Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குட்டிமணி கண்ட தமிழீழம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kuddimani.jpg

அதிகாலை நேரம்.. சிறைக்கதவுகள் தட்டப்படும் சத்தம் கேட்டு கண்விழித்தான் குட்டிமணி. சிறைவாழ்க்கையில் சிறைக்கதவுகள் தட்டப்படுவதும் திட்டு விழுவதும் ஒன்றும் புதியவை அல்ல. ஆனால் அன்று அது வழமைக்கு மாறாக இருப்பதை குட்டிமணி உள்ளுணர்வால் உணர்ந்திருந்த போதிலும் வழமை என்றே எண்ணிக்கொண்டான்.

"அடோ.. பறத் தெமழ.. தம்ச ஒயா ஒக்கம கொட்டி நெய்த.." என்று சிங்களத்தில் திட்டிக்கொண்டு முகமூடிக் கும்பல் ஒன்று கொழும்பு வெலிகடையில் இருக்கும் சிறையின் சிறைக் கதவுகளை உடைத்துத் தள்ளிக் கொண்டு உட்புகுந்து கொண்டனர்.

"இங்க யாரடா குட்டிமணி" என்று ஒருவன் சிங்களத்தில் கத்த.. மாத்தையா.. "எயா மேக்க இன்னே.." என்று காவலுக்கு நின்ற சிங்களச் சிறைக்காவலன் காட்டிக் கொடுக்க குட்டிமணி, கொலைவெறியோடு அவனை தேடிவந்த முகமூடிகளின் பார்வையில் வீழ்ந்தான்.

குட்டிமணியை இனங்கண்டு விட்ட கும்பல்.. ஆத்திரம் மேலிட குட்டிமணி இருந்த செல் (cell) கதவை உடைத்துத் தள்ளிவிட்டு அவனை இழுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

அப்போது அவர்களில் ஒருவன் "அடோ எங்க ஆமி யாப்பனயல செத்தது. நீ இங்க சுகமா இருக்கிறது" என்று கொச்சைத் தமிழில் திட்டிக் கொண்டே குட்டிமணியைத் தாக்கத் தொடங்கினான். குட்டிமணிக்கு ஆத்திரமும் கோபமும் தலைக்கேற.. முரட்டுப் பார்வையோடு தாக்கியவனை எதிர்க்க முயற்சிக்க ஒரு கும்பலே அவனைத் தாக்கத் தொடங்கியது.தனது பதில் தாக்குதலை இவர்கள் மீது காட்டினால் இன்னும் ஆபத்து என்று அடங்கிப் போக எண்ணினான் குட்டிமணி. ஆனால் முகமூடிகள் விடுவதாக இல்லை. தொடர்ந்து கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டு தாக்கிக் கொண்டே இருந்தனர். அவன் முகமூடிகளால் தாக்கப்படுவதை சிறை அதிகாரிகளும் காவலாளிகளும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் அவர்களில் அநேகர் சிங்களவர்களாக இருந்ததால் அவர்கள் குட்டிமணி தாக்கப்படுவதற்காக வருத்தப்படவும் இல்லை. தடுக்கவும் முன்வரவில்லை.

முகமூடிக் கும்பலோ ஆத்திரம் தீர தொடர்ந்து குட்டிமணியைத் தாக்கிக் கொண்டே இருந்தது. அதற்கிடையே அருகில் இருந்த செல்களும் முகமூடிகள் சிலரால் திறக்கப்பட சக சிறைக்கைதிகளும் குட்டிமணியை காணவும் தாக்கவும் என்று அவனைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்கிவிட்டனர். அதில் ஒருவன் முகமூடிகளில் ஒருவனிடம் காதில் ஏதோ ரகசியம் பேசியதும்... முகமூடிகள் குட்டிமணியைத் தாக்குவதை நிறுத்திவிட்டு அப்பால் சென்றுவிட்டனர்.

ஆனால் அதன்பின் சக சிறைக்கைதிகள் குட்டிமணியை தாக்கும் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். அவர்கள் குட்டிமணியை கொலை வெறியோடு தாக்கிக் கொண்டிருக்கும் போது அவர்களின் ஒருவன் சொன்னான். உனக்கு சாவு நெருங்குகிறது. உனது இறுதி ஆசை என்ன என்று சொல்ல தீர்த்து வைக்கிறோம் என்று.

அப்போதுதான் குட்டிமணி உணர்ந்தான்.. தன்னைக் கொல்லத்தான் இவர்கள் திட்டுமிட்டுத் தாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று. இவர்களிடம் இருந்து எனித் தப்ப முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அவன் தனது முழுத் துணிச்சலையும் வரவழைத்துக் கொண்டு உரத்துக் கத்தினான்.. "எனது இறுதி ஆசை இந்தக் கண்களால் தமிழீழத்தைக் காண்பதே. என்னைக் கொன்ற பின் இந்தக் கண்களை யாருக்காவது தானமாக வழங்குங்கள் என்று."

அடுத்த கணமே ஒரு சிங்களக் காடைக் கைதியின் கைகளில் இருந்த கூரிய கத்தி குட்டிமணியைப் பதம்பார்க்க அவன் சரிந்து வீழ்ந்தான். அவனைக் கொன்ற அதே கத்தியைக் கொண்டு அவனின் இரண்டு கண்களையும் தோண்டி எடுத்து காலில் போட்டு மிதித்துக் கொண்டே கத்தினான் அந்தச் சிங்களக் கைதி... "தமிழீழம் தெரிகிறதா பார் குட்டிமணி" என்று.

இதுதாண்டா மகன் குட்டிமணி அங்கிளின் அந்தக் கோரக் கதை என்று கறுப்பு யூலை பற்றிக் கேட்ட தன் பிள்ளை சுகிந்தனுக்கு சொல்லிவிட்டு.. நான் சொப்பிங் போகனும்.. சிட்னி முருகனட்டையும் போகனும் என்று எழுந்து நகர முற்பட்டாள் அம்மா.

ஆனால் சுகிந்தன் தாயை நகர விடுவதாக இல்லை. இருங்கோ மம். எங்க போறீங்க. சொப்பிங்குக்குப் பிறகு டாட் வரவிட்டுப் போகலாம். அப்படியே வாற வழில கோயிலுக்கும் போயிட்டு வரலாம். அது சரி மம்.. அப்ப குட்டிமணி அங்கிள் கேட்ட அந்த தமிழீழம் கடைசியில கிடைச்சுதா மம்.. என்று இன்னொரு கேள்வியை தூக்கிப் போட்டான் சுகிந்தன்.

சுகிந்தனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்..குற்ற உணர்வும் மேலிட தவித்தாள் அம்மா. அது வந்து மகன்.. இன்னும் கிடைக்கல்ல. குட்டிமணி அங்கிளோட கூட போராட வாறம் என்று சொன்னவையே இப்ப அந்தப் பாதையை விட்டு விலகிப் போயிட்டினம். தமிழீழம் என்றால் என்னென்று உன்னைப் போல கேட்கிற அளவுக்குத்தான் அவை இப்ப வெளிநாடுகளுக்குப் போய் வசதியா வாழ்ந்து கொண்டிருக்கினம். ஆனால் குட்டிமணி அங்கிள் மற்றது தங்கத்துரை அங்கிள் என்ற இன்னொரு அங்கிளின்ர பெயர்களைச் சொல்லி சும்மா வீரமக்கள் தினங்கள் அது இதென்று மட்டும் கொண்டாடி தங்கட பொஞ்சாதிமாருக்கு, பிள்ளைகளுக்கு நடப்புக் காட்டிக் கொண்டு (பெருமை பேசிக் கொண்டு) திரியினம்.

எங்கட தமிழ் ஆக்களட்ட சரியான முயற்சி இல்லாததால, ஒற்றுமை இல்லாததால இன்னும், தமிழீழம் கிடைக்கல்லையப்பு. உவையள் தமிழீழத்தை குட்டிமணி அங்கிளின்ர கொள்கைகளை, விருப்பங்களை, இறுதி ஆசைகளை மறந்திருந்தாலும் வேறொரு தலைமைக்குள்ளால வளர்ந்த புலி அண்ணாமார், அக்காமார் இறுதிவரை அதற்காகப் போராடினவைதான். இறுதியில அவையையும் இவைதான் காட்டிக் கொடுத்து அழிச்சுப் போட்டினம். அதனால குட்டிமணி அங்கிள் கண்ட தமிழீழம்.. இன்னும் கனவாத்தான் இருக்குது மகன்.

என்ர ஆசை மகன்.. நீயாவது பெரியவனா வளர்ந்து அந்த தமிழீழத்தை மீட்டுக் கொடுக்கனும் எண்டதுதான். என்ர பிள்ளை இதைச் செய்ய வேணும் என்றதுக்காகத்தானே குட்டிமணி அங்கிளைப் பற்றி சொல்லித் தந்திருக்கிறன். குட்டிமணி அங்கிள் மட்டுமல்ல அவரைப் போல பல்லாயிரம் பேர் தங்கட உயிரிலும் மேலா தமிழீழத்தை மதிச்சு அதற்காகவே வாழ்க்கையை உயிரை அர்ப்பணிச்சிருக்கினம். அவையின்ர கனவை நனவாக்கிறதைத் தான் இந்த உலகத்தில என்ர பிள்ளை மனிசனா, தமிழனா பிறந்து.. வாழ்ந்து.. சாதிச்சுது என்றதை வரலாற்றில பதிய வைக்க வேணும். செய்வியா மகன்..??!

நிச்சயமா மம். குட்டிமணி அங்கிளுக்காக செய்வன். அவர் தமிழீழத்துக்காக தன்ர உயிர் கண் என்று எல்லாத்தையும் இழந்திருக்கிறார் எனும் போது.. நாங்கள் தமிழாக்கள் இங்க சிட்னில இருந்து என்ன மம் செய்யுறம். நினைச்சாவே வெட்கமா இருக்குது மம்.

நீ.. இப்ப சின்னப் பிள்ளை படிச்சுப் பெரியாளா வந்து உதுகளைச் செய்யத் தொடங்கலாம். இப்ப அப்பா வாற நேரமாகுது வெளிக்கிடு சொப்பிங் போவம்.

ஓக்கே மம். போய் வெளிக்கிட்டு வந்திடுறனே. நீங்களும் ரெடியாகுங்கோ.

--------

படம்: இணையத்தில் கிடைத்தது.

கதை சொன்னவர்: குருவிகள்.

source: http://www.kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கைக்குள்ளேயே தொலைந்து போகும் கனவின் யதார்த்தம். குருவிகளின் அசை மீட்டல் பிள்ளைக் கதையாக பரிணமித்திருக்கிறது. பாராட்டுவதா, படைப்பிற்காக நன்றி சொல்வதா? திக்குணர முடியா வெட்டையில் நிற்பது போல் பிரமை. குருவிகள்/ நெடுக்காலபோவான்

  • கருத்துக்கள உறவுகள்

தம் வாழ்வை தாயக மண்ணிற்காக அற்பணித்துவிட்ட அற்புதங்களின் நினைவுகளை கதையாக்கிய குருவிகளே கூடின்றி அலையும் எம் சகோதரக் குருவிகளை எப்போது மீட்கப்போகிறோம். மனங்களில் நெருடல் நாமும் ஓடிவந்தது துரோகமோ என்ற சிந்தனையே............. பதிவுக்கு நன்றி! படைத்தவருக்குப் பாராட்டு என்று சொல்வதைவிட இது போன்ற படையல்களை தருகவென வாழ்த்துகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கைக்குள்ளேயே தொலைந்து போகும் கனவின் யதார்த்தம். குருவிகளின் அசை மீட்டல் பிள்ளைக் கதையாக பரிணமித்திருக்கிறது. பாராட்டுவதா, படைப்பிற்காக நன்றி சொல்வதா? திக்குணர முடியா வெட்டையில் நிற்பது போல் பிரமை. குருவிகள்/ நெடுக்காலபோவான்

ஒவ்வொருவரின் ஆக்கத்தையும் படிச்சு ஓரிருவரியோ எழுதுவது என்பது ஒன்றும் இலகுவான வேலையல்ல. வல்வை அக்கா இதற்கென இத்தனை நேரச் சிக்கல்கள் மத்தியிலும்.. இவ்வாறான குறுகிய விமர்சனங்களையாவது செய்து வருகின்றமை எழுதிறவங்களை நிச்சயம் ஊக்குவிக்கும். நன்றி வல்வை அக்கா.. நாங்க எதுவும் பெரிசா செய்யல்ல.. அங்கால போடுறதை இங்கால ஒட்டுவிடுறம். அவ்வளவே.

மாவீரர்களும் அவர்களின் இலட்சியங்களும் மறக்கப்பட முடியாதவை. :D

தம் வாழ்வை தாயக மண்ணிற்காக அற்பணித்துவிட்ட அற்புதங்களின் நினைவுகளை கதையாக்கிய குருவிகளே கூடின்றி அலையும் எம் சகோதரக் குருவிகளை எப்போது மீட்கப்போகிறோம். மனங்களில் நெருடல் நாமும் ஓடிவந்தது துரோகமோ என்ற சிந்தனையே............. பதிவுக்கு நன்றி! படைத்தவருக்குப் பாராட்டு என்று சொல்வதைவிட இது போன்ற படையல்களை தருகவென வாழ்த்துகிறேன்.

உங்களின் ஆதங்கமே எனதும். கதைகளால் கட்டுரைகளால் அதனை விரைந்து சாதிக்க முடியாது. நாம் ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு. நாங்கள் போராடினால் தான் விடிவு எமக்கு. பதுங்கினால் அடிமை வாழ்வு தான். அடிமை வாழ்வில் கிடைக்கும் சுகத்தோடு திருப்பிப்படுபவர்களாகவே அநேக தமிழர்கள் இருப்பது தான் பிரச்சனையே..! :D

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்போதுதான் குட்டிமணி உணர்ந்தான்.. தன்னைக் கொல்லத்தான் இவர்கள் திட்டுமிட்டுத் தாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று. இவர்களிடம் இருந்து எனித் தப்ப முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அவன் தனது முழுத் துணிச்சலையும் வரவழைத்துக் கொண்டு உரத்துக் கத்தினான்.. "எனது இறுதி ஆசை இந்தக் கண்களால் தமிழீழத்தைக் காண்பதே. என்னைக் கொன்ற பின் இந்தக் கண்களை யாருக்காவது தானமாக வழங்குங்கள் என்று."

கதை என்றபடியால் நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீங்கள் போல,ஆனால் எனக்கு பத்திரிகையில படித்த ஞாபகம்,குட்டிமணிக்கு நீதிபதி தண்டனை வழங்கிய பின்பு உனது விருப்பம் என்ன என்று கேட்க அவர் சொண்னவராம் இந்த கண்களால் தமிழீழத்தை காணவேண்டும் என்று.....

அதுசரி குருவியர் என்ன சிட்னியிலய இருக்கிறார்

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனம்க்கள் எங்கே குட்டிமணி தங்கத்துரை, தீலிபன், கிட்டு போன்றவர்களின் கதைகளைப் பிள்ளைகளுக்கு சொல்லப்போகினம்? அவை நம்பமுடியாத இராமயாணம், மகாபாரதத்தையும், யேசு காவியத்தையும் தானே இப்ப பிள்ளைகளுக்குச் சொல்லினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனம்க்கள் எங்கே குட்டிமணி தங்கத்துரை, தீலிபன், கிட்டு போன்றவர்களின் கதைகளைப் பிள்ளைகளுக்கு சொல்லப்போகினம்? அவை நம்பமுடியாத இராமயாணம், மகாபாரதத்தையும், யேசு காவியத்தையும் தானே இப்ப பிள்ளைகளுக்குச் சொல்லினம்.

இராமர் இருந்தாரோ இல்லையோ தியாகம் செய்தாரோ இல்லையோ.. ஜேசு இருந்தாரோ இல்லையோ தியாகம் செய்தாரோ இல்லையோ.. இந்த இளைஞர்கள் சிவகுமாரன்.. குட்டிமணி.. தங்கத்துரை.. திலீபன்.. கிட்டு.. மில்லர்... என்று எமது சகோதர சகோதரிகள் எம் வாழ்க்கைக் காலத்தில் அல்லது அதற்கு சற்று முன்னர் செய்த தியாகங்களை நாம் எம் சந்ததிகளுக்கு கடத்த வேண்டும் என்பதே இக்கதையின் நோக்கமும் கூட.

கந்தப்பு நீங்கள் சரியாக கதையின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு கருத்துரைத்திருக்கிறீர்கள் என்று நம்புகின்றேன். நன்றிகள் பல.

எழுதுபவனை விட வாசகனே படைப்புக்கான இலக்கணத்தை வாசகர் மத்தியில் வகுக்கிறான் என்பதற்கு கந்தப்புவின் இந்த சிறு குறிப்பு.. ஒரு நல்ல உதாரணம்..! :unsure::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரவன்னியன், சங்கிலியன் போன்றவர்கள் அன்னியருக்கு எதிராகப் போரிட்டு வீரமரணம் அடைந்தார்கள். ஆனால் அவர்கள் பற்றிய கதைகள் எத்தனை பேருக்கு தெரியும்?. யாராவது தங்களது பிள்ளைகளுக்குச் சொல்கிறிரார்களா?. அதுபோல இன்றைய போராளிகளின் கதைகள் நாளைக்கு எத்தனை பேர் தங்களது பிள்ளைகளுக்குச் சொல்வார்கள்?.

உங்களின் படைப்புக்கு நன்றிகள் நெடுக்காலபோவான்.

  • கருத்துக்கள உறவுகள்

படைப்பை எழுதிய குருவிகளுக்கும் , இணைத்த நெடுக்ஸுக்கும் நன்றிகள். மாவீரர்களின் சுயசரிதை பாட புத்தகமாக்கப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.