Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழிச்சிகள்

Featured Replies

இவ்வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்று யாரேனும் விளக்க முடியுமா?

யாழில் இப்படியும் அப்பாவிகள் இருக்கிறார்களா? :lol:

சுமங்களா,

நீங்க எதிர்பார்த்த இலக்கை இலகுவில் அடைந்துவிடுவீர்கள்,

வாழ்த்துக்கள். :lol:

  • Replies 60
  • Views 7.4k
  • Created
  • Last Reply

வலிகள் நிறைந்த வரிகள். பெண்ணுக்கு நடந்த கொடுமைகளை கவிதையாக தந்ததிற்க்கு நன்றி சுமங்களா. கவிதயை படிக்கும் போது நெஞ்சு பதறுகிறது அனுபவித்தவர்களுக்கு எப்படி இருக்கும் :lol:

  • தொடங்கியவர்

நல்ல கருக்கொண்ட, எம் இனத்தின் சாபத்தை வெளிக்காட்டும் கவிதை.

எம் மக்கள் எதிர்கொள்ளும் சகல விதமான அடக்கு முறைகளையும் நீக்குவதற்காக தம் அனைத்து சுகங்களையும் இழந்து சாவைக்கொடுத்து போராடச் சென்ற தோழர் தோழியரும் கூட அதே அடக்கு முறையை மிக மோசமாக எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய கட்டத்துக்குள் நாம் நிற்கின்றோம்.

யுத்தம் எங்கு நடந்தாலும், உயரிய வன்முறையையும் கொடூரங்களையும் எதிர்கொள்வது பெண் இனமே. யுத்ததின் முதலும் இறுதியுமாக அவள் மீதான வன்முறையே இடம்பெறுகின்றது. அந்த வன்முறையை வெளியே சொல்வது கூட மேலும் அவளை வன்முறைக்குட்படுத்தப் படும் சந்தர்பங்களை வழங்கக்கூடிய ஒரு சூழ்நிலையில் அவளின் மொழியில் சுமங்களா பேசுக்கின்றார். அவளின் வலியில் மொழியெழுதி அவளின் துயரங்களை உலகறியச் செய்கின்றார்

சுமங்களா,

உங்களின் கவிதை மொழி பற்றி,

நல்ல முயற்சி... இன்னும் கொஞ்சம் முயலுங்கள். சில இடங்களில் வசனங்களின் ஆக்கிரமிப்பு கவிதையில் வந்து விடுகின்றது. சில இடங்களில் கவிதைத்தன்மை மறைந்து போகின்றது

நாளைய பொழுதாவது

நன்றாய் விடியாதாவென

நாட்களை எண்ணி

புரளும்

நள்ளிரவென்றில்

மப்படித்த சிப்பாயின்

கைகள் என்னை

தட்டியிழத்துப்போகும்

என்பதில் சொல்லப்பட்ட துயரத்தின் கவிதை மொழி

"கைத்துவக்கின் அடி

கவட்டுத்துவக்கின் இடி

கசக்கப்படும் முலைகளில் கடி

அடி...இடி...கடி.."

என்ற சந்தங்களில் மறைந்து ஒரு சினிமா பாடலைப் போலாகின்றது. எமக்கு இந்த வைரமுத்து பாணியிலான கவிதைகள் தேவையில்லை. அப்படிப்பட்ட மொழி எம் துயரைச் சொல்ல பெரியளவில் உதவாது. இங்கு பெண் உறுப்புகளை பற்றி எழுதியமையால்தான் இதைச் நான் சொல்கின்றேன் என எடுக்க வேண்டாம்

ஒரு இடத்தில் கருத்து ரீதியான தவறொன்று இருக்கின்றது என நினைக்கின்றேன்

"அவன் ஆண்மையில்

அவன் சந்தேகப்பட்டு "

ஒரு பெண்ணை பலவந்தப் படுத்தி இன்பம் காணுபவன் ஆண்மை கொண்டவன் அல்ல. அவனால் தன்னை ஆண் எனக்கூட உள்மனதுள் நினைக்க முடியாது. சிதைக்கப்பட்ட மனவியலைக் கொண்ட ஒரு வன்முறையாளனான அந்த சிப்பாய் தன் வன்முறையின் நோக்கத்தில் சந்தேகம் பட்டவனாகவே இந்த காட்சியில் வந்திருப்பான்

தொடர்ந்து எழுதுங்கள். பேசாப் பொருளை பேசுகின்ற தேவையும், அதனூடாக எம் சமூக கட்டுப்பாடுகளை மீற விரும்பும் காலத்தின் அவசியமான துணிவும் உங்களுக்கு இருக்கு.

இங்கு விமர்சனத்தை தாங்காத பலர் இருக்கின்றனர். தாம் எழுதிய இரவல் உணர்ச்சி கவிதைகள் அனைத்துக்கும் "நல்லாய் இருக்கு" என்ற ஒரு வகைப்பட்ட விமர்சனத்திற்காக எழுதுபவர்களே அதிகம். விமர்சனத்தை தாங்காது விமர்சித்தவரை இழிவாக குறிப்பதும், அழுது குளறி ஓடி ஒழிவதுமானவர்களைக் கொண்ட சூழலில் இந்த விமர்சனத்தை உங்கள் முன் வைக்கின்றேன்.

மேலும் மேலும் எழுதுங்கள்...

பிழம்பு இது எனது வெறும் கவிதை எழுதும் முயற்சியல்ல அப்படியாயின் நான் பலதடைவை எழுதிப்பார்த்து திருத்தி பலரிடம் ஆலோசனை கேட்டு வெளியிட்டிருப்பேன்..என் மனதின் வலியை அப்படியே கிறுக்கினேன்..அடி இடி கடி என்று வந்து விழுந்து விட்டது..அதில் எனக்கு வைரமுத்துவோ..வாலியோ..மற்றைய கவிஞர்களோ நினைவில் வரவில்லை..பொழுது போக்காக ஏதாவது எழுதுகின்ற சந்தர்ப்பங்களில் நான் நிறுத்தி நிதானித்து எழுதுகிறேன்..மற்றும்படி நான் விமர்சனங்களை பார்த்து அதில் பாகு பாடுகள் பார்த்து கருத்து எழுதுபவளும்..இல்லை..இங்கு எனது முதல் கவிதைக்கு மாறுபட்ட கருத்து தெரிவித்திருந்த சகாரா அக்கா நிழலி ஆகியோரிற்கும்.எனது கருத்தை வைத்திருந்தேன் இங்கும் அவர்களிற்கான பதில் கருத்தை வைத்திருக்கிறேன்..உங்கள் ஆலோசனைக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கவிதையும் அதனோடு இணைந்து வருகின்ற கருத்துகளும் மிக ஆழமானவை..

ஆனால் அதைப்பற்றி பேசவேண்டியவர்கள் அதுபற்றி பேசாமல் இருப்பது மிகவேதனையாக உள்ளது..எல்லோரும் தான்...நானும்தான் நீங்களும்தான்.. எல்லோரும் தான்..எல்லோருக்கும் மனித உரிமை பேசும் ஐநாவும் சரி, அங்கே வெறிகொண்டலையும் சிங்களவனும் சரி..இடையில் வரவேண்டிய வேண்டியவர்கள் எல்லா பரதேசிகளும்..

ஐசிஆர் ஆட்கள் பார்க்கேலாதாம், ஐநா புலியை பிடிக்க உரிமை இருக்காம்,ஜி.ஏ அதைப்பற்றி கதைக்கமாட்டாவாம், கூட்டமைப்புக்கு வேற பிசி, மற்ற கோஸ்டிகளுக்கு ?ஒரே குசி,அங்கை இருக்கிற டொக்ரர்மார், நேர்ஸ்மார் சொல்ல மாட்டினம்,இவர்களின் உறவினர் ஒன்றும் செய்யேலாது, மற்ற மற்ற எல்லாரும் என்ன செய்கிறீர்கள்..இங்கே இருக்கிற பச்சோந்தி நாய்கள்..யுத்தநிறுத்தம் வேண்டும்,புலி எங்கடை பிரதிநிதி தடை நீக்கு,சாப்பாடு அனுப்பு,........சொல்லி 50000,100000 கூட்டம் கூட்டலாம் இதுக்கு ஏலாது..எங்கே எங்கள் புலம்பெயர்ந்த இளையோர், அவைகளை வழிநடத்தும் கள்ள கூட்டங்கள்..எங்கே எங்கள் உண்ணாவிரதிகள்...கனபேர் இங்கே சொன்னதுதான்..2000 டொலர் கொடுத்திட்டு படமும் கொழுவி 4 நாள் லீவு போட்டு கூட்டங்களுக்கு போட்டு போராட்டம் எண்டால் இழப்புவரும் என்பவர்கள் எங்களை வழி நடத்துவதுதான் எம்மினத்தின் இன்றைய நிலை..

உண்மை நிலையை உணர்த்திய கவி வரிகளுக்க நன்றிகள் சுமங்களா. இவ்வாறான கொடுமைகள் பெண்களுக்கு மட்டுமல்லாது 12 அல்லது 13 வயதே நிரம்பிய சிறுமிகளுக்கும் நடப்பதை என்னவென்று சொல்வது. தமிழிச்சியாக பிறந்ததற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? மனது ரணமாகிறது.................... smiley-sad056.gif

  • தொடங்கியவர்

வரிகளில் வலி சொன்ன கவிதை ...........எத்தினை பேருக்கு இது உறைக்கும்.வெளி வந்தது ஒரு சில இன்னும்

வெளி வராதது எத்தனியோ ?

உண்மைகள் நிலாமதியக்கா வெளிவராதது நியை இருக்கிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சில பெயர்களைச் சொல்லி உதவி கேட்கச் சொன்னாள். அந்து நபர்களோ போரட்டத்தில் இவையெல்லாம் சாதாரணம் என்றார்கள். சிலர் இன்னும் சிலபடி முன்னேறி 'நாங்கள் இலங்கையரசிற்குப் பணத்தை கொடுக்கமாட்டோம் என்றார்கள்."

சாந்தி...

நீங்கள் சொன்னது லட்சத்தில் / கோடியில் ஒரு வசனம்..எனது நண்பனின் மனைவியின் சகோதரங்கள் காம்பில் உள்ளார்கள்.. கஸ்ரப்பட்ட குடும்பம்..மேலதிக தேவைக்காய் சிறிய தொகை பணம் அனுப்ப முடியுமா என கேட்டிருந்தார்கள்..எனது மிகநெருங்கிய உறவினர்களே..கேட்டது..ஏன் இங்காலை வந்தவை..சிங்களவனிட்ட கேட்கலாம் தானே..நீங்கள் காசு சேர்த்து சிங்களவனுக்கு கொடுக்க போறியளோ என்று..

inapcha'என்கிற அன்பரிற்கு

கைத்துவக்கின் அடி

கவட்டுத்துவக்கின் இடி

மட்டுமல்ல கசக்கப்படும் முலைகளில் கடி என்பதற்கும் அர்தத்தினை உங்கள் குடும்பத்தில் யாராவது நன்கு தமிழ் தெரிந்த பெண் உறுப்பினர்கள் இருப்பார் அவர்களிடம் கேளுங்கள்..நிச்சயமாக பதில் தருவார்கள்.

ஈழ மக்களின் தமிற்சொல்லென நினைத்து விட்டேன். மன்னிக்கவும் தவறிறுந்தால்...

எங்க சனத்துக்கு இவ்வளவு தமிழ் தெரிஞ்சாதான் நல்லாயிருக்குமே... எல்லாம் எதோ விபச்சார வழக்கில் மும்முரமா இருக்குதுகள்!! :lol:

யாயினி இங்கு சுமங்களா யாரையும் தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தவில்லை. எங்கள் சமூகத்தில் இப்படி பல விடயங்களை மூடி மறைத்து வாழ்ந்தே பழக்கப்பட்டுவிட்டோம்.

ஒரு பெண் தனக்கிழைக்கப்பட்ட பாலியல் கொடூரத்தை வெளிப்படுத்த முடியாத அளவிற்கு எங்கள் சமூகக்கட்டமைப்பு(????) உள்ளது.

பெண்ணியல் ஆண்களின் மேலாதிக்க உணர்வால் பேசாப் பொருளாக்கப்பட்டிருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல இது எங்கள் சமூகத்தில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியிலேயே பெண்ணின் அகத்துணர்வுகள் மழுமையாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

இதில் எங்களின் சமூக அமைப்பில் ஒரு படி மேலே சென்றிருக்கிறது. வாழ்க்கைமுறை, ஒழுக்கநெறி என்பதை முன்னோர்கள் தெளிவாக ஆண்களுக்குச் சாதகமாகவே அமைத்துவிட்டார்கள்.

எத்தகைய சூழலிலும் எதிரிகளின் வன்மம் பெண்களின் மீதே தீர்க்கப்படுகிறது. அது குடும்பப் பகையாக இருந்தாலம் சரி, இன, மத, நாடுகளாக இருந்தாலும் சரி பெண்களின் மீதே அதிலும் பாலியல் ரீதியான அடக்குமுறைகளை கையாள்வதில் எந்தத் தரப்பும் பின்நிற்பதில்லை.

யாயினி இன்றைய நாட்களில் பெண்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய தருணத்தில் நம்மவர்கள் எங்கள் பெண்களுக்கு எந்தவித தீங்கையும் எதிரி இழைக்கவில்லை என்பதுபோல் உறங்கிக் கிடக்கின்றனர். காரணம் என்ன?

அங்கு வதைமுகாம்களுக்குள் அகப்பட்டிருக்கும் பெண்களுக்கு நிகழும் அவலத்தை அறியாமையினால்தான்.

யாயினி எதிர்கால வாழ்க்கை என்று யாருக்காக இப்போது நீங்கள் பரிந்துரை செய்கிறீர்கள்?

உங்களுக்குப் புரியவில்லை எங்கள் பெண்கள் அனுபவிக்கும் வலிகளின் ஆழம் தெரியவில்லை.

வன்னியிலிருந்து வதைமுகாம்களுக்குள் அகப்பட்டிருக்கும் பெண்கள் எத்தனைபேர் இப்போது இராணுவத்தின் பாலியல் வக்கிரங்களால் குற்றுயிராக்கப் பட்டுள்ளார்கள் என்று தெரியுமா?

எத்தனை பதின்ம வயதுப் பிள்ளைகள் தமக்கு என்ன நிகழ்ந்ததென்றே அறியாமல் கருத்தரித்திருக்கிறார்கள் என்று தெரியுமா?

பெண்கள் என்ற ரீதியில் அதுவும் தமிழ்பெண்கள் என்ற ரீதியில் சிங்கள ராணுவத்தால் நாளாந்த குழும வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு குற்றுயிராய் வீசப்படுகிறார்கள்.

சிலரை இராணுவமே மருத்துவ மனைகளில் கொண்டுபோய் போட்டிருக்கிறது. முள்ளி வாய்க்காலிலேயே செத்திருக்கக் கூடாதா என்று தீனமாக அவர்கள் தேம்புவதாக சில பெயர்களைக் குறிப்பிட முடியாத மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். உயிர்ப்பயம் ஒரு புறம், சமூகப்பயம் ஒரு புறம் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்கள் உறவினர்களையும் ஊமையாக்கி வைத்திருக்கிறது.

நீங்கள் அவர்களை வலிப்படுத்தாதீர்கள் என்று எந்தச் சூழலை வைத்து கருத்து எழுதுகிறீர்கள்?

வல்வை சகாறா,

இப்போ எனக்கு விளங்குது! உங்களுக்கு விளங்குதா!!? :lol:

  • தொடங்கியவர்

ஈழ மக்களின் தமிற்சொல்லென நினைத்து விட்டேன். மன்னிக்கவும் தவறிறுந்தால்...

எங்க சனத்துக்கு இவ்வளவு தமிழ் தெரிஞ்சாதான் நல்லாயிருக்குமே... எல்லாம் எதோ விபச்சார வழக்கில் மும்முரமா இருக்குதுகள்!! :lol:

நீங்கள் ஈழத்தமிழர் இல்லையென்றால் எனது தவறான புரிதலிற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் சகோதரரே..மன்னிக்கவும்.

யாழில் இப்படியும் அப்பாவிகள் இருக்கிறார்களா? :lol:

சுமங்களா,

நீங்க எதிர்பார்த்த இலக்கை இலகுவில் அடைந்துவிடுவீர்கள்,

வாழ்த்துக்கள். :lol:

அப்பாவிகள் யாழில் மட்டுமல்ல எங்கும் இருக்கிறார்கள்..ராஜா..நீங்கள் என்னுடைய இலக்கை கணிக்கும் அளவிற்கு உங்கள் ஆற்றல் பிரமிக்க வைக்கின்றது. உங்களிற்கு உங்கள் இலக்கு தெளிவாக இருக்கிறதல்லவா அதுவே போதும்..நன்றிகள் நண்பரே மீண்டும் கருத்தாடுவோம்

வல்வை சகாறா,

இப்போ எனக்கு விளங்குது! உங்களுக்கு விளங்குதா!!? :lol:

ஆதாரம் கேட்கிறீங்களோ.. அவலங்களை புகைப்படமாக, காணொளிகாகவோ போட்டால்தான் நாங்கள் நம்புவோமா? அதற்குபிறகு நாங்கள் நம்பியும்.. அல்லது எங்களை நம்பவைத்தும் இங்கு என்னத்தை கிழிக்கமுடியும்? உதவிசெய்ய ஒரு பத்து டாலர் எல்லாரும் தாருங்கள் எண்டால் நாங்கள் முக்கால்வாசிப்பேர் எஸ்கேப்.

கவிதையில் கூறப்பட்டுள்ள விடயம் நடந்து இருக்கமுடியாது என்பது இல்லை.. கருத்து எழுதியவரின் தனிப்பட்ட விடயங்களுக்கு அப்பால் நின்று சிந்திக்கும்போது பொதுவான கேள்விகள்:

1. இந்த அவலத்திற்கு உடனடியான தீர்வு எவை? நீண்டகால நோக்கில் செய்யப்படவேண்டியவை எவை?

2. தமிழ் ஜனநாயக கட்சி காசுக்கு ஆக்களை வெளியில எடுக்க உதவிது என்றால்.. காசு இல்லாமல் வெளியில் வர உதவி செய்யமாட்டார்களா? ஜனநாயக கட்சியில் உள்ளவர்களிற்கு உள்ளே இருப்பவர்கள் அவர்களது சகோதரிகளாக தெரியவில்லையா?

3. வெளிநாட்டில் உறவுகள் இல்லாதவர்களி நிலமை என்ன? எல்லோரும் தாயகத்தைவிட்டு வெளியேறி வாழமுடியுமா? அதற்கு அவர்களிற்கு வசதி இருக்கின்றதா?

4. ***சுய தணிக்கை***

உங்கள் கேள்விகள் நியாயமானதுதான் ஆனால் பதில்தான் யாரிடமும் இல்லை..ராஜா என்பவர் நான் ஏதோ பண உதவி கேட்கப் போகிறேன் என நினைத்துத்தான் என்னுடைய இலக்கை அடைந்து விடுவேன் என எழுதியிருந்தால் அது அவரது தவறான கணிப்பு..மற்றும்படி நீங்கள் எழுதியது போல யாரையும் நம்பவைப்பதோ அல்லது அப்படி நம்பவைத்து ஏதும் உதவி கேட்பதும் என்னுடைய நோக்கம் இல்லை..நன்றிகள் மாப்பிள்ளை

ஆதாரம் கேட்கிறீங்களோ.. அவலங்களை புகைப்படமாக, காணொளிகாகவோ போட்டால்தான் நாங்கள் நம்புவோமா? அதற்குபிறகு நாங்கள் நம்பியும்.. அல்லது எங்களை நம்பவைத்தும் இங்கு என்னத்தை கிழிக்கமுடியும்? உதவிசெய்ய ஒரு பத்து டாலர் எல்லாரும் தாருங்கள் எண்டால் நாங்கள் முக்கால்வாசிப்பேர் எஸ்கேப்.

கவிதையில் கூறப்பட்டுள்ள விடயம் நடந்து இருக்கமுடியாது என்பது இல்லை.. கருத்து எழுதியவரின் தனிப்பட்ட விடயங்களுக்கு அப்பால் நின்று சிந்திக்கும்போது பொதுவான கேள்விகள்:

1. இந்த அவலத்திற்கு உடனடியான தீர்வு எவை? நீண்டகால நோக்கில் செய்யப்படவேண்டியவை எவை?

2. தமிழ் ஜனநாயக கட்சி காசுக்கு ஆக்களை வெளியில எடுக்க உதவிது என்றால்.. காசு இல்லாமல் வெளியில் வர உதவி செய்யமாட்டார்களா? ஜனநாயக கட்சியில் உள்ளவர்களிற்கு உள்ளே இருப்பவர்கள் அவர்களது சகோதரிகளாக தெரியவில்லையா?

3. வெளிநாட்டில் உறவுகள் இல்லாதவர்களி நிலமை என்ன? எல்லோரும் தாயகத்தைவிட்டு வெளியேறி வாழமுடியுமா? அதற்கு அவர்களிற்கு வசதி இருக்கின்றதா?

4. ***சுய தணிக்கை***

மாப்பிள்ளை,

நான் எழுதியதன் அர்த்தம் உங்களுக்கும் சுமங்களாவிற்கும் புரியவில்லைபோல் இருக்கு!

அதாவது "வல்வைசகறா" என்பவர் எழுதிய கருத்து ஒரு சங்கிலி தொடராக இருந்ததினால்,

இதுதான் அவர் எழுதியது.

யாயினி இங்கு சுமங்களா யாரையும் தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தவில்லை. எங்கள் சமூகத்தில் இப்படி பல விடயங்களை மூடி மறைத்து வாழ்ந்தே பழக்கப்பட்டுவிட்டோம். ஒரு பெண் தனக்கிழைக்கப்பட்ட பாலியல் கொடூரத்தை வெளிப்படுத்த முடியாத அளவிற்கு எங்கள் சமூகக்கட்டமைப்பு(????) உள்ளது. பெண்ணியல் ஆண்களின் மேலாதிக்க உணர்வால் பேசாப் பொருளாக்கப்பட்டிருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல இது எங்கள் சமூகத்தில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியிலேயே பெண்ணின் அகத்துணர்வுகள் மழுமையாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இதில் எங்களின் சமூக அமைப்பில் ஒரு படி மேலே சென்றிருக்கிறது. வாழ்க்கைமுறை, ஒழுக்கநெறி என்பதை முன்னோர்கள் தெளிவாக ஆண்களுக்குச் சாதகமாகவே அமைத்துவிட்டார்கள். எத்தகைய சூழலிலும் எதிரிகளின் வன்மம் பெண்களின் மீதே தீர்க்கப்படுகிறது. அது குடும்பப் பகையாக இருந்தாலம் சரி, இன, மத, நாடுகளாக இருந்தாலும் சரி பெண்களின் மீதே அதிலும் பாலியல் ரீதியான அடக்குமுறைகளை கையாள்வதில் எந்தத் தரப்பும் பின்நிற்பதில்லை. யாயினி இன்றைய நாட்களில் பெண்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய தருணத்தில் நம்மவர்கள் எங்கள் பெண்களுக்கு எந்தவித தீங்கையும் எதிரி இழைக்கவில்லை என்பதுபோல் உறங்கிக் கிடக்கின்றனர். காரணம் என்ன? அங்கு வதைமுகாம்களுக்குள் அகப்பட்டிருக்கும் பெண்களுக்கு நிகழும் அவலத்தை அறியாமையினால்தான். யாயினி எதிர்கால வாழ்க்கை என்று யாருக்காக இப்போது நீங்கள் பரிந்துரை செய்கிறீர்கள்? உங்களுக்குப் புரியவில்லை எங்கள் பெண்கள் அனுபவிக்கும் வலிகளின் ஆழம் தெரியவில்லை. வன்னியிலிருந்து வதைமுகாம்களுக்குள் அகப்பட்டிருக்கும் பெண்கள் எத்தனைபேர் இப்போது இராணுவத்தின் பாலியல் வக்கிரங்களால் குற்றுயிராக்கப் பட்டுள்ளார்கள் என்று தெரியுமா? எத்தனை பதின்ம வயதுப் பிள்ளைகள் தமக்கு என்ன நிகழ்ந்ததென்றே அறியாமல் கருத்தரித்திருக்கிறார்கள் என்று தெரியுமா? பெண்கள் என்ற ரீதியில் அதுவும் தமிழ்பெண்கள் என்ற ரீதியில் சிங்கள ராணுவத்தால் நாளாந்த குழும வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு குற்றுயிராய் வீசப்படுகிறார்கள். சிலரை இராணுவமே மருத்துவ மனைகளில் கொண்டுபோய் போட்டிருக்கிறது. முள்ளி வாய்க்காலிலேயே செத்திருக்கக் கூடாதா என்று தீனமாக அவர்கள் தேம்புவதாக சில பெயர்களைக் குறிப்பிட முடியாத மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். உயிர்ப்பயம் ஒரு புறம், சமூகப்பயம் ஒரு புறம் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்கள் உறவினர்களையும் ஊமையாக்கி வைத்திருக்கிறது. நீங்கள் அவர்களை வலிப்படுத்தாதீர்கள் என்று எந்தச் சூழலை வைத்து கருத்து எழுதுகிறீர்கள்?

இது அவர் எழுதியதை நான் சரி செய்தது!

யாயினி இங்கு சுமங்களா யாரையும் தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தவில்லை.

எங்கள் சமூகத்தில் இப்படி பல விடயங்களை மூடி மறைத்து வாழ்ந்தே பழக்கப்பட்டுவிட்டோம்.

ஒரு பெண் தனக்கிழைக்கப்பட்ட பாலியல் கொடூரத்தை வெளிப்படுத்த முடியாத அளவிற்கு எங்கள் சமூகக்கட்டமைப்பு(????) உள்ளது.

பெண்ணியல் ஆண்களின் மேலாதிக்க உணர்வால் பேசாப் பொருளாக்கப்பட்டிருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல இது எங்கள் சமூகத்தில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியிலேயே பெண்ணின் அகத்துணர்வுகள் மழுமையாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

இதில் எங்களின் சமூக அமைப்பில் ஒரு படி மேலே சென்றிருக்கிறது. வாழ்க்கைமுறை, ஒழுக்கநெறி என்பதை முன்னோர்கள் தெளிவாக ஆண்களுக்குச் சாதகமாகவே அமைத்துவிட்டார்கள்.

எத்தகைய சூழலிலும் எதிரிகளின் வன்மம் பெண்களின் மீதே தீர்க்கப்படுகிறது.

அது குடும்பப் பகையாக இருந்தாலம் சரி, இன, மத, நாடுகளாக இருந்தாலும் சரி பெண்களின் மீதே அதிலும் பாலியல் ரீதியான அடக்குமுறைகளை கையாள்வதில் எந்தத் தரப்பும் பின்நிற்பதில்லை.

யாயினி இன்றைய நாட்களில் பெண்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய தருணத்தில் நம்மவர்கள் எங்கள் பெண்களுக்கு எந்தவித தீங்கையும் எதிரி இழைக்கவில்லை என்பதுபோல் உறங்கிக் கிடக்கின்றனர்.

காரணம் என்ன? அங்கு வதைமுகாம்களுக்குள் அகப்பட்டிருக்கும் பெண்களுக்கு நிகழும் அவலத்தை அறியாமையினால்தான்.

யாயினி எதிர்கால வாழ்க்கை என்று யாருக்காக இப்போது நீங்கள் பரிந்துரை செய்கிறீர்கள்? உங்களுக்குப் புரியவில்லை எங்கள் பெண்கள் அனுபவிக்கும் வலிகளின் ஆழம் தெரியவில்லை.

வன்னியிலிருந்து வதைமுகாம்களுக்குள் அகப்பட்டிருக்கும் பெண்கள் எத்தனைபேர் இப்போது இராணுவத்தின் பாலியல் வக்கிரங்களால் குற்றுயிராக்கப் பட்டுள்ளார்கள் என்று தெரியுமா?

எத்தனை பதின்ம வயதுப் பிள்ளைகள் தமக்கு என்ன நிகழ்ந்ததென்றே அறியாமல் கருத்தரித்திருக்கிறார்கள் என்று தெரியுமா?

பெண்கள் என்ற ரீதியில் அதுவும் தமிழ்பெண்கள் என்ற ரீதியில் சிங்கள ராணுவத்தால் நாளாந்த குழும வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு குற்றுயிராய் வீசப்படுகிறார்கள்.

சிலரை இராணுவமே மருத்துவ மனைகளில் கொண்டுபோய் போட்டிருக்கிறது.

முள்ளி வாய்க்காலிலேயே செத்திருக்கக் கூடாதா என்று தீனமாக அவர்கள் தேம்புவதாக சில பெயர்களைக் குறிப்பிட முடியாத மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

உயிர்ப்பயம் ஒரு புறம், சமூகப்பயம் ஒரு புறம் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்கள் உறவினர்களையும் ஊமையாக்கி வைத்திருக்கிறது.

நீங்கள் அவர்களை வலிப்படுத்தாதீர்கள் என்று எந்தச் சூழலை வைத்து கருத்து எழுதுகிறீர்கள்?

இது அவர் எழுதியதை நான் சரி செய்து அவரிடம் கேட்ட வாக்கியமே!

இப்போ எனக்கு விளங்குது! உங்களுக்கு விளங்குதா!!?.

[இப்போ மீண்டும் சரி செய்துள்ளேன்]

நான் இப்போதும் தமிழை கற்றுகொண்டு இருப்பவன், அதனால் நான் சொல்வதுதான் சரி என்று சொல்ல முடியாது என்பதால் தான் இப்போ எனக்கு விளங்குது உங்களுக்கு விளங்குதா? என்று கேட்டேன்.

மற்றது அவர் என்ன எழுதினாலும் அக்கருத்துடன் உடன்படுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது என் தப்பில்லை மாப்புள்ளை.

Edited by r.raja

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி இங்கு சுமங்களா யாரையும் தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தவில்லை. எங்கள் சமூகத்தில் இப்படி பல விடயங்களை மூடி மறைத்து வாழ்ந்தே பழக்கப்பட்டுவிட்டோம். ஒரு பெண் தனக்கிழைக்கப்பட்ட பாலியல் கொடூரத்தை வெளிப்படுத்த முடியாத அளவிற்கு எங்கள் சமூகக்கட்டமைப்பு(????) உள்ளது. பெண்ணியல் ஆண்களின் மேலாதிக்க உணர்வால் பேசாப் பொருளாக்கப்பட்டிருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல இது எங்கள் சமூகத்தில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியிலேயே பெண்ணின் அகத்துணர்வுகள் மழுமையாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இதில் எங்களின் சமூக அமைப்பில் ஒரு படி மேலே சென்றிருக்கிறது. வாழ்க்கைமுறை, ஒழுக்கநெறி என்பதை முன்னோர்கள் தெளிவாக ஆண்களுக்குச் சாதகமாகவே அமைத்துவிட்டார்கள். எத்தகைய சூழலிலும் எதிரிகளின் வன்மம் பெண்களின் மீதே தீர்க்கப்படுகிறது. அது குடும்பப் பகையாக இருந்தாலம் சரி, இன, மத, நாடுகளாக இருந்தாலும் சரி பெண்களின் மீதே அதிலும் பாலியல் ரீதியான அடக்குமுறைகளை கையாள்வதில் எந்தத் தரப்பும் பின்நிற்பதில்லை. யாயினி இன்றைய நாட்களில் பெண்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய தருணத்தில் நம்மவர்கள் எங்கள் பெண்களுக்கு எந்தவித தீங்கையும் எதிரி இழைக்கவில்லை என்பதுபோல் உறங்கிக் கிடக்கின்றனர். காரணம் என்ன? அங்கு வதைமுகாம்களுக்குள் அகப்பட்டிருக்கும் பெண்களுக்கு நிகழும் அவலத்தை அறியாமையினால்தான். யாயினி எதிர்கால வாழ்க்கை என்று யாருக்காக இப்போது நீங்கள் பரிந்துரை செய்கிறீர்கள்? உங்களுக்குப் புரியவில்லை எங்கள் பெண்கள் அனுபவிக்கும் வலிகளின் ஆழம் தெரியவில்லை. வன்னியிலிருந்து வதைமுகாம்களுக்குள் அகப்பட்டிருக்கும் பெண்கள் எத்தனைபேர் இப்போது இராணுவத்தின் பாலியல் வக்கிரங்களால் குற்றுயிராக்கப் பட்டுள்ளார்கள் என்று தெரியுமா? எத்தனை பதின்ம வயதுப் பிள்ளைகள் தமக்கு என்ன நிகழ்ந்ததென்றே அறியாமல் கருத்தரித்திருக்கிறார்கள் என்று தெரியுமா? பெண்கள் என்ற ரீதியில் அதுவும் தமிழ்பெண்கள் என்ற ரீதியில் சிங்கள ராணுவத்தால் நாளாந்த குழும வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு குற்றுயிராய் வீசப்படுகிறார்கள். சிலரை இராணுவமே மருத்துவ மனைகளில் கொண்டுபோய் போட்டிருக்கிறது. முள்ளி வாய்க்காலிலேயே செத்திருக்கக் கூடாதா என்று தீனமாக அவர்கள் தேம்புவதாக சில பெயர்களைக் குறிப்பிட முடியாத மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். உயிர்ப்பயம் ஒரு புறம், சமூகப்பயம் ஒரு புறம் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்கள் உறவினர்களையும் ஊமையாக்கி வைத்திருக்கிறது. நீங்கள் அவர்களை வலிப்படுத்தாதீர்கள் என்று எந்தச் சூழலை வைத்து கருத்து எழுதுகிறீர்கள்?

சிறப்பான நிதானமான பதில் சகாரா.

இங்கு மிக மோசமாக பாலியல் சித்திரவைக்குள்ளான ஒரு பெண்ணின் வலியை வெளிபடுத்தும் முறையில் கூட இன்னொரு பெண்ணால் பாலியல் தூய்மை எதிர்பார்க்கப்படுகின்றது என்பதை பார்க்கும் போது பெருந்துயர் மனசில் எழுகின்றது. பெண்ணின் உணர்வுகள் என்று வணிக எழுத்தாளர்களால் காட்டப்படும் போலித் தூய்மைவாதமும், தமிழ் தொலைக்காட்சி நாடகங்களால் கட்டமைக்கப் படும் பெண்ணின் வடிவங்களும், இன்றைய பெண்களில் எத்தகைய போலித்தனங்களை உருவாக்கின்றன என்பதை காணும் போது மிக அதிர்ச்சியாக இருக்கின்றது.

உங்களைப் போன்றவர்கள் எழுதும் விடயத்தில் கவிதையுடன் மட்டும் நிப்பாட்டி விடாதீர்கள். உங்களின் போராடும் களம் இன்னும் விரியட்டும்

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

பிழம்பு இது எனது வெறும் கவிதை எழுதும் முயற்சியல்ல அப்படியாயின் நான் பலதடைவை எழுதிப்பார்த்து திருத்தி பலரிடம் ஆலோசனை கேட்டு வெளியிட்டிருப்பேன்.. என் மனதின் வலியை அப்படியே கிறுக்கினேன்..அடி இடி கடி என்று வந்து விழுந்து விட்டது..

புரிந்து கொண்டமைக்கு நன்றிகள் சுமங்களா.

எங்களின் இன்றைய துயரத்தின் நீண்ட வரலாறு உங்களைப் போன்றவர்களின் ஆக்கங்களால்தான் எம் சந்ததிக்கு நாளைக்கு ஊடு கடத்தப்பட போகின்றது. அதனால் தான் கவிதை எழுதுவதில் இன்னும் கொஞ்சம் கவனமெடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். என் உறவுகள் யாருக்கும் இவ்வாறு நடந்திருப்பின் உங்களைப் போன்று இப்படி நிதானமாக கவிதை எழுதியிருக்க முடியாமல் உணர்வுக் சுழியினுள் மாட்டுப்பட்டிருப்பேன். ஒரு மோசமான சொற்பிரயோகங்கள் கொண்ட ஒரு வடிவம் தான் என்னிடம் இருந்து வந்திருக்கும். ஆனால் நீங்கல் அந்த வலியையும் கவிதையாக்கியிருக்கின்றீர்ள

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி இங்கு சுமங்களா யாரையும் தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தவில்லை.

எங்கள் சமூகத்தில் இப்படி பல விடயங்களை மூடி மறைத்து வாழ்ந்தே பழக்கப்பட்டுவிட்டோம்.

ஒரு பெண் தனக்கிழைக்கப்பட்ட பாலியல் கொடூரத்தை வெளிப்படுத்த முடியாத அளவிற்கு எங்கள் சமூகக்கட்டமைப்பு(????) உள்ளது.

பெண்ணியல் ஆண்களின் மேலாதிக்க உணர்வால் பேசாப் பொருளாக்கப்பட்டிருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல இது எங்கள் சமூகத்தில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியிலேயே பெண்ணின் அகத்துணர்வுகள் மழுமையாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

இதில் எங்களின் சமூக அமைப்பில் ஒரு படி மேலே சென்றிருக்கிறது. வாழ்க்கைமுறைஇ ஒழுக்கநெறி என்பதை முன்னோர்கள் தெளிவாக ஆண்களுக்குச் சாதகமாகவே அமைத்துவிட்டார்கள்.

எத்தகைய சூழலிலும் எதிரிகளின் வன்மம் பெண்களின் மீதே தீர்க்கப்படுகிறது.

அது குடும்பப் பகையாக இருந்தாலம் சரிஇ இனஇ மதஇ நாடுகளாக இருந்தாலும் சரி பெண்களின் மீதே அதிலும் பாலியல் ரீதியான அடக்குமுறைகளை கையாள்வதில் எந்தத் தரப்பும் பின்நிற்பதில்லை.

யாயினி இன்றைய நாட்களில் பெண்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய தருணத்தில் நம்மவர்கள் எங்கள் பெண்களுக்கு எந்தவித தீங்கையும் எதிரி இழைக்கவில்லை என்பதுபோல் உறங்கிக் கிடக்கின்றனர்.

காரணம் என்ன? அங்கு வதைமுகாம்களுக்குள் அகப்பட்டிருக்கும் பெண்களுக்கு நிகழும் அவலத்தை அறியாமையினால்தான்.

யாயினி எதிர்கால வாழ்க்கை என்று யாருக்காக இப்போது நீங்கள் பரிந்துரை செய்கிறீர்கள்? உங்களுக்குப் புரியவில்லை எங்கள் பெண்கள் அனுபவிக்கும் வலிகளின் ஆழம் தெரியவில்லை.

வன்னியிலிருந்து வதைமுகாம்களுக்குள் அகப்பட்டிருக்கும் பெண்கள் எத்தனைபேர் இப்போது இராணுவத்தின் பாலியல் வக்கிரங்களால் குற்றுயிராக்கப் பட்டுள்ளார்கள் என்று தெரியுமா?

எத்தனை பதின்ம வயதுப் பிள்ளைகள் தமக்கு என்ன நிகழ்ந்ததென்றே அறியாமல் கருத்தரித்திருக்கிறார்கள் என்று தெரியுமா?

பெண்கள் என்ற ரீதியில் அதுவும் தமிழ்பெண்கள் என்ற ரீதியில் சிங்கள ராணுவத்தால் நாளாந்த குழும வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு குற்றுயிராய் வீசப்படுகிறார்கள்.

சிலரை இராணுவமே மருத்துவ மனைகளில் கொண்டுபோய் போட்டிருக்கிறது.

முள்ளி வாய்க்காலிலேயே செத்திருக்கக் கூடாதா என்று தீனமாக அவர்கள் தேம்புவதாக சில பெயர்களைக் குறிப்பிட முடியாத மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

உயிர்ப்பயம் ஒரு புறம்இ சமூகப்பயம் ஒரு புறம் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்கள் உறவினர்களையும் ஊமையாக்கி வைத்திருக்கிறது.

நீங்கள் அவர்களை வலிப்படுத்தாதீர்கள் என்று எந்தச் சூழலை வைத்து கருத்து எழுதுகிறீர்கள்?

இது அவர் எழுதியதை நான் சரி செய்து அவரிடம் கேட்ட வாக்கியமே!

வல்லை அக்கா நான் யாருக்கும் பரிந்துரை செய்யவில்லை.எனக்கு அதற்கு அவசியமும்..ஒருவர் கேட்டிருந்தார்...அந்தப் பெண் அனுபவித்த சிலவிடயங்கள் தனக்கு விளங்கவில்லை ஆகவே யாராவது விரிவான விளக்கம் தந்தால் நல்லம் எண்டு..அதற்காகவே ஏன் இப்படிச் செய்கிறீர்கள் எண்டு தான் கேட்டு இருந்தேனே ஒளிய வேறு எந்த நோக்கமும் என்பக்கத்தில் இல்லை.நம்பினால் நம்புங்கள்...நம்பாவிட்டால் விடுங்கள்.

மாப்பிள்ளை, நான் எழுதியதன் அர்த்தம் உங்களுக்கும் சுமங்களாவிற்கும் புரியவில்லைபோல் இருக்கு! அதாவது "வல்வைசகறா" என்பவர் எழுதிய கருத்து ஒரு சங்கிலி தொடராக இருந்ததினால்..

நான் இப்போதும் தமிழை கற்றுகொண்டு இருப்பவன், அதனால் நான் சொல்வதுதான் சரி என்று சொல்ல முடியாது என்பதால் தான் இப்போ எனக்கு விளங்குது உங்களுக்கு விளங்குதா? என்று கேட்டேன்.

மற்றது அவர் என்ன எழுதினாலும் அக்கருத்துடன் உடன்படுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது என் தப்பில்லை மாப்புள்ளை.

மன்னிக்கவும், நானும் தமிழ் கற்றுக்கொண்டுதான் இருக்கிறன்... உங்களைப்போலதான் நானும்..

இங்கு கவனிக்கவேண்டிய விசயம்...

சுமங்களா ஆம்பளையோ பொம்பளையோ அவர்/அவா உள்நோக்கம் இவைகள் நீங்கலாக... இப்போது பிரச்சனை என்ன என்பது..

மேலே எழுதப்பட்டுள்ள கவிதை பல விசயங்களை மீளவும் நினைவுபடுத்தியுள்ளது.

சகாரா அக்கா சொன்னதுபோல் சிறீ லங்கா காடையர்களால் நிகழ்த்தப்படும் அக்கிரமங்கள் எல்லாம் இப்போது எங்களுக்கு சகஜமாகி நாங்கள் அதற்கு இசைவாக்கம் பெற்றுவிட்டோம். அதாவது.. முகம் அறியாத எங்கள் பத்து சகோதரிகளை காடையர்கள் அறையினுள் வைத்து வன்புணர்ச்சி செய்து குத்திக்கொலையும் செய்துவிட்டு.. தெருவில் பிணங்களை எறிந்துவிட்டுப் போனாலும்.. நாங்கள் ஓ அப்பிடியோ செய்தி என்று கேட்டுவிட்டு பொத்திக்கொண்டு எங்கள் அலுவல்களை பார்த்து வாழ்வதற்கு பழக்கப்பட்டு விட்டம்.

சில மாதங்களிற்கு முன்னர் இப்படியான செய்திகள் பலவிதமாக கசிந்தது. பல ஊடகக்காரர் எங்கள் சமூகத்தின் அவமானங்களை நாங்களே பறை அடித்து சொல்லக்கூடாது என்பதற்காக அமைதியாக இருந்துவிட்டார்கள்.

ஆனால்.. வெளியில் பேசப்படவில்லை என்பதற்காக அக்கிரமங்கள் ஓய்ந்துவிட்டதாக கருதப்படுவதற்கு இல்லை.

இப்படியான நிலையில்..

எங்கள் கூடப்பிறந்த ஒரு சகோதரிக்கு இப்படியான அவலங்கள் எல்லாம் நடக்கும்போது நாங்கள் பேசாமல் இருப்பமா? யாரோ பிழைக்கத்தெரியாத சனத்திற்குத்தானே இப்படியான அவலங்கள் நடக்கிது. நாங்கள் குடும்பமாக அம்மா, அப்பா தொடக்கம் சித்தப்பா, சின்னமமா, மாமா, மாமி, மச்சான், மச்சாள் என்று எல்லாரும் வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டம். இதனால.. அங்கை என்ன நடந்தாலும் எங்களுக்கு என்ன கவலை..? எங்கள் மனநிலை இவ்வாறே இருக்கின்றது.

நாங்கள் சும்மா.. தமிழர் தமிழினம் என்று சொல்லி பீத்திக்கொண்டு இருக்கிறம். உண்மையில நாங்கள் ஒரு இனமாக அடையாளப்படுத்தப்படுவதற்கு அருகதை - தகுதி எங்களுக்கு இருக்கிறதா? முன்பு நண்பர் சுகன் அவர்கள் இதன் அடிப்படையில் ஓர் கேள்வியை யாழில கேட்டபோது பலருக்கு பத்திக்கொண்டு வந்துவிட்டது.

அடிப்படையில் நாங்கள் எல்லோரும் சுயநலப்பிசாசுகள். இதை உணராமல்.. தமிழர்கள் எல்லாரும் சேர்ந்து ஈழம் காணலாம் எண்டு ஆளாளுக்கு ஆயுதத்தை தூக்கிக்கொண்டு வெளிக்கிட்ட புத்தியை செருப்பால அடிக்கவேணும்.

ஆளாளுக்கு சனங்களை - சனங்களின் அவலங்களை வைத்து பிழைப்பு நடாத்துகின்றார்கள். இதற்கு த.வி.பும் விதிவிலக்கு அல்ல.

சிங்களக்காடையர்கள் என்ன செய்வார்கள்? சனங்களை த.வி.பு வில் இருந்து பிரித்தெடுத்து அவர்கள்மீது வெறுப்பு ஏற்படுத்துவதற்கு ஏற்றவகையில், அத்துடன் தனிநாடு தமிழீழம் என்று நம்மவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத வகையில் காரியங்கள் செய்வார்கள். இதற்கு மேற்கண்ட அவலங்களும் ஓர் உதாரணம்.

தமிழ் சனநாயகக் கட்சிகள் என்ன செய்வார்கள்? இந்தநிலை மூலம் தாங்கள் எப்படி பிழைப்பு நடாத்தலாம் என்று பார்ப்பார்கள். த.வி.பு வே எல்லாத்துக்கும் காரணம், அவர்கள் இல்லாதிருந்தால் நாங்கள் மகிழ்வாக வாழ்ந்து இருக்கமுடியும் என்று கூறுவார்கள். மேலே சொல்லப்பட்டது போல தங்கள் முகம் அறியாத சகோதரிகளையே பணத்திற்கு விலை பேசுவார்கள்.

த.வி.பு.. அல்லது அதன் ஆதரவாளர்கள் என்ன செய்வார்கள்? பாத்தியா... அவன் எங்கடை சனங்களை எப்பிடி எல்லாம் சித்திரவதை செய்கிறான். இவங்களை சும்மா விடக்கூடாது. இதுக்கெல்லாம் தீர்வு தனித்தமிழீழம்தான் என்று சொல்லுவார்கள்.

அங்காலையும் இல்லாமல் இஞ்சாலையும் இல்லாமல் அந்தரத்தில தொங்கிக்கொண்டு நிக்கிற பெரும்பகுதி மக்கள் என்ன செய்வார்கள்? தங்களால் முடிந்தளவு தங்கள் தங்கள் உறவுகளையும் தங்களையும் காப்பாற்றிக்கொள்ள பார்ப்பார்கள். முடியுமானால்.. விருப்புடன் ஒரு சில உதவிகள் செய்வார்கள். சிலவேளைகள் முடியாவிட்டாலும் பயத்தில் ஒரு சில உதவிகள் செய்வார்கள். அல்லது பயத்தில் ஏதாவது தரப்பு கேட்கும் பட்சத்தில் பணமும் கொடுப்பார்கள்.

ஆகமொத்தத்தில்... தமிழன் என்று சொல்வதற்கு முதல்.. மனிதாபிமானமோ மனிதமோ எங்களிடத்தில் இல்லை. முதலில் மனிதனாக இருக்கத் தெரியாத எங்களுக்கு எல்லாம் எப்படி விடுதலை கிடைக்கும்?

ஜெயவர்த்தனா முயன்று பார்த்தான். முடியவில்லை.

பிரேமதாசா முயன்று பார்த்தான். முடியவில்லை.

விஜேதுங்கா முயன்று பார்த்தான். முடியவில்லை.

சந்திரிக்கா முயன்று பார்த்தாள். முடியவில்லை.

கடைசியில் மகிந்த முயன்று பார்த்தான். ஒட்டுமொத்தமாய் முடித்துவிட்டான்...!

இரத்தம் சிந்தாமல்.. அவலத்தை அடையாமல் சுதந்திரம் கிடையாது என்றால்.. முதலில் அடுத்தவனின் இரத்தத்தை அல்ல.. எங்கள் இரத்தத்தை சிந்த நாங்கள் தயாராக இருக்கிறமா? எங்கள் வாழ்வில் அவலத்தை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறமா? தாய்நாட்டிற்காக எங்களை இழந்துகொள்ள.. எங்கள் வாழ்க்கையை தொலைத்துக்கொள்ள.. எங்கள் தனித்தன்மையை இழந்துகொள்ள நாங்கள் தயாராக இருக்கிறமா..?

தாயகத்தில் உள்ள மக்களும், போராளிகளும்.. சிந்தக்கூடிய இரத்தங்களை எல்லாம்.. படக்கூடிய அவலங்களையெல்லாம் பட்டுவிட்டார்கள்.. இதற்கு மேலும்.. இழப்பதற்கு என்ன இருக்கிறது? தாயகத்தில் உள்ள மக்கள் போல் வெளிநாட்டில் உள்ள மக்களும் இரத்தம் சிந்தி, தங்கள் வாழ்க்கையை தொலைத்து அவலப்படவேண்டுமா?

பல வருடங்கள் தீவிரமாக பயிற்றுவிக்கப்பட்டு, மிகக்கடுமையான பயிற்சிகள் பெற்று, எத்தனையோ பல வருட கள அனுபவம் உள்ள போராளிகளினாலேயே அவலங்களை முகம்கொடுக்க முடியாவிட்டால்.. பாவம்... சாதாரண மக்கள்.. பதின்னான்கு பதினைஞ்சு வயசு பெண் குழந்தைகள் இப்படியான அக்கிரமங்களை எப்படி முகம் கொடுக்கும் என்று சிறிது சிந்தித்துப் பாருங்கள்.

பொய்யும், புரட்டும்மிக்க... போலியான கற்பனை உலகத்தில்.. சுயநல பிசாசுகளாக வக்கிரபுத்தியில் வாழ்கின்ற இந்த வாழ்க்கை.. இங்கு தமிழனுக்கு தமிழீழம் என்பது விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் என்பதற்கு நிகரானது.

இறுதியாக..

teohrisl.JPG

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தம் சிந்தாமல்.. அவலத்தை அடையாமல் சுதந்திரம் கிடையாது என்றால்.. முதலில் அடுத்தவனின் இரத்தத்தை அல்ல.. எங்கள் இரத்தத்தை சிந்த நாங்கள் தயாராக இருக்கிறமா? எங்கள் வாழ்வில் அவலத்தை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறமா? தாய்நாட்டிற்காக எங்களை இழந்துகொள்ள.. எங்கள் வாழ்க்கையை தொலைத்துக்கொள்ள.. எங்கள் தனித்தன்மையை இழந்துகொள்ள நாங்கள் தயாராக இருக்கிறமா..?

தாயகத்தில் உள்ள மக்களும், போராளிகளும்.. சிந்தக்கூடிய இரத்தங்களை எல்லாம்.. படக்கூடிய அவலங்களையெல்லாம் பட்டுவிட்டார்கள்.. இதற்கு மேலும்.. இழப்பதற்கு என்ன இருக்கிறது? தாயகத்தில் உள்ள மக்கள் போல் வெளிநாட்டில் உள்ள மக்களும் இரத்தம் சிந்தி, தங்கள் வாழ்க்கையை தொலைத்து அவலப்படவேண்டுமா?

பல வருடங்கள் தீவிரமாக பயிற்றுவிக்கப்பட்டு, மிகக்கடுமையான பயிற்சிகள் பெற்று, எத்தனையோ பல வருட கள அனுபவம் உள்ள போராளிகளினாலேயே அவலங்களை முகம்கொடுக்க முடியாவிட்டால்.. பாவம்... சாதாரண மக்கள்.. பதின்னான்கு பதினைஞ்சு வயசு பெண் குழந்தைகள் இப்படியான அக்கிரமங்களை எப்படி முகம் கொடுக்கும் என்று சிறிது சிந்தித்துப் பாருங்கள்.

கலைஞன்,

எதையும் இலகுவாய் கணணித்திரையிலிருந்து சாதித்துவிடலாமென்ற மனப்போக்கும் அதற்கு பக்கவாத்தியம் வாசிக்கும் பரம்பரையாக தமிழினம் இப்ப புலத்தில் மாறியிருக்கிறது. யதார்தம் இவர்களுக்கு நெருப்பாக இருக்கிறது. அந்த மக்கள் தங்கள் தோழில் தங்கியிருப்பதாக மேளமடித்து விளக்கவே இவர்கள் முன்னிற்கிறார்கள். இப்போது இந்த மக்களுக்கான ஒரு ஓய்வு நிம்தியான வாழ்வு வேணுமென்பதுதான் அந்த மக்களும் விரும்பும் ஒன்று. சரி அவர்கள் போராடிக்களைத்து விட்டார்கள். இங்கிருந்து போராட்ட வீச்சு விடுதலையின் வீரியம் பற்றி பேசும் வாய்கள் தங்களை அல்லது தங்களது சந்ததியை அனுப்புவார்களா கேட்டால் இப்ப கம்பு தடிகளோடு சிறப்புக்கனவு விளக்கங்கள்தான் கிடைக்கும்.

எத்தனையோ அனுபவசாலிகளைக் கொண்டு தொடர்ந்த விடுதலைப்போராட்டம் தோற்றது என்றால் எப்படி ? விமர்சனங்கள் ஊடாக தீர்வு காணப்பட வேண்டிய விடயம். இதில் ஆவேசமாக அடிதடியில் நின்று அடுத்த கட்டம் என்ன என்பது கேள்வியாகிவிடும்.

ஒரு தோழன் சொன்னான் (அவன் தற்போது போராளிகள் சிறப்பு முகாமில் அடைபட்டு இருக்கிறான்) 37வயதான என்னால் நின்று பிடிக்க முடியாத களம் எனது 15வயதுத் தங்கைச்சியால் எப்படி முடியும் ? அவளால் துவக்கை சரியாகப் பிடிக்கத் தெரியாது அவளை நாங்கள் எப்படி போராடென்று சொல்வது ? இன்று அந்தத்தங்கையும் தடுப்பு முகாமில் இருக்கிறாள். இந்து மனநிலை இவர்களுக்கு எப்படி வர முடியும் என்பதை ஆராயவும் நம்மில் சிலர். சிலவேளை இவனும் விலைபோட்டாடென்று விளக்கம் கிடைக்கலாம்.

இந்தப் போராட்டம் தொடா:பாக எந்த விவாதத்தையும் செய்ய முடியவில்லை. மனிதாபிமான உதவிகளை செய்வதே இப்போதைக்கு சரியாக தெரிகிறது. (இது எனது கருத்து மட்டுமே)

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி...

நீங்கள் சொன்னது லட்சத்தில் / கோடியில் ஒரு வசனம்..எனது நண்பனின் மனைவியின் சகோதரங்கள் காம்பில் உள்ளார்கள்.. கஸ்ரப்பட்ட குடும்பம்..மேலதிக தேவைக்காய் சிறிய தொகை பணம் அனுப்ப முடியுமா என கேட்டிருந்தார்கள்..எனது மிகநெருங்கிய உறவினர்களே..கேட்டது..ஏன் இங்காலை வந்தவை..சிங்களவனிட்ட கேட்கலாம் தானே..நீங்கள் காசு சேர்த்து சிங்களவனுக்கு கொடுக்க போறியளோ என்று..

இது வார்த்தையை நானும் இங்குள்ள ஒரு தேசியத் தூணின் வாயிலிருந்து கேட்டேன். இன்னும் இத்தகைய மனநிலையில் எமது மக்களின் மனநிலைகள் மாறவில்லை. ஏதோ இவர்கள் மட்டும் வாழப்பிறந்தது போலவும் அந்த மக்கள் போராடிச்சாகப்பிறந்தது மாதிரியான மனநிலை.

அண்மையில் ஒரு கவிதை பதிந்திருந்தேன். அதற்கு சில தொலைபேசியழைப்புகளில் வந்த சொற்கள் இத்தகையவையும் இதைவிட மோசமான தூசணங்களும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64010

தேசியம் இன்று எல்லோருக்கும் "காசியமாய் "போயிற்று.....

என்ன சொல்வது என்று தெரியவில்லை.

கவி வரிகளை பார்த்து விட்டு என்வீட்டு முகக் கண்ணாடியைப் பார்க்க எனக்கே வெட்கமாயிருக்கிறது. எத்தனை தமிழ்ச்சிகள்!............. கையாலாகத நிலையில் நான்.

அட எனக்கு எங்கே வீடு இருக்கிறது?

தொலைத்து விட்ட என் முகவரியை

என் தெருவிலேயே தேடிக்கொண்டிருக்கிறவன் நான்!

சுமங்களா பாராட்டமுடியவில்லை. இதயத்தை கசக்கி பிழிந்து விட்டீர்கள். கண்ணீர் இரத்தமாக வழிகிறது. சகோதரி உன் பணி தொடரட்டும்.

இப்படி இன்னும் எத்தனை எத்தனை சகோதரிகள்

போராட புறப்பட்டவர்கள்

நடுவீதியில் நாசமாய்........

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் இன்று எல்லோருக்கும் "காசியமாய் "போயிற்று.....

வணக்கம் ஜில்,

ஒருவிவாதத்துக்காக கேட்கிறேன். தேசியம் என்ற சொல்லுக்கு நீங்கள் வைத்திருக்கும் விளக்கம் அல்லது கனம் என்ன ? (இதில் கோபிக்க வேண்டாம்)

என்ன சொல்வது என்று தெரியவில்லை.

கவி வரிகளை பார்த்து விட்டு என்வீட்டு முகக் கண்ணாடியைப் பார்க்க எனக்கே வெட்கமாயிருக்கிறது. எத்தனை தமிழ்ச்சிகள்!............. கையாலாகத நிலையில் நான்.

அட எனக்கு எங்கே வீடு இருக்கிறது?

தொலைத்து விட்ட என் முகவரியை

என் தெருவிலேயே தேடிக்கொண்டிருக்கிறவன் நான்!

சுமங்களா பாராட்டமுடியவில்லை. இதயத்தை கசக்கி பிழிந்து விட்டீர்கள். கண்ணீர் இரத்தமாக வழிகிறது. சகோதரி உன் பணி தொடரட்டும்.

தெருக்களில் நடாத்தியவற்றை இப்போது கொத்தாய் தடைமுகாம்களுக்குள் செய்து கொண்டிருக்கிறார்கள் ராசராசன். இதயமுள்ளவர்கள் இவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்வதுதான் இப்போது தேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் பலருடை ஆதங்கம், கோபம், ஆற்றாமை எல்லாம் தெரிகிறது..

இனி என்ன செய்ய போகிறேம்?

நான் நினைக்கவில்லை ஒவ்வொருவராக 10 ,12 லட்சம் கொடுத்து எடுக்க முடுயுமென..10 பேர் 10 லட்சத்தில் வந்தால் 11 வது ஆள் 15 லட்சமாகி போய்விடும்..

இது மனித உரிமை விவகாரம், தனியே ஒரு அரசாங்கம் நினைதாலும் நடக்காத காரியம்..ஐநாவே இலங்கைக்கு தடுத்து வைக்க உரிமையிருக்குது என்று சொல்லும் போது தனியே கனடாவில்,அல்லது வேறு ஒருநாட்டில் ஊர்வலம் போய் எதும் நடக்குமோ தெரியாது..பெரிய அளவில்,கியுமன் ரயிற் வோச், ஐசிஆர்சி,ஐநா, போன்ற நிறுவனங்கள் தலையிட்டத்தான் அவர்களுக்கு ஏதேனும் விடிவு வரும்..அதற்கு அத்த நாடுகளைதான் நாட வேண்டும்..

தனியே பெண் போராளிகள், மாத்திரமன்றி அங்குள்ள ஆண் போராளிகள் ஏனைய மக்கள் பற்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

கண்ணீரை வர வளைத்துவிட்டது கவிதை .

நான் இப்படியான நிகழ்வுகளை மனதில் வைத்து என்னை உணர்ச்சிவசபடுத்துவதிலிருந்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.