Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான்கு வருடங்களில் மிகப்பெரிய ஈழ போராட்டம் வெடிக்கும்: சீமான்

Featured Replies

உந்தக் கவர் கொடுக்கும் பணத்தை வேண்டுமானால் தமிழகத்திலேயே அகதிகளாக சிரமப்படும் மக்களுக்குக் கொடுத்தாலாவது புண்ணியம். வெறும் விளம்பரத்திற்காக ஊடகவியலாளராக வருவோருக்கு கவர் கொடுத்து செய்திகளை எழுதுவிப்பதில் என்ன பயன் ?? உங்களுக்கு தந்த கவரையும் திருப்பிக் கொடுக்க தங்களுக்கு மனம் வரவில்லையோ ??

சாப்பாட்டிற்கே கடன் பட்டவர்களுக்கு கவர் கொடுக்க பணம் எங்கிருந்து வந்தது ?? கணனி இருக்கின்றது விரல் இருக்கின்றது என்பதற்காக டைப்படிக்க வேண்டாமெனும் தாங்கள், கவருக்காக மட்டுமே எழுத வேண்டுமென்கின்றீர்களா ??

நான் அவர்கள்வீட்டில் தங்கி இருந்தது அண்ணன் சிறையில் இருந்தகாலம். சென்னையில் அவர்களை சந்தித்து கடந்த வாரம் இடையில் சிறையில் இருந்து வந்து அவரது படம் முடித்து கொடுத்தார். அந்த படத்தில் வந்தவைகளை வைத்துதான் நாம் தமிழர் இயக்கத்தின் அனைத்து பணிகளும், சிங்களனை எதிர்த்து கூட களத்தில் நின்று விடலாம் ஆனால் இப்படி குறுட்டாம் போக்கில் சந்தேக கனைகளை வீசுபவர்கள் முன்பு நிற்பது ரொம்ப கஷ்டமுடா சாமீ

  • Replies 70
  • Views 5.8k
  • Created
  • Last Reply

புஸ்பவனம் குப்புசாமியின் தாய் தந்தையும் இதே நிலையில் தான் இன்றும் இருக்கின்றார்கள். அதற்காக புஸ்பவனம் குப்புசாமியும் ஏழ்மையில் வாடுகின்றார் என்றா அர்த்தம் ??

விஜய்யை பற்றியோ அல்லது வேறு ஈழ மக்களுக்கு எதிராக குரல் கொடுத்தவரை அல்லது காங்கிரஸ் அனுதாபியை பற்றியோ நாம் ஏதாவது கோபமாக சொன்னால், உடனே "இப்படித்தான் நாம் எல்லோரினது ஆதரவையும் இழந்தோம்" என வியாக்கியனம் செய்வீர்கள் வசம்பு. அதே நேரத்தில் ஈழமக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர்களை பற்றி நாம் பாராட்டி எழுதினால் கிளர்ந்து எழுந்து ஆதாரமற்ற செய்திகளை வைத்துக் கொண்டு வாக்குவாதப்படுகின்றீர்கள். உங்களின் நடுநிலை என்பதன் நேர்மை புரிகின்றது

உங்களால் சீமான் ஈழ மக்களுக்காக குரல் கொடுத்துதான் பிழைப்பு நடத்துகின்றார், தன் சொந்த உழைப்பில் அல்ல என்ப்தை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? மற்றவரின் கருத்தில் இருந்து எடுத்து எதிர்கேள்விகளின் மூலம் ஆதாரம் காட்டாமல், நம்பக்கூடிய வேறு ஆதாரம் உள்ளதா உங்களிடம்?

நான் அவர்கள்வீட்டில் தங்கி இருந்தது அண்ணன் சிறையில் இருந்தகாலம். சென்னையில் அவர்களை சந்தித்து கடந்த வாரம் இடையில் சிறையில் இருந்து வந்து அவரது படம் முடித்து கொடுத்தார். அந்த படத்தில் வந்தவைகளை வைத்துதான் நாம் தமிழர் இயக்கத்தின் அனைத்து பணிகளும், சிங்களனை எதிர்த்து கூட களத்தில் நின்று விடலாம் ஆனால் இப்படி குறுட்டாம் போக்கில் சந்தேக கனைகளை வீசுபவர்கள் முன்பு நிற்பது ரொம்ப கஷ்டமுடா சாமீ

:)அட நல்லாத்தான் கவர் பண்ணுகின்றீர்கள். உண்மையில் நான் எழுதியவற்றில் பலதை உங்களையறியாமலே நீங்கள் உறுதிப்படுத்தி என் கருத்திற்கு வலுச் சேர்த்துள்ளீர்கள். தொடர்ந்தும் வாருங்கள் மிகுதியையும் உறுதிப்படுத்த. அப்போது தான் சிலரை குறுட்டாம் போக்கில் ஆதரிப்பவர்களுக்கு உண்மைகள் புரியும். :rolleyes:

விஜய்யை பற்றியோ அல்லது வேறு ஈழ மக்களுக்கு எதிராக குரல் கொடுத்தவரை அல்லது காங்கிரஸ் அனுதாபியை பற்றியோ நாம் ஏதாவது கோபமாக சொன்னால், உடனே "இப்படித்தான் நாம் எல்லோரினது ஆதரவையும் இழந்தோம்" என வியாக்கியனம் செய்வீர்கள் வசம்பு. அதே நேரத்தில் ஈழமக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர்களை பற்றி நாம் பாராட்டி எழுதினால் கிளர்ந்து எழுந்து ஆதாரமற்ற செய்திகளை வைத்துக் கொண்டு வாக்குவாதப்படுகின்றீர்கள். உங்களின் நடுநிலை என்பதன் நேர்மை புரிகின்றது

உங்களால் சீமான் ஈழ மக்களுக்காக குரல் கொடுத்துதான் பிழைப்பு நடத்துகின்றார், தன் சொந்த உழைப்பில் அல்ல என்ப்தை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? மற்றவரின் கருத்தில் இருந்து எடுத்து எதிர்கேள்விகளின் மூலம் ஆதாரம் காட்டாமல், நம்பக்கூடிய வேறு ஆதாரம் உள்ளதா உங்களிடம்?

விஜய்யை விமர்சிப்பதாக எண்ணிக் கொண்டு விஜய் மனைவி நம்மூர் பெண்மணி என்று தெரிந்தும், அந்தப் பெண்ணையும் விபச்சாரி என்று தூற்றி மகிழும் கூட்டத்தை என்றாவது நீங்கள் கண்டித்தீர்களா ?? அப்படியாயின் அத்தூற்றி மகிழும் மனநோயாளர்களில் நீங்களும் ஒருவரா ?? இன்றுவரை ஏன் தூற்றுகின்றோமென்று தெரியாமலே தூற்றும் பலரைத் தான் நான் பார்க்கின்றேன். ஆனால் சந்தர்ப்பத்தைப் பாவித்து அடுத்தவனை சுரண்டி வாழுவோரை, பலர் அடையாளம் கண்டு கொள்வதில்லை. இதே களத்தில் புனர்வாழ்வுக் கழகத்தின் விளம்பரம் ஒன்றையும் பார்த்திருப்பீர்கள். புனர்வாழ்வுக் கழகத்தால் இலங்கையில் ஒன்றுமே செய்ய முடியாதென்பது இன்று எல்லோருக்கும் தெரிந்தும், தொடர்ந்தும் சிலர் ஏமாற்ற முயல்கின்றார்ககள். அதைக் கூட நான் சுட்டிக் காட்டிய பின்னால்த் தான் பலர் வந்து தமது கருத்துகளையும் பதிகின்றார்கள். இப்படியான விடயங்களை காணும் போதெல்லாம் நீங்கள் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி நல்ல பிள்ளையாகி விடுவீர்கள். இது சந்தர்ப்பவாதம் . அப்படிச் சந்தர்ப்பவாதியாக வாழ்வது தான் சரியென்று தங்களுக்குப் பட்டால் ...........??

சீமான் போன்றவர்கள் பற்றி நான் சொல்லியதை விட தற்போது புதிதாக இணைந்தவர், அவரையும் அறியாமலே சில தகவல்களை எழுதினாரே. அவை உங்களுக்குப் புரியவில்லையா ?? காந்தி நோட்டுக் கொடுத்துத் தான் ஊடகவியலாளரை சீமான் கவர் பண்ணுகின்றாரென்றால் அதன் அர்த்தம் என்ன ?? கவர் கொடுத்து வாக்கு வாங்கும் அரசியல்வாதிகளுக்கும் சீமானுக்கும் என்ன வித்தியாசம் ?? பெரியாரின் சீடனென்று தன்னைக் கூறிக் கொள்ள சீமானுக்கு என்ன யோக்கியதை உண்டு ??

ஆதாரம் கேட்டீர்கள். நான் நம்பகமான தகவல் இல்லாமல் இவற்றை எழுதவில்லை. நீங்ககள் கேட்ட ஆதாரங்களை இங்கே என்னால் தமிழகத்திலிருந்து என் நண்பர்கள் மூலம் பெற்று இணைக்க முடியும். அப்படி நான் இணைத்தால், அதை அங்கிருந்து பெற்றாயா அல்ல இங்கிருந்து பெற்றாயா என்று விதாண்டாவாதம் செய்ய சில கூட்டம் உள்ளன. விரும்பினால் உங்களுக்கு தமிழகத்தில் தெரிந்த எம்மவர் யாராவது இருந்தால் அவர்கள் மூலம் விசாரியுங்கள். ஒருவேளை புரிந்து கொள்வீர்கள்.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் களத்தின் துவக்கத்தில் இருந்தே இந்த குசும்புவின் பதிவுக் கருத்தியல் ஒரேமாதிரித்தான் இருக்கின்றது, அது எப்படி என்றால் எமது புலம்பெயர்ந்த தேசங்களில் எமது செயற்பாடுகள் சார்பாக இலங்கை ஊடகம் என்ன கருத்தை வெளிப்படுத்துகின்றதோ அதுவே இந்தக் குசும்பரின் கருத்தாகவும் வெளிப்படும், இப்படி பலமுறை மோதுவதும் காணாமல் போவதும் குசும்பிற்கு புதிது இல்லை, இருந்தும் விடாமுயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.

ஒரு சிங்கள இனவெறியனின் தரத்தில் எம்மவர்களின் செயற்பாடுகளை கொச்சப்படுத்தும் ஒருவன் சீமானைப்பற்றி கதைக்க என்ன அருகதை என்பதை தன்பாட்டிலாவது உணரவும் முடியாதா?

விஜய்யை விமர்சிப்பதாக எண்ணிக் கொண்டு விஜய் மனைவி நம்மூர் பெண்மணி என்று தெரிந்தும், அந்தப் பெண்ணையும் விபச்சாரி என்று தூற்றி மகிழும் கூட்டத்தை என்றாவது நீங்கள் கண்டித்தீர்களா ?? அப்படியாயின் அத்தூற்றி மகிழும் மனநோயாளர்களில் நீங்களும் ஒருவரா ?? இன்றுவரை ஏன் தூற்றுகின்றோமென்று தெரியாமலே தூற்றும் பலரைத் தான் நான் பார்க்கின்றேன். ஆனால் சந்தர்ப்பத்தைப் பாவித்து அடுத்தவனை சுரண்டி வாழுவோரை, பலர் அடையாளம் கண்டு கொள்வதில்லை. இதே களத்தில் புனர்வாழ்வுக் கழகத்தின் விளம்பரம் ஒன்றையும் பார்த்திருப்பீர்கள். புனர்வாழ்வுக் கழகத்தால் இலங்கையில் ஒன்றுமே செய்ய முடியாதென்பது இன்று எல்லோருக்கும் தெரிந்தும், தொடர்ந்தும் சிலர் ஏமாற்ற முயல்கின்றார்ககள். அதைக் கூட நான் சுட்டிக் காட்டிய பின்னால்த் தான் பலர் வந்து தமது கருத்துகளையும் பதிகின்றார்கள். இப்படியான விடயங்களை காணும் போதெல்லாம் நீங்கள் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி நல்ல பிள்ளையாகி விடுவீர்கள். இது சந்தர்ப்பவாதம் . அப்படிச் சந்தர்ப்பவாதியாக வாழ்வது தான் சரியென்று தங்களுக்குப் பட்டால் ...........??

நான் அந்த வீடியோவினை பார்த்திருந்தேன், உங்களின் கருத்தையே நானும் கொண்டிருந்தேன். நீங்கள் அதே கருத்தை எழுதியிருந்தமையால் நான் என்னுடையதை வைக்கவில்லை, உங்களின் கருத்தையும் மறுத்து இருக்கவில்லை. அடுத்தது, எனக்கு வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்து, அவை என் கருத்திற்கு எதிராக இருந்து, நான் பதில் எழுத வேண்டும் என்று நினைத்த எவற்றிற்கும் பதில் எழுதாமல் இன்றுவரை இருந்ததில்லை

யாழில் பதியப்படும் அனைத்துக்கும் மறுபதிலும், எதிர்வினையும் ஆற்ற வேண்டும் என்றும் அப்படி செய்தால்தான் நான் சந்தர்ப்பவாதி அல்ல என்றும் நிரூபிக்க வேண்டிய சுயதேவை எனக்கு இல்லை

சீமான் போன்றவர்கள் பற்றி நான் சொல்லியதை விட தற்போது புதிதாக இணைந்தவர், அவரையும் அறியாமலே சில தகவல்களை எழுதினாரே. அவை உங்களுக்குப் புரியவில்லையா ?? காந்தி நோட்டுக் கொடுத்துத் தான் ஊடகவியலாளரை சீமான் கவர் பண்ணுகின்றாரென்றால் அதன் அர்த்தம் என்ன ?? கவர் கொடுத்து வாக்கு வாங்கும் அரசியல்வாதிகளுக்கும் சீமானுக்கும் என்ன வித்தியாசம் ?? பெரியாரின் சீடனென்று தன்னைக் கூறிக் கொள்ள சீமானுக்கு என்ன யோக்கியதை உண்டு ??

ஆதாரம் கேட்டீர்கள். நான் நம்பகமான தகவல் இல்லாமல் இவற்றை எழுதவில்லை. நீங்ககள் கேட்ட ஆதாரங்களை இங்கே என்னால் தமிழகத்திலிருந்து என் நண்பர்கள் மூலம் பெற்று இணைக்க முடியும். அப்படி நான் இணைத்தால், அதை அங்கிருந்து பெற்றாயா அல்ல இங்கிருந்து பெற்றாயா என்று விதாண்டாவாதம் செய்ய சில கூட்டம் உள்ளன. விரும்பினால் உங்களுக்கு தமிழகத்தில் தெரிந்த எம்மவர் யாராவது இருந்தால் அவர்கள் மூலம் விசாரியுங்கள். ஒருவேளை புரிந்து கொள்வீர்கள்.

எனக்கு சீமான் சந்தர்ப்பவாதியா இல்லையா என்பது பற்றியும், அவர் ஈழத்தமிழ் மக்கள் ஆதரவு கோசத்தின் மூலம்தான் பிழைப்பு நடத்துகின்றாரா இல்லையா என்பது பற்றியும் போதிய விளக்கம் இருக்கு. நான் தமிழக்த்தில் இருந்து வரும் விகடன் பிரசுரங்கள், குமுதம் பிரசுரங்கள், காலச்சுவடு, உயிர்மை போன்றவனற்றில் தெரிவிக்கப்படும் விபரங்களையும் வைத்துக்கொண்டு, அவை தரும் பிம்பங்களை வைத்துக்கொண்டுதான் அவர் பற்றிய சித்திரத்தை மனதில் கொண்டுள்ளேன். அந்த சித்திரங்கள் அவரை ஈழத்தமிழரை வைத்து பிழைப்பு நடாத்தும் ஒருவர் இல்லை என்று கூறுகின்றன. இவற்றை விட என் சகோதரிகளும் அங்குதான், தமிழகத்தில் தான் இன்னமும் வாழ்கின்றனர். அவர்கள் மூலம் வரும் அவர் பற்றிய செய்திகளும் அப்படித்தான் செய்கின்றன. என்னுடன் டுபாயில் வேலை செய்த பல தமிழக் நண்பர்களின் கருத்துகள் கூட அப்படித்தானிருக்கின்றன

ஆனால், நீங்கள் அதனை மறுக்கின்றீர்கள், இல்லையென்கின்றீர்கள். அதற்கான ஆதாரத்தினைக் கேட்டால், வைக்க முடியாது என்பதற்காக நொண்டிச் சாட்டுகளை சொல்கின்றீர்கள். என் சீமான் பற்றிய பிம்பம் பிழையெனில், அதனை நேராக்க கூடிய ஆதாரம் உங்களிடம் இருக்க வேண்டும்.. அவ்வாறு இருக்கா எனக்கேட்டால் ஏன் மற்ற திரிகளுக்கு பதில் சொல்லாமல், இதற்கு மட்டும் ஏன் நான் கேள்வி கேட்கின்றேன் என விதண்டாவாதம் செய்கின்றீர்கள்.

எனக்கு seythialai என்ன சொல்கின்றார் என்பதில் எந்த அவதானமும் இல்லை. அவர் தவறாகக் கூடச் சொல்லலாம். சீமான் நல்லவர் என அவர் சொல்வதை ஏற்க மறுக்கும் நீங்கள், அவர் காசு கொடுத்தார் என்று சொன்னதை மட்டும் எப்படி பரிபூரணமாக நம்புகின்றீர்கள். யாழில் எழுதுபவர்கள் அனைவரும் உங்களைப் போன்று எழுத்து திறமையோ அல்லது தனது பக்க விடயங்களை தெளிவாகச் சொல்லும் மொழியறிவையோ கொண்டு இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கவில்லை. அப்படி அவர்கள் வழுக்கும் போது, அதனைத்தான் நீங்கள் ஆதாரம் என்று தூக்கிப் பிடிக்கின்றீர்கள். சீமான் பற்றிய எந்தவிதமான நிரூபிக்கும் ஆதாரமும் உங்களிடம் அறவே இல்லை. போட்டு வாங்கும் திறமையின் மூலமே மற்றவரின் சொற்கள் மூலமே அந்த ஆதாரத்தை நீங்கள் உருவாக்கி என் முன் வைக்க முயல்கின்றீர்கள்.

ஆனால் நான் சீமானை, எனக்கு தெரிந்த தகவல்கள் மூலம் ஈழத்தமிழரை வைத்து பிழைப்பு நடாத்தும் ஒருவராக இனம்காண முடியவில்லை இந்த எண்ணம் seythialai சொன்ன விடயங்களால் இன்று திடீரென வந்த ஒன்றல்ல. அவர் என்ன சொன்னார் என்பதில் எனக்கு அக்கறை இல்லை.seythialai என்பவரே நாளை வந்து சீமான் கெட்டவர் என்று சொன்னாலும் , அவர் அதற்கான தகுந்த ஆதாரம் வைக்காவிடின் நான் சீமான் பற்றிய விம்பத்தை உடனே மாற்றப் போவதில்லை.

உங்களிடம் நான் கேட்பது இவைதான்

1. நீங்கள் சொல்வது போல், நான் எனக்கு பலதரப்பட்ட மூலங்களின் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு கட்டமைத்துள்ள் சீமான் மீதான பிம்பம் பிழையெனில், அவை பிழை என்று நிரூபிக்க கூடிய தகுந்த ஆதாரத்தினை முன்வையுங்கள். அவை சரியெனில் நிச்சயம் என் அவர் பற்றிய பிம்பத்தினை மாற்றுகின்றேன்.

2. எவரையாவத யாழ் கள உறுப்பினர்கள் கேலி செய்யும் போது, "இப்படித்தான் குற்றம் குறை சொல்லி நாம் எல்லாரையும் இழந்தோம்" எனும் வாதம் செய்யும் நீங்கள் இன்றுவரை எமக்காக வெளியில் குரல் எழுப்பும் சீமானைப் பற்றி குறைகளை பட்டியலிடுவதன் நோக்கம் என்ன? எமக்கா ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்து விட்டு, காங்கிரசில் சேரத்துடிக்கும் விஜய்யை புறக்கணிக்க வேண்டாம் என கோரும் நீங்கள் என்ன காரணதிற்காக சீமானை மட்டும் குறை சொல்ல விரும்புகின்றீர்கள்? விஜய் போன்றவர்களை இழக்க கூடாது, ஆனால் சீமான் போன்றவர்களை இழக்கலாமா? ஏன் இந்த இரட்டைத்தனம்?

பி,கு: சீமான் பற்றி கேட்டதற்கு தமிழர் புனர் வாழ்வு பற்றிய திரி பற்றியும் எழுதியிருந்தீர்கள். அதனை நான் இன்னமும் பார்க்கவில்லை. யாழில் போடப்படும் 100% தகவல்களையும் செய்திகளையும் நான் வாசிப்பேன் என கருதவேண்டாம். இந்த திரிகூட இன்றுதான் என் கண்ணில் பட்டது

Edited by நிழலி

இப்படி பலமுறை மோதுவதும் காணாமல் போவதும் குசும்பிற்கு புதிது இல்லை, இருந்தும் விடாமுயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.

:)ஆனிக்கொருக்கால், ஐப்பசிக்கொருக்கால் எண்டு வாறதெல்லாம் என்னைப் பற்றி காமண்ட் எழுதுறது அதிசயம் தான். :rolleyes:

Edited by Vasampu

நிழலி

இன்றுவரை இந்தக் களத்தில் புலிகளையும், வன்னி மக்களையும் சாட்டி மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடாத்திய ஏதாவதொரு அமைப்பைக் கண்டித்து கருத்து வைத்துள்ளீர்களா ?? அப்படி வைத்திருந்தால் அதனை இங்கு இணையுங்கள்.

சீமானுடன் எனக்கு தனிப்பட்ட பகையொன்றுமில்லை. அதுபோல் விஜயை தனிப்பட ஆதரிக்கவுமில்லை. விஜயை மட்டுமல்ல அஜீத்தை விமர்சித்த போது கூட இதைத்தான் எழுதினேன். அவர்கள் எமது போராட்டங்களுக்கு நேரடி ஆதரவு தராத போதும், அவர்கள் எதிரிகளுமல்ல நம்மை வைத்துப் பிழைப்பவர்களுமல்ல.

சீமானைப் பற்றி ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளில் வைத்த விமர்சனங்களை நம்புகின்றீர்கள். சமீபத்தில் ஆனந்தவிகடனில் "கண்ணீரில் மிதக்கும் கருணைக் கப்பல்" என்றொரு கட்டுரை வந்தது பார்த்தீர்களா ?? அதில் வணங்காமண் பொருட்கள் இன்றுவரை துறைமுககத்தில் இறக்க முடியாது கப்பலிலேயே காத்துக் கிடப்பதாக ஆதாரமாக எழுதியிருந்தார்கள். உஙகளைப் பொறுத்தவரை அது உண்மை.

சீமான் சிறை சென்றபோது சேர்ந்து சிறை சென்ற இயக்குனர் அமீர் இப்போ எங்கே ?? அவர் ஏன் இதிலிருந்து ஒதுங்கினார் என்றாவது தெரியுமா ?? உண்மைகள் சிலவேளை கசக்கத் தான் செய்யும். தங்களைப் பொறுத்தவரை நான் போட்டு வாங்குவதாகவே வைத்தக் கொள்ளுங்களேன் தாராளமாக. முன்பு பல விடயங்களை நான் எழுதிய போதெல்லாம், சிலர் இப்படித் தான் விமர்சித்தார்கள். ஆனால் இன்று அவையனைத்தும் உண்மைகள் ஆகிவிட விமர்சித்தவர்களைக் காணவில்லை. நாளை சீமானைப் பற்றிய உண்மைகளும் ஆதாரத்துடன் வெளிவரும். அப்போது தெரிந்துவிடும் யார் சொல்வது பொய் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் பனத்தைக்கொண்டுதான் பிரச்சாரம் செய்கிறார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அவருக்கு எதிராக நீங்கள் காங்கிரசிடமோ அல்லது கருநாநிதியிடமோ பணம்பெற்றுத்தான் இப்படி இங்கே வந்து பிதற்றுகிறீர்கள் என்று நாங்கள் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா??

அவர் பணம் கொடுத்துத்தான் இதையெல்லாம் செய்கிறார் என்றே வைத்துக்கொள்வோம், அதனால் எமக்கேற்பட்ட பாதகம் என்ன?? பணம் கொடுத்தாலும் நமக்கு நண்மைதானே செய்கிறார்? இன்றைக்குத் தமிழ்நாட்டில் நடிகைகளின் மேலாடையற்ற படங்களைத்தவிர வேறு எந்த செய்திக்கும் பணம் இல்லாமல் பத்திரிக்கையில் ஏற்றமுடியாது என்கிற நிலை உள்ளபோது அவர் பணத்தின்மூலம்தான் இதைச் செய்யவேன்டுமென்றாலும் அதில் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை.

திரும்பத் திரும்ப ஈழத்தமிழர் பற்றி அவர் பேசுவதால் அவரையும் பத்தோடு பதினொராவது நபர் ஆக்கிவிட்டீர்கள். உங்களைப்பொறுத்த்வரையிலும் யாருமே ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசக்கூடாது. அப்படிப் பேசினால் அவன் அரசியல் பண்ணுகிறான். ஆனால் ஒரு நாள் மட்டுமே உண்ணாவிரதமிருந்துவிட்டு மறுநாள் காங்கிரசில் சேர நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலையும் சிலர் ஈழத்துக்காகப் போராடுகிறார்கள் ஆகிவிடுகிறார்கள்.

விஜயகாந், கருனாநிதி.....போன்ற அரசியல் விபச்சாரிகளைக் கிண்டலடியுங்கள். சீமான் போன்ற உண்மையான போராளிகளை விட்டு விடுங்கள். உங்கள் வார்த்தைகளிலேயே சொல்வெதென்றால் " நண்பர்களையும் எதிரிகளாக்கி விடுவதைவிட பேசாமலிருப்பது நலம்".

நிழலி

இன்றுவரை இந்தக் களத்தில் புலிகளையும், வன்னி மக்களையும் சாட்டி மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடாத்திய ஏதாவதொரு அமைப்பைக் கண்டித்து கருத்து வைத்துள்ளீர்களா ?? அப்படி வைத்திருந்தால் அதனை இங்கு இணையுங்கள்.

வசம்பு,

இதே யாழ் களத்தில், கனடாவில் உள்ள உலகத்தமிழ அமைப்பில் இருந்து பலரை நான் கடுமையாக விமர்சித்திருக்கின்றேன்.. பல கனடா வாழ் யாழ் கள உறவுகளுக்கும் இது தெரியும். அத்துடன் சீமான், நெடுமாறன் ஆகியோரையும் 'உசுப்பி விடுகின்றார்கள்" என்ற தொனியில் பலமுறை எழுதியுள்ளேன். விரும்பினால் தேடி வாசியுங்கள்

சீமானைப் பற்றி ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளில் வைத்த விமர்சனங்களை நம்புகின்றீர்கள். சமீபத்தில் ஆனந்தவிகடனில் "கண்ணீரில் மிதக்கும் கருணைக் கப்பல்" என்றொரு கட்டுரை வந்தது பார்த்தீர்களா ?? அதில் வணங்காமண் பொருட்கள் இன்றுவரை துறைமுககத்தில் இறக்க முடியாது கப்பலிலேயே காத்துக் கிடப்பதாக ஆதாரமாக எழுதியிருந்தார்கள். உஙகளைப் பொறுத்தவரை அது உண்மை.

factual mistakes விடுவதில் தமிழக பத்திரிகைகளுக்கு நிகர் அவர்களே தான். இதனை நான் யாழ் களத்தில் கூட பல முறை குறிப்பிட்டுள்ளேன். வணங்கா மண் பற்றிய அந்த தகவல்கள் தான் பிழை, இறக்கப்பட்ட பொருட்கள் இன்னும் பரிமாறப்படாமல் இருக்கு எனும் உண்மைக்கு முன்னால், கப்பலில் தான் கிடக்கு எனும் தவறான தகவலால் செய்திக்கட்டுரையின் நோக்கம் மாறவில்லை. சீமான் பற்றிய என் பிம்பத்திற்கு, இவ்விரு பத்திரிகைகள் மட்டும்தான் காரணமல்ல என்பதை மேலே குறிப்பிட்டு இருந்தேன்

சீமான் சிறை சென்றபோது சேர்ந்து சிறை சென்ற இயக்குனர் அமீர் இப்போ எங்கே ?? அவர் ஏன் இதிலிருந்து ஒதுங்கினார் என்றாவது தெரியுமா ??

சரியாக தெரியாது... அவரின் தனிப்பட்ட பேட்டிகளில், சொந்த விருப்பின் காரணாமகவும், சிறை சென்றமையாலும், மாத்தறையில் முஸ்லிம்களின் பண்டிகையின் போது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத்தாக்குதல் காரணமாகவும் ஒதுங்கியிருக்கின்றார் என பொருள் பட சொல்லியிருந்தார். மேலதிக தகவல்கள் உங்களிடம் இருந்தால் தரவும்

நாளை சீமானைப் பற்றிய உண்மைகளும் ஆதாரத்துடன் வெளிவரும். அப்போது தெரிந்துவிடும் யார் சொல்வது பொய் என்று.

நீங்கள் சொல்லும் விடயங்கள் ஆதார பூர்வமாக வரும் பட்சத்தில் என் அவர் பற்றி மனதில் இருக்கும் பிம்பம் தவறானது என்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்வேன்.

சீமான் பனத்தைக்கொண்டுதான் பிரச்சாரம் செய்கிறார் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அவருக்கு எதிராக நீங்கள் காங்கிரசிடமோ அல்லது கருநாநிதியிடமோ பணம்பெற்றுத்தான் இப்படி இங்கே வந்து பிதற்றுகிறீர்கள் என்று நாங்கள் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா??

ஏன் இலங்கைத் தூதுவராலயத்தை விட்டுவிடடீர்கள். அதையும் சேர்த்திருக்கலாமே. தெரியாவிட்டால் அனுபவசாலி சிவகுமாரிடம் கேளுங்கள்.

சீமான் போன்றவர்களை விட பிரச்சாரமில்லாமல் எத்தனையோ பேர் உதவுகின்றார்கள். அவை ஒன்றும் எமக்குத் தெரிவதில்லை. சீமான் போன்றவர்கள் காசு வாங்கிக் கொண்டு குரல் கொடுக்கட்டும். ஆதை நான் விமர்சிக்கத் தொடங்கவில்லை. வெறுமனே உசுப்பேற்றிவிடும் வேலையைத் தான் செய்ய வேணடாமென்கின்றேன். இவர் தமிழகத்திலிருந்து கொண்டு 4 மாதத்திலோ அல்லது 4 வருடத்திலோ கிளிப்பேனென்று சும்மா கற்பனையில் கத்துவதை விட, தமிழகத்திலுள்ள எம் அகதி மக்களுக்கு எவ்வவளவோ செய்யலாமே. மாநில அரசிற்கும் மத்திய அரசிற்கும் வன்னி மக்களை மீள்குடியேற்றம் செய்ய இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் படி ஆர்ப்பாட்டம் நடத்தி அழுத்தம் கொடுக்கலாமே. இவர்கள் இங்கே இப்போது எழுப்பும் போராட்ட கோசங்கள் எல்லாம் வன்னி மக்களைத் தான் பாதிக்கும். அப்போது இவர்களால் அந்த மக்களுக்கு ஒரு துரும்பைக் கூட நீட்ட முடியாது.

முட்கம்பி வேலிக்குள் வன்னி மக்கள் என்று கூப்பாடு போடுபவர்கள், தமிழகத்தில் உள்ள அகதி முகாம் மக்கள் என்ன சுதந்திரத்துடனேயா உலாவுகின்றார்கள் என்று கூறட்டுமே. எத்தனை வருடங்களாக பல கட்டுப்பாடுகளைப் போட்டு மத்திய மாநில அரசுகள், அவர்களை அடக்கி வைத்திருக்ககின்றதென்று தெரியாதா இவர்களுக்கு ?? இன்றுவரை அந்த மக்கள் சுதந்திரமாக உலாவக் குரல் கொடுத்தார்களா ?? அருகிலுள்ளவனுக்கே உதவ முடியாதவர்கள் ஆறு கடந்து போய் எதைக் கிளிக்க முடியும் ??

இவற்றைப் புரிந்து கொள்ள முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். இல்லையேல் வழமைபோல் பட்டம் கட்டி மகிழ்வதென்றால் அதையும் செய்யுங்கள். எனக்கொன்றும் ஆகிவிடப் போவதில்லை.......

Edited by Vasampu

வசம்பு,

தமிழகத்தில் சீமான் போன்றோர் ஓரளவு விழிப்புணர்வு ஊட்ட முயல்கின்றனர்...அவர்கள் நினைத்தால் குலுக்கல் நடனங்கள், கொண்ட திரைப்படங்களோ ஏன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ எடுத்து கோடி கோடியாக பொருள் ஈட்டலாம்)

அவர்கள் ஏன் ஊர் ஊராக அலைந்து கூட்டங்கள் நடத்தி ஈழத்தமிழர் நிலையை பரப்புரை செய்து கஷ்டப்பட்டு உங்களிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும்( நீங்கள் எல்லாம் சீமானுக்கு பணம் கோடி கோடியாக அனுப்புகிறீர்களோ)

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி

சீமான் சிறை சென்றபோது சேர்ந்து சிறை சென்ற இயக்குனர் அமீர் இப்போ எங்கே ?? அவர் ஏன் இதிலிருந்து ஒதுங்கினார் என்றாவது தெரியுமா ?? i]

வசம்பு

நீங்கள் தவறாக விதண்டாவாதம் செய்கின்றீர்கள்

அமீர் ஒரு திரைப்பட இயக்குனர்

அவரது படங்கள் நிலுவையில் உள்ளன

அவற்றை முடிக்கும்படி அவசரமாக கேட்கப்பட்டதாலேயே அவர் தனது கடமையில் கண்ணாயிருக்கின்றார்

அதேநேரம்

தன்னை சுதந்திரமாக ஒரு படம் செய்ய அனுமதித்தால்

ஈழத்தின் உண்மையை அப்படியே எடுப்பேன் என்றே கடைசியாக சொல்லியிருந்தார்

தங்களிடம் வேறு காரணம் இருந்தால் முன் வையுங்கள்

அவர் எங்கே

இவர் எங்கே என்றால்

எல்லோரும் நூறுவீத போராளிகளல்ல......

:lol:அடடா அமீருக்கே தெரியாத விடயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கின்றன. தற்போது அமீர் ஏத்தனை திரைப்படங்கள் இயக்குகின்றாரென்ற பெயர் விபரங்களை ஒருமுறை தருவீர்களா ?? :D

பம்பாயில் நடந்த தாக்குதலைக் கண்டித்தும், இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்யும் முகமாகவும் ஒரு நிகழ்வு தென்னனிந்திய திரைப்பட சங்கத்தால் நடாத்தப்பட்டது. அதில் பலர் கலந்து கொள்ளளாததைக் கண்டித்து "இவங்களெல்லாம் வெறும் விளம்பரத்திற்காகவும் வருமானத்ததிற்காகவுமே கொடி பிடிப்பவர்கள்" என்று மனம் நொந்து அறிக்கை விட்டவர் அமீர். அதன் பின்னால் தான் இந்த ஆர்பாட்டங்கள், போராட்டங்களிலிருந்து அவர் ஒதுங்கினார். ஆனாலும் ஈழத்தமிழர் மேல் அவர் வைத்திருக்கும் பாசத்தை அவர் கைவிடவில்லை. அதனால்த் தான் கூறினார் ஈழத்தமிழர்களைப் பற்றி தான் ஒருதிரைப்படம் இயக்க விரும்புவதாய்.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

வீடு நோக்கி போறோமோ,நாடு கிடைக்குதோ இல்லையோ...சிங்களவன் நினைத்ததை கனகச்சிதமாக எல்லோரும் நன்றாகவே செய்து முடிக்கிறீர்கள். நன்றிகள்.

உரையாடுபவர்கள் அடிப்படை நாகரீகத்தினை பேணுவதே ஆரோக்கியமான சூழலைத்தரும். கேவலமான சொற்பிரயோகங்களும், ஒருவரை மற்றவர் 'நாயே' என திட்டுவதும் (பாவம் அந்த மிருகம்) மிகக் கேவலமான விதத்தில்தான் இந்த உரையாடலை கொண்டு செல்லும். சொல்லும் விடயம் எத்தனை நல்லதாக இருந்தாலும், அநாகரீகமான சொற் பிரயோகம் சொல்ல வந்த நியாயத்தின் அடிப்படையையே கேலப்படுத்தி விடும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தலைப்பில் இருந்த பல கருத்துக்கள் முற்றாக நீக்கப்பட்டுள்ளன. களஉறவுகள் தயவுசெய்து நட்புணர்வோடு, பண்பான முறையில் கருத்தாடுங்கள்.எந்த ஒரு நபரையும் விமர்சிக்கும் போதும் அவர் பிடிக்காதவராகவோ இருந்தாலும் கூட நாகரீகமான முறையில் விமர்சியுங்கள்.

Edited by yarlpriya

[நான்கு வருடங்களில் மிகப்பெரிய ஈழ போராட்டம் வெடிக்கும்: சீமான்

சீமான் பற்றி ஆதாரமற்ற கருத்துக்களைக் கூறுவது அபத்தமாகவே தெரிகிறது. ஆனால் அவர் இப்படி சாத்திரம் பார்த்து 4 வருடக் கணக்கு சொல்வதால் எமக்கு சிக்கல்கள் தான் அதிகமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

உரையாடுபவர்கள் அடிப்படை நாகரீகத்தினை பேணுவதே ஆரோக்கியமான சூழலைத்தரும். கேவலமான சொற்பிரயோகங்களும், ஒருவரை மற்றவர் 'நாயே' என திட்டுவதும் (பாவம் அந்த மிருகம்) மிகக் கேவலமான விதத்தில்தான் இந்த உரையாடலை கொண்டு செல்லும். சொல்லும் விடயம் எத்தனை நல்லதாக இருந்தாலும், அநாகரீகமான சொற் பிரயோகம் சொல்ல வந்த நியாயத்தின் அடிப்படையையே கேலப்படுத்தி விடும்

மனிதர்களுடன் விவாதம் செய்தால் நீங்கள் சொல்வதை கடைப்பிடிப்தில் யாருக்கும் ஏதும் வில்லங்கம் இருக்காது. காட்டேறிகளுடன் விவாதம் செய்தால் எப்படி நாகரீகத்தை கடைபிக்க முடியும்? அதுகளுக்கு புரியுமா நாகரீகத்தின் வாசனை. ஒடி ஓடி வந்து வாந்தியை முடிந்தளவிற்கு எடுத்துகொண்டே இருக்குதுகள்......... யாழுக்கு வருவதே வீண் வேலை என்றுதான் நான் இப்போத இங்கால வருவதே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பில் இருந்த பல கருத்துக்கள் முற்றாக நீக்கப்பட்டுள்ளன. களஉறவுகள் தயவுசெய்து நட்புணர்வோடு, பண்பான முறையில் கருத்தாடுங்கள்.எந்த ஒரு நபரையும் விமர்சிக்கும் போதும் அவர் பிடிக்காதவராகவோ இருந்தாலும் கூட நாகரீகமான முறையில் விமர்சியுங்கள்.

யாழ் பிரியா .....

உங்கள் மீள் வரவை நான் , வரவேற்கின்றேன் .

ஆனால் ....... குதிரை ஒடிய பின் லாயத்தை பூட்டி பிரயோசனமில்லை . :wub:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நவம்பர் 27 ம் திகதிவரை இந்தத்திரி நீள வாழ்த்துகிறேன். :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.