Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல ........ யாராலும் ....?????????

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயா!

அடிக்கடி எங்கடைபழைய வரலாறுகளையும் பிரச்சனைகளையும்

ஒருசில சிக்கல் செம்மறிகளுக்கு சொல்ல

என்ன பாலர்பாடசாலையே நடத்துறியள்? :rolleyes:

  • Replies 107
  • Views 8.3k
  • Created
  • Last Reply

என்னைபொறுத்தவரை.. தற்போதைய நிலவரபடி புலிகளின் தலைமை கட்டமைப்புதான் எமது அழிவுக்கு காரணம்... இப்படிதான் எமது வரலாற்றிலும் இருக்கபோகிறது..

இதற்கு மாற்றுகருத்து இல்லை.

எனக்கு இருக்கு பனங்காய்...

இங்கை புலம் பெயர்ந்த நாட்டை எடுத்து கொள்ளுங்கோ... எல்லாருக்கும் தேவை எண்டது அதிகம்...( பணத்தேவையும் அதிகம்) அந்த தேவைக்கும் மேலாலை நல்ல பேரை வாங்க வேண்டும் எண்டு துடிச்சவை இன்னும் அதிகம்...

தமிழர்களாலை முன் எடுக்க பட்ட எல்லா நிகள்வுக்கும் வந்து தங்களை முன்னுக்கு நிப்பாட்டி தாங்கள் தான் இதை நடத்திறது மாதிரி படம் காட்டுறதுக்கு எண்டே வருகிறவை நிறைய பேர்... ஆனால் பின்னாலை நிண்டு கஸ்ரப்பட்டவன் உண்மமயிலை உழைத்தவன் எண்டு எல்லாம் வேறையாக இருக்கும்...

தன்னை ஒரு நம்பிக்கையானவனாக காட்டி கொள்வது என்பது மிகவும் இலகுவானது... அதன் மூலம் தங்களை பிரதி நிதியாக நிறுத்தி கொண்ட சிலரும் இங்கு உண்டு... அது சாத்தியமமனது தான்..

அதே மாதிரி தாயகத்தில் மக்களோடு செயற்பட்டவர்களான அரசியல் துறையிலும், புலநாய்வு பிரிவிலும் , நிர்வாக பிரிவிலும் தங்களை சசதனையாளர்களாக காட்டி கொள்வதும் கூட கடினம் இல்லை... இதனால் பதவிகளையும் அவர்களால் அடைந்து இருக்க முடியும்... அதில் சிலர் இலங்கை , இந்திய புலநாய்வாளர்களாக இருந்தார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை...

ஒரு போராட்ட அமைப்பை சடுதியாக விஸ்தீரணம் செய்யும் போது இப்படியான ஊடுருவல்கள் தடுக்கவும் முடியாது... உங்களுக்கே தெரியும் UNO விலும், செஞ்சிலுவையிலும் வேலை செய்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் கூட ஏதாவது ஒரு நாட்டின் புலநாய்வு ஏஜன்றாக இருப்பது வளமை..

இது எல்லாம் இருக்கும் போது புலிகளின் படை கட்டுமானங்களில் ஊடுருவல்கள் சாத்தியமாவதில்லை... காரணம் பயிற்ச்சி கடுமை, மற்றும் உக்கிரமான மோதல்கலை சந்திக்க வேண்டி வரும் நிலை... மற்றது எதையுமே செய்யாதவன் தன்னை ஒரு சாதனையாளனாக காட்டி பதவியிலும் வர முடியாது...

இப்போ தலைமை போரில் இருந்து விலகுவதாக முடிவை எடுத்தால் எந்த கட்டமைபை நம்புவார்கள்.. யாரை நம்புவார்கள், யாருடன், வெளியேறுவார்கள் அல்லது வெளியேற்றுவார்கள் என்பதும் எப்படியான முடிவை எடுப்பார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை..

அடுத்ததாக உங்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்க்க விரும்புகிறேன்.. எங்களின் தலைமை வன்னி போரில் இருந்து விலகும் முடிவை எடுக்க வைத்தை காரணம் யார்..?? என்ன..?? தெரியும்..??

Edited by தயா

நெருக்கடியான காலங்களில் நிதி எல்லாம் கேட்க்க கூடாது...

தயா..

இந்த நிதி பிரச்சினை.. புலம் பெயர்ந்த தனியார்களிட்ம் நிதி திரட்டியவிதம் சுத்த பைத்தியகாரத்தனம்..

அட்லீஸ்ட்.. தடைசெய்யப்பட்டவுடனாவது ஒரு அறிக்கை விட்டிருக்கலாம், பொலிகளை கண்டு ஏமாறாதீர்கள்.... எண்டு..!!!

இது சாத்தியமா...?? புலம் பெயந்தவைகளில் புலிகள் ஜெயதேவன் பிரச்சினையை கையாள புறப்பட்டு அடைந்த சிக்கல் போதாதா...???

உங்களுக்கு வெளிப்படையாகவே சொல்கிறேன்... வெளிநாடுகளில் வேலை செய்த யாரையாவது அறிந்து வைத்து இருக்கிறீர்களா..?? அவர்களிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருங்கள்...

புலம் பெயர்ந்த நாட்டின் பரவும் புரளிகளின் ஊற்றிட அவர்கள் தான்...

Edited by தயா

அடுத்ததாக உங்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்க்க விரும்புகிறேன்.. எங்களின் தலைமை வன்னி போரில் இருந்து விலகும் முடிவை எடுக்க வைத்தை காரணம் யார்..?? என்ன..?? தெரியும்..??

ஒரு ஒப்பந்த்ததின் கீழ் எமது தேவை இல்லாமலும் சிரி லன்காவின் தேவை முக்கியமாகவும் மாறியிருக்கலாம்..

WW2 தொடக்கதில் பிரிட்டன் செய்த்ததுபோல், தனிச்சுபோன எங்கடையளும், மறைக்கவேண்டியதை மறைத்து.. உள்ளூர் சனதின் முறாலை ஏத்திவைக்க முற்பட்டிருக்கலாம்.

..................................

......................................................

இதையும் கெடுகிறதுக்கு எண்டு யாழுக்கை குறுக்காலை எல்லாம் கன பேர் போய் தெரிந்தவை... முக்கியமாக தமிழீழம் நோக்கம் எண்டதை நிறுத்த வேண்டிய வேளையில் இல்லை பெரியாரின் பருப்பை அவிப்பம் எண்டும் வெளிக்கிட்டைவை...

எதிர்த்து கதைச்சால் கருத்தை வேறை துக்குவினம்...

இது யாழ் களத்துக்கை மட்டுமான நிலை...

வெளியாலை இதைவிட மிக கேவலமான நிலை... நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் எண்று வெளியாருக்கு காட்டி கொள்ள கூட முடிந்து இருக்க இல்லை...

Edited by தயா

சரி எல்லாரும் கதைச்சு முடிச்சிட்யளே?

நான் இப்ப 2 கேழ்வி கேட்கிறன் அதுக்கு நல்ல மறுமொழியா தாங்கோ!

தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் தமிழ் தேசத்தை கட்டியெளுப்ப என்ன செய்தாரகள்?

ஒரு ஆயுதக் கட்டமைப்பை கட்டமைப்பை வெற்றிகரமாக 2002 வரை கட்டிய விடுதலைப் புலிகள் இதைவிட வேறு எந்த கட்டமைப்பை கட்டியமைத்தார்கள்?

(இந்த கேள்விகளை நான் அடிக்கடி கேட்ட போது எங்கடை தலைமை எல்லாம் பாத்துக்கொள்ளும் எண்டு சொல்லிச்சினம். இப்ப சொன்னதிலை பலர் வீரமரணம் பலர் அரச தடுப்புக்காவலில். மிஞ்சி இருக்கிற ஒருவர் இன்று காக்கா சிங்கம் வடை கதை சொல்கிறார்)

தயவு செய்து ஒழுங்கான பதில் தரவும். விடுதலைப் பேராட்டம், சரித்திரம், என்டு சும்மா புலுடா விடவேண்டாம்.

நான் இங்கு சில செய்திகளை போட்டது குறிப்பாக முகாம் மக்களின் விடயங்கள், யாழ் விடயங்கள், இன்று கள நிலவரம் மாறிவருவதைக குறிக்கவே. இதை அரசாங்கம் செய்வதன் உள் நோக்கம். எதிர்வரும் தேர்தல்!

மகிந்த அரசு மிகவும் மோசமான ஒரு அரசு. அது தமிழ் சமூகத்தை மட்டும் அழிக்கவில்லை. சிங்களவர்களையும் அது வேட்டையாடுகிறது. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான சிங்களவர்கiயும், முஸ்லீம்களையும் கலைத்த கலைத்து சுட்டுக்கொலை செய்து அவர்கள் பாதாள உலகம், குடு கோஸ்டி என்று கூறுகிறது. இந்த அரசு தமிழர்களை என்ன செய்யும் என்பதும் எமக்கு தெரியும். ஆனால் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக சென்றவர்கள் ஏற்கனவே மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிறீ லங்கா அரசால் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களை துன்புறத்தியதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். சிறீ லங்கா அரசு அதை தான் செய்யும் என்று தெரியம். அதற்காக தானே இந்த போராட்டம். இந்த போராட்டமே அந்த மக்களை சித்திரவதை செய்தால் நாம் எங்கு போவது?

எமது மீடியாக்கள் மீது பலமான தாக்கம் இருக்கிறது.. எதிரியல் மானோத்ததுவம் நாசுக்காக ஏற்றப்படுகிறது.. எதிர்கொள்ள முடியாமலே உள்ளது..

தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் தமிழ் தேசத்தை கட்டியெளுப்ப என்ன செய்தாரகள்?

ஒரு ஆயுதக் கட்டமைப்பை கட்டமைப்பை வெற்றிகரமாக 2002 வரை கட்டிய விடுதலைப் புலிகள் இதைவிட வேறு எந்த கட்டமைப்பை கட்டியமைத்தார்கள்?

அண்ணை உங்கட அமைச்சூர் தனத்துக்கு அளவே இல்லாமல் போட்டுது...

புலிகளின் தமிழீழ தேசத்துக்கான கட்டமைப்புக்கள் சில

  • காவல்த்துறை.
  • நீதித்துறை.
  • பொருண்மிய மேம்பாடுட்டு நிறுவனம்.
  • வைப்பகங்கள், நிதித்துறை.
  • தமிழீழ போக்கு வரத்து சபை
  • நிர்வாக சேவைகள்

இன்னும் பல சில அல்ல..

சரி புலிகள் தமிழ் மக்களை வதைத்தார்கள் எண்டால் யார் வதை பட்டவர்கள்...??? உங்களுக்கு தெரிந்த அவரின் விபரங்களள தர முடியுமா...??? ( உங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை நானாக பேசி கேட்டு கொள்கின்றேன்... ) எனக்கு பதிலை வவுனியா ககம்பில் இருக்கும் என் குஞ்சி அப்பரை கேளுங்கோ எனும் பதில் தேவை இல்லை... அவரை நேரடியாவ வந்து சொல்ல சொல்லவும்..

எமது மீடியாக்கள் மீது பலமான தாக்கம் இருக்கிறது.. எதிரியல் மானோத்ததுவம் நாசுக்காக ஏற்றப்படுகிறது.. எதிர்கொள்ள முடியாமலே உள்ளது..

உண்மை. சிங்களவன் சொல்வதை எம் ஊடகங்கள் 200 % முக்கியம் கொடுத்து அப்படியே பிரசுரிக்கும் போது.. அதையே எங்களின் ஊடகங்களின் செய்திகள்( செய்தி உண்மையாக இருந்தாலும்) எப்படி உண்மையாக இருக்காது எண்று விமர்சித்து சிங்கள ஊடகங்கள் பிரசுரிக்கும்..

Edited by தயா

என்னைபொறுத்தவரை.. தற்போதைய நிலவரபடி புலிகளின் தலைமை கட்டமைப்புதான் எமது அழிவுக்கு காரணம்... இப்படிதான் எமது வரலாற்றிலும் இருக்கபோகிறது..

இதற்கு மாற்றுகருத்து இல்லை

.

ஒரு இனத்தின் குறைபாடும் பலவீனமும் அந்த இனம் அடிமையாக காரணமாகின்றது. அதை புலிகள் தலமையில் கட்டி குற்றம் சுமத்துவது ஒரு பெரிய காரியம் இல்லை ஆனால் இது எங்களை நாங்களே தொடர்ச்சியாக ஏமாற்றும் ஒரு வரலாற்றுவழிப்பழக்கம் அவ்வளவு தான்.

புலிகள் கட்டாயமாக ஆட்சேர்ப்பதற்கு போராட ஆட்பற்றாக்குறை காரணமாகின்றது. இந்த ஆட்பற்றக்குறை ஏற்பட நாம் பிரதான காரணமாகின்றறோம். சுதந்திரம் என்பதும் சுகபோக வாழ்வு என்பதும் என்னவென்றால் லண்டனுக்கும் கனடாவுக்கும் போய்ச்சேர்வது தான் என்றுதானே வந்தோம். ஏனையவர்களுக்கும் வழிகாட்டினோம். தவிர எமக்கென்று ஒரு நாடு உருவாக்கி அதை லண்டன் கனடாபோல் முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணமா எமக்கிருந்தது? நாட்டில் உள்ள பிள்ளைகளை பெற்றோர்கள் போராட இணைக்காமல் எப்படியாவது வெளிநாட்டுக்கு அனுப்பி விட வேண்டும் என்ற பொது எண்ணத்தில் தானே இருந்தார்கள். அந்த எண்ணத்தை வளர்த்தவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் தானே? ஒரு நாட்டை உருவாக்க தடையான பிரதான காரணியாக நாம் இருக்கின்றோம். இது டக்ளஸ் கருணா போல் ஒரு துரோகம் தான். எண்ணிக்கை பெரிதாகியதால் அது தெரியவில்லை.

மக்களை ஒன்றுதிரட்டவில்லை அரசியல் மயப்படுத்தவில்லை என்ற புளிச்சல் ஏவறை கதைகள் மூலம் புலிகள் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கின்றது. எமது அறிவுக்கெட்டிய தூர வரலாற்றில் ஓரளவு தமிழன் ஒன்றுபட்டது புலிகள் காலத்தில் தான் என்பதே உண்மை. இது ஒன்றுபட முடியாத இனம் என்ற உண்மையை புலிகள் தலமை புரியாமல் தமிழன் என்ற மாயையில் அதிக நம்பிக்கை வைத்தது தான் ஒரு வியப்பான விசயம் தவிர இந்த இனத்தின் விடுதலைப்போராட்டம் தோற்பது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட நிச்சயிக்கப்பட்ட ஒன்றே.

சோழன் கப்பலோட்டினான் சேரன் அதை செய்தான் பாண்டியன் இதைச்செய்தான் என்ற வரலாற்றுச் சிதறல்களை மீளக் காவி வந்தோம். இனம் குறித்த ஒரு பிரமிப்பை வளர்த்தோம். இந்த மன்னர்களும் இவர்களது ஆட்சிகளும் எப்படி எதனால் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது என்பதற்கு யாரும் விடைதேடவில்லை. இனம் ஏகலும் அடிமைக்குணம் பரவி விட்டதை உணராமல் இல்லை ஆனால் அதை மறைத்தோம். நீ அந்தச் சாதி நான் இந்தச் சாதி. நீ அந்த மதம் நான் இந்த மதம். நீ அந்த ஊர்க்காரன் நான் இந்த ஊர்க்காறன் இப்படியே பலதில் நாம் அதிகாரம் செலுத்தினோம் பகட்டுக்கு தமிழன் என்று பினாத்தினோம். தமிழன் என்பதற்குள் உள்ளிறங்கினால் வேற்றுமைகளால் நிறைந்தவர்களாகவே இருந்தோம் இருக்கின்றோம். இது எம் எல்லோருக்கும் தெரியும். வேர்களின் ஆரோக்கியத்தை பொறுத்தே விருட்சத்தின் வளர்ச்சி. ஒரு மரத்துக்கு ஒப்பானதே எமது இனம். அந்த மரத்தின் வேர்கள் போலவே சாதி மத வர்க்க பிரதேசவாதப் பிரச்சனைகள். இங்கே மரம் பட்டுப்போவது இயல்பானதும் தவர்க்க முடியாததும் என்பதே உண்மை. ஒரு குறிப்பிட்ட காலத்தின் ஆணிவேராக புலிகள் இருந்தார்கள். இப்போது இல்லை.

நாம் இன்றும் கேட்கின்றோம் போராட்டம் தோற்றதுக்கு என்ன காரணம் என்று? புலிகள் ஏன் தோற்றார்கள்? அழிவுக்கு புலிகளே காரணம். இன்னும் பல. யார் இந்தப்புலிகள்? எந்த நாட்டை எந்த இனத்தை சேர்ந்தவர்கள்? அவர்கள் ஏன் ஈழத்தமிழனுக்காக தனிநாடு கேட்டார்கள்? ஆச்சரியமாகவே இருக்கின்றது?

நாம் ஏன் தோற்றோம்? நாம் ஏன் அடிமைகள் ஆனோம்? நான் நினைக்கின்றேன் நாங்கள் தோற்கவும் இல்லை அடிமையாகவும் இல்லை ஆனால் புலிகள் தோற்றுவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளால் கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர் என்றால் கவலைதான். ஆனால் அதை இங்கு கொண்டுவந்து இணைத்தவர் என்ன நோக்கத்திற்காக இதைச் செய்தார் என்பது சந்தேகமாக இருக்கிறது. என்றாலும் அவரிடம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.

1. புலிகளால் கட்டாயப்படுத்தப்பட்டு (அவரும் மேலுள்ள அஞ்சலியும் சொல்வதுபோல) இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்கள் மட்டும்தான் இவ்வளவு காலமும் இறந்தார்களா? அப்படியானால் 2 மாதக் குழந்தை, 8 மாதக் கர்ப்பிணிப்பெண்,, 70 வயது முதியவர் ....இவர்களெல்லாம் புலிகளால் கட்டாயப்படுத்தப்ப்ட்டு இயக்கத்தில் சேர்ந்து கொண்டவர்கள் தானோ??

2. புலிகள் கட்டாயப்படுத்தினார்கள் என்றே வைத்துக்கொள்வோமே, முன்னேறிவரும் ராணுவத்தில் காலடியில் நசுங்குண்டு சாவதை விடவும் போராளியாகி இருக்கலாம் என்கிற எண்ணம் ஏன் உங்களில் பலருக்குச் சரியென்று படவில்லை?

3. இந்த அஞ்சலியில் முன்வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு கருத்து, "உன்னைச் சேர்த்தவர்கள் இங்கிருக்க, நீ மட்டும் சாவதெப்படி"?, அப்படியானால் எல்லாப் போராளிகளும் செத்திருக்க வேண்டும் என்றல்லவா இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? இதெப்படி நியாயம்?? மாவீரராகிய 26,000 பேரின் பெற்றோரும் இப்படிக் கேட்டிருந்தால் இன்று எவர் எஞ்சியிருப்பர்?

4. தமது மகனின் இழப்பு மிகப்பெரியதுதான். ஏற்றுக்கொள்கிறேன். ஒருவன் தனது மகன், மகள், இறுதியில் தன்னையே ஒரு மக்கள் கூட்டத்திற்காக சாம்பலாக்கிவிட்டுச் சென்றானே ...அவனின் குடும்பத்தார் உறவினர்க்கு யார் ஆறுதல் கூறுவது?

5. நானும் எனது தம்பியை இழந்தவந்தான். ஆனால் ஒரு கணமேனும் வருந்தியதில்லை. எமது நாட்டிற்காகவும், தேசியத் தலைவர்க்காகவும் தன்னை மாய்த்துக்கொண்டான் என்று இன்றும் பெருமைப்படுகிறேன். என்ன, ஒரே ஒரு கவலை, எனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை என்பதுதான்.

போதும் விடுங்கள். இருக்கும்வரை எமக்காக தமது உடல், ரத்தம், உழைப்பு என்று எல்லம் கொடுத்தார்கள். தமது கனவுகள், கற்பனைகள், ஆசைகள் எல்லாம் விட்டெறிந்து நெருப்பேறிப் போனார்கள். அவர்களை வைய்ய வேண்டாம். இருக்கும்போதும் சபித்தோம்...இன்று அவர்களில்லை....ஆனாலும் சபிக்கிறோம்...நாமென்ன மனிதர்கள்தானா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

ஒரு இனத்தின் குறைபாடும் பலவீனமும் அந்த இனம் அடிமையாக காரணமாகின்றது. அதை புலிகள் தலமையில் கட்டி குற்றம் சுமத்துவது ஒரு பெரிய காரியம் இல்லை ஆனால் இது எங்களை நாங்களே தொடர்ச்சியாக ஏமாற்றும் ஒரு வரலாற்றுவழிப்பழக்கம் அவ்வளவு தான்.

புலிகள் கட்டாயமாக ஆட்சேர்ப்பதற்கு போராட ஆட்பற்றாக்குறை காரணமாகின்றது. இந்த ஆட்பற்றக்குறை ஏற்பட நாம் பிரதான காரணமாகின்றறோம். சுதந்திரம் என்பதும் சுகபோக வாழ்வு என்பதும் என்னவென்றால் லண்டனுக்கும் கனடாவுக்கும் போய்ச்சேர்வது தான் என்றுதானே வந்தோம். ஏனையவர்களுக்கும் வழிகாட்டினோம். தவிர எமக்கென்று ஒரு நாடு உருவாக்கி அதை லண்டன் கனடாபோல் முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணமா எமக்கிருந்தது? நாட்டில் உள்ள பிள்ளைகளை பெற்றோர்கள் போராட இணைக்காமல் எப்படியாவது வெளிநாட்டுக்கு அனுப்பி விட வேண்டும் என்ற பொது எண்ணத்தில் தானே இருந்தார்கள். அந்த எண்ணத்தை வளர்த்தவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் தானே? ஒரு நாட்டை உருவாக்க தடையான பிரதான காரணியாக நாம் இருக்கின்றோம். இது டக்ளஸ் கருணா போல் ஒரு துரோகம் தான். எண்ணிக்கை பெரிதாகியதால் அது தெரியவில்லை.

மக்களை ஒன்றுதிரட்டவில்லை அரசியல் மயப்படுத்தவில்லை என்ற புளிச்சல் ஏவறை கதைகள் மூலம் புலிகள் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கின்றது. எமது அறிவுக்கெட்டிய தூர வரலாற்றில் ஓரளவு தமிழன் ஒன்றுபட்டது புலிகள் காலத்தில் தான் என்பதே உண்மை. இது ஒன்றுபட முடியாத இனம் என்ற உண்மையை புலிகள் தலமை புரியாமல் தமிழன் என்ற மாயையில் அதிக நம்பிக்கை வைத்தது தான் ஒரு வியப்பான விசயம் தவிர இந்த இனத்தின் விடுதலைப்போராட்டம் தோற்பது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட நிச்சயிக்கப்பட்ட ஒன்றே.

சோழன் கப்பலோட்டினான் சேரன் அதை செய்தான் பாண்டியன் இதைச்செய்தான் என்ற வரலாற்றுச் சிதறல்களை மீளக் காவி வந்தோம். இனம் குறித்த ஒரு பிரமிப்பை வளர்த்தோம். இந்த மன்னர்களும் இவர்களது ஆட்சிகளும் எப்படி எதனால் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது என்பதற்கு யாரும் விடைதேடவில்லை. இனம் ஏகலும் அடிமைக்குணம் பரவி விட்டதை உணராமல் இல்லை ஆனால் அதை மறைத்தோம். நீ அந்தச் சாதி நான் இந்தச் சாதி. நீ அந்த மதம் நான் இந்த மதம். நீ அந்த ஊர்க்காரன் நான் இந்த ஊர்க்காறன் இப்படியே பலதில் நாம் அதிகாரம் செலுத்தினோம் பகட்டுக்கு தமிழன் என்று பினாத்தினோம். தமிழன் என்பதற்குள் உள்ளிறங்கினால் வேற்றுமைகளால் நிறைந்தவர்களாகவே இருந்தோம் இருக்கின்றோம். இது எம் எல்லோருக்கும் தெரியும். வேர்களின் ஆரோக்கியத்தை பொறுத்தே விருட்சத்தின் வளர்ச்சி. ஒரு மரத்துக்கு ஒப்பானதே எமது இனம். அந்த மரத்தின் வேர்கள் போலவே சாதி மத வர்க்க பிரதேசவாதப் பிரச்சனைகள். இங்கே மரம் பட்டுப்போவது இயல்பானதும் தவர்க்க முடியாததும் என்பதே உண்மை. ஒரு குறிப்பிட்ட காலத்தின் ஆணிவேராக புலிகள் இருந்தார்கள். இப்போது இல்லை.

நாம் இன்றும் கேட்கின்றோம் போராட்டம் தோற்றதுக்கு என்ன காரணம் என்று? புலிகள் ஏன் தோற்றார்கள்? அழிவுக்கு புலிகளே காரணம். இன்னும் பல. யார் இந்தப்புலிகள்? எந்த நாட்டை எந்த இனத்தை சேர்ந்தவர்கள்? அவர்கள் ஏன் ஈழத்தமிழனுக்காக தனிநாடு கேட்டார்கள்? ஆச்சரியமாகவே இருக்கின்றது?

நாம் ஏன் தோற்றோம்? நாம் ஏன் அடிமைகள் ஆனோம்? நான் நினைக்கின்றேன் நாங்கள் தோற்கவும் இல்லை அடிமையாகவும் இல்லை ஆனால் புலிகள் தோற்றுவிட்டார்கள்.

:rolleyes::(:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யப்பா பாண்டு..... காரணத்தை கண்டுபிடித்து நீ செய்யபோவது தான் என்னவோ? உயிர் துறந்தவர்களை எந்த குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்போகிறாய்?... இதனை ஆராய்வதால் ஏற்படப்போகும் ஒரு நன்மையை சொல் பார்க்கலாம்... பழைய தவறுகள் திருத்தப்படவேண்டும் என்கிறாய். அதை சொல்வதற்கு உன்னிடம் புதிய ஏதாவது திட்டம் கைவசம் இருக்கவேண்டும். அப்போது நீ முன்னர் விட்ட பிழைகளை திருத்தலாம். எதுவும் இல்லாமல் பழயவற்றை புலம்புதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கின்றேன்.... நீயோ நெல்லையனோ இங்கு வந்து என்னதான் புலி எதிர்ப்பு பாடினாலும்... எம் தேசியத் தலைவன் மீது கொண்ட மதிப்பும் பற்றும் என்றும் மாறாது. வாரலாறாகிப் போன மாவீரர்களின் தியாகம் எம் நெஞ்சை விட்டு என்றும் அகலாது. சீலன், 12 நாள் நீராகாரம் ஏதுமின்றி கண்ணெதிரே வீழ்ந்தானே தியாகி திலீபன், கிட்டு, தமிழ் செல்வன், பால்ராஜ், தீபன் இன்னும் ஆயிரமாயிரம் வீரப் புதல்வர்கள் போற்றி வளர்த்த அந்த விடுதலை அமைப்பு மீது என்றும் பற்று குறையாது.

  • கருத்துக்கள உறவுகள்

காட்டாறு,

தமிழனாக இருக்கத் தேவையில்லை. மனிதனாக இருந்தாலே போதும் உங்கள் கருத்துக்களை விளங்கிக் கொள்வதற்கு. ஆனால் என்ன, எமக்குத் தேவை புலிகளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதன் மூலம் எமது காய்ச்சலைக் குறைத்துக்கொள்வதுதான். இதற்காக எவரை வேண்டுமானாலும் திட்டித் தீர்ப்போம், எந்த தியாகத்தை வேண்டுமானாலும் எள்ளி நகையாடுவோம். இதை விட்டால் எமது புலியெதிர்ப்பைக் காட்ட வேறு சந்தர்ப்பம் கிடைக்காது!!!!!

சரி எல்லாரும் கதைச்சு முடிச்சிட்யளே?

நான் இப்ப 2 கேழ்வி கேட்கிறன் அதுக்கு நல்ல மறுமொழியா தாங்கோ!

தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் தமிழ் தேசத்தை கட்டியெளுப்ப என்ன செய்தாரகள்?

ஒரு ஆயுதக் கட்டமைப்பை கட்டமைப்பை வெற்றிகரமாக 2002 வரை கட்டிய விடுதலைப் புலிகள் இதைவிட வேறு எந்த கட்டமைப்பை கட்டியமைத்தார்கள்?

(இந்த கேள்விகளை நான் அடிக்கடி கேட்ட போது எங்கடை தலைமை எல்லாம் பாத்துக்கொள்ளும் எண்டு சொல்லிச்சினம். இப்ப சொன்னதிலை பலர் வீரமரணம் பலர் அரச தடுப்புக்காவலில். மிஞ்சி இருக்கிற ஒருவர் இன்று காக்கா சிங்கம் வடை கதை சொல்கிறார்)

இதே கேள்விய கொஞ்ச காலத்துக்கு முன் உங்களட்ட கேட்டிருந்தால் , பெரியதொரு லிஸ்டோட வந்திருப்பியள்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கின்றேன்.... நீயோ நெல்லையனோ இங்கு வந்து என்னதான் புலி எதிர்ப்பு பாடினாலும்... எம் தேசியத் தலைவன் மீது கொண்ட மதிப்பும் பற்றும் என்றும் மாறாது. வாரலாறாகிப் போன மாவீரர்களின் தியாகம் எம் நெஞ்சை விட்டு என்றும் அகலாது. சீலன், 12 நாள் நீராகாரம் ஏதுமின்றி கண்ணெதிரே வீழ்ந்தானே தியாகி திலீபன், கிட்டு, தமிழ் செல்வன், பால்ராஜ், தீபன் இன்னும் ஆயிரமாயிரம் வீரப் புதல்வர்கள் போற்றி வளர்த்த அந்த விடுதலை அமைப்பு மீது என்றும் பற்று குறையாது.

போதும் விடுங்கள். இருக்கும்வரை எமக்காக தமது உடல்இ ரத்தம்இ உழைப்பு என்று எல்லம் கொடுத்தார்கள். தமது கனவுகள்இ கற்பனைகள்இ ஆசைகள் எல்லாம் விட்டெறிந்து நெருப்பேறிப் போனார்கள். அவர்களை வைய்ய வேண்டாம். இருக்கும்போதும் சபித்தோம்...இன்று அவர்களில்லை....ஆனாலும் சபிக்கிறோம்...நாமென்ன மனிதர்கள்தானா???

நன்றி நண்பர்களே

இதுதான் என் கருத்தும்

என் ஆசையும்

என் கனவும்

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவிங்களா...

இதுக்கு தான் தலைவர் சொன்னவர்....

நானும் உங்கள போல சாதாரனமான ஒருத்தன் தான் ஆனா எங்கட மக்கள் தான் வழமையா ஒருத்தனுட் பொறுப்ப கொடுத்திட்டு தங்கட கடமை முடிஞ்சிதுனு ஒதுங்கிடுவினம் அப்படி தான் எல்லாரும் என்னட்ட பொறுப்ப தந்திட்டு தலைவன் ஆக்கிட்டு எல்லாத்தையும் தலைவர் பாத்துபார் என்டு ஒதுங்கிட்டினம் என்டு..

  • கருத்துக்கள உறவுகள்

செத்தபின்பும் கொல்லும் இனம்

தமிழனாகத்தான் இருக்கமுடியும்???

அதிலும் எமக்காகச்செத்தவர்களை.....

எமக்காக ஏனென்று கேட்காமல் சாவைத்தேடிச்சென்றவர்களை...

எமக்காக.......??????

அன்பான பெற்றோரே: படத்தை பார்த்த உடனே என்ரை மனதில் குத்தின ஊசிகள் நிறைய்ய.

இனி இந்தப் புலத்தில் ஏதெனும் ஒரு பூங்காவிலோ உதைபந்தாட்ட மைதானத்திலோ பிள்ளைகள் விளையாடும்போது

இந்தப் பொடினின் போட்டோ மனதில் ஒருக்கா வந்துதான் போகும்.

இந்தப் பொடியனின் அப்பா அம்மாவுக்கு என்னால் ஆறுதல் சொல்ல இயலாது.

ஏதோ ஒருவகையிலை இந்தப் பொடியனின் மறைவுக்கு நாங்கள் எல்லாரும்தான் காரணம் நண்பர்களே.

நானும் நீங்களும் இந்தப் பொடியனின் அப்பா அம்மாவும் போராடாமல் இருந்ததால்தான் இவன் போராட்டத்தினுள்

இழுக்கப்பட்டான்.இப்பவும் யார் யாரிலோ குற்றத்தைப் போட்டு தாங்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ளமுயலும் புத்திசாலித்தனம்தான்

நிறைய எழுத்திலை தெரியுது.

'அன்பான பொடியனே உன் சாவுக்கு ஒருவகையில் நானும் காரணம்தான். மன்னித்துக்கொள்ளடா!'

அண்ணை உங்கட அமைச்சூர் தனத்துக்கு அளவே இல்லாமல் போட்டுது...

புலிகளின் தமிழீழ தேசத்துக்கான கட்டமைப்புக்கள் சில

  • காவல்த்துறை.
  • நீதித்துறை.
  • பொருண்மிய மேம்பாடுட்டு நிறுவனம்.
  • வைப்பகங்கள், நிதித்துறை.
  • தமிழீழ போக்கு வரத்து சபை
  • நிர்வாக சேவைகள்

இன்னும் பல சில அல்ல..

சரி புலிகள் தமிழ் மக்களை வதைத்தார்கள் எண்டால் யார் வதை பட்டவர்கள்...??? உங்களுக்கு தெரிந்த அவரின் விபரங்களள தர முடியுமா...??? ( உங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை நானாக பேசி கேட்டு கொள்கின்றேன்... ) எனக்கு பதிலை வவுனியா ககம்பில் இருக்கும் என் குஞ்சி அப்பரை கேளுங்கோ எனும் பதில் தேவை இல்லை... அவரை நேரடியாவ வந்து சொல்ல சொல்லவும்..

உண்மை. சிங்களவன் சொல்வதை எம் ஊடகங்கள் 200 % முக்கியம் கொடுத்து அப்படியே பிரசுரிக்கும் போது.. அதையே எங்களின் ஊடகங்களின் செய்திகள்( செய்தி உண்மையாக இருந்தாலும்) எப்படி உண்மையாக இருக்காது எண்று விமர்சித்து சிங்கள ஊடகங்கள் பிரசுரிக்கும்..

சரி! அப்படியானால் இந்த கட்டமைப்புகள் எல்லாம் எங்கே? கட்டமைப்பை என்பது அசையாத உறுதியான அமைப்பு! ஆனால் இந்த கட்டமைப்புகள் புலிகள் அழிவின் பின் உதிர்ந்து போனது உம் கண்ணுக்கு தெரியவில்லையா? நீர் சொன்ன அமைப்புகள் ஒரு அரசை காப்பாற்ற உதவும் கட்டுமாணங்கள். தேசத்தை கட்டமைப்பது என்பது இதுவல்ல! முதலில் தேசத்தின் கட்டமைப்புகள் பற்றிய விழக்கத்துடன் வாரும் பின்னர் எனது அமச்சூர் தனமான விளக்கத்தை தருகிறேன்.

ஒரு சின்ன உதாரணம்! வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி நாம் தiலையில் அடித்து கத்திக் குளறி ஆரப்பாட்டம் செய்து சண்டை பிடித்து கடைசியில் தமிழர்களின் தாயக பிரதேசமான வடக்கு கிழக்கு அரசியல் ரீதியாக பிரிந்து விட்டது. விடுதலைப் புலிகள் இந்த வீணாப்போன விமானப்படையை கட்டியெழுப்பின காசுக்கு 2002 சமாதான காலப்பகுதியில் வடக்கிற்கும் கிழக்கிற்குமான ஒரு நேரடி தரைவழி பாதையை உருவாக்கியிருந்தால் வடக்கும் கிழக்கும் குறைந்த பட்சம் பெயரளவில் ஆவது இணைந்திருக்கும்! தேசங்கள் உருவாவதற்கான முக்கிய கட்டமைப்பு தேசத்தின் அனைத்து பகுதிகளுக்குமான தடையின்றிய போக்குவரத்து.

ஆனால் தற்போது நமது பாரம்பரிய பிரதேசமான வடக்கில் இருந்து கிழக்கு செல்ல சிங்கள தேசம் ஊடக செல்லவேண்டியுள்ளது.

நாம் 2002 இல் வடக்கிற்கும் கிழக்கிற்குமான ஒரு நீர்பாசன திட்டத்தை கொண்டு சென்றோம். கிழக்கில் அப்போது பொறுப்பில் இருந்த கருணா காட்டிய அக்கறையை கூட வடக்கில் யாரும் காட்டவில்லை. இதனால் கருணா திறம் என்று நான் கூறவரவில்லை. ஆனால் நீர்பாசன திட்டம் நமது தேசத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டம். இந்த திட்டங்களுக்கு பல வெளிநாடுகள் முன்வந்து ஆதரவளித்தன. ஆனால் எமக்கு இதில் அக்கறையில்லை. நாம் ஒரு இராணுவ கட்டமைப்பை கட்டியெழுப்பனோமே தவிர ஒரு தேசத்தை கட்டியெழுப்பவில்லை. நாம் செய்தது 10 ஆயுதக் கப்பல் வாங்கி அதிலை 7 கடலிலை எரித்தது!

நாம் இன்று செய்யக் கூடிய ஒரு விடயம்!

புலம் பெயர் மண்ணில் இருந்து அரசியல் கதைப்பதை விடுத்து அந்த மக்களின் மறுவாழ்வுக்கு இயன்ற அளவ உதவிகளை செய்வது. இது சிறிய அழவில் உங்களுக்கு அங்கு தெரிந்தவர்கள், அங்கு நின்று உதவிசெய்யும் ஸ்தாபனங்கள் மூலமாக செய்வது. நான் கடந்த வாரம் எனக்குபு தெரிந்த நண்பர் ஊடான 3 குடும்பங்களின் மீழ் குடியேற்றத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க ஒரு சிறு தொகையை அனுப்பினேன். இவ்வாறு ஒவ்வொருவரும் செய்ய முடியும். உதவி செய்ய விரும்புவர்கள் வவுனியா அரச அதிபரை தொடர்பு கொண்டால் அந்த பெண்மணி தன்னால் ஆன உதவிகளை பல வழிகளில் செய்து வருகிறார். அங்கு அனாதைகளாக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை நீங்கள் படிக்க ஒரு சிறு தொகை பணத்தை அனுப்பலாம். இது போல் பல உதவிகள் நான் பட்டியலிடலாம். இன்றைய அவர்களின் தேவையை முதலில் ப+ர்தி செய்வேம். மீழ குடியமர்த்தியபின் அந்த மக்கள் கொஞ்சம் மூச்சு விட விடுவோம்.

தாயகத்தில் உங்கள் வீடுகள் ப+ட்டப்பட்டிருக்கிறதா? அதை வீடில்லாத உறவினர்களுக்கு கொடுப்போம். பெருந்தொகை காணிகள் தரிசாக இருக்கிறதா? விவசாயம் செய்ய நம் தமிழ் விவசாயிகளுக்கு கொடுப்போம். வடக்கு கிழக்கில் உள்ள எங்கள் நிலங்கள் பறிபோகாது பாதுகாக்க காணியில்லாத தமிழ் பேசும் மக்களுக்கு குறைந்த விலையில் காணிகளை விற்போம். அல்லது நீண்ட கால வாடகைக்கு விடுவோம். புலம் பெயர் தமிழ் தொழில் அதிபர்களே வடக்கு கிழக்கில் சிறு சிறு முதலீடுகளை செய்து அன்றாடம் தீவனத்திற்கு வழியற்ற மக்களிற்கு வேலைவாய்ப்பை கொடுப்போம். புலம் பெயர் மண்ணில் நாடுகடந்த தமிழீழ அரசு அமைப்பதை விடுத்து நாடுகடந்த ஒரு தமிழ் கூட்டுறவு வங்கியை ஆரம்பிப்போம். இதன் மூலம் தமிழருக்கான ஒரு பொது பொருளாதாரத்தை சர்வதேசத்தில் கட்டியெளுப்புவோம். இன்று பலத்தை தம் வசம் வைத்திருப்பவர்கள் ஆயுத பலம் கொண்டவர்கள் அல்ல மாறாக பொருளாதார பலம் கொண்டவர்களே. இலங்கையில் மகிந்த அரசை விழுத்த வேண்டுமா எமது பொளாதார பலம் மூலம் மாற்று ஆட்சியை அமைப்போம். எமது எதிரியை விழுத்த பேயுடனும் கூட்டு சேரலாம் என்ற வகையில் மகிந்த அரசை விழுத்தி அவர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவோம். 30 வருடத்திற்கு மேலாக ஆயுதம் கொண்டு போராடிய தலைவர் அது முடியாது என்று இறுதியில் ஆயுதத்தை மௌனித்தது நமது போராட்டத்தின் தோல்வியல்ல, ஆனால் இது நாம் எதற்காக போராடுகிறோம் என்பதை மீண்டும் ஆராய வேண்டிய சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறது.

பிரிந்து போவது மட்டும் தான் தீர்வு என்பதை மறு பரிசீலனை செய்யும் நேரம்! அதே போல் பிரிந்து போவதை கைவிடுவது மட்டும் தீர்வாகவும் மாட்டாது. இதை ஒரு விவாதப் பொருளாக எற்று ஆரய வேண்டிய கட்டாயம் நமக்கு முன் உள்ளது.

ஆராய வேண்டிய....

அதிலும்அவசரமாய் செய்யவேண்டியவை பல உள்ளன

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி சனம் இங்க இருந்து கொண்டு யாழ்பாணத்தில காணின்ட விலை கூடிட்டுதாம் எப்படி அத விக்கலாம்என்டு திங் பன்னிகொண்டு இருக்கேக்க வீட குடுக்கிறதோ?

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் உங்கள் வீடுகள் பூட்டப்பட்டிருக்கிறதா? அதை வீடில்லாத உறவினர்களுக்கு கொடுப்போம்.

பெருந்தொகை காணிகள் தரிசாக இருக்கிறதா? விவசாயம் செய்ய நம் தமிழ் விவசாயிகளுக்கு கொடுப்போம்.

வடக்கு கிழக்கில் உள்ள எங்கள் நிலங்கள் பறிபோகாது பாதுகாக்க காணியில்லாத தமிழ் பேசும் மக்களுக்கு குறைந்த விலையில் காணிகளை விற்போம்.

அல்லது நீண்ட கால வாடகைக்கு விடுவோம்.

புலம் பெயர் தமிழ் தொழில் அதிபர்களே

வடக்கு கிழக்கில் சிறு சிறு முதலீடுகளை செய்து அன்றாடம் தீவனத்திற்கு வழியற்ற மக்களிற்கு வேலைவாய்ப்பை கொடுப்போம்.

புலம் பெயர் மண்ணில் நாடுகடந்த தமிழீழ அரசு அமைப்பதை விடுத்து நாடுகடந்த ஒரு தமிழ் கூட்டுறவு வங்கியை ஆரம்பிப்போம்.

இதன் மூலம் தமிழருக்கான ஒரு பொது பொருளாதாரத்தை சர்வதேசத்தில் கட்டியெளுப்புவோம்.

இன்று பலத்தை தம் வசம் வைத்திருப்பவர்கள் ஆயுத பலம் கொண்டவர்கள் அல்ல மாறாக பொருளாதார பலம் கொண்டவர்களே.

இலங்கையில் மகிந்த அரசை விழுத்த வேண்டுமா எமது பொளாதார பலம் மூலம் மாற்று ஆட்சியை அமைப்போம்.

எமது எதிரியை விழுத்த பேயுடனும் கூட்டு சேரலாம் என்ற வகையில் மகிந்த அரசை விழுத்தி அவர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவோம்

எமது மக்களுக்கு நன்மை தரும் எதையும் எவருடனும் சேர்ந்து செய்வோம்

எல்லோருடைய ஆலோசனையும் செவிமடுப்போம்

  • தொடங்கியவர்

புலிகளால் கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர் என்றால் கவலைதான். ஆனால் அதை இங்கு கொண்டுவந்து இணைத்தவர் என்ன நோக்கத்திற்காக இதைச் செய்தார் என்பது சந்தேகமாக இருக்கிறது.

இங்கு உந்தாள் உதை இணைத்ததற்கு நிறையக் காரணங்கள் இருக்கலாம் ...

1. ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர், எஜமானர்களின் ஏவலில்

2. ரோவோ, சிங்களமோ அள்ளிக் கொடுததை வாங்கியதற்கு ....

3.

இப்படியும் இருக்கலாம்!! இல்லை ...

1. வேலியே பயிரை மேய்ந்து விட்டதை கூற ..

2. சரணாகதி, தற்கொலை, அழிவு என முடிபை ஏற்கனவே எடுத்திருந்தால், ஏன் இவைகள் ..

3. சிங்களவன் அழித்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் எம்மவர்களும் சேர்ந்து அழித்தார்கள் என்பதை ....

4 .....

....... இப்படியும் இருக்கலாம்!!!!!!!!!!!!

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.