Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களே இனி என்ன செய்ய போறீர்கள்?

Featured Replies

யாரவது துடிப்புள்ள இளையவர் வந்தீர்கள் என்றால் மட்டுமே தமிழீழம் மலரும்....தேசிய தலைவரின் வாழ்க்கையை மையப்படுத்தி, அவர் வாழ்ந்த வாழ்வியலில் நமக்கு தந்துள்ள பாடங்களை கற்று அவரின் ஆசான்களையும் ஏற்று தமிழே மூச்சு என்று தன்னலமற்ற ஒழுக்க சீலனாக யாராவது வாருங்கள்.

சிங்களவன் தமிழனை தண்டிக்க பிறந்தவனா?

தமிழன் வீரம், சாணக்கியம் செத்துவிட்டதா?

தமிழர்களே விடுதலையை மறந்தீரோ?

மாவீரர்கள் ஈகை மறந்து சிங்களவனை ஏற்கின்றீர்களோ?

3 இலட்சம் தமிழர் வதை முகாமில் சிதையாவது சரிதானோ?

எங்கே பிறந்தீர்கள்? அந்த இடம் கூட தடம் அற்று போனதே உணரவில்லையோ?

இது முடிவல்லவே! எதுதான் முடிவு?

உலகம், அரசாங்கங்கள், நேர்மை, நாணயம், உண்மை எதுவும் தமிழீழம் தராது...

தமிழா உன் உழைப்பு, வழிகாட்டல், வலயப்பின்னல், பயிற்சி, நோக்கம் இதில் பற்றாக நின்றாலே தமிழீழம் மலரும்.

புதிய வலயம் உருவாக்குங்கள், பழைய வலயத்தை அனுபவத்திற்கு பயன்படுத்துங்கள்.

தமிழகத்தை பற்றிக் கொள்ளுங்கள்....அது ஒன்றே பலவற்றுக்கும் ஆதாரம்.

ஆமா எப்ப விக்ரமின் கந்தசாமி ரிலிஸ்?

ஈழத் தமிழர்களே இனி என்ன செய்ய போறீர்கள்?

இனி என்ன?

யாராவது ஒரு இளிச்சவாயன் கிடைக்காமலா போகப்போறான், அப்பிடி கிடைச்ச உடன வாழ்த்துப்பாடுவோம், வசை பாடுவோம், ஏன் துரோகிப்பட்டமும் குடுப்பொம்.

இதையெல்லாம் செய்ய யாழ்களத்திலேயே தீரர்கள் தயாராக உள்ளார்கள். இப்ப ஏன் நீங்கள் ரென்ஸனாகிறிங்க?

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியின் இலக்கு

இலங்கையில் தமிழ் மக்களின் வெற்றி, தமிழ் தேசியத்தின் வெற்றி என்று பெருமளவிலான தமிழ் மக்கள் நம்புகிறார்கள். இன்று தமிழ் தேசியத்துக்கு கிடைத்துள்ள பின்னடைவு அவர்களை சோர்வடைய செய்துள்ளது.

உண்மையில், இலங்கையில் தமிழ் மக்களின் வெற்றி அவர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைப்பதிலேயே இருக்கிறது. தமிழ் தேசியம் நோக்கிய தீர்வு அந்த இலக்கில் இருந்து எம்மை விலத்தி அழைத்து சென்று பெரிய அழிவை சந்திக்க வைத்திருக்கிறது. நாம் மனம் தளர்ந்து விடக்கூடாது. எமது இலக்கு நோக்கி நாம் பயணத்தை தொடர வேண்டும். ஆனால் இப்போது நாம் எமது இலக்கை சரியாக அடையாளம் கண்டு கொண்டு பயணிப்பதே பயனுள்ளதாகும். அந்த இலக்கு இலங்கையில் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வு என்பதை நாம் என்றும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முழுவதும் படிக்க ....

http://fathersara.info/blog/

யாராவது வாருங்கள் என்று யாரை கூவி அழைக்கிறீங்கள்.அப்படி யாராவது தமிழனுக்காக போராட வந்தால் நான் பெரிதா அவன் பெரிதா என்று எமக்காக போராடவந்தவர்களை கெட்டித்தனமாக எதிரிக்கு காட்டிக்கொடுக்கும் ஈனர்கள் அல்லவா நாங்கள்.

ஈழத் தமிழர்களே நான் இருக்கிறேன்

1 ஆனந்த சங்கரி பட்டு வாகெ யாழ்ப்பட்டுன தேரோ

2.டக்ளஸ் தேவா ஆனந்த வெற்றிலை தோல்வி நிக்க தேரோ

3.அங்கொட சித்தார்த்த தர்மலிங்க கொலைகார தேரோ

அய்யா நானும் வாரேன்

4.

இப்படியே மகிந்தா கூட்டத்திற்கு கு...........கழுவும் படை ஞாமிருக்கிறோம் இனி ஒருவரும் வரக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக் கொடுக்கிற நாய் ஈழத்தமிழனுக்கு , இப்ப சுதந்திரம் ஒரு கேடா ?

இனி ..... உலகில் எங்காவது ஒற்றுமையுள்ள இனம் சுதந்திரம் பெற்றால் அதனைப் பார்த்து பெருமூச்சு விடவேண்டியது தான் .

  • தொடங்கியவர்

நன்றி உங்கள் ஐவருக்கும். காட்டிக் கொடுப்பவன் காலா கால்த்துக்கும் வந்து கொண்டே இருப்பான் இதை அறியாமல் இல்லை, என்ன செய்வது அடிமையாய் வாழ்வதே போதும் என்று நாம் நம்பவில்லை...வெளி நாட்டில் வாழும் தமிழர் மட்டுமே நிம்மதியாக வாழ்கின்றனர்...ஆக இது தான் உங்கள் முடிவா?

Edited by Sniper

  • தொடங்கியவர்

ஏதொ பொழப்பு கெட்டு நான் புலம்பவில்லை,

ஒத்தக் கருத்துள்ள மனங்களின் தாக்கமே என்னுள்ளும் ஏற்பட்டது.- (biological effect)

ஆதாரம்: கீழுள்ள செய்தி

விசேட செய்தி- வீட்டுக்கு ஒருவராய் விடுதலைப் பண்பாடுங்கள், உயிர்க்கும் தமிழீழம்

மேலும் வாசிக்க: நெருடல்

எமது மக்களின் அவலங்கள் கண்டும் சித்திரவதைக்குள்ளாகும் போராளிகளின் நிலை அறிந்தும் மனம் கொதிக்கின்றது. இவர்களை காப்பாற்ற என்ன செய்ய முடியும்? தெரியவில்லை.

சிங்களவனையும் இந்தியனையும் தண்டிப்பதற்கு என்ன செய்யலாம்? புரியவில்லை.

ஏதாவது செய்ய வேண்டுமென்று மனம் துடிக்கிறது. ஆனால் என்ன செய்வது எப்படிச் செய்வது? வழிகாட்ட , உடன் வர யாராவது வர மாட்டார்களா என நித்தம் தவிக்கின்றேன்.

எமது புலம் பெயர் மக்கள் அமைப்புக்கள் ஏன் மவுனம் சாதிக்கின்றன?

யாழ் கருத்துக்களத்தில் உள்ள சிறந்த கருத்தாளர்களாவது வழி காட்ட மாட்டார்களா என்று நுழைந்தால் அங்கோ எமது தலைமையையும் எமது தேசிய இயக்கத்தையும் விமர்சிப்பதிலும் ஒருவருக்கொருவர் துரோகி பட்டம் கொடுப்பதிலும் தான் மும்முரமாயுள்ளர்கள்.

ஏன் இந்த நிலைமை.

ஓ போராளிகளே தாயகம் காக்க உயிரைத்துச்சமென மதித்து சமராடியவர்களே . போராளிகளின் அரணாய் போராட்ட ஊற்றாய் விளங்கிய மக்களே இன்று கொடிய சிங்களவனால் எத்தனை சித்திரவதை அனுபவிக்கின்றீர்கள் என்று தெரிந்தும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்னை மன்னித்து விடுங்கள்.

ஆனால் உங்களை எண்ணி எனது மகிழ்ச்சிகளை மாத்திரம் நான் தியாகம் செய்துள்ளேன்.

உங்களது மறுமொழி ஒத்தக்கருத்துள்ள சிலரேனும் இனி என்ன செய்யலாம் எனும் ஏக்கத்தில், விடைகானா நிலையில் இருக்கின்றனர் என்பதை உணர்த்துகிறது. இந்த உணர்வு மற்றவர்களிடம் இல்லாமல் இல்லை வெறுத்து போய் பித்தாகியுள்ளனர். நம்மை போன்றவர்களால் தான் ஊக்கத்தை கொடுக்க இயலும். மீண்டும் அனைவரையும் தாயகவிடுதலை சிந்தனைக்கு இழுத்துவர பாடுபடுவோம். நன்றி!

உண்மையில், இலங்கையில் தமிழ் மக்களின் வெற்றி அவர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைப்பதிலேயே இருக்கிறது. தமிழ் தேசியம் நோக்கிய தீர்வு அந்த இலக்கில் இருந்து எம்மை விலத்தி அழைத்து சென்று பெரிய அழிவை சந்திக்க வைத்திருக்கிறது. நாம் மனம் தளர்ந்து விடக்கூடாது. எமது இலக்கு நோக்கி நாம் பயணத்தை தொடர வேண்டும். ஆனால் இப்போது நாம் எமது இலக்கை சரியாக அடையாளம் கண்டு கொண்டு பயணிப்பதே பயனுள்ளதாகும். அந்த இலக்கு இலங்கையில் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வு என்பதை நாம் என்றும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த நிம்மதியான, பொருளாதார வளம் மிக்க வாழ்வை இங்குள்ள தமிழர்கள்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு முக்கியமானது உள்ளுர் தமிழர்களின் நலன்களின் சிறிதும் அக்கறை இல்லாத அல்லது உண்மையான களநிலையை பற்றி அறிவில்லாது தங்களது கௌரவத்திற்காக உள்ளுர்தமிழர்களை பலிக்கடாவாக்கிய புலம்பெயர் தமிழர்களை உள்ளுர் அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும்.

Edited by சாணக்கியன்

12 வருடங்களாக யாழ்மக்களை தனது பக்கம் எடுக்க ஏலாது போய்விட்டதே உள்ளூர் அரசியல் வாதியால்..... 80% மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் ,புலம் பெயர் தமிழர்கள்.கொழும்பு பெயர் தமிழர்களை விட..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த நிம்மதியான, பொருளாதார வளம் மிக்க வாழ்வை இங்குள்ள தமிழர்கள்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு முக்கியமானது உள்ளுர் தமிழர்களின் நலன்களின் சிறிதும் அக்கறை இல்லாத அல்லது உண்மையான களநிலையை பற்றி அறிவில்லாது தங்களது கௌரவத்திற்காக உள்ளுர்தமிழர்களை பலிக்கடாவாக்கிய புலம்பெயர் தமிழர்களை உள்ளுர் அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும்.

கருத்தியல் ரீதியாக தமிழினத்தினது விடிவுக்காக என்ன செய்யலாம் என்று ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டியதும் செயற்பட வேண்டியதுமான இவ்வேளையிலும் தமது மூடத்தனங்களில் இருந்தோ அறியாமையிலிருந்தோ விடுபடாதவரை வைக்கோல் ப்பட்டடைப் பிராணியாக அலைய வேண்டியதே. தன்மான உணர்வு, மனிதவிழுமியங்களை மதித்தல் என்பன போன்றவற்றைக் கொண்ட சுயமரியாதை உள்ள தமிழரது கருத்துப்பிடிக்காவில் கம்மெண்டிருக்கலாம். அல்லது மகிந்த மாத்தயாவின்றேக்கை போய் கருத்தாடல் செய்யலாம். ****க் கல் எறியக் கூடாதெண்டு எங்கட தம்பிமுத்து வாத்தியார் சொன்னதாக ஞாபகம்.

விடிவுக்காக ஒரு முடிவை எடுங்கள் அதுதான் ஒன்றிணையும் முடிவு, தமிழீழம் பெறும்வரை வேறேது சிந்தனையும் இல்லாது உழையுங்கள். அருவர் கருத்தில், நல்லதும் இருக்கலாம், இருக்கும் நல்லதை எடுங்கள்...யாரையும் உதாசீனப்படுத்தாதீர்கள். தகுந்த மரியாதையுடன் அன்புடன் பேசி முடிவுகளை எடுங்கள், நமக்குள் சண்டையிடுவதாலேயே விடுதலை பின்னடைகிறது முதலில் இதை தவிருங்கள்.

நம் மக்களுக்கு மருத்துவம் செய்த 3 மருத்துவர்கள் நிலை என்னாயிற்று என யாராவது அக்கறை கொண்டோமா? தயவு செய்து சிந்தியுங்கள்.

தமிழீழம் பெறுவோம் பிறகு நமது உள்விவகாரங்களை பார்ப்போம் இல்லை, சண்டையிட்டு தீர்ப்போம்.

தமிழீழம்் பெற்றதுக்கு முதல் அங்குள்ள மக்களை காப்பாத்திறதுக்கு ஏதாவது வழி செய்யுங்கய்யா

  • தொடங்கியவர்

தமிழீழம்் பெற்றதுக்கு முதல் அங்குள்ள மக்களை காப்பாத்திறதுக்கு ஏதாவது வழி செய்யுங்கய்யா

3 இலட்சம் தமிழர் வதை முகாமில் சிதையாவது சரிதானோ?

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நிம்மதியான, பொருளாதார வளம் மிக்க வாழ்வை இங்குள்ள தமிழர்கள்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு முக்கியமானது உள்ளுர் தமிழர்களின் நலன்களின் சிறிதும் அக்கறை இல்லாத அல்லது உண்மையான களநிலையை பற்றி அறிவில்லாது தங்களது கௌரவத்திற்காக உள்ளுர்தமிழர்களை பலிக்கடாவாக்கிய புலம்பெயர் தமிழர்களை உள்ளுர் அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டும்.

இது ஸ்ரீலங்கா புலானாய்வு துறையால் முன்வைத்து ஈழத்தில் பரப்பப்பட வேண்டிய கருத்து............ ஏதோ சாணக்கியனின் தயவால் யாழ்களத்திற்கு வந்திட்டுது. நன்றி சணக்கியன்.

சிங்களவனின் அடுத்த கட்டம் என்ன என்று புரிய கூடியவர்கள் புரிந்தால் நன்று!

ஈழத் தமிழர்களே இனி என்ன செய்ய போறீர்கள்?

மொட்டாக்கு போட்டுகொன்டு ஊருக்கு போயிட்டுவார அலுவல்களை பார்க்கவேண்டியதுதான்.

  • தொடங்கியவர்

ஒன்று மட்டும் விளங்குகிறது, நம்மில் சிலர் தமிழராக பிறந்ததையே வெறுக்கின்றனர் என்று! ஏனென்றால் பிரச்சனை பிரச்சனை எனும் வெறுப்பு போலும். நமது முன்னவர்கள் செய்த தவறை செய்யாதீர்கள். வெளிநாடுகளில் உள்ள தற்போதைய பெற்றோர்களாகிய நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? அதன் காரணம் என்ன? பழதை மறந்துவிட்டீர்களோ? இன்றுடன் 101+ நாட்களாக வெள்ளை மாளிகைமுன் ஓயாமல் குரல் கொடுக்கும் தமிழர்கள் தமிழராக பிறந்ததை வெறுக்கின்றனரா? தரம் தாழ்ந்ததாக உடைந்து போனார்களா? முயற்சியின் முடிவே வெற்றி!

யாழில் கருத்து எழுதவரும் நீங்கள் பொறுப்புள்ள தந்தையாக, தாயாக, மகன், மகளாக, தமிழராக நடக்க வேண்டுகின்றேன்....உங்கள் உயர்ந்த சிந்தனை நிச்சயமாக மற்றவரை செயல்லாற்ற வைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3 இலட்சம் தமிழர் வதை முகாமில் சிதையாவது சரிதானோ?

அவங்கள காப்பாத்திற வழியைத்தான் பார்க்கச்சொன்னன்

பின்ன சிங்களவனயா காப்பாத்த சொன்னன்.

  • தொடங்கியவர்

அவங்கள காப்பாத்திற வழியைத்தான் பார்க்கச்சொன்னன்

பின்ன சிங்களவனயா காப்பாத்த சொன்னன்.

அதைத்தான் உங்களுக்கு அல்ல மற்றவர்களுக்கு குறியிட்டு சொன்னேன்.....

உலகத் தமிழர் மீண்டும் போராட்ட வடிவை உருவாக்குகின்றனர் இதில் ஏதாவது வகையில் நாமும் (யாழ் உறவுகள்) உதவி கருத்தொற்றுமையுடன், யாரையும் கண்டிக்காமல் இணைவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் விளங்குகிறது, நம்மில் சிலர் தமிழராக பிறந்ததையே வெறுக்கின்றனர் என்று! ஏனென்றால் பிரச்சனை பிரச்சனை எனும் வெறுப்பு போலும். நமது முன்னவர்கள் செய்த தவறை செய்யாதீர்கள். வெளிநாடுகளில் உள்ள தற்போதைய பெற்றோர்களாகிய நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? அதன் காரணம் என்ன? பழதை மறந்துவிட்டீர்களோ? இன்றுடன் 101+ நாட்களாக வெள்ளை மாளிகைமுன் ஓயாமல் குரல் கொடுக்கும் தமிழர்கள் தமிழராக பிறந்ததை வெறுக்கின்றனரா? தரம் தாழ்ந்ததாக உடைந்து போனார்களா? முயற்சியின் முடிவே வெற்றி!

யாழில் கருத்து எழுதவரும் நீங்கள் பொறுப்புள்ள தந்தையாக, தாயாக, மகன், மகளாக, தமிழராக நடக்க வேண்டுகின்றேன்....உங்கள் உயர்ந்த சிந்தனை நிச்சயமாக மற்றவரை செயல்லாற்ற வைக்கும்.

உண்மை. யாராவது வருவார்களா?

எங்களது மேதாவித்தனமும் மற்றையோர் மீதான இகழ்நிலைப்போக்கும் மாற வேண்டும். மாறி ஒரு, ஒருமித்த சக்தியாக வேண்டும். அப்படித் திரண்டெழும் சக்தியானால் சத்தியம் நிலைபெறும்.

இது தான் காலத்தின் கட்டாயம். அடிபடுவன் அங்கிருக்கின்றான் அவன் வேதனையின் உண்மையில் தான் நமக்கு நாம் தங்கியுள்ள நாடுகள் தஞ்சமளித்து வாழ்வை தருகிறது என்பதை மறக்காது நன்றியால் அல்ல உணர்வால் எழுந்து உரிமை கேட்போம்.

  • தொடங்கியவர்

டொரோன்ரோ நகர தமிழர்களே விடுதலைப் புலிகள் அழிக்கப்படாத வரை 100,000 பேர் வரை எழுந்தீர்களே, நேற்று வெள்ளிக்கிழமை நடந்த ”இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி ரொறன்ரோவில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முன்பாக வெள்ளி நண்பகல் 12 மணியிலிருந்து மாலை 7 மணிவரை ‘எங்களை வாழவிடு’ ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றது” ஏன் யாரும் கலந்து கொள்ளவில்லை?

எமது மக்கள் படும் அவதியாவது தெரியுமா?

கடந்த 100 நாட்களிற்கு மேலாக நலன்புரி நிலையங்கள் என இலங்கை அரசால் சொல்லப்படும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் அண்மையில் பெய்த பெருமழையில் அவர்களது குடிசைகள் நீரில் மூழ்கியுள்ளமையும், அடிப்படை வசதிகள் எதுவும் அற்று தற்காலிக கழிவறைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் வாழ்கிறார்கள்.

எம்மக்களின் தேவைகளை இலங்கை அரசாங்கம் அலட்சியம் செய்யும் வேளையில் இதனை உலக நாடுகளிற்கு எடுத்துக் கூறும் வகையிலும், முகாம்களில் உள்ள மூன்று இலட்சம் மக்களை விடுவிக்க இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டி அவசியத்தை வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.

இலங்கை அரசால் சர்வதேசத்திற்கு உறுதியளித்தபடி இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கும் வரை தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கனடியத் தமிழர் சமூகமும் கனடியத் தமிழ் மாணவர் சமூகமும் தெரிவித்துள்ளது. எனவே தயவு செய்து உங்கள் கால்களில் விழுந்த்து கேட்கிறேன் இனிமேல் இப்படி எம்மக்களுக்கான விடுதலை போராட்டக்களை உதாசீனப்படுத்தாதீர்கள்.

விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இந்தகதி எம்சொந்தங்களுக்கு ஏற்பட்டிருக்குமா? மானமுள்ள தமிழர்களே கூறுங்கள்.

Edited by Sniper

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.