Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம் நான் சன்னதமாரி

Featured Replies

வணக்கம்

அவதாரம் - சன்னதமாரி

கொள்கை – ஒப்பாரி

இனம் - கருமாரி

நிலை – உருவேறி

பிடிச்ச பொருள் - வேப்பிலை

பிள்ளைகள் பலதும் - நாதாரி

அனுபவ நிலை – செங்கமாரி

மொத்தத்தில் மலைநீலி

இதுதான் அறிமுகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ!வாங்கோ!! சன்னதமாரி...நல்லபேர்.. சன்னதமாடி இல்லைத்தானே???அப்பாடா..வந்து கலக்குங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ... வந்து சன்னதம் ஆட மாட்டீங்கள் தானே

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ .............வ்ணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ

முள்ளிவாய்காலுக்குப்பிறகு இங்க இருக்கிறதுகள் உல்லாம் பேய் பிடிசு:சமாதிரி எழுதுதுங்கள்.

நீங்கள் வந்து கொஞ்சம் கலைச்சசு விடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

அவதாரம் - சன்னதமாரி

கொள்கை – ஒப்பாரி

இனம் - கருமாரி

நிலை – உருவேறி

பிடிச்ச பொருள் - வேப்பிலை

பிள்ளைகள் பலதும் - நாதாரி

அனுபவ நிலை – செங்கமாரி

மொத்தத்தில் மலைநீலி

இதுதான் அறிமுகம்.

வாங்கொ வணக்கம் சன்னதமாரி .

மொள்ள மாரியின் அன்பான வரவேற்புகள் உரித்தாகட்டும் .

  • தொடங்கியவர்

என்னை இந்த வாசலில் வந்து வரவேற்ற பொக்கற்டோக், ரதி கறுப்பி, நிலாமதி, விடலை, தமிழ்சிறீ ஆகியோருக்கு மிகவும் நன்றிகள்.

நான் சன்னதமாடி இல்லை சன்னதம் ஆட வைப்பவள் அதான் சன்னதமாரி

இங்கு உள்ளவர்கள் வேப்பிலைக்கு மசிவார்களா?

மொள்ள மாரியும் என்னுடைய அவதாரத்தில் ஒன்று மகனே. தண்ணீரை மொள்ளுதல் என்றால் அள்ளுதல் பொதுவாக பெண்கள் என்றால் குடத்தில் தண்ணீர் அள்ளி இடுப்பில் சுமந்தவர்கள்தானே.

  • தொடங்கியவர்

மூன்று ஆக்கங்கள் எழுதினால் மற்ற இடத்திலும் எழுதலாம் என்று அறிவித்தலில் இருக்கிறது. இது எனது மூன்றாவது ஆக்கம் இனி மற்ற இடத்திலும் எழுத அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

  • தொடங்கியவர்

:lol: மற்ற இடத்தில எங்குமே பதிய முடியவில்லை.???? :)

அரசியல் --------- தெரியாது

ஆய்வுகள் -------- செய்தது கிடையாது.

கட்டுரைகள் ------- எழுத முயற்சித்ததே இல்லை

முகவரி -------- தேடினாலும் பட்டதாரிக்கு உரியன கிடைக்காது.

சமீப காலமாகத் தேடல்களில் புதைந்து உடலும் , மனமும் சோர்ந்து, உறக்கம் வராமல் உழட்டி, ஒவ்வொரு நாட்களையும் திகிலோடு வரவேற்று, இன்று வரைக்கும் நிறையக் கேள்விகளுக்கு விடைகள் தெரியாமல் இருக்கிற நிலை எனக்கு மட்டும் இல்லை உங்கள் எல்லோருக்கும் இருக்கும். சங்கிலித் தொடர்போல் ஒன்றன் பின் ஒன்றாக பல நிகழ்வுகள் ஈழத்தமிழ் மக்கள் வாழ்வையே கேள்விக்குறியாக்கி உள்ளது.

பல கேள்விக்குறிகளை உருவாக்க இடமளித்து விட்டு புலிகளின் தலைமையும், போராட்டவடிவமும் மௌனித்துக் கொண்டதன் பின்னான புறச்சூழல் தமிழரின் ஜீவாதார முடக்கலை மட்டுமல்ல, உயிர் வாழ்தலையும் உறுதியற்றதாக ஆக்கியுள்ளது. கடந்த தை மாதத்திலிருந்து வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டதான மூன்று இலட்சம் மக்களின் ஒவ்வொரு மணித்துளிகளையும் இன்று சிங்கள இராணுவமே தீர்மானிக்கிறது.

இடப்பெயர்வு என்பது தமிழர் பிரதேசங்களில் நீண்ட காலமாக நிகழ்ந்து வந்திருக்கிறது. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பரவலாக தமிழ்மக்கள் தாம் வாழ்ந்த பாரம்பரிய பிரதேசங்களில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டும், இராணுவ வன்முறைகளின் அச்சங்காரணமாக வெளியேறியும், தங்கள் இளைய தலைமுறைக்கு தத்தம் மூதாதையர் வாழ்ந்த ஊர்களைக்கூடக் காட்ட முடியாமல் எத்தனையோ விதமான ஆற்றப்படாத காயங்கள் தமிழர் வாழ்வில் உள்ளன. மீளக் குடியமர்வு என்பது இவர்கள் வாழ்வில் கனவாகவே உள்ளது., இருப்பினும் ஜீவாதார வாழ்விற்கு வழியிருந்தது. ஒரு ஒழுக்கம் நிறைந்த அரச கட்டுமானம் இருந்தது. புpச்சைக்காரர்களே இல்லாத முறையில் செம்மையான வாழ்க்கை முறை இருந்தது. சமூகப் புற்று நோய்களான சாதியம், சீதனம் போன்றவை அகற்றப்பட்டிருந்தன. காலங்காலமாகப் பிற்படுத்தப்பட்டதான இரண்டாம் நிலையிலேயே முடக்கப்பட்டு இருந்த பெண்கள் முதன்மைப்படுத்தப்பட்டு ஆண்களோடு சமநிலைப்படுத்தப்பட்டார்கள். தமிழீழத்தில் மட்டுமல்ல அதற்கு வெளியேயும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடமும் இந்த அரச கட்டுமானம் பெருமதிப்பையும், அங்கீகரிப்பையும் பெற்றிருந்தது.

ஒரு சிறிய கெரில்லாக் குழுவாக உதயமாகிய ஒரு விடுதலை அமைப்பு முப்படைகளையும் கொண்டதோடு, முழு அரச கட்டுமானங்களையும் உள்ளடக்கி வளர்ச்சியுற்றமை உலக அளவில் உள்ள ஆட்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இந்த விடுதலைக் குழுமத்தில் வளர்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு தோற்றுவாய்க்குள் பல நாடுகளும் முடங்கிக் கொண்டன. பயங்கரவாதப் பட்டியலில் இட்டு இவ்விடுதலை அமைப்பை தடைசெய்து இதன் வளர்ச்சியை மட்டுப்படுத்தியதோடு சிங்களத்திற்கு ஆதரவுக் கரங்களை வழங்கி துடைத்தழிக்கத் துணிந்தன. துடைத்து அழிக்கவேண்டும் என்பதில் குறியாக இருந்த எல்லோரும் மக்கள் அழிவை அதிகமாகவே எதிர்பார்த்தார்கள், ஆதலாலேயே குவியல் குவியலாக மக்கள் இறக்கும்போதும், ஊனப்படுத்தப்படும்போதும் ஊமைகளாக மௌனித்துக் கொண்டார்கள். இந்தக் காலகட்டம் மிக முக்கியமானது. சிங்களம் எதிர்பார்க்காத இன்னொரு திசையில் புலம் பெயர்ந்த தமிழ்மக்களால் மிக வலிமையான தளம் தமிழீழத்திற்கு வெளியே உருவாக்கம் பெற்றது. கடந்த காலங்களில் பொருளாதார நிலைகளிலேயே பெருமளவில் ஆதரவை வழங்கி வந்த புலம்பெயர் தமிழ்மக்கள் போராட்டத்தின் இன்னொரு வடிவத்தோடு களமிறங்கினார்கள். உலக அரசியல் சார்ந்த ஜனநாயக வடிவத்தைக் கையிலெடுத்துக் கொண்டார்கள். சிங்களம் ஆயத முனையில் பேரரசுகளின் துணையோடு இரத்தக் களரியில் மும்முரப்பட புலம்பெயர் தமிழ்சமூகத்தின் மக்கள் போராட்டம் முனைப்புப் பெற்றது. புலம்பெயர் தமிழரின் ஜனநாயகப் போராட்ட வெற்றிக்கு களத்தில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்படவேண்டிய கட்டாயம் இருந்தது. தாயகத்தில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது. முழுமையாகப் புலம்பெயர்ந்த மக்களின் கைகளில் தாயக மீட்பு கைமாறிக் கொண்டது. இந்தக் கைமாறிய இடத்தில்தான் அநேகர் குழம்பிப் போயினர். சிங்களத்தால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பிலும், ஊடக உத்திகளிலும் நிலை குலைந்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பிலிருந்து தழும்பத் தொடங்கினர். சிங்களத்தின் ஊடக உத்தி புலம்பெயர்ந்த மக்கள் போராட்டத்தை முனை மழுக்கிப் போட்டது. பலத்த அதிர்வுகளுக்குள் சிக்குண்ட சமூகமாக தமிழினம் உருவகப்பட்டது. மீளெழ முன்பே திட்டமிடப்பட்ட மாற்றுக் கருத்துகள் தாயக நேசிப்பாளர்களைப் பிளவு படுத்தியது. இப்பிளவு என்பது சாபக் கேடு.

புலம்பெயர்ந்த மக்களின் கைகளில் தாயகமீட்புக் கைமாறிய பின் மௌனித்துக் கொண்ட போராளிகள் வெண்ணெய் திரளும்போது தாழியை உடைக்க மாட்டார்கள். ஆக தாயக மீட்பைக் கையிலெடுத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வதைமுகாம்களுக்குள் முடக்கப்பட்டுப்போன மக்களையும், போராளிகளையும் காரணம் காட்டி தத்தம் போராட்ட நிலைகளில் குழப்பங்களையும், தேக்கங்களையும் உருவாக்கிவிட்டார்கள் இந்நிலை, தாம் மௌனிக்கும் நிலையை எடுத்துக் கொண்ட போராளிகள் எதிர்பார்க்காத ஒன்று.

புலிகளின் பெருவளர்ச்சியால், கடந்த காலத்தில் புலம்பெயர்ந்ததமிழ் மக்களால் மிரண்டிருந்த சிங்களம் வதைமுகாம்களை நீண்ட காலத்திற்கு வெளித் தொடர்புகளை அற்றதாக நிறுவுவதன் மூலம் புலம் பெயர் தமிழ்மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க முனைகிறது. இந்த முனைப்பில் சிங்களம் தான் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரைக்கும் சரி இனிமேலும் சிங்களத்தின் துருப்புச் சீட்டு மூன்று இலட்சம் மக்களை உள்ளடக்கிய வதைமுகாம்களே. எம்மினம் கடுமையான வலிப்பட்டு விடுதலையைப் பெறுவதா? அல்லது சிறுகச் சிறுக நலிவுற்று மனநிலை பாதிப்புற்றுச் சாவதா என்பதை புலம்பெயர் தமிழ்மக்கள் முடிவெடுக்க வேண்டும்.

:lol: மற்ற இடத்தில எங்குமே பதிய முடியவில்லை.???? :(

சன்னதமாரி.! காலத்துக்குத்தேவையான கருத்துக்கள் உங்களுடையவை.போராட்டமுறையானத

  • தொடங்கியவர்

இன்னும் எனக்கு அனுமதி வழங்கவில்லை என்ன காரணம்?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரவுடியின் இனிய வணக்கம்..

வணக்கம் வாங்க நீங்க என்னதான் சன்னதம் ஆடினாலும் நிர்வாகம் உள்ள விட்டாத்தான் உங்களுக்கு ஆட்டம். :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்க

வணக்கம் வாங்க நீங்க என்னதான் சன்னதம் ஆடினாலும் நிர்வாகம் உள்ள விட்டாத்தான் உங்களுக்கு ஆட்டம். :blink:

அரிச்சுவடியிலையே நல்லா ஆடுறிங்க....சன்னதம்

  • தொடங்கியவர்

புத்தன், ரவுடி, ஆதிவாசி, ஜீவா உங்கள் வரவேற்புக்கு நன்றிகள் பல.

அரிச்சுவடியில் சன்னதம் ஆடுகிறேனா? :blink:

சன்னதமாரி என்ற பேரை வைத்து சொல்கிறீர்களோ? :(

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் உங்களை போன்ற உறுதியானவர்கள்தான் இப்போது தேவை.....

எல்லாம் ஏதோ ஒரு குழப்பநிலையில் இருக்கிறார்கள்.... இதை பயன்படுத்தி சிலர் முதல் குண்டு எறிந்தவரை எனக்குத்தான் தெரியும் ஆகவே நான்தான் இனி தமிழருக்கு உகந்த தலைவன் என்ற தோரணையில் எழுதுகிறார்கள்................... தலைவன் இருந்தபோதும் எம்மோடு இருக்கவில்லை வனத்திலும் வயலிலும்தான் இருந்தான் ஆனாலும் முழுவதுக்கும் அவனே அதிபதியானான். அவன் இல்லாது போனாலும் அவனது நிழலே உண்மையான தமிழரை வழிநடத்தும்.

ஆனாலும் சந்துபோக்கில் ஏறி உட்கார்ந்துவிடலாம் என்று அடம்பிடிக்கின்றார்கள் பலர். துடைத்தெறிந்துவிட்டு தொடரவேண்டிய ஒரு காலத்தில் நாம் நிற்கிறோம். உங்களைபோன்றவர்களின் உறுதியான வார்த்தைகள்தான் பலரையும் தட்டி எழுப்ப வேண்டும்...... பல கோமாளிகளின் வாயை அடைக்க வேண்டும். வாருங்கள் தொடருங்கள்!

  • தொடங்கியவர்

மூன்று கருத்தெழுதினால் மற்றைய இடங்களிலும் எழுதலாம் என்று பதிவு செய்யும்போது உங்களுடைய விபரக் கோர்வையில் சொல்லியிருந்தது ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. கருத்தெழுதுவதற்கு கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளை கடைப்பிடித்தும் உள்ளே அனுமதிக்க அதிகமாக யோசிக்கிறீர்கள் போல் இருக்கிறது. இதுவரை அனுமதித்த உங்கள் நிர்வாகத்திற்கும், வரவேற்கத் துணிந்த உறவுகளுக்கும் நன்றி வணக்கம்.

எனது இப்பதிவுடன் என்னுடைய பதிவை இந்த அரிச்சுவடியில் இருந்து அகற்றி விடவும்.

  • தொடங்கியவர்

தெருவோடு போனவர்கள் சொன்னது நிர்வாகத்திற்குக் கருத்துப் புரியவில்லையாம்????

வணக்கம்

அவதாரம் - சன்னதமாரி (சக்தியின் அவதாரம்)

கொள்கை – ஒப்பாரி ( கிராமியக் கலை வடிவம்)

இனம் - கருமாரி (சக்தியின் இன்னொரு வடிவம்)

நிலை – உருவேறி (கலை வந்த சக்தி)

பிடிச்ச பொருள் - வேப்பிலை(மருத்துவக் குணம் நிறைந்தது)

பிள்ளைகள் பலதும் - நாதாரி (நாவிற்கு உரியவர்கள்)

அனுபவ நிலை – செங்கமாரி (காய்ச்சலின் முற்றிய நிலை)

மொத்தத்தில் மலைநீலி

இதுதான் அறிமுகம்.

விளக்கம் தந்துவிட்டேன் குழப்பம் தெளிந்து கொள்ளுங்கள்.

மருதங்கேணி சன்னதமாரிக்கு சருகுகளையும் தெரியும். சகாப்தங்களையும் தெரியும்.

:lol: வணக்கம் வாங்கோ.....
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்பத்தான் ஆடுறீங்க பயமாயிருக்கு

  • தொடங்கியவர்

விடலை செயலாளன் சின்னப்பு எல்லோருக்கும் நன்றி சின்னப்பு என்னை ராசா என்று அழைத்திருக்கிறீர்கள் நான் ஆண் அல்ல பெண்.

நிலாமதியக்கா பெயரை மாற்றி வேறு பெயரில் வாருங்கள் என்று சின்னதாகச் சிபார்சு செய்திருக்கிறார். ஏன் இந்தப் பெயரில் வருவதால் யாழ்க்களத்தில் கருத்தாட முடியாதா? நீண்ட மௌனத்தை நிர்வாகம் கடைப்பிடிக்கிறது. இதுவரைக்கும் உள் நுழைந்து எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. எங்கும் தவறுதலாகக் கூட எழுதவில்லை. நேற்று வந்த குளிரும் உள்நுழைந்து இலகுவாக எழுதுவதைப் பார்த்தால் யாழ்க்களம் ஒரு சிலருக்குள் மட்டுப்படுத்தப்பட்டதா எனும் கேள்வி முளைக்கிறது.

???????????

யாழ்க்களத்தில் எழுதுவதற்கு ஏதாவது சலுகை செய்ய வேண்டுமா? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சன்னதமாரி. மோகன் அண்ணாவுக்கு ஒரு மடல் போடுங்கள். உங்களை அனுமதிப்பார் உள்ளே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.