Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர் மனையேறியே உறங்குவதாய் சபதம் எடு. - வல்வை சகாறா -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணெதிரே கலையுமா கனவு?

மண்ணெனவே உதிருமா மனது?

நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம்

ஒப்பேற முன்னரே உருகியா போகும்?

இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட

மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை?

இது காலச்சுழி

சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது.

சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும்.

தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும்.

நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும்.

மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும்.

மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும்.

உறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும்.

இன்றைய பொழுதுகள் எமக்கானவை.

ஊர்கூடி இழுத்த விடுதலைத்தேர்

முக்காற்சுற்று முடித்துவிட்டது.

சில அதிவிவேகிகள் ஆரம்பப் புள்ளிக்கு

பின்னோக்கி விட்டதென்று அதிவேகமாக அலம்புகின்றர்.

காது கொடுக்காதே கலங்கிப் புலம்புவாய்.

நம் கையில் வாழ்வு வசப்பட்டே ஆகவேண்டும்.

மாவீரத்தோள்கள் சுமந்த வரலாற்றை

முனை கூர்த்தி நகர்த்தியே தீரவேண்டும்.

ஆழக்கிணறு வெட்டி ஊற்றுவாயை அண்மித்துவிட்டு

உடல் நோகுதென்று உடைந்து போகக் கூடாது.

வெம்பிச் சோர்தல் வேதனையைத் தீர்க்காது.

என்ன இருக்கிறது?

எல்லாம் துடைத்தழித்து நகைக்கிறது பகைமுகம்.

உயிர்கூடு ஒன்றுதான் மீந்துபோய் உள்ளது.

அச்சப்பட்டதற்காய் அங்கெவரும் காப்பாற்றப்படவில்லை.

அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளர்.

உறவுகளைத் தினம் நினைத்து நீ உக்கி கிடப்பதனால்

உந்தி எழும் வல்லமையின் உறுதியை தொலைத்துள்ளாய்.

கண்ணுக்குத் தெரியாமல் பகை உன்னைக் கட்டிப்போட்டுளது.

மெய்யுரைத்துத் தீக்குளிக்கும் தைரியம் பெறு.

புலத்திற்குள் பொருந்திக் கொள்.

புலன் தெளிவுறு.

உன் புன்னகையைப் பறித்துப் புதைகுழியில் இட்டோர்க்கு

எண்ணிப்பார்க்காத கண்டத்தை உருவாக்கு.

கால எழுதியிடம் புதுக் கணக்கை திற.

ஊர் மனையேறியே உறங்குவதாய் சபதம் எடு.

ஏழ்புரவி ரதத்தினிலே எழும் தேவன்

பஞ்சபூதங்களாய் பலவழிகள் திறந்துள்ளான்.

அவன் ஆசி பெற்ற பெரும் யாகமிது.

அழிவுற்றுப் போகாது.

பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே!

உன்னை இனி நானே பாடுவேன்.

அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த

என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை

உன்னை இனி நானே பாடுவேன்.

என்வேர் மடியைக் கிழிந்துவதம் செய்யும்

கொடும் பகையே உனை எதிர்க்க நானே கோலோச்சுவேன்.

விழுதனைத்தும் பிணைத்து வேர்நிலத்தில் ஆழப்படர்த்தி

மீண்டெழும் மிடுக்கை மிகைப்படுத்துவேன்.

புலம்பெயரிதான் இருப்பினும் என் பொல்லாப் பொறியின்

கூர் உனை பொசுக்கும்.

Edited by valvaizagara

அழகான வரிகள்.

கவிதையில் புகுத்தியிருக்கும் சொற்கள்.......... தாங்கள் கவிதையில் சிறப்புமிக்கவர் என்பதை ஒவ்வொரு வரிகளும் சொல்லுகின்றன.

வாழ்த்துக்கள்.

ஒரே ஒரு சந்தேகம். கேட்கலாமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாராளமாக கேளுங்கள் கறுப்பி தீர்க்க முடிந்தால் தீர்த்து வைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எழுதும்போது முற்றுப்புள்ளி இடலாமா?

கேள்விக்குறியும் தான்.

எனக்கு தெரியவில்லை.

அதுதான் கேட்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மரபுக்கவிதைகளில் பாவிப்பதில்லை என்றே நினைக்கிறேன். வசனக்கவிதைகளில் பாவிக்கலாம் என்று எண்ணுகிறேன். கறுப்பி ஒரு ரகசியம் நான் இலக்கணம் படித்துக் கவிதை எழுதவில்லை அதனால் எனக்கு இந்த வித்துவச்சிக்கல்கள் ஏற்பட்டதில்லை. எனக்கு கருத்துகளைச் சொல்ல ஒரு வடிவம் தேவைப்பட்டது. அவற்றை உரை நடைக்கவிதையில் எழுதுவது எனக்குச் சுலபமாக இருக்கிறது. கேள்விக்குறி , முற்றுப்புள்ளி என்பவற்றை இவற்றில் இணைக்கலாமா இல்லையா என்பது உண்மையில் எனக்குத் தெரியாது. யாராவது பண்டிதர்கள்தான் தெளிவுபடுத்தவேண்டும். ஒரு வேளை டங்குவாருக்குத் தெரியலாம் கேட்டுப் பாருங்கள் கறுப்பி.

எனக்கு உங்களின் பதிலை பார்த்தவுடன் சிரிப்பு வந்து விட்டது , டங்குவார் தமிழில் அவ்வளவு புலமை உள்ளவரா ? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணெதிரே கரைய(யு)மா கனவு?>>>

மண்ணெனவே உதிருமா மனது?

நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம்

ஒப்பேற முன்னரே உருகியா போகும்?

இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட

மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை?<<<<

மிக நல்ல கேள்வி சகாரா அக்கா. 'நம்பிக்கை ஒன்றேதான் வாழ்வெனக்கொள்ள வேண்டும்" வெற்று எதிர்பார்ப்புகள் வெறுமையை மட்டுமே தந்துவிட்டுப்போகும்! 'கொஞ்சம் தளர்ந்தாலே ஏறி மிதித்துவிட்டுப்போகும் உலக நடைமுறையில் தள்ளாடிவிழுந்தால் என்னவெல்லாம் சொல்லும் இந்த உலகம் என்பதை மிக அழகாக அடிக்கோடிட்டு காட்டி இருக்கின்றீர்கள்.

'ஏன் இத்தனை இழப்புக்கள்? ஏன் இந்தப்பின்னடைவு? என்ற ஆராய்ச்சிக்கட்டுரைகள் இப்போது வெறும் வாய்க்கு கிடைத்த அவலும் சர்க்கரையுமாகிவிட்டது.

*************பொன்னள்ளிச் சொறி(ரி)யும் பெரியதேவனே!

பொன்னள்ளிச் சொறி(ரி)யும் பெரியதேவனே!

உன்னை இனி நானே பாடுவேன்.

அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த

என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை

உன்னை இனி நானே பாடுவேன்.

*******************

இடர்களும் இடைக்கிடை வரவேண்டும். அப்போதுதான் பொய்முகங்களின் முகமூடி கிழித்தெறியப்படும். நோவு கண்ட பின்னர் தான் மேனியில் கவனம் கூடும். சில தளர்வுகள் நம்மை தாழ்ந்து போகவல்ல!! ...நம்மை நிலை நிறுத்திக்கொள்ளவே அதிகமாய் உதவுகின்றது. 'விடுதலை என்னும் பெருநெருப்புக்கு ஆகுதியாய் தம் உயிர் கொடுத்தவர்களின் அர்ப்பணிப்புகள்" அர்த்தமின்றிப்போகாது.

வரலாற்றில் பொறிக்கப்படும் எம்மவர்கள் வீரம். அதற்கான விலைதான் மிக அதிகமாகிவிட்டது.

****

வெல்வோம்! வெல்வோம்! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணெதிரே கரைய(யு)மா கனவு?,,,

திருத்திவிட்டேன் தமிழ்த்தங்கை

ய..... யு

றி....... ரி

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா உங்கள் வலைப்பூவிலும் இதே எழுத்துப்பிழைகள் உள்ளது..தமிழ்மணத்தில் அனேகமானவர்கள் அமனைப்பார்ப்பார்கள் எனவே அங்:கும் திருத்தி விடுங்கள்..நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை தமிழ்த்தங்கை திருத்திவிட்டார்.

கவலையீனப்பிழைகள் அதிகரித்துவிட்டன சாத்திரி. :)

ஒரே சமயத்தில் இருவிடங்களிலும் பதிவு செய்வதால் ஏற்பட்டுவிட்டது.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு :lol:

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

*******************

இடர்களும் இடைக்கிடை வரவேண்டும். அப்போதுதான் பொய்முகங்களின் முகமூடி கிழித்தெறியப்படும். நோவு கண்ட பின்னர் தான் மேனியில் கவனம் கூடும். சில தளர்வுகள் நம்மை தாழ்ந்து போகவல்ல!! ...நம்மை நிலை நிறுத்திக்கொள்ளவே அதிகமாய் உதவுகின்றது. 'விடுதலை என்னும் பெருநெருப்புக்கு ஆகுதியாய் தம் உயிர் கொடுத்தவர்களின் அர்ப்பணிப்புகள்" அர்த்தமின்றிப்போகாது.

வரலாற்றில் பொறிக்கப்படும் எம்மவர்கள் வீரம். அதற்கான விலைதான் மிக அதிகமாகிவிட்டது.

****

வெல்வோம்! வெல்வோம்! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

வலைப்பூவிலும் எழுத்துப் பிழைகளைத் திருத்த முனைந்ததில் நன்றி சொல்ல மறந்துவிட்டேன் தமிழ்த்தங்கை உங்கள், வரவிற்கும், பதிவிற்கும் திருத்தத்தைச் சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி உரைக்கின்றேன்.

எனக்கு உங்களின் பதிலை பார்த்தவுடன் சிரிப்பு வந்து விட்டது , டங்குவார் தமிழில் அவ்வளவு புலமை உள்ளவரா ? :lol:

தமிழ்சிறீ டங்குவாரிடம் ஆழ்ந்த தமிழ் இருப்பது மட்டுமல்ல இலக்கணமும் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

-----

நீங்கள் சொன்னால் சரி வல்வைசகாரா , நான் இவ்வளவு நாளும் டங்குவாரை ஒரு லொள்ளு பாட்டி என்று நினைத்து விட்டேன் . :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது காலச்சுழி

சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது.

சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும்.

தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும்.

நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும்.

:lol:

இந்த வரிகள் நிதர்சனமானவை.

சிங்களம்+இந்தியா எனும் சுழியின் வேகம் நிச்சயமாய் ஒரு நாள் குறையும். ஆனால் அது உடனடியாக நடக்காது. 2017 வரை கூட நீளலாம். ஏன் 2017 என்று சொல்கிறேன் என்றால் மகிந்தவின் இரண்டாவது ஜனாதிபதிக் காலம் முடிவுறும் தருணம் அது. அடுத்த ஜனாதிபதி கோத்தபாயவா அல்லது மகிந்தவின் மகனா அல்லது அரசியலமைப்பை 2/3 பெரும்பான்மையோடு மாற்றுவதன் மூலம் தொடர்ந்தும் மகிந்தவா? இப்படி மகிந்தவின் குடும்பத்துக்குள்ளே குத்துவெட்டு வர நிறைய வாய்ப்பிருன்கின்றது. இப்போது போல் சிங்களம் மகிந்தவை தலையில் தூக்கி வைத்திருக்கப் போவதுமில்லை.

இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில் கிழநரி இன்னும் பல காலம் உயிரோடிருக்கப்போவதில்லை.

உலக ஒழுங்குகளும் மாறும்.

ஆனால் இவையெல்லம் மாறும் போது நாம் விடுதலை உணர்வோடும், தமிழுணர்வோடும், மாவீரர்களினதும் தேசிய தலைவனினதும் கனவை நனவாக்கும் வேட்கை கொண்டிருந்தால் மாத்திரமே எதனையும் செய்யமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

மரபுக்கவிதைகளில் பாவிப்பதில்லை என்றே நினைக்கிறேன். வசனக்கவிதைகளில் பாவிக்கலாம் என்று எண்ணுகிறேன். கறுப்பி ஒரு ரகசியம் நான் இலக்கணம் படித்துக் கவிதை எழுதவில்லை அதனால் எனக்கு இந்த வித்துவச்சிக்கல்கள் ஏற்பட்டதில்லை. எனக்கு கருத்துகளைச் சொல்ல ஒரு வடிவம் தேவைப்பட்டது. அவற்றை உரை நடைக்கவிதையில் எழுதுவது எனக்குச் சுலபமாக இருக்கிறது. கேள்விக்குறி , முற்றுப்புள்ளி என்பவற்றை இவற்றில் இணைக்கலாமா இல்லையா என்பது உண்மையில் எனக்குத் தெரியாது. யாராவது பண்டிதர்கள்தான் தெளிவுபடுத்தவேண்டும். ஒரு வேளை டங்குவாருக்குத் தெரியலாம் கேட்டுப் பாருங்கள் கறுப்பி.

பதிலுக்கு தாங்ஸ்.

டங்குவாரிடம் கேட்டுப் பார்ப்போம்.

எல்லாச் பெரும் சுழலையும் மாற்றலாம்... புலம் பெயர் தமிழ் மக்கள் நாம் அப்பாவி ஈழ மக்களைத் தூண்டி கவிதை எழுதுவதை விட்டு விட்டு எம் பிள்ளைகளையும் போருக்கு தயார் செய்து இங்கிருந்து அனுப்பினால் எல்லாச் சுழலையும் வென்று ஈழக் கொடி நாட்டலாம். இல்லை, எல்லாத்தையும் இழந்து வெள்ளம் நிறைந்து கால் வைக்கவும் இடமின்றி மலம் சூழ்ந்த இடத்தில் வாழும் மக்கள்தான் சுழலை வெல்ல வேண்டும் என நாம் நினைத்தால் ஒன்றுமே நடக்க போவதில்லை. மாறாக அப்படிப் பட்ட ஒரு சூழலைத் தந்த எதிரியுடன் சமரசம் செய்து அவர்கள் எடுக்கும் தீர்மானத்துக்கு நாம் சம்மதம் சொல்ல வேண்டி வரும்

கற்பனையை சுமக்கும் கவிதைகளுக்கும் வெறும் கனவுகளை சுமக்கும் கவிதைகளுக்கும் கால இடைவெளியில் பதில் கிடைக்கும்....

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

valvaizagara

இன்றைய பொழுதுகள் எமக்கானவை.

ஊர்கூடி இழுத்த விடுதலைத்தேர்

முக்காற்சுற்று முடித்துவிட்டது.

சில அதிவிவேகிகள் ஆரம்பப் புள்ளிக்கு

பின்னோக்கி விட்டதென்று அதிவேகமாக அலம்புகின்றர்.

காது கொடுக்காதே கலங்கிப் புலம்புவாய்.

யதார்த்தத்தைச் சொல்லி நிற்பதும் நம்பிக்கை தருவதுமான வரிகள்.....

மிக நன்று உங்கள் கவிதை......

  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு தாங்ஸ்.

டங்குவாரிடம் கேட்டுப் பார்ப்போம்.

ஆகா.. இப்பிடி ஏத்திவிட்டே உடம்பை ரணகளமாக்கிட்டாய்ங்களே..! :)

கேள்விக்குறி, ஆச்சரியக்குறி எல்லாம் போடுவாஙளெண்டு நினைக்கேல்லை..! கவிதை வரியே உணர்வுகளைச் சொல்லவேணும் அல்லோ..! சகாரா அக்காவின்ர வரிகள் உணர்வுகளை சரியாக் கொண்டுவருது..! பிறகு எதுக்கு கேள்விக்குறி முற்றுப்புள்ளியெல்லாம் போடுறா எண்டு தெரியேல்லை. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சஹாரா அக்கா.

ஒவ்வொரு வரிகளும் அருமை. நிதர்சனமான உண்மைகளை அப்படியே எழுதி உள்ளீர்கள்.

உண்மையில் இன்றைய இந்த அவலத்தால் துவண்டுபோய் இருக்கும் மக்களுக்கு தன்னம்பிகை ஏற்படுத்தும் கவிதை.

முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை நாம் அனைவரும் ஒன்றுபட்டால் நிச்சயம் நடக்கும்.

இன்று இல்லாவிடினும் 2,3 வருடங்கள் கழிந்த பின்னராவது எம்மினம் தன் தவறுகளை உணர்ந்து நிச்சயம் போராடும்.

ஆனால் அதுக்குள் அங்கு இருக்கும் உறவுகள் இருப்பினமோ இல்லையோ தெரியாது.

ஏனென்றால் மாவீரர்களினதும்,மக்களினதும் இறப்புக்கு நாம் அனைவருமே பதில் சொல்லியே ஆகவேண்டும். அவர்கள் வானத்திலிருந்து குதிக்கவில்லை. அவர்களும்

எம் உறவுகளே... உறவுகளை இழந்த தவிப்பு இன்று இல்லாவிடினும் என்றோ ஒரு நாள் இந்த பூகம்பங்களுக்கு எல்லாம் பதில் சொல்லும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:lol:

இந்த வரிகள் நிதர்சனமானவை.

சிங்களம்+இந்தியா எனும் சுழியின் வேகம் நிச்சயமாய் ஒரு நாள் குறையும். ஆனால் அது உடனடியாக நடக்காது. 2017 வரை கூட நீளலாம். ஏன் 2017 என்று சொல்கிறேன் என்றால் மகிந்தவின் இரண்டாவது ஜனாதிபதிக் காலம் முடிவுறும் தருணம் அது. அடுத்த ஜனாதிபதி கோத்தபாயவா அல்லது மகிந்தவின் மகனா அல்லது அரசியலமைப்பை 2/3 பெரும்பான்மையோடு மாற்றுவதன் மூலம் தொடர்ந்தும் மகிந்தவா? இப்படி மகிந்தவின் குடும்பத்துக்குள்ளே குத்துவெட்டு வர நிறைய வாய்ப்பிருன்கின்றது. இப்போது போல் சிங்களம் மகிந்தவை தலையில் தூக்கி வைத்திருக்கப் போவதுமில்லை.

இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில் கிழநரி இன்னும் பல காலம் உயிரோடிருக்கப்போவதில்லை.

உலக ஒழுங்குகளும் மாறும்.

ஆனால் இவையெல்லம் மாறும் போது நாம் விடுதலை உணர்வோடும், தமிழுணர்வோடும், மாவீரர்களினதும் தேசிய தலைவனினதும் கனவை நனவாக்கும் வேட்கை கொண்டிருந்தால் மாத்திரமே எதனையும் செய்யமுடியும்.

காட்டாறு

சுதந்திரம் என்றால் என்ன சுக்கா? மிளகா? சும்மா இருந்து பெற என்று ஏற்கனவே பாடியுள்ளார்கள். விடுதலை என்பது குறுங்காலத்தில் கிடைத்துவிடாது. நீண்ட காலஓட்டத்தை கொண்டதே உண்மையான விடுதலை. குறுகிய காலத்தில் ஒரு விடுதலை கிடைந்துவிடுமென்றால் அங்கு எந்த வகையிலும் போராட்டங்களுக்கு அவசியம் இல்லை. நீங்கள் கூறியதுபோல் உலக ஒழுங்குகள் மாறுதலடையும்போது அத்தருணங்களை நாம்பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவரையும் நாம் சிதறுண்டு போகாமலும், நம்பிக்கை இழக்காமலும் வாழும் பரிமாணம் பெறவேண்டும். இன்றைய நாட்களில் நம்பிக்கையூட்டலே வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னால் சரி வல்வைசகாரா , நான் இவ்வளவு நாளும் டங்குவாரை ஒரு லொள்ளு பாட்டி என்று நினைத்து விட்டேன் . :)

ஏன்யா தமிழ்சிறி.. நானே கொஞ்சம் கவிதை அது இதுவெண்டு பில்டப் பண்ணி வச்சிருக்கிறன்..! பொறுக்காதே உங்களுக்கு..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாச் பெரும் சுழலையும் மாற்றலாம்... புலம் பெயர் தமிழ் மக்கள் நாம் அப்பாவி ஈழ மக்களைத் தூண்டி கவிதை எழுதுவதை விட்டு விட்டு எம் பிள்ளைகளையும் போருக்கு தயார் செய்து இங்கிருந்து அனுப்பினால் எல்லாச் சுழலையும் வென்று ஈழக் கொடி நாட்டலாம். இல்லை, எல்லாத்தையும் இழந்து வெள்ளம் நிறைந்து கால் வைக்கவும் இடமின்றி மலம் சூழ்ந்த இடத்தில் வாழும் மக்கள்தான் சுழலை வெல்ல வேண்டும் என நாம் நினைத்தால் ஒன்றுமே நடக்க போவதில்லை. மாறாக அப்படிப் பட்ட ஒரு சூழலைத் தந்த எதிரியுடன் சமரசம் செய்து அவர்கள் எடுக்கும் தீர்மானத்துக்கு நாம் சம்மதம் சொல்ல வேண்டி வரும்

கற்பனையை சுமக்கும் கவிதைகளுக்கும் வெறும் கனவுகளை சுமக்கும் கவிதைகளுக்கும் கால இடைவெளியில் பதில் கிடைக்கும்....

நிழலி உங்கள் கருத்துரையைப் பார்த்தவுடன் மீண்டும் நான் என்ன எழுதியுள்ளேன் என்று மீண்டும் பார்த்தேன். நீங்கள் முழுமையான கவிதையையும் வாசித்துவிட்டுத்தான் இக்கருத்தைப்பதிந்தீர்களா? அல்லது இவர் இப்படித்தான் எழுதுவார் என்று ஒரு எனக்கான ஒரு ஐடியை மனதிற்குள்ளேளே போட்டுக் கொண்டு இக்கருத்தை எழுதினீர்களா?

valvaizagara

யதார்த்தத்தைச் சொல்லி நிற்பதும் நம்பிக்கை தருவதுமான வரிகள்.....

மிக நன்று உங்கள் கவிதை......

உங்கள் வரவிற்கும் பதிவிற்கும் நன்றி இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாச் பெரும் சுழலையும் மாற்றலாம்... புலம் பெயர் தமிழ் மக்கள் நாம் அப்பாவி ஈழ மக்களைத் தூண்டி கவிதை எழுதுவதை விட்டு விட்டு எம் பிள்ளைகளையும் போருக்கு தயார் செய்து இங்கிருந்து அனுப்பினால் எல்லாச் சுழலையும் வென்று ஈழக் கொடி நாட்டலாம். இல்லை, எல்லாத்தையும் இழந்து வெள்ளம் நிறைந்து கால் வைக்கவும் இடமின்றி மலம் சூழ்ந்த இடத்தில் வாழும் மக்கள்தான் சுழலை வெல்ல வேண்டும் என நாம் நினைத்தால் ஒன்றுமே நடக்க போவதில்லை. மாறாக அப்படிப் பட்ட ஒரு சூழலைத் தந்த எதிரியுடன் சமரசம் செய்து அவர்கள் எடுக்கும் தீர்மானத்துக்கு நாம் சம்மதம் சொல்ல வேண்டி வரும்

கற்பனையை சுமக்கும் கவிதைகளுக்கும் வெறும் கனவுகளை சுமக்கும் கவிதைகளுக்கும் கால இடைவெளியில் பதில் கிடைக்கும்....

நிழலி அண்ணா இதிலை போராட்டம் என்று ஆயுதப்போரை சொல்லவில்லையே. தனிய ஆயுதப்போராட்டம் மட்டும் தானா இருக்கு?

இல்லை ஒன்றும் வேண்டாம் பேசாமல் விட்டுவிடுவோம் என்கிறீர்களா?

சரி அப்படியே விட்டாலும் தமிழீழம் அல்லது தமிழ் மக்கள் நல்லா இருக்கணும் என்று மாவீரரான உறவுகளுக்கும் அப்பாவி மக்களின் மரணத்திற்கும் என்னையா பதில் சொல்வது?

(இங்கு நான் தனிய விடுதலைப் புலி போராளிகளை மட்டும் சொல்லவில்லை. ஆரம்ப காலங்களில் எத்தனையோ அமைப்புகளில் இருந்த ஆயிரக்கணக்கான உறவுகள் தமிழீழத்திற்காய்

உயிரை அர்ப்பணித்து உள்ளனர்)

சரி அப்படியே எதுவும் வேண்டாம் சிங்களவனோடு சேர்ந்து வாழலாம் என்றால் ஏன் இதை முதலிலேயே செய்திருக்க கூடாது. அத்தனை இயக்கங்களையும் வளர்த்து விட்டவர்கள் நாம் தானே.

அவர்களை போராட உசுப்பேத்தி விட்டு சும்மா இருந்த சுயநலவாதிகள் தானே நாம்.??

இன்றைய நிலமைக்கும்,இத்தனை போராளிகளினதும்,மக்களின் இழப்புக்கும் நாம் ஒவ்வொருவரும் தான் காரணம்.

சரி இத்தனை இழப்புக்கு பின்னும் நாம் சும்மா இருந்தால் என்ன செய்ய...?

இறந்தவர்கள் எல்லாம் பாவப்பட்டவர்கள் என்று பரிதாப்பட வேண்டியது தான்.

இத்தனை இழப்புக்கு பின் தான் நாம் சிங்களவனோடு சேர்ந்து வாழ்ணும் என்றால் என்ன செய்ய?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. இப்பிடி ஏத்திவிட்டே உடம்பை ரணகளமாக்கிட்டாய்ங்களே..! :)

கேள்விக்குறி, ஆச்சரியக்குறி எல்லாம் போடுவாஙளெண்டு நினைக்கேல்லை..! கவிதை வரியே உணர்வுகளைச் சொல்லவேணும் அல்லோ..! சகாரா அக்காவின்ர வரிகள் உணர்வுகளை சரியாக் கொண்டுவருது..! பிறகு எதுக்கு கேள்விக்குறி முற்றுப்புள்ளியெல்லாம் போடுறா எண்டு தெரியேல்லை. :lol:

டங்குவார் இவற்றைப் போடலாமா போடக்கூடாதா என்பதெல்லாம் தெரிந்தால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்திருப்பேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சஹாரா அக்கா.

ஒவ்வொரு வரிகளும் அருமை. நிதர்சனமான உண்மைகளை அப்படியே எழுதி உள்ளீர்கள்.

உண்மையில் இன்றைய இந்த அவலத்தால் துவண்டுபோய் இருக்கும் மக்களுக்கு தன்னம்பிகை ஏற்படுத்தும் கவிதை.

முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை நாம் அனைவரும் ஒன்றுபட்டால் நிச்சயம் நடக்கும்.

இன்று இல்லாவிடினும் 2,3 வருடங்கள் கழிந்த பின்னராவது எம்மினம் தன் தவறுகளை உணர்ந்து நிச்சயம் போராடும்.

ஆனால் அதுக்குள் அங்கு இருக்கும் உறவுகள் இருப்பினமோ இல்லையோ தெரியாது.

ஏனென்றால் மாவீரர்களினதும்,மக்களினதும் இறப்புக்கு நாம் அனைவருமே பதில் சொல்லியே ஆகவேண்டும். அவர்கள் வானத்திலிருந்து குதிக்கவில்லை. அவர்களும்

எம் உறவுகளே... உறவுகளை இழந்த தவிப்பு இன்று இல்லாவிடினும் என்றோ ஒரு நாள் இந்த பூகம்பங்களுக்கு எல்லாம் பதில் சொல்லும்.

உண்மைதான் ஜீவா இன்று நாங்கள் துவளும் பொழுதுகள் ஒவ்வொன்றும் எத்தனையோ உறவுகளை இறப்புகளுக்கும், வாழமுடியாச் சிதைவுகளுக்கும் உட்படுத்துதல்களுக்கு துணைபோய்கொண்டிருக்கும் தருணங்களாகவே இருக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாச் பெரும் சுழலையும் மாற்றலாம்... புலம் பெயர் தமிழ் மக்கள் நாம் அப்பாவி ஈழ மக்களைத் தூண்டி கவிதை எழுதுவதை விட்டு விட்டு எம் பிள்ளைகளையும் போருக்கு தயார் செய்து இங்கிருந்து அனுப்பினால் எல்லாச் சுழலையும் வென்று ஈழக் கொடி நாட்டலாம்.

ஒரு பேச்சுக்கு எல்லோரும் படையெடுத்து போகின்றோம் என்று வைத்துக்கொண்டால் கூட இப்போதிருக்கும் சிங்கள இராணுவம் அவ்வளவு பேரையும் இப்படி என்பதற்குள் அழித்துவிடும். Command இல்லாமல் எத்தனை பேர் சேர்ந்தாலும் அது ஒரு இராணுவமாக மாறமுடியாது. எமது இராணுவக் கட்டமைப்பு மே 15/16, 2009 அன்றே முடிந்துவிட்டது.

இல்லை, எல்லாத்தையும் இழந்து வெள்ளம் நிறைந்து கால் வைக்கவும் இடமின்றி மலம் சூழ்ந்த இடத்தில் வாழும் மக்கள்தான் சுழலை வெல்ல வேண்டும் என நாம் நினைத்தால் ஒன்றுமே நடக்க போவதில்லை.

எந்த ஒரு புத்தி உள்ள மனிதனும் வன்னி மக்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை செய்யவேண்டுமெனச் சொல்லமாட்டான். ஆனால் விடுதலை உணர்வையோ, நம்பிக்கையையோ மக்கள் இழந்துவிடக்கூடாது. இது புலத்துக்கும் பொருந்தும். தாய் நிலத்துக்கும் பொருந்தும். ஏனெனில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வில் தான் எல்லம் தங்கியுள்ளது. இன்றுள்ள மாதிரியானதொரு மோசமான நிலை வருமென்று என்றாவது எண்ணிப் பார்த்திருப்போமா? இல்லையே! அதேபோல் வரும் காலங்களில் என்ன நடக்குமென யாராலும் சொல்லமுடியாது. எனவே விடுதலை உணர்வை இழக்காமல் இருப்போம். எமதினத்தின் இருப்பை உறுதிசெய்வோம். எமது மொழியை காப்போம். அதற்கு மேல் காலம் பதில் சொல்லட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.