Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடேசன் அண்ணா, சார்ள்ஸ் அன்ரனி உட்பட 4 பேர் பலி

Featured Replies

Four senior Tamil Tiger leaders have been killed as fighting continues in the north of Sri Lanka, the army says.

Sri Lanka's government said troops are engaged in "final brushing up" hours after a website linked to the rebels said the Tigers were laying down arms.

The three dead are said to include the head of the Tigers' political wing, Balasingham Nadesan, but there is no word on leader Velupillai Prabhakaran.

However, the army says it has found the body of his son, Charles Anthony.

Sri Lanka's army says the last LTTE (Tamil Tiger) fighters have been penned in a 1.5 square kilometre patch of jungle.

The military says that the head of rebels' peace secretariat Seevaratnam Puleedevan and military leader called Ramesh were the other two killed and that their bodies had been recovered.

'Silence guns'

EU ministers are expected on Monday to call for a probe into claims civilians have been targeted.

Leader at large?

The fighting is drawing to a close without any official word on the fate of the Tamil Tigers' leader, Velupillai Prabhakaran.

Some reports have suggested he has died, but - as with all information from the war zone - there has been no confirmation.

The army had suspected that Prabhakaran, who formed the Tigers in 1976, would fulfil his long-held pledge to take his own life rather than face capture.

Reports suggested some of the last remaining Tigers launched themselves in suicide attacks at government troops, but there was no word on whether Prabhakaran was among them.

President Rajapaksa is expected to give a nationally televised news conference in parliament on Tuesday, when reports suggest he may officially declare the war over.

More than 70,000 people have died in the bitter war for a Tamil homeland.

The inquiry calls come as the final act appears to be being played out in a long and bitter 26-year civil war which has left some 70,000 people dead.

See a map of the conflict region

On Sunday the Tigers chief of international relations, Selvarasa Pathmanathan, said in a statement on the Tamilnet website: "This battle has reached its bitter end."

A later statement appeared to modify the rebel position, saying the LTTE was "prepared to silence its guns if that is what needed by the international community to save the life and dignity of the Tamil people".

The country's President Mahinda Rajapaksa has already claimed victory, declaring on Saturday that Sri Lanka had been made free from "barbaric acts".

Europe 'appalled'

In Brussels the EU issued a draft statement ahead of a meeting of foreign ministers on Monday, expressing a sense of outrage at the reports of civilian casualties on both sides.

The statement said the EU was appalled both at the high numbers of casualties and at the use of heavy weapons in the conflict.

The EU is pushing for the UN Human Rights Council to convene a special session on Sri Lanka, just as it has in the past done for Burma, Darfur and the Palestinian territories, reports the BBC's Oana Lungescu, in Brussels.

A pledge of aid came from the UK, which offered £5m ($7.5m) to help avoid a "humanitarian catastrophe".

"It is essential that we get food, medicines and shelter in as soon as possible to save lives, and thereafter that we help people to return to their homes as soon as they safely can," said Hillary Benn, the UK's international development secretary.

Diplomats say the EU has limited leverage, our correspondent notes, although it could remove preferential trade access worth $150m (£100m) if the country is found to be in breach of international human rights obligations.

Reports differ on the numbers of civilians caught up in the last battles, with the government saying that all those who had been trapped in Sri Lanka's northern war zone had escaped.

The rebel spokesman, though, said more than 25,000 were injured and in need of attention.

The government said it did not respond to statements released on Tamilnet, and asserted that 50,000 Tamil civilians had left the war zone in recent days.

The UN has told the BBC the army figures reinforced its view that Sri Lanka's authorities were ill-prepared for the huge influx of internally displaced people.

Refugee camps inland are already badly strained accommodating the huge numbers of those who have fled the conflict.

  • Replies 80
  • Views 14.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பொய் செய்தியாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம் ...

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி இராணும் சொல்வதாகச் சொல்லித்தான் இச்செய்தியை பிரசுரித்துள்ளது. இராணுவம் பொதுமக்களின் இழப்பின் முக்கியத்துவத்தைக் குறைக்கவும் இவ்வாறான செய்திகளைப் பரவவிடலாம்.

போர் பகுதியில் இருந்து ஒரு துளி இரத்தமும் சிந்தாமல் மக்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. நிழலி அதை நம்புவாரா... அதை பிபிசி இராணுவம் சொல்வதாகச் சொல்லி வெளியிட்டால் ஏற்பாரா..???!

//'All Tamil civilians have been rescued without shedding a drop of blood' says Minister Mahinda Samarasinghe//

இதில் உண்மை இருந்தால் கூட.. வருத்தப்பட எதுவும் இல்லை. அவர்கள் போராளிகள்.. இறுதிவரை போராடினார்கள். வீரமரணம் அடைந்தார்கள். தேசத்திற்காக வீழ்ந்தவர்கள் மதிக்கப்படுவார்கள். எமது கடமை எமது தேசத்தை மீட்பதுதான். மாவீரர்களுக்கும்.. மாண்ட மக்களுக்கும் நாம் செய்யும் நன்றிக்கடன் அது தான். அதற்கான முயற்சிகளை செய்வோம்.

போராளிகளின் இழப்புக்களைக் காட்டி போராட்டத்தை நசுக்க நினைக்கும் எதிரிக்கு துணை போவதை நிறுத்துவோம். எம்மத்தியில் ஆயிரம் நடேசன்களும்.. ரமேஸ்களும்.. சாள்ஸ் அன்ரனிகளும் வாழ்கின்றனர் என்ற நம்பிக்கையோடு.. எமது தாயகத்தை மீட்கும் வரை சாத்தியமான வழிகளில் எல்லாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே இன்றைய எமது உறுதி மொழியாக அமைய வேண்டும்.

ஒப்பாரிகளும்.. கவலைகளும்.. ஒருபோதும் விடுதலை பெற்றுத்தராது. எதிரி எம்மை இராணுவ ரீதியில் மட்டுமன்றி உளவியல் ரீதியில் வென்று கொள்ள நாம் இடமளிக்கக் கூடாது. எமது தாயகம் என்பது எமது பூர்வீகச் சொத்து. அதனை எதிரியிடம் எக்காரணம் கொண்டும் இழக்க நாம் முடியாது.

எமது தாயகம் மீட்கப்படுவதே மாவீரர்களுக்கும் மாண்ட மக்களுக்கும் நாம் செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும்..! அதற்கான நடவடிக்கைகளில் இறங்குவதை விட்டு எதிரியின் உளவியல் போருக்கு உந்து சக்தியாக இருப்பதை நிறுத்துவோம்.

எம்மக்களின் உயிரில் கிஞ்சிதமும் அக்கறையற்ற பிபிசி இவ்வாறான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் அதன் கீழ்த்தரமான அணுகுமுறையை காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

எமது போராளிகளும் மக்களும் உணவின்றி.. மருந்தின்றி மரணிக்கும் இந்த வேளையில் அவர்களுக்கு உதவ முடியா கையாலாகத்தனத்தை நினைத்து நாம் தான் எம்மை நோக வேண்டும். அது எதிர்காலத்தில் எமது தேசத்தின் விடிவின் முக்கியத்துவத்தை எமக்குச் சொல்ல வேண்டுமே அன்றி பலவீனப்படுத்தக் கூடாது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலி:பாதுகாப்பு அமைச்சகம்

வீரகேசரி இணையம் 5/18/2009 8:20:27 AM - விடுதலை புலிகளின் முக்கிய உறுப்பினர்களது சடலங்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இன்று காலை வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் இடம்பெற்ற இராணுவநடவடிக்கைகளின் போது விடுதலை புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களான நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோரது சடலங்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துளது.

அதேவேளை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். இது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியினது என சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விடுதலை புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக பா.நடேசன் பணியாற்றிவந்தார் .இவர் முன்னதாக ஸ்ரீலங்கா பொலிஸில் கான்ஸ்டபிளாகவும் கடமையாற்றியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.விடுத்லை புலிகளின் சமாதான செயலக தலைவராக புலித்தேவனும், விடுதலை புலிகளின் விசேட இராணுவ தலைவராக ரமேஷும் கடமையாற்றி வந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள இத்தகவல்கள் குறித்து விடுதலை புலிகள் இதுவரை எதுவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

இவ்வளவு அழிவுகளுக்கு மத்தியிலும் நேற்று 7 சிங்கள ராணுவ கைதிகளை விடுவித்துள்ளார்களே புலிகள்

பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள இத்தகவல்கள் குறித்து விடுதலை புலிகள் இதுவரை எதுவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

அங்க எல்லாரும் முடிஞ்சுதெண்டா ... இனி எப்படி புகளிடத்தில் இருந்து பதிலை எதிபார்ப்பது?

ஐயோ நெஞ்சு வெடிக்குது,

எங்களுக்கு ஒரு சுதந்திர நாடு வேண்டுமெண்டு நினைத்தது தவறா, மாபெரும் விடுதலை இயக்கமாக வளர்ந்த்து தவறா, தமிழனெண்று சொல்லி தலை நிமிர்ந்து வாழ்ந்தது தவறா, மாபெரும் தலைவனை எங்கள் மண் தந்தது தப்பா ஒன்றுமெபுரியவில்லை

ஆனால் ஒன்று மட்டும் விளங்குது, விடுதலை போராட்டம் ஓயாது, புலிகள் ஒரு நாளும் ஓயாமாட்டார்கள், இழப்புக்கள் தான் அதிகம், எப்படி ஈடுசெய்யப்போகிறோம். :( :( :(:o :o

  • தொடங்கியவர்

போர் பகுதியில் இருந்து ஒரு துளி இரத்தமும் சிந்தாமல் மக்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. நிழலி அதை நம்புவாரா... அதை பிபிசி இராணுவம் சொல்வதாகச் சொல்லி வெளியிட்டால் ஏற்பாரா..???!

Mr Neduks,

நீங்கள் யார் என்றும் எமக்கு தெரியும்....

இந்த மகா அவலமான நேரத்தில் உங்களுடன் தமிழனுக்கே உரிய கேவலமான 'யார் பெரியவன்' என்று சண்டையிட என்னால் முடியாது...நான் அந்த சக்தியை இழந்து பல நாட்களாகி விட்டது...இப்போ நான் நடைப் பிணம் எனவே உங்களுடன் வாக்குவாததில் ஈடுபட விரும்பவில்லை

வெறும் பாதுகாப்பமைச்சின் செய்திகளை மட்டுமே நம்பும் மூடன் அல்ல நான். எனக்கு மிகவும் உறுதிப் படுத்தப் பட்ட செய்திகளையே இங்கு வேறு செய்திகளில் வரும் போது அப்படியே தருகின்றேன்

உங்களைப் போன்றவர்களை இறுதி வரை போராடி வீரமரணம் அடைந்த நடேசன் அண்ணா போன்றவர்களின் ஆவி கூட மன்னிக்காது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் உண்மை இருந்தால் கூட.. வருத்தப்பட எதுவும் இல்லை. அவர்கள் போராளிகள்.. இறுதிவரை போராடினார்கள். வீரமரணம் அடைந்தார்கள். தேசத்திற்காக வீழ்ந்தவர்கள் மதிக்கப்படுவார்கள். எமது கடமை எமது தேசத்தை மீட்பதுதான். மாவீரர்களுக்கும்.. மாண்ட மக்களுக்கும் நாம் செய்யும் நன்றிக்கடன் அது தான். அதற்கான முயற்சிகளை செய்வோம்.

போராளிகளின் இழப்புக்களைக் காட்டி போராட்டத்தை நசுக்க நினைக்கும் எதிரிக்கு துணை போவதை நிறுத்துவோம். எம்மத்தியில் ஆயிரம் நடேசன்களும்.. ரமேஸ்களும்.. சாள்ஸ் அன்ரனிகளும் வாழ்கின்றனர் என்ற நம்பிக்கையோடு.. எமது தாயகத்தை மீட்கும் வரை சாத்தியமான வழிகளில் எல்லாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே இன்றைய எமது உறுதி மொழியாக அமைய வேண்டும்.

இவ்வாறான சிந்தனையுடன் செயல் படுவதே இத்தருணத்தில் சிறந்தது.

இழப்புகள் மதிப்புகளுக்கு அப்பாற்பட்டவை, இயன்ற வரை கவலையை அடக்கி நம்பிக்கையாக நமது கடமைகளை தொடருவதே - பலியான மக்களின் இலக்கை, மாவீரரின் இலக்கை - அவர்களுக்காக எனினும் நாம் அடைய வழி வகுக்கும்.

-----தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்------

  • கருத்துக்கள உறவுகள்

Mr Neduks,

நீங்கள் யார் என்றும் எமக்கு தெரியும்....

இந்த மகா அவலமான நேரத்தில் உங்களுடன் தமிழனுக்கே உரிய கேவலமான 'யார் பெரியவன்' என்று சண்டையிட என்னால் முடியாது...நான் அந்த சக்தியை இழந்து பல நாட்களாகி விட்டது...இப்போ நான் நடைப் பிணம் எனவே உங்களுடன் வாக்குவாததில் ஈடுபட விரும்பவில்லை

வெறும் பாதுகாப்பமைச்சின் செய்திகளை மட்டுமே நம்பும் மூடன் அல்ல நான். எனக்கு மிகவும் உறுதிப் படுத்தப் பட்ட செய்திகளையே இங்கு வேறு செய்திகளில் வரும் போது அப்படியே தருகின்றேன்

உங்களைப் போன்றவர்களை இறுதி வரை போராடி வீரமரணம் அடைந்த நடேசன் அண்ணா போன்றவர்களின் ஆவி கூட மன்னிக்காது

நான் பதிவு செய்தது எனது ஆதங்கத்தை மட்டுமே. நீங்கள் உங்களின் எண்ணத்தில் நீங்கள் பெரியவன் என்ற தோறணையில் இதனை பார்த்தால் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. எல்லாம் அறிந்த தங்களுக்கு இது தெரியவில்லையா..??!

(நீங்கள் என்னைப் பற்றி ஆராய்ச்சி செய்வதை விடுத்து மக்களின் துயரை வெளிக்கொணருங்கள். பிளீஸ்........................)

எதிரியின் தகவல் காவுவதை விடுத்து.. மாண்டு போன மக்கள் பற்றி பேசுங்கள். எதிரி அதை திட்டுமிட்டு மறைக்கின்ற போது ஏன் அதற்கு தெரிந்தோ தெரியாமலோ ஒத்துழைக்கிறீர்கள்..! அதுதான் சர்வதேசத்தின் பார்வையில் எமக்கு சாதகங்களை உருவாக்கித்தரும். இதிலும் நான் பெரியவன் நீ பெரியவன் என்ற நிலையை பார்ப்பீர்களாக இருந்தால்.. அது உங்கட பிரச்சனை. அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. :( :(

Edited by nedukkalapoovan

சிறிலங்காவின் அரக்கன் தன் பேச்சினை ஒரு நாளால் ஏன் பின் போட்டான்?

கடனே கடவுள் அதற்கு "யுத்தம்" முடிந்து விட்டதாக அறிவித்தே ஆக வேண்டும்.

"எல்லாத்தளபதிகளையும்" முடித்து விட்டாச்சு என சொல்லியும் காட்டியும் ஆக வேண்டும்.

IMF கடன் கிடைக்காவிடின் இன்று "வெற்றியை" சாப்பிடும் சிங்களம் நாளை எதை சாப்பிடுவது?

இந்த வருடத்துக்கான 1.6பில்லியன் யு.எஸ். டாலரும் செலவழிச்சாது.

மாதம் மாதம் எடுத்த கடனுக்கு 200-250 மில்லியன் யு.எஸ் டாலர் தேவை.

இருக்கும் 1 இலட்சித்து 60 ஆயிரம் "வீரர்களை" என்ன செய்வது?

இறந்த காயப்பட்ட 50000 பேரையும் என்ன மாதிரி கவனிப்பது?

ஐரோப்பிய ஒன்றியமும் வரிச் சலுகையை நிப்பாட்டினால் என்ன நிலமை?

Edited by akootha

எதுக்காக எல்லா தளபதிகளும் முள்ளிவாய்க்காலுகாலுக்குள் இவ்வளவுதூரம் நிண்டவையெண்டதை விளங்கிக்கொள்ள முடியாமலிருக்கு... தலமை போனால் போராட்டம் முடிஞ்சிடும் அல்லது நிரந்தரப்பின்னடைவு.. அத்தனை தலைவர்களையும் இவ்வளவு இலகுவில் பலிகொடுத்தது முட்டாள்தனம்..

தலைவரும் பொட்டரும் சரியாம் எண்ட செய்தி மட்டும் தான் காணேல்லை...

சிங்கள சேனல்கள் சொல்ற எல்லாம் வரவர உண்மையாயிருக்கு நாங்கள் விரும்பாவிட்டாலும்.

எந்தச்சகுனி செய்தவேலையோ... நிலைமை இப்படியாய் போச்சு..

இனி ஒரு கிரனேட்டும் கையுமா ஒழுங்கை வழிய திரியிறது தான் தமிழீழப்போர்..

மக்களுக்கு இனியொண்டும் மிச்சமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுக்காக எல்லா தளபதிகளும் முள்ளிவாய்க்காலுகாலுக்குள் இவ்வளவுதூரம் நிண்டவையெண்டதை விளங்கிக்கொள்ள முடியாமலிருக்கு... தலமை போனால் போராட்டம் முடிஞ்சிடும் அல்லது நிரந்தரப்பின்னடைவு.. அத்தனை தலைவர்களையும் இவ்வளவு இலகுவில் பலிகொடுத்தது முட்டாள்தனம்..

சில முக்கியமான தளபதிகள் போராளிகளுடன் அதுவும் இந்த இக்கட்டான நிலையில் இருக்கவேண்டிய கட்டாயம் ஓன்று உள்ளது .அவர்கள் தப்பவைக்கப்பட்டால் எமது எதிரிகளும் மாற்றுக்கருத்தாளர்களும் போராளிகளை முன்னுக்குவிட்டுட்டு தளபதிகள் தங்கட உயிருக்கு பயந்து ஓடிவிட்டார்கள் என்று பரப்புரைகளை மேற்க்கொள்ளக்கூடும் இது ஒரு பின்னடைவை அல்லது ஒரு சலிப்பு தன்மையை ஏற்படுத்தலாம் அத்தோடு தளபதிகள் போராளிகளோடு நின்று களமாடும் போது போராளிகளுக்கும் ஒரு மனத்தென்பு ஏற்படும் அதற்காகவே சில தளபதிகள் முன்னரங்கில் இருப்பார்கள் இது தவிர்க்கமுடியாதது,தளபதிகளும

எனக்கு ஒன்று புரியவில்லை ஏன் இப்படி எல்லாம் வரும் வதந்திகலையும் பார்த்து ஒப்பாரி வைக்கிறீர்கள், சரி இது உண்மையாக இருந்தால் எல்லோறும் என்ன போராட்டத்தை கைவிட்டு விட்டு எமது மண் எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என்று உங்கலது வேலையை பார்த்து விட்டுப் போகிறீர்களா? இது உண்மையாகவிருந்தால் நாம் இன்னமும் எமது போராட்டத்தை மூர்க்கமாக முன்னெடுக்க வேண்டும். என்னைப் பொருத்தவரையில் உங்களை போன்று ஏதோ cricket match போல் போராட்டத்தை பார்ப்பவர்களை நம்பி போராட வெளிகிட்ட எம் தலைவரை சொல்ல வேண்டும்.

நிழலி,

இலங்கை அரசு எப்பெடியெல்லம் பொய் சொல்லும் என்று தெரியும், என்வே ஏன் இந்த ஆதாரமற்ற செய்திகளை பதிகிறீர்கள்.

உதாரணமாக இப்போது சூசை எத்தனை தடவை கொல்லபட்டார், சுனாமியில் இறந்த அவரது மனைவியும், கடலில் இறந்த அவரது மகனும் எப்படி 14ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

ஒரு நாளைக்குக் கூறுவான் charles anthony வெளினாட்டில் சுகபோக வாழ்க்கை வாழ்கிறார் என்று, பிறகு சொல்லுவான் அவ்ர் களமுனையில் காயம் என்று

மகிந்தருக்கு போரை நிறுத்த வேணடிய கட்டாயம், அதனால் தான் மகிந்த அவசரமாக நாடு திரும்பினார், வெற்றியும் கொண்டாடுகிறார் அது சும்மா முடியுமா அதனால் தான் இப்படிப் பட்ட பட்டியல்கள். நிச்சயமாக இறந்த சில அப்பாவிகள்து உடல்காளை காட்டிவிட்டு அது அவ்ர்களது உடல் என்பான்.

பிரபாகரன் தப்பிவிட்டர் என்று உதய நாண்யக்கார கூறியவுடன் சிங்கள இணையத்தளங்கலில் மகிந்தவை வசை பாட ஆரம்பித்து விட்டார்களாம்

  • கருத்துக்கள உறவுகள்

நடேசன் அண்ணா, சார்ள்ஸ் அன்ரனி உட்பட 4 பேர் பலி, BBC

செய்தி வதந்தியாக இருக்க வேண்டும்.

கைப்பற்றப்பட்ட புலிகளின் தலைவர்களின் சடலங்களை ITN தொலைக்காட்சியில் காண்பிக்கின்றனர்! (புலித்தேவன், நடேசன் (?), ரமேஸ், ... சார்ஸ் அன்டனியின்(?) முகம் பிரபலமில்லதா காரணத்தால் காட்டப்பட்டது யார் என்று உறுதியாக எதுவும் கூற முடியவில்லை....)

நிழலி,

பொய்பிரச்சாரத்தால்தான் இத்தனை விரைவாக இந்த போராட்டம் அவலமான முடிவுக்கு வந்தது. ஆரம்பத்தில் நானும் ஏதோ இங்குள்ள சிலர் போராட்டத்தில் உள்ள அதீத பற்றினால்தான் இவ்வாறு செய்கிறார்கள் என்று எண்ணினேன்!

இவர்களால்தான் உண்மைகளை பேச ஆராய முற்பட்டவர்கள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்ட விவாதிக்க விரும்பிய பலர் ஓரம் கட்டப்பட்டனர். உதாரணம் குறுக்காலபோவான்!

இவர்களின் பேச்சை நம்பிய யாழ்கள நிர்வாகமும் பக்கச்சார்பாக நடந்தது கவலைக்குரிய விடையம்.

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

கைப்பற்றப்பட்ட புலிகளின் தலைவர்களின் சடலங்களை ITN தொலைக்காட்சியில் காண்பிக்கின்றனர்! (புலித்தேவன், நடேசன் (?), ரமேஸ், ... சார்ஸ் அன்டனியின்(?) முகம் பிரபலமில்லதா காரணத்தால் காட்டப்பட்டது யார் என்று உறுதியாக எதுவும் கூற முடியவில்லை....)

நிழலி,

பொய்பிரச்சாரத்தால்தான் இத்தனை விரைவாக இந்த போராட்டம் அவலமான முடிவுக்கு வந்தது. ஆரம்பத்தில் நானும் ஏதோ இங்குள்ள சிலர் போராட்டத்தில் உள்ள அதீத பற்றினால்தான் இவ்வாறு செய்கிறார்கள் என்று எண்ணினேன்!

இவர்களால்தான் உண்மைகளை பேச ஆராய முற்பட்டவர்கள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்ட விவாதிக்க விரும்பிய பலர் ஓரம் கட்டப்பட்டனர். உதாரணம் குறுக்காலபோவான்!

இவர்களின் பேச்சை நம்பிய யாழ்கள நிர்வாகமும் பக்கச்சார்பாக நடந்தது கவலைக்குரிய விடையம்.

ஒரு துளி இரத்தமும் சிந்தாமல் தமிழ் மக்களை பத்திரமாக மீட்டுள்ளனராமே. அதையும் நீங்கள் உண்மை என்று நம்புகிறீர்களோ.

காலம்.. ஐ ரி என்.. பார்த்துச் செய்தி உண்மையா பொய்யா என்று சொல்ல வேண்டி இருக்குது. ஆனால் ஆயிரக்கணக்கான மக்களின் இறப்புப் பற்றி எவரும் கதைக்க முடியல்ல..!

மக்களின் இழப்பு போரின் ஆரம்பத்தில் இருந்ததை விட இன்று மிக அதிகம். அந்த வகையில் அதுதான் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் நம்மவர்களே.. எதிரிக்கு சேவை செய்வது போல.. அவன் முக்கியப்படுத்தும் விடயத்தை தான்.. இவர்களும் முக்கியம் செய்கின்றனர்.

இவ்வளவு நாளும் மக்கள் மக்கள் என்று முதலை கண்ணீர் வடித்தீர்களே.. இன்றென்ன.. யாரின் முகம் என்று ஐ ரி என்னில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்..???! இதனால் நீங்கள் குரல் கொடுத்த மக்களுக்கு என்ன நியாயம் கிடைக்கப் போகிறது..???! :unsure:

விரைவில் கொழும்பிலும் உங்கள் இருப்புக்கு ஆப்பு வைப்பினம். அப்ப தெரியும்...???! எது பொய்..எது உண்மை என்பது..! :rolleyes::(

Edited by nedukkalapoovan

முன்பு மக்கள் இழப்புகள் குறித்து கேள்வி எழுப்பியபோது அதை கொச்சைப்படுத்தி கதைத்தவர்கள் மீது சேறு பூசி போராட்டத்தை முன்னிலைப்படுத்துவதாக கூறி பொய்பிரச்சாரத்தை முன்னெடுத்து இப்போது....

ஆயிரக்கணக்கான மக்களின் இறப்புப் பற்றி எவரும் கதைக்க முடியல்ல..!

அதுதான் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

உங்கடை நிகழ்சிநிரலுக்கு அமைவா தேவையென்டா முன்னிலைப்படுத்துங்கோ இல்லையெண்டா பின்னிலைப்படுத்துங்கோ!

விரைவில் கொழும்பிலும் உங்கள் இருப்புக்கு ஆப்பு வைப்பினம். அப்ப தெரியும்...?

வன்னி பொதுமக்கள் சும்மா சாகமா சிறுவர் முதல் முதிவர் பெண்கள் எல்லோரும் ஆயுதம் ஏந்தி போராடி சாக வேணும் என்று எழுதினவர் நீங்கள். இறுதிவரை அந்த சனம் குடும்பம் குடும்பமா அப்பாவிகளாகவே ஒப்பாரி வைத்து இறந்ததன் மூலம் என்ன படிப்பினையை பெற்றீர்கள்? யதார்த்தத்தில் இருந்து வெகுதொலைவில சஞ்சரிக்கும் உங்கள் நினைத்து அனுதாப்படுகின்றேன்.

உங்கள் குருர ஆசை போலவே வன்னிமக்களுக்கு இன்று ஏற்பட்ட அவல நிலை நாளை எங்களுக்கு ஏற்படும்போது இன்று அவர்கள் அதை எப்படி எதிர் நோக்கினரோ அப்படியே நாங்களும் எதிர் நோக்குவோம்!

அப்போதும் நீங்கள் இப்போது போலவே எங்கள் சடலங்களை வைத்து உங்கள் குருர ஆசைகளை நிறைவேற்றுங்கள் :rolleyes:

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு மக்கள் இழப்புகள் குறித்து கேள்வி எழுப்பியபோது அதை கொச்சைப்படுத்தி கதைத்தவர்கள் மீது சேறு பூசி போராட்டத்தை முன்னிலைப்படுத்துவதாக கூறி பொய்பிரச்சாரத்தை முன்னெடுத்து இப்போது....

உங்கடை நிகழ்சிநிரலுக்கு அமைவா தேவையென்டா முன்னிலைப்படுத்துங்கோ இல்லையெண்டா பின்னிலைப்படுத்துங்கோ!

வன்னி பொதுமக்கள் சும்மா சாகமா சிறுவர் முதல் முதிவர் பெண்கள் எல்லோரும் ஆயுதம் ஏந்தி போராடி சாக வேணும் என்று எழுதினவர் நீங்கள். இறுதிவரை அந்த சனம் குடும்பம் குடும்பமா அப்பாவிகளாகவே ஒப்பாரி வைத்து இறந்ததன் மூலம் என்ன படிப்பினையை பெற்றீர்கள்? யதார்த்தத்தில் இருந்து வெகுதொலைவில சஞ்சரிக்கும் உங்கள் நினைத்து அனுதாப்படுகின்றேன்.

உங்கள் குருர ஆசை போலவே வன்னிமக்களுக்கு இன்று ஏற்பட்ட அவல நிலை நாளை எங்களுக்கு ஏற்படும்போது இன்று அவர்கள் அதை எப்படி எதிர் நோக்கினரோ அப்படியே நாங்களும் எதிர் நோக்குவோம்!

அப்போதும் நீங்கள் இப்போது போலவே எங்கள் சடலங்களை வைத்து உங்கள் குருர ஆசைகளை நிறைவேற்றுங்கள் :unsure:

நிச்சயமா சிங்களவனோட வாழனும் என்பதற்காக மக்கள் மக்கள் என்பதும்.. சிங்களவன் வென்றிட்டான் என்ற உடன அதைக் கைவிடுவதும் அல்ல மக்கள் பற்று.

நாங்கள் சம்பூரில் தொடங்கி இன்று வரை மக்களின் இழப்புக்கள் குறித்து பேசிக் கொண்டே வருகிறோம்.

போராளிகளின் தியாகங்கள் விலை மதிக்க முடியாதவை. அதேபோல் மக்களின் தியாகங்களும். இரண்டையும் விவாதப் பொருளாக்க முடியாது. அவை அதற்கு அப்பாற்பட்டவை. அதை விவாதப் பொருளாக்கி அதில் குளிர் காய எப்போதும் நீங்கள் நினைக்கிறீர்கள்.

மக்கள் இழப்புப் பற்றிப் பேச வேண்டிய நேரத்தில் அதை முன்னிலைப்படுத்தாமல் இருப்பதைதான் நாம் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.

போராளிகளின் மரணங்கள் பற்றிய செய்திகள் எந்த நடுநிலை ஆதார அடிப்படைகளும் அற்றவை. ஆனால் ஐநா முதல் மாவை சேனாதிராஜா வரை மக்கள் இழப்புப்பற்றியே கதைக்க முயல்கின்றனர். இறுதியில் நம்பியார் விட்ட அறிக்கை கூட மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்றுதான் விட்டிருக்கிறார்.

ஆனால் சிறீலங்காவோ.. அவர் பலி. இவர் பலி.. என்று உலகத்தை திசை திருப்ப முயல்கிறது. நீங்கள் அதை விவாதப் பொருளாக்கி இங்கு மக்களை குழப்ப முயல்கிறீர்கள். அடிப்படையில் உங்களுக்கும் சிறீலங்கா அரசிற்கும் என்ன வித்தியாசம். நீங்கள் மக்கள் மீது காட்டும் வேசமான அனுதாபத்தைக் காட்டினும் காட்டாமல் இருப்பது மேல் எனலாம். :rolleyes::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'nedukkalapoovan'

You are correct

நேற்று பத்திரிகையாளர் மாநாட்டில் பிரபகாரன் பற்றி கூறமுடியாமல் போன மகிந்த இன்று இப்படி ஒரு வந்தியைப் பரப்பிஉள்ளான். வெறும் வதந்தியாக இருக்கவேண்டும் என்றே மனம் பிராத்திகிறது... :rolleyes::unsure::(

ஒரு போராளி இறக்கும் முன்பு பல போராளிகளை உருவக்கிவிடுத்தான் மாவீரன் ஆவான் என்ற கருத்துக்கு ஏற்ப்ப பல தளபதிகளும் பல தளபதிகளை உருவாக்கி இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.... வதந்திகளைப் பரப்பி ஸ்ரீலங்கா வெற்றி கொண்டாடுகிறது...

காற்றுக்கும் பொங்கும் எரிமலைக்கும் அணை போட முடியாது

இது வெறும் வதந்தி

மாவீரர்களின் மூச்சிலே வாழ்பவர்கள் எம் தலைவர்கள் அவர்களை யாரும் சீண்ட முடியாது

எதிரியின் பிரச்சாரத்திலும் பொய்மையிலும் இந்த யாழ் இணையமும் விலைபோய்விட்ட வெட்ககேடு

காற்றுக்கும் பொங்கும் எரிமலைக்கும் அணை போட முடியாது

இது வெறும் வதந்தி

மாவீரர்களின் மூச்சிலே வாழ்பவர்கள் எம் தலைவர்கள் அவர்களை யாரும் சீண்ட முடியாது

எதிரியின் பிரச்சாரத்திலும் பொய்மையிலும் இந்த யாழ் இணையமும் விலைபோய்விட்ட வெட்ககேடு

பொய் பொய் பொய் பொய் தலைவர் சாகவில்லை.... ஐஓ அப்படி ஒன்றை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை, , ஐஓஓஓஓ.....

  • கருத்துக்கள உறவுகள்

பொய் பொய் பொய் பொய் தலைவர் சாகவில்லை.... ஐஓ அப்படி ஒன்றை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை, , ஐஓஓஓஓ.....

முக்கியமான ஒன்று.. புலிகள் தங்கள் இருப்பை ஏதாவது ஒரு வகையில் நிலைநிறுத்திக் கொண்டிருப்பார்கள்..! ஆனால் சில இழப்புகள் ஏற்படுவதும் தவிர்க்கப்பட முடியாதது. அவ்வகையில்,

1) எல்லோரும் உணர்ச்சிவசப் படுவதை விடுத்து அடுத்த கட்டம் நோக்கி சிந்தியுங்கள். ஈழத்தில் புலிகளால் நடத்தப்படுவது பயங்கரவாதமே அன்றி விடுதலைப் போர் அல்ல என்கிற பிரச்சாரம் இனிமேல் எடுப்படாது.

2) கிழக்கு மற்றும் வன்னிப்போரை போரை வென்றவன் சிங்களவனாக இருக்கட்டும். ஆனால் தமிழீழப் போராட்டத்தை வென்றவர்கள் நாமாக இருக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பமும் புலிகளால் இப்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

3) புலிகளை அழித்தாகி விட்டது. இனித் தீர்வு என்ன என்று கேட்க வேண்டியதும், அதற்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டியதும் இப்போது உலகத் தமிழரின் கடமை.

4) சாட்சியமற்ற ஒரு போரை நடத்தி முடித்துவிட்டதாக எண்ணும் சிங்களம் பிடிபடும் நாள் வெகுதொலைவில் இல்லை. எவ்வளவு மேதாவித்தனமாகச் செயற்பட்டிருந்தாலும் அவர்கள் இன அழிப்பு செய்தது வெளிவந்தே ஆகும்.

இதன் அடிப்படையில், பொய்யாகவே இருந்தாலும் இத்தகைய செய்திகளைக் காவித்திரிய வேண்டியது நம் கடமை என்று எண்ணுகிறேன். இவை புலிகள், தடை என்னும் மாய்மாலங்களைத் தாண்டி அடுத்த கட்டத்துக்கு நகர வழி ஏற்படுத்திக் கொடுக்கின்றன. புலிகள் மேல் பழியைப் போட்டுத் தப்பிக்கும் வாய்ப்பு இனி சிங்களத்திடம் இல்லை.

தமிழீழம் நோக்கிய பயணம் உலகத்தமிழரிடம் இப்போது தரப்பட்டிருக்கிறது. இப்பயணத்தின் குறை, நிறை எல்லாவற்றுக்கும் இனி நாங்களே பொறுப்பு.

  • தொடங்கியவர்

Colombo 'ended' the battle with a massacre

[TamilNet, Monday, 18 May 2009, 07:25 GMT]

Monday early hours around 3:00 a.m. Vanni local time, the LTTE Political Chief B. Nadesan and LTTE Peace Secretariat Director S. Puleedevan telephoned their contacts in Europe and informed them to tell the ICRC Head Office that only around 1,000 wounded cadres, civil officials of the LTTE and civilians remained in the so-called safety zone and there was no firing from the LTTE side. They urged the ICRC to evacuate the wounded. A few hours later, Colombo's Defence Ministry website claimed finding the dead bodies of Mr. Nadesan, Mr. Puleedevan, Mr. Ilango (Tamileelam Police Chief), and LTTE Leader V. Pirapaharan's son Mr. Charles Antony. The LTTE is yet to confirm, but initial reports indicate a determined massacre by the Sri Lanka Army (SLA).

On Sunday, SLA Commander Lt. Gen. Sarath Fonseka told AFP that he will not allow the LTTE to 'regroup' and will ensure that there is 'no future' for the Tigers.

He also said that "the firm decision of the political hierarchy not to go for talks with the LTTE terrorists until they lay down arms had contributed significantly to all these war victories."

During the last week both Nadesan and LTTE's International Relations Head S. Pathmanathan were welcoming the call by the US President Barack Obama and were expressing the willingness of the LTTE to heed his request.

However, Colombo has decided not to allow any opportunity for the LTTE to negotiate and to annihilate its leadership.

Both Obama's call and the LTTE's favourable response were not honoured by Colombo.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.