Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது...

மின்னஞ்சலில் கிடைத்த கட்டுரையொன்று. நீங்களும் படிக்க இணைக்கிறேன்.

சில நாட்களுக்கு முன் நூலகம் சென்றிருந்தேன்.`சரித்திரத்தில் பெண்கள்` எனும் மலாய் நூல் ஒன்று தட்டுபட்டது. 320பக்கங்களை கொண்ட இப்புத்த்கத்தில் சரித்திரத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் விரிவாக அளிக்கப்பட்டுள்ளன. 'சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது. பெண்களின் உணர்ச்சிக்கு அங்கே இடமளிக்கப்படவில்லை. என்று கூறும் நூலாசிரியர் அதற்கான காரணங்களை இந்நூலில் விவாதிக்கிறார்

4000 அண்டுகளுக்கு முன் எகிப்திய நாகரீகத்தில் ஒரு சம்பவம் நடந்தது.எகிப்து நாட்டை ஆட்சி செய்யும் மன்னனை 'பாரோ' என நாம் அழைப்போம். 'பாரோ' என்றால் ஆண்டவன் எனப் பொருள்படும். மன்னனை கடவுள் என ஏற்க மறுத்த பெண்ணை, பேழையில் வைத்துக் கொதிக்கும் நீரில் விட்டு, வேகவைத்துக் கொலை செய்தார்கள். தன்னைக் கடவுள் எனக் கருதும் ஒரு ஆணால் தண்டனைக் கொடுக்கப்பட்டு, மற்றொரு ஆணின் கையில் கொலையுண்டு போகிறாள் கொடூர முறையில்.

எகிப்திய சரித்திரத்தில் மீண்டும் இக்கொடுரம் ஏற்பட்டது. இம்முறை இரண்டாம் ராம்சேஸ் எகிப்திய 'பாரோ'வாக இருக்கிறான். அவன் ஒரு கொடுங்கோலன். ராம்சேஸின் மனைவியான 'ஆசியா' அவனை எதிர்க்கும் பொருட்டு அவளுக்கு பல கொடுமைகளை விளைவிக்கிறான். ஆசியாவை சிறையெடுத்துக் கொடுமைச் செய்கிறான். கடைசியாக குத்துயிரும் கொலை உயிருமாய் இருந்த அவள் மார்பில் ஈட்டியை எய்தி கொல்கிறார்கள்.

மனிதனுக்கு சிந்தனைத் திறன் இருந்தும் அவன் உணர்ச்சிக்கே அதிகமாக இடம் கொடுக்கிறான். நாம் நாகரீகத்தில் எவ்வளவோ வளர்ச்சியடைந்து இருப்பினும் பெண்களுக்கெதிரான கொடுமைகள் நடந்த வண்ணமே உள்ளன. மனிதர்களிடையே பாசம், நேசம், அன்பு என அனைத்தும் குருட்டு நம்பிக்கைகளாகவே இருக்கின்றன.

நம் மூதாதைகளின் அணுக்களின் தாக்கம் இருப்பதாலோ என்னவோ நம்மில் இன்னமும் பழமையின் எண்ணக் கோடுகள் உள்ளன.ஆண்களிடையே இவள் பெண்தானே என நினைக்க வைக்கும் செற்ப எண்ணமும், பெண்களிடையே நாம் பெண்தானே என்ன செய்துவிட முடியும் எனும் தாழ்வு மனப்பான்மையும் காணப்படுகிறது.

கிரேக்க நாகரீகத்தில் ஏறக் குறைய கி.மு 850 முதல் 480க்குள் பரவலாக நடந்த சம்பவம் உள்ளது. அக்காலகட்டத்தில் பெண் குழந்தைகளை கொலை செய்வது சாதாரண ஒன்றாக இருந்தது. 'எதென்ஸ்' மக்கள் பெண் என்பவளை ஒரு மதிப்பற்ற பொருளாகவே கருதினார்கள். பெண்களை பாலியல் அடிமைகளாகவும், குழந்தைகளை பெற்றுப் போடவும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்கள்.

கிரேக்கர்களின் பார்வையில், பெண்ணானவள் வீட்டு வேலை செய்பவளாகவும், திருமணம் செய்து பிள்ளை பெற்றுக்கொள்பவளாகவும் மட்டுமே தெரிந்தாள். கிரேக்க அரசாங்கமும் பெண்களை நாட்டின் சுமை எனக் கருதியது. இதற்கு காரணம் பெண்களால் போரிட முடியாமல் இருந்தது, அரசாங்கத்தை தேர்வு செய்ய ஓட்டு போடும் உரிமையும் பெண்களுக்கு இல்லை. இது போக சொத்துகளை வாரிசு வகிக்கும் தகுதியும் பெண்களுக்கு இல்லை. 'டெல்பி'யில் இருந்த 6000 குடும்பங்களில்1 சதவீகிதத்திற்கு குறைவான பெண்களே இருந்தார்கள்.

நபிகள் நாயகத்தின் தோன்றலுக்கு முன் அரேபிய மக்கள் பண்பினால் மிகவும் பின்தங்கி இருந்தார்கள். அவர்களை ஜாஹிலியா காலத்து மக்கள் எனக் கூறுவார்கள். ஜாஹிலியா காலத்து ஆண்கள் மிகக் கொடுரமானவர்களாகவும், ஒழுக்கங் கெட்டவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். பெண்களை தங்களது காம இச்சையை தீர்க்கும் போக பொருளாக பயன்படுத்தினார்கள்.

அவர்களின் உடல் பசியை தீர்த்துக் கொண்ட பின் அப்பெண்ணை அடித்துத் துன்புறுத்துவார்கள். பல இன்னல்களுக்குப் பிறகு அப்பெண்ணிற்கு மிக மலிவான பணத்தைக் கொடுப்பார்கள்.அப்பணம் அவளது ஒருவேளை உணவை வாங்குவதற்கே போதுமானதாக இருக்கும். அடுத்த வேளை உணவுக்காக அவள் மீண்டும் ஆணை நோக்கி போவாள்.உடலை விற்பனை செய்து,கூடவே வேதனைகளையும் வாங்கிக் கொண்டு பணம் புரட்டுவாள்.

தனது சந்ததியினர் இப்படிபட்ட இழி நிலையினால் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதையே பெற்றோர்களும் நினைப்பார்கள். அதனால் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்துவிடுவார்கள்.

கி.மு 580களில் சீன தேசம் 'கம்பூசியஸ்' மதத்தின் ஆதிக்கத்தில் இருந்தது.அக்காலகட்டத்தில் பெண்களை உயிருடன் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். நாட்டின் முக்கிய தலைவர்கள் இறந்து போவாராயின் அவர் மனைவியை புதைக்க மாட்டார்கள் மாறாக அப்பெண்ணின் தொப்புள் முதல் தொடை வரை இரும்பு கலசங்களைக் கொண்டு பூட்டிவிடுவார்கள்.தனது வாழ்நாள் முடியும் வரை அப்பெண் மற்ற ஆடவரோடு எந்தத் தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதை பொருட்டு இப்படி செய்வார்கள்.

'ஜேக் தீ ரீப்பர்' பல மர்மக் கொலைகளை செய்த ஆசாமி. 19ஆம் நூற்றாண்டில் பிரிடானிய அரசாங்கத்திற்குத் தலைவலி கொடுத்ததில்லாமல் மக்களையும் பீதியில் ஆழ்த்தியவன். யார் இவன்? 'ஜேக்' விலைமாது பித்தன் என அறியப்பட்டான். இவனே நவீன சரித்திரத்தில் முதன் முதலாக பல மர்மக் கொலைகளை செய்தவனாகவும் கருதப்படுகிறான். பெண்களை அனுபவித்த பின் அவர்களின் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக நறுக்கி போட்டுவிடுவான்.

இதனை அடுத்தாற் போல் 'எட்வட் கெய்ன்' என்பவனும் பெண்களுக்கெதிராக பல கொடூர கொலைகளை செய்திருக்கிறான். அவற்றுள் இரண்டு மட்டுமே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவனது மர்மமான வாழ்வை அடிப்படையாகக் கொண்டு 'தீ சைக்கோ' மற்றும் 'சைலன்ஸ் ஆப் தீ லேம்ப்' எனும் இரு ஆங்கில படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.

'கேய்ன்' இறந்த பெண்களைத் தோண்டி எடுத்து அவர்களின் உறுப்புகளை வெட்டி தனது அழகு சாதனமாக வைத்துக் கொள்வானாம். அவன் பிடிபட்ட சமயம் பெண்களின் மர்ம உறுப்புகளைக் கொண்டு அவன் உருவாக்கிய பல அழகு சாதனப் பொருட்களையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளார்கள். ஜேக் மற்றும் கேய்ன் இருவரும் பைத்தியக்காரர்களாக இருந்தாலும் அவர்களின் செயல்கள் பெண் வர்கத்தினருக்கு பெரும் கேடாகவே கருதப்படுகிறது.

முதல் மற்றும் இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் பெண்களின் நிலையை சற்று அலசி பார்த்தோமேயானால் சோகத்தின் சாயல் அங்கும் ஒட்டி இருப்பதைக் காணலாம். பெண்களின் நிலை கேவலப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் வேதனைப்படச் செய்கிறது. பல நூறு சீன, கொரிய மற்றும் பிலிபீன்ஸ் தேச பெண்கள் ஜப்பானிய இராணுவத்தின் காம பசிக்கு ஆளாகி இருக்கிறார்கள். கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.இதில் அதிகம் பாதிகப்பட்டது சீனர்களே. இதற்குக் காரணம் சீனர்கள் மீது ஜப்பானியர்களுக்கு இருந்த தனிபட்ட வீரோதமேயாகும்.

போரில் ஈடுபடுவது இராணுவமாக(ஆண்கள்) இருந்தாலும் அதில் பெரும் பாதிப்பு பெண்களுக்கே உரித்ததாய் அமைந்தது. பிள்ளைகளுடன் கைவிடபட்ட தாய் வறுமையில் வாடினாள். அப்படிபட்ட தாய்மார்கள் கொலையுண்டபோது அவர்களின் பிள்ளைகளும் தவிப்புக்குள்ளாகினர்.

1993ஆம் ஆண்டு போஸ்னியாவில் நிகழ்ந்த இன ஒழிப்புப் போர், 'சேச்னீயயாவில் 1994ஆம் ஆண்டும் மற்றும் 1996ஆம் ஆண்டு'கோசோவோ'வில் நடந்த போர்களிலும் பெண்களே மிகவும் பாதிக்கப்பட்டனர். இதற்கு காரணம்தான் என்ன? பெண்கள் அழிக்கப்பட்டால் சந்ததியனர் உருவாவதை தடுக்க முடியும் என்ற எண்ணமே முக்கிய காரணமாகும்.

இப்போர்களின் சமயம் பெண்கள் மீது வெடி குண்டெறிந்தார்கள், மாதமாய் இருந்தவர்களை உதைத்தார்கள், அவர்கள் வயிற்றைச் சுட்டும் வெட்டியும் கொன்று போட்டார்கள். உதாரணமாக போஸ்னிய போரின் போது பல போஸ்னிய பெண்களை சைபீரியர்கள் கற்பழித்தார்கள். பிறக்கும் குழந்தையின் உடலில் சைபீரியர்களின் இரத்தமும் கலந்திருக்க வேண்டும் என்ற இன வெறியே இதற்குக் காரணம்.

தமிழ் நாட்டில் சில கிராமப் பகுதிகளில் வரதட்சணை பிரச்சனை அதிகமாக இருந்தது. ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளை கொலைசெய்துவிடுவார்கள். பிறக்கும் குழந்தைகளுக்கு விவசாய உரமோ அல்லது நெல் மணிகளோ கொடுப்பார்கள், முகத்தை ஈர துணியால் மூடிவிடுவார்கள், கழுத்தை நெறித்தும் அல்லது பசியால் வாட வைத்தும் சாக விட்டுவிடுவார்கள்.

சீன தேசத்தில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை எனும் சட்டம் அமல்படுத்தப்பட்ட போது பெண் சிசு கரு கலைப்பு அதிகம் நடந்தது.கருவிலேயே சாகடிக்கப்பட்ட சிசுவை சீன உணவகங்களுக்கு மருத்துவ உணவு செய்யும் பொருட்டு விற்பனை செய்துவிடுவது கொடுமையினும் கொடுமை.

2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாக்கிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் தனது சகோதரன் ஒரு உயர் ஜாதி பெண்ணுடன் ஓடி விட்டான் என்ற குற்றத்திற்காக முக்தார் எனப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதி பெண்ணை உயர் ஜாதி ஆண்கள் பலர் ஒன்று கூடி கற்பழித்திருக்கிறார்கள்.

இப்படியாக சரித்திரம் தொட்டே பெண்களுக்கெதிரான கொடுமைச் செயல்கள் நடந்து வந்திருக்கிறது. இப்போது நவநாகரிக உலகில் நாம் வாழ்ந்து வந்தாலும் பாலியல் கொடுமைகள் ஆங்காங்கெ நடந்த வண்ணமே உள்ளன. மனதின் ஏதோ ஒரு மூலையில் லேசாக ஒட்டிய பயத்துடனே பெண்கள் வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள் எனக் கூறினால் மிகையாகாது.

பெண்களை பொம்மை எனக் கருதுவதை தவிர்க்க வேண்டும். அவர்களும் உலக வாழ்க்கையின் முக்கிய அங்கமென கருதப்பட வேண்டும். நம் குடும்ப உறுப்பினராகவும், உறவினராகவும் பார்க்கப்பட வேண்டும்.மதிக்கப்பட வேண்டும்.

நன்றி உயிரோசை

Edited by shanthy

தலயங்கத்துக்கும் ,கட்டுரைக்கும் தொடர்பு இருக்கிற மாதிரி தெரியல்ல.

சரித்திரம் ஆண்களின் விந்தணு என்ற உடன் ஒடி வந்து பார்த்தால் ,ஆண் ஆதிக்கம் பற்றிய கட்டுரையாக் கிடக்குது

நம் மூதாதைகளின் அணுக்களின் தாக்கம் இருப்பதாலோ என்னவோ நம்மில் இன்னமும் பழமையின் எண்ணக் கோடுகள் உள்ளன.ஆண்களிடையே இவள் பெண்தானே என நினைக்க வைக்கும் செற்ப எண்ணமும் பெண்களிடையே நாம் பெண்தானே என்ன செய்துவிட முடியும் எனும் தாழ்வு மனப்பான்மையும் காணப்படுகிறது.

இந்த நிலமை இன்னும் தொடர்வதால் தான் பெண்கள் இன்றும் கொடுமைக்கு உள்ளாகி கொண்டிருக்கிறாள்

எவ்வளவோ பெண்கள் ஆண்கள் கொடுக்கும் சுதந்திரத்தை ஏற்க மறுக்கிறார்கள் அதற்கு காரணம் ஏற்கனவே சொல்லப்பட்ட

நான் பெண் தானே என்ன செய்து விடப் போகிறேன் என்ற தாழ்மையான எண்ணம்....................

அருமையான கட்டுரையை தந்த சாந்திக்கு நன்றிகள்!!!!!!!

இந்த கட்டுரையை படிக்கும் போது எனக்கு என் தாய் மண்ணில் கொடிய இராணுவத்தின் கைகளில் அகப்பட்டு துடித்துக் கொண்டிருக்கும் எங்கள் பெண்களின் நினைவு தான் என் மனதை கசக்கி பிழிந்து கொண்டிருந்தது!!!!!!

மனிதன் முன்னேறி விட்டான் பரிமாணம் அடைந்து விட்டான் என்று சொல்வது எல்லாம் பொய்.....................

இன்றும் அவன் மிருகத்தை விட சோசமாகவே இருக்கிறான் என்பதே அழிக்க முடியாத உண்மை........................

போர் என்றால் இராணுவம் மட்டும் பாதிப்புக்கு உள்ளாவதில்லையாம்...................

அந்த நாட்டு பெண்களும் தானாம்.............................

உண்மையிலும் உண்மை.................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விந்து, ஜோனி,இப்படியான தலைப்புகள் போட்டால்தான் சனம் ஓடி வரும் என்று கட்டுரை இணைத்தவருக்கு தெரிந்து இருக்கிறது. :wub::wub::blink:

Edited by சித்தன்

விந்து, ஜோனி,இப்படியான தலைப்புகள் போட்டால்தான் சனம் ஓடி வரும் என்று கட்டுரை இணைத்தவருக்கு தெரிந்து இருக்கிறது. :blink::wub::lol:

:wub:"ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்படும் சரித்திரம், பெண்ணின் முட்டைகளினால் மூழ்கடிக்கப்படுகின்றன" என்று நீங்களும் ஒரு கட்டுரை வரைந்து விடுங்களேன். :wub::blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக சனத்தொகையில 51% பெண்கள் எண்டு சொல்லுறாங்களே!!!!!!

Edited by Mathivathanang

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விந்து, ஜோனி,இப்படியான தலைப்புகள் போட்டால்தான் சனம் ஓடி வரும் என்று கட்டுரை இணைத்தவருக்கு தெரிந்து இருக்கிறது. :wub::blink::blink:

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=892"]http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=892

:wub:

சித்தன் உங்கள் கற்பனையை விடுத்து நிசத்துக்கு வாருங்கள். இக்கட்டுரை வந்த இணைப்பை மின்னஞ்சலில் தந்தவர் உங்கள் கருத்தை பார்த்தபின்னர் அறியத்தந்துள்ளார். நீங்கள் ஓடிவந்து வாசிக்க வேண்டும் என்பதற்காக இங்கு இணைக்கவில்லை. வாசிக்கும் விருப்பு உள்ளவர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகிறேன். சரி நன்றி வணக்கம் சொல்லுவம்.

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=892

தமிழ்மாறன் படித்ததை இங்கு வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்காகவும் விடயங்களை அறிய விரும்புவோருக்காகவும் எனக்கு அஞ்சலில் கிடைத்த கட்டுரையை இங்கு இணைத்தேன். கட்டுரையை சரிவர புரிந்த உங்கள் கருத்துக்கு நன்றிகள்.

:wub:"ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்படும் சரித்திரம், பெண்ணின் முட்டைகளினால் மூழ்கடிக்கப்படுகின்றன" என்று நீங்களும் ஒரு கட்டுரை வரைந்து விடுங்களேன். :wub::blink:

அதை நீங்களே எழுதலாமே. :blink: கட்டுரையையின் உள்ளடக்கத்தை வாசித்தபோது மேற்கண்ட தலையங்கம் தவறான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அல்லது கட்டுரையில் கூறவருகின்ற செய்தியை வாசிப்பவர்கள் தவறாக விளங்கிக்கொள்ளவே வழிவகுக்கும் போல இருக்கின்றது. கட்டுரையாளரே இப்படி தலைப்பை எழுதி இருப்பது கட்டுரையின் தரத்தை குறைத்துள்ளதாகவே எனக்கு தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையை வரைந்தவருக்கு இந்த சிறியேனின் வாழ்த்துகள் :wub:

இந்த கட்டுரைக்கு கொடுத்த தலைப்பு சரியாகவே உள்ளது என நான் நினைக்கிறேன்...........

.

காரணம் ஒரு ஆண் தன் விந்து வெளியாகும் வரை தான் மிருகமாக இருந்து பெண்களை கொடுமைக்கு உள்ளாக்குகிறான்........

அவன் அலுவல் முடிந்ததம் அவன் மீண்டும் பழைய நிலைக்கு வருகிறான்.................

பின் திரும்பவும் விந்தை வெளியேற்ற மிருகமாகிறான்.............

அதானால் எல்லா விபரீதமும் இந்த விந்தினால் தான் வருகிறது................என்பதை ஆண்களாகிய நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்!!!!!!

நல்ல வேளை பெண்கள்; அப்படியாக இல்லை..............

பெண்கள் ஆண்களைக் கற்பழித்தார்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்கள்

என்று எப்போதாவது கேள்விப்பட்டிருப்போமா???????

பி.கு சாந்தி எம்மவர்கள் ஒரு விடயத்தை பல வழிகளில் ஆராய்ந்து உண்மை தன்மைகளை வெளிப்படையாக

அறிய முற்படாத காரணத்தினால் தான் பல விடயங்கள் உண்மை என்று அறிந்தும் தெரிந்தும் அவற்றை ஒத்துக் கொள்ள மறுக்கின்றார்கள்!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இக்கட்டுரைக்கு ஆணின் மேலாதிக்கம், பென் அடிமைத்தனம், ஆணின் வன்கொடுமை, போண்ற தலைப்புக்கள் பொருந்தாதா? இப்படிபட்ட மூண்றாந்தர தலைப்புகளை ஊக்கப்படுத்தினால் அவர் மீண்டும் இதையே எழுதிவிட்டு, சுக்கிலம் கழண்றது, ஜோனி வெடித்தது, காற்சட்டை புடைத்தது, போண்ற மூண்றாந்தர தலைப்புகளை வைக்கத் துணிவார், இது போண்ற சமுதாய சீர்கேடுகளை அனுமதிக்க கூடாது, அதுவும் சமுதாய சீர்கேட்டை பற்றி எழுதுபவர்களே அதை செய்யக்கூடாது என்பதுதான் எனது குறைந்த பட்ச கோரிக்கை, யாழ் ஒன்றும் மஞ்சள் பத்திரிகை இல்லையே :wub::wub::blink:

பெண்கள் ஆண்களைக் கற்பழித்தார்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்கள்

என்று எப்போதாவது கேள்விப்பட்டிருப்போமா???????

இந்த விளக்கம் முழுக்க முழுக்கத் தவறானது. பல உயரதிகாரிகளாக இருந்த பெண்கள் தமக்கு கீழ் வேலை செய்த பல ஆண்களை தமது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தியிருக்கின்றார்கள். இவ்விடயங்கள் பாதிக்கப்பட்ட ஆண்களால் வெளியில் வருவதில்லை. காரணம் தங்கள் கெளரவம் பாதிக்கப்படுமென்ற பயத்தினால். சமீபகாலமாக ஆண் விபச்சாரிகளும் குறிப்பிட்டளவு அதிகரித்தே வருகின்றனர். சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த பல கொலைகளுக்கு அடிப்படைக் காரணங்களாக அறியப்பட்டவை, பல குடும்பப் பெண்களின் கள்ளத் தொடர்புகளே. அதே போல சில மசாஜ் நிலையங்களின் வாடிக்கையாளர்களாகவிருக்கும் பணக்கார பெண்கள், தங்கள் வீட்டிற்கு தனக்கு மசாஜ் செய்ய அழகான சிறு பையன்களாக அனுப்பும் படியே கேட்கின்றார்களென்பதை, பல பிரபல மசாஜ் நிறுவனங்களே தெரிவித்திருக்கின்றன. இந்த சின்னப் பையன்கள் என்ன அந்த பெண்ணின் வீட்டில் எடுபிடி வேலை செய்யவா செல்கின்றார்கள்??

உங்கள் கூற்றுப்படி பார்த்தாலும் ஆணின் பாலியல் ஆசைகள் விரைவில் முடிவது. ஆனால் பெண்ணின் பாலியல் ஆசைகள் மணிக்கணக்காகக் கூட தொடர முடியும். ஒரு ஆண் ஒரு பெணணுடன் உறவு வைத்து விந்தின் வெளியேற்றத்திற்குப் பின், இன்னொரு பெண்ணுடன் பல மணி நேரம் கழித்தே உறவு வைக்க முடியும். ஆனால் ஒரு பெண்ணால் எத்தனை ஆண்களுடனும் தொடர்ந்து உறவு வைத்துக் கொள்ள முடியும். அதில் பல பெண்கள் சாதனை செய்யவென்று 300 - 400 ஆண்கள் வரை தாங்கள் தொடர்ந்து உறவு வைத்ததாக சாட்சிகள் வைத்தே சாதனைகள் செய்துள்ளார்கள். இப்படி ஆண்களால் செய்ய முடியுமா??

ஒரு ஆணின் பாலியல் பலவீனத்தை அவனின் ஆண்குறியின் விறைப்பற்ற தன்மை, விரைவில் விந்து வெளியேறுதல் போன்றவற்றை வைத்துக் கணிக்கலாம். ஆனால் ஒரு பெண்ணின் பலவீனத்தை எதை வைத்து கணிப்பது?? ஆனால் பல பெண்களின் விவாகரத்துகள் தன்னை தனது கணவனால் திருப்திப்படுத்த முடியவில்லை என்ற அடிப்படை காரணங்களை வைத்தே கோரபப்பட்டுள்ளன.

உண்மையில் நீங்கள் தான் பல உண்மைகளை மறந்து, தவறான கருத்துகளை முன் வைக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பூமிப்பந்தில்.. பெண்களால் தனித்து ஒரு ஆணையோ பெண்ணையோ உருவாக்க முடியாது. ஒருவேளை செயற்கையாக பெண்களை உருவாக்கினும் ஆண்களை உருவாக்கவே முடியாது. ஆண்கள் தான் பெண்ணையும் ஆணையும் தேர்வு செய்யும் இறுதி வல்லமையைப் பெற்றிருக்கிறார்கள். அங்கு பெண்களின் பங்களிப்பு இருந்தாலும்.. ஆண்கள் தான் தீர்மானிக்கும் வலுவை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்..!

எனவே உலக வரலாற்றில்.. மனிதனின் சரித்திரம் ஆண்களின் விந்துகளால் எழுதப்படுகிறது என்பது ஒன்றும் உயிரியலுக்குப் புறம்பான கருத்தல்ல. அதுமட்டுமன்றி ஆண்கள் பெண்களை விட உடல் வலுமிக்கவர்கள் தான். அதையும் எந்த வித எழுத்துக்களாலும் மாற்றிவிட முடியாது. யதார்த்ததிற்கு புறம்பாக பெண்களில் சிலர் ஆண்களை பெண்கள் அடக்குவதை அல்லது ஆணுக்கு பெண் எல்லா விதத்திலும் சமன் என்று காட்ட முனைவது ஒன்றும் வெற்றி பெறப் போற விடயமும் அல்ல.

பெண் பெண் தான். ஆண் ஆண் தான். ஆனால் சமூக உரிமைகளில் மனித உரிமைகளின் முன்னால் இருவரும் சமனாக மதிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஒரு போதும் பெண் ஆணுக்கு எல்லா விதத்திலும் நிகர்த்தவளாக முடியாது. அதே போல் ஆண்களும் பெண்ணிற்கு எல்லா விதத்திலும் நிகர்த்தவனாக முடியாது. அவரவற்கு என்று சிறப்பான தனித்துவமான அம்சங்கள் உண்டு. அவை பாதுகாக்கப்பட வேண்டும்..! அது தவறல்ல. அதற்காக ஒருவர் இன்னொருவரை பாலியல் ரீதியில் அடிமைப்படுத்துவது அல்லது சிறுமைப்படுத்துவது அடிப்படை உயிரினக் கோட்பாட்டுக்கு புறம்பானது..! :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் ஆண்களைக் கற்பழித்தார்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்கள்

என்று எப்போதாவது கேள்விப்பட்டிருப்போமா???????

நீங்கள் கேள்விப்படவில்லை. அல்லது திட்டமிட்டு மறைக்கிறீர்கள். பெண்களால் ஆண்கள் கழங்கப்பட்ட நிகழ்வுகள் பல. அது அன்றாட மனித வாழ்வில் எங்கோ ஒரு மூலையில் தினமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பாலியல் வல்லுறவு என்பது வெறும் உடல் சார்ந்த உறவு நிலை என்று கொண்டாலும்.. பெண்களால் வேண்டும் என்றே தூண்டப்பட்டு செய்யப்படுகின்ற காரியங்களும் உண்டு. அதேபோல் பெண்களால் வற்புறுத்தி செய்யப்பட்ட பின் அது ஆணின் பலாத்காரமாக சித்தரிக்கப்படுவதும் சாதாரணமாகியுள்ளது.

இன்னும் ஆண் தான் பெண்ணை கற்பழிக்கிறான் என்ற அப்பாவித்தனமான அல்லது அவ்வாறு தோற்றமளிக்கும் பார்வை மிக மோசமான பெண்கள் சார்ந்த சந்தர்ப்ப வாதம் என்று நினைக்கிறேன். பெண்களால் இன்று ஆண்கள் பல வழிகளிலும் சீரழிக்கப்படுகிறார்கள். பொய் வழக்குகளில் கூட மாட்டிவிடப்படுகிறார்கள். இதற்குக் காரணம்.. ஆண் தான் பெண்ணைக் கற்பழிக்க முடியும் என்ற தவறான சமூகச் செய்தியாகும். இப்போ எல்லாம் பெண்களே வலிந்து ஆண்களை கற்பழிக்க செய்கிறார்கள். அல்லது ஆண்களைக் கற்பழிக்கிறார்கள்..! இவை தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியம்.. இப்படியான கருத்துக்களை விதைக்க முன்..! :wub:

உலக சனத்தொகையில 51% பெண்கள் எண்டு சொல்லுறாங்களே!!!!!!

:wub:அதாலை தான் பல பெண்கள்; ஆண்களை பெண்டெடுக்கினம் போல. :wub::blink:

நீங்கள் எல்லோருமே பெண்களால் பாதிக்கப்பட்டவர்கள் போல!!!!!!!

உங்கள் நிலமையில் இருந்து படிக்கும் போது உங்கள் கருத்து முற்றிலும் உள்வாங்கப் பட வேண்டியது என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன்!!!!!!

விகிதாசாரம் எண்டு பார்க்கும் போது இன்னும் பாலியல் வன்முறை பெண்கள் மேல் மேற்கொள்ளப்படுகின்றன........... இன்றும் படிக்காத வறுமை நிலையில் இருக்கும் பெண்கள்

ஆண்களின் பாலியல் துன்புறுத்தலுக்குள் தவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!!!!!!!

நீங்கள் எல்லோருமே பெண்களால் பாதிக்கப்பட்டவர்கள் போல!!!!!!!

உங்கள் நிலமையில் இருந்து படிக்கும் போது உங்கள் கருத்து முற்றிலும் உள்வாங்கப் பட வேண்டியது என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன்!!!!!!

:lol::unsure:லொள்ளுத் தானே... அப்ப நீங்க பல பெண்களை, பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கிய உங்கள் சொந்த அனுபவத்தையா, இங்கு எழுதுகின்றிர்கள். உங்கள் பாவங்களுக்கு பாவமன்னிப்பு கேட்பது போல், இங்கு உங்கள் தவறுகளை எழுதுகின்றீர்கள் என்றால் உங்கள் கருத்து சரியானது தான்.......... :lol: :lol:

***

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்ட கருத்திற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது.

இந்த வார விகடனில் வந்த தொடர் கட்டுரையின் இவ்வார அங்கம்

இன்று பல குடும்பங்களில் டொமஸ்டிக் வயலென்ஸ் (அ) மேரிட்டல் ரேப் என்கிற பிரச்னை நிலவுகிறது. திருமணமான பிறகு மனைவிவிருப் விருபப்படாத சமயத்தில், அவளைக் கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபடுவதற்குத்தான் மேரிட்டல் ரேப் என்று பெயர்.

இப்படி மனைவி விருப்பம் இல்லாத நேரத்தில் கட்டாயப்படுத்தி உறவுகொள்வது (மேரிட் டல் ரேப்), மனைவியைக் கண வனும் அவனது உற்றாரும் கொடுமைப்படுத்துவது (டொமஸ் டிக் வயலென்ஸ்) போன்ற இழிநிலையில் ஆண் ஈடுபடக் காரணம் இருக்கிறது. இப்படி ஈடுபடும் ஆணுக்கு வெளியே தெரியாத பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் இருப் பதுதான் மிக முக்கியக் காரணம் ஆகும். தான் சார்ந்து இருக்கிற நபர்களிடம் காட்ட முடியாத கோபத்தை, வெறுப்பை, எரிச்சலை, அதிகாரத்தை எல்லாம் மூட்டை கட்டிக்கொண்டுவந்து தன்னைச் சார்ந்து வாழும் மனைவியிடம் கொட்டுவார்கள். இதற்கு Power Re-assurance mentality என்று பெயர்.

இதுபோன்ற சூழலில் சிக்கித் தவிக்கும் பெண் களின் மனமும் உடலும் நசுங்கிய அலுமினியப் பாத்திரமாகிவிடுகிறது. இப்படியான நரக வாழ்வு வாய்க்கப்பெற்ற பெண் என்ன செய்ய வேண்டும்?

உடல்ரீதியான துன்புறுத்தலைக் கணவன் செய்யும்போது, உங்கள் பிரச்னையை மறைக்கக் கூடாது. பெற்றோர் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டுவர வேண்டும். தேவைப்பட்டால் மகளிர் நல அமைப்புகளிடம் புகார் கொடுக்கவும் செய்யலாம்.

சம்பந்தப்பட்ட ஆண், பலாத்காரம், வன்முறை, சண்டை, மூலம் தனது மனைவியைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்குப் பதிலாக அன்பினாலேயே பரஸ்பரம் மன சமாதானத்துக்கு வழி வகுக்கலாம் என்பதை உணர வேண்டும். தனது கோபதாபங்களைக் கட்டுப்படுத்த முடியாத ஆண், மன நல மருத்துவரின் ஆலோசனையை நாடுவதில் ஒன்றும் தவறு இல்லை.

மனைவி குற்றம் சுமத்தினால் கணவனுக்கு Domestic violence Act 2006-ன்படி சட்டப்படி தண்டனை கிடைக்கும் என்பதைச் சம்பந்தப்பட்ட ஆண் கருத்தில்கொள்ள வேண்டும்.

பெற்றோர்களும் ஒரு பெண் பிரச்னை என்று பிறந்த வீடு தேடி வந்தால், 'சமாளி, போராடு' என்று சமரசம் செய்யாமல் அவள் உண்மையான நலனுக் காக எதிர்த்துப் போராட வேண்டும்!

முத்தத்தில் துவங்கி

முத்தத்தில் முடியும்

தாம்பத்ய உறவு

எத்தனை பேருக்கு

வாய்க்கிறது?

யாரும் சொல்லாமலேயே

கற்றுக்கொள்கிறார்கள்

அலுத்துத் தூங்குவதற்கான

உடற்பயிற்சியாக...

- அ.வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு எண்டது ஒரு மாகடல் அல்லது பாரிய குப்பைத் தொட்டி. அதுக்குள்ள எதத் தேடுறமோ அது தான் கிடைக்கும். "பெண்களுக்கெதிரான கொடுமைகள் " எண்ட கீ வேர்ட் போட்டுத் தேடிப் போட்டு அதை அப்படியே கொப்பியடிச்சு வாந்தியெடுத்த கட்டுரை இது. உண்மையில வரலாறு ரத்தத்தாலயும் காமத்தாலயும் ..மனிதனில இருக்கிற நல்ல தீய குணங்களாலயும் தான் எழுதப் படுகுது. இதில விந்து மட்டும் வரலாற்றை எழுதினதாக பதிவிடுறது ஒரு சில்லறைத் தனமான விளம்பர உத்தி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு வந்து தள்ளாட வைத்துள்ளது ஒரு வேளை பல ஆண் பெண் வாசகர்களை உள் வாங்கவோ என்னவோ?? :lol::lol:

தலைப்பு வந்து தள்ளாட வைத்துள்ளது ஒரு வேளை பல ஆண் பெண் வாசகர்களை உள் வாங்கவோ என்னவோ?? :lol::lol:

:unsure:உங்க வயசிற்கு அப்படித்தான் இருக்கும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:lol:உங்க வயசிற்கு அப்படித்தான் இருக்கும். :lol:

நீங்க வேற வசம்பண்ணை இப்ப போடுற தலைப்பையும் கருத்தை யும் வாசித்து விட்டு நிலா வெளிச்சத்தில் குப்புர படுக்க வேண்டியுள்ளது :lol::unsure::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விளக்கம் முழுக்க முழுக்கத் தவறானது. பல உயரதிகாரிகளாக இருந்த பெண்கள் தமக்கு கீழ் வேலை செய்த பல ஆண்களை தமது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தியிருக்கின்றார்கள். இவ்விடயங்கள் பாதிக்கப்பட்ட ஆண்களால் வெளியில் வருவதில்லை. காரணம் தங்கள் கெளரவம் பாதிக்கப்படுமென்ற பயத்தினால். சமீபகாலமாக ஆண் விபச்சாரிகளும் குறிப்பிட்டளவு அதிகரித்தே வருகின்றனர். சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த பல கொலைகளுக்கு அடிப்படைக் காரணங்களாக அறியப்பட்டவை, பல குடும்பப் பெண்களின் கள்ளத் தொடர்புகளே. அதே போல சில மசாஜ் நிலையங்களின் வாடிக்கையாளர்களாகவிருக்கும் பணக்கார பெண்கள், தங்கள் வீட்டிற்கு தனக்கு மசாஜ் செய்ய அழகான சிறு பையன்களாக அனுப்பும் படியே கேட்கின்றார்களென்பதை, பல பிரபல மசாஜ் நிறுவனங்களே தெரிவித்திருக்கின்றன. இந்த சின்னப் பையன்கள் என்ன அந்த பெண்ணின் வீட்டில் எடுபிடி வேலை செய்யவா செல்கின்றார்கள்??

உங்கள் கூற்றுப்படி பார்த்தாலும் ஆணின் பாலியல் ஆசைகள் விரைவில் முடிவது. ஆனால் பெண்ணின் பாலியல் ஆசைகள் மணிக்கணக்காகக் கூட தொடர முடியும். ஒரு ஆண் ஒரு பெணணுடன் உறவு வைத்து விந்தின் வெளியேற்றத்திற்குப் பின், இன்னொரு பெண்ணுடன் பல மணி நேரம் கழித்தே உறவு வைக்க முடியும். ஆனால் ஒரு பெண்ணால் எத்தனை ஆண்களுடனும் தொடர்ந்து உறவு வைத்துக் கொள்ள முடியும். அதில் பல பெண்கள் சாதனை செய்யவென்று 300 - 400 ஆண்கள் வரை தாங்கள் தொடர்ந்து உறவு வைத்ததாக சாட்சிகள் வைத்தே சாதனைகள் செய்துள்ளார்கள். இப்படி ஆண்களால் செய்ய முடியுமா??

ஒரு ஆணின் பாலியல் பலவீனத்தை அவனின் ஆண்குறியின் விறைப்பற்ற தன்மை, விரைவில் விந்து வெளியேறுதல் போன்றவற்றை வைத்துக் கணிக்கலாம். ஆனால் ஒரு பெண்ணின் பலவீனத்தை எதை வைத்து கணிப்பது?? ஆனால் பல பெண்களின் விவாகரத்துகள் தன்னை தனது கணவனால் திருப்திப்படுத்த முடியவில்லை என்ற அடிப்படை காரணங்களை வைத்தே கோரபப்பட்டுள்ளன.

இனமத வேறுபாடில்லாமலும் வயதுவித்தியாசம் பார்க்காமலும் யாழ்கள மாணவர்களுக்கு வகுப்பெடுத்த வசம்பு வாத்தியார் அவர்கட்கு என் நன்றிகள் உரித்தாகட்டும். :D

இனமத வேறுபாடில்லாமலும் வயதுவித்தியாசம் பார்க்காமலும் யாழ்கள மாணவர்களுக்கு வகுப்பெடுத்த வசம்பு வாத்தியார் அவர்கட்கு என் நன்றிகள் உரித்தாகட்டும். :D

:Dபாதிக்கப்பட்ட ஒரு மாணவனின் உளக்குமுறல் போல் தெரிகின்றதே?? :):D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை கதையை பாத்தால் மற்றவங்களுக்கு எல்லாம் இருபத்திநாலுமணிநேரமும் அலவாங்கு மாதிரி............. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.