Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்:மாவோயிஸ்ட் தலைவர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்துக்கு குட்டிப்பையா . :lol:

பிறந்தநாளுக்கு...

  • Replies 71
  • Views 5.3k
  • Created
  • Last Reply

நீங்கள் வந்த முறை பற்றி கதைக்கின்றீர்கள் என்று நம்புகின்றேன். எனக்கு அப்படி வரவேண்டிய அவசியம் இருக்கவில்லை

மண்வாசனை

அந்த மக்கள் நிச்சயம் உங்களைப் போன்ற புலம்பெயர் தேசத்தில் இருந்து கொண்டு, வசதியான பாதுகாப்பான வாழ்வை வாழ்ந்து கொண்டு தமக்கு கட்டளையிடும் பேர்வழிகளிடம் இனி ஏமாறப் போவதில்லை.

அப்ப இவ்வளவு நாளும் நடந்த போராட்டம் புலம்பெயர்ந்தவர்கள் ஏமாற்றிய படியால் அவர்கள் ஏமாந்து போராடியிருக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்துக்கு குட்டிப்பையா . :lol:

மாவீர நாளுக்கு..

Edited by kuddipaiyan26

அப்ப இவ்வளவு நாளும் நடந்த போராட்டம் புலம்பெயர்ந்தவர்கள் ஏமாற்றிய படியால் அவர்கள் ஏமாந்து போராடியிருக்கினம்

புலம் பெயந்தவைகளையும் முதலில் இரண்டாக பிரிந்த்து கொள்ளுங்கள்...

1 இளைய தலைமுறை... சுயநலம் என்பதை அறியாது யாருக்காவது எதையாவது செய்து உதவ வேண்டும் எண்ற எண்ணமுள்ள தனி நபர்கள்...

2 குடும்பம் பிள்ளை குட்டிகளோடு பாரத்தை சுமக்கின்றோம் எண்றும், அறிவுரை சொல்கின்றோம் எண்று எதையும் செய்ய விடாது தடுத்து கொண்டே இருக்கும் பெரியவர்கள்...

இண்று பெரிய பிரச்சினையே இந்த இரண்டாவது இனம்... தானும் சாப்பிடாது தள்ளியும் நிக்காத இந்த வைக்கோல் பட்டடை நாய்கள் தான்...

பெரியவர்களிடம் இருக்கும் முக்கியமான பிரச்சினையே தங்களால் செய்ய முடியாததை இளையவர்கள் செய்து விடக்கூடாது எனும் நல்ல எண்ணம் தான்...

ஈழத்தில் நடந்த கொடூரங்களுக்கு புலத்தில் போராட்டமாக வெடித்தது எண்றால் அது முற்றும் முழுதாக வெஸ்மினிஸ்ரர் பாலத்தை மறித்த இளையவர்களால் தான்... பொலீஸ் காறன் அடிபோடாமல் விட்டு விட்டான் எண்று தெரிந்த பிறகுதான் பெரியவர்கள் வந்து சேர்ந்து போராட்டத்தை வளி நடத்துவதாக நடிக்க ஆரம்பித்தார்கள்...

இதைத்தான் போராட்டத்தை இளையவர்கள் கைகளில் கொடுக்கிறேன் எண்று தலைவர் சொன்னவர் போலும்...

Edited by தயா

புலம் பெயந்தவைகளையும் முதலில் இரண்டாக பிரிந்த்து கொள்ளுங்கள்...

1 இளைய தலைமுறை... சுயநலம் என்பதை அறியாது யாருக்காவது எதையாவது செய்து உதவ வேண்டும் எண்ற எண்ணமுள்ள தனி நபர்கள்...

2 குடும்பம் பிள்ளை குட்டிகளோடு பாரத்தை சுமக்கின்றோம் எண்றும், அறிவுரை சொல்கின்றோம் எண்று எதையும் செய்ய விடாது தடுத்து கொண்டே இருக்கும் பெரியவர்கள்...

இண்று பெரிய பிரச்சினையே இந்த இரண்டாவது இனம்... தானும் சாப்பிடாது தள்ளியும் நிக்காத இந்த வைக்கோல் பட்டடை நாய்கள் தான்...

பெரியவர்களிடம் இருக்கும் முக்கியமான பிரச்சினையே தங்களால் செய்ய முடியாததை இளையவர்கள் செய்து விடக்கூடாது எனும் நல்ல எண்ணம் தான்...

ஈழத்தில் நடந்த கொடூரங்களுக்கு புலத்தில் போராட்டமாக வெடித்தது எண்றால் அது முற்றும் முழுதாக வெஸ்மினிஸ்ரர் பாலத்தை மறித்த இளையவர்களால் தான்... பொலீஸ் காறன் அடிப்போடாமல் விட்டு விட்டான் எண்று தெரிந்த பிறகுதான் பெரியவர்கள் வந்து சேர்ந்து போராட்டத்தை வளி நடத்துவதாக நடிக்க ஆரம்பித்தார்கள்...

இதைத்தான் தலைவர் போராட்டத்தை இளையவர்கள் கைகளில் கொடுக்கிறேன் எண்று தலைவர் சொன்னவர் போலும்...

தயா இன்னுமொறு பிரிவு இருக்கே, மறந்து விட்டீர்களா?

இடையில் இயக்கத்தை விட்டு விட்டு ஓடி வந்து, முன்னால் போராளி என்று பீற்றிக்கொண்டு தனக்கு எல்லாம் தெரியும் என்று, அனைத்தையும் தன் கருத்தியலுக்குள் கொண்டு வந்து மற்றவர்களை மட்டம் தட்டும் கூட்டம் ஒன்றும் புலம்பெயர் சமூகத்தில் இருக்கு என்பதை மறந்து விட்டீர்களா

(நேரடியாக என்னை சொல்வதாக சொல்லி கொள்ளலாம்...)

உங்கட கருத்தியல் அவர்களின்( எங்களின்) கருத்தியலிலும் வறுமையில் இருக்கிறது என்பது தான் அதுக்கான காரணம்...

மட்டம் தட்டுகிறார்கள், தங்கட கருத்தியலுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள் என்று நீங்கள் சொல்வது உங்கட பலவீனத்தை காட்டுகிறது...

தெளிவான சிந்தனை ஆற்றலும், கொண்ட கருத்தில் உறுதியும் இல்லை எண்றால் அதை எல்லாம் தாங்கதான் வேண்டும்...

அதையும் தாண்டி சொல்ல வேண்டும் எண்றால் உங்கள் கருத்து உங்கள் மீது பரிதாபத்தை மட்டும் தான் கொண்டு வருகிறது...

இதை தவிர உங்களுக்கு தெளிவாக கருத்தியல் இருந்தால் அப்படி என்ன பிழையான கருத்தியலுக்குள் உங்களை கொண்டுவர முயல்கிறார்கள் எண்று சொன்னால் விரிவாக பேசலாம்..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தயா இன்னுமொறு பிரிவு இருக்கே, மறந்து விட்டீர்களா?

இடையில் இயக்கத்தை விட்டு விட்டு ஓடி வந்து, முன்னால் போராளி என்று பீற்றிக்கொண்டு தனக்கு எல்லாம் தெரியும் என்று, அனைத்தையும் தன் கருத்தியலுக்குள் கொண்டு வந்து மற்றவர்களை மட்டம் தட்டும் கூட்டம் ஒன்றும் புலம்பெயர் சமூகத்தில் இருக்கு என்பதை மறந்து விட்டீர்களா

நக்கல் நையாண்டி செய்வதுஇ ஒப்பாரி வைப்பதுஇ தண்ணி அடிப்பதுஇ மற்றவரில் பிழை கண்டு பிடிப்பதுஇ அரட்டை அடிப்பதுஇ பெண்களிடம் வழிவது......

இப்படி அறிமுகமாகும் தாங்கள் முன்னால் போராளிகள் பற்றி உராய்ந்து பார்ப்பது......??????

என் தலைவனின் வளர்ப்பில் இருக்கும் நம்பிக்கையை

அதே போராளிகள் மீதும் கொண்டுள்ளேன்

ஒன்று இரண்டு தவறியிருக்கலாம்

மிச்சம் 35ஆயிரத்துக்கும்மேல்.....???????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்துக்கு குட்டிப்பையா . :lol:

மாவீர நாளுக்கு..

நானும் நினச்சன். கணபதியிட்ட ஆயுதத்த வாங்கி தமிழ்நிலாவும் குட்டிப்பையனும் போராட்டத்த ஆரம்பிக்கிக்கிறதுக்கெண்டு. :wub:

நக்கல் நையாண்டி செய்வதுஇ ஒப்பாரி வைப்பதுஇ தண்ணி அடிப்பதுஇ மற்றவரில் பிழை கண்டு பிடிப்பதுஇ அரட்டை அடிப்பதுஇ பெண்களிடம் வழிவது......

இப்படி அறிமுகமாகும் தாங்கள் முன்னால் போராளிகள் பற்றி உராய்ந்து பார்ப்பது......??????

என் தலைவனின் வளர்ப்பில் இருக்கும் நம்பிக்கையை

அதே போராளிகள் மீதும் கொண்டுள்ளேன்

ஒன்று இரண்டு தவறியிருக்கலாம்

மிச்சம் 35ஆயிரத்துக்கும்மேல்.....???????

முன்னாள் போராளிகள்ல பெரும்பாலான ஆட்களிட்ட நீங்கள் சொன்ன அத்தனையும் இருக்கு. அதவிட கூடுதலா காட்டிக்கொடுக்கிற கும்பல்ல நிறையப்பேர் அவையள்தான்.

இதை தவிர உங்களுக்கு தெளிவாக கருத்தியல் இருந்தால் அப்படி என்ன பிழையான கருத்தியலுக்குள் உங்களை கொண்டுவர முயல்கிறார்கள் எண்று சொன்னால் விரிவாக பேசலாம்..

தயா,

நான் quote பண்ணி இருக்கும் உங்களின் வரிகளைத் தவிர ஏனையவை எனக்கு புரியவில்லை. எனவே இதற்கு மட்டும் பதிலளிக்கின்றேன்.

இந்த திரியின் அடிப்படையே இந்திய மாவோயிஸ்ட் தலைவர் கணபதி நவீன ஆயுதங்களைக் ஈழ மக்களுக்கு கொடுத்து மீண்டும் ஆயுதப் போராட்டத்தினை தீவிரப் படுத்தப் போவதாக சொன்னது தொடர்பான, அதையொட்டி/ வெட்டிய கருத்தாடல்கள் தான். அதில் புலம்பெயர் தமிழர்களின் இளைய சமுதாயத்திற்கும் மூத்த சமூகத்திற்கும் இடையிலான வேறுபாடுகள், பிரச்சனைகள் பற்றி ஏன் இடையில் செருகுகின்றீர்கள் ?

இன்று எம் சக ஈழத் தமிழ் மக்கள் உலகின் எந்த இனமும் கொடுக்காத பெரும் விலையை கொடுத்தும், பேரவலத்தினையும், பெரும் அழிவினையும் சந்தித்து, ஆசுவாசப் படக்கூட வழியின்றி தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான், தமிழர்கள் அனைவரையும் அழிக்க வேண்டும் என சிங்கள அரசுகள் கொண்டிருக்கும் நோக்கத்திற்கு இசைவாக அதே மக்களை மேலும் பேரவலத்தினுள் புதைக்ககூடியவாறு ஆலோசனைகளும் வாக்குறுதிகளும் செயற்பாடுகளும் நடந்து அரங்கேறிக்கொண்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கைகள் இந்தியாவில் இருந்து, தமிழகத்தில் இருந்து மட்டும் அல்ல, அந்த மக்களின் அவலத்தினை வைத்து வியாபாரம் செய்ய முனையும் புலம் பெயர் அதி மேதாவிக்ளிடம் இருந்தும் வருகின்றன

சரணடைந்த, சிறைப்பட்டிருக்கும் போராளிகளின் விடுதலை தொடர்பாக காத்திரமான ரீதியில் செயல்படல், ஈழ மக்களின் மீது புரியப்பட்ட கோரங்களை வெளிக் கொண்டுவருதல், அவர்கள் மீண்டும் வாழ்வதற்கான அடிப்படை பொருளாதார சமூக கட்டுமானங்களை சர்வதேசத்தின் உதவியுடன் கட்டமைக்க வழிசெய்தல், அவர்களின் அவர்களுக்கான கருத்துகளை வெளிப்படுத்துவதற்குரிய சூழலை தோற்றுவித்தல், பாதிப்புகளில் இருந்து மீள பொருளாதார, உளவியல், தொழில் உதவிகளை வழங்குதல் போன்ற ஆரோக்கியமான திசையில், தமிழ் தேசிய ஆதரவாளர்கள் சிந்திக்காமல், செயற்படாமல், மீண்டும் அவர்களை ஆயுதம் தூக்கி போராடச் செய்தல் எனும் பேரழிவுச் சிந்தனையில் தான் சிந்திக்கின்றனர், செயற்படுகின்றனர். அவர்களின் ஒரு பிரதிநிதியாகத் தான் இங்கு, தமிழ் நிலா என்பவர் தன் கருத்துகளை வைக்கின்றார். ஆயுத பாசைதான் எதிரிக்கு புரியும் என்றும் அதுதான் சிறந்த வழி என்றும் அறிவுரை கூறி பேரவலத்தினைச் சந்தித்த மக்களை நோக்கி ஆய்தம் ஏந்திப் போராடுங்கள் என்கின்றார். இழக்க இனி எதுவுமே இல்லையென்று கடும் மன அழுத்தங்களைச் சந்தித்து போக்கிடம் இன்றி அரச கட்டுப்பாட்டுக்குள் வந்த மக்களை நோக்கி, விரும்பி வந்தவர்கள் என்று அவதூறு சொல்கின்றார். இங்கு அவர் பிரதிநிதித்துவம் செய்வது புலம் பெயர் நாடுகளில் இன்றும் ஈழத் தமிழ் மக்களை நோக்கி ஆயுதம் ஏந்துங்கள் என்றும் பிரபாகரன் மீண்டும் வந்து ஆயுதம் ஏந்தி வழி நடத்தி போராடுவார் என்றும் எதிர்பார்க்கும் பெரும் கூட்டத்தினை ஆகும். இந்தக் கூட்டத்திற்கு தமிழ் மக்கள் மீதோ அல்லது, அவர்களின் வாழ்வுரிமை மீதோ சிங்கள அரசைப் போன்றே எந்தவித அக்கறையும் இல்லை

மக்களின் அவலம் பற்றி உணராத போராளி போராளியே அல்ல. அவர்களின் துயரம் பற்றி அக்கறையற்றவர்கள் போராடிப் பெறுவது விடுதலையும் அல்ல. நீங்களும் ஒரு முன்னாள் போராளி. உங்களால் கணபதியைப் போன்றும், தமிழ் நிலா போன்றும் இத்தனை அவலம் சந்தித்த மக்களை நோக்கி ஆயுதம் ஏந்திப் போராடுங்கள் என்று புலம் பெயர் தேசத்தில், அந்த ஈழ மக்களை விட வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருந்து கொண்டு அறைகூவல் விட முடிகின்றதா? மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தநாளுக்கு...

மாவீர நாளுக்கு..

உண்மை சினேகி , குட்டிப்பையன் .

மாவீரர்கள் புதைக்கப் படுவதில்லை ..... விதைக்கப் படுகின்றார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி வெளி நாட்ட்டில் இருந்து கொண்டா??? :wub::):lol:

பின்ன ?

  • கருத்துக்கள உறவுகள்

மாவோயிஸ்ட்டுக்கள் தரும் ஆதரவை ஏற்றுக் கொள்ளப் போகிறோம். அதன் மூலம் சீனாவை நோக்கி நகரப்போகிறோம் என்றாலே இந்தியனுக்கு குழப்பம் அதிகரிக்கும்.

ஆதரவையும் ஆயுதத்தையும் ஏற்று யார் இப்போ போராடத் தயாராகவுள்ளார்கள் புலவர் ? போராடப்போனவர்களில் பல்லாயிரம் பேர் முட்கம்பிக்குள்ளும் மடிந்தும் போய்விட்டார்கள். மிஞ்சியவர்களால் இப்ப போராடவோ அல்லது போராடும் குணத்தோடோ இல்லையென்பது யதார்த்தம். இதில் யாரை களமிறக்கலாம் என்கிறீர்கள் ?

அரச கட்டுப்பாட்டுக்குள் வந்தால் நிம்மதி விடுதலை எனக் கூறிய மக்களே இதை ஏற்றுத் கொண்டு அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டார்கள்.

அவையள் ஆரெண்டு காட்டினீங்களெண்டால் நல்லது தமிழ்நீலா. ஏனெண்டா கனபேர் அடுத்தகட்டச் சமரில வெடிக்கத் தயாராக புலத்தில இருக்கினம் அவையையும் அவையளோடை சேத்துவிடலாம்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

இடையில் இயக்கத்தை விட்டு விட்டு ஓடி வந்து, முன்னால் போராளி என்று பீற்றிக்கொண்டு தனக்கு எல்லாம் தெரியும் என்று, அனைத்தையும் தன் கருத்தியலுக்குள் கொண்டு வந்து மற்றவர்களை மட்டம் தட்டும் கூட்டம் ஒன்றும் புலம்பெயர் சமூகத்தில் இருக்கு என்பதை மறந்து விட்டீர்களா

என்னண்டாலும் அவையள் முன்னாலை போராடீட்டு புலம்பெயர்ந்தபடியால் அவர்களது பீற்றல்களை எல்லாரும் கேட்க வேணும். இல்லாது போனால் மண்டையில போடப்பணிப்பார்கள். இதுவும் ஒரு போராட்ட வடிவம்தான் நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அவலம் பற்றி உணராத போராளி போராளியே அல்ல. அவர்களின் துயரம் பற்றி அக்கறையற்றவர்கள் போராடிப் பெறுவது விடுதலையும் அல்ல. நீங்களும் ஒரு முன்னாள் போராளி. உங்களால் கணபதியைப் போன்றும், தமிழ் நிலா போன்றும் இத்தனை அவலம் சந்தித்த மக்களை நோக்கி ஆயுதம் ஏந்திப் போராடுங்கள் என்று புலம் பெயர் தேசத்தில், அந்த ஈழ மக்களை விட வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருந்து கொண்டு அறைகூவல் விட முடிகின்றதா? மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்

மக்களுக்காகத்தான் போராளிகள் உருவானார்கள் போராடினார்கள். ஆனால் அந்த மக்களின் சாவில்தான் விசிலடிப்போம் என்ற வாய் வீரப்போராளிகளால் வீழ்ந்தது விடுதலையின் வேரும் விடுதலையை நேசித்த அத்தனையாயிரம் உயிர்களும் என்பது இந்த முன்னாள்களுக்கும் அனைத்துலக செயலகங்களின் உடம்பு நோகாத பணியாளர்களுக்கும் புரியுதேயில்லை.

ஏன்ன நடந்தது? என்பது மட்டுமே தெரிந்து தெரிந்ததை மட்டும் கொண்டு கணணி முன் அமர்ந்து வெட்டு வீராப்பு பேசி இன்று அடிமைகளாக்கப் பட்டுள்ள மக்களை பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் உங்களைப் போன்ற ஆய்வாளர்கள் பலர் தமது சுய முகத்தை ஏற்கனவே காட்டிவிட்டார்கள். அந்த வரிசையிலே இப்போது நீங்களும் இணைந்துள்ளீர்கள்.

போராட்டம் இதன் வலி ஓரு போராளியின் உணர்வு அவன் தியாகம் என்ற எதுகுமே அறிந்திராமல் மக்கள்-சுதந்திரம் பற்றி ஆய்வு செய்யும் உங்கள் ஆய்வுகள் இன்னும் மக்கள் மத்தியில் எடுபட போவதில்லை.

ஒவ்வொரு ஈழப் போர்களும் என்னத்தை சாதித்தது என்பது தெரியாமல் அப்போது உங்கள் ஆவேசம் எங்கே போனது என்று கேட்கிறீர்களே அந்த ஆவேசமே இன்று உலகத்தின் முகத்தை தமிழர்கள் மேல் திருப்பி வைத்துள்ளது. அந்த ஆவேசமே இன்று எரிமலையாய் உலகெங்குமுள்ள இளைய தலைமுறையிடம் போராட்டத்தை கையளித்து நிற்கிறது. ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்ட இலக்கு உள்நாட்டிலே மட்டும் போராடி எட்டக் கூடியதல்ல என்ற உண்மை உங்களின் அரசியல் அறிவுக்கு ஏன் தெரியவில்லை?

அடிமைகளாக்கப் பட்ட மக்கள் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது நல்லாவே விளங்கிறது.ஒன்று பட்ட இலங்கைக்குள் உரிமைகள் மறுக்கப்பட்டு தமிழர்கள் வாழ்வதே தமிழ்நாடு இந்தியாவில் இருந்து பிரியாமல் தடுக்கும் என்ற இந்தியாவின் எண்ணமும் அதற்கு நீங்கள் முள்வேலிக்குள் சிக்கித் தவிக்கும் மக்களை பலிகொடுத்து இந்தியாவின் எண்ணத்துக்கு செயல்வடிவம் கொடுக்க முற்படுவதும் நன்றாகவே தெரிகிறது.

'புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டுஇ போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர்இ சிங்களம் யாருக்குத் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளைஇ அவர்களது பேரம்பேசும் சக்தியை அழித்துவிட்டுஇ எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்கமறுக்கும் சிங்களம்இ எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில்இ காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.' தேசிய தலைவரின் உரையை மீண்டுமொரு முறை முடிந்தால் கேளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போரின் அழிவையும் கோரங்களையும் சந்தித்த மக்களின் முதுகில் சவாரி செய்வதை விட்டுவிட்டு அவர்களை சுயகெளரவத்துடன் வாழ ஏதாவது சிறு உதவிகூட செய்யாமல் வெறும் வார்த்தைகளால் வீரம் பேசுவதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து விவாதிப்பது கூட நேரவிரயமே.

உண்மை கிருபன்...

கொஞசம் விரிவாக சொல்லுங்கள்...

எப்படியான சுய கௌரவம்..?? யார் இதை பெறப்போகிறார்கள்...?? நீங்கள் யாருக்கு உதவசொல்கிறீர்கள்...?? அதை யாரிடம் இருந்து..?? எப்படி பெறுவது..??

அரசியல் நிலையில் கூட தமிழர்களுக்குள் ஒருமித்த கருத்து கிடையாது... ஒரு குழுவாக கோஸ்ரி பிரிந்து நிண்று கேவலமாக முன்னாள் போராளி குழுக்கள் எண்று குறை சொல்வதையே கடைப்பிடிப்பவர்களால் அப்படி ஒண்று நடக்க சாத்தியம் இருக்கிறதா...??

இதுக்கு உங்களின் பதில் ..??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் உங்களது வீட்டில் சந்தோசமாகப் பிள்ளைகளுடன் வாழ்வதுபோல முகாம்களில் வாழும் மக்களும் தங்களது வீடுகளில் நிம்மதியாக இருக்கவேண்டும். இராணுவ அழுத்தங்கள் இருந்தாலும், வன்னி பெருநிலப்பரப்பு தவிர்ந்த பிற இடங்களில் தமிழ் மக்கள் ஓரளவாவது கெளரவத்துடன் வாழ்க்கையைப் போக்காட்டுகின்றார்கள்.

எனவே தனிப்பட்ட ரீதியில் உதவக்கூடியவர்களுக்கு உதவலாம். இடைத் தரகர்கள் பலர் இந்த அவலங்களிலும் பணம் சம்பாதிக்கின்றனர். எனினும் மக்கள் ஒரே ஆடையுடன் மந்தைகள் போல வாழுவதைப் பார்த்துக்கொண்டும், போராடித்தான் அதற்கு தீர்வு காணமுடியும் என்று வயிறாறச் சாப்பிட்டுவிட்டு சொல்லுவது நல்லது.

முன்னாள் போராளிகள் எல்லோரையும் ஒன்றாக வகைப்படுத்த முடியாது. முன்னாள் போராளிகள்தான் பலரை முகாம்களில் இருந்து களவாக வெளியில் எடுக்கின்றனர். அதே நேரத்தில் முன்னாள் போராளிகள் சிலர்தான் தற்போது தலையாட்டிகளாகவும், காட்டிக்கொடுப்போராகவும் உள்ளனர். எனினும் பொதுப்படையாக போராடச் சென்றவர்களை அவமதிப்பதும் சரியல்ல.

இராணுவம் புலநாய்வு பிரிவுகளின் முழுப்பலமும் வன்னி மக்களை ஒடுக்குவதில் செலவிடப்படுகிறது... அதனால் மற்றய இடத்து மக்கள் நிம்மதியாக தற்காலிகமாக இருகின்றனர்... மக்கள் மீளக்குடியேறிய பிறகு பாருங்கள்...

மக்களின் நிலையை மாற்ற வேண்டுமானால் அது சிங்களவனின் மன மாற்றம் கொண்டு வருவதினால் மட்டுமே சாத்தியம் கிருபன்னா... எங்கட மக்களிட்ட புலி எனும் ஒண்று படுத்தும் சக்தியை இழந்து இண்று தனித்தனி குழுவாக இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்..

இதனால் அரசியல் ரீதியில் எதையும் சாதிக்கும் நிலைக்கு தமிழன் போக முடியாது...

சிங்களவன் மன மாற்றம் ஏற்படுமா என்பது இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் நடந்த வரலாறுகள் நண்றாகவே சொல்கின்றன...

தமிழனுக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு எண்றால் அதுக்கு மூண்று வளிகள்தான்...

1எல்லா தமிழரும் பௌர்தத்துக்கு மாறி சிங்களம் கற்று சிங்களவராக மாறுவது.. ( இதை நாங்கள் சும்மா இருந்தால் சிங்கள அரசே செய்ய தொடங்கிவிடும்)

2எல்லா தமிழரும் ஒட்டு மொத்தமாக சாவது..

3............... (இதை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை)

முன்னாள் போராளிகள் எல்லோரையும் ஒன்றாக வகைப்படுத்த முடியாது. முன்னாள் போராளிகள்தான் பலரை முகாம்களில் இருந்து களவாக வெளியில் எடுக்கின்றனர். அதே நேரத்தில் முன்னாள் போராளிகள் சிலர்தான் தற்போது தலையாட்டிகளாகவும், காட்டிக்கொடுப்போராகவும் உள்ளனர். எனினும் பொதுப்படையாக போராடச் சென்றவர்களை அவமதிப்பதும் சரியல்ல.

இலங்கை அரசால் போராளிகளுக்குள் அரசியல் துறைக்குள்ளும், புலநாய்வுத்துறைக்குள்ளும் மற்றும் சில மக்கள் தொடர்பு துறைகளுக்குள் பல உளவாளிகள் உள்நுளைய வைக்கப்பட்டு இருந்தனர்... அவர்கள் காட்டிக்கொடுப்பது ஆச்சரியமானது அல்ல...

இதே மக்கள் எல்லாராலும் அறியப்பட்டவர்கள் இராணுவத்தால் பிடிக்கப்பட்டால் இதையே செய்வார்கள்... சித்திரவதை தாங்காது இதை அவர்கள் செய்வார்கள் எண்றால் அதுகூட என்னை பொறுத்த வரைக்கும் பிழையானது இல்லை...

கிட்டத்தட்ட தமிழர்களின் தொகையில் ஒரு பத்து லட்ச்சம் பேராவது இளையோராக இருப்பார்கள்... ஆனால் போராடியவர்கள் ஒரு பத்து விகிதம் கூட இல்லை.. தங்கட பங்களிப்பை செய்யாமல் நிண்று கொண்டு சிலர் தங்களின் இளைமை பருவத்தை தொலைத்தவர்களை விமர்சிப்பதை வெட்க்கம் இல்லாது செய்து வருகின்றனர்..

Edited by தயா

சிங்களம் மொழியாகும் ஆணால் இந்துவாகவும் கிரிஸ்தவர்களாகவும் இருப்பார்கள்...

புலிகளின் தேவையை முக்காவாசிக்கும் மேலானோர் உணரவில்லை. உண்மையில் எமக்கு சுதந்திரம் தேவையில்லை.

என்னை பொறுத்தவரை நொவம்பர் 27 வரை பொறுத்திருந்து விட்டு, அதிசயம் ஒண்டும் நடக்காட்டி, தலைமுழுகு போடுவதாக திட்டம்.. :)

சிங்களம் மொழியாகும் ஆணால் இந்துவாகவும் கிரிஸ்தவர்களாகவும் இருப்பார்கள்...

புலிகளின் தேவையை முக்காவாசிக்கும் மேலானோர் உணரவில்லை. உண்மையில் எமக்கு சுதந்திரம் தேவையில்லை.

நாங்கள் ஒரு கொத்து மா இலவசமா தந்தாலே மதம் மாறுவம்... சலுகைகள் தந்தால் மாறவா மாட்டம்...

வேணும் எண்டால் பௌத்ததுக்கு மாறினால் பிள்ளைகள் எல்லாம் உயர்வான பாடசாலைகளில் இலகுவாக சேரமுடியும் எண்று சொல்லி பாருங்கோ... கட்டாயம் மாறுவார்கள்...

என்னை பொறுத்தவரை நொவம்பர் 27 வரை பொறுத்திருந்து விட்டு, அதிசயம் ஒண்டும் நடக்காட்டி, தலைமுழுகு போடுவதாக திட்டம்.. :)

வவுனியாவில் இருக்கும் மக்கள் மீளக்குடியேறாமல் அப்படி நடக்க சாத்தியமே இல்லை...

வெளிநாட்டில் இருக்கும் எல்லோரும் உயிருக்கு பயந்தும் வளமான தங்களின் எதிர்காலத்திற்காகவும் வெளிநாடு வரவில்லை.கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் நிண்டீங்களென்றால் உங்களுக்கு விளங்கும்.

சமீபத்தில் எனது நண்பரொருவரின் தகப்பனார் வன்னியில் இறந்து விட்டதால், நண்பர் உடனடியாக ரிக்கற் எடுத்து பிராங்போர்ட்(Germany) சென்று அங்கிருந்து இலங்கை சென்றார். விமானத்தினுள் ஏறுவதற்கு முதல், என்னுடன் கைத்தொலைபேசியில் கதைத்தார். எயர் லங்கா விமானத்தில் பாதிக்கு மேல் எம்மவர்கள், அதுவும் ஐரோப்பாவிலிருந்து செல்பவர்களை விட, பலர் கனடாவிலிருந்து பிராங்போர்ட்(Germany) வந்து இலங்கை செல்கின்றார்கள் என்றார்.(தற்போது விடுமுறை காலம் கூட இல்லை.) இவர்களெல்லாம் கட்டுநாயக்கா விமான நிலையமூடாகத் தான் வெளியேறியுள்ளார்கள். இதுபற்றி எனது பிரித்தானிய நண்பருடன் கதைத்த போது, அவர் சொன்னார் பிராங்போட்டில் மட்டுமல்ல பிரித்தானியாவிலிருந்து செல்லும் எயர்லங்கா விமானத்திலும் இதே நிலை தானென்று. நண்பர் மாத இறுதியில் திரும்பும் போது மிகுதி விபரங்களையும் தருகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடையார்கட்டோட நான் முழிச்சிட்டன் இங்க கொஞ்சப்பேர் இன்னும் கனவில இருக்கிறாங்க. :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு எண்றால் அதுக்கு மூண்று வளிகள்தான்...

1எல்லா தமிழரும் பௌர்தத்துக்கு மாறி சிங்களம் கற்று சிங்களவராக மாறுவது.. ( இதை நாங்கள் சும்மா இருந்தால் சிங்கள அரசே செய்ய தொடங்கிவிடும்)

2எல்லா தமிழரும் ஒட்டு மொத்தமாக சாவது..

3............... (இதை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை)

1. வலுக்கட்டாயப்படுத்தி சிங்களவராக மாற்ற மாட்டார்கள். தமிழர்களும் சிங்களவர்களாக உடனடியாக மாறமாட்டார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்கள் எவ்வாறு "தூய்மையான" தமிழராக இல்லாமல் பிற சமூகத்துடன் கலந்து கலப்பினமாக எதிர்காலத்தில் மாற்றம் அடைவார்களோ அதுபோல காலவோட்டத்தில் இலங்கையில் வாழும் தமிழர்களும் தமது தேவைகளுக்காகவும் நல்வாழ்விற்காகவும் சிங்களவர்களாக மாறக்கூடும். இதனைச் செயற்படுத்த இலங்கையரசு பல நீண்டகாலத் திட்டங்களைப் போட்டு வருகின்றது.

2. தமிழர்கள் ஒட்டுமொத்தமாகச் செத்தாலும் எவரும் கவனிக்கப்போவதில்லை!

3. என்னவென்று சொல்லவில்லை!

தமிழர்கள் இலங்கைத் தீவு பல்லின மக்களுக்கானது என்பதனையேற்று தமது அடையாளத்தைக் காத்துக்கொண்டு சமவுரிமையோடு வாழக்கூடிய ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் சிலவேளை தமிழர்கள் இலங்கையில் கெளரவத்துடன் இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.