Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிவரும் போர்...?

Featured Replies

ஈழத் தமிழினத்தினைப் போல பாவப்பட்ட வேறொரு இனம் தற்போது இருக்கமுடியாது. அந்தளவுக்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும், சர்வதேசத்தினால் முற்றுமுழுதாகக் கைவிடப்பட்ட ஒரு இனமாகவும் ஈழத் தமிழினம் போய்விட்டுள்ளதென்பது சோகத்திலும் சோகமான விடயம்.

உலகநீதி கூறுவோரினதும்... மனிதாபிமானம்,மனிதநேயம் பற்றி பேசுவோரினதும்... காந்தியம்,அகிம்சை,கொல்லாமை பற்றி வாய்கிழிய கத்துவோர்களினதும் முன்னிலையில், அவர்களின் ஆசீர்வாதத்துடனும் முழு ஒத்துழைப்புடனும் தமிழினம் மிகக் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்டதென்பது மனிதகுலமே வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம்.

அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா அவர்கள் ஒரு ஈயை தன் கையால் அடித்துக் கொன்றுவிட்டார் என்பதற்காக அமெரிக்க ஜனாதிபதிக்கெதிராகவே கண்டனங்கள் தெரிவித்த இரக்கமிக்கவர்களின் கண்களுக்கு, ஈழத்தமிழர்கள் துடிதுடிக்க கொன்றொழிக்கப்பட்டது தெரியவில்லையா? அல்லது ஒரு ஈயை விடக் கேவலமானவர்கள் தமிழர்கள் எனக்கருதி அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையா???

விலங்குகளைக் கூண்டுகளில் அடைத்து வைத்து அவற்றின் சுதந்திரத்தினைப் பறிப்பதற்கே பாய்ந்தடித்து,பதறியடித்துக் கொண்டு கண்டன அறிக்கைகள் விடும் ஈரநெஞ்சத்தவர்கள் , புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் சிங்கள அரசின் கொலைக்கூண்டுகளில் எந்த அடிப்படை வசதியுமின்றி, சுதந்திரமுமின்றி அடைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்படும் அப்பாவித் தமிழர்கள் விடயத்தினைக் கண்டுகொள்ளாமல் கல்நெஞ்சக்காரர்களாக இன்னும் இருப்பது ஏன்???

இவை மட்டுமல்ல... பல்வேறு சந்தர்ப்பங்கள், சம்பவங்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது... ஈழத்தமிழர்கள் ஒட்டுமொத்த சர்வதேசத்தினாலும் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டிருக்கின்றார்க

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையென்று சொல்லிகொண்டு சோர்ந்துபோய் விடுவதும்...

இருக்கின்றார் என்று சொல்லிக்கொண்டு வரும்வரைக்கும் காத்துக் கொண்டிருப்பதும்...

வாழுகின்ற நம் தலைவனை மீண்டும் வராமலே வைத்துவிடும்.

தலைவரின் வழிகாட்டல்கள் இப்போதைக்கு மறைமுகமாகவே நம்மை வந்து சேரும்.

எனவே உண்மையறிந்து,களமறிந்து,காலமற

ிந்து நாம் களம் புகுவோம்! இனிவரும் போர்...

இராஜதந்திரப்போர்!..............................................

தங்கள் ஆய்வுப்பதிவுக்கு பாராடுக்கள். ..........தொடருங்கள் நம் இனம் விழித்து எழ வேண்டும் ..........

ஒற்று மைபடவேனும் /..........ஆவன செய்யவேண்டும். ..

நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் எழுத்தாற்றல் மிக்க 'இனிவரும் போர்...?' படித்தத்தில் சந்தோசம் பருத்தி அண்ணா....

ஒரு உண்மையான ஊடகப் போராளிக்குரிய தெளிவான சிந்தனையுடன் பல உண்மைகளை, யதார்த்தங்களை இந்த ஆய்வாக்கத்தில் பதித்துள்ளீர்கள்... நன்றிகள் பல...

தொடரட்டும் உங்கள் ஆய்வாக்கங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

பருத்தி

நானும் வருகிறேன் .......

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் - இருக்காது, நடக்கும் - நடக்காது , இருக்கின்றார் - இல்லை என்ற தேவையில்லாத விவாதங்களை முற்றாகத் தவிர்த்துவிட்டு நமது வரலாற்றுக் கடமையை நாம் தவறாது செய்வோம்.காலம் எல்லாவற்றையும் நமக்கு வெளிப்படுத்தும். அதுவரை நம்மை முற்றுமுழுவதுமாக அர்ப்பணிப்போம் நம் தேசத்தின் விடிவுக்காக.

எனது நிலைப்பாடும் இதுவே.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கட்டமாக புலம்பெயர்ந்தவர்கள் குழப்பமடையாமல் தெளிவாக அடுத்த கட்டம் நோக்கி நகர எழுதப்பட்ட முதல் கட்டுரை என நினைக்கிறேன். பாராட்டுக்கள் பருத்தியன்.

  • கருத்துக்கள உறவுகள்

சரியான கருத்துக்கள் பாராட்டுக்கள் பருத்தியன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால், கேள்விகள், விவாதங்களைத் தவிர்த்து காலவோட்டத்தில் நமது இலட்சியப் பாதையில் தடைகளைக் கடந்து பயணிக்கவேண்டிய காலக்கட்டாயத்தில் நாம் நிற்கின்றோம். இங்கு கேள்விகளுக்கோ அல்லது விவாதங்களுக்கோ இடமளிக்கக் கூடாது. இதுவரைகாலமும் நமது தேசியத்தலைவரின் தலைமையில் புலிகள் நமக்காக போராடியிருந்தார்கள், இப்போது நாமே நமது உரிமைகளுக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் நிற்கின்றோம். காலத்தின் , சந்தர்ப்ப சூழலின் தேவையறிந்து இப்படியான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் அர்த்தம் புலிகள் முற்றாக அழிந்து விட்டார்கள் என்பதல்ல. அவர்கள் போராட்டங்களிலிருந்து முற்றாக ஒதுங்கி விட்டார்கள் என்பதல்ல. அவர்களுக்குரிய இடைவேளையிது. இப்போது போராட்டம் தமிழ்மக்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மீண்டும் வரவேண்டும் என கால நிர்ப்பந்தம் ஏற்பட்டால் நிச்சயம் மீண்டும் வருவார்கள். ஆனால் அதை தீர்மானிக்கப் போவது, உங்கள் கைகளிலும் சர்வதேசத்தின் கைகளிலும்தான் உள்ளது. உங்களது போராட்டம்தான் உங்கள் உறவுகளை சிறைக் கூண்டுகளிலிருந்து விடுவிக்கும், காப்பாற்றும். உங்கள் உரிமைகளை உங்களுக்குப் பெற்றுத்தரும்.புலிகள் தற்காலிகமாக ஒதுங்கிக் கொண்டதன்மூலம் தமிழருக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்கவேண்டிய பொறுப்பை சர்வதேசத்தின் தலையில் போட்டிருக்கின்றார்கள். சர்வதேசம் அதை விரும்பியோ விரும்பாமலோ செய்தேயாக வேண்டும் என்ற கட்டாயத்தினை ஏற்படுத்தியிருக்கின்றார்கள???.தொடரும் உங்கள் போராட்டங்கள் அதனை அவர்களுக்கு மேலும் வலியுறுத்தும்.

வெளிவரும் செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி ஆராயாமல் காலம் தன் பாதையில் அனைத்தையும் வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கையில் நாம் நமது கடமையை தொடர்ந்து செய்ய வேண்டும். அதிகாரபூர்வமற்ற அநாமதேய அறிக்கைகளைக் கண்டு மனமுடைந்து சோர்ந்து போகாமல் நமது தலைவனின் வரவுகாய் காத்திருப்போம்! அதுவரை விடியலின் வரவுக்காய் உழைத்திடுவோம்!

சர்வதேசத்தினை நோக்கி தமிழர்தரப்பு தொடங்கியிருக்கும் இராஜதந்திரப் போரினால் சிங்கள அரசு பலத்த அடிவாங்கப் போகின்றது என்பது நிச்சயம். ஆனால் இதனை வார்த்தைகளில் மட்டும் சொல்லிகொண்டிருக்காமல் நமது போராட்டங்கள் செயன்முறைகள் மூலம் அமுல்படுத்துவதன் மூலமே அடையமுடியும்.ஒற்றுமை என்பதை நமக்குள் உள்வாங்கி ஓரணியில் திரண்டு ஒருமித்த குரலில் நம் உறவுகளுக்காகவும்,நம் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போமானால் வெற்றி என்றுமே நம் பக்கத்தில் மட்டுமே இருக்கும்.

தமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் வெளிவரும் செய்திகளின் பின்னணியில் பல ராஜதந்திர நகர்வுகள் இருப்பதாகவே தென்படுகின்றது.அந்த நகர்வுகளின் நகர்வுகளை நமது போராட்டத்தினைப் பற்றி முழுமையாகப் புரிந்து வைத்திருப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். போர்வெற்றிகள் தீர்மானிக்க முடியாத தீர்வினை இராஜதந்திர வெற்றிகள் தீர்மானிக்கும்.கடந்த காலங்களில் விடப்பட்ட இராஜதந்திர இடைவெளிகளை இம்முறை தமிழர் தரப்பு சரிவர நிவர்த்திசெய்யும். இதன் ஆரம்பப் படிகளாக முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஒருசில விடயங்களினாலேயே சிங்கள அரசு பயங்கொள்ளத் தொடங்கிவிட்டது எனில், இந்த இராஜதந்திரப்போராட்டம் இன்னும் பல அதிசயங்களை தமிழர்களுக்காக செய்வதற்கு காத்திருக்கின்றது.இவ்வாறான இராஜதந்திரப் போருக்கு உலகம் பூராவுமுள்ள தமிழர்களின் ஆதரவு மிக மிக அவசியம். ஆதலால் நமக்குள் உள்ள கருத்துவேற்றுமைகளை மறந்து ஒன்றாய் களம் புகுவோம்.வென்று தலை நிமிர்வோம்!

இல்லையென்று சொல்லிகொண்டு சோர்ந்துபோய் விடுவதும்...

இருக்கின்றார் என்று சொல்லிக்கொண்டு வரும்வரைக்கும் காத்துக் கொண்டிருப்பதும்...

வாழுகின்ற நம் தலைவனை மீண்டும் வராமலே வைத்துவிடும்.

தலைவரின் வழிகாட்டல்கள் இப்போதைக்கு மறைமுகமாகவே நம்மை வந்து சேரும்.

எனவே உண்மையறிந்து,களமறிந்து,காலமற

ிந்து நாம் களம் புகுவோம்! இனிவரும் போர்... இராஜதந்திரப்போர்!

Edited by paavalan

இராஜதந்திரப்போர் யார் மூலம் முன்னெடுப்பது? மக்கள் என்பதை ஒருங்கிணைப்பது தலைமைத்துவமே. அது பற்றிய சரியான தெளிவு இல்லாதிருக்கும் வரையில் குழப்பங்கள் தொடரத்தான் செய்யும். இல்லை இருக்கிறது என்ற விடயம் தீர்மானிக்கப்படுவது காலத்தை விரையம் செய்யும் வேலை.

கட்டுரையின் கருத்துக்கள் பல சரியாக இருக்கும்போது திரும்பவும் அதேவிடயங்கள் திம்பிப்பார்க்கப்படவே கூடாது. இந்தியா மீண்டும் தனக்குச் சாதகமான ஆயுதக் குழுக்களை உருவாக்கும் அது தவிர்க்க முடியாதது. தலைவரை எப்படி நம்பினோமோ அவரது எண்ணப்படி அவரது குரல் அடையாளம் காட்டியவரை நம்பாவிடில் இராஜதந்திரப்போர் முன்னெடுக்க முடியாது.

இன்று செய்து கொண்டிருக்கும் முயற்சிகள் பயனற்றதாகிவிடக் கூடாது. அவை பயன்தர வேண்டும் அதற்காக உழைக்க வேண்டும். அதற்கு வழிப்படுத்தல் வேண்டும். அது எங்கிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு புலம் பெயர் மக்கள் செயற்பட வேண்டும்.

இப்ப எங்கட சனம் ஈழ ஆதரவாளார்களை அவன் துரோகி, இவன் துரோகி என்று சொல்லி அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இதில இராஜ தந்திரப் போரில் வெல்வது எப்படி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சரி.பத்மநாபன் பின்னேசெல்லவா.நெடுமாரன்சொல்

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து இங்கு கருத்தெழுதுபவர்கள் ஒன்றை மனதில்வைத்துக்கொள்ங்கள்

நெடுமாறன் அவர்கள் இந்தியாவில் இருந்து ஈழத்தமிழர்கட்கு ஆதரவாக தனது அரசியசெயற்பாடுகளை நெறிப்படுத்துபவர். அவரது பின்னால் பல்லாயிரம் தமிழின ஆதரவாளர்கள் அணிதிரண்டுள்ளார்கள் அவர்களை ஒரு போராட்ட மனநிலையில் வைத்திருக்க வோண்டுமெனில் சில கருத்துக்களை அவர்களுக்கு உடன்பாடானதாகவே கூறவேண்டும்.

ஆனால் தமழீழ அரசியலில் நாமே நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் நாமே கொள்கை முன்னெடுப்புக்களை தீர்மானிக்க வேண்டும் அதன் காரணமாகவே சிலவிடையங்களை தற்காலிகமாகவேனும் ஏற்றுக்கொள்ள எம்மை நாம் திடப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எதிர்காலம் எமது கைகளிலேயே தங்கியுள்ளது எமை எடுத்தெறிந்தவர்கள் ஏளனம் செய்தவர்கள் அனைவரும் நாணும்படி நாம் சாதனைகள் செய்வோம். ஆயுதம் எடுத்துப்போராடி எமது இனவிடுதலைக்கான காரணங்களை ஓரளவுக்கேனும் தெரியப்படுத்தியாயிற்று. அதைவிட புலம்பெயர் தேசத்தின் இளையகமுதாயத்தினையும் அதன்பால் ஈர்த்தாயிற்று. இனிமேல் தாயகத்தில் அரசியல் ரீதியான பலத்தினை உருவாக்கி மேற்குலகம் சொல்லுதே ஜனநாயகவழியிலான போராட்டம் இதற்கான கதவகளை நாம் திறந்திடல் வேண்டும்.

அது தவிர பல்லாயிரக்கணக்கான மக்களை நாசி முகாம்களில் இருந்து வெளியே எடுத்தாகுதல் வேண்டும் காரணம் சிங்களவன் எம்மில் எதிர்பாப்பது ஒரு நலிவடைந்த தமிழினக் குழுமத்தையே நோயினால் உடலளவிலும் மற்றும் மனநேயினால் அறிவியல் ரீதியாகவும் மீண்டுவரமுடியாத ஒரு இனக்குழுமம் வன்னிநிலப்பரப்பில் வாழ்வதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள் அதையே அவன் எதிர்பார்க்கிறான் காரணம் அவர்கள்தான் கேள்விகேட்கமாட்டார்கள் சிங்களக் குடியேற்றத்திற்கு இலகுவாகச் சம்மதிப்பார்கள். கடந்த வாரம் மகிந்த இனிமேல் எல்லைக்கிராமங்கள் என எதுவுமே இருக்காது என்று ஒரு கூட்டத்தில் பேசியதை அவதானித்தவர்க்கு இது புரியும்.

மேலும் அரசியற் போராளிகளும் இராணுவத்தின் பிடியில.; இவர்கள் திரும்பிவந்து தமது கள வேலைகளை மீண்டும் தொடங்க வேண்டும் இதற்கான வேலைத்திட்டங்களை களத்திலும் புலத்திலும் தொடங்க வோண்டும்

தவிர மெத்தப்படித்த கூட்டமொன்று புலம்பெயர் தேசத்தில் உள்ளது இவர்களை உள்வாங்க வேண்டும் காரணம் அவர்கள் தான் உள்ளதை உள்ளபடி சரியான விதத்தில் கூறுவார்கள் என்று மேற்குலக இராஜதந்திர வட்டாரம் அறிந்துவைத்திருக்கின்றது.

மாறாக எமது மண்ணின் வளங்களை சுரண்டுவதற்கு அனேகர் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் அதை முறியடிக்க எம்மத்தியில் கல்வியறிவாளர்கள் பொருளாதார மேம்பாட்டுச் சிந்தனையுடையவர்களை ஒன்றிணைக்க வேண்டும் அதன் மூலம் புலம்பெயர் தேசத்தில் தமிழர் முதலீட்டு வங்கி எனும் பெயரிலேயோ அன்றேல் அதற்கிணையான ஏதாவது பெயரிலேயோ அரசியல் சாராத வல்லுனர் குழுவினை உருவாக்கி புலம்பெயர் தேசத்தில் தமிழர்களிடம் பெட்டிகளில் உறங்கிக்கிடக்கும் பணத்தினை முதலீடாக மாற்ற வேண்டும் அதற்கு முன்பு அவர்களிடம் இதுவிடையமான நுர்றுவீத உண்மைத்தன்மையுடைய நம்பிக்கையை வளர்க்க வேண்டும். இம் முதலீடுகள் எல்லாம் எம் தேசத்தில்பால் திருப்பிவிடல் வேண்டும். இவை படிப்படியாக நிறைவு செய்யும் காலமே உலகசமுதாயம் தமிழினத்தின் மேன்மையினை ஏற்றுக் கொண்டு எமது விடுதலையை அங்கீகரிக்கும்.

அவ்வேளை இந்தியா எனும் தேசம் உலக வரைபடத்தில் இருக்காது மாறிவரும் புறச்காரணிகளால் துண்டுதுண்டாகி சிறிய இனக்குழும நாடுகளின் கூட்டமாக மாறியிருக்கும்.

நோக்கத்தை முன்னெடுப்போரின் பின்னே செல்வதே சிறந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியானால் நோக்கம் பத்மநாபன் பின்னே செல்வதா

  • தொடங்கியவர்

ஒவ்வொருவரும் உங்களால் முடிந்ததை இயன்றவரை செய்யுங்கள்.

எமது தோல்விகளில் என் மனம் கனத்ததைவிட நமக்குள்ளே கருத்து வேற்றுமைகளினால் பிளவுபட்டபோது நெஞ்சம் வலிக்கின்றது. இதேநிலை தொடர்ந்தால் நம் இனத்தின் அழிவினை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும்.

எதிரி எதிர்பார்ப்பதை நாங்களாகவே தோற்றி நிற்கின்றோம்.

அதைவிடுத்து, அனாதையாக நிற்கும் நமது ஒற்றுமையை அரவணைத்து நம் இனத்தினை வாழவைப்போம்.

சிந்திக்கத் தெரிந்தவர்கள் நீங்கள். எனது தனிப்பட்ட கருத்துக்களை உங்களின்மேல் திணிக்கமாட்டேன்.

தமிழினத்தின் வாழ்வும் தாழ்வும் உங்கள் கைகளில்.

நீங்களே தீர்மானியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசை உடனடியாக நிறுவ வேண்டும.மக்களிற்;;கு அதன் மீது நம்பிக்கை ஏற்படவேண்டும்.குறிப்பாக அந்த அரசின் சார்பில் அந்த அந்த நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு அமைய தமிழீழ வங்கிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். தமிழீழ மக்கள் அனைவரும் அதில் நடைமுறைக் கணக்கு சேமிப்புக் கணக்கு காப்பறுதிகள் என்பன செய்யப்பட வேண்டும். புலம் பெயர் நாடுகளில் வங்கிகளில் வேலை பார்க்கும் அனுபவம் வாய்ந்தவர்கள் உள்வாங்கப் பட வேண்டும்.எந்த சுத்துமாத்தும் இல்லாமல் நேர்மையாக இயங்க வேண்டும்.புலம் பெயர் நாடுகளில் உள்ளவர்கள் தங்கள் பிரதான வங்கிக் கணக்கை தமீழிழ வங்கியில் வைத்திருப்பதன் மூலம் தமிழரின் பலம் வெளியில் போகாமல் செய்ய வேண்டும். கல்வியில் திறங் காட்டினோம். வீரத்தில் திறம் காட்டினோம்.யாரும் திரும்பிப் பார்க்கவில்லை செல்வத்தில் திறங் காட்டுவோம்.பணம் தான் இந்த உலகத்தை நம்மை நோக்கி திரும்ப வைக்கும் போலுள்ளது. அதுதான் யூதர்களை தலை நிமிரச் செய்தது.தற்போதுள்ள பொருளாதார மந்த நிலையையும் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும்.சுயநலமற்ற சமுதாய முன்னேற்ற முள்ளவர்கள் இணைந்து இதை ஒரு பேராட்டமாகச் செய்ய வேண்டும்.(கள்ள மட்டை போடுற ஆட்கள் தயவு செய்து எங்கள் வங்கிகளில் கை வரிசையை காட்டி விடாதீர்க

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் நோக்கம் பத்மநாபன் பின்னே செல்வதா

தலைவரால் நியமிக்கப்பட்டவர் திரு. பத்ம நாதன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.