Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றிருக்காவிட்டால் தனி ஈழம் கிடைத்து 20 ஆண்டுகளாகி இருக்கும்: சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்றிருக்காவிட்டால் தனி ஈழம் கிடைத்து 20 ஆண்டுகள் ஆகி இருக்கும் என்று இயக்குனர் சீமான் கூறியுள்ளார்.

பட்டுக்கோட்டையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் தியாகி திலீபனின் 22 வது ஆண்டு நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இயக்குனரும் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளருமான இயக்குனர் சீமான் பேசுகையில், ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தால் இலங்கைக்கு அமைதிப்படை எதற்காக சென்றதோ அதை செய்யவில்லை.

மாறாக ஏராளமான ஈழத்தமிழர்களை கொன்று குவித்தனர். ஆனால் இந்திய இராணுவத்தால் தமிழக பகுதியில் சிங்களர்கள் குடியேறுவதை தடுக்க முடிந்ததா? இதைக்கண்டித்து திலீபன் உண்ணாவிரதம் இருந்து வீரமரணம் அடைந்தார். திலீபன் விட்டுச்சென்ற இலட்சிய கனவு இன்றும் நம்மிடம் உள்ளது.

இன்று இலங்கை மற்றொரு தேசம் என கூறும் தலைவர்கள் அன்று அமைதிப்படை இலங்கைக்கு சென்ற பொது கேட்டிருக்கலாம். அமைதிப்படை இலங்கைக்கு செல்லவில்லை எனில் தமிழ் ஈழம் பிரிந்து 20 ஆண்டுகளாகி இருக்கும். 62 ஆண்டுகால இந்திய அரசு தமிழுக்கும் தமிழனுக்கும் என்ன தொண்டு செய்துள்ளது.

பாராளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதியில்லை. பாராளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி வேண்டும். இந்த ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் பதுங்கு குழியில் இருந்த 25 ஆயிரம் தமிழர்கள் புல்டோசர்கள் மூலம் நசுக்கி கொல்லப்பட்டுள்ளனர். அதை யாரும் கேட்கவில்லை.

120 நாட்களுக்கும் மேலாக 3இ லட்சம் பேர் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். இதைப்பற்றியும் யாரும் கவலைப்படவில்லை. தமிழ்ஈழம் என்ற ஒரு நாடு இருந்தால் மட்டுமே தமிழர்களுக்கு நல்லது என்றார்.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

  • Replies 60
  • Views 3.8k
  • Created
  • Last Reply

பாராளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதியில்லை. பாராளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி வேண்டும்.

மகிந்தவின் தமில் இவருக்கு புரியவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் தமில் இவருக்கு புரியவில்லையா?

அவர் கேட்பது

இந்திய பாராளுமன்றத்தில் தமிழில் பேச....

மகிந்தவின் தமில் இவருக்கு புரியவில்லையா?

சீமான் இந்தியப் பாராளுமன்றப் பிரைச்சினையையும் இதனுள் போட்டு குளப்புகின்றார். பொதுவாகவே சிலர் நித்திரையில் கனவு கண்டு புலம்புவார்கள். இவர் முழித்துக் கொண்டே கனவு கண்டு புலம்புகின்றார். பிழைக்கத் தெரிந்தவர். :):D

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் இந்தியாவினால் தமிழர்களுக்கு செய்யப்படும் துரோகங்களை கூறுகிறார். ஈழ தமிழர்களை கொன்று குவித்ததும் இந்தியா தான்.அதே நேரம் இந்தியாவில் வாழும் தமிழர்களை பாராளுமன்றத்தில் தமிழில் பேச முடியாது என்றும் கூறி இருக்கிறார்.

Edited by nunavilan

சீமான் இந்தியப் பாராளுமன்றப் பிரைச்சினையையும் இதனுள் போட்டு குளப்புகின்றார். . :):D

அதுக்குதான் சிறுத்தை செம்மல் ,ஆயுதமேந்தா புலி,திருமாவளவன் இருக்கிறாரே........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை சீமான், தலைவர் தன்ர காலத்துக்கு முதல் தந்துதான் போவார் எண்டு தலயில அடிக்காத குறையா சத்தியம் செய்தவராம் . இங்கினேக்க எங்கையோ வாசிச்சநான்.

அண்ணே தலைவர் இருக்கிறார்தானே??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் அண்ணே, தேசியத்தலைவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தோட பேச்சுவார்த்தை நடத்தியே எடுத்திருப்பார். அந்தநேரம் அவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தோட சேர்ந்துதானே இயங்கினவர். :)

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் இந்தியப் பாராளுமன்றப் பிரைச்சினையையும் இதனுள் போட்டு குளப்புகின்றார். :):D

பாராளுமன்ற மொழி விடயமாக சீமான் கேட்டதில் தவறு ஒன்றும் இல்லை.

ஒரு நாட்டின் அங்கமென ஏற்றுகொண்ட மக்களின் உணர்வுகளையும், விருப்பதையும் பூர்த்தி செய்வதே புரிந்துணர்தலின் நியாயம். எந்த மொழி பேசுவோரும் தங்கள் வாதங்களை அவரவர் மொழியில் பேச அனுமதிக்கப்பட வேண்டும். மொழி பெயர்ப்பாளர்கள் அதற்கெனவே இருக்கிறார்களே? பொந்தியா என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட கலவை. இதில் இந்த மொழியில்தான் உரையாற்ற வேண்டுமென்றால் அடிப்படை இணக்கப்பாடே கேள்விக்குறியாகிவிடுகிறது.

பாராளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதியில்லை. பாராளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி வேண்டும். இந்த ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் பதுங்கு குழியில் இருந்த 25 ஆயிரம் தமிழர்கள் புல்டோசர்கள் மூலம் நசுக்கி கொல்லப்பட்டுள்ளனர். அதை யாரும் கேட்கவில்லை.

மேலேயுள்ளவாறு தான் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் பார்ப்பவர்கள் எவருக்கும் சீமான் இலங்கைப் பாராளுமன்றத்தைத் தான் குறிப்பீடுகின்றார் என்று தோன்றும். முழுக்க முழுக்க இலங்கைப் பிரைச்சினையை சொல்லி விட்டு திடடீரென பாராளுமன்றத்தில் என்று மொட்டையாகச் சொன்னால் எப்படிப் புரியும் ?? சமீபத்தில் இந்தியப் பாராளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதிக்குமாறு திமுக கேட்டதை அறிந்தவர்களுக்கு மட்டுமே விபரம் தெரிந்திருக்கும்.

***

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்ட கருத்திற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

*இந்தப் போர் எங்களோடு தொடங்கியது*

எழுதியவர்: டி. அருள் எழிலன்.

'இந்த ஒப்பந்தம் எமது அரசியல் இயக்கத்தைப் பாதிக்கிறது. எமது அரசியல்

இலட்சியத்தைப் பாதிக்கிறது. எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது. எமது ஆயுதப்

போராட்டத்திற்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. நாம் ஆயுதங்களை கையளிக்காது

போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம்

விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய மக்களை நேசிக்கிறோம்.

இந்திய வீரனுக்கு எதிராக நாம் ஆயுதங்களை நீட்டத் தயாராக இல்லை. எமது

எதிரியிடமிருந்து எம்மை பாதுகாக்கும் பொறுப்பை இந்திய இராணுவத்தினர்

ஏற்கிறார்கள். நாம் ஆயுதங்களை கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவனதும்

உயிருக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும்

என்பதை நான் இங்கே இடித்துக் கூற விரும்புகிறேன். இந்தியாவின் இந்த முயற்சிக்கு

நாம் ஒத்துழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நாம்

அவர்களுக்கு வழங்குவோம். ஆனால் இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சனைக்கு

நிரந்தரத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்க வில்லை: சிங்கள: இனவாத பூதம் இந்த

ஒப்பந்தத்தை விழுங்கி விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை"

'தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் பங்குபற்ற அல்லது தேர்தலில்

போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்திற்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக்

காலக்கட்டத்திலும் தேர்தலில் பங்கு பற்றப் போவதில்லை முதலமைச்சர் பதவியையும்

ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்."

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான போது 1987- ஆகஸ்ட் 4- ஆம் நாள் ஈழ

மக்களிடம் ஒரு குழப்பம் நிலவியது அந்த குழப்பத்தைப் போக்கும் வகையில் யாழ்பாணம்

சுதுமலை அம்மன் கோவில் மைதானத்தில் திரண்டிருந்த ஈழ மக்களுக்கு மத்தியில் 'நாம்

இந்தியாவை நேசிக்கிறோம்" என்னும் தலைப்பில் நிகழ்த்திய உரையின் சில வரிகள்தான்

இவை.

இருபதாண்டுகளைக் கடந்து விட்ட இந்த உரை இன்று காலத்தினால் மீண்டும்

புதுப்பிக்கப்பட்டிருக்கிறத

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அண்ணே, தேசியத்தலைவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தோட பேச்சுவார்த்தை நடத்தியே எடுத்திருப்பார். அந்தநேரம் அவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தோட சேர்ந்துதானே இயங்கினவர். :)

ஆமாண்ணே ஆமாம்.... தேசிய தலைவர் தமிழ் மக்களை இந்திய இராணுவத்தின் கோரப்பிடிக்குள் இருந்து காப்பாற்றவும், தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் இலங்கை அரசுடன் இணைந்து இயங்கியிருந்தார்... அவர் மக்களின் உரிமைக்காக பேயுடனும் இணையத் தயாராக இருந்தார்.....ஆனால் மக்களின் போராட்டத்தினை காட்டிக் கொடுத்தே வயிறு வளர்த்த நீங்கள் எல்லாம் தமிழ் மக்களின் உரிமைகளை பறிக்கத்தான் ராஜீவில் இருந்து மகிந்த வரைக்கும் இணைந்து பணியாற்றுகின்றீர்கள்...........

ஆமண்ணே .... மக்களின் உரிமையைத்தான் முள்ளிவாய்க்கால்வரை கூட்டக்கொண்டுபோனபோது பார்த்தமே,

3 லச்சம் மக்கள நடுத்தெருவில விட்டிட்டு மக்களை காப்பாத்தவோ?

ஸ்ரீலங்கனோடு கூட்டுச்சேந்து இந்தியனை வெளியேற்றிப்போட்டு,

ஸ்ரீலங்கனோடு போர்தொடுக்க இந்தியன் வருவான் எண்டு கனவு கண்டனியளோ?

கடைசி நேரம் சொன்ன கதை தமிழ்நாட்டில அம்மா வாறா,

இந்தியா வருகிது

போர் நிக்கிது

தமிழீழம் கிடைக்குது

இந்தா எல்லாம் முடியிது எண்டது தானே!

நிறைய பாத்திட்டம்.

அனுபவப்பட்டிட்டம். :)

Edited by Mathivathanang

ஆமண்ணே .... மக்களின் உரிமையைத்தான் முள்ளிவாய்க்கால்வரை கூட்டக்கொண்டுபோனபோது பார்த்தமே,

3 லச்சம் மக்கள நடுத்தெருவில விட்டிட்டு மக்களை காப்பாத்தவோ?

பாத்தனாங்கள் இந்தியனோடை சேந்து பிள்ளை பிடிச்சதையும் பாத்தனாங்கள் ... புலிக்கு ஆதரவாளர்கள் எல்லாத்தையும் போட்டத்துயும் பாத்தனாங்கள்... பிரபாகரனை கொலை செய்து போட்டம் எண்டு தண்ணிபாட்டி வச்சு ரோட்டு எல்லாம் குத்தடிச்சதைம் பாத்தனாங்கள்...

மக்கள் ஆதரவு கூடிப்போய் இந்தியன் கப்பலிலை ஏற முன்னம் ஒடிப்போய் கப்பலிலை ஏறி இந்தியா போய் பிளேன் வளி கொழும்பு வந்ததையும் பாத்தனாங்கள்...

இராஜீவுக்கு அடி போட்ட பிரேமதாசா இந்தியனை வெளியேற்ற புலியின் ஆதரவை கேட்டார்... இந்தியனை வெளியேற்ற கூடியது பிரேமதாசாவாலை தான் முடியும் என்பதாலை பிரேம தாசாவுடன் தலைவர் போர் நிறுத்தம் செய்து கொண்டார்... ஆனால் கொழும்பிலை உங்கட ஆக்கள் மாதிரி பதுங்கி கொள்ள இல்லை.. அதுக்கு பிறகு பிறேமதாசா ஈரோசுக்கும், புலிகளுக்கும் ஆயுதங்களை குடுக்க வேண்டாம் எண்டு தலைவர் சொல்ல இல்லை... இந்தியனை வெளியேற்ற பிரேமதாசா பரிசு கொடுத்ததை ஏற்று கொண்டதை பிழை எண்டும் சொல்வதுக்கு இல்லை..

ஆனால் வடக்கு கிழக்கிலை மக்களின் ஆதரவு இல்லாமல் மறைந்து நிண்டு கூட புலியை அடிக்க முடியாமல் ஓடியவர்கள் நீங்கள்... ஆனால் இந்தியன் கொடுத்த ஆயுதங்களோடை வலம் வந்தபோது புலி மக்களின் ஆதரவோடை அங்கைதான் நிண்டவை... அது உங்களுக்கு எல்லாம் மறந்து போய் இருக்கும்..

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாத்தனாங்கள் இந்தியனோடை சேந்து பிள்ளை பிடிச்சதையும் பாத்தனாங்கள் ...

அவங்கள் பிள்ளை பிடிச்சால் பிழை நாங்கள் பிள்ளைபிடிச்சால் சரியோ?

புலிக்கு ஆதரவாளர்கள் எல்லாத்தையும் போட்டத்துயும் பாத்தனாங்கள்...

அவங்களை போட்டால் சரி அவங்கள் போட்டாத்தான் பிழையோ?

பிரபாகரனை கொலை செய்து போட்டம் எண்டு தண்ணிபாட்டி வச்சு ரோட்டு எல்லாம் குத்தடிச்சதைம் பாத்தனாங்கள்...

கல்மடுக்குளம் உடைஞ்சதுக்கே தண்ணிபாட்டி வச்சு கொண்டாடினநாங்கள் நீங்கள் இதையெல்லாம் பெரிசுபடுத்தலாமோ?

மக்கள் ஆதரவு கூடிப்போய் இந்தியன் கப்பலிலை ஏற முன்னம் ஒடிப்போய் கப்பலிலை ஏறி இந்தியா போய் பிளேன் வளி கொழும்பு வந்ததையும் பாத்தனாங்கள்...

இலங்கை ராணுவம் வருதெண்டு மக்கள பின்னால வரச்சொல்லிப்போட்டு முன்னால வன்னிக்கு ஓடினதைப்போலவெண்டு செல்லுறீங்கள்.

இராஜீவுக்கு அடி போட்ட பிரேமதாசா இந்தியனை வெளியேற்ற புலியின் ஆதரவை கேட்டார்...

ரஜீவுக்கு அடிபோட்ட பிரேமதாசா என்னத்துக்கு புலியிண்ட ஆதரவு கேட்டார்?

இந்தியனை வெளியேற்ற கூடியது பிரேமதாசாவாலை தான் முடியும் என்பதாலை பிரேம தாசாவுடன் தலைவர் போர் நிறுத்தம் செய்து கொண்டார்...

இந்தியாவை வெளியேற்ற ஸ்ரீலங்கா அரசோடை போர் நிறுத்த ஒப்பந்தம் செய்தார்.

உதுக்கு பிறேமதாசா கண்ணை மூடிக்கொண்ட உடன்படுவாரெண்டு தலைவருக்குத் தெரியும்.

***

ஆனால் கொழும்பிலை உங்கட ஆக்கள் மாதிரி பதுங்கி கொள்ள இல்லை..

பதுங்காமல்தான் அமிர்தலிங்கத்தை யோகேஸ்வரனை போட்டநீங்களாக்கும்.

அதுக்கு பிறகு பிறேமதாசா ஈரோசுக்கும், புலிகளுக்கும் ஆயுதங்களை குடுக்க வேண்டாம் எண்டு தலைவர் சொல்ல இல்லை...

***

இந்தியனை வெளியேற்ற பிரேமதாசா பரிசு கொடுத்ததை ஏற்று கொண்டதை பிழை எண்டும் சொல்வதுக்கு இல்லை..

மொக்குப் பிறேமதாசா பரிசு குடுத்தார், அதை தலைவர் ஏத்துக்கொண்டார்.

ஆனால் வடக்கு கிழக்கிலை மக்களின் ஆதரவு இல்லாமல் மறைந்து நிண்டு கூட புலியை அடிக்க முடியாமல் ஓடியவர்கள் நீங்கள்...

நாலாவது வல்லரசு இந்தியாவே ஓடேக்க, அவங்கள் நிண்டுபிடிச்சிருக்க ஏலாதுதானே!

ஆனால் இந்தியன் கொடுத்த ஆயுதங்களோடை வலம் வந்தபோது புலி மக்களின் ஆதரவோடை அங்கைதான் நிண்டவை...

இந்தியனிட்ட முதலில ஆயுதம் வேண்டனது நீங்கள்தானே அதோட வலம்வந்திருப்பியள்தானே!

அது உங்களுக்கு எல்லாம் மறந்து போய் இருக்கும்..

ஓ.......எனக்கு மறதி கூட

இந்தியாவோட சண்டைபிடிக்க ஸ்ரீலங்காவோட கூட்டுச்சேர முடியும், அதுக்கு ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியும்.

அதாலதான் இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து, சிறீலங்காவோட எங்களுக்காக சண்டைபிடிக்க இந்தியா வரேல்லையோ?

bye

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

அமிர்தலிங்கத்தை போட்டது ரோ... புலி இல்லை... போட்டவர்கள் யாரும் புலிகளின் உறுப்பினர்களாகவும் இல்லை.. இந்தியன் பொற்கோயிலுக்கை அனுப்பேக்கை போன மாதிரி புலியில் இருந்தவர்களை ரோ பயன்படுத்தி கொண்டது...

புலி கொழும்பிலை ஒண்டும் சிங்கள இராணுவத்தின் பாதுகாப்பிலை இருக்க இல்லை.. சிங்கள இராணுவத்தோடை நிண்டு தமிழரின் விடிவுக்காக போராட ஆயுதம் வச்சு இருக்கவும் இல்லை. தமிழனை அழிக்க ரோந்து போகவும் இல்லை...

ஆனா அதை எல்லாம் மாத்து கறுத்து எண்ட பேரிலை செய்து கொன்டுதான் இருந்தனீயள் செய்யுறீயள்....

முதல் முதலிலை தமிழன் இடம்பெயந்து கொழும்புக்கு போனதே இந்திய இராணுவ காலத்திலை பிள்ளை பிடிச்சு ஆக்களை கடத்தின தியாக தீபங்களாலைதான்... போய் கொழும்பி இந்துவிலையும் ஆனந்தா கல்லூரியிலையும் தங்க வைக்க பட்டனர்...

இப்ப பாரும் அந்த குழுக்கள் எல்லாம் புலி மக்களை வவுனியாவுக்கு 3 லச்சம் பேரை இடம் பெயத்தி போட்டுது எண்டு நீலிக்கண்ணீர் வடிக்கினம்...

புலியிலை மக்கள் ஆதரவே இல்லை எண்டு சொல்லும் ஆளாக இருந்தால் மக்கள் ஆதரவை உங்கட கோதாரி களாலை ஏன் பெற முடிய இல்லை எண்டதை எப்பவாவது சிந்திச்சு பாத்து இருப்பியளோ...??? உங்கட குழுக்கள் ஆயுதங்களோட திரியும் போது புலி யும் அங்கை ஆயுதத்தோடை திரிஞ்சது...

ஆனால் புலி தனிய கட்டுப்பாட்டுக்கை வச்சு இருக்கேக்கை உங்களாலை அங்கை இருக்க முடிய வில்லையே ஏன்... புலிக்கு சனம் உங்களை காட்டி குடுத்து போடும் எண்ட பயமோ...???

  • கருத்துக்கள உறவுகள்

கல்மடுக்குளம் உடைஞ்சதுக்கே தண்ணிபாட்டி வச்சு கொண்டாடினநாங்கள் நீங்கள் இதையெல்லாம் பெரிசுபடுத்தலாமோ?

அது தமிழ்வின்னும் , அதிர்வுமல்லோ அடிச்சவை. :lol:

அவங்களை போட்டால் சரி அவங்கள் போட்டாத்தான் பிழையோ?

விடுதலை வீரர்கள் துரோகிகளை போடலாம். ஆனால் துரோகிகள் யாரையும் போடலாமோ? திங் மதிவதனங் :D

வல்லரசு இந்தியாவே ஓடேக்க, அவங்கள் நிண்டுபிடிச்சிருக்க ஏலாதுதானே!

நின்றிருந்தால் தோசைக்கு சம்பல் தேவைப்பட்டிருக்காது. அது தான் மக்கள் போட்டிருப்பினம் சம்பல். :lol::lol:

ஓ.......எனக்கு மறதி கூட

வரக்கூடாது. இல்லா விட்டாலும் பறவாயில்லை சிங்களவன் வரப்பண்ணுவான். :lol::lol:

அனுபவப்பட்டிட்டம்

இல்லையே. இப்ப தான் தொடங்கி இருக்கு. போக போக தெரியும். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமிர்தலிங்கத்தை போட்டது ரோ... புலி இல்லை... போட்டவர்கள் யாரும் புலிகளின் உறுப்பினர்களாகவும் இல்லை.. இந்தியன் பொற்கோயிலுக்கை அனுப்பேக்கை போன மாதிரி புலியில் இருந்தவர்களை ரோ பயன்படுத்தி கொண்டது...

புலி கொழும்பிலை ஒண்டும் சிங்கள இராணுவத்தின் பாதுகாப்பிலை இருக்க இல்லை.. சிங்கள இராணுவத்தோடை நிண்டு தமிழரின் விடிவுக்காக போராட ஆயுதம் வச்சு இருக்கவும் இல்லை. தமிழனை அழிக்க ரோந்து போகவும் இல்லை...

ஆனா அதை எல்லாம் மாத்து கறுத்து எண்ட பேரிலை செய்து கொன்டுதான் இருந்தனீயள் செய்யுறீயள்....

முதல் முதலிலை தமிழன் இடம்பெயந்து கொழும்புக்கு போனதே இந்திய இராணுவ காலத்திலை பிள்ளை பிடிச்சு ஆக்களை கடத்தின தியாக தீபங்களாலைதான்... போய் கொழும்பி இந்துவிலையும் ஆனந்தா கல்லூரியிலையும் தங்க வைக்க பட்டனர்...

இப்ப பாரும் அந்த குழுக்கள் எல்லாம் புலி மக்களை வவுனியாவுக்கு 3 லச்சம் பேரை இடம் பெயத்தி போட்டுது எண்டு நீலிக்கண்ணீர் வடிக்கினம்...

புலியிலை மக்கள் ஆதரவே இல்லை எண்டு சொல்லும் ஆளாக இருந்தால் மக்கள் ஆதரவை உங்கட கோதாரி களாலை ஏன் பெற முடிய இல்லை எண்டதை எப்பவாவது சிந்திச்சு பாத்து இருப்பியளோ...??? உங்கட குழுக்கள் ஆயுதங்களோட திரியும் போது புலி யும் அங்கை ஆயுதத்தோடை திரிஞ்சது...

ஆனால் புலி தனிய கட்டுப்பாட்டுக்கை வச்சு இருக்கேக்கை உங்களாலை அங்கை இருக்க முடிய வில்லையே ஏன்... புலிக்கு சனம் உங்களை காட்டி குடுத்து போடும் எண்ட பயமோ...???

அண்ணே நீங்கள் புலியில இருந்து வந்தீங்கள், நான் புலியோட இருந்து வந்தநான், புலியிண்ட குணமெல்லாம் அனுபவத்தில கண்டு வந்தநான்.

நீங்கள் சொல்லித்தான் அறியவேணுமெண்டும் இல்ல.

அமிர்தலிங்கம் யோகேஸ்வரனை மட்டுமில்ல, மாமனிதர் பட்டங்குடுத்த பலரையும் கொழும்பில போட்டது இயக்கம்தான் எண்டது எல்லாருக்கும் தெரியும்.

ஆனந்தாவிலையும் கொழும்பு இந்துவிலயும் வந்திருந்தது புலியள்தானெண்டு எங்களுக்கு தெரியாதோ?

இப்ப வவுனியா வந்திருக்கிறதுகளை வரவிடாமல் தடுத்தது யாரெண்டு தெரியாதோ? வந்ததாலதான் உயிரோட எண்டாலும் இருக்கிதுகள்.

இங்க ஆர்ப்பாட்ட ஊர்வலத்திலகூட அவங்கள வெளியால விடாம அங்கயே வச்சிருக்கிற முயற்சிதான் நடந்திச்சுது. ஏனெண்டுகேட்டா அப்பத்தான் தமிழீழத்துக்கு ஆதரவு கிடைக்குமெண்டு சர்வசாதாரணமா சொன்னாங்கள்.

இவங்கள நம்பி 3 லச்சம் சனம்...............

மற்ற இயக்கங்களுக்காக என்னால பதில் சொல்ல ஏலாது? அவங்களும் தங்களுக்கெண்டு இணையத்தளங்கள் வச்சிருக்கிறாங்களாம்.

அதில உங்களுக்கு நிறைய பதில் இருக்கும். போய்ப் பாருங்கோவன்...........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது தமிழ்வின்னும் , அதிர்வுமல்லோ அடிச்சவை. :lol:
தமிழ்வின்னோ அதிர்வோ கொண்டாடினதுதானே!! அததான் இங்க முக்கியம்.

விடுதலை வீரர்கள் துரோகிகளை போடலாம். ஆனால் துரோகிகள் யாரையும் போடலாமோ? திங் மதிவதனங் :D
உங்களுக்கு அவங்கள் துரொகியாயிருக்கலாம் அவங்களுக்கு நீங்கள் துரோகியாயிருக்கலாம்.

எங்களுக்கு எல்லோரும் துரொகிகள்தானே..... இங்க களத்திலயே பட்டங்கள் தூள்கிளப்பிறதை பாத்திருப்பியள்தானே.......

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு உத்தியோகபூர்வமா குடுத்திருக்காம்.......

நின்றிருந்தால் தோசைக்கு சம்பல் தேவைப்பட்டிருக்காது. அது தான் மக்கள் போட்டிருப்பினம் சம்பல். :lol::lol:
வவுனியா காம்பிலயும் உதுதான் பேச்சாம்......

வரக்கூடாது. இல்லா விட்டாலும் பறவாயில்லை சிங்களவன் வரப்பண்ணுவான். :lol::lol:
நீங்கள் அவன் வரப்பண்ணுவானெண்டு நினைக்கிறியளோ? எனக்கு மட்டும்தானோ இல்லாட்டில் எல்லாருக்குமோ?

இல்லையே. இப்ப தான் தொடங்கி இருக்கு. போக போக தெரியும். :lol:
ஓ நேற்றையானயோ? அப்ப முழுக்க முடிஞ்சுதான் நிக்குமெண்டு சொல்லுறீங்கள். ஈராக்கோ, ஆப்கானிஸ்தானோ? ரெண்டிலயும் செத்தது ஈராக்கியும் ஆப்கானியும்தானே!!!

மற்ற இயக்கங்களுக்காக என்னால பதில் சொல்ல ஏலாது? அவங்களும் தங்களுக்கெண்டு இணையத்தளங்கள் வச்சிருக்கிறாங்களாம்.

அதில உங்களுக்கு நிறைய பதில் இருக்கும். போய்ப் பாருங்கோவன்...........

அப்ப நீங்கள் மக்களுக்காக, மக்கள் பிரதிநிதியாக பதில் சொல்லுறீயள் ,சரி சரி சொல்லுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப நீங்கள் மக்களுக்காக, மக்கள் பிரதிநிதியாக பதில் சொல்லுறீயள் ,சரி சரி சொல்லுங்கோ

அண்ணே.......இங்க எல்லாருமே மக்கள் பிரதிநிதியள்தானே!

அங்கை இருந்தாலாவது ஏதோ ஒண்டில போடலாம்..... ஆனா இஞ்சை முத்தரைதான் குத்துறம் ...... இல்லயோ?

ஆனா இஞ்சை முத்தரைதான் குத்துறம் ...... இல்லயோ?

அதுவும் குத்தாமல் இருந்திடுவன் $ 50 அபராதம் கட்டவேண்டும் என்று போய் குத்தி போட்டு வாரனான் .ஜனநாயகம் என்று சொல்லுறாங்கள் குத்த விருப்பமில்லை என்றால் அபராதம் கட்ட வேண்டியிருக்கு :lol::lol:

அண்ணே நீங்கள் புலியில இருந்து வந்தீங்கள், நான் புலியோட இருந்து வந்தநான், புலியிண்ட குணமெல்லாம் அனுபவத்தில கண்டு வந்தநான்.

நீங்கள் சொல்லித்தான் அறியவேணுமெண்டும் இல்ல.

அமிர்தலிங்கம் யோகேஸ்வரனை மட்டுமில்ல, மாமனிதர் பட்டங்குடுத்த பலரையும் கொழும்பில போட்டது இயக்கம்தான் எண்டது எல்லாருக்கும் தெரியும்.

ஆனந்தாவிலையும் கொழும்பு இந்துவிலயும் வந்திருந்தது புலியள்தானெண்டு எங்களுக்கு தெரியாதோ?

இப்ப வவுனியா வந்திருக்கிறதுகளை வரவிடாமல் தடுத்தது யாரெண்டு தெரியாதோ? வந்ததாலதான் உயிரோட எண்டாலும் இருக்கிதுகள்.

இங்க ஆர்ப்பாட்ட ஊர்வலத்திலகூட அவங்கள வெளியால விடாம அங்கயே வச்சிருக்கிற முயற்சிதான் நடந்திச்சுது. ஏனெண்டுகேட்டா அப்பத்தான் தமிழீழத்துக்கு ஆதரவு கிடைக்குமெண்டு சர்வசாதாரணமா சொன்னாங்கள்.

இவங்கள நம்பி 3 லச்சம் சனம்...............

மற்ற இயக்கங்களுக்காக என்னால பதில் சொல்ல ஏலாது? அவங்களும் தங்களுக்கெண்டு இணையத்தளங்கள் வச்சிருக்கிறாங்களாம்.

அதில உங்களுக்கு நிறைய பதில் இருக்கும். போய்ப் பாருங்கோவன்...........

அட இப்பதான் புலியோடை இருந்தவரை பாக்கிறன்.... எங்கை எங்கை தெகிவளைமிருக காட்ச்சி சாலையிலையே... புலியும் நானும் ஒரு சக்திகள் ஒருமுறை நாங்கள் ஒண்டா இருந்தனான் எண்டுறீர்... நான் நினைக்கிறன் 2010 ல இதுதான் சூப்பர் கொமடி...

நான் புலியோடை இருந்தனான் அவர்கள் செய்தது எல்லாம் எனக்கு தெரியும் எண்டு அவிக்கும் பால்பேரிலை நீரும் ஒருத்தர் எண்டது மட்டும் நல்லா புரியுது....

உப்பிடி இன்னும் பலபேர் முளைச்சு கொன்டு தான் இருகிருக்கினம்... எந்த புத்துக்கால எந்த பாம்பு வரும் எண்டது எல்லாம் இப்ப சுலபமா கண்டு பிடிக்க கூடியதாக இருக்கு...

நான் அப்ப கொழும்பு இந்துவில தான் படித்து கொண்டு இருந்தேன்... அப்ப ஆனந்தா கல்லூரியிலயும் இந்துவுலையும் கிட்டத்தட்ட 4000 பேர் தங்க வைக்கை பட்டு இருந்தனர்... அனைவரும் புலிகள் எண்டால் வன்னியிலை இந்தியன் யாரோடை சண்டை பிடிச்சு கொண்டு நிண்டவன்...??? இல்லை உங்கட ஆக்கள் தான் ஆரோடை பிடிச்சவை....

இன்னும் எவ்வளவு பொய் மூட்டைகளை இருப்பிலை வச்சு இருக்க போறியள்...???

கொழும்பிலை சுட்டது புலிகள் எண்டால் சிங்கள அதிகாரிகள், அரசியல் வாதிகள் செத்த போது தமிழர்கள் கைது செய்ய பட்டு குற்றம் சாட்ட படுவது போல ஏன தமிழர்கள் சாகும் போது விடுதலை புலி எண்று ஒரு தமிழனும் கைது செய்ய ப்பட்டு குற்றம் சாட்ட வில்லை.... தமிழனை கொண்ற தமிழனை பிடிக்கிறது கஸ்ரம் சிங்களவனை கொண்றவனை பிடிப்பது சுலமமோ...??

பண்டாக்க்களுக்கு நல்லாத்தான் வாங்கிறீயள் வக்காலத்து... ஆனால் நம்பும் படியாக தான் இல்லை. வேறமாதிரி சிறப்பாக முயற்ச்சி செய்து பாருங்கள்...

என்னண்ணை கொழும்பில படிச்சுக்கொண்டு யாழ்ப்பாணத்தில இந்தியனோட சண்டை புடிச்சியளோ!

இதைவிட பொய்முட்டை வேற வேணுமே?

நீங்களே கொழும்பில இருந்ததெண்டு சொல்லிக்கொண்டு புலி கொழும்பில இருக்கேல்ல கொழும்பில ஒருத்தரையும் போடேல்லயெண்டு சொன்னா நம்பிடுவமே!

புலியளோட இருந்ததெண்டா புலியள் இருக்கேக்க அங்க இருந்தநான் எண்டு அர்த்தம். இயக்கத்தில இருந்ததா அர்த்தமில்ல.

றோ றோ வெண்டுதானே இவ்வளவுகாலமும் கொண்டு இழுத்தநீங்கள்.

அமிர்தலிங்கம் யோகேஸ்வரனைப்போட 4000 பேர் தேவைப்படேல்ல,

5 பேர்தான் தேவைப்பட்டதாம், அரசாங்கதின்ர அனுசரனையோட புலியள் கொழும்பில இருக்கேக்க,

பேச்சுவார்த்தை எண்டு ஏற்பாடு செய்துபோட்டுத்தான் போய் போட்டநீங்களெண்டு எல்லாருக்கும் தெரியும்.

இவ்வளவு காலத்தில ஒரு வருசமாவது அமிர்தலிங்கம் யோகேஸ்வரனுக்கு அகவணக்கம் செய்திருந்தால் றோ செய்ததெண்டு நம்பலாம்.

யாருக்கு விடுறியள்?

கொழும்பிலை சுட்டது புலிகள் எண்டால் சிங்கள அதிகாரிகள், அரசியல் வாதிகள் செத்த போது தமிழர்கள் கைது செய்ய பட்டு குற்றம் சாட்ட படுவது போல ஏன தமிழர்கள் சாகும் போது விடுதலை புலி எண்று ஒரு தமிழனும் கைது செய்ய ப்பட்டு குற்றம் சாட்ட வில்லை.... தமிழனை கொண்ற தமிழனை பிடிக்கிறது கஸ்ரம் சிங்களவனை கொண்றவனை பிடிப்பது சுலமமோ...??

நீங்கள் கேட்டியளே ஒரு கேள்வி, நாங்கள் எங்களையே போட்டு அழியிறது சிங்களவனுக்கு சக்கரை தின்னுறதுமாதிரி,

அவன் அக்கறைகாட்டுவானெண்டு நீங்கள் நினைச்சால் உங்களைபோல முட்டாள் இருக்கமுடியாது.

தமிழ்மக்கள் தமிழ்மக்களை போட்டது கிடையாது.

இயக்கம் இயக்கத்தை அல்லது இயக்கம் தமிழ் அரசியல்வாதிகளை போட்டதுதான் சரித்திரம்,

போட்டதால நன்மை அவங்களுக்குத்தான், கண்டும் காணாமல்த்தான் இருப்பான்.

நீங்கள் போட்டிட்டு அதுக்கு வேறவேற பேரும் குடுத்து, விசிலடிச்சு கொண்டாட சந்தோசமா பாத்துக்கொண்டுதான் இருப்பான்.

எங்கட கொழுப்புக்கு நாங்கள் அடிபட, அவன் வந்து விலக்குப்புடிக்க, அவனுக்கும் அடிவிழ, இதெல்லாம் அவங்களுக்கு தேவையோ?

அவங்கட ஆசீர்வாதத்தோட நீங்கள் போட்டிட்டு அவங்கள பிடிக்க கேக்கிறது உங்களுக்கே நல்லாயிருக்கா?

பண்டாக்க்களுக்கு நல்லாத்தான் வாங்கிறீயள் வக்காலத்து... ஆனால் நம்பும் படியாக தான் இல்லை. வேறமாதிரி சிறப்பாக முயற்ச்சி செய்து பாருங்கள்...

நான் பண்டாதான், அதாலதான் இவ்வளவுசனம் செத்துப்போசே, எங்கட போராட்டம் இப்படி முடிஞ்சுபோச்சே எண்டு கவலைப்படுறன்.

இருக்கிற சனத்தையாவது காப்பாத்திப்போடுவமெண்டு யோசிக்கிறன். நான் பண்டாவா இருக்கிறதில பெருமைப்படுறன்.

உங்களைப்போல வெளிநாட்டில புலிப்பினாமியா இருந்துகொண்டு, திரும்பவும் சண்டைக்கு தூபம்போடேல்ல.

உங்களைப்போல இங்க சொகுசா இருந்துகொண்டு தப்பிவந்ததுகள பலிகொடுக்க ஆயத்தப்படுத்தேல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் மதித் தாத்தா.. சும்மா வெட்டியாப் பொழுதுபோக்க எதையாவது செய்யத்தானே வேண்டும். அதுதான் எல்லாரையும் திட்டிக்கொண்டிருக்கிறியள்.. அதைத் தவிர உங்களால ஒண்டும் செய்யேலாது எண்டு தெளிவாத் தெரியும்.. தடைமுகாமில இருக்கிற தமிழ்ச் சனம் மீது அக்கறை இருக்கு எண்டு பீத்திக் கொண்டிருந்தால் மட்டும் அதுகளின் கஷ்டம் போய்விடும் எண்டு நம்புற உங்களைப் போன்றவர்கள் பலர் இருக்கின்றார்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.