Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐடியா நட்சத்திரப் பாடகர் போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பளிங்கினால் ஒரு மாளிகை

http://www.youtube.com/watch?v=_c740hqKM2g

Edited by nunavilan

  • Replies 119
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இளஞ்சோலை பூத்ததா

படம்: ஒருவர் வாழும் ஆலயம் உனக்காகவே வாழ்கிறேன்

பாடியவர்: அன்வர்

கணீரென்ற குரலில் கர்நாடக சங்கீத அடிப்படையிலான பாடலையும் தன்னால் பாடமுடியும் என நிரூபிக்கிறார் அன்வர்..!

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்: இளஞ்சோலை பூத்ததா

படம்: ஒருவர் வாழும் ஆலயம்

பாடியவர்: அன்வர்

கணீரென்ற குரலில் கர்நாடக சங்கீத அடிப்படையிலான பாடலையும் தன்னால் பாடமுடியும் என நிரூபிக்கிறார் அன்வர்..!

பொடியனுக்கு நல்ல எதிர்காலமிருக்கு.

இசைக்கலைஞனுக்கு நன்றிகள்.

பாடல்: எல்லாப் புகழும்

படம்: அழகிய தமிழ்மகன்

இசை: ஏ.ஆர் ரஹ்மான்

பாடியவர்: அன்வர்

பாடல் மட்டுமல்லாமல் ஆடலிலும் அசத்துகிறார் குட்டி அன்வர்..! இவரின் பாடும் திறன் பிரமிப்பாக இருக்கிறது. பாடல் நமக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது..! சுருதி சுத்தம், பாடலில் நல்ல ஆளுமை, தன்னம்பிக்கை என்று திகைக்க வைக்கிறார். இதோ நீங்களும் ரசியுங்கள்..!

http://www.youtube.com/watch?v=SrYYU8IhFn4

அருமை.

இசைக் கலைஞன் உங்களுக்கும் எனது பாராட்டுகள்.

தொடருங்கள்.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமை.

இசைக் கலைஞன் உங்களுக்கும் எனது பாராட்டுகள்.

தொடருங்கள்.........

நன்றிகள் தலைவன் உங்கள் கருத்துக்கு..!

இப்போது ஒரு வேற்றுமொழிப் பாடல்..! :rolleyes: கீரவாணி எனத்தொடங்கும் தமிழ்ப் பாடலின் தெலுங்கு வடிவம். இளையராஜாவின் திரியில் இதை ஏற்கனவே இணைத்த ஞாபகம். ஆனால் புதிய வாசகர்களுக்காக மீண்டும் இணைக்கிறேன்..! :wub:

பி.கு.: என்னடா அரைச்ச மாவையே திருப்பி அரைக்கிறான் எண்டு நினையாதேங்கோ..! வேற கனக்கப் பாடல்கள் இருக்கு இணைக்கிறதுக்கு..! ஆனால் தீபிகாவை பார்த்திட்டு அங்கால தாண்டிப்போக ஏலுமே..? :wub:

பாடல்: சங்கீத ஜாதி முல்லை

படம்: காதல் ஓவியம்

இசை: இசைஞானி இளையராஜா

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

2007 சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற கிருஸ்ணமூர்த்தியின் இந்தப்பாடலையும் கேட்டுப்பாருங்கள்...!

http://www.youtube.com/watch?v=sNEZINUnays

80 களில் வைரமுத்துவுடன் இளையராஜா கைகோர்த்து தந்த பாடல்கள் இன்றும் காலத்தால் அழியாதவை. எப்படி எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கண்ணதாசன் அமைந்தாரோ, அப்படி இளையராஜாவிற்கு வைரமுத்து அமைந்தார். தேவையில்லாத தலைக்கனங்களால் இருவரும் பிரிய நேரிட்டது. இன்றுவரை இருவரும் இணையாதிருப்பதற்குக் காரணம் கூட, இளையராஜா என்ற தனிமனிதனின் தலைக்கனம் இன்னும் தொடர்வதனால்த் தான்.

டங்க்ஸ் இணைச்ச அந்த மலையாள சிறுமி பங்கேற்கும் நிகழ்ச்சியை நானும் அண்மையில விஜய் தொலைக்காட்சி ஓசியில போனப்போது பார்த்து இருக்கிறன். பாடல்களை மிக அழகாக பாடினார். தகப்பனும் ஓர் கலைஞனாக இருக்கிறதால வீட்டில நல்ல பயிற்சி கொடுத்து இருக்கிறார் போல.

வசம்பு அண்ணா இணைச்ச பியானோ இசையோட பாடுகிற இளைஞனும் நல்லாய் பாடுறான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்ரிதா தொ.கா நிகழ்ச்சியில் வந்த பாடல்களை யூரியூபில் இருந்து நீக்கிவிட்டார்கள்..! :D

அடுத்ததாக..

பாடல்: குங்குமப் பூவே..

படம்: மரகதம்

பாடியவர்: மாதங்கி

http://www.youtube.com/watch?v=jfB-tufwAds

அம்ரிதா தொ.கா நிகழ்ச்சியில் வந்த பாடல்களை யூரியூபில் இருந்து நீக்கிவிட்டார்கள்..!

ம்ம் ஏன் நீக்கினாங்க எண்டு தெரியல..... அதுல நீங்கள் இணைத்த அந்த அன்வரின் பாடல்கள் நல்லாயிருந்தது .... நேற்று அதை திருப்பி பார்க்கலாம் எண்டு வந்தன் காணயில்லை ....

நேற்று அதை திருப்பி பார்க்கலாம் எண்டு வந்தன் காணயில்லை ....

:Dநீங்க திருப்பிப் பார்த்தால் முதுகுப் பக்கமெல்லோ தெரிந்திருக்கும், அதாலை ஒருவேளை எடுத்திட்டாங்களோ?? :):D

Edited by Vasampu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் ஏன் நீக்கினாங்க எண்டு தெரியல..... அதுல நீங்கள் இணைத்த அந்த அன்வரின் பாடல்கள் நல்லாயிருந்தது .... நேற்று அதை திருப்பி பார்க்கலாம் எண்டு வந்தன் காணயில்லை ....

ஒன்றிரண்டு இணைப்புகளை இப்போது சரி செய்திருக்கிறேன்..! :)

அடுத்ததாக.. :)

பாடல்: பொய் சொல்லக்கூடாது

படம்: ரன்

இசை: வித்யாசாகர்

பாடியவர்: அன்வர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஆலாலகண்டா

படம்: சங்கமம்

இசை: ஏ.ஆர் ரஹ்மான்

பாடியவர்:சிதேஷ்

மிகவும் சிரமமான ஒரு பாடலை பாடலின் சுவை குன்றாது இனிமையாகப் பாடியுள்ளார் இந்த மேடைப் பாடகர்..!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இசை. "பொய்சொல்ல கூடாது" பாடல் அருமை.

இனி நித்தியசிறியின் ஆடலுடன் பாடலை ரசிப்போம்.மனோவின் கடியை தாங்கியமைக்கு மிக்க நன்றி. :)

http://www.youtube.com/watch?v=AS9zNBmPh-8

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா.. சிறுமி ஸ்ரீநிஷா அந்தமாதிரி வெளுத்து வாங்கிறா இந்திப்பாட்டை..! நானும் ரெண்டுமூண்டு இந்திப்பாட்டுக்களை எடுத்து வச்சுக்கொண்டு போடுறதா எண்டு யோசிச்சுக்கொண்டிருந்தன்..! நல்லவேளை நுணா தொடங்கி வச்சிட்டார்..! :)

பாடல்: யம்மா யம்மா

படம்: ஷான்

மேடையில் பாடியவர்: ? (ஒரு மல்லு Guy :))

நானும் ரெண்டுமூண்டு இந்திப்பாட்டுக்களை எடுத்து வச்சுக்கொண்டு போடுறதா எண்டு யோசிச்சுக்கொண்டிருந்தன்..! நல்லவேளை நுணா தொடங்கி வச்சிட்டார்..! :)

இணைப்புகளுக்கு நன்றி இசை.... இந்திப்பாடல்களை விட தமிழ் பாடல்களை இணைத்தால் சந்தோசம்.. இந்திப் பாடல்களுக்கும் வேற்று மொழிப் பாடல்களுக்கும் தனியான ஒரு திரி திறந்தால், அவற்றை ரசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும்.

பாடல்: இளஞ்சோலை பூத்ததா

படம்: ஒருவர் வாழும் ஆலயம்

பாடியவர்: அன்வர்

கணீரென்ற குரலில் கர்நாடக சங்கீத அடிப்படையிலான பாடலையும் தன்னால் பாடமுடியும் என நிரூபிக்கிறார் அன்வர்..!

அருமை அருமை....எப்படி இந்த வயதில் இப்படி பாடுகின்றார்கள்?

ஒரு சின்ன திருத்தம்

இந்தப் பாடல் இடம்பெற்ற படம் 'ஒருவர் வாழும் ஆலயம்' அல்ல, அது 'உனக்காகவே வாழ்கின்றேன்'

சற்று மாறுதலாக அஜேஷ் என்ற அசாதாரண இளைஞனின் பாடலை இணைக்கின்றேன். பியாணோ இசையுடன் அசத்துகின்றார்.

பாடல் : பாட்டும் நானே

http://www.youtube.com/watch?v=yVPxtmPxSGA&feature=related

வசம்பு,

நீங்கள் இதனை இணைத்ததிலிருந்து இதுவரைக்கும் ஒரு 10 தடவையாவது இதனை ரசித்திருப்பேன்...நன்றிகள் கோடி

அஜேஷின் இன்னுமொரு பாடல்... இதில் எம்.எஸ்.வி ஐயாவின் முகபாவனை அருமை

http://www.youtube.com/watch?v=qoZ7ypHHWFI

அஜேஷின் பாடல் மட்டும் அல்ல, பின்னனி இசை கூட அற்புதம்

இவர்தான் 2008 இன் வெற்றியாளர்

Edited by நிழலி

நம்ம அல்கா அஜீத்துக்கும் ரோசனுக்கும் சபாஸ் சரியான போட்டிதான்... :)

http://www.youtube.com/watch?v=_zVX1piMBb4

Edited by ஈழமகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றி இசை.... இந்திப்பாடல்களை விட தமிழ் பாடல்களை இணைத்தால் சந்தோசம்.. இந்திப் பாடல்களுக்கும் வேற்று மொழிப் பாடல்களுக்கும் தனியான ஒரு திரி திறந்தால், அவற்றை ரசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும்.

கருத்துக்கு நன்றிகள் நிழலி..! இன்னுமொரு திரி செய்வோம்..! :)

அருமை அருமை....எப்படி இந்த வயதில் இப்படி பாடுகின்றார்கள்?

ஒரு சின்ன திருத்தம்

இந்தப் பாடல் இடம்பெற்ற படம் 'ஒருவர் வாழும் ஆலயம்' அல்ல, அது 'உனக்காகவே வாழ்கின்றேன்'

திருத்திவிட்டேன்..! சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நிழலி..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.