Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா...வீரவணக்கங்கள்.்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் பதம்நதன் அவர்கள் நேற்று வழங்கிய செவ்வி

http://www.tamilnaatham.com/interviews20080213.html

  • Replies 141
  • Views 31.1k
  • Created
  • Last Reply

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா அவர்களின் பதில்களில் இருந்து..

உங்களைப் பற்றிய வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவின 'றோ' உங்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கான உங்களது பதில் என்ன?

எமது தேசியத் தலைவருடன் நான் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, அவருடன் ஆத்ம ரீதியாக கலந்துகொண்டவன்.

இதனை எமது போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அறிந்துகொள்வர்.

எமக்கு இடையில் எந்தவித அப்பழுக்கற்ற நட்பை பேணிக்கொண்டோம்.

இது சாதாரண குடும்ப - மனித - வாழ்க்கைக்கு சற்று மேலான உறவு.

அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக என்னை நியமித்த அந்த தலைவருக்கு செய்யப்படும் துரோகமாகத்தான் நான் இதனை எண்ணுகின்றேன்.

எமது தலைவர் எமது மக்களின் இதயங்களில் குடிகொண்டவர்.

நான் பணத்திற்காகவோ அல்லது பதவிகளுக்காகவோ விலைபோகக் கூடியவனாக இருந்தால் என்னை அவர் இந்த பொறுப்பிற்கு நியமித்திருக்க மாட்டார்.

இது எமது போராளிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துலக நாடுகளுக்கு வந்து வசித்து வரும் போராளிகளுக்கும் தெரியும்.

எனவே எமது தலைவர் அப்படியொரு தவறை செய்ய மாட்டார்.

எனது தலைவர் கூறிய அவரது கனவான -

எமது மக்களுக்கு கௌரவமான, சமனான, மரியாதையுடன் வாழக்கூடிய தீர்வை எடுத்துக்கொடுப்பதற்கு - எனது வாழக்கையை அர்ப்பணித்திருக்கின்றேன்.

சிறிலங்கா அரசு தற்போது தொடங்கியுள்ள போரானது அனைத்துலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் கட்டமைப்பை உடைப்பதாகவே உள்ளது. அதுதான் அவர்களின் அடுத்த இலக்கு.

திருமதி அன்ரன் பாலசிங்கத்தை நாடு கடத்துவதற்கும் அவரை துரோகியாக்குவதற்கும் சிறிலங்கா அரசு முயற்சி எடுத்திருக்கின்றது. எனவே அவர்கள் நினைப்பதை செய்வதற்கு தயவு செய்து துணை போகாதீர்கள்.

நாம் கருத்துகளில் வேறுபடலாம். ஆனால் இலட்சியத்தில் ஒன்றுபட்டவர்கள்.

எனவே அன்பு தம்பிகளே! உறவுகளே!!

எனது அண்ணன் விட்டுச் சென்ற கடைமையை தொடர்ந்தும் செய்வோம்.

:):D:icon_idea:

Edited by vettri-vel

நாங்கள் உண்மைகளை ஏற்று, தவறுகளை உணர்ந்து ........... எம் பணியை தொடர்வதே எமது தலைவனுக்கும், தளபதிகளுக்கும், போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் செய்யும் அஞ்சலி.

Edited by Nellaiyan

நாங்கள் உண்மைகளை ஏற்று, தவறுகளை உணர்ந்து ........... எம் பணியை தொடர்வதே எமது தலைவனுக்கும், தளபதிகளுக்கும், போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் செய்யும் அஞ்சலி.

நாங்கள் விட்ட தவறு சிங்களமக்களுடன் மோதாமல் சும்மா இராணுவத்துடன் மோதியதுதான். சிங்களவன் புலிகளுடன் மோதவில்லை மாறாக தமிழ் மக்களை அடித்து கொன்றான் போரில் வெற்றி பெற்று விட்டான், கடைசியாய் நாங்கள் கேட்ட பெயர் பயங்கரவாதிகள், உலகெல்லாம் தடை.

இனி இந்த தவறை திருத்தி மீண்டும் வர நாள் எடுக்கும். அனைவரும் ஒத்துழைப்போம்

உங்கள் ஆத்திரம் புரிகிறது அனால்...

சிங்கள மக்களை அழிப்பது தலைவரின் குறிக்கோளாக இருக்கவில்லையே... கேணல் ரூபன் (அண்ணாவின்) கடிதத்தில் அவர் தெளிவாக்கி இருக்கிறார்.

".....எமக்கும் சிங்கள மக்களை கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று.

நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம்..."

சிங்களவனின் வெற்றி நிரந்தமில்லை...

"நாங்கள் கேட்ட பெயர் பயங்கரவாதிகள்" இந்த தடையைப் போக்குவதற்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் தான் அஹிம்சை முறையில் போராடவேண்டும். ஆரம்ப காலங்களில் ஆர்ப்பாட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் நாம் ஏந்திய தமிழரின் தேசிய கொடியை பறித்துக் கொண்டு இருந்த காவல் அதிகாரிகள் பிரித்தானியா பெண் மரியா செய்த கவனீர்ப்பின் பயனாக தமிழர்கள் பிடிப்பது புலிக்கொடி இல்லை... அது தமிழரின் தேசியக்கொடி தான், அதை அரசாங்கம் தடை செய்யவில்லை என்றும் காவல் அதிகாரிகளே ஒப்புக்கொண்டு எம் தேசியக் கொடியைப்பிடிக்க அனுமதித்துள்ளார்கள். (புலத்தில் நடக்கும் போராட்டத்தில் இதுவும் ஒரு முக்கிய படியாகும் என்பதில் ஐயமில்லை)

வெள்ளையர் தான் எம் சுதந்திரத்தை சிங்களவனின் கையில் கொடுத்தார்கள், அதனால் தான் இவ்வளவு அவலங்களை தமிழ் மக்களாகிய நாம் சந்திக்கிறோம். வெள்ளையர்க்கு ஒவ்வொன்றாக ஆதாரங்களோடு புரியவைத்து அவர்கள் மூலம் வதை முகாம்களில் உள்ள அப்பாவி மக்களை காலம் கடந்துபோக முன்பு விடுவிக்கவும், எம்மினத்திற்க்கு விடுதலையை புலத்தில் உள்ளவர்கள் பெற்றுக்கொடுக்க முடியும். ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடத்தில் 30 பேர் நிண்டு கொண்டு அதில் 10 பேர் குரல் கொடுக்க 15 பேர் சுவரில் இருந்து ஊர் கதை கதைப்பதால் இது எதுவும் செய்ய முடியாது. ஈழப் போரில் எத்தனை அப்பாவி மக்களை, போராளிகளை, அனுபவமுள்ள தளபதிகளை நாம் இழந்து நிற்கிறோம்? இனியாவது அங்குள்ள மக்களை விடுவிக்கவும், காலம் எமக்களித்த கடமையை செய்து முடிக்கவும் ஒன்றிணைவோம்.

-தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்-

இது ஒன்றும் ஆத்திரத்தில் எழுதவில்லை. உண்மையாக அப்படிதான் இருந்திருக்க வேண்டும். இப்ப கடைசியாய் என்ன கண்டோம் எல்லாம் இழந்து தலைவனயும் காணாமல் தேடுகிறோம்.

அவன் வெற்றி கொண்டாடி எங்களை அவமதிக்கிறான்.

சும்மா இருந்த ஆனந்த சங்கரியே தமிழ்தேசியகூட்டமைப்பை பேசுகிறான். அரசியலை விட்டு அவை போகவேனுமாம். இருக்கிறவன் இருந்திருந்தா இப்படி எல்லாம் பேசுவானா?

என்ன பொறுத்த மட்டில் தவறு என்றால் இது ஒன்றாக தான் இருக்கும்

புலிகள் இல்லக் காட்டில் குள்ள நரிகளுக்குக் கொண்டாட்டம்...

விடுதலை இயக்கம், சிங்கள மக்களைக் பாடுகொலைகள் செய்திருந்தால் தடைசெய்யப் பட்ட எமியக்கத்தை தடையில் இருந்து விடுவித்து இருப்பார்களா? இல்லை, இனிமேல் சிங்களவரைக் கொல்வதால் தடையை எடுப்பார்களா?? ஆயுதம் ஏந்தி போராடினார்கள் எம் போராளிகள்... சர்வதேசம் எமக்குத் தந்த பரிசு பயங்கரவாதிகள்...

இனி ஆயுதத்தை மவுனித்து, போராட நிர்பந்திக்கப் பட்டுள்ளோம். அதையாவது புலம் பெயர்ந்த்து வாழும் மக்களாகிய நாம் ஒற்றுமையாகச் செய்ய முன்வரவேண்டும். சிங்களவன் தன்னால் தனித்து நின்று புலிகளை அளிக்கமுடியாது என்று தெரிந்தது தானே சர்வதேசத்தின் உதவியை பெற்றான்... அதே போல் புலத்தில் உள்ள நாம் நாமிருக்கும் நாடுகளுக்குரிய அரசின் உதவியைப் பெறுவோம்...

தலைவரைத் தொலைத்தோம் என்று ஏன் திரும்பத் திரும்பச் சொல்லியே காலத்தை வீனாக்கிறோம்? தலைவரில் நம்பிக்கை வைத்து செயல் படுவோம். இழந்த உயிர்களை யாராலும் நிவர்த்தி செய்யமுடியாது தான்... சுதந்திரத் தாகத்துடன் உயிர் நீத்த அவர்களுக்கு நாம் கொடுக்கக் கூடியது 'தமிழீழம்' ஒன்றுதான்...

காலம் கைகூடும் போது இழந்த்த மண்ணையும், சுதந்திரத்தையும் திரும்பப் பெறுவோம். தலைவரைக் காணும் நாள் வரும்! இது எனது நம்பிக்கை!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் அனைவருக்கும் சொல்ல முடியும். தலைவர் இருக்கின்றாரா, இல்லையா.. யாருக்கு துரோகிப்பட்டம் சூட்டலாம்.. என்ற ஆராட்சிகளை இத்தோடு நிறுத்தி விடுங்கள். தலைவர் இருக்கின்றார் என்று நம்புகின்றவர்கள் நம்புங்கள். இல்லை என்போர் அஞ்சலி செய்யுங்கள்.

உண்மையில் எமக்குள்ள பிரச்சனை என்னவெனில் தமிழீழப் போராட்டம் இத்தோடு முடிந்து விட்டதா?? அல்லது அதை எப்படித் தொடர்வது என்பது தான்.

இதற்கான பதிலை எவரிடமிருந்தும் பெற முடியவில்லை... தமிழீழத்திற்கான போராட்டம் என்னவென்று எனித் தொடர முடியும்.

சிங்கள அரசு ஒன்றிணைந்த இலங்கை என்ற பார்வையில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கி விட்டது. விடுதலைப்புலிகளின் எந்த அடையாளத்தையும் இலங்கையில் அது கொண்டிருக்க விரும்பவில்லை என்பதோடு, அது சார்பான எந்த விடயத்தையும் அது ஏற்க விரும்பவில்லை என்பதைத் தான் வணங்கா மண் கப்பலைத் திருப்பி அனுப்பியதில் இருந்து புலனாகின்றது. அத்தோடு அரசியல் பலமாகக் கூடப் புலிகளை அது ஏற்க மறுக்கின்றது.

உண்மையில் சொல்லப் போனால், இந்தக் காலப்பகுதியில் வன்னியில் உள்ள புலிகளின் நினைவாலயங்கள், தொடக்கம், மாவீரர் மனை என்று அனைத்து அடையாளங்களையும் அது அழித்துக் கொண்டிருக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன். செய்திகள் வரும் வரை நாம் அது பற்றி அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்பதால் அது பற்றிய செய்திகள் எனி வரும் காலங்களில் வரப் போவதில்லை.

எதிர்வரும் காலங்களில் சிறிலங்கா அரசு எவ்வித அதிகாரத்தையும் தமிழ் மக்களுக்குத் தரப் போவதில்லை என்பதோடு, குடியேற்றங்கள், என்ற போர்வையில் வன்னி தொடக்கம், அனைத்து நிலங்களிலும் கலப்பு இன முறையை உருவாக்கப் போகின்றது. எதிர்வரும் காலங்களில் எந்த இனமும் தனியாக வாழ்கின்ற நிலையை அது விட்டு வைக்காத நிலையாக மாறப் போகின்றது.

உண்மையில் இந்த வேதனையான விடயங்களுக்கு அப்பால், என்ன செய்வது என்பதற்கு எவ்விதமான சந்தர்ப்பங்களும் எம்மிடம் இல்லை. அது பற்றி நாம் கவலைப்படவுமில்லை... தலைவர் இருக்கின்றார் என்று எப்படி எல்லாப் பாரத்தையும் அவர் தலையில் சுமக்க வைத்து, நாம் இவ்வளவு காலமும் தப்பி எமது போராட்டத்தைத் தோற்கடிக்க ஏதுவாக இருந்தோமோ, அந்த நிலையில் இப்போதாவது அந்தப் பொறுப்புக்களைச் சுமக்கத் தயாராகக் கூட நாம் யாருமே இல்லை.

எனி வரும் காலஙகளில் தமிழீழம் தேவையா? அது சாத்தியமாகின்ற விடயமா என்பதற்கான பதில் என்ன?

என்னுடைய முடிவு என்னவெனில், தமிழர் அனுபவித்த வேதனைகளையும், இழப்புக்களையும சிங்கள தேசம் அனுபவிக்காத வரை தமிழீழம் என்பது சாத்தியமற்றது. அல்லால், 2000ம் வருடங்கள் போராடிக் களைத்தே விட்டோம். எனி வரும் காலங்களில் சிங்களம் பேசுகின்ற இனமாக யாரும் இல்லாது போகும் வரை எமக்கான விடுதலை சாத்தியமில்லை

இப்படியே நாங்கள் சும்மா கதைத்துக் கொண்டிருந்தோம் என்றால், விடுதலைப்புலிகள் என்ற ஒரு அமைப்பை மையமாக வைத்துக்கட்டப்பட்ட அனைத்து தமிழர் அடையாளங்களும் சிதையப் போகின்றது. புலத்தில் உள்ள அடுத்த தலைமுறை அங்குள்ள மொழி படித்து அழியப் போகின்றது. ஈழத்தில் வாழ்பவன் சிங்களம் படித்தே அழிந்து போவான்.

Edited by தூயவன்

என்னுடைய முடிவு என்னவெனில், தமிழர் அனுபவித்த வேதனைகளையும், இழப்புக்களையும சிங்கள தேசம் அனுபவிக்காத வரை தமிழீழம் என்பது சாத்தியமற்றது. அல்லால், 2000ம் வருடங்கள் போராடிக் களைத்தே விட்டோம். எனி வரும் காலங்களில் சிங்களம் பேசுகின்ற இனமாக யாரும் இல்லாது போகும் வரை எமக்கான விடுதலை சாத்தியமில்லை

அப்ப நாங்களும் இன அழிப்பு செய்யவேண்டும் என்கிறீர்களா தூயவன்? அது சரியானதா? ஏற்கனவே முஸ்லிம் மக்களை ஊர்விட்டுத்துரத்தியது தவறு என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதே. அதன் பிறகும் இப்படியான காரியங்கள் செய்வது சரியாகுமா?

முதலில் நாம் செய்யவேண்டியது - முகாம்களில் உள்ள மக்களை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யவேண்டும். அதற்காக ஒன்றுபட்டு பாடுபடுவோம். அவர்கள் அனுபவித்த வேதனகள் தொடரக்கூடாது.

எமது இனவிடுதலைக்கான போராட்டத்துக்கு ஒரு சிறிய கால அவகாசம் தேவை. மீண்டும் அனவரையும் ஒரு தலைமையின் கீழ் கொண்டுவந்து ஒரு போராட்டத்தை தொடர வேண்டும். ஆயுதப்போரட்டமா அல்லது வேறு என்னவா என்று அறிந்தவர்கள் கலந்தாலோசித்து முடிவெடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தை மீள நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஒப்புக் கொள்கின்றீர்களோ இல்லையோ எமது விடுதலைப் போராட்டத்தை உலகமும், சிங்கள தேசமும் நசுக்கி விட்டது. எனிவரும் காலங்களில் அது ஆரம்பத்தில் இருந்து தான் உதித்து வர வேண்டிய துப்பாக்கிய நிலையில் உள்ளது.

இந்த இனவழிப்பு என்பதைச் சிங்கள அரசு செய்து தான் தமிழரைத் தோற்கடித்தது. புலிகளின் பகுதியில் வசித்த மக்களைக் கண்டபடி கொன்று குவிக்கின்றபோது, புலிகள் தங்களுடைய சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் மக்களையும் பாதுகாக்க பலத்தை விரயம் செய்ய வேண்டிய நிலைக்கு வர வேண்டி ஏற்பட்டது. அந்த நேரத்தில் அம் மக்களைக் காக்க உலகும் முன்வரவில்லை... நாங்களும் கை கொடுக்கவில்லை.

கடைசிக் காலத்தில் மக்கள் புண்ணாக்குச் சாப்பிடும் போது எல்லாம், எங்களால் ஆதிகபட்சமாக ஆர்ப்பாட்டம் தானே செய்ய முடியும் என்று காலத்தை வீணாக்கினோம். அந்த அறியாமை தான் இன்றைக்குத் தலைவர் இழப்பை ஏற்க மறுக்கின்றது. தேச விடுதலைப் போரட்டத்தை தோள் கொடுக்கவும் தயங்குகின்றது. தலைவர் தலையில் எல்லாப் பொறுப்பையும் போட்டு விட்டு நாம் சும்மா இருக்கலாம் என்பதற்காகவே தலைவரைத் தேடுகின்றோமே தவிர, உண்மையான பற்றை நாங்கள் கொண்டிருந்தால் அவருக்கு எச் சவால்களுக்கு மத்தியில் நின்று தோள் கொடுத்திருப்போம்.

கிட்டத்தட்ட ஒண்டரை லட்சம் அளவில் மக்களை இழந்து விட்டு நல்லவர் வேடம் போட வேண்டிய தேவையில்லை. ஆயுதப் போராட்டம் என்பதில் நல்லவர் மாதிரி நாங்கள் இருந்தால் எதுவே கிடைக்காது என்பதைத் தான் கடந்த 32 வருடப் போராட்டக் களம் எமக்குப் பதிலாகத் தந்திருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா , உங்கள் கருத்தில் முதல் மூன்று பந்தியையும் ஏற்று கொள்கிறேன்..

ஆனால் கடைசியில், சிங்களவனை அவனை போலவே காடை தனமாய் இனவழிப்பு செய்கிறேதேன்றால் - அதை நாங்கள் அரசியல்வாதிகளின் மட்டத்திலேயே நடத்த வேண்டும். அப்பாவி தமிழ் சனத்தை கொன்று குவித்து சிங்களவன் மிருகம் ஆனான் - அதே போல் ஒரு மனநிலை, மிருகத்தனத்திடம் நாங்கள் எங்கள் மனித தனத்தை தோற்க விடக்கூடாது... அதற்கு காரணம் நல்லவன் என்று பெயர் வாங்குவதற்கு அல்ல, தமிழனை சிங்களவன் ஆக்க கூடாது என்பது தான்.

ஆனால் சிங்கள தேசியவாதம் பிடித்த அரசியல்வாதிகளை ..........!! -அதை சொல்லிட்டு செய்ய கூடாது, செய்திட்டும் சொல்ல கூடாது... செய்திட்டு பறையாம ....!!!

அதற்கு மேல்... Eas சொன்ன கருத்துக்கள் ஏற்று கொள்ள கூடியதே -

"முதலில் நாம் செய்யவேண்டியது - முகாம்களில் உள்ள மக்களை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யவேண்டும். அதற்காக ஒன்றுபட்டு பாடுபடுவோம். அவர்கள் அனுபவித்த வேதனகள் தொடரக்கூடாது.

எமது இனவிடுதலைக்கான போராட்டத்துக்கு ஒரு சிறிய கால அவகாசம் தேவை. மீண்டும் அனவரையும் ஒரு தலைமையின் கீழ் கொண்டுவந்து ஒரு போராட்டத்தை தொடர வேண்டும். ஆயுதப்போரட்டமா அல்லது வேறு என்னவா என்று அறிந்தவர்கள் கலந்தாலோசித்து முடிவெடுக்கவேண்டும்."

ஆயுதப்போரட்டமா அல்லது வேறு என்னவா என்று அறிந்தவர்கள் கலந்தாலோசித்து முடிவெடுக்கவேண்டும்."

ஆயுத போராட்ட..........................மா?????????எங்க களத்திலயோ? கணனியிலயோ?

களத்தில் என்றால் விவாதம் தேவயில்லை .கணனி என்றால் விவாதம் வையுங்கோ

ஆயுதமோ அரசியலோ அங்கு வாழும் எம்மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு பெற்று கொடுக்கும் வரை நாங்கள் புலம் பெயர் தமிழர் ஓயக்கூடாது.நாங்கள் தான் சிறிலாங்காவை நெருக்கடிக்குள் கொண்டு வரலாம்

மாநிலமோ ,சுயாட்சியோ ஏதாவது ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் வரை சிங்களத்திற்கு எதிராக நாங்கள் இங்கு இயங்க வேண்டும்.

நாங்களூம் சிங்கள அரசை ஏற்று கொண்டால் அவன் எந்த தீர்வும் தராமல் எங்களை வெற்றி பெற்று அடிமைகள் ஆக்கி விடுவான்.

விடுதலையின் பாதி வலுவை தாங்கியவர்கள் நாங்கள். பாதி வலு அங்கு அடக்கப்பட்டு விட்டது.

இங்கு எங்களை ஒருவரும் அடக்கவில்லை. நாங்களாக அடங்காமல் தொடர்ந்து எங்கள் நடவடிக்கைகளை முன் எடுத்து அம்மக்களுக்கு ஒரு தீர்வு பெற்று கொடுப்போம்.

நேசன், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை!! ஆனால் நாங்களே எங்கள் பேரம் பேசும் ஆற்றலை இழந்தோம் என்ன அழித்தோம்!!! ...... இனியும் ஆயுத போராட்ட கனவுலகில் இருந்து விடுபட்டு எம்மால் செய்யக்கூடியவற்றை செய்ய முற்பட வேண்டும்!!!

1948இல் இருந்து தமிழன் கொல்லப்படுகிறான்!!!!! எம்மால் ஆன மட்டும் உலக வீதிகளில் ஓலமிட்டோம்!! ஆனால் தமிழின படுகொலைகளுக்கு காரணமாக ஒரு சிங்களவனையாவது யுத்தக்குற்றவாளி ஆக்கினோமா??? அல்லது சர்வதேச குற்றவாளிக்கூண்டில் ஏற்றினோமா?????

ஆனால் இது எம்மால் முடியும். எம் பணங்கள் இதற்கு வழி சமைக்கும்!! ஒருவேளை இதே எமது மக்களின் விடிவிற்கு வழி சமைக்கும்!!!

நாங்கள் தலையில் இருந்து அடி வரை அழிந்து விட்டோம் என்ற உண்மைகளை ஏற்று, இல்லை இருக்கிறார்கள் என்றாலும் ஒன்றையும் இனி செய்ய முடியாது! என்பதை உணர்ந்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

  • 10 years later...
  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரம்களில் வாழ்க்கை இருண்டதாகி எழுதக்கூட மனமற்று இருந்தோம் இவ்வளவுகாலத்துக்கு பிறகு தேடி இணைத்த கிருபனுக்கும் நிர்வாகத்துக்கும் நன்றிகள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.