Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடவுள் உண்டா, இல்லையா?

Featured Replies

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

கடவுள் உண்டா, இல்லையா?

("சைவம்" 1917 டிசம்பர் மாத இதழில் இடம் பெற்ற கட்டுரை)

swamiambal2.jpg

லகத்திற்குக் கர்த்தாவாகிய கடவுள் ஒருவர் உண்டா, இல்லையா என்னும் இக்கேள்விக்கு ஆத்திகர் பலர் உண்டு என்கிறார்கள். நாத்திகர் இல்லை யென்கிறார்கள். ஆத்திகரும் நாத்திகருமல்லாத சந்தேகவாதிகள் உண்டு என்பாரை நோக்கி "கடவுள் இருந்தால் காட்டுங்கள்" என்கிறார்கள். ஆத்திகர் பலர் மற்ற இருதிறத்தார்க்கும் கடவுளைக் காட்டவேண்டி மிகவும் பிரயாசைப்படுகிறார்கள். ஆனால், ஆத்திகர்களுள் சைவர்களாகிய நாம் அக்கேள்விக்கு உண்டு என்றேயாவது இல்லையென்றேயாவது சொல்வதில்லை. பின் என் செய்வோமென்றால் மெளனமாயிருந்து விடுவோம். அல்லது, "உண்டு என்பவர்களுக்கு உண்டு, இல்லை யென்பவர்களுக்கு இல்லை" என்று சொல்வோம். நாம் மெளனமாயிருப்பதே அவர்கள் கேட்கும் கேள்விக்கு முதலில் அளிக்கும் விடையாகும். அவ்விடையின் கருத்தையறியாமலே அவர்கள் தாம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லமாட்டாமல் சும்மாவிருப்பதாக எண்ணிக்கொள்ளக்கூடும். நாம் "கடவுள் உண்டு என்பவர்க்கு உண்டு, இல்லை யென்பவர்க்கு இல்லை" என்று சொன்னால், அவர்கள் கைகொட்டி நகைத்து, "இது கோமுட்டி சாஷி சொன்னதுபோலாம். ஏக காலத்தில் உள்ளதாகவும் இல்லாததாகவும் இருக்கும் ஒருபொருளை நாம் எங்கும் கண்டதில்லை. அவ்வாறான பொருள் ஒன்றிருக்கும் என்பது மலடி மக்களைப் பெற்றாள், குருடன் கண்ணாரக்கண்டான், செவிடன் காதாரக்கேட்டான், முயலின் கொம்பு மூன்று முழ நீள மிருக்கும், என்பன போல் பொருளில்லாதனவாகிய வெறுஞ் சொற்களாம்" என்பார்கள். ஆதலால் நாம் அவர்களுக்களிக்கும் விடைகள் இரண்டனுள் முன்னே முதலில் அளிக்கும் மெளன விடையின் கருத்தை விளக்குவோம்.

  • தொடங்கியவர்

நாம் எதையும் மனம் வாக்குக் காயங்களாகிய திரிகரணங்களைக் கொண்டு அறிகிறோம். திரிகரணங்கள் சடப்பொருள்கள். சடப்பொருள்களைக் கொண்டு சடப்பொருள்களை யறியக்கூடுமேயன்றி சித்துப்பொருளாகிய கடவுளை யறிய முடியாது. திரிகரணங்களால் கடவுளை அறியக்கூடுமாயின் கடவுள் என்பது சடப்பொருள்களுள் ஒன்றாய்விடும். அன்றியும், கடவுள் என்னுஞ் சொல்லுக்குக் "கடந்துநிற்றலையுடையது" என்பது பொருள். எதைக் கடந்து நிற்றலையுடையதெனில் தத்துவங்களைக் கடந்து நிற்றலையுடைய தென்போம். எனவே, தத்துவாதீதமாயிருக்கும் பொருள் எதுவோ அது கடவுள் என்பது பெறப்பட்டது. மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றும் திரிகரணங்கள் என்ப்படும் தத்துவங்களாம். ஆதலினால் மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் அறியப்படாத பொருள் எதுவோ அது கடவுள் என்பது பெறப்பட்டது. அத்தகைய பொருளை நாத்திகர் காட்டச் சொல்வது அவர்கள் "மனம் வாக்குக் காயங்களால் அறியக் கூடாத பொருளை நாங்கள் எங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம்வாக்குக் காயங்களைக் கொண்டு காட்டுங்கள்" என்று கேட்பது போலாம். இக்கேள்வி மூடக்கேள்வியாகையால், அவ்வாறு கேட்கும் மூடர்களைத் தெருட்டுவது எவ்வாற்றானும் கூடாதென்பதை யுன்னியே நாம் முதலில் அவர்களுடன் உரையாடாமல் மெளனமாயிருப்பது.

  • தொடங்கியவர்

உரையுணர்விறந்த ஒருபெரும்பொருளே கடவுள் ஆதலால் அப்பொருளை உரையும் உணர்வும் அற்ற நிலையினரே அறிதற்பாலார். ( இவ்விடத்தில் உணர்வு என்பது சடப்பொருளாகிய கரணங்களாற் சுட்டியறியும் அறிவை). உரையுணர்வற்ற நிலையே மனமும் வாக்கும் இறந்த நிலையெனவும், பரமஞான நிலையெனவும் மோன நிலையெனவும் சொல்லப்படும். இது மோனமென்பது " ஞான வரம்பு" என்பதனால் உணரப்படும். அந்நிலை கடவுளோடு அது வதுவாய் (அத்துவிதமாய்) இருந்து இன்பம் நுகர்வதாகிய அநுபவ மாத்திரமா யிருப்பதன்றி, வாயினாலெடுத்துரைக்கப்படுவத

கடவுளைக் காட்ட முடியாது என்ற கருத்தினை நிராகரிக்கிறேன். பல்லாயிரக் கணக்கான பக்தர்களுக்குக் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் கலியுகக் கடவுளான ஸ்ரீ சத்ய சாய் பாபா, டென்மார்க்கில் கோயில் கொண்டுள்ள அபிராமி அம்மன், பக்தர்களின் வேண்டுகோள்களை இமைப்பொழுதில் நிறைவேற்றும் சக்திகொண்ட அம்மா பகவான் போன்ற கடவுள்களைப் பற்றி நீங்கள் அறிந்ததில்லையா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவேகானந்தர் 2 கேள்விகள் கேட்டார்.

1) நீ கடவுளை கண்டாயா?

2) உன்னால் எனக்கு காட்டித்தர முடியுமா?

இரண்டு கேள்விகளுக்கும் இராமகிருஸ்ணர் ஆம் என பதில் அளித்தார்.

அவ்வளவுதான் தேவை.

உள்ளே உள்ள கடவுளை (கட உள்) காண்பது சுலபம்.

காட்டித் தரவல்ல ஒரு குரு மட்டும் தான் தேவை.

பேச்சளவில் அல்ல. செயலளவில்.

அருமையான வீடியோவை பார்வையிட....

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இருக்கிறார் / இல்லை.. என்கிற முடிவற்ற விவாதத்தை விட்டுவிடுவோம்..! கடவுளை வணங்குவதால் பலன் உண்டா இல்லையா? உண்டெனில் எவ்வகையான நன்மைகள் விளையும் என்பதை உறுதிப்படுத்தப்பட்ட முன்னுதாரணங்களுடன் விளக்கவும்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல செய்திகளையும் தகவல்களையும் அதுனுடு எதிர்கால வாழ்வை சிறப்பிக்க கூடிய விடயங்களை தர கூடிய ஒரு நல்ல விவாதத்திற்கு நீங்கள வித்திட்டுள்ளீhகள் ஆனால் இனி தொடாந்து வருவோர்கள் எந்த திசையில் எமை கூட்டி செல்வார்களோ தெரியவில்லை.

நான் கடவுளை நம்புவதில்லை. அதிகமாக டார்வினின் பகுத்தாய்வையே நம்புகிறேன் அதை ஆதாரங்களுடன் காண்கிறேன் அதை நம்புவதற்கு அதுவே காரணமாக இருக்கின்றது.

............. இருப்பினும் எனது சொந்த அனுபத்தினுடாக பார்த்தால். கடவுளை வணங்குவது பயன்தர கூடியது என்றே நான் சோல்வேன். ஒரு 10 வருடங்களுக்கு முன்புவரையில் கடவுளை நம்பினேன் அல்லது சுற்றம் சூழலின் பாதிப்பால் சைவமதத்தை பின்பற்றினேன். பின்பு பாடபுத்தகங்களின் தரவுகளாலும் கடவுள் இருக்கின்றாரா? இல்லையா என்ற சந்தேகத்தினாலும் எனது மனதிற்கு ஒரு முடிவை கொடுக்க வேண்டிய தேவை எனது அறிவுக்கு ஏற்பட்டபோது மதம் சார்ந்த புத்தகங்களையும் அதை மறுப்வர்களின் வாதங்களையும் தேடி தேடி வாசித்தேன் பின்பு எனது மனமும் தானாகவே கடவுள் நம்பிக்கையை இழக்கதொடங்கிவிட்டது. இப்போது கடவுள் இல்லை எனும் ப+ரண முடிவிற்கு வந்துவிட்டேன்.

கடவுளை நம்பிய காலங்களை நான் இரை மீட்கும்போது......... எனது மனதிற்குள் ஒரு பயம் எப்போதுமே குடிகொண்டிருந்தது. அதன் காரணமாக பவங்களின் பக்கம் நான் திரும்பாது இருந்தேன் என்பது எனது சொந்த அனுபவத்தின் உண்மை. தவிர காலையில் குளித்தல் மாலையிலும் கடவுள் வணக்கத்திற்கு முன்மு உடல் கழுவுதல் போன்றவை எனது உடலை நோய்வராதும் தடுத்துவந்தன என்றும் நம்புகிநேன். தூய்மை என்னோடு ஒட்டியிருந்ததாக உணருகின்றேன் தவிர கோவில் பணிகள் கோவிலை சுற்றியமைந்த வாழ்க்கை என்பன தீயவை தீண்டாமல் என்னை பாதுகாத்தது என்றும் நான் நினை;கிறேன்.

ஆனால் அதே நேரம் இளவயதில் யாரும் தவறுகளை அதிகம் இழைப்தில்லை. பின்பு வயது வந்ததுதம் அவர்களை நோக்கிய கட்டுபாடுகள் கொஞ்சம் தளர்கின்றன. அப்போதுதான் சிகரட்பிடித்தல் மது அருந்துதல் போன்றவை கவர்சியை கொடுத்து தீயன பக்கம் இழுக்கின்றது. நான் சொல்லவரும் விடயம் மதம்தான் எனை சீர்படுத்தியதா? என்றால் ஆம் என்று எடுத்த எடுப்பில் என்னால் கூறிவிட முடியுமா தெரியவில்லை. ஆனால் மதமும் என்று என்னால் நிற்சயமாக கூற முடியும்.

  • தொடங்கியவர்

நன்றி நண்பர்களே!

ஒருவன் மரணாவஸ்தைப்படும்போது அவனுடைய சுற்றத்தார்கள் அவனைநோக்கி "அப்பா, நீபடும் வேதனையை நாங்கள் அறியச் சொல்" என்று கேட்டால் அவன் "ஐயோ, நான்படும் வேதனையை உங்களுக்கு எவ்வாறு தெரிவிப்பேன்" என்றான். இப்படியே ஸ்திரீ புருஷர்கள் ஒருவரை யொருவர் மருவி அனுபவிக்குங் கலவி யின்பத்தைப் பிறர்க்குச் சொல்ல இயல்வதில்லை. இச்சிற்றன்பமும் அனுபவமாத்திரமாயிருப்பது மாத்திரமின்றி, அதற்குரிய பருவம் வந்தபிறகே அனுபவத்திற்கு வருகிறது. இதனை "கன்னிகை யொருத்தி சிற்றின்பம் வேம்பெனினுங் கைக்கொள்வள் பக்குவத்தில், கணவனருள் பெறின் முனே சொன்னவா றென்னெனக் கருதி நகையாவள்" என்னுந் தாயுமானசுவாமிகள் திருவாக்கும் உணர்த்தும். அதுபோல் பேரின்பமயமாயிருக்கும் கடவுளை மலபரிபாகம் பெற்ற ஞானிகளும் இரண்டறக்கூடி இன்ப மார்ந்திருப்பரேயன்றி பிறர்க்கெடுத்துரையார். ஆதலால், நாமும் நாத்திகர் கேட்கும் கேள்விக்கு விடை வாயினாற் சொல்லப்படுவதன்று என்பதைக் குறிப்பாய் உணர்த்தவேண்டி மெளனமாயிருந்து விடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகனாவலர்! நீர் ஏன் திண்ணைப் பள்ளிக்கூடம் நடாத்தினீர். அயலில் உள்ள கீழ்சாதிப்பிள்ளைகள் உமது வீட்டுக்குள் நுழையக்கூடாது என்பதற்க்குத்தானே. அதுக்குப் பிறகு என்ன கடவுளும் மசிரும். உம்மோட கடவுளை உம்முடன் வைத்திரும் இங்கு கொண்டுவந்து சாமியாட விடவேண்டாம். அப்புறம் நான் கடாவெட்ட ஆரம்பிச்சுடுவன். முருகனின் அவதாரம் எண்டுதானே நாம் தலைவரைக் கொண்டாடிணோம்? அவரை முள்ளிவாய்காலில் சரிச்சுப்போட்டாரே முருகன் அண்டையோட இந்த நாசமாப்போன கடவுளைக் கைவிட்டுட்டன்.

  • தொடங்கியவர்

இனி "கடவுள் உண்டு என்பவர்க்கு உண்டு, இல்லை யென்பவர்க்கு இல்லை" என்பதை விளக்குவாம். ஒருவன் தன் குழந்தையின் மீது வைத்த (பற்று எனப்படும்) அன்பினால் அக்குழந்தையைக் காணும்போதும், அதின் சொற்களைக் கேட்கும்போதும், அதைத் தீண்டும்போதும் இன்பம் அடைகின்றான். அவ்வாறே மனைவி மாடு வீடு முதலியவற்றினிடத்தும் வைத்த அன்பினால் இன்பம் அடைகின்றான். இதனால் பிரபஞ்சத்தில் உயிர்களுக்கு உண்டாகும் இன்பத்திற்குக் காரணம் பிரபஞ்சப்பொருள்களிடத்தில் வைத்த அன்பே என்பதும், அன்பு எங்கு உண்டோ அங்கு இன்பம் உண்டு என்பதும் விளங்கும். சிறியபொருளாகிய பிரபஞ்சத்தில் வைத்த அன்பினால் சிற்றின்பம் உண்டாவதுபோல் பெரிய பொருளாகிய கடவுளிடத்தில் வைத்த அன்பினால் பேரின்பம் தோன்றும். இதனை "அன்பினில் விளைந்தவாரமுதே" என்னுந் திருவாசகத்தாலுணர்க. இன்பம் கடவுளின் உருவமாதலாலும் அவ்வின்பம் அன்பினால் உண்டாவதனாலும், அன்பிலார்க்கு இன்ப முமில்லையாகையாலும், கடவுளை விசுவசித்து அன்புசெய்வார்க்கு அவர் உளராகவும், அன்பு செய்யாதவர்க்கு இலராகவுமிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆற்றினில் தன் நண்பர்களுடன் ரமேஷ் குளித்துக் கொண்டிருந்தான். ஆற்றினில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படவே நண்பர்கள் ஆற்றினில் இருந்து கரையேறினர். ஆனால் ரமேஷ் மட்டும் கரையேரவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. என்னை கடவுள் காப்பாற்றுவார் எனக் கூறிக் கொண்டு இருந்தான்.

தண்ணீர் அவன் இடுப்பளவு வந்துவிட்டது. அவனுடன் வந்த நண்பர்கள் அவனை கரையேறும்படி வற்புறுத்தினர். ஆனால் அவனோ எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. என்னை கடவுள் காப்பாற்றுவார் எனக் கூறிக் கொண்டு இருந்தான்.

தண்ணீர் அவன் மார்பளவு வந்துவிட்டது.நண்பனில் ஒருவன் கயிறு கொடுத்து காப்பாற்ற உதவினான்.ஆனால் அவன் வரவில்லை.

தண்ணீர் அவன் வாய் வரை வந்துவிட்டது.அவனுடன் வந்த நண்பர்களில் ஒருவன் கரையேறும்படி தான் கொண்டு வந்த சைக்கிள் டியூப்பினை அவனிடம் கொடுத்து கரையேறும்படி கூறினான்.

தண்ணீர் அவன் நெற்றியளவு வந்துவிட்டது.அவன் வானத்தை நோக்கி 'கடவுளே என்னைக் காப்பாற்று' எனக் கூறினான்.

அப்போது வானத்தில் தோன்றிய கடவுள் சொன்னார்.நான் உன்னைக் காப்பாற்றுவதற்காக முதலில் ஒருவனை அனுப்பினேன். நீ வரவில்லை.என் மீது அதிக பாசம் வைத்துள்ளதால் மீண்டும் ஒருவனை அனுப்பினேன். ஆனால் மீண்டும் நீ வரவில்லை. இதில் என் மீது எந்தக் குற்றமுமில்லை எனக் கூறினார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் என்று ஒருவர் இருக்கிற படியால் தானே உலகம் இயங்குகிறது.உதாரணத்திற்கு

மின்சாரம் இயக்குவதற்கு ஒருவர் இருப்பார் அது போல் தண்ணீர் வாட்டர் சப்ளை செய்ய ஒருவர்.

ஒரு ஊருக்கு ஒரு மந்திரி

ஒரு நாட்டுக்கு ஒரு ஜனாதிபதி இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வருவர் இருப்பது போல் இந்த உலகை இயக்குவதற்கு ஒருவர் இல்லாமலா இருப்பார்.

எங்கள் கண்முன்னே தெரிகிற சூரியக் கடவுளையே நாம் நேசிப்பதில்லை எவ்ளவு மின்சாரத்தை எமக்கு அளிக்கின்றார். ஒரு இரவில் ஒளியைத் தரும் மின்சாரத்திற்கு ஒவ்வெரு மாதமும் பணம் அனுப்புகிறோம்.ஒரு கும்பிடு போடுவதற்கு ஆராச்சி.

யார் ஒருவர் மற்றவர்களுக்கு நன்மை செய்கிறாரோ அவர் கடவுள்.

தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

-----

-----

கடவுளை நம்பிய காலங்களை நான் இரை மீட்கும்போது......... எனது மனதிற்குள் ஒரு பயம் எப்போதுமே குடிகொண்டிருந்தது. அதன் காரணமாக பவங்களின் பக்கம் நான் திரும்பாது இருந்தேன் என்பது எனது சொந்த அனுபவத்தின் உண்மை. தவிர காலையில் குளித்தல் மாலையிலும் கடவுள் வணக்கத்திற்கு முன்மு உடல் கழுவுதல் போன்றவை எனது உடலை நோய்வராதும் தடுத்துவந்தன என்றும் நம்புகிநேன். தூய்மை என்னோடு ஒட்டியிருந்ததாக உணருகின்றேன் தவிர கோவில் பணிகள் கோவிலை சுற்றியமைந்த வாழ்க்கை என்பன தீயவை தீண்டாமல் என்னை பாதுகாத்தது என்றும் நான் நினை;கிறேன்.

ஆனால் அதே நேரம் இளவயதில் யாரும் தவறுகளை அதிகம் இழைப்தில்லை. பின்பு வயது வந்ததுதம் அவர்களை நோக்கிய கட்டுபாடுகள் கொஞ்சம் தளர்கின்றன. அப்போதுதான் சிகரட்பிடித்தல் மது அருந்துதல் போன்றவை கவர்சியை கொடுத்து தீயன பக்கம் இழுக்கின்றது. நான் சொல்லவரும் விடயம் மதம்தான் எனை சீர்படுத்தியதா? என்றால் ஆம் என்று எடுத்த எடுப்பில் என்னால் கூறிவிட முடியுமா தெரியவில்லை. ஆனால் மதமும் என்று என்னால் நிற்சயமாக கூற முடியும்.

உண்மையான கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகுத்தறிவினால் நிரூபிக்க முடியாத ஒரு நிலையே கடவுளின் இருப்பாகும். அதை அனுபவிக்க முடியும். பார்வையற்றவனுக்கு எப்படி வாதம் நெய்தாலும் வெளிச்சத்தை நிரூபிக்க முடியாதோ அதேபோல் ஒரு நாத்திக வாதியிடம் எத்தனை வாதம் செய்தாலும் இறைவனை நிரூபிக்க முடியாது. கடவுள் நிரூபிக்கப்பட முடியாமல் இருப்பதுதான் கடவுள் சாதாரன மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதற்கான நிரூபனம். இளம் துறவி

உலகத்திலேயே மனிதன் அதிகமாக நேசிக்கக் கூடியது அமைதியும் நிம்மதியுமே. பணம் வரலாம்; போகலாம். பல தாரங்களை மணந்து கொள்ளலாம்; வீடு வாங்கலாம்; நிலம் வாங்கலாம்; சொத்தைப் பெருக்கலாம்; எல்லாம் இருந்தும் கூட நிம்மதி இல்லை என்றால் அவன் வாழ்ந்து என்ன பயன்?

சேர்க்கின்ற சொத்து நிம்மதிக்காக.

கட்டுகிற மனைவி நிம்மதிக்காக.

தேடுகிற வீடும் நிலமும் நின்மதிக்காக

எப்போது அவன் நின்மதியை நாடுகிறானோ அப்போது அவனுக்கு அவஸ்தை வந்து சேருகிறது.

ஆரம்பத்தில் மனிதன் விரும்பியோ விரும்பாமலோ பல சிக்கல்களைத் தானே உண்டாக்கிக்கொள்கிறான்.

தானே கிணறு வெட்டுகிறான் அதில் தானே விழுகிறான்

தானே தொழில் தொடங்குகிறான்; தவியாய் தவிக்கிறான்

தானே காதலிக்கிறான்;அதற்காக உருகிறான்

தானே ஒரு பெண்ணை விரும்பி கல்யாணம் செய்து கொள்கிறான்;பிறகு இது பெண்ணா? பேயா? என்று துடியாய் துடிக்கிறான்

எந்த கோணத்தில் நின்று பார்தபலும் மனித வாழ்கை துன்பமாகவே காட்சியளிக்கிறது.

ஆகவே தான் மனிதன் ஏதாவது ஒருபுகலிடத்தை நாடுகிறான்.

தனக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடுகிறான்.

மனிதர்களோ அவதூறு பேசுகிறார்கள்;கேலி செய்கிறார்கள்.

ஆகவே அவன் தெய்வத்தை சரணடைகின்றான்

அந்த தெய்வம் அவன் குறையைக் கேட்கிறதோ இல்லையேர்;காட்சியிலே நின்மதி தருகிறது.

இந்த தெய்வ பக்தியில் மிக முக்கியமானது அணுகும் முறை.

எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன் இறைவன்{மெய்ஞான கூற்று }

எங்கும் எதிலும் நிறைந்திருப்பது சக்தி{விஞ்ஞான கூற்று }

கவிஞர் கண்ணதாசன்

Edited by jhansirany

  • தொடங்கியவர்

நல்ல செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

அட தெய்வங்களே சூரியன் கடவுளில்லை கூடிய விரைவில் வெடித்துச் சிதறப்போகும் "சூப்பர்நோவா" இன்னுமொரு மீல்லியன் ஆண்டோ அன்றேல் அதற்கு மெற்பட்ட சில காலத்தின் பின்போ சூரியன் இல்லாமல்போய்விடும். இது அண்டவெளியில் இருக்கின்ற காலக் கணிப்பினூடு பார்த்தால் மிகவும் குறுகியகாலமாகும். இப்போதிருக்கும் மனித இனம் தனது பரினாம வளர்ச்சியை அடைந்து தற்போதைய நிலைக்கு வருவதர்கு பல மில்லியன் வருடங்கள் எடுத்தது.அது கிட்டத்தட்ட இருநூரு மில்லியன் வருடங்களாகைருக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதோடு ஒப்பிடுப் பார்த்தால் இன்னமுன் ஓரிரு மில்லியன் வருடம் என்பது குறுகிய காலமே.

இந்தக் கணிப்புகள் எல்லாம்தற்போதைய சூரியனின் நிலையை வைத்தே கூறுகிறார்கள், போகப் போகத்தான் தெரியும் சூரியன் அழியப்போகும் காலம் இன்னமும் குறுகி அடுத்த தீபாவளியை சந்தோசமாகக் கொண்டாடுங்கோ எனெண்டால் அதுக்குப் பின்பு நாம் இருக்கமாட்டம் என யாராவது கூறினால் ஆச்சரியப்பட வேண்டாம். காரணம் சூரியனில் தற்போதே கருமையான புள்ளிகள் சில இடங்களில் தோன்றத்தொடங்கிவிட்டது இதன் அறிகுறி சுப்பர் நோவாவுக்கு அடுத்த படிநிலையான் கருங்குள்ளன் வடிவம் அதாவது எரிசக்தி முடிவடைந்து சூரியன் தனது பரப்பளவில் சுருங்கிக் கொள்ளுதல். அதன்பின்பு என்ன வேற்றுக்கிரக ஈர்ப்பின் காரணமாக டமார் என்று வெடித்துச்ச்........சிதறவேண்டியத

ுதான் தூசுப்படலமாக.

பூமி குளிர ஆரம்பிக்கும் சம்னிலையை இழக்கும் குளிர் என்றால் உங்க வீட்டு எங்க வீட்டு குளிரில்லை மைனஸ் ஆயிரம் டிகிரி செல்சியஸ் அதுக்கப்புறம் கோவிந்தா கோவிந்தா. எப்படி கட்டிக்காத்தாலும் பூமிக்கு மிகப் பெரிய ஆப்பு வருகிறது.

  • தொடங்கியவர்

அன்றியும் "குழந்தையுந் தெய்வமுங் கொண்டாடுமிடத்தில்" என்னும் பழமொழியின்படி குழந்தையானது தன்னை ஆசையோடு செல்வமே கண்ணே கண்மணியே யெனப் பலகூறி கையிலேந்தியும் மார்போடணைத்தும் முத்தமிட்டும், பாலூட்டியும், தாலாட்டியும், வளர்ப்பவர்களிடம் தானும் ஆசையோடு சென்று அவர்கள் மடிமீதிருந்து விளையாடுவது போல், கடவுளும் தம்மைநேசித்து அபிஷேகித்தும், அலங்கரித்தும், அருச்சித்தும், தோத்திரங்கள் பாடியும் திருவிழாக்கொண்டாடியும், வணங்குவார்க்கு எளியராய் அவர் சிந்தையைக் கோயிலாகக் கொண்டு வெளிப்பட்டருளுவர். மற்றவர்களுக்கு அவ்வாறு வெளிப்பட்டருளுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அட தெய்வங்களே சூரியன் கடவுளில்லை கூடிய விரைவில் வெடித்துச் சிதறப்போகும் "சூப்பர்நோவா" இன்னுமொரு மீல்லியன் ஆண்டோ அன்றேல் அதற்கு மெற்பட்ட சில காலத்தின் பின்போ சூரியன் இல்லாமல்போய்விடும். இது அண்டவெளியில் இருக்கின்ற காலக் கணிப்பினூடு பார்த்தால் மிகவும் குறுகியகாலமாகும். இப்போதிருக்கும் மனித இனம் தனது பரினாம வளர்ச்சியை அடைந்து தற்போதைய நிலைக்கு வருவதர்கு பல மில்லியன் வருடங்கள் எடுத்தது.அது கிட்டத்தட்ட இருநூரு மில்லியன் வருடங்களாகைருக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதோடு ஒப்பிடுப் பார்த்தால் இன்னமுன் ஓரிரு மில்லியன் வருடம் என்பது குறுகிய காலமே.

இந்தக் கணிப்புகள் எல்லாம்தற்போதைய சூரியனின் நிலையை வைத்தே கூறுகிறார்கள், போகப் போகத்தான் தெரியும் சூரியன் அழியப்போகும் காலம் இன்னமும் குறுகி அடுத்த தீபாவளியை சந்தோசமாகக் கொண்டாடுங்கோ எனெண்டால் அதுக்குப் பின்பு நாம் இருக்கமாட்டம் என யாராவது கூறினால் ஆச்சரியப்பட வேண்டாம். காரணம் சூரியனில் தற்போதே கருமையான புள்ளிகள் சில இடங்களில் தோன்றத்தொடங்கிவிட்டது இதன் அறிகுறி சுப்பர் நோவாவுக்கு அடுத்த படிநிலையான் கருங்குள்ளன் வடிவம் அதாவது எரிசக்தி முடிவடைந்து சூரியன் தனது பரப்பளவில் சுருங்கிக் கொள்ளுதல். அதன்பின்பு என்ன வேற்றுக்கிரக ஈர்ப்பின் காரணமாக டமார் என்று வெடித்துச்ச்........சிதறவேண்டியத

ுதான் தூசுப்படலமாக.

பூமி குளிர ஆரம்பிக்கும் சம்னிலையை இழக்கும் குளிர் என்றால் உங்க வீட்டு எங்க வீட்டு குளிரில்லை மைனஸ் ஆயிரம் டிகிரி செல்சியஸ் அதுக்கப்புறம் கோவிந்தா கோவிந்தா. எப்படி கட்டிக்காத்தாலும் பூமிக்கு மிகப் பெரிய ஆப்பு வருகிறது.

சூப்பர்நோவாவை உருவாக்கினதே நம்ம கடவுள்தானப்பா..! சந்திரனில ஒளவையாரை விட்டதும் நம்பதான்..! என்ன பேசுறீங்க??! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்பதற்கு நன்றா இருந்த ஒரு வீடியோ..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய ஆட்ரான் மோதுவி

கடவுளின் துகள் தேடி பரிசோதனை ஆரம்பம்.

கடந்த பல வருடங்களாக திட்டமிடப்பட்டு தற்போது செயற்படுத்தப்படக் கூடிய நிலையை எட்டியுள்ள கடவுளின் துகளைத் தேடும் பரிசோதனைக்கான ஆயத்தப்பணிகள் அதன் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த நிலையில் குறிப்பிட்ட பரிசோதனை 10-09-2008ம் திகதி காலை (ஐரோப்பிய நேரப்படி) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊநசn என்ற அமைப்பின் ஆதரவில் ஐரோப்பாவில் அமைக்கப்பட்டுள்ளஇ சுமார் 5 பில்லியன் பிரித்தானிய பவுண்கள் செலவில் உருவானஇ சுவிஸ்- பிரான்ஸ் எல்லைகளை ஒட்டிச் செல்லும் நிலக்கீழ் பரிசோதனைக் கூடத்தில் நடைபெறவுள்ளஇ உலகின் மிகப் பெரிய பெளதீகவியல் பரிசோதனையாக அமையவுள்ள இப்பரிசோதனையின் போது நேர் ஏற்றம் கொண்ட புரோத்தன் துணிக்கைகளாலான இரண்டு கற்றைகள் எதிர் எதிர் திசைகளில் உச்ச வேகத்தில் சுமார் 27 கிலோமீற்றர்கள் உள்ள நிலக்கீழ் வட்டப்பாதையில் மோதவிடப்பட உள்ளன.

இந்த வட்டப் பாதை நெடுகினும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 1000 க்கும் அதிகமான வளைய வடிவ மின் காந்தங்கள் மேற்குறிப்பிட்ட புரோத்தன் கற்றைகளை வட்டப் பாதையில் இயக்கவுள்ளன.

இந்தப் பரிசோதனையின் போது ஒரு செக்கனுக்கு 11இ000 தடவைகள் என்ற விகிதத்தில் புரோத்தன் கற்றைகள் மேற்குறிப்பிட்ட 27 கிலோமீற்றர்கள் வட்டப்பாதையில் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்துக்கு ஒத்த உச்ச வேகத்தில் எதிர் எதிர் முனைகளில் பயணித்து மோதவுள்ளன.

இந்த மொத்துகை விண்வெளியில் ஆழ்ந்த பகுதியில் இருக்கும் வெப்பநிலைக்கு (கிட்டத்தட்ட -271 பாகை செல்சியஸ்)நிகர்ந்த வெப்பநிலையில் நடத்தப்படுவதோடு.. இந்த மொத்துகையினால் தோன்றும் சூழல் என்பது பிரபஞ்சம் தோன்றக் காரணமான பெரு வெடிப்புக்கு (டீபை டீயபெ) பின்னான உடனடிச் சூழலை ஒத்ததாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்தப் பரிசோதனையில் இருந்து திணிவு என்றால் என்ன.. அந்தத் திணிவை ஆக்கும் அடிப்படை அலகு என்ன என்பதை அறியக் கூடியதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

நாம் காணும் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள்இவாயுக்கள்இ கோள்கள்இ அகிலத் தொகுதிகள் போன்ற கூறுகள் மொத்தப் பிரபஞ்சத்தில் வெறும் 4மூ ஆகும். பிரபஞ்சத்தில் 23மூ கரும்பொருளாகவும் 73மூ கருஞ்சக்தியாகவும் இருப்பதாக நவீன விண்ணியல் அவதானிப்புக்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் செப்டம்பர் திங்கள் புதன்கிழமை(10-09-2008)காலையில் இருந்து நடைபெற ஆரம்பித்துள்ள இப்பரிசோதனையானது விண்ணியல் சார்ந்து மட்டுமன்றி அடிப்படை பெளதீகம்இ இப்பிரபஞ்சத்தினை ஆக்கியுள்ள அடிப்படை கூறுகள்இ இயற்கை பற்றிய அற்புதங்கள் சிலவற்றுக்கு விடை பகரலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

  • தொடங்கியவர்

தமிழ்வேதம்

எந்தை யீசனெம்பெருமா னேறமர் கடவுளென்றேத்திச்

சிந்தை செய்பவர்க்கல்லால் சென்று கைகூடுவதன்றால்

கந்தமாமலருந்திக்கடும் புன னின்வாமல்குகரைமே

லந்தண்சோலை நெல்வாயி லரத்துறையடிகடம்மருளே.

வைத்தநிதியேமணியே யென்றுவருந்தித்தஞ்

சிந்தைநைந்துசிவனே யென்பார்சிந்தையார்

கொத்தார்சந்துங்குரவும் வாரிக்கொணர்ந்துந்தி

முத்தாறுடையமுதல்வர்கோயின் முதுகுன்றே.

உலகத்தில் கடவுள் உண்டு என்று நம்பி அவரை வழிபடுவோருள்ளும் தம்முடைய அன்பெல்லாம் மனைவி மக்களிடத்திலும் செல்வ முதலியவற்றிலுமே அழுந்தவைத்திருப்பவர்களுக் கும் கடவுள் இலராகவேயிருக்கின்றார். இவ்வாறு சிற்றின்பப் பிரியராய் பிரபஞ்ச வாழ்க்கையையே பெரிதாக மதித்துக் கடவுளையும் அவராலுண்டாகும் பேரின்பத்தையும் இழப்பார்க்கு இரங்கியே நமது மாணிக்க வாசகசுவாமிகள்.

தினைத் தனையுள்ளதோர் பூவினிற்றேனுண்ணாதே

நினைத் தொறுங்காண்டொறும் பேசுந்தொறுமெப்போதும்

அனைத் தெலும்புண்ணெக வானந்தத்தேன்சொரியும்

குனிப்புடையானுக்கே சென்றூதாய்கோத்தும்பீ.

என்றருளிச்செய்தனர்.

Edited by ArumugaNavalar

இவ்வாறு சிற்றின்பப் பிரியராய் பிரபஞ்ச வாழ்க்கையையே பெரிதாக மதித்துக் கடவுளையும் அவராலுண்டாகும் பேரின்பத்தையும் இழப்பார்க்கு இரங்கியே நமது மாணிக்க வாசகசுவாமிகள்.

சிற்றின்பம் இன்றி இப்பிரபஞ்சம் இயங்காது

சின்ன வீட்டிலும் பெரிய வீட்டிலும்

சிற்றின்பம் பெற்று இப்பிரபஞ்சத்தை

அனுபவி குழந்தாய்......

ஜில் சுவாமிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சைவசித்தாந்தங்கொள்கை.

இந்த உலகை பார்க்கும் போது கடவுள் உண்டென்ற கொள்கை புரிய வேண்டும்.

ஒரு மட்பானை யைப் பார்க்கம் போது அதனை உருவாக்கிய குயவன் நினைவிற்கு வருமாப்போல்

இவ்வுலகை திருஸ்சித்து இயக்கும் சக்தி பற்றிய எண்ணமும் தோன்ற வேண்டும்.

சுவாசிக்கின்றோம் - காற்றை உணர்ந்திருக்கின்றோம் ஆனால் கண்ணால் கண்டு தொட்டுப் பார்த்திருக்கின்றோமா

தாயின் அன்பு பாசம் உணர்ந்திருக்கின்றோம் .

கடவுள் உள்ளார் என்ற எண்ணத்தை எமது மனதில் நிலைப்படுத்தினால்

எல்லாவற்றையும் கடந்த அவ் இறைவனை உணரமுடியும்.

  • தொடங்கியவர்

கடவுளை அவரருளையே கண்ணாகக் கொண்டு காணவேண்டுமே யன்றி ஆணவமலத்தால் மழுங்கிக் கிடக்கும் சுட்டுணர்வைக் கொண்டு காணலாகாது.

அருளைக் கண்ணாகக் கொண்டு காணும் ஞானிகளுக்குப் பேரொளியாகிய பரசிவம் தோன்றும்; பிரபஞ்சந் தோன்றாது. சுட்டி யறியும் அறிவைக் கொண்டு காணும் ஏனையோர்க்கு அந்தகாரமாகிய பிரபஞ்சந்தோன்றும்; சிவம் தோன்றாது.

தாயுமானசுவாமிகள் பாடல்

"அருளாலெவையும் பாரென்றான் - அத்தை, யறியாதே சுட்டி யென் அறிவாலே பார்த்தேன் - இருளான பொருள் கண்ட தல்லால் - கண்ட வென்னையுங் கண்டில னென்னேடி தோழி - சங்கர சங்கர சம்பு."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.