Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனமிருந்தா உதவுங்கோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் எழுதவிருக்கும் விடயம் பற்றி பலர் பலவகையில் தங்கள் எண்ணங்களை எடுத்து விடுவார்கள். சிலர் தனிநபர்கள் ஊடாக எதையும் உய்யோம் என தன்னலமாக தப்பிக்க முனைவார்கள். இன்னும் ஒருசாரார் மகிந்தவுக்கு அலுப்பில்லாமல் உதவுகிறோம் என்பார்கள். இன்னும் சிலர் சோறுகுடுக்க வேண்டாம் சுதந்திரத்தைப் பற்றிச் சொல்லுங்கோ என்பார்கள். இதைவிடப்பெருடங்கில் தனித்தமிழீழம் அமைப்பதற்காக செலவு செய்வோம் என்பார்கள்.

ஆயினும் செத்துவிடுங்கள் நாங்கள் கத்திக்கொண்டிருக்கிறோம் என இருக்க முடியவில்லை. ஆகையால் வவுனியாவுக்குள் அல்லற்படும் உறவுகளுக்காக உதவும் நோக்கில் இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

ஏற்கனவே முதல் முயற்சியாகத் தெரிந்தோர் பழகியவர்கள் என சிலருக்கு சில நண்பர்களுடன் இணைந்து உதவியுள்ளோம். உதவிகள் உரியவர்களைச் சென்றடைந்துள்ளது. அடுத்த கட்டமாக சிறுவர்களுக்கான பாதணிகள் வாங்கிக்கொடுப்பதற்கு முயற்சியெடுக்கிறோம். யாராவது நல்மனம் படைத்தோர் உங்களால் இயன்றதைச் செய்ய முடியுமாயின் உதவுங்கள்.

அந்த முகாம்களில் அல்லல்படுவோர் பலருடன் கதைக்கக் கிடைத்ததில் அவர்களை அப்படியே சாகவிடாமல் ஏதாவது செய்யலாம் எனத் தோன்றுகிறது.

....

ஆகையால் வவுனியாவுக்குள் அல்லற்படும் உறவுகளுக்காக உதவும் நோக்கில் இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

ஏற்கனவே முதல் முயற்சியாகத் தெரிந்தோர் பழகியவர்கள் என சிலருக்கு சில நண்பர்களுடன் இணைந்து உதவியுள்ளோம். உதவிகள் உரியவர்களைச் சென்றடைந்துள்ளது. அடுத்த கட்டமாக சிறுவர்களுக்கான பாதணிகள் வாங்கிக்கொடுப்பதற்கு முயற்சியெடுக்கிறோம். யாராவது நல்மனம் படைத்தோர் உங்களால் இயன்றதைச் செய்ய முடியுமாயின் உதவுங்கள்.

அந்த முகாம்களில் அல்லல்படுவோர் பலருடன் கதைக்கக் கிடைத்ததில் அவர்களை அப்படியே சாகவிடாமல் ஏதாவது செய்யலாம் எனத் தோன்றுகிறது.

உதவிகள் உரியவர்களைச் சென்றடைந்தால் சந்தோசம்...

வயிற்றுப் பசிக்கு ஒருவேளை கூட உணவின்றி தவிக்கும் சிறார்களுக்கு, முதலில் உணவு கிடைக்குமா? முட்கம்பிகளுக்கு நடுவே பெற்றோரையும், உற்றோரையும் இழந்து, உடல் அங்கங்களையும் இழந்து தவிக்கும் சிறார்கள் பாதணிகள் போட்டுக் கொண்டு எங்கே போகப் போகிறார்கள்?? :D

தயவு செய்து முதலில் உணவு கிடைக்கச் செய்வது சாத்தியமாகுமா என்று பாருங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜயா... முதலில சாப்பாட்ட போடுங்க........... அவங்களுக்கு வாய் இருக்கு சாப்பிட முடியும்...

காலனி குடுத்து பயனில்லை ....................... ம்ம்ம்... காலில்லையே...

  • தொடங்கியவர்

வயிற்றுப்பசிக்கு உடனடியாக உதவவேண்டியது உண்மைதான் குட்டி. ஆனால் காலுக்குச் செருப்பின்றி எல்லா அசிங்கங்களுக்குள்ளும் கால்களை வைத்துத் திரிகிறார்கள் அதனால் தொற்று நோய்கள் தாக்குகிறது. தற்போது வெக்கைகாலமாகையால் சுடுவெயிலில் தவிக்கிறார்கள். அந்த அவலத்தை அனுபவிக்கும் பல்லாயிரம் பேரிலிருந்து சிலருடன் கதைத்த போது இந்த உதவியைக் கேட்டுள்ளார்கள். அதனாலேயே இந்த முயற்சியை எடுக்கிறோம்.

ஒரு மலசலகூடத்தை நூற்றுக்கணக்கில் பாவிக்கிறார்கள். சரியாக தண்ணீர் ஊற்ற அனுமதியில்லை. ஆகையால் சிறுவர்கள் முதல் அனைவரும் அதன்மேலே நிற்க வேண்டியுள்ளார்கள்.

அழகான ஆயிரம் ரூபாய் பாதணிகளல்ல அவர்களுக்கு நாம் வாங்கிக் கொடுப்பது வெறும் 100ரூபாய் சிலிப்பர்களே.

அழகாய் அவர்களால் எங்கே போகப்போகிறார்கள் ? தங்கள் கால்களை வெயிற்கொடுமையிலிருந்து காக்கத்தான் வேறெதற்கு ?

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜயா... முதலில சாப்பாட்ட போடுங்க........... அவங்களுக்கு வாய் இருக்கு சாப்பிட முடியும்...

காலனி குடுத்து பயனில்லை ....................... ம்ம்ம்... காலில்லையே...

சரி காலணி குடுக்க வேண்டாம் சாப்பிட ஏதும் குடுப்பியளோ ? எங்களால் இயன்றது இதுதான். உங்களால் இயன்றதை நீங்களும் செய்யுங்கோ அசன்.

காலணிகளுக்குப் பதிலாக கடதாசி மட்டைகளை வெட்டிச் சணல் நூலால் கட்டிக் கால்களில் போட்டுக்கொள்கிறார்கள். அந்தத்துயரை வெளியில் உறவுகளிடம் வந்து போன ஒரு பெண்ணுடன் கதைக்கக் கிடைத்தது. அதைக் கேட்ட பிறகே இப்படியொரு உதவியைச் செய்ய நினைக்கிறோம்.

கால் கை இரண்டையும் இழந்து 22 வயதில் ஒரு பெண் அந்த முகாமுக்குள் ஒரு குழந்தையைப் பெற்றிருக்கிறாள். கணவனை செல் கொண்டுபோயிற்று புதுமாத்தளனில். இப்படி ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்களை எல்லோரும் முன் வந்தால் இயங்க வைக்கலாம். இதற்கு யாரும் முன்வரும் நிலையில் இல்லை.

இந்த உதவியைச் செய்வதற்கு அங்கு பணியாற்றும் ஒருவரின் உதவியைத்தான் நாடுகிறோம்.

தேவைகள் அவர்களுக்கு அதிகம். எங்களால் இயன்றதைச் செய்ய நினைக்கிறோம். மலையைப்புரட்டும் சக்தியில்லாத நாம் இப்படி அணில்களாக அணிவகுக்கிறோம்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

உணவுக்குப் பின்தான் மற்றதெல்லாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உணவுக்குப் பின்தான் மற்றதெல்லாம்

கறுப்பி உணவுக்குப் பின்தன் மற்றதெல்லாம் அதைச்செய்யுங்கொ நாங்களும் உதவ முன்வாறம்.

  • கருத்துக்கள உறவுகள்

உணவு முக்கியம் தான். அவர்களுக்கு போதுமான அளவில் அது இல்லை என்பதும் உண்மை. ஆனால் உணவை சிங்களவன் மூலமாகத் தான் கொடுக்க வேணும்.உணவு கொடுத்தால் சிங்களவனோட சேர்ந்து கொண்டு வவுனியாக் கச்சேரியில இருக்கிற எங்கட நாயளும் அதைக் களவெடுக்கிறதும் கள்ளக் கணக்குக் காட்டுறதும் தான் நடக்குது. செருப்பும் முக்கியம் தானே? தேவையளுக்கேற்ற மாதிரி தான் உதவியையும் கொடுக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது உறவுகளுக்கு உதவுவது நல்லது ஆனால் எப்போதும் விழிப்புடன் இருங்கள்.

தப்பாக என்னை புரிந்துகொள்ள வேண்டாம் நான் சொல்ல வருவது அனுபவத்தில் கண்ட உண்மை.

சிறிய சிறிய தொகைகளை அனுப்பும் வரை உரியவர்களுக்கு போய் சேரும்படி செய்கிறார்கள்

அப்படியே ஒருநாள் நாங்களும் சிறிது சிறிதாக தொகையைக் கூட்டி மொத்தமாக அனுப்பும் பொழுது

காத்திருந்து அடித்துக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். இதுபோல் முன்பும் ஒருமுறை நிகழ்ந்து

அதில் எனக்கு அனுபவமுள்ளது. ஆகவே கவனம்.

வேறு வேறு நாடுகளிலிருந்தும் கொடுக்க விரும்புபவர்கள் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்ச நாளைக்கு முந்தி தாயக உறவுகளுக்கெண்டு வங்கிக்கு காசனுப்பச்சொல்லி சிலபேர் அனுப்பினவை. அவைக்கு அந்தக் காசு போன இடமும்தெரியாது ..விவரங்களும் இல்லை. அதுக்குப் பிறகும் காசு தர சம்மதிப்பினமோ? முதலிலை இப்பிடிக் காசு கேக்கிறவை இதுகளைப்பற்றி கொஞ்சம் கவனிக்கவேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளைக்கு முந்தி தாயக உறவுகளுக்கெண்டு வங்கிக்கு காசனுப்பச்சொல்லி சிலபேர் அனுப்பினவை. அவைக்கு அந்தக் காசு போன இடமும்தெரியாது ..விவரங்களும் இல்லை. அதுக்குப் பிறகும் காசு தர சம்மதிப்பினமோ? முதலிலை இப்பிடிக் காசு கேக்கிறவை இதுகளைப்பற்றி கொஞ்சம் கவனிக்கவேணும்.

கொஞ்சநாள் முதல் புதிசா யாராவது இங்கை காசு சேத்தினமோ தெரியாது மதுரன். ஆனால் இந்தக்களத்தில் நேசக்கரம் நண்பர்கள் வட்டம் என்று ஒன்று இயங்கிவந்தது சிலவருடங்களாக. அந்த நேசக்கரத்தில் பங்கேற்றவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் செயலரங்கம் பகுதியில் அறிவிக்கப்பட்டது. அப்பொறுப்பைக் களநண்பர் டண்ணின் பொறுப்பில் செயற்படுத்தப்பட்டது. இறுதியாக டண் வணங்கா மண்ணுக்குக் கடைசிப்பங்களிப்பு முழுவதும் கொடுத்திருந்தார். அந்த விபரங்களும் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் ஆதாரங்களோடு தனித்தனியே தெரிவிக்கப்பட்டது. உதவிபெற்றவர்களின் கையொப்பங்களுடன் சகலமும் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

நேசக்கரம் தாயகத்துக்கு எங்கெங்கே உதவியது, எந்த அமைப்பு ஊடாக அல்லது தனிநபர்கள் ஊடாக என்பதையெல்லாம் பங்காளர்களான அனைவரும் அறிவார்கள். சிறுதுளியாய் நேசக்கரம் செய்த உதவிகள் பலருக்குப் பேருதவியாயிருந்தது. பங்களிப்பில் சம்பந்தப்படாதவர்களுக்கு நேசக்கரம் தனது பங்களிப்பை தெரியப்படுத்தவில்லை.

இப்ப நாங்கள் காசு சேர்க்கிறது கூட விருப்பமுள்ள மற்றும் நம்பிக்கையுள்ளவர்களை மட்டும் நம்பியே. மற்றும்படி யாரையும் கட்டாயப்படுத்தியல்ல. எல்லாத்தையும் கவனிச்சுத்தான் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு :- இச்செய்தியைப் பார்த்துவிட்டுத் தனிமடலில் தொடர்பு கொண்டு தங்கள் உதவிகளை நல்கச் சிலர் முன்வந்துள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மணி ஆலோசனைகள் அறிவுரைகள் வேணமானால் கேளுங்கோ வேண்டிய அளவு அள்ளி அள்ளித்தரலாம்..ஆனால் இங்கை ஊரிலை சனத்துக்கு சோத்துக்கு வழியில்லை .காலிலை செருப்பில்லை.போட உடுப்பில்லையெண்டு கேட்கக்கூடாது..முள்கம்பிக்கு பின்னாலை நிற்கிறவைக்கு சோறு இல்லாட்டிலும் பரவாயில்லை நாங்கள் வடிவாய் வயிறு நிறைய விழுங்கிப்போட்டு சுதந்திரம் பற்றி சொல்லிக்குடுக்கலாம்...கை கால்களையும் இழந்து வாந்திபேதி வயிற்றோட்டத்திலை நாளுக்கு நாள் உணர்வற்று மயங்கி விழுந்துகொண்டிருப்பர்களிற

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி உணவுக்குப் பின்தன் மற்றதெல்லாம் அதைச்செய்யுங்கொ நாங்களும் உதவ முன்வாறம்.

வெண்புறா மற்றும் அமைப்புகள் ஊடாக செய்துள்ளேன்..மேலும் முன்னேடுத்துச் செல்லும் பணி தொடரும் பட்சத்தில் உங்கள் உதவி நாடி நிற்கிறேன் அம்மணி.

சாந்தி அக்கா, யாழ் கள உறவுகள் யாழ் நேசக்கரம் மூலம் உதவிசெய்யலாமே? ஏற்கனவே யாழ் நேசக்கரம் மூலம் தாயக மக்களிற்கு உதவிசெய்யப்பட்டு இருப்பதால் தொடர்ந்து அதன்மூலம் உதவிசெய்வது யாழ் உறவுகளிற்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இதற்கு எனது பங்களிப்பையும், மற்றும் தேவைப்பட்டால் கனடாவில் இதர உதவிகளையும் செய்து தரமுடியும்.

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெண்புறா மற்றும் அமைப்புகள் ஊடாக செய்துள்ளேன்..மேலும் முன்னேடுத்துச் செல்லும் பணி தொடரும் பட்சத்தில் உங்கள் உதவி நாடி நிற்கிறேன் அம்மணி.

நீங்கள் சொல்ற வெண்புறாவுக்கு நிகரான அமைப்புகள் ஊடாக நாங்களும் தான் உதவினோம் உதவிக்கொண்டிருக்கிறோம். பணி தொடரும் பட்சத்தில் சொல்லுங்கோ. வெண்புறாவை மீண்டும் வானத்துக்கு அனுப்பும் யோசனையில் ஆலோசனைக்குழு கூடி முடிவெடுத்த பின்னர் சொல்லுங்கோ.

ஆனால் கல்கத்தாவில் உடைக்கப்படவிருக்கும் வணங்காமண்ணை நம்பிக் கடலில் இறங்கத் துணிவில்லை. மில்லியன்களை விழுங்கிய வணங்காமண் கல்கத்தாவில் உடையப்போகிறது அநியாயமாக யாராவது காப்பாற்றுவினமோ ?

சாந்தி அக்கா, யாழ் கள உறவுகள் யாழ் நேசக்கரம் மூலம் உதவிசெய்யலாமே? ஏற்கனவே யாழ் நேசக்கரம் மூலம் தாயக மக்களிற்கு உதவிசெய்யப்பட்டு இருப்பதால் தொடர்ந்து அதன்மூலம் உதவிசெய்வது யாழ் உறவுகளிற்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இதற்கு எனது பங்களிப்பையும், மற்றும் தேவைப்பட்டால் கனடாவில் இதர உதவிகளையும் செய்து தரமுடியும்.

நேசக்கரம் ஊடாக செய்யலாம் கலைஞன். ஆனால் நேசக்கரத்தில் இருந்தவர்கள் பலர் விலகியுள்ளார்கள். ஆட்களை இணைத்துச் செயற்பட மீண்டும் நேசக்கரத்தில் பங்காற்றியோர் முன்வந்தால் தொடர்ந்து செய்வோம். மற்றும் நேசக்கரம் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்குத் தொல்லை குடுப்பதா என யோசிச்சிட்டு பழைய நேசக்கர உறவுகள் யாருக்கும் தனிமடல் இடவில்லை.

உங்களுக்கு தனிமடல் இடுகிறேன். இதுதொடர்பான விபரங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அம்மணி ஆலோசனைகள் அறிவுரைகள் வேணமானால் கேளுங்கோ வேண்டிய அளவு அள்ளி அள்ளித்தரலாம்..ஆனால் இங்கை ஊரிலை சனத்துக்கு சோத்துக்கு வழியில்லை .காலிலை செருப்பில்லை.போட உடுப்பில்லையெண்டு கேட்கக்கூடாது..முள்கம்பிக்கு பின்னாலை நிற்கிறவைக்கு சோறு இல்லாட்டிலும் பரவாயில்லை நாங்கள் வடிவாய் வயிறு நிறைய விழுங்கிப்போட்டு சுதந்திரம் பற்றி சொல்லிக்குடுக்கலாம்...கை கால்களையும் இழந்து வாந்திபேதி வயிற்றோட்டத்திலை நாளுக்கு நாள் உணர்வற்று மயங்கி விழுந்துகொண்டிருப்பர்களிற
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேறு வேறு நாடுகளிலிருந்தும் கொடுக்க விரும்புபவர்கள் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

வணங்காமுடி,

உங்களுக்குத் தனிமடல் இட முயற்சித்தேன். முடியவில்லை. எனத மின்னஞ்சல் குறிப்பிடுகிறேன். தொடர்பு கொள்ளுங்கள்.

எனது மின்னஞ்சல் - rameshsanthi@gmail.com

தேவையளுக்கேற்ற மாதிரி தான் உதவியையும் கொடுக்க வேணும்.

தேவைகளைப்புரிந்தமைக்கு நன்றி ஜஸ்ரின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதயபூர்வமான பங்களிப்புக்களுக்கு நக்கல் கேள்விகளும், நக்கல்பார்வைகளும் இருக்கும் போது...................?

நான் எனது குடும்ப உறவினர்களுக்கு நேரடியாக உதவி செய்ய முடிவு செய்துள்ளேன்.

எதற்கும் அவர்கள் மன உறுதியும் மனை உறுதியும் பெறட்டும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------?

குமாரசாமி,

ஏற்கனவே நேசக்கரம் ஊடாக நீங்கள் செய்த பங்களிப்புக்கள் பலருக்கு உதவியதை இக்கணம் நன்றியுடன் நினைவு கூருகிறேன். நீங்கள் இம்முறை எங்களுடன் இணைந்து உதவவில்லையென யோசிக்காதீர்கள். உங்கள் குடும்ப உறவினர்களுக்கு நீங்கள் உதவுங்கள். எப்படியாயினும் அந்த மக்களுக்கு உதவிகள் போய்ச்சேரட்டும்.

எப்போதுமே தமிழ்க்குணம் நன்மைகளுக்கு நடுவில் இப்படிக் கக்குவது வளமைதானே அப்படி எடுத்துக்கொள்வோம் இங்கு வரும் நளின நக்கல்களை.

ஒரு தலைவனின் தலையில் சுமை முழுவதையும் போட்டுவிட்டு தப்பித்த தைரியம் இப்போது இவர் வருவார் என்று மேலும் அந்தத்தெய்வத்தின் தலையிலேயே அனைத்தையும் இறக்க முடிவுபோல உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம்,

இந்த இடத்தில் உதவி செய்ய விரும்புபவர்களிடம் நானும் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகின்றேன்!

தாயகத்தில் முகாம்களுக்குள் முடங்கி கிடக்கும் எமது சொந்தங்களின் பிள்ளைகள், உறவினர்கள், அல்லது குறிப்பிட்ட குடும்பங்களில் தங்கி படித்தோர் என ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழத்தில், பல்வேறு துறைகளில் தமது கல்வியை தொடரமுடியாத நிலையிலிருக்கின்றனர்.

தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் முகாம்களுக்குள் தொழிலின்றி முடக்கப்பட தமது பாடங்களுக்கான, செலவுகளையோ, அறை வாடகை, புத்தங்கள் என்பவற்றை பெறவோ முடியாமல் அல்லல்ப்படுகின்றனர்.

அதிகமானவர்கள், இறுதியாண்டில் இருப்பதால் அவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கபடாமல் இருக்க அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை எமது இந்த திட்டன் கீழ் 300 வரையாக பல்கலைக்கழக மாணவர்கள், மாதாந்தம் 3000 தொடக்கம் 5000 வரை தமது தேவைக்கு ஏற்றளவு கோரியுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட 230 மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுக்கொண்டிருக்க

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதயபூர்வமான பங்களிப்புக்களுக்கு நக்கல் கேள்விகளும், நக்கல்பார்வைகளும் இருக்கும் போது...................?

தனி நபர் தாக்குதல்களும் நக்கல்களும் எம்மை பின்னோக்கியே நகர்த்தும். மனமுவர்ந்து கொடுக்க வருபவர்களையும் ஒரு கணம் யோசிக்க வைக்கிறது. நேசக்கர மூலம் உதவி வழங்க விரும்புகிறேன்.உடைகள் அக்கா ஒருவரின் உதவி மூலம் தேவாலயம் ஒன்றினூடாக அனுப்பியுள்ளேன். உடனடி உதவி பெற்றோர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனி நபர் தாக்குதல்களும் நக்கல்களும் எம்மை பின்னோக்கியே நகர்த்தும். மனமுவர்ந்து கொடுக்க வருபவர்களையும் ஒரு கணம் யோசிக்க வைக்கிறது. நேசக்கர மூலம் உதவி வழங்க விரும்புகிறேன்.உடைகள் அக்கா ஒருவரின் உதவி மூலம் தேவாலயம் ஒன்றினூடாக அனுப்பியுள்ளேன். உடனடி உதவி பெற்றோர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

நுணாவிலான்,

நேசக்கரம் மூலமான பங்களிப்பு பற்றி நாற்சந்தியில் எழுதியுள்ளேன். அதில் பலர் தமது கருத்துக்களை கூறியுள்ளார்கள். கனடிய நண்பர்கள் கலைஞனுடன் தொடர்பு கொண்டால் கலைஞன் மேலதிக விபரங்களைத் தருவார்.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனமிருந்தா உதவுங்கோ என்ற தலைப்பில் உதவி கோரி 2மாதங்கள் முடிவடைந்த நிலையில் மீளவும் இத்திரியை ஞாபகம் கொள்ள வைக்கிறேன். பலர் பல கேள்வி கேட்டார்கள். உதவியது சிலர்தான். அவர்களது உதவிகளுக்கு நன்றிகள். உதவிய அனைவருக்கும் பயனடைந்தோரின் படங்கள் விபரங்களுடன் தனிமடலிடப்படும். சிறு அணில்களாக செய்துள்ளோம் சிறு பங்களிப்பு. ஆனால் அது சிலருக்குப் பயன்பட்டுள்ளது.

உதவியவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தான் உதவினார்கள். முகம் அறியோம் ஆனாலும் அவர்கள் நம்பி உதவிய உதவிகளுக்கு நன்றிகள்.

ஆலோசனைகள் முன்னுரைகள் சொன்ன எவரும் இத்திட்டத்தில் பங்கேற்கவில்லையென்பதை வருத்தத்துடன் கூறிக்கொள்ள வேண்டியுள்ளது. சத்தமில்லாமல் இருந்தோரால் தான் உதவிகள் கிடைத்தது. அனைவருக்கும் நன்றிகள்.

senthil5000 ; 50டொலர் - நாணயமாற்றுச் செலவு - 2.25USD - 33,33€ கிடைத்தது

வக்தா - 25கனடியடொலர் நாணயமாற்றுச் செலவு - 1.28CAD - 14,23€கிடைத்தது.

இணையவன் 50யூரோக்கள் நாணயமாற்றுச் செலவு - 1.30€- 48.70€ கிடைத்தது.

senthil5000 - 33,33€

சாந்தி - 100யூரோக்கள்

வக்தா - 14,23€

இணையவன் 48.70€ கிடைத்தது.

கிடைத்த மொத்தத்தொகை - 196,26€

மொத்தமாக 250யூரோக்கள் அனுப்பப்பட்டது. அனுப்புக்கூலி 11யூரோ

முப்பத்து ஒன்பதாயிரத்துநூற்றுஇருபத்த

Edited by shanthy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.