Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல பேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் காலமானார்

Featured Replies

பிரபல பேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் காலமானார்

சென்னை, செப்.16 : பிரபல தமிழ் பேச்சாளரும், எழுத்தாளருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69.

கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

தமிழக தலைவர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறந்தது: அரியலூர் மாவட்டம், கொள்ளிடக் கரையோர கிராமம், தென்கச்சி. விவசாயக் குடும்பம்.

படித்தது: பி.எஸ்சி., (வேளாண்மை), கோவை விவசாயக் கல்லூரி.

பணிகள்:

தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக 3 ஆண்டுகள்.

தென்கச்சி ஊராட்சி மன்றத் தலைவராக 7 ஆண்டுகள்.

வானொலியில் 24 ஆண்டுகள். சென்னை வானொலியில் உதவி நிலைய இயக்குனராகப் பணியாற்றி 2002-ல் பணி நிறைவு.

'இன்று ஒரு தகவல்' என்ற வானொலி நிகழ்ச்சியை 14 ஆண்டுகள் தொடர்ந்து நாள்தோறும் வழங்கினார்.

17-வது வயதில் எழுதிய முதல் கவிதை, பாவேந்தர் பாரதிதாசனின் 'குயில்' இதழில் (14.07.1959) வெளிவந்தது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, அனைவரும் ரசித்த 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சிக்கு சொந்தக்காரர்.

எளிமையின் இலக்கணம்!

மனிதநேயத்தை முன்னிறுத்தும் எழுத்தாலும், எளிய தமிழ்ப் பேச்சினாலும் தமிழ் வாசகர்களையும், வானொலி நேயர்களையும் வெகுவாக வசீகரித்தவர், பேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன்.

தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி இவர், சென்னை வானொலியின் உதவி நிலைய இயக்குனராக 24 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

வானொலியில் வேளாண்மை, விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு ஏற்பட்டதற்கு, இவரது பங்கு மகத்தானது. விவசாய நிகழ்ச்சிகளை பேச்சு வழக்கில் தெளிவாக வழங்கியது குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இன்றைய வானொலி நிகழ்ச்சிக்கெல்லாம் முன்னோடிகளில் இவரும் ஒருவர் என்று சொன்னால், அது மிகையாகாது.

சென்னை வானொலியில் 'இன்று ஒரு தகவல்' என்ற வானொலி நிகழ்ச்சியை 14 ஆண்டுகள் தொடர்ந்து நாள்தோறும் வழங்கினார். இது மிகப் பெரிய சாதனை. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தகவல்களை தனக்கே உரிய எளிய பாணியில் வழங்கி வந்தார். இதில் மனித நேயம் சார்ந்த எண்ணற்ற கருத்துகளும், அனுபவங்களும் புதைந்து கிடைக்கும்.

அறிவுரை என்ற விஷயத்தை ஆர்வமில்லாதவர்கள் கூட, தென்கச்சி. கோ.சுவாமிநாதனின் எழுத்தை வாசித்தாலோ அல்லது அவரது பேச்சைக் கேட்டாலோ மனம் மாறுவது உறுதி. மிக இயல்பாக மனிதர்களை ஆட்கொள்ளும் வல்லமை, அவரது எழுத்துக்கும் பேச்சுக்கும் உண்டு. இவரது ஆன்மிகம் சார்ந்த சிந்தனையும் எழுத்தும் வாசகர்களுக்கு மிகுந்த பயனளிப்பவையாகும்.

ஒழுக்கம், மனித நேயம், நற்குணங்கள் போன்றவற்றை அனைவருக்கும் போதித்ததோடு, அந்த நற்பண்புகளை தனது வாழ்நாள் முழுவதும் பிறழாது கடைப்பிடித்தவர், தென்கச்சி கோ.சுவாமிநாதன்.

விகடன்.காம்

  • கருத்துக்கள உறவுகள்

Thenkachi+Swaminathan.jpg

அன்னாரின் மறைவுக்கு எனது அஞ்சலிகளும் .

அவரின் பிரிவுத்துயரால் வாடும் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

இன்று ஒரு தகவல் என்னும் இவரின் நிகழ்ச்சி மிகவும் சிறப்பானது. பலர் இதனை விரும்பிக் கேட்பதனை கண்டுள்ளேன்.

அன்னாரின் ஆத்மா இறைவன் திருவடிகளை சென்றடைய பிராத்திப்பதுடன் அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும்

எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இவருடைய கதைகளைக் கேட்க பிடிக்கும். ஆனால் இவரின் குரலை சேவையை சிறுவயதில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்த காலத்தில் இந்திய வானொலிகள் நடத்திய "வெற்றிமாலை", "அன்பு வழி" நிகழ்ச்சிகளில் பிரச்சார நோக்கில் பொய்கள் சொல்ல என்று பாவித்ததில் இருந்து இவரின் மீதான நன்மதிப்பும் இல்லாமல் போய்விட்டது.

இருந்தாலும் அன்னாரின் தமிழ் பணிக்காக பாராட்டுதல் தகும்.

ஆழ்ந்த அனுதாபங்கள்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கதைகளை சொல்லும் போது எந்த வித சோடிப்பும் இல்லாமல் சொல்வார்.ஆழந்த கருத்துக்கள் உள்ளே இருக்கும். பாமரனுக்கும் எளிதாக விளங்கும்.கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்திக்காக வேண்டுவதுடன் அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இவரின் குரலை சேவையை சிறுவயதில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்த காலத்தில் இந்திய வானொலிகள் நடத்திய "வெற்றிமாலை", "அன்பு வழி" நிகழ்ச்சிகளில் பிரச்சார நோக்கில் பொய்கள் சொல்ல என்று பாவித்ததில் இருந்து இவரின் மீதான நன்மதிப்பும் இல்லாமல் போய்விட்டது.

இந்திய கொலைகாரப்படை ஈழமண்ணில் இருக்கும் போது, இந்திய வானொலியில் அன்புவழி நிகழ்ச்சியில் இவரின் பொய்யுரைப்பைக் கேட்டு , இவரின் குரலைப் பிறகு எனக்கும் பிடிக்கவில்லை.

  • தொடங்கியவர்

உண்மையில் மிக அருமையான பேச்சாளர். எதையும் இலகு தமிழில் கூறி விளங்க வைப்பதில் வல்லவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கந்தப்பு வானொலியில் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையைத் தான் செய்தார். அதில் அவரைக் குறை கூறுவதில் பிரயோசனமில்லை. உங்களைப் போன்ற சிலருக்கு எதையும் அரசியலாக்கிப் பார்ப்பதில் ஆனந்தம். காகம் திட்டி மாடு சாவதில்லை.

கந்தப்பு வானொலியில் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையைத் தான் செய்தார். அதில் அவரைக் குறை கூறுவதில் பிரயோசனமில்லை. உங்களைப் போன்ற சிலருக்கு எதையும் அரசியலாக்கிப் பார்ப்பதில் ஆனந்தம். காகம் திட்டி மாடு சாவதில்லை.

நெருப்பிலோ அல்லது தேனியிலோ கூப்பிட்டு எழுத சொன்னால், நானோ அல்லது தமிழ் தேசியத்தை உண்மையான மனசுடன் ஆதரிப்பவர்களோ எழுத மாட்டார்கள். விசத்துடன் சேர்ந்து பால் விக்க முடியாது. வெறும் பணம் சம்பாதிப்பது தான் குறிக்கோள் என்றால், உலகில் கொள்ளை அடிப்பவருடன் கூட உறவாடலாம்

  • தொடங்கியவர்

நிழலி,

இன்று தமிழ்த் தேசியத்தின் பாதுகாவலர்களாக தம்மைப் பறைசாற்றி வந்த சில ஊடகவியலாளர்களின் அதீத கற்பனைகளும், உண்மைக்குப் புறம்பான எழுத்துகளும் தான் அந்த மக்களின் இன்றைய நிலைகளுக்கு காரணமானவர்களுள் அடக்கம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அதுதான் உண்மை. அது போல சுவாமிநாதன் ஒரு வானொலியில் கடமையாற்றும் போது, அவர் தனக்குத் தரப்பட்ட வேலையைச் செய்தார். சுவாமிநாதனைப் பொறுத்தவரை அவர் தனிப்பட்ட முறையில் மிகவும் நேர்மையான ஒரு ஊடகவியலாளர், மிக எளிமையானவரும் கூட. இன்று தேசியம் பேசியவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைத்தளவிற்கு, வேறு எவரும் ஏமாற்றிப் பிழைக்கவில்லை. இந்த இலட்சணத்தில் அடுத்தவரைக் குறை கூற எவருக்கும் தகுதியில்லை.

இவரிடம் ஒரு தடவை ஒரு பேட்டியின்போது

உடனடியாக கண்ணீர் வரவழைக்கக்கூடியமாதிரி

ஒருவரியில் சொல்லமுடியுமா?

என கேட்டபொழுது அவர் சொன்ன பதில்

ஈழத்தமிழன்

என்று சொன்னதாக வானொலி ஒன்றில் கேட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் மிக அருமையான பேச்சாளர். எதையும் இலகு தமிழில் கூறி விளங்க வைப்பதில் வல்லவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கந்தப்பு வானொலியில் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையைத் தான் செய்தார். அதில் அவரைக் குறை கூறுவதில் பிரயோசனமில்லை. உங்களைப் போன்ற சிலருக்கு எதையும் அரசியலாக்கிப் பார்ப்பதில் ஆனந்தம். காகம் திட்டி மாடு சாவதில்லை.

ஏன் சரத் பொன்சேகாவும் சிறந்த இராணுவத்தளபதி. அவருக்கு சிறிலங்கா அரசு கொடுத்த வேலையைச் செய்தார். ஆகவே நீங்கள் சரத் பொன்சேகாவை ஆதரிப்பீர்களா?

  • தொடங்கியவர்

ஏன் சரத் பொன்சேகாவும் சிறந்த இராணுவத்தளபதி. அவருக்கு சிறிலங்கா அரசு கொடுத்த வேலையைச் செய்தார். ஆகவே நீங்கள் சரத் பொன்சேகாவை ஆதரிப்பீர்களா?

நீங்கள் எப்படி சரத் பொன்சேகாவையையும் சுவாமிநாதன் அவர்களையும் ஒப்பிடுகின்றீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. சரத் பொன்சேகாவைப் பொறுத்தவரை அவருக்கு தானாக போர் நடவடிக்கைகளுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தவோ அல்லது நெறிப்படுத்தவோ அதிகாரமுள்ளவர். ஆனால் சுவாமிநாதன் அப்படியான பொறுப்பில் இருக்கவில்லையென்பதை தாங்கள் உணராதது வேடிக்கையானது.

தயவுசெய்து உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ; "எனியும் புலம்வாழ் உறவுகளை உசுப்பேத்தி சுகம் காணுவதை நிறுத்திவிட்டு, அந்த வன்னி மக்களுக்கு ஏதாவது உருப்படியாகச் செய்யலாமா என்பதை ஆக்கபூர்வமாக சிந்தித்துச் செயல்படுங்கள் ".

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ; "எனியும் புலம்வாழ் உறவுகளை உசுப்பேத்தி சுகம் காணுவதை நிறுத்திவிட்டு, அந்த வன்னி மக்களுக்கு ஏதாவது உருப்படியாகச் செய்யலாமா என்பதை ஆக்கபூர்வமாக சிந்தித்துச் செயல்படுங்கள் ".

நான் அன்புவழி நிகழ்ச்சியை 87ல் கோவில் 45 நாட்கள் அகதி வாழ்க்கையாக இருந்த போது கேட்டேன். எறிகணைத்தாக்குதல். கோவிலின் பின்பக்கத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கொல்லப்பட்ட அப்பாவித்தமிழர்களின் பிணங்களை எறிக்கும் போது வந்த பிணவாசனையுடன் 1000க்கு மேற்பட்ட மக்களுடன் கோவிலில் இருந்தேன். அங்கு ஒருவரிடம் வானொலி இருந்தது. அதில் அன்புவழி நிகழ்ச்சியில் தென்காசி சுவாமி நாதனின் உரையைக்கேட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது முதல் எனக்கு அவ்வுரையினால் அவர் மீது இருந்த மதிப்புக் குறைந்தது. இது எனது தனிப்பட்ட கருத்து. உங்களுக்கு அவர் மீது மதிப்பு இருக்கலாம். பலருக்கு அவர் மீது மதிப்பு இருக்கலாம். ஒருவருக்கு ஒருவரைப் பிடித்தால் இன்னொருவருக்கு அவரைப் பிடிக்காமல் இருக்கலாம். நெடுக்காலபோவான் இங்கு கருத்து எழுதியது போல எனது கருத்தைச் சொன்னேன். இதற்கும் மக்களை உசுப்பேத்துவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. சரத் பொன்சேகாவை உங்களின் கருத்துக்கு ஊதாரணத்துக்குத் தான் சொன்னேன்.

  • தொடங்கியவர்

நான் அன்புவழி நிகழ்ச்சியை 87ல் கோவில் 45 நாட்கள் அகதி வாழ்க்கையாக இருந்த போது கேட்டேன். எறிகணைத்தாக்குதல். கோவிலின் பின்பக்கத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கொல்லப்பட்ட அப்பாவித்தமிழர்களின் பிணங்களை எறிக்கும் போது வந்த பிணவாசனையுடன் 1000க்கு மேற்பட்ட மக்களுடன் கோவிலில் இருந்தேன். அங்கு ஒருவரிடம் வானொலி இருந்தது. அதில் அன்புவழி நிகழ்ச்சியில் தென்காசி சுவாமி நாதனின் உரையைக்கேட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது முதல் எனக்கு அவ்வுரையினால் அவர் மீது இருந்த மதிப்புக் குறைந்தது. இது எனது தனிப்பட்ட கருத்து. உங்களுக்கு அவர் மீது மதிப்பு இருக்கலாம். பலருக்கு அவர் மீது மதிப்பு இருக்கலாம். ஒருவருக்கு ஒருவரைப் பிடித்தால் இன்னொருவருக்கு அவரைப் பிடிக்காமல் இருக்கலாம். நெடுக்காலபோவான் இங்கு கருத்து எழுதியது போல எனது கருத்தைச் சொன்னேன். இதற்கும் மக்களை உசுப்பேத்துவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. சரத் பொன்சேகாவை உங்களின் கருத்துக்கு ஊதாரணத்துக்குத் தான் சொன்னேன்.

உங்கள் அறிமுகப்படலத்தில் நீங்கள் எழுதிய ஆரம்பமே இன்றும் என் ஞாபகத்தில் வருகின்றது. " ஐயகோ எனக்கு மன்னிப்பே கிடையாதா ?? தவறு செய்து விட்டேன், துரோகம் செய்து விட்டேன் " என்று ஆர்ப்பாட்டமே பண்ணினீர்கள். ஆனால் அப்படி என்ன தவறு செய்தீர்கள் துரோகம் செய்தீர்கள் என்று பார்த்தால் அது ஒன்றையும் அங்கு காணவில்லை. மொத்தத்தில் எதையாவது எழுதி பரபரப்பாக்க வேண்டுமென்பதே உங்கள் குறியென்பதை அன்றே உணர்ந்து கொண்டேன். அதுபோலவே இன்றுவரை நீங்கள் நடந்து கொள்ளுகின்றீர்கள். நீங்கள் இன்று வரை இந்தக் களத்தில் இட்டவை அனைத்துமே அடுத்தவர்களை வெறுமனே உசுப்பேற்றி விட்டு சுகம் காண்பனவே. ஒரு மனிதனின் இறப்பில் அவருக்கு அஞ்சலி செலுத்துவது பொதுவான மனிதனின் இயல்பு. விருப்பமில்லாவிட்டால் அஞ்சலியே செலுத்தாது விடலாம். ஆனால் உங்களைப் போன்ற சிலர் அங்கு தான் உங்க வீராப்பை காட்ட வருவீர்கள். இதனால் உங்களைப் போன்றவர்கள் சாதித்தது என்ன ?? உலகம் முழுவதும் இலங்கைத் தமிழனென்றால் எதிரியாகவே பார்க்க வைத்தது தான் மிச்சம். எனியாவது புரிய முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்தவன் சாவில் , தன்னை வாழ வைப்பவர்களை இங்கும் அடையாளம் காண முடிகிறது.

ஈழத் தமிழ் சமூகம் அதில் முதன்மை வகிக்கிறது.

இறந்த அந்த உன்னத கலைஞருக்கு

எமது அஞ்சலிகள்.

நெருப்பிலோ அல்லது தேனியிலோ கூப்பிட்டு எழுத சொன்னால், நானோ அல்லது தமிழ் தேசியத்தை உண்மையான மனசுடன் ஆதரிப்பவர்களோ எழுத மாட்டார்கள். விசத்துடன் சேர்ந்து பால் விக்க முடியாது. வெறும் பணம் சம்பாதிப்பது தான் குறிக்கோள் என்றால், உலகில் கொள்ளை அடிப்பவருடன் கூட உறவாடலாம்

நீங்கள் எழுத மாட்டீர்கள் என்று தெரியும். ஆனால் ரிபிசியில செய்தி வாசித்த வசம்பர் எழுதுவார்.

  • தொடங்கியவர்

நீங்கள் எழுத மாட்டீர்கள் என்று தெரியும். ஆனால் ரிபிசியில செய்தி வாசித்த வசம்பர் எழுதுவார்.

:rolleyes:மறை களண்டு போனால், கற்பனைகளும் அதன் வடிவத்தில் தான் வருமென்பது தெரிந்தது தான். முன்பும் சிலருக்கு இப்படி மறை களண்டு பிதற்றி, இப்போது தெளிந்துள்ளனர். இவருக்கு எப்போதோ?? <_<

நீங்கள் எழுத மாட்டீர்கள் என்று தெரியும். ஆனால் ரிபிசியில செய்தி வாசித்த வசம்பர் எழுதுவார்.

நன்றி சிவக்குமரன் என்னைப் பற்றிய உங்களின் மதிப்பீட்டுக்கு

ஆனால், ஒருவரை இன்னொருவர் என்று எந்தவிதமான ஆதர்ரமும் இல்லாமல் போகின்ற போக்கில் எழுதுவது சரியல்ல. உங்களுக்கு ரி பி சி யில் வாசிப்பவரும் வசம்புவும் ஒருவர் தான் என்றால் ஆதாரங்களுடன் முன்வையுங்கள். வசம்புவின் எழுத்துகளை யாழ் வாசிக்கும் காலத்தில் இருந்து பார்த்து வருகின்றேன். பல நேரங்களில் அவரின் கருத்துகளும் என் கருத்துகளும் ஒரே திசையில் அமையாது முரண்பட்டே நிற்கும். அதற்காக ஒருவரை எந்தவிதமான ஆதாரமும் இன்றி இன்னார் தான் என முத்திரை குத்துவதை ஏற்கமுடியாது.

யாழ் களத்தில் புலிகள் வெல்லும் வரை புலிகளுக்கு காவடி தூக்கியவர்கள், பிரபாகரனை புகழோ புகழ் என புகழ்ந்தவர்கள் இன்று புலிகள் தோற்றுவிட்டார்கள் என்றவுடன் விசமிகளாக மாறி எழுதுவதை விட வசம்பு அன்றில் இருந்து இன்று வரை ஒரே மாதிரித்தான் எழுதுகின்றார் என்பதில் அவரின் கருத்து நேர்மையை புரிய முடிகின்றது (அந்தக் கருத்துகள் என் கருத்துகளுடன் எவ்வகையிலும் ஒத்ததாக இல்லாவிடினும்)

Edited by நிழலி

  • தொடங்கியவர்

நன்றி நிழலி உங்கள் புரிதலுக்கு.

:rolleyes: கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ள முடியாத சில அறிவிலிகள் தான், தங்கள் கற்பனைகளை அவிழ்த்து விடுவார்கள். அவர்களின் இயலாமையைப் பார்த்து பரிதாபப்படத்தான் முடியும். <_<

Edited by Vasampu

  • தொடங்கியவர்

தென்கச்சி கோ.சுவாமிநாதன் பற்றி 1999 இல் விகடனில் வந்த ஒரு கட்டுரையை விகடன் திரும்பவும் மறுபிரசுரம் செய்துள்ளது. அதனை இங்கே இணைத்துள்ளேன். - வசம்பு

'' எங்க ஊரு எம்.ஜி.ஆரு! ''

9.5.1999

தமிழ் சினிமாக்களில் வரும் 'நாட்டாமை' ரேஞ்சுக்கு சுவாமிநாதனைக் கொண்டாடுகிறார்கள் தென்கச்சியில். ''அவர் பேச்சுக்கு இங்க மறுபேச்சு இல்லீங்க. பெத்த புள்ளையா இருந்தாலும், அவர் நாக்கு தப்பா புரளாது. அவர் சொல்றதுதான் தீர்ப்பு. ஒரு வார்த்தை யாரையாவது திட்டியிருப்பாரா? உதவின்னு வந்து நின்ன ஒருத்தரையாவது வெறுங்கையோட அனுப்பியிருப்பாரா?''

- ஆல் இண்டியா ரேடியோ வில் காமெடியாக 'இன்று ஒரு தகவல்' சொல்லிக்கொண்டு இருக்கும் சுவாமிநாதனுக்கு இப்படியரு 'ஹீரோ' மாதிரி யான மறுபக்கம் இருப்பது எதிர் பார்க்காத இன்ப அதிர்ச்சி!

தென்கச்சி கிராமம் (முழுப்பெயர் - தென்கச்சி பெருமாள் நத்தம்) உருவானதிலிருந்து இவர்கள் குடும்பம்தான் ஊருக்குத் தலைமைப் பொறுப்பேற்று வருகிறதாம். மக்கள் வோட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் முறை வந்த பிறகும், இப்போதும் சுவாமிநாதனின் தம்பி வில்வநாதன்தான் ஊர் பிரசிடெண்ட். இப்போது கூட ஊரில் ஏதாவது முக்கிய பிரச்னை என்றால், சென்னைக்குத் தகவல் அனுப்பி சுவாமிநாதனை வரவழைக்கிறார்கள். சமீபத்தில் கூட விவசாயக் கூலிகள் தொடர்பான ஒரு பிரச்னையைத் தீர்த்து வைத்துவிட்டுப் போனாராம் சுவாமிநாதன்.

சுவாமிநாதனும் பிரசிடெண்ட்டாக இருந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் அவர் செய்த சில அசாதாரண காரியங்கள் தான் இன்றளவும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றன.

''இந்த தாலூகாவிலேயே முதன்முதலா ட்யூப்லைட் வந் தது எங்க ஊருக்கு தான். கொண்டு வந்தவர் எங்க சுவாமி நாதன்தான்!'' என்று பெருமை யோடு சொன்னார் கணேசன் என்பவர்.

''நிலமில்லாத ஏழைகள் சும்மா கிடக்கிற புறம்போக்கு நிலத்தைப் பயன்படுத்தலாம்னு அப்போ ஒரு சமயம் கருணாநிதி அறிவிச்சிருந்தார். அதை முதன் முதலா செயல்படுத்திக் காட்டி யதும் சுவாமிநாதன் தான். ஊருக்கு ஒதுக்குப்புறமா கொள்ளிடம் ஆற்றுக்கரையில இருந்த புறம்போக்கு நிலத்தை ஏழைங்க நூறு பேருக்குப் பிரிச்சுக் கொடுத்தார். இன்னிவரைக்கும் அந்தக் குடும்பங்களுக்கு அந்த இடம்தான் சோறு போடுது. இது மட்டும் இல்லீங்க... ஊருக் காக ஒரு பொதுக் கிணறு உண்டாக்கினாரு. நெல் களம் அமைச்சுக் கொடுத்தாரு. இன் னிக்கு அரசியல்ல ஃபேஷனா மாறிட்ட இலவச கல்யாணத்தைக் கூட இவரு அப்பவே நடத்தி வெச்சிருக்காரு. சொல்லப் போனா, எங்களோட எம்.ஜி.ஆருங்க அவர்!'' என்று சிலிர்க்கிறார் முருகேசன் என்பவர்.

''அவரோட பெருந்தன்மை யாருக்கும் வராதுங்க. ஏழை, பணக்காரன்னு பார்க்காம யாருக்காகவும் பாடுபடுவாரு. ஆடம்பரம்னா என்னன்னே தெரியாத மனுஷர். ரிடையரானதும் அவர் எங்க ஊருக்கே வந்துடணும். மறுபடியும் தலைவராகி அடுத்த தலைமுறையைத் தூக்கி நிறுத்தணுங்க. நீங்க பார்த்தீங்கன்னாலும் அவர் கிட்டே சொல்லுங்க!'' என்று வேண்டுகிறார்கள் ஊர் மக்கள்.

நன்றி ஆனந்த விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.