Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் சிங்கள சிறீ லங்கா இராச்சியத்திடம் தோற்றுப்போன பிரபாகரனின் தமிழீழ தமிழ் இராச்சியம்?

Featured Replies

வணக்கம்,

இது ஓர் கேள்விதான்:

மகிந்தவின் சிங்கள சிறீ லங்கா இராச்சியத்திடம் தோற்றுப்போன பிரபாகரனின் தமிழீழ தமிழ் இராச்சியம்?

கடந்த சில மாதங்களில் தாயகத்தில் நடைபெறும் சம்பவங்களை, நடைபெற்ற சம்பவங்களை உன்னிப்பாக பார்க்கும்போது / வேறு ஓர் கோணத்தில பார்க்கும்போது முன்பு அந்தக்காலத்தில் மன்னர்கள், இராச்சியங்களிடையே பகைமை வளர்ந்து போர் ஏற்படும்போது என்ன நடைபெறுமோ அதேவிசயங்களே அச்சொட்டாக நடைபெற்றது, நடைபெறுகின்றது போல தெரிகின்றது.

வாள்களுக்கும், அம்பு, வில்லுக்கும் பதிலாக ஆயுததளபாடங்கள் மாறி இருக்கிது. ஆனால் அடிப்படை ஒன்றாகத்தான் இருப்பது போல் தெரிகின்றது.

  • அதே காட்டிக்கொடுப்புக்கள்
  • அதே துரோகத்தனங்கள், அதே ஒற்றுமையின்மை
  • அதே மக்களின் அவலங்கள்
  • அதே கொடுமைகள், அதே கொலைகள், அதே பாலியல் வல்லுறவுக்கள்
  • அதே சரண் அடைவுகள், அதே சிறைப்பிடிப்புக்கள்
  • அதே அடிமைத்தனம், அதே அடிமை வாழ்வு
  • அதே சூரையாடல்கள், அதே கலாச்சார அழிப்புக்கள்
  • அதே கொடுங்கோல் ஆட்சி...
  • அதே வெறிகள், அதே வெற்றிக் களிப்புக்கள்

மேலும் சிறீ லங்கா அரசாங்கம் பல நூறு வருடங்களுக்கு முன்பு இருந்த பகைமையின் அடிப்படையில் தனது தற்போதைய அரசியல் நகர்வுகளை செய்கின்றதோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

உங்கள் கருத்துக்களையும் கொஞ்சம் சொல்லுங்கோ. உங்களுக்கு எப்படி தெரிகின்றது?

மகிந்தவின் சிங்கள சிறீ லங்கா இராச்சியத்திடம் தோற்றுப்போன பிரபாகரனின் தமிழீழ தமிழ் இராச்சியம்?

Edited by கலைஞன்

.... அந்தக்காலத்தில் மன்னர்கள், இராச்சியங்களிடையே பகைமை வளர்ந்து போர் ஏற்படும்போது என்ன நடைபெற்றதோ அதேபோல் இன்றும் நிகழ்சசிகள் அச்சொட்டாக நடைபெறுகிறதா ? ...

உங்கள் பார்வைக்கு Dutugemunu strategy and Ellalan response - By Dr.Rajasingham Narendran Sri Lanka Guardian

உங்கள் பார்வைக்கு நூலகம் திட்டதிலிருந்து

கலாநிதி ஜேம்ஸ் தே. இரத்தினத்தின் "எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்"

  • கருத்துக்கள உறவுகள்

தன்னினத்தைக் காட்டிக் கொடுப்பவனை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது

விடுதலைப் போராட்டம் என்பது பெரும் விலைகொடுத்து நடத்துவது.

மனிதர்களுக்கு அடிப்படைச் சுதந்திரம் உண்டு. அடிப்படை மனித உரிமைகளை அடையவிடாது தடுப்பதும், இடையூறு விளைவிப்பதும் தவறாகும். இந்த வகையில் சகல நாடுகளிலும் ஒரு விதிவிலக்கு உண்டு. எனினும் எல்லா வகையான உரிமைகளையும் ஒவ்வொரு பிரசையும் அடையவும், ஒவ்வொரு பிரசைக்குமான பாதுகாப்பை வழங்கவும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.

எனினும் உரிமைகள் தொடர்பில் பேசுவோர் மிக அதிகமாகவும், கடமைகள் பற்றிப் பேசுவோர் மிகக் குறைந்தோராக வும் காணப்படுகின்றனர். போகிற போக்கில் பேசுவது போல நாட்டு நடப்புகளைப் பேசுவோர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விட்டுப் போகின்றனர். சிலர் தமது சொந்த நலன்களை மட்டும் கருத்திற் கொண்டு பேசுவோராக உள்ளனர்.

நன்மை தீமைகளைப்பற்றி இவர்களுக்கு அக்கறையில்லை. என்ன நடக்கிறது என்ற கவனமும் இல்லை. இவர்களது சொந்த இலாபம் மட்டுமே இவர்கள் குறிக்கோளாகிறது.

கருத்துக் கூறவும் அதைக் கேட்கவும் ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு. என்றாலும், அது அமைதி வழியில் கலவரத்தை உண்டுபண்ணாத வகையில் அரசுக்குத் துரோகமிழைக்காத வகையில் இருத்தல் வேண்டும். இவ்வாறுதான் மனித உரிமைகள் சட்டம் கூறுகிறது. இன்று வன்னிப் பெருநிலப்பரப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதி மட்டுமல்ல தமிழீழம் என வரையறுக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலும் தமிழர்களுக்கே உரிமையுண்டு. எனினும் இப்பகுதிகளை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

சிங்கள இராணுவத்தினர் தாம் ஆக்கிரமித்த பகுதிகளில் உள்ள தமிழர்களைத் தனக்கிணைவானவர்களாக மாற்றப் பல சலுகைகளைச் செய்வான். இதில் மிக முக்கியமானது தடை செய்யப்பட்ட பொருட்களை ஏதோ சலுகையாக வழங்குவதும் கண்டும் காணாதது போல் விடுவதுமாகும்.

உண்மையில் சகல மக்களுக்கும் சகல பொருட்களையும் கொள்வனவு செய்ய உரிமை உண்டு. அவற்றைத் தமிழ் மக்களுக்கு மட்டும் தடைசெய்தது அரசாங்கம் தானே.

பின் ஏன் ஏதோ இரக்கப்பட்டோ அன்பாகவோ ஒரு சிலருக்கு அவற்றைத் தரவேண்டும். அவர்களிடமிருந்து எங்கள் விடுதலைப் போராட்டத்தை உடைக்கக்கூடிய தகவல்களைப் பெறுவதற்காகத்தானன்றி வேறென்ன?

அண்மையில் பேருந்து நிலையத்தில் ஒரு பெண் பெருமையாகக் கூறிய ஒரு கதை இது.

'நெடுக நிற்கிற ஆமிய இண்டைக்குக் காணேல்ல, அவனெண்டா என்ன சாமானெண்டாலும் கிண்டமாட்டான். கொண்டு போங்கோ எண்டு சொல்லிப்போடு வான்" இதற்கு மற்றப் பெண் 'சாமான் கூடக் கொண்டுவர சில ஆமி தூக்கிக்கொண்டு வந்து பொயின்ரடியில விடு வினம்" என்றாள்.

எப்படி..? இப்படி அன்பும் ஆதரவும் உள்ள படைதானே பள்ளிப் பிள்ளைகளையும், பொதுமக்களையும் கும்பல் கும்பலாகக் கொன்றொழிக்கிறது. இருப்பிடங்களை விட்டு ஏதிலிகளாக விரட்டியடிக்கிறது. விரட்டி விட்டு தமிழர் நிலங்களில் சிங்களவரைக் குடியேற்றுகிறது.

அவர்கள் யார்? தமிழர்கள் மட்டுந்தானா? உங்கள் தாய் பிள்ளை உறவுகள் இல்லையா? உரிமைகளைத் தாமாகவே தடுத்து வைத்துக்கொண்டு ஒன்றிரண்டு பொருட்களை உங்களுக்கு மட்டும் தருகிறான். நீங்கள் யார்? உங்கள் மீது அவர் களுக்கென்ன அக்கறை. நீங்கள் அவனுக் கென்ன அக்கா தங்கை உறவா? அண்ணன் தம்பியா?

உங்களுடைய இனத்தை அழிக்க உங்களையே கருவியாக்கி உங்களை ஒரு கோடாரிக்காம்பாக மாற்றுகிறான். இதனால் உங்களுக்கு அவனிடம் நற்பெயர் என்று நினைத்தாலும் ஏமாற்றமே. நீங்கள் செய்யும் பணிக்கு உங்களை எள்ளி நகையாடிக் கேவலமானவராகவே அவன் எண்ணுவான்.

இப்படித்தான் வரலாற்றில் தன்னினத்தையே காட்டிக்கொடுத்த எவரையும் தனது கைவேலை முடிந்த பிறகு எதிரி பராமரித்ததில்லை.

கண்டியரசனை ஆங்கிலேயருக்குக் காட்டிக் கொடுத்த எஹலப்பொல என்றவன், அந்த அரசனுடைய மந்திரியாக இருந்தவன். கண்டியரசனைக் காட்டித்தந்தால், கண்டியின் பிரதானியாக நியமிப்பதாக வாக்குறுதியளித்த வெள்ளையர், அவர்களுடைய கையில் கண்டி வந்ததும், முதற் செய்த வேலை எஹலப் பொலவைக் கொன்றதுதான். காரணம் சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்தவன் எம்மை விட்டுவைப்பானா என்ற அச்சம்தான்.

காக்கை வன்னியனுக்கும் இதே கதிதான் கிடைத்தது. இதைப்போன்றே கட்டப்பொம்மனைக் காட்டிக்கொடுத்த எட்டப்பனுக்கும் நடந்தது.

தன்னினத்தைக் காட்டிக்கொடுக்க முன்வருபவரை எதிரி ஒருபோதும் நேசிக்க மாட்டான். நாய்களைவிடக் கேவலமாகவே நினைப்பான்.

இன்று எமது மக்களைத் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத் திறந்தவெளிச் சிறையில் வைத்திருப்பதையும், உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாவோர், அடைக்கப்பட்ட சிறையுள் அடைக்கலம் புகுவதையும் பார்த்தால், அவர்களுக்கு வேடிக்கையான விடயம். ஆனால் அந்தத் தமிழர்களுடைய இந்தநிலை ஏனைய தமிழர்களின் மான உணர்வைக் குத்திக் கிழிக்காது போனால் நாம் ஒரு பண்பாட்டு வளர்ச்சி கண்ட இனமாக எம்மைக் கூறிக்கொள்ள முடியாது.

மேலும் நாளாந்தம் தெருநாய்களைப் பிடிப்பது போன்று தமிழர்கள் பிடிக்கப்படுவதும், வீதிகளில் சுடப்படுவதும் நடைபெறுகிறது. இவையனைத்தும் சிங்களப் படைகளே முன்நின்று நடத்துகின்றன என்பதை உலகறியும். நீங்களும் அறிவீர்கள். இன்னும் உங்களது அந்த அன்புக்குரிய இராணுவத்தினன், உங்கள் மீது காட்டுவது பரிவு, பாசம், அன்பு அல்லது அவனது பண்பு என நீங்கள் கருதி அவர்களைப் பற்றிச் சிலாகித்துப் பேசும்போது அவன் உங்களை ஒரு துரோகியாகவே மதிப்பான் என்பதில் சந்தேகமேயில்லை. எங்கே? நீங்கள் முடிந்தால் அவர்களது செயல்களைப் பற்றி அவர்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதியுள் நின்று பேசிப்பாருங்கள் எப்படி? எங்கட உரிமையைப் பறிக்கிறியள், உயிர்களைக் கொல்லுறியள், பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்து கொன்றீர்களே.." என்று பேசிப்பாருங்கள் உண்மைதானே. என்ன நடக்கும் இவை பற்றிப் பேசிய, எழுதிய ஊடகவியலாளர்களுக்கும், அரசியலாளர்களுக்கும் என்ன நடந்தது?

மாறாக எமது பரப்பில் போராளிகளின் செயற்பாடுகளின் சரி பிழை என்பவற்றை நெற்றிக்கு நேரே பேசுகிறீர்கள். மறைவாகவும்... போராடிக் களைத்துத் தோழனின் வித்துடல் தாங்கி வந்தால் உங்கள் வெப்பியாரத்தை அவன் மீது கொட்டி ஏசுவீர் அடிப்பீர்? மறுநாளே பந்தி வைத்து அவனுக்கு அவளுக்கு உணவளிப்பீர். கூடிப்பேசுவீர்? வெட்டுவேன் என்று நீங்கள் கிளர்ந்தெழுந்தாலும் உம்மைக் கட்டியணைத்து ஆறுதல் படுத்துவான்(ள்) போராளி ஏன்?

இவ்வளவுக்கும் அவர்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காகவும் இந்த மண்ணுக்காகவும் தங்களை அர்ப்பணித்து வந்தவர்கள், உங்கள் பிள்ளைகள் இந்த மண்ணின் பிள்ளைகள், அவர்களது வெற்றி உங்கள் வெற்றி. இந்த மண்ணின் வெற்றி அவர்களுக்கும், இந்தப் போராட்டத்துக்குமான இழிவான காட்டிக் கொடுப்புகளால் பாதிக்கப்படப் போகிறவர்கள் யார்? நீங்களும் உங்கள் உறவுகளும் உங்கள் மண்ணும் தான். எனவே உங்கள் வெற்றிக்கு நீங்கள் உழைப்பதை உறுதி செய்யுங்கள்.

http://seythialasal.blogspot.com/2007/12/blog-post_28.html

காட்டிக்கொடுப்புகள் எட்டப்பன் காக்கை வன்னியன் - மாத்தையா கருணா (இந்த வரிசையில் பாக்கி இருக்கின்றது;)

ஒற்றுமை இன்மை - சேரனும் சோழனும் பாண்டியனும் தங்களுக்குள் குத்துப்பட்டு மூக்கறுத்து முலையறுத்து வரலாறு படைத்தார்கள். அறுபத்தெட்டு இயக்கங்கள் பின்னாளில் குத்துப்பட்டு மாய்ந்தது

ஏனைய அதே எல்லாம் பன்மடங்கு பெருகி நிற்கின்றது

மாற்றம் என்பதில் மாற்றம் இல்லை எனகின்றது சித்தாந்தம் இருந்தும் எமது இனத்தின் குணம் இந்த பொதுச் சித்தாந்ததுக்கு விதிவிலக்கானது.

கடைசி சிங்கள மன்னன் காலனித்துவ அரசுகளின் ஒப்பந்தத்தில் தமிழில் தான் கையெழுத்திட்டான் என்கின்றது வரலாற்றுக் குறிப்புகள். மொழியில் கல்வி வளர்ச்சியில் இன ஒருமைப்பாட்டில் எல்லாவற்றிலும் பின்தங்கிய சிங்கள மக்கள் கூட்டம் ஒரு இனமாக தன்னை வளர்த்து தொன்மை வாய்ந்த இனத்தை வென்றிருக்கின்றது. நுர்று வருடங்களுக்கு மேலான ஒரு மக்கள் கூட்டத்தின் அயராத முயற்சியாக பெருந்தேசிய எழுச்சியாக அதிகாரமாக மாறியிருக்கின்றது. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வரை காலனித்துவ காலத்தில் தமிழன் காலனித்துவ அரசுகளுடன் ஒட்டி நின்று சிங்களவர்களை அதிகாரம் செய்தான். இன்று சுத்தமான அடிமையாய் இருக்கின்றான். அதிகாரம் செய்த உயர்குடிகளின் குணம் அடிமையாய் வாழ்வதில் பேருவகை கொள்கின்றது.

தமிழர்களை ஒடுக்குவதில் ரணிலும் மகிந்தனும் கட்சி பேதங்களை தாண்டி ஒன்று சேர்ந்தார்கள். கொல்லப்படும் தமிழர்களை காப்பாற்ற குரல் கொடுப்பதற்காக கூட தமிழகத்தில் கட்சிகள் ஒன்று சேர்ந்ததும் இல்லை. ஈழத்தமிழன் பிரிவினையை கடந்து ஒன்றாகியதும் இல்லை.

இரண்டுவருடத்துக்கும் மேலான யுத்தம் சிங்கள மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியது. சகித்துக்கொண்டார்கள். ஒரு இனத்தை வேரறுப்பதுக்கு ஒன்று பட்டார்கள். தன்னினத்தை காப்பதற்கு எம்மவர்களால் ஒன்றுபட முடிந்ததில்லை.

உலக அரசுகளை கையாழும் ராஜதந்திரமும் நெருக்கடிகளை சமாளிக்கும் திறனும் துணிச்சலான முடிவுகளும் சிங்கள புத்திஜீவிதத்துக்கு நிகர் அதுவேதான்.

ஆனால் இவைகள் எல்லாவற்றையும் கடந்து எம்மால் சாதிக்க முடியும். ஒரே ஒரு சொல். மோட்டுச் சிங்களவன். இப்போது தமிழனே உயர்நதவனாய் தெரிவான்.

தமிழினம் சிங்கள இனத்துடன் ஒப்பிடப்பட முடியாதது. ஒற்றுமை, தேசிய எழுச்சி, சகிப்புத்தன்மை, ராஜதந்திரம், போன்ற பல நிலைகளில் ஏணி வைத்தாலும் எட்டாத தூரத்தில் சிங்களம் தன்னை உயர்த்தி உள்ளது. தனக்கான வரலாற்றை காலத்தின் நிகழ்கவுகளுக்கு அப்பால் எழுதியது சிங்களம். உண்மை பொய்களை கடந்து அதை ஏற்றும் கொண்டது. தமிழினம் அப்படியல்ல. வரலாற்றில் எங்கே தொடங்குதென்று தெரியாத வேற்றுமை உணர்வுகளையும் ஏற்றதாழ்வுகளையும் இன்றுவரை காவிச்செல்கின்றது. இன்னும் காவிச் செல்லும். இந்த இனம் என்றைக்கும் தன்னை மாற்றிக் கொள்ளாது. ஒன்றில் இனத்தை துறக்க வேண்டும் இல்லையேல் தன்னை மாற்ற வேண்டும் என்ற இறுதி எல்லைக்கு தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படித்தான் எண்ணத்தோன்றுகிறது .கிளிநொச்சியில் 20 வருடங்களின் பின்பு ,முல்லத்தீவில் 27 வருடங்களுக்கு பிறகு சிங்க கொடி ஏற்றினோம் என்ரு சொல்லும்பொழுதெ விளங்குதுதானே.மேலும் மலையாளிகளின் பங்கு அந்த காலத்திலும் இருந்து இருக்குது .நான் படித்த இலங்கை தமிழர் என்ற புத்தகத்தில் கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதியிருக்கிரார்

""6ஆம் பராக்கிரமபாகு ஆட்சி நடத்தியபோது,யாழ்ப்பாண அரசின்மேல் படையெடுப்பு ஒன்றை நடத்தினான்.அவன் அனுப்பிய படைக்கு தளபதியாகப் பொறுப்பேற்றவன் ஒருமலையாள இளவவரசன்.பராகிரமபாகுவின் வளர்ப்பு மகனாகக் கருதப்படும் இவன் பெயர் செண்பகப் பெருமாள்.இவன் யாழ்ப்பாணத்தை17 ஆண்டுகள் ஆட்சி செய்தான்..""

Edited by putthan

"செண்பகப் பெருமாள்”, அல்லது “சப்புமல் குமாரயா” என வழங்கப் பட்ட ஆறாம் புவனேகபாகு மலையாளப் பின் புலத்தினைக் கொண்டிருந்திருக்கலாம். ஆயினும் அவ்வரசன் யாழும், கோட்டே யும் இணைந்த ஒரு இராச்சியத்தினை உருவாக்கி ஒரு தமிழ் மன்னனாகவேயிருந்து நல்ஆட்சி நடத்தியதாக வரலாறு கூறுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சி தற்போதைக்கு மறைந்து போனது போல் காட்சியளிப்பதற்கு நிச்சயமாக மிகக் கடுமையான காட்டிக் கொடுப்புக்களும் காரணம் என்று தோன்றுகின்றது. இக் காட்டிக் கொடுப்புகளில் வெளியில் தெரிந்தவை ஒரு பகுதி தெரியாமல் போனவை மறு பகுதி என்று எண்ணத் தோணுகிறது.

புதிய உலக ஏற்பாட்டின் அடிப்படையில் பழைய மாதிரியாக புலிகள் மீண்டும் தோற்றம் பெற முடியாதென்றே நினைக்கத் தோன்றுகிறது. எனினும் அவர்கள் காலத்தின் கட்டாயம் உணர்ந்து தம்மை மாற்றியமைத்து, அனைத்துலக விதிகளுக்கிணங்க மேம்பாடு செய்யப்பட்ட ஒரு நவீன முறையில் தமது நடவடிக்கைகளை விரைவில் தொடங்கவிருக்கும் புது யுகத்தில் முன்னெடுக்கும் வாய்ப்பொன்றும் நழுவிப் போய்விடவில்லை.

அதை அவர்கள் செய்யத் தயங்குபவர்களுமல்ல. ஆகவே விரைவில் ஒரு ”ஹை டெக்”, “ஹை பிரிக்வென்ஸி” புலிகளை உலகம் சந்திக்கத் தான் போகிறது. அவர்களை முழு மனதுடன் உலகம் ஏற்றுக்கொள்ளும் அந்நாளில், இன்று அப்பாவித் தமிழ் மக்கள் மீது இரசாயனம் கொண்டு தாக்கி, டோசர் ஏற்றிப் படு கொலை புரிந்து வெற்றி வாகை சூடி துள்ளிக் குதிக்கும் சாத்தான்களின் நரகம் புலன்களெதுக்கும் எட்டாத் தூரத்திற்குச் சென்று மீளாத் துயில் கொள்ளும் என்பதுவும் வெள்ளிடைமலை, என்பதில் சந்தேகம் துளியேனுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு இறயாமையுள்ள அரசு இருந்தபடியால் இலகுவாக தனது இலட்சியத்தை அடைந்தான்.

எம்மினத்தை குறை கூறமுடியாது என்றுதான் நினைக்கிறன்,35லட்சம் மக்களில் 30ஆயிரம் மாவீரர்கள் ஆனார்கள் என்பது தெற்காசியாவில் எந்த ஒரு தேசியினமும் செய்ய துனியாத செயல்.

சிங்களவனுக்கு இறயாமையுள்ள அரசு இருந்தபடியால் இலகுவாக தனது இலட்சியத்தை அடைந்தான்.

எம்மினத்தை குறை கூறமுடியாது என்றுதான் நினைக்கிறன்,35லட்சம் மக்களில் 30ஆயிரம் மாவீரர்கள் ஆனார்கள் என்பது தெற்காசியாவில் எந்த ஒரு தேசியினமும் செய்ய துனியாத செயல்.

உந்த ஒரு சின்ன விடயம் தெரியாமல் சும்மா சிங்களவன் எம்மை விடத் திறமையானவன் என்று எமது போராட்டத்தை கொச்ச்சைப்படுத்துகிறார்கள்

உந்த ஒரு சின்ன விடயம் தெரியாமல் சும்மா சிங்களவன் எம்மை விடத் திறமையானவன் என்று எமது போராட்டத்தை கொச்ச்சைப்படுத்துகிறார்கள்

போராட்டத்தை கொச்சைப்படுத்துவது இங்கே எதுவும் இல்லை. கடைசி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களைவிட மாவீரர்கள் குறைவு. 45 லட்சம் தமிழர்களுக்காக 30 ஆயிரம் பேர் தியாகம் செய்து ஈழம் பெற முயற்ச்சித்தார்கள். எனக்காக என்னுமொருவன் போராடி நாடுபிடிக்கவேண்டும் என்ற மனநிலை. போராடாமல் பாதுகாப்பாக இருந்து கொண்டு ஈழத்தை அமைத்துவிட வேண்டும் என்ற மன நிலையே இந்த மாவீரர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தி எதுவுமற்ற சூனியத்தை உருவாக்கியயுள்ளது. எந்த ஒரு தேசிய இனமும் செய்யத் துணியாத செயல் என்பது உண்மை ஆனால் இந்த துணிவு மிக்க படைகளையும் தலைவனையும் கொண்டு சுதந்திர நாட்டை அமைக்க முடியாத மக்கள் கூட்டம் நாங்கள் என்பதும் உண்மை அந்த வகையில் தமிழர்களாகிய நாங்கள் சிங்களவனை விட ஒற்றுமை சகிப்புத்தன்மை சிந்தனை குறைவானவர்களே.

நிச்சயமாக மிகக் கடுமையான காட்டிக் கொடுப்புக்களும் காரணம் என்று தோன்றுகின்றது. இக் காட்டிக் கொடுப்புகளில் வெளியில் தெரிந்தவை ஒரு பகுதி தெரியாமல் போனவை மறு பகுதி என்று எண்ணத் தோணுகிறது.

நிச்சயமாக கருணாவை விட பன்மடங்கு மோசமான பதவி வெறிபிடித்தவர்கள் இருந்தே உள்ளார்கள். இறுதி யுத்தத்துக்காக தயார் படுத்தப்பட்டவர்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பல கட்டுமானங்கள் இருந்தும் இறுதி யுத்தம் என்ற ஒன்று தவிர்க்கப்பட்டு யுத்தம் முடிக்கப்பட்டது. வேலியே பயிரை மேய்ந்த கதையாய் இருக்கும் போது போராடும் மன உறுதி இழக்கப்பட்டது. உறுதியற்ற நிலையில் இராணுவ வெற்றி சாத்தியமில்லை. தலைவர் முடிந்தவரை முயற்சித்தார். வரலாறு எப்போதும் ஒரே மாதிரித்தான்். தமிழ்த்தாய்க்கு பிறக்கும் இரட்டைப்பிள்ளைகளில் ஒன்று வீரன் ஒன்று துரோகி. இந்த வரலாற்று விதிக்கு தலைவரும் விதிவிலக்கில்லை. காலம் நிறைய புதிர்களை அவிழ்க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மக்களினதும், போராளிகளினதும் அளப்பரிய தியாகங்கள் எழுத்தில் வடிக்க முடியாதவை. உலக சக்திகள் அனைத்தும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிக சிறிய இனமான எம்மை தாக்கி அழித்துளன. இதற்கு இலங்கை ஒரு அரசு என்ற வகையில் வகை தொகை இன்றி ஆயுதங்களும் (இரசாயன ஆயுதங்கள் உட்பட), அதிஉயர் தொழில் நுட்ப உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு 300, 000 மக்களை பாதுகாக்க மனிதாபிமானம் உள்ள நாடுகள் தவறிவிட்டன.புலம் பெயர்ந்த மக்களால் மழை, குளிர் பார்க்காது செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்கள் எள்ளவும் மதிக்கப்படவில்லை. 50000 மக்கள் கொல்லப்பட்டு, பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு ஒரு மாத காலமாகிய நிலையில் எந்த ஒரு சர்வதேச நிறுவனமோ, நாடோ ஒரு விசாரணை கூட நடத்தாதது எத்தகைய உலகில் நாம் வாழ்கிறோம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. வடகொரியா போல் நியூகிளியர் ஆயுதங்கள் வைத்து இருந்தால் மட்டும் தான் எம்மக்களை காப்பாற்ற முடியும் என்ற உலக நியதியை நாம் எடுக்க வேண்டுமோ என சிந்திக்க தோன்றுகிறது.

எம்மிடம் பல கட்டுமானங்கள் இருந்தும் வி.புலிகளுக்கான ஆயுத வழங்கல்கள் இந்திய உளவு படையால் பல காலமாக தடுக்கப்பட்டுள்ளன.ஆயுதங்கள் இறுதியில் இல்லாமல் போனதாக சரணடைந்த போராளிகள் கூறியுள்ளார்கள்.மொத்தத்க்டி

.மொத்தத்க்டி�

��் 35 லட்சம் மக்கள் மொத்த உலகத்துடன் போராடி தோற்றார்கள் என்பது தான் உண்மை நிலை.

இதுதான் உண்மை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.