Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் புதிய போர் முழக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி: நக்கீரன் - புரட்டாதி 24, 2009

முல்லைத்தீவு கடற்புறத்தே நின்றுகொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாரிய பின்னடைவுக்கு முதற்காரணமாய் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறிப்பிட்டது.

"2001-ம் ஆண்டு தன்னிச்சையான சண்டை நிறுத்தம் அறிவித்து அனைத்துலக வழிநடத்துதலில் 2002-ம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துக் கொண்டமை யினைத்தான். சமாதானப் பேச்சுவார்த்தைகள் துரோகத் தனம் போர்த்த அரசியல்-ராணுவப்பொறி என்பதை கணித்தறிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தவறியதெப்படி என்ற கேள்வி இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது.

நான் மிகவும் மதிக்கும் உலகத் தமிழர்களில் ஒருவர் தங்கவேலு. அப்பழுக்கில்லா தமிழ் ஈழ ஆர்வலர். கனடா நாட்டு டொராண்டோ நகரில் இப்போது வாழ்ந்து வரும் இவர் கூர்த்த மதியுடையவர், அடர்த்தியான எழுத்தாளர். நக்கீரன் என்ற புனைப்பெயரில் நீண்ட காலமாய் எழுதி வருகிறார். இரண்டாம் சுற்றுப் பேச்சு வார்த்தைகள் "ஓஸ்லோ' நகரில் நிறைவுற்ற நாளில் மின் அஞ்சல் கட்டுரையூடாக இவர் குறிப்பிட்டிருந்தார். ""முப்பது ஆண்டுகளாய் வேலுப்பிள்ளை பிரபாகரனும், அவரது போராளிகளும் சாதித்த யாவும் இரண்டே மாதத்தில் பேச்சுவார்த்தைகளூடாய் இழக்கப்பட்டு விட்டன'' என்று. மறக்க முடியாத இந்த வரிகள் அவரது வலி மட்டுமல்ல, பலரது மனக்குமுறலாயும் இருந்தது.

அதே காலகட்டத்தில் சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் வன்முறையற்ற வழியில் சிக்கலான தேசிய-இனப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது குறித்த கருத்தமர் வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், எரித்ரேயா, ருவாண்டா போன்ற நாடுகளிலிருந்து கருத்துரையாளர்கள் வந்திருந்தார்கள். நானும் பங்கேற்றுக் கலந்து கொண்டேன். இரவு உணவுக்குப்பின் ஓர் தனித்த உரையாடலின் போது எரித்ரேயா நாட்டிலிருந்து வந்திருந்தவர் -பெயர் மறந்து விட்டேன், அவர் சொன்னார்: ""என்ன காரணங்களுக்காக விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துக் கொண்டார் களென்று தெரியவில்லை. பலமான நிலையில் நின்று கொண்டு தேடப்படும் சமாதானம் என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் இன்றைய உலக ஒழுங்கு அதற்குச் சாதகமானதாயில்லை. பேச்சுவார்த்தையூடாக அவர்கள் வீழ்த்தப் படுவார்களென்றே நான் நினைக்கிறேன், அஞ்சுகிறேன்'' என்றார்.

sweetdreams1.jpg

அந்த எரித்ரேய நாட்டுக்காரர் இன்னொன்றையும் அன்று குறிப்பிட்டார். அன்று அவர் கூறியபோது அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று நடந்து விட்டவற்றை மீளாய்வு செய்கையில் தமிழர்களாகிய நமது ஆய்ந்தறியும் குறைபாடுகள் நிறையவே புலப்படுகின்றன. அந்த மனிதர் சொன்னார்: ""மரபு ரீதியான போர் அணிகளை விடுதலைப்புலிகள் உருவாக்கியிருக்கிறார்கள். அது மிகப்பெரிய சாதனைதான். இந்த போர் அணிகள்தான் அவர்களது இப்போதைய பெருவெற்றிகளை சாத்தியப்படுத்தியுள்ளன. ஆனால் உலகம் அதிநவீன போர்க்கருவிகளை இலங்கை அரசுக்கு வழங்க முன்வரும் பட்சத்தில் இதே மரபுப் போரணிகள் விடுதலைப்புலிகளுக்கு சுமையாக மாறும்.

ஆதலால் என்னைப் பொறுத்தவரை அவர்கள் ஓர் திறமான கொரில்லா சக்தியாகவே தொடர வேண்டும். சமாதான காலத்திலும் கூட அவர்கள் கொரில்லா வாழ்க்கையே வாழ வேண்டும். குறைந்தபட்சம் மரபுப் போரணி கள் மிகக்குறுகிய கால அளவில் மீண்டும் கொரில்லா அணிகளாக மாறுவதெப்படியென்ற உத்திகளையேனும் அவர்கள் திட்டமிட்டு, பயிற்றுவித்து எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் உலகம் சதி செய்யும் நாளில் அவர்கள் பேரழிவை சந்திப்பார்கள்'' என்றார்.

எத்தியோப்பியாவுடன் நீண்ட போர் நடத்தி விடுதலை பெற்ற நாடு எரித்ரேயா. தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு இணையாக பிறிதொன்றை ஒப்பீடு செய்ய முடியுமென்றால் அது எரித்ரேய விடுதலைப் போராட்டம்தான். இன்றும் ஐ.நா. அவையில் தமிழீழ மக்களுக்கான குரல்களில் ஒன்றாக தம்மை எப்போதும் முன்வந்து அளிக்கும் இந்த நாட்டின் மக்கள் மகத்தானவர்கள். ஆயுத பலத்தை மானுட உணர்வுகளின் ஆற்றல் முறியடிக்குமென்பதை தமிழீழ மக்களுக்கு முன்னதாகவே நிரூபித்தவர்கள். அந்த நாட்டின் மனிதர் அக்கறையுடன் கூறிய மேலே நான் சொன்ன கருத்து அப்போது எனக்கு உரைக்கவில்லை. ஆனால் அவரது கூற்று அச்சொட்டான தீர்க்கதரிசனம் என்பதை நடந்துவிட்ட யாவும் நமக்குக் காட்டி நிற்கின்றன. கிளிநொச்சி விழுவதற்கு முன்னரேயே விடுதலைப் புலிகள் பேராயுதங்களை தாரை வார்த்துவிட்டு கொரில்லா அணிகளாய் வன்னிக் காடுகளுக்குள் பரவியிருந்தால் போராட்டம் பாதுகாக்கப்பட்டிருக்குமே என்றெல்லாம் இன்று எண்ணம் அங்கலாய்த்துக் களைப்புறுகிறது.

போராட்டப் பின்னடைவுக்கு இரண்டாவது காரணமாக பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டது தளபதி பால்ராஜ் அவர்களின் இழப்பு. தமிழீழ வரலாற்றின் மகத்தான இம்மாவீரனை மனம் சிலிர்த்து முன்பேயே நான் பதிவு செய்துவிட்டதை வாசகர்கள் அறிவீர்கள். ""பாக்ஸ் சண்டை'' என அறியப்படும் எதிரியின் அணிகளை ஊடறுத்து அவர்களுக்குப் பின்புறமாய் நின்று கொண்டு சண்டையிடும் வித்தகத்தில் பால்ராஜ் கில்லாடி. ""பால்ராஜ் இருந்திருந்தால் அன்று தாளையடி-செம்பியன்பற்று கடற்கரையில் தரையிறங்கி வதிரையனில் நின்று பாக்ஸ் சண்டை பிடித்து ஆனையிறவை வீழ்த்த வழி செய்ததுபோல் இப்போது ஆழ்கடல் வழியாக "சாலை' கரையில் தரையிறங்கி வள்ளிபுனம் ஆற்றங்கரையோரமாய் ஊடறுத்து புதுக் குடியிருப்பு இரனைப்பாலை பகுதிகளில் நின்றிருந்த பத்தாயிரத்திற்கும் மேலான ராணுவத்தினரின் கதையை முடித்திருப்பான். பால்ராஜை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆமிக்காரன் ஓடியிருப்பான்'' என்று பிரபாகரன் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. களத்தின் இறுக்கமான தருணத்தில் கூட தன்னிலும் மேலானதோர் தளபதி இருந்தான் -அவன் பால்ராஜ் -அவன் இருந்திருந் தால் முல்லைத்தீவு பேரழிவு நடக்காதபடி சண்டை யிட்டிருப்பான்'' என்று சொல்ல முடிந்தமை பால்ராஜின் தனித்துவத்தையும் அதனிலும் மேலாய் பிரபாகரனின் உயர்வையும் வெளிப்படுத்தியதாகவே பதிவு செய்ய வேண்டியுள்ளது.

விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவுக்கு மூன் றாவது காரணமாய் வேலுப்பிள்ளை பிரபாகரன் உரைத்தது கருணம்மானின் துரோகம். கருணம்மானின் துரோகம் இரு பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. ஒன்று போர் நடத்தும் ஆளணிகள் விடுதலைப் புலிகளுக்கு வெகுவாகக் குறைந்தது, இரண்டு இயக்கம், அதன் போர் உத்திகள், முக்கிய நபர்கள், தொடர்பான முக்கிய தகவல்களை இலங்கை ராணுவத்திற்குக் கொடுத்து உதவியதால் விடுதலைப்புலிகளை களத்தில் எதிர்கொள்வது இலங்கை ராணுவத்திற்கு மிகவும் எளிதாயிற்று. பதினெட்டு ஆண்டுகளாய் அடி வாங்கி மட்டுமே பழகி திருப்பித் தாக்குதல் நடத்த தடுமாறிக் கொண்டிருந்த இலங்கை ராணுவத்திற்கு விடுதலைப் போராட்டத்தை திருப்பிடியத்துத் தாக்கியழிக்கும் முக்கியமான உள்ளீடுகளைத் தந்ததும், காடுகள் வழி புலிகளின் பகுதிகளை ஊடுருவிச் செல்லும் உத்திகளை, ஆளணிகளைத் தந்ததும் கருணம் மான்தான்.

உண்மையில் கருணம்மானை எப்படியேனும் சரி செய்து போராட்டத்திற்காய் வைத்திருக்க வேண்டு மென்றே இறுதிவரை பிரபாகரன் விரும்பியிருக் கிறார். தன்னுடன் வந்து வன்னியில் நிற்கும்படி பலமுறை அழைத்திருக்கிறார். ""என்னோட நின்டா சரியாயிடுவான். எதென்டாலும் கதைத்து சரியாக்கிடலாம்'' என்று தான் மூத்த தளபதிகளிடம் கருணாவுக்காய் பேசியிருக்கிறார். ஆனால் பிரபாகரன் கருணாவை நம்பிய அளவுக்கு கருணா தன்னை வளர்த்து உயர்த்திய தலைவனை நம்பவில்லை. தமிழர்கள் வரலாற்றில் ஒருபோதும் வீரமின்மையால் வீழ்ந்ததில்லை- துரோகத்தால்தான் வீழ்ந்து வருகிறார்களென்பதற்கு கருணா மீண்டுமொரு உதாரண மானான். அதேவேளை கருணம்மான் தலைவனோடு களத்தில் நின்றிருந்தால் தமிழீழ விடுதலை வரலாறு வேறு மாதிரியாய் இருந்திருக்கும்.

விடுதலைப் போராட் டத்திற்கு பின்னடைவு தந்ததாய் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறிப் பிட்டது 2004-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் கரையோரப் பகுதிகளை ஊழித் தாண்டவமாடித் தாக்கிய சுனாமி. விடுதலைப்புலிகளது போர்க்கள ஆற்றலின் முது கெலும்பாக நின்றது கடற்புலிகள் பிரிவு. கடற்புலிகளின் வளங்கள் பெருவாரியாக கடற்கரை சார்ந்தே நிறுத்தப்பட்டிருந்தன.

நீண்ட காலமாய் சிறுகச் சிறுக கடற்புலிகள் கட்டியெழுப்பிய வளங்கள், பணிமனைகள், ஆய்வுக்கூடங்கள் என கணிசமானவை சுனாமியால் விழுங்கப்பட்டன. சுனாமி விளைத்த இழப்புகளின் விபரம் அப்போது புலிகளால் வெளியிடப்படவில்லை. ஆனால் போராட்ட வலு குறைந்ததில் சுனாமிக்கு உள்ள பங்கை போரின் உச்ச நாட்களில் பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டதை முக்கியமானதாகவே கருதுகிறேன்.

ஐந்தாவதாக பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டது எல்லோரும் மிகப்பெரும் வசதியென்றும் துணையென்றும் கருதிய "அலைபேசி', "கை பேசி' -மொபைல் தொலைபேசிக் கலாச்சாரம். கடந்த பத்து ஆண்டுகளில் கை பேசி அடிமைகளாய் களத்தில் நின்ற பலரும் ஆகிவிட்டிருந்தனர். அதன் எதிர்விளைவுகளை எவரும் சரிவர மதிப்பீடு செய்யவில்லை. 2002-ம் ஆண்டுக்குப் பின், குறிப்பாக இந்தியாவும் உலகநாடுகளும் இலங்கை ராணுவத்திற்கு உயர் தொழில்நுட்ப உள்ளீடுகள் வழங்கத் தொடங்கியபின் புலிகள் -அவர் தம் தளபதிகள் -ஆயுதக் கொள்வனவுகள்- கொழும்பு உள்ளிட்ட பிற பகுதிகளிலுள்ள அவர்களது வளங்கள் -போர்க்களத் திட்டங்கள் என அனைத்து தகவல்களையும் இலங்கை ராணுவத்தால் புலிகளின் கைபேசிகளை இடைமறித்துச் சேகரிக்க முடிந்தது.

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பதிவு செய்த மேலும் இரண்டு காரணங்களை இப்போதைக்கு இங்கு நான் மறு பதிவு செய்ய விரும்பவில்லை. காலம் வருகையில் அவற்றை நிச்சயம் வரலாற்றிற்காய் எழுதுவேன். இவையெல்லாம் பேசி முடித்தபின் நிறைவாக அவர் கூறியது புதியதோர் போர் முழக்கம். பண்டார வன்னியனின் வாளை தமிழரின் விடுதலைக் குறியீடாக்கி அவர் நிகழ்த்திய மறக்க முடியாத -மறக்கக் கூடாத அந்த பேருரை.

Published: Sep 23, 2009 18:20:15 GMT

தமிழர்கள் வரலாற்றில் ஒருபோதும் வீரமின்மையால் வீழ்ந்ததில்லை- துரோகத்தால்தான் வீழ்ந்து வருகிறார்களென்பதற்கு கருணா மீண்டுமொரு உதாரண மானான்.

பெரும் உண்மை நிறைந்த வாக்கியங்கள்.

அடிமையாயிருத்தல் என்பது ஒரு மனோவியல் வியாதி. ஒரு அடிமை தன்னை அடிமைப்படுத்துபவன் மீது ஒரு வித காதல் அல்லது பிணைப்பு கொள்வது மனோவியாதிக்குரிய அம்சம். எம் தமிழ் இனம் இந்த வியாதியால் பீடிக்கப்பட்டு இருப்பதுதான் உண்மை. இந்த வியாதியினால்தான், நாம் ஆரிய எசமானின் புரட்டாதி சனி விரதத்தில் இருந்து அனைத்து விதமான விடயங்களையும் ஒரு தவம் போல செய்து வருகின்றோம். இந்த அடிமைத்தவத்தின் வழி வந்தவர்களின் துரோகத்தனத்தால் தான் எம்மை அடிமைதளையில் இருந்து மீட்க வந்தவர்கள் அனைவரையும் வரலாறு முழுதும் காட்டிக் கொடுக்கின்றோம். வீர பாண்டிய கட்டபொம்மனாயிருந்தால் என்ன பிரபாகரனாக இருந்தால் என்ன கேபி யாக இருந்தால் என்ன...தமிழனாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு வீழ்ந்தவர்கள் தான் எல்லோரும். முப்பதாயிரம் இளம் போராளிகளின் இரத்தத்தை விட இந்த அடிமையாயிருத்தல் எனும் போதை வலிமையானது.

இனியும் நாம் இப்படித்தானிருக்கப் போகின்றோம்...இந்த இனத்தின் அடிமைக்குணத்தில் இருந்து தவறி பிறக்கும் பிரபாகரன்களினதும், போராளிகளினதும் சுதந்திர ஆன்மாவை காட்டிக் கொடுக்க சாதியம், மதம், பிரதேசவாதம், ஆண் பெண் சமத்துவமின்மை என்று வளரும் எம் அடுத்த சந்ததிகளும் இப்படித்தான் இருக்கப் போகின்றன.

"2001-ம் ஆண்டு தன்னிச்சையான சண்டை நிறுத்தம் அறிவித்து அனைத்துலக வழிநடத்துதலில் 2002-ம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துக் கொண்டமை யினைத்தான். சமாதானப் பேச்சுவார்த்தைகள் துரோகத் தனம் போர்த்த அரசியல்-ராணுவப்பொறி என்பதை கணித்தறிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தவறியதெப்படி என்ற கேள்வி இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது."

எல்லாம் மறைந்த ஆலோசகரால் தான். அத்துடன் கருணா தனது போராளிகள் தொடர் சண்டைகளில் ஈடுபட்டதால் களைப்பாக இருக்கிறார்கள் என்று கூறி பிரதேசவாதத்தை முன்வைத்ததாலும்.

அப்பவும் கேணல் சங்கர் அண்ணா சென்னவர் தொடந்து சண்டை செய்வம் என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலத்த ஆள் பற்றாக்குறை இருந்ததாகவும் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதே கருணாவால் தான்.

எல்லாம் மறைந்த ஆலோசகரால் தான். அத்துடன் கருணா தனது போராளிகள் தொடர் சண்டைகளில் ஈடுபட்டதால் களைப்பாக இருக்கிறார்கள் என்று கூறி பிரதேசவாதத்தை முன்வைத்ததாலும்.

அப்பவும் கேணல் சங்கர் அண்ணா சென்னவர் தொடந்து சண்டை செய்வம் என்று.

கேணல் சங்கர் அண்ணா சமாதான காலத்திற்கு முன்பே கொல்லப்பட்டு விட்டார். இனி பொய்களை அவிழ்த்து விட முன் கொஞ்சம் நிதானமாக இருக்கவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரன் நம்பிய அளவுக்கு கருணா தன்னை வளர்த்து உயர்த்திய தலைவனை நம்பவில்லை. தமிழர்கள் வரலாற்றில் ஒருபோதும் வீரமின்மையால் வீழ்ந்ததில்லை- துரோகத்தால்தான் வீழ்ந்து வருகிறார்களென்பதற்கு கருணா மீண்டுமொரு உதாரண மானான்.

அடிமையாயிருத்தல் எனும் போதை வலிமையானது

உண்மைதான் நிழலி

அடிமைத்தனத்தில் இருந்து மாற்றப்பட வேண்டும் வஞ்சம் துரோகம் இல்லாது ஒழிக்க படவேண்டும்

இது என்றோ ஒரு நாள் மாறும்

Edited by jhansirany

கேணல் சங்கர் அண்ணா சமாதான காலத்திற்கு முன்பே கொல்லப்பட்டு விட்டார். இனி பொய்களை அவிழ்த்து விட முன் கொஞ்சம் நிதானமாக இருக்கவும்

பாருங்கள் எப்போது என்று...

http://en.wikipedia.org/wiki/Vaithilingam_Sornalingam

ஆனையிறவு மீட்கப்பட்டது எப்போது என்று பாருங்கள்

http://en.wikipedia.org/wiki/Second_Battle_of_Elephant_Pass

Edited by Donkey

பாருங்கள் எப்போது என்று...

http://en.wikipedia.org/wiki/Vaithilingam_Sornalingam

கருணாவின் பிழவுக்கு மிக முந்தி.............ரணில் வந்து சமாதானம் பேச முன்னர்........

முன்னாள் ஆலோசகர் மீது வசை பாடும் தாங்கள், இன்னும் கொஞ்சம் தரவுகளை தயார்படுத்தி வைத்திருப்பது நல்லது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடிமையாயிருத்தல் எனும் போதை வலிமையானது

உண்மைதான் நிழலி

அடிமைத்தனத்தில் இருந்து மாற்றப்பட வேண்டும் வஞ்சம் துரோகம் இல்லாது ஒழிக்க படவேண்டும்

இது என்றோ ஒரு நாள் மாறும்

இந்த அடிமைத் தளை உடைப்பு ஒவ்வொரு வீட்டினுள் இருந்தும் புறப்படவேண்டும். சாதி மற்றும் மதங்களின் பெயரால் தமிழர்கள் தங்களையே பிளந்து கொள்வதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். பெண்கள் தங்கள் சுதந்திரத்தை உதட்டளவில் உச்சரிப்பதை விடுத்து தமக்குரியதை தாமே எடுத்துக்கொள்ள முன்வரவேண்டும். இந்த மாற்றங்கள் யாவும் கடனே என்று செய்யப்படாமல் அடிமனதில் உறுதியான அடித்தளத்தோடு செயல்கள்மூலம் வெளிப்படுத்தப்படவேண்டும்.

ஆனையிறவை மீட்ட புலிகள் யாழ் நகர் நோக்கி முன்னேற முயன்ற போது நடைபெற்ற விடயங்களே நான் எழுதியவை.

ஜெயசிக்குறு எதிர் சமரில் ஈடுபட்ட தென்தமிழீழ படையணிகள் ஆனையிறவுச் சண்டையில் பங்கு பற்றாததன் காரணம் என்ன? ஜெயந்தன் படையணி Clearing வேலையில் மட்டுமே ஈடுபட்டது ஏன்?

ஆனையிறவை மீட்ட புலிகள் யாழ் நகர் நோக்கி முன்னேற முயன்ற போது நடைபெற்ற விடயங்களே நான் எழுதியவை.

ஜெயசிக்குறு எதிர் சமரில் ஈடுபட்ட தென்தமிழீழ படையணிகள் ஆனையிறவுச் சண்டையில் பங்கு பற்றாததன் காரணம் என்ன? ஜெயந்தன் படையணி Clearing வேலையில் மட்டுமே ஈடுபட்டது ஏன்?

நன்றி

உங்களுக்கு என்னை விட பல விடயங்கள் தெரிந்து இருக்கின்றன. முன்னாள் ஆலோசகர் விட்ட தவறுகளில் இருந்து எப்ப சங்கர் அண்ணா செத்தது, ஆனையிறவு சண்டையில் ஏன் கிழக்கு மாகாண போராளிகள் வெறும் clearing வேலையில் ஈடுபட்டனர் என அனைத்தும் உங்களுக்கு அந்த மாதிரி தெரிந்து இருக்கு (சிலவேளை என்னையும் தெரிந்து இருக்கும்...யார் கண்டது).. எனவே தனித் திரி திறந்து ஒரு பெரும் வரலாற்று உண்மைகளை எமக்கு துணிவுடன் தருவீர்களாயின் நீங்கள் புலம் பெயர் நாட்டில் இருந்து தமிழீழ தேசியத்திற்கு செய்த மிகப் பெரும் பங்களிப்பாக இருக்கும்

உங்களிடம் அத்தகைய துணிவை எதிர்பார்க்கலாமா...?

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவை மீட்ட புலிகள் யாழ் நகர் நோக்கி முன்னேற முயன்ற போது நடைபெற்ற விடயங்களே நான் எழுதியவை.

ஜெயசிக்குறு எதிர் சமரில் ஈடுபட்ட தென்தமிழீழ படையணிகள் ஆனையிறவுச் சண்டையில் பங்கு பற்றாததன் காரணம் என்ன? ஜெயந்தன் படையணி Clearing வேலையில் மட்டுமே ஈடுபட்டது ஏன்?

வடபகுதித் தளபதிகளுக்குக் கீழ் நின்று சண்டை பிடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு கருணாவின் "நாம.. நம்மாக்கள்" என்ற பிணைப்புத்தான்.. வேறு ஒன்றும் இல்லை.

முன்னால் ஆலோசகர் 95 காலப்பகுதியில் விசுவமடுவில் தலைவரால் Punishment கொடுக்கப்பட்டு காணிக்குள் கக்கூசு இருந்தது வரை தெரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னால் ஆலோசகர் 95 காலப்பகுதியில் விசுவமடுவில் தலைவரால் Punishment கொடுக்கப்பட்டு காணிக்குள் கக்கூசு இருந்தது வரை தெரியும்.

சொல்லுறதை பிச்சுப் பிச்சு சொல்லாமல் நிழலி சொன்னதுபோல் தனித்திரி திறந்து நீங்கள் சொன்னால் நல்லாயிருக்கும்..! இயக்கத்திலிருந்த பலர் தண்டனைக்குப் போனவர்கள்தான். தலைவர்கூட ஒரு தடவை அடுப்படி வேலைக்கு செல்லவேண்டி வந்ததாக அறிந்தேன். இதனால் எல்லாம் முன்னாள் ஆலோசகர் பிரயோசனமற்றவர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதுதானே?

2000ம் ஆண்டு காலப்பகுதியில் தலைவருடன் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் கருணா தனது போராளிகள் களைப்பா இருக்கிறார்கள் அவர்களுடன் தானும் மட்டகளப்பிற்கு போறன் என்ற கூறிய போது, " நீ போ பொடியளை விட்டிட்டு" என்றார்.

அப்போது கருணா " நான் போனால் யார் அவங்களை வைத்து சண்டை செய்வது யார்" என கேட்க அதற்கு "நான் செய்கிறேன்" என்று பதிலளித்து கேணல் ஜெயம்.

சொல்லுறதை பிச்சுப் பிச்சு சொல்லாமல் நிழலி சொன்னதுபோல் தனித்திரி திறந்து நீங்கள் சொன்னால் நல்லாயிருக்கும்..! இயக்கத்திலிருந்த பலர் தண்டனைக்குப் போனவர்கள்தான். தலைவர்கூட ஒரு தடவை அடுப்படி வேலைக்கு செல்லவேண்டி வந்ததாக அறிந்தேன். இதனால் எல்லாம் முன்னாள் ஆலோசகர் பிரயோசனமற்றவர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதுதானே?

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,

வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!

வாய்ச் சொல்லில் வீரரடி.

இவர்கள் பற்றி பாரதி அப்பவே பாடிவிட்டு போய்ட்டான் டங்கு. எந்த அரசியல் நேர்மையும் இன்றி பல பெயர்களில் வலம் வரும் இவர்களிடம் இருந்து இப்படியான திரிகளை ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனையிறவை மீட்ட புலிகள் யாழ் நகர் நோக்கி முன்னேற முயன்ற போது நடைபெற்ற விடயங்களே நான் எழுதியவை.

ஜெயசிக்குறு எதிர் சமரில் ஈடுபட்ட தென்தமிழீழ படையணிகள் ஆனையிறவுச் சண்டையில் பங்கு பற்றாததன் காரணம் என்ன? ஜெயந்தன் படையணி Clearing வேலையில் மட்டுமே ஈடுபட்டது ஏன்?

அவர்கள் என்ன இயந்திரங்களா? தொடர்ச்சியாக போரில் ஈடுபட. ஜெயசிக்குறுவை எதிர்கொண்டு எத்தனை இழப்புகளை, காயங்களை சந்திதிருப்பார்கள். அவர்களுக்கு ஓய்வு வேண்டாமா?

சண்டை செய்ய களைப்பு ஆனால் முல்லைத்தீவிலிருந்து மட்டக்களப்பு வரை செல்ல முடியும்.

இங்கு ஓய்வு தேவை என்று கூறியது கருணாவே தவிர படையணிகள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

உங்களுக்கு என்னை விட பல விடயங்கள் தெரிந்து இருக்கின்றன. முன்னாள் ஆலோசகர் விட்ட தவறுகளில் இருந்து எப்ப சங்கர் அண்ணா செத்தது, ஆனையிறவு சண்டையில் ஏன் கிழக்கு மாகாண போராளிகள் வெறும் clearing வேலையில் ஈடுபட்டனர் என அனைத்தும் உங்களுக்கு அந்த மாதிரி தெரிந்து இருக்கு (சிலவேளை என்னையும் தெரிந்து இருக்கும்...யார் கண்டது).. எனவே தனித் திரி திறந்து ஒரு பெரும் வரலாற்று உண்மைகளை எமக்கு துணிவுடன் தருவீர்களாயின் நீங்கள் புலம் பெயர் நாட்டில் இருந்து தமிழீழ தேசியத்திற்கு செய்த மிகப் பெரும் பங்களிப்பாக இருக்கும்

உங்களிடம் அத்தகைய துணிவை எதிர்பார்க்கலாமா...?

நிழலி பகிடி எல்லாம் விடுறீங்கள்.. :):D

தலைவர் விட்ட மாபெரும் தவறு போர்த்தளபதிகளை பேச்சுவார்த்தைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பியது. அதனால்தான் தளபதிகள் பலர் விலைபோயினர். அரசியல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு வந்து அவர்கள் விலைபோயிருந்தால் பெரிதாக தாக்கமில்லை. கருணா இளந்திரையன் போன்றோர் விலைபோனதுதான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இங்கு பேச்சு வார்த்தைக்கு வந்தபோது இங்குள்ள செயற்பாட்டாளர்களின் சொகுசு வாழ்க்கையை பார்த்ததும் அவர்களின் உறுதி தளர்ந்திருக்கும். இலட்சம் டாலர்பெறுமதியான கார்களில் அவர்களை கொண்டு திரிந்து தங்கள் வசதியை காண்பித்தார்கள் போராட்டம் அதோகதியாகிவட்டது.

தலைவர் விட்ட மாபெரும் தவறு போர்த்தளபதிகளை பேச்சுவார்த்தைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பியது.

அப்ப...வே.பி எல்லா இராசதந்திரிகளையும் சேரன், பாண்டியன் விடுதிகளுக்கு கூப்பிட்டு கூழ் குடிக்கச் சொல்லி பேசி இருக்க வேண்டும் என்று சொல்றியளோ?

அரசியல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு வந்து அவர்கள் விலைபோயிருந்தால் பெரிதாக தாக்கமில்லை. கருணா இளந்திரையன் போன்றோர் விலைபோனதுதான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அம்மானை, உன்னானை, உன்னானை ....எனக்கு இளந்திரையன் விலை போனார் என்று இப்பதான் கேள்விப் படுறன் மோனை....எப்படி இந்த படு ரகசியம் உம்மைத்தவிர எமக்கு தெரியாமல் போய்ட்டு என்று சொன்னால் நிம்மதியாக படுப்பன்

Edited by நிழலி

கருணாவிற்கு மட்டகளப்பினை விட்டுவிட்டு யாழ்ப்பாணத்தினை தனது படையணியினை தாக்குதாலில் ஈடுபடுத்தி பிடிப்பது பிடிக்க வில்லை. கனகம்புளியடி சந்தியை பிடிக்க முன்னேறிய ஜிம்கேலி தாதா தலைமையிலான ஜெயந்தான் படையனி மேலும் முன்னேற மறுத்துவிட்டது. கனகம்புளியடி சந்தி இலகுவா வீழக்கூடிய நிலையில் இருந்தது. கனகம்புளியடி சந்தியை பிடிக்க எற்பட்ட தாமதம் இராணுவம் அதனை மீள் அமைப்பு செய்து விட்டது. அத்துடன் இராணும் பலகுழல் எறிகணைகளையும் களத்திற்கு கொண்டுவந்து விட்டது. புலிகளுக்கு பின்னடைவுகளை எற்படுத்தி விட்டது.

கனகம்புளியடி சந்தியை கைப்பற்றி இருந்தால் புலிகள் கப்பதூர் வரணி உடாக முள்ளி பாலத்தினை ஒரே நாளில் பிடித்திருக்கும். அப்பகுதியில் பலமான இராணுவ தளங்கள் அப்போது இருக்க வில்லை. முகாமலைக்கான தரைவழி வளங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். புலிகள் நாகர்கோயில் முகாமாலை பகுதியில் இருந்தும் தாக்குதல் செய்ய இலகுவாக இருந்திருக்கும். தென்மாராட்சி புலிகளின் கையில் முமுமையாக வீழ்ந்திருக்கும்.

கருணா 2000 ஆண்டிலே முறுக தொடங்கி விட்டான். அதுதான் இராணுவத்திலிருந்து அரசியலுக்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. ஆனால் அவன் இராணுவத்திலும் தனது பிடியிணை இறுக்கி பிடித்து வைத்திருந்தான். புதிய போராளிகளை தனைக்கே விசுவாசமாக வளர்த்தான்

Edited by உமை

தலைவர் விட்ட மாபெரும் தவறு போர்த்தளபதிகளை பேச்சுவார்த்தைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பியது. அதனால்தான் தளபதிகள் பலர் விலைபோயினர். அரசியல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு வந்து அவர்கள் விலைபோயிருந்தால் பெரிதாக தாக்கமில்லை. கருணா இளந்திரையன் போன்றோர் விலைபோனதுதான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இங்கு பேச்சு வார்த்தைக்கு வந்தபோது இங்குள்ள செயற்பாட்டாளர்களின் சொகுசு வாழ்க்கையை பார்த்ததும் அவர்களின் உறுதி தளர்ந்திருக்கும். இலட்சம் டாலர்பெறுமதியான கார்களில் அவர்களை கொண்டு திரிந்து தங்கள் வசதியை காண்பித்தார்கள் போராட்டம் அதோகதியாகிவட்டது.

பிரபாகரனே சொல்வதைப் போல “வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்”. முப்பது வருடப் பாதையில் அவர் அடைந்ததாக கூறிய இராணுவ வெற்றிகள் எல்லாம் இன்று வெறும் சம்பவங்கள் மட்டுமே.

Edited by Bond007

அப்ப...வே.பி எல்லா இராசதந்திரிகளையும் சேரன், பாண்டியன் விடுதிகளுக்கு கூப்பிட்டு கூழ் குடிக்கச் சொல்லி பேசி இருக்க வேண்டும் என்று சொல்றியளோ?

அம்மானை, உன்னானை, உன்னானை ....எனக்கு இளந்திரையன் விலை போனார் என்று இப்பதான் கேள்விப் படுறன் மோனை....எப்படி இந்த படு ரகசியம் உம்மைத்தவிர எமக்கு தெரியாமல் போய்ட்டு என்று சொன்னால் நிம்மதியாக படுப்பன்

ஆட்றிலறியை தோளிலை வைச்சு அடிச்ச உங்களுக்கு இறுதிக்கட்டத்திலை முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்பதுபற்றி ஒன்றுமே தெரியாமல்தான் இருக்கும் இளந்திரையனுக்கு கிடைத்த தண்டனைபற்றி நீங்கள் அறியாமல் இருப்பது ஆச்சரியமே. இறுதிநேரத்தில் சில தளபதிகள் தண்டிக்கப்பட்டனர். அதில் இளந்திரையனும் ஒருவர் என்பது பலருக்கு தெரிந்த விடயம். தமிழீழபோராட்டத்தை விரல்நுனியில் வைத்திருக்கும் :) உங்களுகு்கு இது தெரியாமல் இருப்பது ஆச்சரியமே .உங்களைப்போன்ற பலருக்கு எல்லாவற்றையும் குழந்தை பிள்ளைகளுக்கு சொல்வதுபோல் சொன்னால்தான் எல்லாம் விளங்கும்.

அறிஞரே ஒரு அரசியல் துறைப்போராளி விலைபோனால் பெரிய பாதிப்பு இயக்கத்திற்கு வந்திருக்காது. ஆனால் ஒரு படையணிக்கு பொறுப்பானவர் விலைபோனால் அந்த படையணியே பாதிப்புக்குள்ளாகும். இதுதான் கருணாவினால் ஏற்பட்டது. தயவுசெய்து நீங்கள் விவாதம் நடைபெறுகின்ற இடங்களுக்கு செல்லாதீர்கள்.. ***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.