Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா கதறுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவருடைய இறப்பு தமிழினத்துக்கு ஈடுசெய்யமுடியாத ஒண்று இருந்தாலும் நாம் இதனை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் நான் தலைவர் வீரமரணம் அடைந்துவிட்டார் என அப்படியே இருக்கக்கூடாது நமது உரிமைகள் கிடைக்கும் வரை போராட வேண்டியது தான் தலைவருக்கு செய்யும் நன்றிக்கடனும் கூட எனவே தலைவருடை பாதையை நாம் அனைவரும் கையில் எடுக்கவேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசிவரை தலைவருகாகப் பணிசெய்து தலைவரோடு தொடர்பிலிருந்த செல்வராஜா பத்மநாதனை துரோகி ஆக்கிவிட்டீர்கள். வைக்கோவும் நெடுமாறனும் எப்போதிலிருந்து உத்தியோக்பூர்வ பேச்சாளரானார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசிவரை தலைவருகாகப் பணிசெய்து தலைவரோடு தொடர்பிலிருந்த செல்வராஜா பத்மநாதனை துரோகி ஆக்கிவிட்டீர்கள். வைக்கோவும் நெடுமாறனும் எப்போதிலிருந்து உத்தியோக்பூர்வ பேச்சாளரானார்கள்?

அவர்கள் தமிழ்நாட்டைப்புர்துகாக்கிற

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் அய்யா, வைகோ போன்றோர் ஏன் இப்படி ஒரு அறிக்கை விட்டார்களோ தெரியாது. இது எம்மிடையே மேலும் பிளவுகளுக்கே உதவும். யாராவது அவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளக் கூடியவர்கள் அவர்களின் அறிக்கையின் பாரதூரமான தன்மையைப் பற்றி தெரிவியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குழந்தை வளர்வதற்கு தாயின் ஆதரவும் அரவணைப்பும் முக்கியம்..! நாம் எல்லோரும் போராட்டத்துடன் 30 வருடங்களாக இணைந்து வாழ்கிறோம்..! ஆனால் இன்னும் குழந்தை நிலையிலேயே இருக்கிறோம் என்பது தெளிவாகத் தெரிகிறது..! வளர்ந்த பிள்ளைகளாக பொறுப்பை கையில் எடுக்க வேண்டிய நிலையில் இப்போது இருக்கின்றோம்..!

ஆளாளுக்கு தானே தலைவன் பொறுப்பாளன் என்று சொல்லிக்கொண்டு இராமல்.. முதலில் ஒருவருடன் மற்றவர் தொடர்புகொள்ளவேண்டும். அதன் பின்னர் அறிக்கைகளை விடலாம். அல்லது எல்லாத் தலைவர்களும் பொறுப்பாளர்களும் பொத்திக்கொண்டு இருக்கலாம்.

இதேபோல் நமது ஊடகங்கள் என்று சொல்லப்படுபவையும் நான் பெரிது நீ பெரிது என்று இராமல் ஒரேநேரத்தில் ஒரே செய்திகளை வெளிக்கொணரவேண்டும். ஒன்றுடன் இன்னொன்று கதைக்கவேண்டும். தொடர்புகொள்ளவேண்டும்.

இல்லாவிட்டால் பொத்திக்கொண்டு இருக்கலாம்.

பத்மநாதனின் அறிக்கைகளை நாம் நம்புவோமாக. காரணம் எங்கள் சூசை அண்ணா கூட கூறி இருந்தார் தாங்கள் பத்மநாதனின் ஊடாக தொடர்பு கொண்டதாக. அதுவும் கடைசி நேரத்தில். ஆகவே அவரின் கூற்றை ஏற்றுக் கொள்வோம். மனிதனாக பிறப்பவர எவரும் இறப்பது நிஜம். அந்த வகையில் எமது தலைவரும் எமது போராளிகளில் ஒருவராக தலைவராக வீரமரணத்தை அடைந்துடள்ளார். அவர் ஆற்றிய சாதனைகள் அசாதாரமானவை. இருந்தும் மரணம் அவரை அழைத்துக் கொண்டாலும் அவரின் கொள்கைகள் மரணமடையவில்லை. அடுத்து இந்த போராட்டத்தை வழிநடத்த போகின்றவரின் வழியில் நாம் நடைபோட தயாராகுவதுடன் எமது இலட்சியத் தலைவனின் இலக்கை அடைந்து நாம் அவரிற்கு அஞ்சலி செலுத்துவோம்.

முரண்பாடுகள் உணர்ச்சிவசம் காரணமாக வரலாம் இந்நேரங்களில். அவை பிளவுகளாகிவிடாமல் அனைத்து தலைவர்களும் தமிழர்களும் மீண்டும் ஒன்றினைவோம்.

எங்கள் தலைவர் இறுதிவரை போரிட்டுதான் மடிந்தார். அவர் யாரிற்கும் விலைபோகவில்லை.

ஆகவே எம்மினிய தமிழ் உறவுகளே, தமிழ் தலைவர்களே விவாதங்களை தவிர்த்து ஒன்றினைந்து எங்கள் தலைவரின் கனவை நனவாக்குவோம்.

தமிழரின் தாகமும் எஙக்கள் தலைவனின் தாகமும் தமிழீழம். அதை அடைந்தே தீருவோம்.

தயவு செய்து தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழம்ப வேண்டாம்.

தலைவர் இருகிறாரா இல்லையா என்பது ஒருவருக்கும் சரியாகத்தெரியாது.இந்தக் கேள்வி அவசியம் அற்றது.

ஆனால் ஈழத்தில் தமிழருக்கான விடுதலைப் போராட்டாம் ஏற்படுவதற்கான காரணிகள் இல்லாமால் போய் விடவில்லை.

எமது போராட்டாம் ஈழத்தில் தமிழர்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்காகாவே ஆரம்பிக்கப்பட்டது.

அதனை தனது சக்திக்கு உட்பட்ட அனைத்து வழிமுறைகளாலும் உண்மையாகாவும் நேர்மையாகவும் மேதகு பிரபாகரன் அவர்கள் வழி நடாத்தினார்.

பதமானாபன் அவர்கள் மக்கள் முன் வந்து முழு விவரத்தையும் தெளிவாக அறிவிக்க வேண்டும்.அவரே முன்னர் தலைவர் இருப்பதாக அறிவித்தவர்.இப்போதைய நிலையானாது போராட்டத்தை முற்று முழுதாக் மழுங்கடிக்கும் செயல்.பதமனாதான் அவர்களின் நோக்கம் அதுவல்ல என்றால் அவர் மக்கள் முன் வர வேண்டும்.ஆகாவே புலத்தில் இருக்கும் ஊடகங்கள் பத்ம நாதனை நேரடியாகத் தொடர்பு கொண்டு அவரிடம் கேள்விகளைக் கேட்க வேண்டும்.இவ்வாறான அறிக்கையை விடும் ஒருவர் ஒழிந்து இருந்து கொண்டு அறிக்கை விட இயலாது.

இலட்சக்கணக்கான மக்கள் இன்று சிறிலங்கா இரானுவத்தின் பிடியில் சிக்கி இருக்கிறனர் அவர்களை நாங்கள் விடுவிக்க வேண்டும்.அதற்காக நாங்களே போராட வேண்டும்.இந்தப் போராட்டங்களையும் இத்தகைய அறிக்கைகள் குழப்புகின்றன.ஆகவே நாங்கள் குழம்பாமால் இந்தப்போராட்டங்களை தொடர்ந்து முன் எடுக்க வேண்டும்.தலைவர் தமிழ் மக்களுக்காகவே போராடினார்.உண்மையும் நேர்மையும் விடுதலை வேட்கையுமே பிரபாகாரன்.அவன் வெறும் உடல் அல்ல.தமிழர்களின் ஆன்மாவின் உள் இருப்பவன்.ஆகவே அவனை அழிக்க முடியாது.

அகவே கவலைப்பட்டு மனம் சோர்வது எமது எதிரிகளின் நோக்கத்தையே நிறை வேற்றும். நாம் எமது மக்களின் விடுதலைக்கான் போராட்டத்தை இன்னும் உக்கிரமாக முன் எடுக்க வேண்டும்.எம்மை விட்டால் அவர்களுக்கு வேறு எவரும் இல்லை.

india want to slove tamils problem,ltte have to declere cheef's death.that is a logic now.but we have to fight for freedom from out of Srilanka

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது சரியோ தவறோ சீன இலங்கா இந்தியா உளவுப்பிரிவுகள் நாம் நமக்குள்ளே மோதுவதைக்கண்டு மகிழ்ச்சியடைந்துகொண்டிருப்

தயவு செய்து நாம் உண்மைகளை ஏற்றுக்கொண்டு .... முன்னோக்கிச் செல்லல் வேண்டும். இல்லையேல் ஈழத்தமிழினம் என்று ஒன்று இருந்தது என்றுதான் வரலாறு சொல்லும்.

http://www.orunews.com/

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலையில் வந்த இந்த இணைப்பை பாருங்கள் .......

http://www.yarl.com/forum3/index.php?showtopic=59131

ஒவ்வொருத்தரும் , ஒவ்வொரு அறிக்கை விடுவதன் மூலம் அங்கு இருக்கும் மக்களுக்கு தான் நாம் மேலும் ஆபத்தை விளைவிக்கின்றோம் .

இந்த செய்தியின் பின் யாழ்ப்பாணத்தில் பலர் கைது செய்யப்பட்டதாக , நண்பர் ஒருவர் மூலம் அறிந்தேன் .

+++++

Sea Tiger Special Commander of the LTTE, Col. Soosai Sunday noon said that around 25,000 civilians injured in the artillery attack of Sri Lanka Army are dead and dying now without receiving medical attention. The LTTE has repeatedly requested the ICRC through Mr. Pathmanathan to evacuate the injured through Vadduvaakal or Iraddaivaaikkaal, but there was no IC response. Within a 2 square kilometre area, there are dead bodies everywhere while the remaining thousands are in bunkers amidst the use of every kind of weapon by Colombo's forces. The SLA is not even allowing the people to flee but prefers to fire at them, Soosai said.

Get Flash to see this player.

சூசை அவர்களே பத்மநாதனை கை காட்டிய பின் , அறிவழகன் , வெற்றிக்குமரன் போன்றோரும் அறிக்கை விட வேண்டிய அவசியம் என்ன ?

இதிலிருந்து யாரோ ...... குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்கின்றார்கள் .

தயவு செய்து எது நடந்திருந்தாலும் , அதனை தாங்கும் மனப் பக்குவத்தை ஏற்படுத்திக் கொண்டு நடக்க வேண்டிய காரியத்தை பார்ப்பது தான் தற்போது புத்திசாலித்தனமானது .

இல்லையேல் இதனைப்பற்றியே மாதக்கணக்கில் ஆராய்ச்சி செய்து எல்லோரினதும் மனவுறிதியையும் இழக்கச் செய்தவர்களாகி விடுவோம் .

இச்செய்தியில் ஏதோ மர்மம் இருப்பதாகவே தோன்றுகின்றது. பிபிசி தமிழோசையில் பத்மநாதன் அளித்ததாக சொல்லப்படும் செவ்வியை உன்னிப்பாக கேட்டுப் பாருங்கள்.

சில விடயங்களை புரிந்து கொள்ள முடியும்.

ஒரு புலி உறுப்பினராக அவருடைய பதில்கள் இல்லை.

.பத்மநாதன் அவர்கள் எமது ஊடகங்களுக்கு ஏதாவது கூறினாரா இல்லையே !! தற்போது அரசியல் ரீதியாக பல நகர்வுகள் நடைபெறுகின்றன அதற்கு எமது தலைவர் உயிருடன் இருப்பது இடைஞ்சலே, போன்ற ஊடகங்களை the times, telegraph அவதானித்துப் பாருங்கள் உண்மை புரியும். எப்போது யாழ்பாணம் மீதான படையெடுப்பு உலக நாடுகளால் தடுக்கப்பட்டதோ அப்போதே புலிகளின் போராட்ட வடிவம் மாறிவிட்டது அதற்கு ஏற்ப தான் எல்லம் நடைபெறுகின்றது, நிச்சயம் வெற்றி எம்பக்கம்.

எனவே நாம் எமது கடமையை சரிவரச் செய்ய வேண்டும், தலைவரைத் தேடுவதை விடுங்கள், அவர் நலமாகவே இருப்பார், அவர் துணை எமக்கு உண்டு

தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்: செல்வராசா பத்மநாதன்

[ ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2009, 01:56.16 PM GMT +05:30 ]

தமிழீழ தேசியத் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும், தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வெளியுறவுத்துறை செயலர் செல்வராசா பத்மநாதன் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு,

தமிழீழ விடுதலைப்புலிகள்

தமிழீழம்.

24 வைகாசி, 2009

தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்

தமிழ் மக்க்களின் அணையா விடுதலைச் சுடர்

தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும், செழுமையான எதிர்காலத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்து போராடிய தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை அனைத்துதமிழீழ மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தாங்கொண்ணா துயருடன் அறியத்தருகின்றோம்.

கடந்த 37 வருடங்களாக தமிழீழ மண்ணில் பொங்கிப் பிரவாகித்த விடுதலை வரலாற்றின் ஆன்மாகவும் குறியீடாகவும் விளங்கியவர் எமது தேசியத்தலைவர். ஒரு கால்நூற்றாண்டுக்கு மேலாக அடக்குமுறைக்கு முகம்கொடுத்து நின்ற ஒரு தேசிய இனத்தின் வரலாற்றையே மாற்றுகின்ற விருப்போடும் துணிவோடும் நம்பிக்கையோடும் எதிரிக்கெதிரான விட்டுக்கொடுப்பற்ற ஒரு பெரும் விடுதலைப் போரை தலைமையேற்று நடத்தியவர் அவர். கற்பனைககு எட்டாத தற்தியாகமும், கட்டுப்பாடும், வீரமும், ஒழுக்கமும் நிறைந்த, உன்னதமான ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்பி, பெரும் படையணிகளோடும் ஒரு தனித்த தேசத்திற்குரிய நிர்வாகக் கட்டமைப்புகளோடும் கனரக ஆயுத வல்லமைகளோடும் போராட்டத்தை வழிநடத்தினார்.

அரசியற் போராட்டத்திற்கு இணையாக சமூக மாற்றத்திற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார். போராட்டக் களங்களில் எமது மகளிர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்ததன் மூலம் எமது சமூகத்தில் பெண்களுக்கிருந்த தனித்துவமான பங்களிப்பை வெளிக்காட்டியவர் அவர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீதும், தமிழக மக்கள மீதும், உலகம் முழுவதும் பரந்து வாழும் உறவுகள் மீதும் அவர் கொண்டிருந்த பற்று மிகவும் ஆழமானது. தமிழர் போராட்ட வரலாறு நெருக்கடிகளை எதிர்நோக்கி, மீளமுடியாத கட்டத்தை எதிர்கொண்ட காலங்களில் அவற்றையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு விடுதலையை அடுத்த கட்டத்திற்கு வேகமாக நகர்த்தியவர் எமது தேசியத் தலைவர்.

தலைவரின் போராட்ட அனுபவமும், தற்துணிவும், வீரமுமே எவ்வித நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் உந்து சக்தியாக, எமது போராட்ட சக்கரத்தின் அச்சாணியாக இருந்திருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்து, சர்வதேச சக்திகளின் துணையுடன் ஒரு பெரும் யுத்தம் மீண்டும் எம்மீது திணிக்கப்பட்ட போது, தலைவர் அவர்கள் அதனைத்துணிவுடனேயே எதிர்கொண்டார்.

போர் நெருக்கடியான கட்டங்களை எட்டி எமது நிலப்பரப்புகள் எதிரியால் சுற்றி வளைக்கப்பட்டு ஒரு பெரும் யுத்தம் எம்மக்கள் மீது ஏவிவிடப்பட்டபோதும் தலைவர், தான் வாழ்ந்த மக்களுடனேயே நின்றார். மக்களதும் தளபதிகளினதும் தொடர்ச்சியான வேண்டுகோள்களையும் மீறி அவலப்படும் மக்களை விட்டு வெறியேற மறுத்தார். எமது மக்கள் எதிர்கொண்ட அத்தனை வலிகளையும் தானும் சுமந்தார். இறுதியில், விடுதலைக்கான இந்த நீண்டபாதையில், எந்த மக்களுக்காக ஆயுதமேந்தினாரோ அம்மக்களுடனேயே கடைசி மணித்துளிவரை நின்று போராடி வீரச்சாவடைந்தார். ’எம் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுங்கள்’ என்பதே அவரது இறுதிக் வேண்டுகோளாக இருந்திருக்கிறது.

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர்என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.

எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது.

தலைவரது இலட்சிய நெருப்பை எம் மனங்களில் ஏந்தி அவர் கடைசிவரை போராடிய எமது மக்களின் விடுதலையை வென்றெடுக்க உழைப்பதே அவருக்கான உண்மையான மரியாதையாகும். எமது தலைவரின் வீரச்சாவையிட்டு தம்மையோ ஏனையோரையோ வருத்திக் கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென அனைத்து தமிழ் மக்களையும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

எமது தேசியத் தலைவரோடு வீரச்சாவைத் தழுவிய அனைத்து தளபதிகளுக்கும் மாவீரர்களுக்கும் மக்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இம் மாவீரர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்பதை அறியத் தருகிறோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

செல்வராசா பத்மநாதன்

அனைத்துலக வெளியுறவுச் செயலகம்

தமிழீழ விடுதலைப்புலிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'கலைஞன்' னயவநஸ்ரீ'ஆயல 24 2009இ 12:51 Pஆ' pழளவஸ்ரீ'517779'ஸ

நீங்கள் தலைகீழாக நின்றாலும் சர்வதேச தொடர்புகள் தலைவர் தலைவர்மூலம் பகிரங்க நியமனம் பெற்றவர். இந்தவகையில் நாங்கள் அவருக்கு மதிப்புக்கொடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. கடைசி நேரத்தில் மூன்று மாதங்களின் முன் பாரிய ஒரு பொறுப்பை தலைவர் அவருக்கு பகிரங்கமாக கொடுத்து இருக்கின்றார் என்றால் அவர் தலைவருக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து இருக்கவேண்டும் என்றும் புரிந்துகொள்ளுங்கள்.

தலைவர் நினைத்து இருந்தால் பத்மநாதனின் நியமனத்தை கடைசிநேரத்தில் இரத்துசெய்து இருக்கமுடியும். ஆனால் கால அவகாசம் இருந்தும் இப்படி தலைவர் செய்யவில்லை. எனவேஇ தயவுசெய்து பத்மநாதனுக்கு சேறு அள்ளிப்பூசுவதை நிறுத்துங்கள்.

ஜஃஙரழவநஸ

கலையனின் கூற்றில் உள்ளது அவ்வளவும் உண்மை.

ஆம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இச்செய்தியில் ஏதோ மர்மம் இருப்பதாகவே தோன்றுகின்றது. பிபிசி தமிழோசையில் பத்மநாதன் அளித்ததாக சொல்லப்படும் செவ்வியை உன்னிப்பாக கேட்டுப் பாருங்கள்.

சில விடயங்களை புரிந்து கொள்ள முடியும்.

ஒரு புலி உறுப்பினராக அவருடைய பதில்கள் இல்லை.

இந்த செய்தியை நீங்கள் முழுமையாக நம்ப வேண்டாம்

ஆனால் எல்லாரும் நம்புற மாதிரி நடியுங்கோ

சர்வதேசத்தை கரையுங்கோ

அவ்வளவு தான் சொல்ல ஏலும் (வெளிப்படையா)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை நீங்கள் முழுமையாக நம்ப வேண்டாம்

ஆனால் எல்லாரும் நம்புற மாதிரி நடியுங்கோ

சர்வதேசத்தை கரையுங்கோ

அவ்வளவு தான் சொல்ல ஏலும் (வெளிப்படையா)

:)

பல விடயங்களை வெளிப்படையாச் சொல்ல முடியாமல் இருக்கு..! ஒரு கெட்ட செய்தியைச் சொல்லி அதால நன்மை வரும் எண்டு சொன்னால் கேக்குதுகள் இல்லை..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:)

பல விடயங்களை வெளிப்படையாச் சொல்ல முடியாமல் இருக்கு..! ஒரு கெட்ட செய்தியைச் சொல்லி அதால நன்மை வரும் எண்டு சொன்னால் கேக்குதுகள் இல்லை..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:)அண்மையில் நாங்கள் Edmonton,Albertaவில் ஆர்ப்பாட்டம் செய்தபோது ஒரு தகவல் வந்தது. அதாவது யாரோ ஒரு அடிவருடி அமைப்பு ஒன்று தலைவர் இறந்துவிட்டார் என்று உத்தியோகபூர்வமான அறிக்கை ஒன்றை கனடா முழுவதும் அறிவிக்க போவதாக. இதை பார்த்தால் அப்படியே தோண்றுகிறது. அது மட்டும் அல்ல செல்வராசா பத்மநாதனின் பெயரில் அறிக்கையை விட்டால் நண்றாகவே எடுபடும் என்று அவர்களுக்கு உறுதியாக தெரியும்.அந்த அறிகையில் உள்ள தொலைபேசியை இலக்கத்தை அழைத்தேன். அது ஒரு நோர்வே நாட்டு voicemailக்கு சென்றது. மேலும் கனடிய தமிழ் ஊடகங்கள் எல்லாம் இந்த "செல்வராசா பத்மநாதனின்" அறிக்கையின் அடிப்படையிலே தலைவருக்கு அகவணக்கம் செய்கிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.