான் அதன் அர்த்தம் புரியும். அந்தப் பழமரத்துக்கு முதல் இடும் விதைதான் கலியாணம்!!!

நல்ல உதாரணத்துடன் கூடிய சுவையான விளக்கம். குடும்ப பாரம் சிலநேரங்களில் வாழ்வின் அடிப்படை பொருளாதரம் வற்றிய நிலையில் சுமையாகவும், இடைவிடா வாழ்க்கை போராட்டத்தின் பலனை சுவைக்கும்போது சுகமாகவும் இருப்பதை உணர்த்தும் நிலையிது. எப்போதும் (மேலும் குறிப்பாக முதுமையில்) துன்பத்தில் துவளாமலும், இன்பத்தில் அகலாமலும் இருக்க ஒரு துணை நிச்சயம் தேவை. துணையை சேர்க்க, அதற்கு சமூக அங்கீகாரம் வழங்க, கல்யாணம்.. கச்சேரி... கொண்டாட்டம்.. எல்லாமே!

எண்ண அளவில் எனக்கென்று ஒரு குடும்பம் இருப்பின் அது சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்புச் செய்யக் கூடிய ஒரு குடும்பமாக அமைய வேண்டும் என்பதே விருப்பம். அதற்காக நான் மெத்தப்படிச்ச அறிவாளி என்பதல்ல எடுகோள். எமது சமூகத்தரம் இதர உயர்நிலைச் சமூகங்களுக்கு ஈடாக அமையனும் அதுதான் வீட்டிற்கும் நாட்டிற்கும் நலம் என்பதால் அப்படி எண்ணிக் கொள்கிறேன். அதற்கு அமையும் குடும்பங்கள் குடும்ப அறிவூட்டம் பெற்றவையாக அடிப்படை சமூக கல்வி பொருளியல் அறிவைக் கொண்டவையாக அல்லது அவற்ரைப் பெறும் ஆர்வத்தைக் கொண்டவையாக இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.

பொறுப்பான, சமூக அக்கறையுள்ள எதிர்பார்ப்பு. நிறைவேற வாழ்த்துக்கள்!

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:wub: யாழுக்கு வந்து போவா, :lol: அடஅடஅட இருந்தாலும் ஐஸ் பெரிய கிலோ கணக்கிலதான் வச்சிட்டியள். :lol:

என்ன குட்டி இப்படி சொல்றியள், உண்மைய கூடவா சொல்லக் கூடாது :lol:

ஆமா எப்படி இப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறிங்கள்? உட்கார்ந்திருந்து யோசிப்பிங்களோ :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு அண்ணா நீங்கள் சொன்னது சரியே இதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் இதற்குரிய காரண,காரியங்களுக்கான தீர்வு தான் நம்மிடையே தேவை.

இன்று அடிப்படை குடும்ப அறிவு பலருக்கு இல்லாமல் இருப்பதற்கான காரணம் எமது கல்வித்திட்டமே. அதாவது எனக்கு தெரிந்த வரையில் இலங்கை,இந்தியா போன்ற நாடுகளின் கல்வித்திட்டம் வெறும் பரீட்சைக்கு மாணவர்களை தயார்ப் படுத்த உதவுதே தவிர வாழ்க்கைக்கு உதவுவது குறைவாகவே எனக்கு தெரிகிறது இது என் தனிப்பட்ட கருத்தே.

ஆனால் மேலைத்தேச நாடுகளைப் பொறுத்தவரை வாழ்க்கைப் பாடமாகவே இருக்கிறது.

உதாரணமாக மேலைத்தேய நாடுகளில் பாலியல் அடிப்படைக்கல்வி ஆனது மூன்றாம்,நான்காம் ஆண்டுகளிலேயே கற்பிக்கப் படுகின்றன. ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரை

ஏ எல் படிக்கும் மாணவர்கள் பலருக்கே தெரியாது. அதாவது அடிப்படை உடலியல்,உடலியங்கியல் தொழிற்பாடுகள் குறித்து ஏ எல் அதாவது பத்தொன்பது,இருபது வயது மாணவனுக்கு தெரியாத போது அடிப்படை குடும்ப அறிவு இல்லாமல் போவதற்குரிய காரணம் புரிகிறதல்லவா?

உண்மையில் ஓ எல்,ஏ எல் பாடப் புத்தகங்களில் சிறிதளவு சேர்க்கப்பட்டிருப்பினும் அதை படிப்பிப்பது மிகமிக அரிது. உண்மையில் நான் படிக்கும் போது ஏ எல் இல் பாடசாலையில்

ஒரு ஆசிரியை உயிரியல் படிப்பித்ததால் எங்களுக்கு சொல்லித் தரவே இல்லை நாங்கள் பரீட்சைக்காக தனியார் வகுப்பில் அதுவும் மேலோட்டமாக படித்தோம், பின்னர் மருத்துவம்

படிக்கும் போதுதான் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதாவது பாலியல் அல்லது அடிப்படை குடும்ப அறிவு பற்றி தெரிந்துகொள்ள நினைப்பதையே எமது சமூகம் தவறாக பார்த்தால்

அடிப்படைக் குடும்ப அறிவு எப்படி வரும்?

மற்றது கல்வி கற்றவர்களில் சிலர் தாம் மட்டும் தான் பெரியவர்கள் என்ற நினைப்பு அத்துடன் இவர்கள் தாம் தகுதியில் கூடியவர்கள் என்று நினைக்கிறார்கள் தமக்கு தெரிந்தவற்றை சொல்லி கொடுப்போம் அல்லது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதல்ல அத்தோடு வெள்ளைக்காரனுடன் பழகுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.

அத்தோடு எமது பண்பாடுகளை மறந்து அவர்களின் கலாச்சாரத்தோடு வாழப்பழகி விட்டார்கள். இதை பெருமையாக நினைக்கிறார்கள்.

அத்தோடு மேலைத்தேசத்தில் திருமணம் என்பதும் சரி,விவாகரத்தும் சரி சர்வசாதாரணமான ஒரு விடயம் ஆனால் இப்படி மேலைத்தேச கலாச்சாரத்தோடு ஒன்றி போனவர்களில் பலரும் இப்படி இருக்கினம் ஆனால் இதனைப் பார்த்து அடுத்த சந்ததியும் அதேவழியை பின்பற்ற போகிறதே என்பதை யாரும் நினைக்கவில்லை இது நாகரீகத்தின் வளர்ச்சி என வேறு சொல்கிறர்கள்.

என்னவோ கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர். புரிந்துணர்வும்,விட்டுக்கொட

  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் கட்டுவது எதுக்காக?

என்ன சஜீவன் , சும்மா வயித்தெரிச்சலை கிளப்பிக்கொண்டு ...........

கலியாணம் கட்டியவன் ..... ஏன் கலியாணம் கட்டினேன் என்று யோசிப்பான் .

கலியாணம் கட்டாதவன் ..... எப்படா கலியாணம் கட்டுவேன் என்று ஏங்குவான் . :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Son: Dad, how much does it cost for a wedding?

Father: I don't know son, I am still paying for it!

:wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.