Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலுக்காகவும், கலியாணத்திற்காகவும், இதர செளகரியங்களுக்காகவும் உறவுகளை, நண்பர்களை புறக்கணித்தல்..

Featured Replies

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

நான் நேற்று எனது அக்காவுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டு இருந்தேன். வழமைபோல் கதைத்துக்கொண்டு இருந்தபோது திடீரென காதல், கலியாணம், மற்றும் இதர தனிப்பட்ட செளகரியங்களிற்காக எங்களுடன் உறவாடுகின்ற உறவுகள், நண்பர்கள், அயலவர்கள் இவர்களை புறக்கணிப்பு செய்வது பற்றியும்.. இதனால் நாங்கள் எல்லோரும் வாழ்க்கையில் இழந்த, இழக்கின்ற, இழக்கக்கூடிய விடயங்கள் சம்மந்தமாக சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்.

இது கொஞ்சம் சிக்கலான விசயம். சுருக்கமாக சொன்னால்... கூட்டிக்குறைத்து மொத்த இலாப நட்டக் கணக்கை பார்க்கும்போது புறக்கணிப்பு மூலம் வாழ்க்கையில் பலவிதமான பயன்களை, சுகங்களை, அனுபவங்களை, நல்ல உறவுகளை நாங்கள் இழப்பது என்பது எங்கள் வாழ்வில் ஓர் துன்பியல் பகுதி. சில தனிப்பட்ட சிற்றின்பங்களுக்காக ஆத்மார்த்தமான உணர்வுகளை, உறவுகளை, அனுபவங்களை இழப்பது என்பது எங்களுக்கு வாழ்வில் அதிகப்படியான விலை - இழப்புத்தான்.

எங்களைச் சுற்றி நாங்கள் சிறிய சிறிய வட்டங்களை உருவாக்கி அந்த வட்டங்களுக்குள் வைத்து எங்கள் வாழ்க்கையை வாழ்ந்துவிடப் பார்க்கின்றோம். ஒருவகையில் பார்த்தால் அப்பட்டமான சுயநலமாக இருந்தாலும் இது பாதுகாப்பான முறையே. கண்டவர்களும், மூன்றாம் மனிதர்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையினுள் மூக்கை நுழைத்தால் பலவித இடையூறுகள் வரக்கூடும். ஆனாலும்.. அதற்காக மற்றவர்கள் வாழ்க்கைக்கு தேவையில்லை என்று நினைப்பது, மற்றவர்களை புறக்கணிப்பது உடனடியாக பெரிதாக ஓர் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால்.. நீண்டகால நோக்கில்... சிறிதளவு காலத்தின்பின் எங்கள் புறக்கணிப்பு காரணமாக எங்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளின் தாக்கத்தை உணரக்கூடியதாக இருக்கலாம்.

நீங்களும் இதுபற்றிய உங்கள் அனுபவங்களை, கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

உறவு 1

:::::::::::::::::::::::::::::::::::

என் 50 மச்சாள்களில் அவள் ஒருத்தி...........

காதலித்தது ஒரு இந்தியனை

5 வருடக் காதல்

வீட்டில் கடும் எதிர்ப்பு...அவன் மனிதனா இல்லையா என்பதற்கு அப்பால், நல்லவனா இல்லையா என்பதற்கு அப்பால், அவன் இந்தியன் / வடக்கத்திய நாய் என்று ஏளனமாக சொல்லப் படும் மலையக இளைஞன் ஒருவன்

அவள் தன் உறவு எல்லோரிடமும் தன் காதல் பற்றி சொல்லி உதவி கேட்டா:ள்

Noway...he is a vadakathiyan

ஓடினாள்....காதலனுடன்

3 தலைமுறையாக இருந்த மானம் மரியாதை...வெள்ளாள கவுரவம் என்ன ஆனது என என் மாமன் அலறினார்

அவள் எதற்கும் கவலைப் படவில்லை

என் வீட்டுக்காரி இது பற்றி மிக கவலைப்பட்டாள் (அவளின் நெருங்கிய உறவு)

ஏன் கவலைப் படுகிறாய்

அவள் குடும்பத்திற்கு அம்மாவுக்கு அப்பாவுக்கு துரோகம் செய்து விட்டாள்

நான் கேட்டேன்

அப்படிச் செய்திருக்கா விட்டாள் அவள் அந்த 5 வருட காதலுக்கு / காதலனுக்கு துரோகம் செய்திருப்பாள். அது சரியா என

உங்களிடம் போய் கேட்டேன் பாருங்கள்...என்னை செருப்பால அடிக்கணும் (150000 முறை என் மனைவி சொல்லிய வசனமோ

:::::::::::::::::::::::::::::::::::::

பல பேச்சுவார்த்தைகள்...அழுகைகள்..

.சண்டை பிடித்தல்கள்

1 மாதம் போனது

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::

தாய் தந்தையின் ஆசிர்வாதத்துடன் வருகிற செப்ரம்பர் மாதம் திருமண வைபவம்...எனக்கும் Invitation அனுப்பி உள்ளனர்....

தன் தாய் தந்தையை ஏமாற்றி ஒரு வ.இ உடன் ஓடினவளின் கல்யாணத்திற்கு போக வேண்டுமா என கேட்கின்றால் என் மனைவி

"இல்லை... காதலித்தவனையே கட்டிய அவளின் கல்யாணத்திற்கு போவதில் என்ன பிரச்ச்னை?

"அவள் அப்பா அம்மாமாரை அழ வைத்தவள்"

"ஆனால் அவள் காதலனை அழ வைக்கவில்லை"

இப்ப சொல்லுங்கள் நான் என்ன செய்ய?

Edited by நிழலி

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் இதை யார் சிந்திக்கிறார்கள்

அந்தந்த நேரத்தில் அப்பொழுதுள்ள மனநிலைக்கு ஏற்ப

நடந்து கொள்கிறார்கள்

சிந்தித்து நடந்துகொண்டால் எந்தவிதமான பிரச்சினைகளையும்

சமாளித்துக்கொள்ளலாம் அதற்கு மனப்பக்குவம் வேண்டும்

அது எத்தனை பேரிடம் உண்டு

1 மாதம் போனது

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::

தாய் தந்தையின் ஆசிர்வாதத்துடன் வருகிற செப்ரம்பர் மாதம் திருமண வைபவம்...எனக்கும் Invitation அனுப்பி உள்ளனர்....

என்ன செய்ய?

திருமணத்துக்குச் சென்று மனப்பூர்வமாக வாழ்த்திவிட்டு வாருங்கள்

இதுவும் ஒரு உண்மைச்சம்பவம்

தமிழ் குடும்பம் லண்டனில் வசிக்கிறார்கள்

பெண் ஒரு வெள்ளை இனத்தவரை காதலித்தார்

தாய் தந்தையர் கடுமையாக எதிர்தார்கள்

பெண் கன்யாஸ்த்திரியாகிவிட்டார்

பெற்றோர் இப்பொழுது கவலைப்படுகிறார்கள்

காதலித்தவனையே திருமணம் செய்யவிட்டுருக்கலாம் என்று

அந்தப் பெற்றோர்

அப்பொழுதே சிந்தித்து செயல்பட்டிருந்தால்

இப்பொழுது கவலைப்படவேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

இதுல பிரச்சனை என்ன என்றால் எதிர்பார்ப்பு.அது பெற்றோரோ அல்லது வேறு நெருங்கிய உறவுகளோ அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைப்பது.ஒரு நபர் தனது தேவை ஒன்றை செய்யும் போது(அது சிற்றின்பமோ அல்லது பேரின்பமோ)மற்ற உறவை திருப்தி படுத்தவோ கவனிக்கவோ முடியாமல் போனால் அது புறக்கனிப்பாகது.

அவன் இந்தியன் / வடக்கத்திய நாய் என்று ஏளனமாக சொல்லப் படும் மலையக இளைஞன் ஒருவன்

அரசியலில் இருந்து அடுப்பங்கரை வரை இந்த சொல் பாவிக்கப்படுகிறது யாழில்

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமூகத்தில் ஓடுபவர்கள் உறவினரைத் திட்டுவதும், உறவினர்கள் ஓடுபவர்களைத் திட்டுவதும் காலங்காலமாக நடந்து வருவதும் நடக்கப்போவதும்.. :(

உறவுகள் என்று சொல்லப்படுபவர்கள (தாய் தகப்பன் உட்பட) வளர்ந்து மனிதர்களாகிவிட்டவர்களிடம் ஆதிக்கம் செலுத்த நினைப்பதும், அவர்களது முடிவெடுக்கும் சுதந்திரத்தில் தலையிட நினைப்பதும் எவ்வகையில் நியாயப்படுத்தப் படக்கூடியது? திருமணமும் ஒரு அப்பட்டமான தலையீடுதானே? :o

சிறுவயதுமுதலே காதல் என்றால் ஏதோ வேண்டாத ஒரு விடயம்போல நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிள்ளைகளின் மனதில் ஊட்டி வளர்க்கும் பெற்றோர், தங்களின் சுய விருப்புக்கு ஏற்றாற்போல் பிள்ளைகள் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைப் பறிக்கின்றனர். இளமை உச்சத்திலிருக்கும் இருபதுகளில் எல்லாவற்றையும் ஒடுக்கி விட்டு முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் திருமணங்கள் நடக்கின்றன. அதாவது பசி அடங்கியபின் சாதம் பரிமாறுதல்..! :wub:

ஒரு வழியில் பார்த்தால், சிங்களவன் தமிழர் உரிமைப் பிரச்சினையைத் தீர்க்கும் வழிகள் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு, முள்வேலிகளினுள் அடைத்தும், இராணுவச் சுற்றுக்காவல் மூலமும் அடக்கியும் மக்களின் சுதந்திர தாகத்தை அழித்துவிட்டு பின்பு தனக்குத் தோதான மாதிரி பிரச்சினையைத் தீர்க்க எத்தனிப்பது போன்றதே இதுவும். சுதந்திரம் என்பது முதலில் எம்மின் உள்ளிருந்து புறப்படவேண்டும் என்பது சரியாகத்தான் இருக்கும் போல் உள்ளது. :huh:

அடக்குமுறையை விடுத்து பெற்றோர் செய்யக்கூடியது, சிறுவயதுமுதலே பொறுப்புணர்ச்சி என்றால் என்ன என்பதை குழந்தைகளுக்கு தெளிவு படுத்துதல் ஆகும். தக்க வயதை அடைந்துவிட்டால் ஆலோசனைகள் சொல்வதுடன் நிறுத்திக்கொண்டு நட்புநிலையில் பிள்ளைகளை வைத்திருக்கப் பழகவேண்டும். பிள்ளைகளின் சுதந்திரத்தில் சமுதாயம் தலையிடாவண்ணம் பார்த்துக்கொள்ள‌ வேண்டும். :unsure:

இவை எல்லாவற்றுக்கும் மேலாக பல பரிமாணங்களை உள்ளடக்கக் கூடிய "ஒழுக்கம்" என்னும் சொல்லை வெறும் ஒரு அங்கத்துடன் பொருத்திப்பார்க்கும் மனநிலையை விட்டெறிய வேண்டும். :)

இந்த கருத்தியல் மாற்றங்கள் மனத்தளவில் ஏற்படும்போது காதல் என்பது இயற்கையானதே என்கிற அறிவு பிறக்கும். ஓடிப்போவதும் நிற்கும். திருமணங்களின்மூலம் உண்மையிலேயே இருமனங்களின் இணைவு என்பது நிறைவேறும். :lol:

  • தொடங்கியவர்

மேல எல்லாரும் காதலை மாத்திரம்தான் தொட்டு இருக்கிறீங்கள். காதலுக்காக புறக்கணிப்பு செய்யுறது எண்டுறது ஒருவகை. ஆனால்.. இதுதவிர வேறுபல வகை புறக்கணிப்புக்கள் இருக்கிது வேறு பலவகை சந்தர்ப்பங்களில.

நாங்கள் எல்லாரும் ஒருவரில இன்னொருவர் தங்கி வாழுறம். ஒருவருரோட இன்னொருவர் தங்கிவாழாமல் முற்றிலுமாக நாங்கள் தனித்துவாழ ஏலாது. அப்பிடி என்றால் அது எங்காவது கண்காணாத தீவில, காட்டிலதான் சாத்தியம். எப்படியாவது நாங்கள் மற்றவர்களோட சேர்ந்துதான் வாழவேணும். இது உலகநியதி.

அப்பிடிப்பார்க்கேக்க, காலத்திற்கு காலம் நாங்கள் எங்கள் உறவுகளிண்ட சுற்றுவட்டங்களை சுருக்கிக்கொண்டும், விரிவுபடுத்திக்கொண்டும், வட்டங்களின் அமைவிடங்களை, திசைகளை மாற்றிக்கொண்டும் இருக்கிறம். மாற்றங்கள் வாழ்க்கையில தவிர்க்கப்பட முடியாதவைதான். ஆனால்.. தெரிந்தோ அல்லது தெரியாமலோ முன்னைய உறவு வட்டங்களுக்குள் உள்ளடக்கப்பட்டு இருந்தவர்கள் அவர்கள் தொடர்ந்தும் உள்ளடக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையிலும் எங்களால் புறக்கணிப்பு செய்யப்பட்டு புதிய வட்டங்களினுள் உள்ளடக்கப்படாது போகின்றார்கள்.

நாங்கள் வட்டங்களை குறுக்கும்போது, மாற்றும்போது எங்களுக்கு அப்போது அதன் பாதிப்புக்கள் பெரிதாக தெரிவதில்லை. ஏன் என்றால்.. அந்த நேரத்தில நாங்கள் எங்கள் சுகங்களிலேயே தியானமாய் இருப்பம். ஆனால்.. காலம் சுழலும்போது... தனிப்பட்ட சுகங்களின் எல்லைகள், துன்பங்கள் அறியப்படும்போது, உணரப்படும்போது முன்னைய வட்டங்களில் உள்ளடக்கப்பட்டவர்களின் நினைவுகள், எண்ணங்கள், அனுபவங்கள் பசுமையாகத் தோன்றி ஊசிபோல உடம்பு எங்கும் குத்தி வேதனையை ஏற்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் நாடுகளிலே எங்கே சொந்தம் இருக்குது? இங்கே எல்லோரும் அவரவர் வேலைகள் தங்கள் குடும்பம்,தங்கட‌ பிள்ளைகளின்ட படிப்பு அதிலேயே அவர்களது பொழுது போய் விடும்.ஆராவது சொந்தக்காரரிட்ட போவது எண்டால் கூட தொலைபேசியில் அழைத்து விட்டுத் தான் போக வேண்டும் அப்படி அழைத்தால் கூட அவர்கள் தாங்கள் பிசி எனத் தான் சொல்லுவார்கள் அவர்களையும் குறை சொல்ல இயலாது. அவர்களை சந்திப்பது என்றால் கூட எங்கேயாவது விழாக்களில் அதுவும் மண்டபங்களில் தான் சந்திக்கலாம் அவர்களது வீடுகளுக்கு போவது கூட குறைவு.சில பேர் சொந்தங்களை கூப்பிட்டு ஒரு கப் தேனீர் கொடுப்பதற்கு கூட பஞ்சிப்படுவார்கள்.ஆனால் சொந்தங்கள் தள்ளி இருப்பதும் ஒரு விதத்தில் நல்லது தான் இல்லாவிடின் எங்களது குடும்பங்களுக்குள் புகுந்து அதைச் செய் இதை செய் என சொல்ல எங்கள் குடும்பங்களுக்குள் விரிசல் வந்திடும் நான் பார்த்த வரை குடும்பங்களை பிரித்த சொந்தங்கள் தான் அதிகமாக காணப்படுகின்றனர்.மற்றும் படி நாங்கள் சொந்தங்களை தள்ளி வைப்பதால் எங்கள் எதிர்கால சங்ததி சொந்தங்கள் யாரும் அற்று கலாச்சாரத்தை மறந்து அநாதையாய் வாழ வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யிறது மாப்பிளை..! அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எண்ட மாதிரி காதல்தான் கண்ணுக்கு தெரியிது..! :lol:

ஒருவர் ஒரு குறிப்பிட்ட உறவினர் வட்டத்தில் இருந்து விலக்கப்படுவது், அவர் அந்த வட்டத்தினரால் எவ்வளவுதூரத்துக்கு மதிக்கப்படுகிறார் என்பதற்கு ஒரு அளவுகோல். தமது தகுதியை உயர்த்துவதன் மூலம் அவர் மறுபடியும் அவ்வட்டத்தினரால் உள்வாங்கப்படும் சாத்தியம் அதிகம். இல்லையென்றால் அவர் தனக்கு தோதுப்பட்ட வட்டத்துடன் இணைந்து கொள்ளுவார்.

மறுவளமாக, ஒருவர் ஒரு வட்டத்திலிருந்து விலகிக் கொள்கிறார் என்றால் அவர் அந்த வட்டத்தை எந்த அளவில் வைத்திருக்கிறார் என்பதன் அளவுகோல். அவர் வேறு வட்டங்களில் இணைந்து ஒரு சுற்றுச் சுற்றி மறுபடி வந்து சேருவார்.

இதுவும் ஒருவகை அரசியல்தான்..!

  • தொடங்கியவர்

டங்குவார் இப்போது நீங்கள் புறக்கணிப்பின் இன்னொரு பகுதியை தொட்டு இருக்கிறீங்கள். காதல்போல இதுவும் ஒருபிரிவுதான். தவிர, இன்னமும் பலவகைகள் இருக்கிது. :lol:

நான் இங்கு குறிப்பாய் சொல்லிறது தனிநபர் புறக்கணிப்புக்கள்.

தனிநபருக்கு பின்னால இன்னொரு தனிநபர் மற்றும் குழுக்கள் இருந்து குறிப்பிட்ட ஒருவரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது உண்மையே. ஆனாலும்.. இங்கு நான் தனிநபர் தனிநபரை புறக்கணிப்பதுபற்றியே உண்மையில் ஆரம்பத்தில் சிந்திக்கத் தொடங்கினேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த புறக்கணிப்பு வேலையில நான் பெரிய குற்றவாளியாக்கும்! :)

நண்பர்கள் என்று நான் தேடி பிடிப்பது இல்லை. ஆனால் ஏனோ எனக்கு நண்பர்கள் என்று அமைந்தவர்கள் எல்லாம் வேற்றினத்தார் தான். சிறு வயது தமிழ் நண்பர்களை எங்கோ நாட்டுடன் தொலைத்து விட்டேன். எனக்கு இந்த போரிற்கு முன்னர் ஈழம் சமந்தமான அரசியல் விளக்கம் முழுமையானதாக இருக்கவில்லை. ஆனால் இன உணர்வு நிறையவே இருந்தது.

எனது இங்கத்தைய நண்பர்கள் அனைவரும் எனது தாய்நாடு சம்பந்தமான எனது உணர்வுகளை அறிந்து இருந்தார்கள். இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து எனது பிரதானம் முழுவதும் வன்னி போர் பற்றியதாகவே இருந்தது. (அப்பொழுது தான் யாழ் இணையத்தையும் :o எனது சகோதரி எனக்கு அறிய தந்தா). செய்திகளை தேடி எடுத்து எமது அவல நிலைகளை எனது நண்பர்கள் அனைவரும் அறிய வேண்டுமென அவர்கள் பார்க்கும் படி எனது facebook சுவரில் பதிப்பதும், மேலும் எனது மினஞ்சல்கள், உரையாடல்கள் அனைத்துமே ஈழப்போர் பற்றியதாகவே இருந்தது - இது மாத கணக்கில் தொடர்ந்து சென்றது.

:huh: அவரவர் தனக்கு பிள்ளை பிறந்து இருக்கு, கல்யாணம் தேதி குறித்து இருக்கு, சோடி கிடைத்து இருக்கு, உத்தியோக மாற்றம் கிடைத்து இருக்கு, வெளிநாட்டு விஜயங்கள் எப்படி சந்தோசமாக அமைந்தது என்று மாறி மாறி எழுதிக் கொண்டு இருக்க -

நான் மட்டும் warwithoutwitness ஐ பாருங்கோ. tamilnational ஐ பாருங்கோ. :( என்று எழுதி தள்ளி கொண்டு இருந்தேன்.

அவர்களில் சிலருக்கு மேலும் மேலும் அறிய வேணும் என்ற எண்ணம் இருந்தது. சிலர் நான் மன அழுத்தம் கொண்டு இருப்பதாகவும் - அதை நினைத்தே தாங்கள் வருத்த படுவதாகவும் எழுதி என்னிடம் வாங்கி கட்டி கொண்டார்கள்.

ஆனால் பல வருடங்களாக என்னுடன் படித்த, வேலை செய்த நண்பர்கள் பலருக்கு, எனது கணிப்பின் படி!:

-இதை பற்றி அக்கறை பட நேரம் இருக்கவில்லை

அல்லது

-இதை பற்றி என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்று தெரிந்து இருக்கவில்லை.

(எனக்கு தேவை பட்டது அவர்களின் ஆறுதல் இல்லை, அங்கு நடந்த போர் கொடுமைகளில் ஒரு வித அக்கறை மட்டுமே).

நண்பர்களில், வேறு வேறு வெளிநாடுகளில் உள்ளவர்களே அக்கறை பட்டு விசாரிக்கவும், எமக்கு சாதகமான செய்திகளை பரப்புரை செய்வதற்கு உதவி செய்ய முன்வந்த போது - இந்த நாட்டில் இருந்த பலருக்கு என்ன சொல்வது என்று கூட தெரிந்து இருக்கவில்லை.

எது எப்படியோ - போர் முடிவடைந்த நாட்களில்... இருந்த விசரில் :lol: முதலாவதாய் எனது facebook பக்கத்தை இல்லாமல் செய்து விட்டு... பிறகு நாளடைவில் எனது நண்பர்கள் என்று இருந்தவர்களில் சுமார் 20 பேரை தொடர்பு கொள்வதை அறவே நிறுத்தி விட்டேன். எனது கோபம் விளங்காது- அவர்களும் தங்களுக்கு ஜோசினை வரும் போது email / sms ஏதும் அனுப்புவார்கள்.

எனக்கோ எனது கடுப்பை விளங்க படுத்தவும் முடியவில்லை, அவர்களுடன் மீண்டும் கலந்துறவாடவும் முடியவில்லை.

வேலை பளு, வேறு ஜோசினை என்று சாக்கு போக்கு சொல்லி என்னை அவர்களில் இருந்து தனிமை படுத்தி விட்டேன்.

சில வாரங்கள் முன் இவர்களுள் ஒருத்தியான எனது நெடுநாள் தோழியின் பிறந்த நாள். கடைத்தெருவுக்கு சென்றிருந்த போது, ஒவ்வொரு வருடம் போல அவளுக்காக பிறந்த நாள் அன்பளிப்பு ஒன்றும் வாங்கி வந்து விட்டு, பிறகு அந்த நாள் அண்மிக்கும் நாட்களில் கோபம் இன்னும் அடங்கவில்லை எனக்கு என்று நானே தீர்மானித்து விட்டு அனுப்பாமலே விட்டு விட்டேன். இபொழுது கூட அலுமாரியை திறக்க - அவளுக்காக வாங்கியது இன்னும் இருக்கும் - - ஞாபகம் வந்தும் வேணும் என்று மறந்தது போல இருந்து விட்டேனே என்று நினைக்கும் போது ஒருவித குற்ற உணர்வு ஆட்கொள்ளும்.

இருந்தும் ஒரு நாள் இல்லா விட்டாலும் ஒரு நாள் - என் மூலமோ - அல்லது எங்கள் அனைவருக்கும் பரிட்சயமான வேறு நண்பர்கள் மூலமோ - எனது கோபத்தின் காரணம் என்ன - அவர்கள் மெளனமாக இருந்ததன் காரணம் என்ன என்று பகிரங்கமாக ஆய்வு நடத்த படும். அது வரை எனக்கு தெரிந்தது புறக்கணிப்பு தான்!

காதலுக்காக அல்ல / கல்யாணத்திற்காக அல்ல / இதர சௌகரியங்களுக்காக அல்ல - ஆனால் என்னை பொறுத்த வரை எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயத்தில் எனது நண்பர்கள் என்று இருந்த சிலர் அக்கறை எடுக்கவில்லை/ அக்கறையை வெளிப்படுத்த அறிந்திருக்கவில்லை என்றதற்காக - பல வருட நட்புகளை புறகணிக்கிறேன். :wub:

எனது இயலாமையையே இந்த செயற்பாடு காட்டுகிறது என்று அறிந்தும், முழு மூச்சாக நட்பை புறக்கணிப்பு செய்யும் என்னை என்னவென்று சொல்வது?! என்னை பொறுத்த வரை உணரும் காலத்தில் இவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் -உணராத வரை இவர்கள் எனக்கு தேவை இல்லை - என்று தான் இன்னும் இந்த புறக்கணிப்பு கொள்கையை தொடர்கிறேன்.

(வர வர எனது பதிவுகளும் சேரன்ட படங்கள் மாதிரி நீண்டு கொண்டு போகிறன! சிக்க்! :unsure: )

Edited by Ilayapillai

  • 1 month later...

புறக்கணிப்பு ஒரு மனநோய்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.