Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையோர் போராட்டங்களும்..இழிபிறப்புக்களும்...

Featured Replies

இன்று குயின்ஸ்பார்க்கில் கவனயீர்ப்பு நடந்துகொண்டு இருந்தபோது உரைகள் நிறைவடைந்ததும் மக்கள் தெருவில் இறங்கி பேரணியாக செல்லத் தொடங்கினார்கள். இதற்குரிய அனுமதியை மாணவர்கள் காவல்துறையிடம் பெற்று இருந்தார்கள். காவல்துறை அணிவகுக்க மக்கள் வெள்ளமாக தெருவில் இறங்கி அணிவகுத்து செல்லது தொடங்கினார்கள். இந்தநேரத்தில்...

ஓர் பெரிசு ஒலிபெருக்கியில் சத்தமாக குயின்ஸ்பார்க்கில் குழுமி இருந்த அனைவருக்கும் கேட்கும்வகையில் சத்தமாக சொன்னது "மக்களே நீங்கள் ஒருவரும் தெருவில் இறங்காதீர்கள். பார்க்கினுள்ளேயே நில்லுங்கள்" என்றது. உடனடியாக மாணவர்கள் ஓடிச்சென்று மக்கள் எல்லோரையும் தெருவில் இறங்குமாறு மீண்டும் அதே ஒலிபெருக்கியில் கூறினார்கள்.

இந்த பெரிசு வாயை மூடிக்கொண்டு கொஞ்சம் ஓரமாக ஒதுங்கி நின்று இருக்கலாம்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

.மாணவர் அமைப்பில் உள்ள பல மாணவர்கள் உண்மையான அர்ப்பணிப்புடன் செயப்பட்டாலும் சில மாணவர் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை.மக்கள் எல்லாரும் கோசம் போட்டுக் கொண்டு இருக்க இவர்கள் உண்ணாவிரத மேடைக்கு பக்கத்தில் இருந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார்கள்.தங்கள் சகோதரர்கள் உண்ணாமல் இருக்குறார்கள் என்பதை பற்றி இவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை அவர்களை பார்க்க நிற்பவர்கள் கூட[சில பேர்]எந்த நேரம் பார்த்தாலும் வாயில் சுவிங்கத்தை போட்டு சப்பிக் கொண்டு நிற்பார்கள்.

றதி,

மாணவர்களை குறை கூறிக்கொண்டு பெரியவர்கள் மட்டும் உண்மையான அர்ப்பணிப்புடனா இருக்கிறார்கள் ? கேள்விகள் எழுந்தால் விடைகள் தேடிக்கொண்டேயிருக்க வேண்டும். சிலருக்கு இத்தகைய பேரணிகள் கவன ஈர்ப்புகள் கோவில் திருவிழாபோலத்தானிருக்கிறத

போராட்டங்களில் ஈடுபடும் இளையோரைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. எனக்குத் தெரிந்த ஒருவர் தனது மகள் போராட்டங்களில் ஈடுபடுவதை விரும்பினாலும் இவ்வாறான தகவல்களினால் தனது கவலையையும் வெளியிட்டார்.

எங்காவது சில தவறுகள் நடந்திருக்கலாம். அதையே பெரிதாகத் தூக்கிப் பிடித்து எல்லோரிடமும் பேசி அச் செய்தியைப் பரப்பாதீர்கள். இதனால் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் போராட்டங்களில் ஈடுபடுவதை அனுமதிக்கத் தயங்குவார்கள்.

தவறாக ஏதாவது நடந்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி அதை நிவர்த்தி செய்ய முயல வேண்டும். சாத்திரி கூறியது போன்று கடுக்கண்ணோடு திரிந்தவர்கள் இன்று விடுதலைப் போராட்டத்தை சுமக்கத் தயாராகி விட்டார்கள். இவர்கள் எமக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை நிவர்த்தி செய்யக்கூடிய சக்தியைப். புலம்பெயர் நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். புரிந்து செயற்படுவோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய இந்த நேரத்தில் ஐரோப்பாவில் அகதித் தஞ்சம் கோரிக்கொண்டு இஞ்சையிருந்து அங்கையுள்ள மக்களை சுதந்திரத்தைப்பற்றி யோசிக்கச் சொல்லுகினம். இஞ்சை தசாப்தங்களாக வாழும் இவர்கள் போன்றோரால் என்னத்தை சாதிக்க முடியும் ?

சரி பிழை எல்லாரிடத்திலும் உண்டு. இதை சமன் பாக்க இப்ப தருணமில்லை.
:lol:

றதி இன்னொரு விடயம் பல பெரியவர்கள் இத்தகைய இடங்களில் குடித்துக் குடித்து அடிக்கம் கூத்துகளும் நிறைய.

சரி பிழை எல்லாரிடத்திலும் உண்டு. இதை சமன் பாக்க இப்ப தருணமில்லை.
:(

என்னவே ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு மாதிரி எழுதுங்க. நீங்களே கேள்வியும் போட்டு பதிலும் போட்டு சனத்தைக் குழப்பறதெண்டு முடிவெடுத்திட்டியள். ஆளாவந்தான் சொல்லிட்டான் எண்டு எதுகைமேனையில கவிதை எழுதினா தனிமடல்ல அறியத் தாருங்கோ. நான் கவிதைப்பக்கம் போறது குறைவு. இல்லாட்டி சரி பிழை எல்லாரிடத்திலும் உண்டு. இதை சமன் பாக்க இப்ப தருணமில்லை எண்டு விடுவமோ? ஓ உங்கட றேஞ்சில நானே கேள்வியும் கேட்டு பதிலும் போடுறனோ :(

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் நான் சொன்னது என்னவென்றால் இவ்வளவு தமிழ் மக்கள் இருக்கும் லண்டனில் ஒரு குறிப்பிட்ட ஒரு தொகை மக்களே தொடர்ந்தும் போராட்டங்களுக்கு வருகின்றனர் அவர்களுக்கு உரிய மரியாதை இந்த மாணவர்கள் கொடுக்க வேண்டும் என்பதே என் கருத்து.நான் முதலே எழுதினேன் எல்லா மாணவரும் அப்படி இல்லை ஒரு சில மாணவர் தான் இப்படி நடந்து கொள்கிறார்கள்.நாங்கள் வன்னியில் இருக்கும் மக்களுக்காகவே தொடர்ந்தும் செல்கிறோம் அதற்காக அவர்கள்[மாணவர்] செய்யும் பிழைகளை பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்கச் சொல்கிறீர்களா? அப்படி என்றால் தேசியம்,போராட்டம் எனச் சொல்லி யாரும் எந்த பிழையும் விடலாம் ஒருவரும் தட்டிக் கேட்க கூடாது என வைத்துக் கொள்வோமா.நீங்கள் சொன்ன மாதிரி அவர்களிடம் தனிப்பட்ட முறையில் சில பேர் சொல்லியும் அவர்கள் கேட்காததால் தான் நான் இதில் வந்து எழுதினேன்.அவர்கள் பொறுப்பாளரிடம் சொல்லலாம் ஆனால் அவர்கள் முக்கிய விடயங்களில் ஒடி திரிவதால் இது பற்றி கூறி அவர்களை கஸ்டப்படுத்த விரும்பவில்லை இதை வாசித்து விட்டு அவர்களே தமது அமைப்பினரே திருத்தட்டும்.வன்னி மக்கள் படும் துன்பங்களோடு ஒப்பிடுகையில் இது பெரிய விசயமில்லை ஆனால் எந்த ஒரு விசயத்தையும் முளையில் கிள்ளி எறியா விட்டால் அது பெரிதாக வந்த பிறகு கவலைப் பட்டு பிரயோசனமில்லை.நான் மீண்டும் எழுதிகிறேன் மாணவர் அமைப்பை குற்றம் சாட்டவில்லை அந்த அமைப்பில் உள்ள சிலரால் அவ் அமைப்பிற்கே கெட்ட பேர் வரும் எனத் தான் எழுதினேன்.

சாந்தி பெரியவர்கள் தான் நிறைய பிழைய செய்கிறார்கள் இன்னும் செய்து கொண்டு இருக்குறார்கள் அவர்களோடு ஒப்பிட்டால் மாணவரை நாம் பூப் போட்டு கும்பிட வேண்டும் மாணவரால் தான் போராட்டம் இந்தவளவிற்கு வளர்ச்சி அடைந்தது.

லிசான் நான் ஒன்றும் வதந்தியை பரப்பவில்லை அநேகமாக தவறாது ஆர்ப்பாட்டத்திற்கு செல்பவள் என்ற முறையில் கண்டு கேட்டு தீர விசாரித்தே எழுதினேன்.மற்றும் படி சாஸ்திரி எழுதினதொடு நான் முழுமையாக ஒத்துப் போகிறேன்.

Edited by ரதி

திருத்தவே முடியாது தமிழனை.....................................................

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் வசி. நடக்குறது வன்னிச் சனத்துக்கு வாழ்வா சாவா போராட்டம்.புலத்தில எங்களுக்கு எங்கள் சுய மரியாதைப் போராட்டமாத் தான் பல பேர் பார்க்கினம். நாங்கள் அடிக்கடி போராட்டத்துகுப் போறதும் தெருவில தொடர்ந்து நிக்கிறதும் மற்றவர்கள் போற்ற வேண்டிய விடயங்கள், அதுக்காக எங்களைப் பூப்போட்டுக் கும்பிட வேணுமெண்ட எதிர் பார்ப்பே எங்கட நிலையை தெளிவாக் காட்டுது. இதே வன்னிச் சனத்தின்ரயும் போராளிகளினதும் தியாகம் தான் எங்களில் பல பேர் அகதி அந்தஸ்து அடைக்கலம் எண்டு கோர உதவினது இது வரை, இனியும் உதவப் போகுது. ஆனா நாங்கள் எங்களுக்குத் தரப் படும் மரியாதையை முன்னிறுத்தி மாணவரை (அதுவும் ஒருவர் இருவர் செய்ததற்காக) பகிரங்கமாகக் குறை சொல்லி புல்லுருவிகளுக்கு நல்ல ஆயுதங்கள் எடுத்துக் கொடுப்போம். நடக்கட்டும். வாலை விட்டுட்டு துரும்போட இழு படுவம்.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி பெரியவர்கள் தான் நிறைய பிழைய செய்கிறார்கள் இன்னும் செய்து கொண்டு இருக்குறார்கள் அவர்களோடு ஒப்பிட்டால் மாணவரை நாம் பூப் போட்டு கும்பிட வேண்டும் மாணவரால் தான் போராட்டம் இந்தவளவிற்கு வளர்ச்சி அடைந்தது.

இத்தகைய மாணவர்களுக்காக உங்கள் தொடர்ந்து பங்களிப்பை வழங்குங்கள் றதி.

மாணவர்களின் இந்த எழுச்சியை தங்கள் பதவிகளைத் தக்க வைப்பதற்காக இன்னும் பலர் மாணவர்கள் பற்றிய தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். இந்த மாணவ எழுச்சியை வீழ விடாமல் பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

புல்லுருவிகளுக்கு நல்ல ஆயுதங்கள் எடுத்துக் கொடுப்போம். நடக்கட்டும். வாலை விட்டுட்டு துரும்போட இழு படுவம்.

துரும்போடு இழுபடுவோரை உதைத்துத் தள்ளிவிட்டு மலைகளைக் கட்டியெழுப்பும் சக்தி மாணவர்களிடத்தில் உள்ளது. துயரம் விடுங்கள் நன்மையே நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களைச் சாட்டி.. கலியாணம் கட்டி பிள்ளை குட்டி பெத்ததுகள் மாணவர்களோடு தாங்களும் தாங்களும் என்று சப்பக்கட்டுக் கட்டுறதுதான் ஏனென்று புரியவில்லை. ஏன் இவை மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு வழிகாட்டும் வரை தூங்கிக்கிட்டா இருந்தவை...!!! :):(

மாணவர்கள் சிலரின் செயற்பாடு குறிப்பிட்ட தளத்தில் பணி புரிந்த மிக இள வயது மாணவர்களால் கூட விமர்ச்சிக்கப்பட்டது. நாங்கள் மிணக்கட்டுப் போறம்.. (இங்க உள்ள மிக இளம் வயது பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை அவங்களுக்கு இது மிணக்கேடுதான். இருந்தாலும்.. ஒரு உந்துதலால் போகிறார்கள். அதை வரவேற்க வேண்டும்.) அவை கூட்டம் கூட்டமா கட்டிப்பிடிச்சு கொஞ்சிக்கிட்டு திரியினம். ஒரு கோசம் போடக் கூட முன் வரவில்லை என்று. அது ஒரு சிலர் அல்ல. ஒரு கூட்டம்.

இவர்களைக் காட்டி ஒட்டு மொத்த மாணவ சமூகத்தின் முயற்சியையும் யாரும் இங்கும் மட்டம் தட்டவில்லை. ஆனால் அந்த இடத்தில் தவறாக நடப்பதை எல்லோரும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஒரு சில கூட்டத்தினரின் செயற்பாடு மொத்த ஆக்களின் முயற்சியையும் கேலிக்கூத்தாக்கி விடும். எனவே மாணவர்கள் சிலர் செய்யும் அந்தத் தேவையற்ற காரியங்களை தவிர்த்து பெரிய மாணவர்கள் மற்றவர்களுக்கு இன்னும் இன்னும் பூரண வழிகாட்டிகளாக இருப்பது நன்று என்பதே சொல்லப்படுகிறது..!

என்னிடம் முறையிட்ட மாணவர்களிடம் நான் சொன்னேன்.. அதுகளை கண்டால் கண்ண மூடிட்டு.. நீங்கள் உற்சாகமாகச் செயற்படும் மாணவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குங்கள் என்று.

இவை தவிர்க்கப்படக் கூடியவை என்பதால் சுட்டிக்காட்டப்படுதல் தவறன்று. மற்றும்படி இதைச் சுட்டிக்காட்டுவதால் போராட்டம் ஓய்ந்திடும் என்றோ.. அல்லது இந்தப் போராட்டங்களால உடனடி போர் நிறுத்தம் வந்திடுமென்றோ அதீத தோற்றம் காட்டிறதை விட்டிட்டு.. எமது போராட்டங்களால எமது நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதே அவசியம். அப்போதுதான் அது எமக்காக இறங்கி வரும்..! :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் இப்போது செய்யவேண்டியது ஒன்றே ஓன்று தான்.

இளையோருக்கு பக்க பலமாக நிற்கவேண்டியது தான்.

ஓன்று படு தமிழா ஓன்று படு

2010 தமிழ் ஈழம் மலரும் என்று அன்று சொன்னார்கள். அதற்கான நாட்கள் நெருங்குகின்றது . பாதுகாப்பு சபையிலே நமது புலிகள் வந்தாச்சு.

இனி இன்னமும் கவனமாக இருக்க வேண்டும்.

எட்டப்பன் நிறைய உருவவன். யூதாஸ் நிறைய வருவார்கள்.

இனி தான் மிக மிக கவனமாக நாம் நடக்கவேண்டும்.

இறைவா துரோகிகளிடம் இருந்து எம் இனத்தை காப்பாற்று

எதிரிகளை தலைவர் பார்த்துகொள்வார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றும் நாம் எதுக்கு போனாலும் நாட்டில இருந்து வந்தது தம்பி அது வேணாம் என இது வேணாம் என சொல்பவர்கள் இருகின்றார்கள்.அவற்றை நாம் ஒரு காதால் கேட்டு மறுகாதால் விட்டு விடுவோம்.

எல்லா இடமும் இதுதானா நடந்து இருக்கு. ஈழவன் இது போலவே நானும் அனுபவபட்டேன். அப்போதெல்லாம் ரொம்ப ரொம்ப ஆத்திரமாக இருக்கும். மேலிடத்தில கேகொனும் என்பார்கள். முருகா இதற்கெல்லாம் இப்போ ஒரு விடிவு காலம் வந்து விடத்தை எண்ணி ரொம்ம்ப சந்தோசம். அப்போ இருந்த கோபத்தில ஒரு அமைப்பிலும் இல்லாது நான் என்னால் ஆனவற்றை செய்வோம் என்று முடிவு எடுத்தேன். அதனால் விலகி விட்டேன்.

நம் இளையோர் என்ன செய்கிறார்களோ அவர்களுக்கு பக்க பலமாக இருப்பது. அதுவே என் பணி

தாங்கள் இளையோர் அமைப்பில் இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு பலர் பெரிய அட்டகாசங்கள் செய்துகொண்டு இருக்கினம்.

மக்கள் உண்மையாக இவர்கள் இளையோர் அமைப்பில் இருக்கின்றார்களா என்ற உறுதிப்படுத்த வேண்டும். சிலர் செய்யும் இந்தக் குழப்பவேலைகளுக்காக ஒட்டுமொத்த இளையோர்களையும் குற்றம் சொல்வது அங்கு தொடர்ந்து நின்று வேலை செய்யும் இளைஞர்களையும் பாதிக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.