Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிக் ஃபாம்...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிக் ஃபாம்...

இளங்கவி - கவிதை....

மரணத்தின் பிடியிலிருந்து

மீண்ட நம் உயிர்களுக்கு

மனிக் ஃபாம் என்ற

மரண வலயத்தில்

இலவச உணவாம்...!.இல்லை..!

இலவச உடையாம்.....! அதுவுமிலை...!

நிம்மதி தூக்கமாம்...! சுத்தப் பொய்....!

தமிழன் வாழ்க்கையில்

இளமையிலும் மரணம் தரும்

ஓர் இருண்ட நிலமது....!

ஆம்...! பூமியில் எமன் அமைத்த

மகிந்தரின் புனித பூமி அது....!

எமனின் முகவர்கள்

எகத்தாளமிடும் பூமி....

சிறுமி முதல் குமரிவரை

சுவைத்திடுவான் ஆமி....

வன்னியிலே..

மழை வந்தால் ஆடிய

மயக்கிட்ட மயில்களும்.....

மனம் விட்டுப் பாடிய

தேனிசைக் குயிகளும்......

கால்களும் ஒடிக்கபட்டு.....

குரல்வளையும் நசுக்கப்பட்டு.....

கட்டிய கூடாரத்தினுள்

ஒட்டுண்ணி வாழ்க்கை....!

இயற்கையின் படைப்பில்

ஆண் பெண் ஏன் ? என்று

அறியாத வயசிலும்

அரக்கனின் கைகளில்

கசங்கிடும் மலர்கள்....

அம்மா என்று அலறினாலும்

கேட்காது அவர் குரல்கள்....!

என்ன கொடுமையிது

எம்மினமே உணராயோ...

எழுந்து நீர் நம் உரிமை கேட்டு

இந்த வலி போக்காயோ....!

காதலெனும் அருவியில்

குளித்த நம் காளைகள்...

போராளிப் பெயர்கொண்டு

புதை குளியில் போகின்றார்....

வயோதிபம் எனும்

வாசலுக்குள் நுழைந்தவர்கள்

நோயாளிகள் ஆகி

நோய் நொடியில் இறக்கின்றார்....

மனிக் ஃபாம்

உலகத்தின் கண்களில் தெரியும்

ஓர் மரண வலயம்.....

இருந்துமே கேட்கார்; காரணம்

அது ஜனனாயகத்தின் நிலையம்.....?

காணாமல் போவோரும்

அவன் கணக்கில் சேர்ப்பதில்லை.....

இதற்காய் நாம் அழுதாலும்

உலகின் காதுகளில் அது கேட்கவில்லை....

இப்போது தெரிந்ததா..?

முன்பு நம் கையில்

ஆயுதமேன் வந்ததென்று.....?

முடிவு நாம் எடுக்கவில்லை

எதிரி தான் திணித்தானென்று....

வடிவங்கள் மாறிடினும்

போரிட ஓயாதீர்.....

ஓய்ந்துவிட்டு ஓர் மூலையில்

ஒப்பாரியிட்டு புலம்பாதீர்....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் தாயக் நினைவாய் ஒவ்வொரு ...பகுதியைக் கவி வடித்து

வருகிறீர்கள். பாராட்டு க்கள். .

மழைகண்டு ஆடும் மயில்களும் .....

குரலெடுத்து பாடும் தேனிசை குயில்களும் .....

...இனி எப்போது காணப்போகிறோம் .........?

கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள் இளங்கவி. எம் ஈழ நிலவரங்களை உடனுக்குடன் கவிதை வடிவில் தொகுத்து அளிக்கும் விதம் அருமை. தொடரட்டும் உங்கள் பணி.............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலா அக்காவுக்கு

நீங்கள் கேட்டது எங்கள் சுதந்திரத்துக்கு பின்பே நடக்கும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eelamagal

மிக்க நன்றிகள் உங்களுக்கு...

என் நாளும் மனதை உறுத்தும் விடயங்களை கவியில் தர முயல்கிறேன் அவ்வளவுதான்... மேலும் நீங்கள் எதிர்பார்த்த என் கவிதை தொகுப்பொன்று இந்த ஆடி மாதக்கடைசி அல்லது ஆவணியில் வெளிவருகிற்து...

வந்ததும் அறியத்தருகிறேன்....

நன்றி இளங்கவி நல்ல செய்தி தந்தமைக்கு. இங்கு உங்கள் கவிதை தொகுப்பை எப்படி பெற்றுக்கொள்ளலாம் என்று வெளிவந்ததும் அறியத்தரவும்.

உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல கவிதை நன்றி.

பிரியமுடன்:யாயினி.

வழக்கம் போல் உங்கள் கவிதைகள் காலக் கண்ணாடியாக இருக்கின்றன. முடிந்தால் இவற்றை ஆங்கில / ஜேர்மன் மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடவும். எம் துயரம் நாம் அறிந்தது .. ஆனால் அவற்றை பிற மொழி கவிதை உள்ளங்களும் உணரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மனிக்ஃபாம் என்பது மரணக்குழி மீண்ட சில உறவுகளின் அனுபவ கூற்றுகள் எல்லையற்ற துயரத்தை கொண்டதாக அறிய முடிகிறது. தொடருங்கள் இளங்கவி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eelamagal

நிச்சியமாக அறியத்தருவேன்... உங்களைப்போன்றோரின் ஆதரவு இருந்ததினால் தான் இப்படியொரு முயற்சியில் இறங்கினேன்..... பதிப்பு பெறுவதற்கு ஆயத்தமானதும் உங்களுடன் தொடர்பு கொள்வேன்.....

யாயினிக்கு

நன்றிகள் உங்கள் பாராட்டுக்கு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி

முடிந்தால் இவற்றை ஆங்கில / ஜேர்மன் மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடவும். எம் துயரம் நாம் அறிந்தது .. ஆனால் அவற்றை பிற மொழி கவிதை உள்ளங்களும் உணரட்டும்

நீங்கள் சொன்னதை நானும் பல தடவைகள் யோசித்துள்ளேன்... அதற்குரிய சரியான தொடர்புகள் கிடைத்ததும் நிச்சயம் செய்வேன்....

உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கு மிக்க நன்றிகள்....

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

valvaizagara

உண்மையில் அது ஓர் மரணக்குழிதான். பல உண்மைகள் புதைக்கப்படும் ஓர் மரணக்குழிதான்...

நன்றி உங்கள் கருத்துக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்

மெனிக் பாம் என்ற பெயரில் தமிழினத்தின் மரணப் பண்ணையாக.......... உண்மைகள் அறியும் போது உயிர்கூடு கரைகிறது. இளங்கவிக்குப் பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கவிதைகளுக்கு நன்றி.

இப்படிக்கு

பென்மன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nochchi

மிக்க நன்றிகள் உங்கள் பாராட்டுக்கு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பென்மன்

மிக்க நன்றிகள் உங்கள் கருத்துக்கு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.