Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டில் அம்மாக்களின் அட்டகாசங்கள்

Featured Replies

அனைவருக்கும் மீண்டும் இனிய வணக்கங்கள்,

தலைப்பை பார்த்துப்போட்டு கனக்க யோசிக்க கூடாது. எங்கள் எல்லார் வீடுகளிலையும் அம்மாக்களின் ஆட்சிதான் பெரும்பாலும் கோலோச்சும். இது பிழை என்று சொல்லிறதுக்கு இல்லை. எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் முதுகு முறிய எங்களுக்காக வீட்டில நாளும் பொழுதும் கஸ்டப்பட்டு வேலை செய்கிற அம்மாவுக்கு வீட்டில அதிகாரம் இருக்கிறது நல்லதுதானே.

வழமையாக வீடுகளில அம்மாக்கள் பழைய சாமான்கள், அண்டா, குண்டா, தளபாடங்கள், உடைகள், செருப்பு தொடக்கம் சீப்பு வரை அவை தும்பாகி, நாலாக கிழிஞ்சு நாராகி விட்டாலும் குப்பையில எறியமாட்டீனம். பொதுக்கி பொதுக்கி வச்சு இருப்பீனம்.

நான் நினைச்சன் எங்கடை அமமா மாத்திரம்தான் இப்பிடி எண்டு. ஆனால்.. வெளியில 360கோணத்தில சுத்திப்பார்த்தால்.. அம்மா ஸ்தானம் கிடைச்ச உடன, பிள்ளைகள் பிறந்தஉடன இளம்வயதிலேயே இப்பிடி தட்டுமுட்டு சாமான்கள் பழசுகளை பத்திரப்படுத்திற பழக்கம் ஆக்களுக்கு - பெண்களுக்கு வந்திடுது போல இருக்கிது.

இதில சுவாரசியமான விசயம் என்ன எண்டால்.. பொதுவாக அப்பாமார்.. புத்தகங்கள், கோப்புக்கள், கடதாசிகள், காகிதங்கள் எண்டு ஆவணங்கள் சம்மந்தப்பட்ட அனைத்தையும் பதுக்கி வைக்கிற பழக்கம் உடையவர்களாய் இருக்கிறீனம். ஆனால்.. அம்மாமார் இவற்றோட சேர்த்து முழுவிட்டில இருந்து ஒரு உடைஞ்ச ஊசி வெளியில போறதாய் இருந்தாலும்கூட அதை குப்பையில எறிய விருப்பம் இல்லாமல் பதுக்கி வைக்கிற ஆக்களாய் இருப்பீனம்.

எங்கடை வீட்டில இந்த குப்பைகளை அலுமாரிகள், பெட்டிகள், பைகளினுள் அம்மா பதுக்கிறதால எனக்கும் அம்மாவுக்கும் இடையில அடிக்கடி சண்டை ஏற்படும்.

நான் என்ன செய்வன் எண்டால்.. அம்மா வீட்டில இல்லாத நேரமாய் பார்த்து பழசுகள் எல்லாத்தையும் கடகட எண்டு எடுத்து குப்பையில கொண்டுபோய் போட்டிடுவன். பிறகு அம்மா.. வீட்டுக்க வந்து காணாமல் போன சாமான்களை உடனடியாக இல்லாட்டிக்கு ஒரு நாள், ஒரு கிழமை, ஒரு மாதம் அல்லது ஒரு வருசத்தால சாமான் காணாமல் போயிட்டுது எண்டு கண்டுபிடிச்சுப்போட்டு என்னை வசை பாடிக்கொண்டு இருப்பா.

சிலது வீட்டில இருக்கிற சாமான்களே கண்ணில படவில்லை எண்டால் அம்மா உடனடியாய் நான் அதை வெளியில கொண்டுபோய் எறிஞ்சுபோட்டன் எண்டு புலம்பத்தொடங்கியிடுவா. ஊர் எண்டாலும் பரவாயில்ல.. பழைய சாமான்களை இடவதிகள் நிறைஞ்ச இடத்தில எறியாமல் வச்சு இருக்கலாம். ஆனால் வெளிநாடுகள் எண்டால்..

இப்பிடியான நிலமையில..

சிலது வீட்டுக்க குப்பைகளை அம்மா பொதுக்கி வைக்கிறதை பார்க்க எனக்கு சரியான கோவமாய் வரும். ஆனால்... சிலவேளைகளில சரியான சிரிப்பும் வரும்.

நான் நேற்று சாப்பிடுறதுக்கு குசினியுக்கு போனன். கீழுள்ளதை பார்த்தன். சரியான சிரிப்புத்தான் வந்திச்சிது. அம்மாவை கோவிக்கமுடியவில்ல.

IMG4930-1254499566.jpg

IMG4930-1254499625.jpg

முட்டை வாங்கின பெட்டியைக்கூட அம்மா குப்பையில எறியாமல் அதை பாதுகாத்து.. பிறகு நேற்று அதை வெளியில எடுத்து (எனது கண்ணில படாமல் ஒளிச்சு வச்ச இடத்தில இருந்து) அதுக்கு மேல ஈரமான தும்புக்கட்டையை வச்சு (அம்மா தும்புக்கட்டையை ஒவ்வொருதடவையும் கூட்டினபிறகு தண்ணியில கழுவுவா) தும்புக்கட்டையில இருந்து தண்ணி வடிந்து ஈரம் காய விட்டு இருக்கிறா. பழைய முட்டைப்பெட்டியை உப்பிடியும் பாவிக்கலாமோ? :)

உங்கடை வீடுகளிலையும் இப்பிடி அம்மா அட்டகாசங்கள் செய்வாவோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா நல்லதொரு கருத்து வெளி வந்து விட்டது எடுத்து வந்தவருக்கு மிகவும் நன்றிகள்.

நான் இந்த விடயத்தை எப்படி வெளிக் கொண்டு வருவது எண்டு தயங்கிக் கொண்டு இருந்தேன்.எப்படியோ வெளியில் வந்து விட்டது.எனது வீட்டிலும் இதே கதி தான்.இருக்க வேண்டிய பொருட்கள் இருக்காது.குப்பைக்குப் போக வேண்டியவை வீட்டில் பலரும் வந்து போகும் இடத்தில் வைக்கப்பட்டு இருக்கும்.வெளிநாடுகளில் உள்ள வீடுகளில் குட்டி..குட்டி அறைகளுக்குள் மனிதர்கள் கை,கால் வைத்து நடப்பதற்கே அங்கு...அங்கு தடக்கும் இந்த தேவை இல்லாத பொருட்கள்.நானும் எனது அம்மா வெளியில் போவதை அவதானித்து விட்டு எடுத்துக் குப்பையில் போட்டு விடுவேன்.இன்னுமொன்டும் செய்வேன்..எனது கோவம் அதி உச்சத்துக்குப் போய் விட்டாலும் எல்லாம் எடுத்து குப்பைக்குள் போட்டு விட்டுத் தெரியாதது போல் இருந்து விடுவேன்.எனது தந்தையார் சொல்வார்....கவனமடி பிள்ளை எங்களைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டுடாதேன்டு.நான் இப்படிச் செய்வதால் உண்மையாகவே நான் செய்யாத விடயங்களுக்கு கூட சிலவேளைகளில் திட்டு வாங்கவேண்டியதாய் போய் விடும்.நீ தான் செய்திருப்பாய்...நீ தான் செய்திருப்பாய் எண்டு வாய் ஓயாமல் கேட்கும் புராணத்தைக் கேட்டால் மேலும் செய்ய வேண்டும் எண்டு தான் மனதில் தோன்றும்.நன்றி.

மாப்பிள்ளை தம்பி நீங்கள் சொல்லுவது போல்தான் என் அம்மாவும் எல்லாத்தையும் சேர்த்து வைப்பார்கள் அம்மா என் அக்கா வீட்டுக்கு எப்ப போவார்கள் என்று பார்த்துட்டு இருப்போம் நானும் என் அக்காவும் இரண்டு பேருமாக சேர்ந்து சாமன்களை தூக்கி போட்டு விடுவம் ... அப்புறம் அக்கா போக வீட்டு மீதியை நான் தூக்கி போட்டு விடுவன் இதனால் என் வீட்டில் என்ன சாமான் இல்லாமல் போனாலும் என் மேல்தான் பழி... ஆனாலும் அதுதான் உண்மை... நான் ரகசியமாக பண்ணி விட்டு பேசாமல் வந்து விடுவன்...

அதை விட ஏதாவது பொருள் உடைந்தாலும் என்னைத்தான் கேட்பார்கள்... ஒரு மாதம் முதல் என் அக்கா குழந்தைகள் அண்ணா குழந்தைகளுடன் விளையாடி சிங்கை உடைத்து விட்டன்... ஆனால் வெளியால சொல்ல முடியாமல் சத்தியமாக எனக்கு தெரியாது என்று விட்டன் வீட்டுக்காரன் வந்து மாத்தி குடுக்குவரை.. ஆனால் என் அம்மா கரட்டா சொல்லுவாங்க இவள்தான் உடைத்து இருப்பாள் என்று... :)

Edited by சுஜி

ஹஹஹஹஹ் உங்கட அட்டகாசம் தாங்க மாட்டாமல் இருப்பீனம் இப்ப அம்மாமார்.... :D

:lol::lol::D உங்கட அட்டகாசம் தாங்கேலாமல் இருக்கும் இப்ப அம்மாமாருக்கு :D:D

  • கருத்துக்கள உறவுகள்

சச்சா.....சச்சா என்ன பளக்கம் கோவணத்தோட எல்லாம் பொம்பிளை பிள்ளைகள் உலாவிற இடத்தில நிண்டு கொண்டு சிரிக்கிறது. :lol::lol: சும்மா....சும்மா :D பகிடிக்குச் சொல்கிறன்.தப்பா நினைச்சுக் கொண்டு என்னோடு சண்டைக்கு வந்திடாதீங்கள்.அம்மாக்கள் வீட்டை வீடு மாதிரி வைத்திருந்தால் நாம் அட்டகாசம் பண்ண மாட்டம்...அச்சாபிள்ளைகளாய் இருப்பமே.

இதை படித்தவுடன் எனக்கு தோன்றியது "so cute:" :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளைக்கு உள்ளதை சொல்லும் வெள்ளை உள்ளம். எல்லா வீடுகளிலும் நடப்பது தான் ....

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சேர்த்து வைக்க மாட்டம் எண்டுறவையும் கொஞ்சம் காலம் போக சேர்த்து வைக்கத் தொடங்குவினம்..! தாய்க்குலம் எப்பவும் தாய்க்குலம்தானே..! :lol:

உங்கடை வீடுகளிலையும் இப்பிடி அம்மா அட்டகாசங்கள் செய்வாவோ?

மாப்பிளை அம்மாமார குறை சொல்லமுடியாது

பொதுவா 99வீதம் அம்மாமார் இப்பிடித்தான் இருப்பினம்

சேமிப்பென்பது பெண்களிடம்தான் அதிகம்

  • தொடங்கியவர்

உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட எல்லோருக்கும் நன்றி!

இதை படித்தவுடன் எனக்கு தோன்றியது "so cute:" :)

மிக்க நன்றி தூயா.

++++++

நான் இப்பிடி யாழில அம்மாவிண்ட அட்டகாசங்கள்பற்றி எழுதிப்போட்டது அம்மாவுக்கு தெரியாது. இனித்தான் இதுபற்றி சொல்லி அபிப்பிராயம் கேட்கவேணும். வீட்டில நான்செய்கிற அட்டகாசங்கள்பற்றி எழுதிப்போடுறதுக்கு நல்லகாலம் அம்மாவுக்கு யாழுக்கை எல்லாம் வந்து எழுதத்தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீட்டில் அம்மாக்களின் அட்டகாசங்கள்

நான் நினைச்சன் எங்கடை அமமா மாத்திரம்தான் இப்பிடி எண்டு. ஆனால்.. வெளியில 360கோணத்தில சுத்திப்பார்த்தால்.. அம்மா ஸ்தானம் கிடைச்ச உடன, பிள்ளைகள் பிறந்தஉடன இளம்வயதிலேயே இப்பிடி தட்டுமுட்டு சாமான்கள் பழசுகளை பத்திரப்படுத்திற பழக்கம் ஆக்களுக்கு - பெண்களுக்கு வந்திடுது போல இருக்கிது.

உதுக்குத்தான் நாங்கள் பொம்புளைச்சாமியளை கும்புடுறனாங்கள்.

லச்சுமி

சரசுவதி

காளி

மீனாச்சி

சக்தி

அம்மாளாச்சி

இப்பிடி கனக்க.....

ஒரு நாட்டுக்கு எதுக்கெல்லாம் அமைச்சர்மார் இருக்கினமோ அதுமாதிரி......

எங்கடை சமையத்திலை எல்லாஅமைச்சுக்களுக்கும் பொம்புளைச்சாமியள்தான்.

உதாரணத்துக்கு நிதியமைச்சுக்கு லச்சுமி.

கல்வி அமைச்சுக்கு சரசு.

  • தொடங்கியவர்

வீட்டில குமாரசாமி அண்ணைக்கு அமைச்சர் பதவி ஒண்டும் கிடைக்க இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பி இது ஒன்றும் அட்டகாசம் என்று சொல்ல முடியாது. என்ன கொஞ்சம் ஓவரா சேமிக்கப் பிரியப்படினம்.

என்ன தான் வங்கியில பணம் இருந்தாலும்.. அம்மாமார் வீட்டில எங்கையாவது வேற இடத்த பணம் சேமித்து வைக்காமல் இருக்கமாட்டினம். மனிதக் கூர்ப்பில் இது பெண்களிடம் அதிகம் வந்து சேர்ந்துள்ள பழக்கம். ஒருவேளை குடும்பத்தை பராமரிக்கும் நிலை.. குழந்தைகளை பராமரிக்கும் நிலை.. இதை இயல்பாக தோற்றுவித்திருக்கலாம்.

எங்க வீட்டில அம்மா பணம் போன்றவற்றை சேமித்து வைப்பா. தும்புக்கட்டை எல்லாம்.. சரியா பாவிக்க முதலே கொஞ்சம் பழுதென்ற உடன எறிஞ்சிடுவா..!

ஆனால் தமிழ் ஆக்களட்ட சேமிக்கிற பழக்கம் பொதுவா அதிகம். அதை இங்க சொல்ல வேண்டும். ஆண் பெண் என்று இருபாலாரிடமும் அந்தப் பழக்கம் உண்டு..! :)

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில இருக்கும் போது கஸ்டப்பட்டு அம்மாக்கள் வாழ்ந்திருப்பார்கள். அதனால் வெளினாடு வந்தாலும் பழைய சேமிப்புப் பழக்கங்களை தொடர்ந்து செய்கிறார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு புலம் பெயர்ந்த நாடுகளில் எல்லாம் கிடைக்கிறது. தேவையற்றவற்றை எரிகிறார்கள்.

மாப்பு உங்கட அம்மா பற்றி எழுதியதை உங்கட அம்மாவுக்குத் தெரிந்தால் படத்தில் இருக்கிற தும்புக்கட்டையினால் உங்களுக்கு அடி விழ வாய்ப்பு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தமிழ் ஆக்களட்ட சேமிக்கிற பழக்கம் பொதுவா அதிகம். அதை இங்க சொல்ல வேண்டும். ஆண் பெண் என்று இருபாலாரிடமும் அந்தப் பழக்கம் உண்டு..! :)

இதுவே சில சமயங்களில் பாதிப்பாகவும் இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சேமிப்பு பழக்கம் பலசமயம் கை கொடுத்து இருக்கிறது ..........ஒரு தடவை கணவன் னும் மனைவி குழந்தைகளும் காரில் போய் கொண்டு இருந்தனர் ........ஒரு சன நடமாட்டம் இல்லாத இடத்தில் போய் கொண்டு இருக்கையில் எரி பொருள் தீர்ந்து விட்டது ..........கணவனிடம் மட்டைகள் ( கார்டுகள்) .தான் இருந்தன அந்த குளிரில் காரை தள்ளிக்கொண்டு ஒரு வாறு ஒரு எரி பொருள் நிரப்பு இடத்துக்கு வந்தார். அங்கு மட்டைகல் செல்லு படிஅற்றது .கையை பிசைய .......மனைவியின் ஒழித்து வைத்திருந்த காசு .........கை கொடுத்தது .

இந்த சேமிப்பு பழக்கம் பலசமயம் கை கொடுத்து இருக்கிறது ..........ஒரு தடவை கணவன் னும் மனைவி குழந்தைகளும் காரில் போய் கொண்டு இருந்தனர் ........ஒரு சன நடமாட்டம் இல்லாத இடத்தில் போய் கொண்டு இருக்கையில் எரி பொருள் தீர்ந்து விட்டது ..........கணவனிடம் மட்டைகள் ( கார்டுகள்) .தான் இருந்தன அந்த குளிரில் காரை தள்ளிக்கொண்டு ஒரு வாறு ஒரு எரி பொருள் நிரப்பு இடத்துக்கு வந்தார். அங்கு மட்டைகல் செல்லு படிஅற்றது .கையை பிசைய .......மனைவியின் ஒழித்து வைத்திருந்த காசு .........கை கொடுத்தது .

இப்படி எனது நண்பனுக்கும் நடந்தது.

  • தொடங்கியவர்

கந்தப்பு தொலைபேசியில அழைச்சு அம்மாவுக்கு சொல்லி எனக்கு நீங்களே தும்புத்தடியால அடிவாங்கிதருவீங்கள் போல இருக்கிது.

என்ன தான் வங்கியில பணம் இருந்தாலும்.. அம்மாமார் வீட்டில எங்கையாவது வேற இடத்த பணம் சேமித்து வைக்காமல் இருக்கமாட்டினம். மனிதக் கூர்ப்பில் இது பெண்களிடம் அதிகம் வந்து சேர்ந்துள்ள பழக்கம்.

நாயே சாப்பிடற எலும்புத்துண்டுகளை ஒளிச்சு வக்குதாம், மனிதன் எம்மாட்டுக்கும் நெடுக்காலபோவான்.

இதுவே சில சமயங்களில் பாதிப்பாகவும் இருக்குது.

எப்பிடியான பாதிப்பு.. வீட்டில கிடைக்கிற விளக்குமாறு பூசையோ சஜீவன்?

++++++

அது யாருண்டையோ இல்லை நிலாமதி அக்காவிண்ட சொந்தக்கதை போல இருக்கிது. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.