Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிணந்தின்னிப் பேய்கள் போன்று செயற்படும் தமிழக காவற்துறையினர் - ஈழ அகதிகள் வேதனை.

Featured Replies

ஈழத்தில் இருந்து கப்பல்மூலமாகம், விமானம் மூலமாகவும் சென்று தமிழகத்தில் முகாம்களிலும், வெளியிலும் தங்கிருக்கும் ஈழத்தமிழர்களை தமிழக காவற்துறையினர் பல்வேறு வகையில் பெரும் அசௌகரியத்திற்கும், அவமானத்திற்கும் உள்ளாக்குவதாக பெரும்பாலான ஈழத்தமிழர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக இவர்கள் யாவரும், விஸா பெற்றுவந்தவர்கள் கூட காவற்துறை நிலையங்களில் தமது பதிவை உறுதிப்படுத்தவேண்டும் எனத் தெரிவிக்கும் காவற்றையினர் இந்த பதிவுகளை மேற்கொள்ள சர்வ சாதாரணமாகவே இவர்களிடம் 1000, ரூபா 1500 ரூபா என

வெளிப்படையாக கேட்டு நச்சரித்தும், தமக்கு இன்ன பொருட்கள் வேண்டும் வாங்கித் கொடுத்தாலத்தான் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுவோம், இல்லை என்றால் விடுதலைபபுலிகள் என்று பொய்க்குற்றச்சாட்டில் உள்ளே தள்ளிவிடுவோம் என அச்சுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற ஒரு நிர்வாக சேவை பணிப்பாளர் ஒருவர், தாம் விசாவுடன் ஒரு திருமணம் நிமித்தம் இரண்டு மாதங்கள் சென்னையில் தங்கியிருக்க உத்தேசித்ததாகவும், அப்போது காவற்துறை பதிவு முக்கியம் என அறிவுறுத்தப்படவே தாம் அங்கு சென்றதாகவும், தன் வயது, தன் பதவி என எதையும் கருத்தில் கொள்ளாமல், தன்னிடம் 1000 ரூபா பணமாக தருமாறும்,

இல்லையெனறால் பதிய முடியாது எனத் தெரிவித்தாகவும், அதேபோல தான் அங்கே இருந்தபோது ஈழத்தமிழர்கள் பலரிடமும் இப்படி மேற்படி காவற்துறையினர் சர்வ சாதாரணமாக காசு கறந்துகொண்டிருந்ததை கண்ணுற்றதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஈழத்தில் தமது உறவக்களை உடல் சிதற இழந்து, பல்வேறு கஸ்டங்களைக் கடந்து தமிழகம் வரும் அவர்களை அதே இனத்தினராக இருந்தம் இந்த இதயமில்லாத அரக்க பிணந்தின்னிகள் போன்ற தமிழக காவற்துறையினரின் செயல்கள் உடனடியாக கண்டிக்கப்படக்கூடியதாகவும், ஊடகங்கள் இதை வெளிக்கொண்டுவரவேண்டும் எனவும் கேடடுக்கொண்டார்.

“சிங்களவனுககு பயந்த இஙகேவந்தால் இவங்களைவிட சிங்களவன்கள் கையால செத்தாலும் பறவாய் இல்லை நான் நாட்டுககுப்போகப்போறேன்” என காவற்துறை நிலையத்தில் தம்மை சந்தித்த பெரியவர் ஒருவர் கவலையுடன் சொன்னதாகவும் அவர் குறிப்பட்டள்ளார்.

http://www.paranthan.com/index.php?option=...4&Itemid=54

1984 ஆம் ஆண்டளவில் நான் இந்தியா சென்ற பொழுது ராமேஸ்வரத்தில் பணிபுரிந்த சுன்க இலாகா அதிகாரி எனது பொல்ட் பொன்ட் பெனாவை தரும்படி கேட்டவர் -- லஞ்சப் பேர்வழிகள்

Edited by Jil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்புங்கோ....

இந்தியாவாலையும், தமிழகத்தாலையும் தான் ஈழம் கிடைக்க போகுது...

நாங்கள் கருணாநிதிககு: ஒருதுண்டு வெட்டியிருந்தால் அவன் ஏன் காங்கிரசுக்கு குடை பிடிக்கிறான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருபக்கம் இவங்கட தொல்லை தமிழன் தமிழனுக்கு ச்சீ இவங்கலெல்லாம் தமிழங்களா என்ன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளே,

உங்கள் குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை. அவமானத்தால் தலை குனிந்து நிற்கிறோம். நீங்கள் பார்த்த காவல் துறையினர் போன்றுதான் பெரும்பாலான தமிழர்களும் இருக்கிறார்கள். இவர்கள் பணம் பொறுக்கிகள், மற்றவர்கள் ஓட்டு பொறுக்கிகள். அவ்வளவுதான் வித்தியாசம்.

நல்ல வேளையாக பெரும்பாலானோர் அயல் நாடு சென்று விட்டீர்கள். நீங்களாவது நிம்மதியாய் இருங்கள்.

அவமானத்துடன்,

சீனிவாசன் சென்னப்பன்.

காக்கிச்சட்டை போட்டாலே வெக்கம் சுடு சொறணை மானம் மரியாதை மனிமாபிமானம் எல்லாமே போய்விடும், மேற்குறிப்பிட்ட தகவல் முற்றிலும் உண்மையானது, அவர்கள் தமிழ்நாட்டு ம்க்களை நடத்தும் விதத்தை பார்த்தாலே இவர்களெல்லாம் வேறு மானிலத்துப் போலீஸ் காரர்களோ என்று எண்ணத்தோன்றும். நான் பலமுறை இப்படியான அனுபவப்பட்டு வெறுத்து இருக்கிறேன் 1992 இல் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கையெழுத்து வாங்குவதற்காக அந்த நெரத்தில் 700 ரூபா கொடுக்க வெண்டி இருந்தது. 1993 இல் திருச்சி விமான நிலையத்தில் ஒருவரை கூட்டிவரவதற்காக சென்று இந்த நெரத்தில் அவ்விடத்துக்கு வந்த ஒரு காவல் துறை கும்பலால் என்னிடம் இருந்த கடைசி 25 பைசாவும் பறிக்கப்பட்டது 2006 இல் விடுதலைப் புலி என்று புளல் மகாமில் அடைப்பதை தவிர்ர்பதற்காக சென்னையில் என்னிடம் இருந்த 35,000 ரூபாயை பறித்துவிட்டார்கள். 2006 இல் சென்னை போரூர் காவல் காவல்துறையில் பதிவதற்காக 3000 ரூபாயை பறித்தார்கள், இப்படி பல அனுபவங்கள் இவைகள் காவல்துறை செம்பந்தப்பட்டது மட்டுnமு.ஆனால் பல தமிழின உணர்வாளர்களும் காவல்த்துறையில் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.

தனிப்பட்ட அலுவலாக குறுகியகால பயணம் மேற்கொண்ட எனது குடும்பத்தாருக்கும் நடந்தது ஒருவருக்கு 1500 ரூபா.அவர்கள் சிபாரிசு செய்யும் ஸ்ரூடியோவில் மட்டுமே 8 புகைப்படம் எடுக்க வேண்டும் என கட்டளை வேறு

இது எங்களுக்கு நடந்து இருக்கு... எனது உறவினர் இந்தியா வந்த போது பதிய அம்மா அவர்களை கூட்டி கொண்டு போனார்... அவர்களுக்கு ஒருவருக்கு ருபாய்2000 தரும்படி கேட்டார்கள் வேற வளி இல்லை நாங்கள் குடுக்கலை என்றால் விடுதலை புலி உறுப்பினர் என்று உள்ள தள்ளி விடுவம் என்று வேற பிறகு என்ன குடுத்தாதுதான்....அப்புறம் எனது அண்ணி வேற இடத்தில் பதிந்து இருந்த சென்னையிலையே எங்கள் விட்டுக்கு வந்து முடிய பக்கத்து இடத்திலைதனே பதிந்து இருக்கு தேவை இல்லை முகவர் மட்டும் மாத்த வேணும் என்று போனால் ரூபாய் 3000 தரும்படி கேட்டார்கள்.. அதுகும் ஒரு நாளில் தந்து விடலை பொம்பிளைகள் என்று பார்க்காமல் அலைகழித்துட்டு இருந்தார்கள்..அப்புறம் எனது நண்பியின் அப்பாவை கூட்டி கொண்டு போய் அவர்கள் கேட்ட காசையும் குடுத்துதான் குடுத்தார்கள்.. சொந்த அனுபவம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போலிசாரின் தொல்லைகள் அதிகம்தான் பத்து வருடங்களுக்கு முன் கேள்வியுற்றேன் சில பெண்களுக்கு நடந்த கொடுமைகளை[அகதிகளாக சென்ற ஈழ பெண்களுக்குத்தான் ] சொல்லவே வாய் கூசுது இந்த ஈனபிறவிகளை என்ன வென்று சொல்வது இலங்கையில் தான் இப்படியென்றால் அகதியாக சென்றாலும் இந்த நாய்கள் விடாது நம்மளை

அகதிகயாக சென்றால் வெள்ளைக்காரன் கொடுக்கும் உதவிகள் பாராட்டத்தக்கது

ஆனால் தமிழனாய்யிருந்து இந்த பிசாசுகள் கொடுக்கும் தொல்லைகள் சொல்லவே முடியாதது......சும்மா வேலையில்லாமல் இந்தியாவுக்கு அகதியாக சென்று அடிமைகளாக வாழ்கிறார்கள் நம் மக்கள் :icon_mrgreen::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1000 , 2000 லாம் பழைய காலம். இப்பொழுது குறைந்தது 5000 வரை போரூர் , வளசரவாக்கம் காவல்நிலையத்தில் பிடுங்கி விடுகிறார்கள்.

பதிவு செய்ய எப்படியும் குறைந்தது 3 அல்லது 4 முறை அலையவிடுகிறார்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அதிகாரிக்கு வேண்டுமென்று 5000 மேல் பிடுங்கிவிடுகிறார்கள். ஒரு நல்ல hand phone கையிலிருப்பதை பார்த்தால் அதையும் பிடுங்கிவிடுகிறார்கள்.

விசா எடுத்து செல்லும் நம்மை விட படகில் மண்டபம் செல்லும் நம் மக்களது நிலைமை மிகவும் நெஞ்சை உருக்கும் விடயம்

முடிந்த அளவு முயற்சி செய்யுங்கள் சிறு துயர் என்றாலும் நமக்கு அது இத்தருணத்தில் பெரு வேதனையே!

Complaint can be made to Police via email: cop@vsnl.net, assemblysecretary@tn.gov.in, assembly@tn.gov.in, call Karunanidhi : +91-44-28115225, 25672345

I emailed to all I hope all of you will do that.

Edited by Sniper

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்யா.. இது காலங்காலமா நடக்கிறதுதானே..! எளியோரை வலியோர் அடக்குவதுதானே உலக நடைமுறை..!

என்ன.. தமிழன் தன் இனத்துக்குள்ளேயே இந்த தத்துவத்தை நடைமுறைப் படுத்துகிறான்..! :icon_mrgreen:

இந்திய.. குறிப்பாக தமிழக பொலிஸ், பொலிஸ் உத்தியோகத்துக்கு கிடைத்த சாபக்கேடு.

செல்வாக்கு படைத்த பணக்காரர்களிடமும் வெள்ளையரிடமும் தான் இவர்கள் தங்கள் கைவரிசையை காண்பிப்பதில்லை.

மற்றும்படி யாரும் விதிவிலக்கல்ல... பலசமயங்களில் பிச்சைகாரர்களிடமே காசு பறித்த செய்திகள் இருக்கின்றன...

முடிந்த அளவு முயற்சி செய்யுங்கள் சிறு துயர் என்றாலும் நமக்கு அது இத்தருணத்தில் பெரு வேதனையே!

Complaint can be made to Police via email: cop@vsnl.net, assemblysecretary@tn.gov.in, assembly@tn.gov.in, call Karunanidhi : +91-44-28115225, 25672345

I emailed to all I hope all of you will do that.

நல்ல முன்மாதிரி...

தமிழக ஈழ ஆதரவு தலைவர்கள் இதையாவது தடுத்து ஈழத்தமிழர்களுக்கு உதவக் கூடிய நிலையில் இருக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் எங்களை சுய பரிசோதனை செய்து பார்ப்போம் என்றால் நாங்கள் தோட்டகாரர் என்று எம்மால் அளைக்கப்பட்ட தமிழகஉறவுகளுக்கு செய்த கொடுமையை

நினனைவு கூர்ந்து பார்ப்போமா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒற்றுமையில்லாது உருக்குலைந்த இனம் என்றால் அது பாழாய்ப்போன இந்த தமிழினம் தான்.

எத்தனை வேற்றுமைகள்,எத்தனை காட்டிக்கொடுத்தல்கள்,எத்தனை துரோகங்கள்,எத்தனை இழிப்பிறப்பாய் ஆகிப்போன எட்டப்பர்கள்.

தமிழ்தாயே,

நம் இனத்தை காப்பாற்று

நம்முள் வேற்றுமை களை

ஒற்றுமை பாராட்டு,

நமக்கு நாமே எதிரிகள் இல்லை என்ற நிலை உருவாக்கு.

Edited by நம் தம்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.