Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலாளர் செல்வராசா பத்மநாதன் கைது ‐ இலங்கையின் தகவல் திணைக்களம்:

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களது ஒற்றுமைக்கு கிடைத்த பரிசு

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=57195

  • Replies 105
  • Views 11.8k
  • Created
  • Last Reply

போன கிழமை தான் இந்தியாவுடன் பேசுவோம் என்று சொன்னார்.

இந்திய மாவோக்களுடன் இணைந்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

Edited by narathar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களது ஒற்றுமைக்கு கிடைத்த பரிசு

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=57195

விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதன் கைது: இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும் அமைப்பின் புதிய தலைவராகவும் செயற்பட்ட கே.பி எனப்படும் குமரன் செல்வராசா பத்மநாதன் இன்று பேங்கொக்கில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் மேலதிக தகவல்கள் எதனையும் அது வெளியிடவில்லை. இந்த செய்தி இலங்கையில் அறிவிக்கப்பட்டமையை அடுத்து நாட்டில் பரவலாக பட்டாசுகளை கொளுத்தி ஆரவாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரபாண்டிய கட்டப்பொம்மன், பண்டாரவன்னியன் காலத்திலிருந்தே காட்டிக் கொடுப்புக்கு பேர் போன என்னினமே.. !

இப்படியொரு நல்லதொரு ஒற்றுமையான இனத்தை இந்த பூமியே கண்டிருக்காது.

இந்த இனத்திற்கு விடுதலை ஒரு கேடு! தூ!

  • கருத்துக்கள உறவுகள்

வீரபாண்டிய கட்டப்பொம்மன், பண்டாரவன்னியன் காலத்திலிருந்தே காட்டிக் கொடுப்புக்கு பேர் போன என்னினமே.. !

இப்படியொரு நல்லதொரு ஒற்றுமையான இனத்தை இந்த பூமியே கண்டிருக்காது.

இந்த இனத்திற்கு விடுதலை ஒரு கேடு! தூ!

சரியா சொன்னீங்கள் காட்டாறு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது யாரோ காட்டி குடுத்த போல தான் இருக்கு..

காட்டி கூடுக்கிற ஊத்தை நாயளை நடு ரொட்டில நிக்க விட்டுட்டு சுட வேணும் :rolleyes:

Edited by ரவுடி

  • கருத்துக்கள உறவுகள்

Arrest of K. Pathmanathan (KP) in Thailand – strongly rumored

Published by editor Breaking News Aug 7, 2009

By Ruwan Weerakoon in Colombo

Colombo, 07 August , (Asiantribune.com): There is a strong unconfirmed rumor to say that Thai authorities have arrested LTTE’s self styled leader Kumaran Padmanathan in Bangkok on Thursday morning.

Unconfirmed reports further revealed that Thai Intelligence officials have requested the Sri Lanka Intelligence to dispatch mug shots of Pathmanathan.

Sri Lanka Government officials when contacted said that they heard of such rumor of the arrest, but refused to confirm.

In the meantime, Sri Lanka Government has already requested Thai Government to arrest and extradite him. KP the present leader of the LTTE, was earlier the chief procurement officer for LTTE who smuggled leathal military hardware into the country. He is the last remaining high profile LTTE leader.

In an earlier occasion, a report emerged of the arrest of the most wanted Pathmanathan in Thailand on 10 September 2007 and a Sri Lanka Defense Ministry delegation rushed to Thailand.

When the delegation reached Bangkok, Thai authorities denied the arrest.

- Asian Tribune -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தி இலங்கையில் அறிவிக்கப்பட்டமையை அடுத்து நாட்டில் பரவலாக பட்டாசுகளை கொளுத்தி ஆரவாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஐயா சிங்கள சிங்கங்களே! உங்களிட்ட மரண அடி வாங்கின நாங்களே எல்லாம் மறந்துபோட்டு கோயில், கொடியேத்தம், களியாட்டம், கும்மாளம் எண்டு திரியிறம். இனி உங்களோட சேர்ந்து உங்கட கால்ல விழுந்து நக்கி வாழுவம் எண்டு நினைக்கிறம். எங்களுக்காக தியாகம் செய்த ஆயிரமாயிரம் உயிர்களையும், ஒப்பற்ற தலைவனையும் மறந்து விட்டோம். ஆனா இவ்வளவு அடி குடுத்தும் உங்களுக்கு இன்னும் எங்களில பகை பகை தீரலியே! ஏன் சாமி!

இன்னொரு காட்டிக் கொடுப்பு.....

கேடு கெட்ட, பீத் தமிழனாக இருப்பதை விட அவமானம் எனக்கு வேறு எதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலாளர் செல்வராஜா பத்மநாபன் கைது?

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலாளர் செல்வராசா பத்மநாதன் தாய்லாந்தின் தலைநகரான கைது செய்யப்பட்டதாக இலங்கை ராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார். ஆனால் இதனை தாய்லாந்து அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மேலும் ஜூலை 18ஆம் தேதியே செல்வராஜா பத்மநாபன் தாய்லாந்தில் இருந்து மலேசியா சென்று விட்டதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=13788

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக்கொடுப்பு தொடர்கிறது

எம்மவர்களை நினைக்கும் போது வேதனை தான் மிஞ்சுகிறது. கே .பி முகம் காட்டாமல் பேட்டி குடுத்தற்க்கே(channel4) இதே களத்தில் எத்தனைபேர் எவ்வளவு விதமாக கதைத்தார்கள்

http://www.tamilnaatham.com/advert/2009/au...090805/PARA232/

Edited by செவ்வந்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் எத்தனை எத்தனை துரோகங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி. தாய்லாந்தில் கைது

வீரகேசரி இணையம் 8/6/2009 11:08:01 PM -

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணமடைந்ததை அடுத்து அவ்வியக்கத்திற்கு தானே தலைவரென்று அறிவித்த குமரன் பத்மநாதன் (வயது 54) என்றழைக்கப்படும் கே.பி. என்பவர் தாய்லாந்து பேங்கொக் நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அப்பாடா...

கே.பீயை தலைவராக ஏற்பதா இல்லையா எண்ட பிரச்சினை முடிந்தது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு காட்டிக் கொடுப்பு.....

கேடு கெட்ட, பீத் தமிழனாக இருப்பதை விட அவமானம் எனக்கு வேறு எதுவும் இல்லை.

உண்மை நிழலி அண்ணா. சத்தியமாக நான் தமிழனாய் பிறந்ததை கேவலமாய் நினைக்கிறேன். இப்படியொரு கேவலமான இனத்தில் போய் பிறந்து தொலைத்திட்டனே.

காப்பிலிக்கு வெக்கம் இல்லாமல் போனமாதிரி... எங்களுக்கு ஒற்றுமை இல்லாமல் போய்விட்டது..

நாட்டு நிலம அப்படி....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா...

கே.பீயை தலைவராக ஏற்பதா இல்லையா எண்ட பிரச்சினை முடிந்தது..

இனி நிறைய பேருக்கு சந்தோசமாக இருக்கும். இனி யார் வந்து என்னத்தை கிழிக்க போகினம். இருக்கிற முக்கியமானவை எல்லாரையும் காட்டிகொடுத்தே கொன்னும்,பிடிச்சும் கொடுத்தாச்சு. இனி எல்லாரும் வந்து தமிழ்

மக்களுக்கு சேவையா செய்ய போகினம். இருக்கிறதை சுருட்டத்தானே...நா_... கூட்டம்.

விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவரான கே.பி. என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டமைச்சின் செயலாளர் பாலித ஹோகன தமக்குத் தெரிவித்துள்ளதாக டெயிலி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் செல்வராசா பத்மநாதன் கடந்த ஓகஸ்ட் இரண்டாம் திகதியே கைது செய்யப்பட்டு விட்டதாக இன்னொரு செய்தி கூறுகிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணமானதாகச் சொல்லப்பட்டதை அடுத்து அவ்வியக்கத்திற்கு செல்வராசா பத்மநாதனே தலைமை தாங்கி வந்தார்.

முன்னதாக கடந்த ஜனவரியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவராக செல்வராசா பத்மநாதனை நியமித்திருந்தார் என விடுதலைப் புலிகளின் உயர்மட்டக்குழு குறிப்பிட்டுள்ளது.

தற்போது விடுதலைப் போராட்;டத்தை ஜனநாயக வழியில் அடுத்த கட்டத்திற்கு தான் எடுத்துச் செல்ல உள்ளதாக செல்வராசா பத்மநாதன் அறிவித்திருந்தார்.

2007 செப்ரம்பர் மாத முற்பகுதியில் செல்வராசா பத்மநாதன் பாங்கொக்கில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக தமக்கு கிடைத்த நெருக்கமான தகவல்களை ஆதாரம் காட்டி இலங்கைப் பாதுகாப்பமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும் அச்செய்தி தொடர்பாக மெற்றோ பொலிற்றன் காவற்துறை விசேட காவற்துறைப் பிரிவு, குடிவரவு குடியகல்வு காவற்துறைப் பிரிவு என அனைத்திலும் விசாரித்ததாகவும் அவ்வாறான ஒருவர் கைது செய்யப்படவில்லை என்றும் தேசிய காவற்துறைப் பேச்சாளர் லெப்டினன்ட் ஜெனரல் றொன்னாறோங் யங்யூன் தெரிவித்தருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.paranthan.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எனக்கு வயது போன அப்பு சொன்ன கதை

பல வருசத்துக்கு முன்னாடியாம்.. அமரிக்கன் காரன் எல்லா நாட்டு காரங்களையும் இரும்பு கம்பி போட்ட ஜெயிலுக்கை பிடிச்சு போட்டானாம்..தமிழ் ஆக்களை மட்டும் இரும்பு போடாத ஜெயிலுக்கை பிடிச்சு போட்டானாம்.... அப்ப ஜேர்மன் பொஸ்னியன் காரங்கள் கேட்டாங்களாம் ஏன் எங்களுக்கு இரும்பு போட்ட ஜெயிலு தமிழனுக்கு மட்டும் ஏன் இரும்பு போடாத ஜெயிலு என்று.. அப்ப அமரிக்கன் காரன் சொன்னானாம் அவங்களிள ஒருதன் ஏறி பாஞ்சா மற்றவன் இழுத்து பிடிப்பானாம் என்று :rolleyes:

Edited by ரவுடி

  • கருத்துக்கள உறவுகள்

அசவரபட்டு வார்த்தைகளை வீசாதீர்கள்.............

தோல்லி நிலமை எமக்கு பெரும் மன உழைச்சல்களை தருகின்றன. ஆதலால் மன சோர்வு அடைந்து இனி எதுவே முடியாது என்ற நிலமைக்கு வந்துவிடாதீர்கள். எட்டுநாள் ஈசலுக்கும் ஒரு வாழ்வுண்டு மறந்துவிடாதீர்கள். தோல்வியின்றி வரலாறா?

வரலாறுகள் தோல்வியின் உச்சியில்தான் பிறக்கின்றன...... நாம் இன்னமும் தோல்வி நோக்கி செல்ல நிறைய இடமுண்டுபோலும். மனதை தளர விடாதீர்கள்........ வீணாக ஒருவரையொருவர் கைநீட்டிகாட்டி எமக்குள் உள்ள கொஞ்ச ஒற்றுமையைமு; குலைக்காதீர்கள்.

புலிகளை கடந்தும் விடுதலையை முன்னெடுக்க வேண்டி பெரிய பொறுப்பு தமிழ் இளைஞர்களாகிய எம்மிடம் இருக்கின்றது. தாயக விடுதலையின் ஒரு படிகட்டு புலிகள் ஆனால் தம்மால் ஆனா தியாகங்களை செய்து தம்மை தீயிலே போட்டு கொளுத்தி பல படிகளுக்கு எமது இனத்தை கொண்டுவந்து சேர்த்தார்கள் அப்படியே விடுதலையின் வீட்டிலும் குடியமர்த்திவிடுவார்கள் என நாம் பொறுப்பற்று இருந்தது எமது தவறு. இனியாவது பொறுப்புடன் நடப்போம் புலிகளை கடந்தும் தாயகம் அமைப்போம். இளைஞர்களே.............. தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்லாமா?

தாயின் கனவை மறக்கலாமா?

தோல்விகள் எமக்கு பாடங்களாக அமையட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரபாண்டிய கட்டப்பொம்மன், பண்டாரவன்னியன் காலத்திலிருந்தே காட்டிக் கொடுப்புக்கு பேர் போன என்னினமே.. !

இப்படியொரு நல்லதொரு ஒற்றுமையான இனத்தை இந்த பூமியே கண்டிருக்காது.

இந்த இனத்திற்கு விடுதலை ஒரு கேடு! தூ!

இன்னொரு காட்டிக் கொடுப்பு.....

கேடு கெட்ட, பீத் தமிழனாக இருப்பதை விட அவமானம் எனக்கு வேறு எதுவும் இல்லை.

இந்தத் தகவல் வதந்தியாக இல்லாது உண்மையாக இருக்குமிடத்து காட்டாறு, நிழலி சொன்னதையே நானும் சொல்ல விரும்புகிறேன். ஒரு நிலையில் எங்கள் தலைவனையும் புலிகளையும் நினைத்து பெருமைகொண்ட நாங்கள் இப்ப தமிழனாய் பிறந்ததற்கு உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும்....

மூன்று லட்சம் மக்கள் முகாமுக்குள் சாப்பாடி இல்லாமல் தவித்திருக்க இங்கே முண்டியடித்துக்கொண்டு தேர் இழுக்கச் செல்வதும் எயார் லங்காவில் ரிக்கற் போட்டு இலங்கை செல்வதையும் நினைக்க வேதனையாய் இருக்கையா...

என்னத்தை சொல்ல.. எப்படி சொல்ல? ஊடகசுதந்திரமெண்டா இப்பிடியல்லோ இருக்கோணும். தமிழனா கொக்கா?

PARA232.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் செல்வராஜா பத்மநாதன் சிறப்புப் பேட்டி ‐ பொன்னிலா:

August 1, 2009

முப்பதாண்டுகால ஈழப் போரை முன்னெடுத்து களத்தில் பலியான புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஒரு இறுதி அஞ்சலி கூட செலுத்த முடியாத துரதிருஷ்ட சூனியத்துக்குள் சிக்கியிருக்கிறார்கள் தமிழ் மக்கள். இனி என்ன நடக்கும்? ஈழம் கனவு சாத்தியமா? என்று உலகெங்கிலும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்க புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் நாடு கடந்த தமிழீழ அரசமைக்கும் முயற்சியில் இறங்கி அதற்கான செயற்பாட்டுக் குழுவையும் அறிவித்திருக்கிறார். ஓருங்கிணைக்கப்பட்ட புலிகள் அமைப்பு மீண்டும் பத்மநாதன் தலைமையில் போராடப் போவதாக அறிவித்திருக்கிற சூழலில் பத்மநாதன் தமிழக ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் சுருக்கப்படாத சிறப்பு நேர்காணல்.

ஈழ மக்களிடம்; இன விடுதலை தொடர்பாக இன்னும் என்ன நம்பிக்கை மீதி இருக்கிறது? சர்வதேச அளவில் ஈழ மக்களின் துயரங்கள் தெரிந்திருந்தும் உலக நாடுகள் அமைதியாகத்தானே இருக்கிறது?

பெருந்துன்பமும் துயரமும் சூழந்த ஒரு நிலையிலேயே ஈழத் தமிழினம் இன்று இருக்கிறது. ஆனால் ஈழக் கனவு என்பது எமது மக்களின் அரை நூற்றாண்டுகாலத்திற்கும் மேலான கனவாகும். அதற்காக அவர்கள் எண்ணற்ற தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். ஈழ மக்கள் தமது விடுதலையை வென்றெடுப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். உலக நாடுகள் ஈழமக்களின் துயரங்கள் குறித்து தொடர்ந்து தமது கரிசனைகளை இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தி வருகின்றார்கள். இந்தியா உட்பட.

ஆயுதப் போராட்டம் கசப்பான முடிவுக்கு வந்த பிறகு நாடு கடந்த தமிழீழ அரசின் மூலம் ஈழமக்களுக்கு ஒரு தாயகத்தை அமைத்துக் கொடுக்க முடியும் என நினைக்கிறீர்களா? அதற்கான செயல் திட்டம் என்ன?

நாடு கடந்த தமிழீழ அரசமைக்கும் எண்ணமும் அதனை ஒட்டிய செயல்பாடுகளும் மிக வலுவான முறையில் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கான செயற்குழுவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடுகடந்த தமிழீழ அரசு மூலம் ஈழ மக்களுக்கு தாயகத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு. அதற்கான செயற்திட்டம் வரையறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தப்படும்.

ஈழ மக்களின் கோரிக்கைகளை இந்தியா ஆதரிக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கிறீர்கள் ஆனால் இந்தியா இலங்கை அரசுடன் நெருக்கமாக இருக்கிறதே?

இந்தியா ஓடுக்கப்பட்ட மக்கள் மீது கரிசனமும் ஆதரவுப்பார்வையும் கொண்ட நாடுதான். ஒடுக்கப்பட்ட பல இனங்களின் விடுதலைக்கு இந்தியா கடந்த காலங்களில் உதவியுள்ளது என்பதுதான் உண்மை. அந்த வகையில் தமிழ் மக்களின் விடுதலைக்கு இந்தியா உதவும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்களிடம் உள்ளது. இந்தியா எங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசை உலக நாடுகள் குறிப்பாக மேற்குலகம் அங்கீகரிக்குமா?

எமது மக்களுக்காக நாம் அறிவித்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசை மேற்குலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்கான வேலைத்திட்டங்களை அமைத்து நாம் செயற்பட உள்ளோம். செயற்படுத்தியும் வருகிறோம். அது போல சிங்கள அரசு தமிழினத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதும் எமது செயற்திட்டத்தின் முக்கிய பகுதி. வரலாற்றின் நோக்கில் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். உலக அளவில் எமது ஈழ மக்களின் சமாதான உரிமை வாழ்வை உறுதிப்படுத்த வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது.

நாடுகடந்த தமிழீழ அரசமைப்பதற்கான செயற்குழுவில் தமிழகத்தில் இருந்து யாரும் நியமிக்கப்பட வில்லையே? தமிழகத்தின் ஆதரவு உங்களுக்குத் தேவை இல்லை என நினைக்கிறீர்களா?

தமிழகத்தில் இருந்தும் செயற்குழுவில் பலர் ஆலோசகர்களாக உள்ளனர். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களின் பெயர் விபரங்களை நாம் வெளியிடவிரும்பவில்லை. தமிழக மக்கள் எப்போதும் எமது விடுதலை வேட்கையை ஆதரித்தே வந்திருக்கிறார்கள். அந்த ஆதரவு இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக ஈழத் தமிழினமும் இந்தியத் தமிழினத்திடமும் முரண்பட்ட கருத்துக்கள் உருவாகி இருக்கிறதே?

இவை குறித்த விவாதங்களை இனி நாம் தொடர வேண்டிய அவசியம் இல்லை.

பிரபாகரன் குறித்த உங்கள் அறிவிப்பை துரோகம் என்றார் வைகோ, நம்பகத்தன்மையற்றது என்றார் நெடுமாறன் உங்கள் கருத்து என்ன?

அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. அவர்கள் இன்றும் உண்மையை வெளிப்படுத்த விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.

இறுதிப் போரின் பின்னர் நீங்கள் நடந்த விஷயங்களை நெடுமாறன், வைகோவிடம் சொன்னீர்களா? அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதைச் சொல்ல முடியுமா?

அனைவருக்கும் நடந்த உண்மைகளை தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளேன். அவர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. இதற்குமேல் இந்த விஷயத்தை பேச விரும்பவில்லை.

முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது?

பல்லாயிரம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். எமது தலைவர் வீரமரணமடைந்துவிட்டார். முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் போராளிகளோடு அவரும் வீரமரணமடைந்து விட்டார்.

அப்படி என்றால் சர்வதேச சங்கத்தின் மூலம் நீங்கள் ஏன் பிரபாகரனின் உடலைக் கோரவில்லை? அவருக்கு உரிய அஞ்சலி ஒன்றை செலுத்தாமல் போனதன் பொறுப்பாளிகள் யார்? இது வேதனையாக இல்லையா?

எமது தலைவரின் உடலைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் நான் ஈடுபட்டேன்.அவருடைய உடலை அவரது ரத்த உறவினர்கள் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. பெருந்தொகையான மக்கள் படுகொலை செய்யப்பட்டதும். எமது தலைவரினதும் ஏனைய தளபதிகளின் மரணமும் எங்களையும் எமது ஈழத் தமிழினத்தையும் மீளமுடியாத பேரதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளாக்கியிருக்கிறது.

பிரபாகரனின் துணைவியார் மதிவதனி, குழந்தை பாலச்சந்திரன் குறித்து தகவல்கள் உண்டா?

அவர்கள் குறித்த எந்தத் தகவல்களும் என்னிடமில்லை.

மூன்று லட்சம் மக்கள் முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பத்தாயிரம் போராளிகள் ரகசிய சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போராளிகளையும் பொது மக்களையும் மீட்க ஏதேனும் சாத்தியங்கள் உண்டா?

இதற்கான சகல முயற்சிகளிலும் நான் ஈடுபட்டுள்ளேன்.

தமிழக மக்களிடமும் இங்குள்ள தலைவர்களிடமும் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

தமிழீழ மக்கள் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழ அவர்களுக்கு வேண்டிய சகல உதவிகளையும் இன்று போல் என்றும் செய்ய வேண்டும் என்பதையே தமிழக மக்களிடமும் தலைவர்களிடமும் எதிர்பார்க்கிறேன்.

http://www.viyapu.com/news/?p=18943

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.