Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரத்தியேக நேர்காணல் : என்றென்றைக்கும் தமிழீழ விடுதலையின் மையமும் இயங்கு சக்தியும் பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்தான்

Featured Replies

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு பின்னர் சிக்கலடைந்து போயிருக்கும் ஈழவிடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதிலும் சர்வமயப்படுத்துவதிலும் எந்த அரசியல் வட்டத்திற்குள்ளும் சிக்காமல் தனித்துவமான முறையில் தமது பல்கலைக்கழக புலமைசார் துறையின் வழி மிகக் காத்திரமான பங்களிப்புக்களை நல்கி வரும் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்), சித்ரலேகா துஸ்யந்தன்(வியன்னா பல்கலைக்கழகம்), பிரியதர்சினி சற்குணவடிவேல்(பர்சிலோனா பல்கலைக்கழகம்) ஆகியேர்களைக் கொண்ட ஆய்வாளர் குழு “ஈழம்ஈநியூஸ்” க்கு தந்த பிரத்தியேகமான நேர்காணல் இது.

என்றென்றைக்கும் தமிழீழ விடுதலையின் மையமும் இயங்கு சக்தியும் பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்தான் என்று தமது அண்மைய ஆய்வு ஒன்றில் வலியுறுத்தியிருக்கும் இவர்கள், அக்கருதுகோள் குறித்து இந் நேர்காணலில் மீண்டும் வலியுறுத்திப் பேசுவதுடன் அதை ஒரு இயக்கமாகவே நாம் முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறார்கள்.

புலிகளின் பின்னடைவுக்குப் பின்னர் தலைவர் பிரபாகரன் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஒரு விபரீதமான சூழலில் அக்கருத்துக்களை ஒற்றையான தட்டையான பன்முகப் பார்வையற்ற காழ்ப்புக்களும் குரோதங்களும் நிறைந்த சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்களின் வெறும் உளறல்கள் என்று அவற்றைப் புறந்தள்ளும் இவ் ஆய்வாளர் குழு, தனி மனித வழிபாடு – தனிமனித அரசியல் என்பவற்றிற்கும் அப்பால் பிரபாகரன் என்ற பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளை இந் நேர்காணலில் துல்லியமான உளவியல் வரைபடமாக வரைந்து காட்டுகிறார்கள்.

vp-pot-spt

பிரபாகரன் – தமிழச்சமூகத்திற்கிடையிலான உளவியல் வரைபடத்தை கிரமமாக உள்வாங்காத – இது குறித்த புரிதலில்லாத எத்தகைய அரசியல் நடவடிக்கைகளும் ஈழவிடுதலையை சாத்தியமாக்காது என்பதுடன் அவை மக்களின் மனநிலையிலிருந்து சிந்தித்துத் தோற்றம் பெற்றவையாகவும் இருக்க முடியாது என்பது இவர்களின் மேலதிக வாதமாக இருக்கிறது.

இந் நேர்காணலில் இருந்து தமிழ்சமூகத்திற்குக் கிடைத்த முக்கியமான முடிவாக நாம் இவற்றை கருதுகிறோம். இதுவே இந் நேர்காணலை அர்த்தமுள்ளதாக்குகிறது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னர் ஈழவிடுதலைப் போராட்டம் குறித்து உள்ளும் புறமுமாக பின்னப்பட்டுக்கொண்டிருக்கும் எண்ணற்ற கேள்விகளுக்கு தமது பாணியில் பதிலளித்துள்ளார்கள். இனி அவர்களுடனான நேர்காணல்…..

கேள்வி: சமகால நிகழ்வு ஒன்றுடன் இந்நேர்காணலை ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறோம். அண்மையில் எமது ஈழத்தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் சிறீலங்காவில் இருந்து தப்பி அரசியல் தஞ்சம் பெறுவதற்காக இந்தோனேசிய, கனடா கடற்பரப்புகளினூடாக நீண்ட தூர கடற்பயணத்தை மேற்கொண்டு இடை நடுவில் அவுஸ்திரேலிய, இந்தோனேசிய, கனடா குடிவரவு அதிகாரிகளினால் ஒரு சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டு பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளதை நீங்கள் எப்படி பாhக்கிறீர்கள்?

பதில்: நல்ல ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். இதற்கான பதிலை நாம் ஒற்றையாக அணுக முடியாது. சட்ட விரோத குடியேற்ற வாசிகள் ஒரு நாட்டிற்குள் நுழையும் குடிவரவுப் பிரச்சினை அல்ல இது. அந்தந்த நாடுகள் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவும் இந்தப் பிரச்சினையை அந்த அடிப்படையிலேயே மட்டும் அணுகவும் தலைப்படுகின்றன.

இந்தப் பிரச்சினையின் பரிமாணமே வேறு என்பதை அவை புரிந்திருந்தும் அதை புரிய மறுக்கின்றன அல்லது புரியாதது மாதிரி நடக்க விரும்புகின்றன என்று சொல்லலாம். இவ்விரு நிகழ்வுகளின் கன பரிமாணத்தை நாம் கால இட வெளி சூழலில் வைத்து ஆராய்வதும் ஒன்றுதான் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னான ஈழத்தமிழர் அரசியற் போக்கை ஆரய்வதும் ஒன்றுதான். ஏனெனில் இரு ஆய்வுகளும் ஏதோ ஒரு புள்ளியில் இடைவெட்டி ஒன்றாகப் பயணம் செய்யக்கூடியவை.

உலகின் இரு வேறு கடற்பரப்புக்களில் நடந்து கொண்டிருக்கிற பிரச்சினையாக இருந்த போதும் பிரச்சினையின் மையம் ஒன்றுதான். நீங்கள் உங்கள் கேள்வியில் இரு நிகழ்வுகளையும் இணைத்ததிலிருந்தே அதன் ஒற்றுமையை புரிந்து கொளள்ளலாம்.

ஆச்சரியப்படும் வகையில் மட்டுமல்ல அதிர்ச்சியூட்டும் வகையிலும் சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்த சில ஊடகங்களாலும் சில அரச அதிகாரிகளினாலும் சட்ட விரோத குடியேற்றம் என்ற பதத்துடன் மேலதிகமாக “பயங்கரவாதிகள்” என்ற பதமும் சேர்த்து புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இதுவே பிரச்சினையை பன்மைத்தன்மையாக்குகிறது.

ஏறத்தாழ கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஈழத்தமிழர்கள் தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் அரசியல்தஞ்சம் கேட்பது ஒன்றும் புதியகதை அல்ல. ஆனால் தற்போதைய நிகழ்வு முன்னெப்போதும் இல்லாதளவிற்கு சில வேறுபட்ட கூறுகளை கொண்டுள்ளது.

அதில் முக்கியமானது, “பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு போர் முடிவடைந்து விட்டது” என்று சிறீலங்கா அரசு அறிவித்திருக்கிற ஒரு சூழலில் முன்னரிலும் பார்க்க அதிகளவிலானவர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரியிருக்கிற நிகழ்வு.

இந்த செய்தியின் பின்னணியில் பல தெளிவான உண்மைகள் புதைந்திருக்கின்றன. போர் முடிவடைந்துவிட்டது என்ற சிறீலங்காவின் செய்தி செமத்தியாக அடிவாங்குகிற இடம் இது. அத்தோடு அந்தப் போரை அது எவ்வாறு முடிவுக்கு கொண்டு வந்தது என்ற உண்மையும் சேர்ந்து உறைக்கிற தளமும் இதுதான்.

refugees_1512209c

யார் என்ன வியாக்கியானம் கூறினாலும் தஞ்சம் கோரியிருப்பவர்களுக்கு இருக்கிற ஒரே அடையாளம் “இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்பதுதான். நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரியிருக்கிற நிகழ்வு சொல்கிற மிகப் பெரிய உண்மை இது.

ஏனெனில் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையிலேயே படுகொலை நிகழ்த்தப்பட்டது. அந்தப் பேருண்மையை இரு வேறுகடற்பரப்புக்களில் நின்று உலகத்திற்கு உரத்து அறிவிக்கிறார்கள் என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும்.

போரில் குருரமாகத் தோற்கடிக்கப்பட்டவர்களாக – தமது அடையாள நிலத்தை இழந்தவர்களாக – வாழ்வதற்கான நிலமற்றவர்களாக அவர்களது இருப்பு மாறியிருப்பதை அவர்களது கூட்டு அரசியல் தஞ்சம் அறிவிக்கிறது.

ஒரு பெரும்பான்மை இனம் அரச உரிமையை வைத்து இறையாண்மை என்ற பெயரில் ஒரு சிறுபான்மை இனத்தின் மீது நடத்திய அழித்தொழிப்பு இது. அங்கு நடந்தது உண்மையில் உயிர்களின் பலி அல்ல. தமிழ் என்ற பண்பாட்டு நிலம் பறிக்கப்பட்டது.

இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடையாளங்கள் அழிக்கப்பட்ட ஒரு குழுமம் தனது வேர்களைத் தேடி அல்லது தனது வேர்களைத் தக்கவைப்பதற்காக அந்த அழிநிலத்திலிருந்து தப்பிய ஒரு பயணம்தான் மேற்படி நிகழ்வுகளிலுள்ள முக்கிய கூறு.

அத்தோடு ஈழம் என்ற தேசம் குறித்த தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த பொருண்மைகளை உலகிற்கு ஓங்கி அறிவிக்கிற ஒரு அரசியற் செய்றபாடாகவும் இது இருக்கிறது. யார் சொன்னது போராடும் இனம் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டால் அது அடங்கிவிடும் அல்லது ஓய்ந்து விடும் என்று.

தன்னையறிமாலேயே அது தொடர்ந்து போராடிக்கொண்டேயிருக்கும். அதற்கு சாட்சிதான் மேற்படி நிகழ்வுகள். அவர்கள் தண்ணீரில் மிதந்தபடியே சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு எதிராக குரல்கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள். நாம் இதன் பின்னணிக்குள் இன்னும் ஆழமாகப் போவோம். ஏனெனில் இதன் பின்னணியில்தான் ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் புதைந்திருக்கிறது.

முன்னையதை கழித்துவிட்டாலும் 2009 ம் ஆண்டு குறிப்பான மே மாதம் இறுதிவரையான முதல் ஐந்து மாதங்களில் ஏறத்தாழ 30,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளர்கள் என்று அனைத்துலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு இவை இனப்படுகொலை என்பதையும் கருத்தளவில் எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் இனம், மொழி, பண்பாடு என்பவற்றால் ஒரே அடையாளத்தை உடையவர்கள் என்பது இங்கு குறிப்பான கவனத்திற்குரியது.

அவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? இதற்கான விடையில்தான் இந்த கூட்டு அரசியல் தஞ்சத்தின் அடிப்படை மட்டுமல்ல அவர்கள் சார்ந்துள்ள இனத்தின் அடையாளமும் அவலமும் புதைந்திருக்கிறது.

தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த பிரச்சினைக்கும் அப்பால் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற உள்ளார்ந்த அடிப்டையில் தமது சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழ முற்பட்ட – எத்தனித்த ஒரு குழுமத்தின் பிரச்சினையாகவே சிறீலங்காவின் இன முரண்பாட்டை கவனத்தில் கொள்ள வேண்டும் அல்லது அதன் ஆரம்ப புரிதல் அப்படித்தான் இருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கவனமாக எதிர் கொள்ளும் ஒருவர் இதை சுலபமாக இனங்கண்டு கொள்ள முடியும்.

சிறீலங்காவில் தமிழர்கள் என்ற அடையாளத்தின் அடிப்டையில் இப்போது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் தத்துவார்த்த சொல்லாடல்கள் மட்டுமல்ல இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையே கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது.

ஏனெனில் நாம் முன்பே குறிப்பிட்டது போல் முள்ளிவாய்க்காலில் மனித உயிர்களுக்கும் அப்பால் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடையாளங்கள் மீதான அழித்தொழிப்பே நடைபெற்றது.

இந்த அடையாளங்களை தாங்கியவர்களாக, அந்த அடையாளங்களை தக்க வைப்பதற்காக முன்னின்று போராடியவர்களுக்கு தோள்கொடுத்ததற்காக அந்த மக்கள் அந்த நிலத்தில் வைத்தே அழித்தொழிக்கப்பட்டார்கள்.

எஞ்சியவர்கள் முடமாக்கப்பட்டு முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தப்பியவர்கள்தான் இன்று ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரத் தொடங்கியிருக்கிறார்கள்.

எனவே “இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்ற அடையாளத்துடன் இவர்களுக்கு சம்பந்தபட்ட நாடுகள் ஒரு கூட்டு அரசியல் தஞ்சத்தை வழங்க வேண்டும் என்று நாம் வீதியல் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும். குறிப்பாக கனடா, அவுஸ்திரேலியா நாட்டிலுள்ள எமது மக்கள் உடனடியாக இந்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்.

இது நூற்றுக்கணக்கானவர்களுக்கான அரசியல்; தஞ்சப் பிரச்சினை அல்ல. எமது அடையாளம் தொடர்பான பிரச்சினை. நாம் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகியிருக்கிறோம் என்பதை கவனப்படுத்துவதுடன் மௌனமாக உள்ள உலகத்தின் மனச்சாட்சிகளை உலுக்கும் நடவடிக்கை இது. எமது போராட்டத்தின் அடுத்த வடிவமும் இதுதான்.

இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையில் அழித்தொழிப்பு நடைபெற்ற மண்ணில் அந்த அடையாளங்களுடன் எப்படி தொடர்ந்து வாழ முடியும்? அந்த அழித்தொழிப்பின் இலக்குகளாக – நேரடி சாட்சிகளாக எத்தகைய மனநிலையில் அங்கு தங்கியிருக்க முடியும்? இத்தகைய அழித்தொழிப்பு இனி அங்கு நடைபெறாது என்பதற்கு யார் உத்தரவாதம்? அழித்தொழிப்பின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட்டார்களா? குறைந்தது எச்சரிக்கையாவது செய்யப்பட்டார்களா? பொது மன்னிப்பு என்று அறிவிக்கப்பட்டு சரணடயக்கூறிய அரசு இதுவரை ஒரு போராளியையாவது விடுதலை செய்ததா?

srilankans_afpஅவ்வளவு ஏன், புலிகளின் பணயக் கைதிகள் என்று விளிக்கபட்ட மக்கள் யாருடைய பணயக்கைதிகளாக முட்கம்பி வேலிக்குள் இப்போது கிடக்கிறார்கள்? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு சிறீலங்கா என்ற தேசத்தை இறையாண்மையுள்ள ஒரு தேசமாக அங்கீகரித்து அதன் போருக்கு துணை நின்ற கேடு கெட்ட உலகம் பதில் சொல்ல வேண்டும்.

அதன் பிற்பாடே குழுக்களாக தேசம் தேசமாக எம்மவர் தஞ்சம் கோருவது பற்றிய சலிப்பை கொட்ட வேண்டும்.

இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும் நடைபெற்ற – நடைபெறுகிற தேசம் அது. சிறீலங்கா என்ற தேசத்தை பொறுத்து தமிழர்களுக்கு என்று தற்போது இருக்கிற அடையாளம் ஒன்று இனப்படுகொலைக்கு பலியானவர்கள் இரண்டு இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள் மூன்று தாயகத்தில் இன்னமும் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகிக்கொண்டிருப்பவர்கள்.

மொத்தத்தில் சிறீலங்கா என்ற தேசத்துடன் நாம் எமது தொடர்பை முற்றாகத் துண்டிக்க வேண்டும், இல்லையெனில் மீள முடியாத உளவியல் சிக்கலுக்குள் ஒரு இனம் முழுவதும் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது. இதை பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் ஆழமாக விபரிக்கிறோம். உங்கள் கேள்விக்கான பதில் என்ற அளவில் இதையும் நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது.

நாம் மீண்டும் வீதியில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த அகதிகளின் பிரச்சினையை மையப் பிரச்சினையாக்கி நாம் போராட்டத்தை தீவிரப்படுத்துவதனூடாக எமது விடுதலைப் போராட்டத்தை வேறு ஒரு தளத்தை நோக்கி நகர்த்த முடியும். “இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்ற சொல்லாடலுடன் “கூட்டு அரசியல் தஞ்சம்” என்ற கருத்துருவாக்கத்தை மையப்படுத்துவதனூடாக தாயகத்தில் எமது இருப்பு தொடர்பான காத்திரமான சில செய்திகளை உலகுக்கு சொல்ல முடியும்.

நாம் இனி போராடவேண்டியது எதிரிகளுடன் அல்ல. இந்த மேற்குலகத்துடன்தான். ஜனநாயகம் பேசியே எம்மைக் கழுத்தறுத்தவர்கள் இவர்கள்தான். குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை என்ற அமைப்புக்கெதிராக நாம் எமது கண்டனங்களை வீதியில் இறங்கி பதிவு செய்தேயாக வேண்டும். ஏனெனில் உண்மையான போர்க்குற்றவாளி ஐநா பொதுச்செயலர் பான்கிமூன்தான்.

உலக மகா யுத்தங்களின் பிற்பாடு பிரதானமாக இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்தவதற்காக உலக அரசுகளின் ஏகமனதான அங்கீகாரத்துடன் தொடங்கப்பட்ட ஒரு பொது அமைப்பு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை வேடிக்கை பார்த்ததுடன் இன்னும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பாக காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதை எந்த வகையில் சேர்ப்பது.

இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையில் எம்மை எமது நிலத்தில் வாழ விடுமாறு நாம் இப்போது உரிமையுடன் கேட்கக்கூடிய ஒரே இடம் ஐநா பொதுச் செயலரின் வாசஸ்தலம்தான். இல்லையேல் ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும் இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடிப்படையில் வாழக்கூடிய ஒரு இடத்தை நோக்கி ஒரு “கூட்டு அரசியல் தஞ்சத்தை” கோரி நகரும் வேண்டுகோளை முன்வைக்க வேண்டியிருக்கும்.

இது இந்த உலக ஒழுங்கின் சமநிலையில் ஒரு பெரும் தளம்பலை ஏற்படுத்தும் அபாயத்தை சுட்டிக்காட்டி நமது போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.

தொடரும்…….

http://www.eelamenews.com/?page_id=63

இங்கை தலைவரின் பிடிவாதம் தான் எங்களை இக்கட்டுக்கை தள்ளியது என்கிறார்கள்... ஆனால் அப்படி சொன்னவர்களில் எத்தினை பேர் தலைவர் போன எல்லைவரை போக தயாராக இருக்கிறார்கள் எண்று கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள்... மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய தலைமை பண்பு என்பது அறவே இல்லாதவர்கள் தான் இண்று விமர்சகர்கள்... செயற்திறன் என்பது அறவே கிடையாது... தலைவர் பிழை விடுகிறார் எண்று இண்று கண்டு பிடித்தவர்கள் அண்று ஏன் கண்டு பிடிக்க முடியவில்லை எண்று கேட்டால், அதை கண்டு பிடித்து விமர்சனம் செய்பவர்களுக்கு தூரநோக்கு கிடையாது என்பதும் தெளிவும் கிடையாது...

சரி இண்று தமிழர்களுக்கு இவ்வளவு அழிவுகள் நிகழ்ந்து இருக்கிறதே, அதை சர்வதேசமும் உணர்ந்து இருக்கும் தருணத்தை பயன் படுத்தி ஆதாரங்களை திரட்டி அதை ஒரு இனப்படுகொலை எண்று சொல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கும் போது, அதைச்செய்யாமல் என்ன செய்கிறீர்கள் எண்று கேட்டால் எங்களை சுய விமர்சனம் செய்கிறார்களாம்... சுய விமர்சனத்தை எவ்வளவு காலம் செய்வார்களே தெரியாது... ஆனால் ஆறுமாதம் கடந்துந்தும் சுய விமர்சனம் தான் நிகழ்கிறது...

ஒண்றை மட்டும் தெளிவாக சொல்ல முடியும்... செயலில் இறங்கி இருக்கும் பலருக்கு தலைமை தாங்கும் எண்ணம் இல்லை.. தலைமை தாங்கும் எண்ணம் இருப்போருக்கு செயற்திறன் என்பது கொஞ்சமும் இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்றை மட்டும் தெளிவாக சொல்ல முடியும்... செயலில் இறங்கி இருக்கும் பலருக்கு தலைமை தாங்கும் எண்ணம் இல்லை.. தலைமை தாங்கும் எண்ணம் இருப்போருக்கு செயற்திறன் என்பது கொஞ்சமும் இல்லை...

உண்மை!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒண்றை மட்டும் தெளிவாக சொல்ல முடியும்... செயலில் இறங்கி இருக்கும் பலருக்கு தலைமை தாங்கும் எண்ணம் இல்லை.. தலைமை தாங்கும் எண்ணம் இருந்தோர் போட்டுத்தள்ளப்பட்டார்கள் அல்லது விரட்டியடிக்கப்பட்டார்கள் என்றும் கூறலாம்!

போட்டு தள்ளபட்ட துரத்தியடிக்க பட யாரும் தமிழ் மக்களுக்காக உயிரையும் கொடுக்கும் எண்ணம் இல்லாது இலங்கை, இந்திய படைகளோடு சேர்ந்து அவர்களின் பாதுகாப்புடன் வாழ்ந்தவன் என்பதும் உண்மை...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொல்லப் போனால் ஆட்கள் பற்றாக்குறையால் எதுவுமே செய்ய முடியாத நிலைமையில் தான் அமைப்புக்கள் இருக்கின்றன... எத்தனைபேர் இதில் சுயமாக ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகின்றீர்கள்... மற்றவர்கள் போகின்றார்கள் இல்லையே என்று திட்டுகின்றவர்கள், தங்களின் பங்களிப்பு என்ன என்று சிந்திப்பதும் நன்று... ஏதோ பணம் கொடுத்தோம், ஆர்ப்பாட்டங்களுக்குப் போனோம், அத்தோடு சரி என்ற நிலைமையில் தான் நிறையப் பேர்கள்... அவர்களின் தாயக உணர்வைக் குறைத்து மதிப்பிடவில்லை.... ஆனா உங்களின் அமைதி எவ்வித பலனையும் இது வரை தந்திருக்கவில்லை... எதிரி தன்னுடைய செயற்திட்டங்களுக்கு அமைவாக இயங்குவதையும், மக்களைத் துன்புறுத்துவதையும் எம் அமைதி தடுத்து விடவில்லை... உலகில் எந்த அரசுமே இப்படிக் கொடூரமான விதத்தில் மக்களை கூண்டுக்குள் நாய்களை அடைத்து வைத்தது போல அடைத்து வைத்திருக்கவில்லை. சில விபச்சாரிகளுக்குப் பிறந்ததுகள் ஏதோ கதைக்கின்றார்கள் என்பதற்காக எம் உணர்வினை அடக்கி வைத்திருக்க முடியாது. தமிழனுக்கு ஒரு நாடு, தீர்வு என்று தமிழனுக்குத் தீர்வு கிடைப்பதில் இந்த நாய்களுக்கு என்ன குறைந்து விட்டது.

நாம் போராட்டத்தில் தோற்று விட்டோம் என்பது உண்மை தான். அதுவும் படுபயங்கரமான விதத்தில், பல்லாயிரம் உறவுகளை இழந்து... ஆனால் அந்தத் தோல்விகளுக்கூடாக நாம் பெற்ற வலிகள், வேதனைகள் என்பன எம் எண்ணத்தை முடக்கி விடக்கூடாது.

அவன் காசு அடிக்கின்றான், இவன் இப்படிப் புடுங்குகின்றான் என்ற கதைகளை விடுங்கள். நீங்கள் நேரில் அதைப் பார்த்தீர்களா என்ன? இவ்வறானா கதைகள் எங்களைப் பலவீனப்படுத்தும், செயற்பாடே.. சரியோ பிழையோ ஏதோ அமைப்பில் இணையுங்கள்.. தோள் கொடுங்கள்.. ஒரு ஆள், பல அமைப்புக்களிலும், பல பொறுப்புக்களிலும் சுமக்கின்ற வலியைக் கொடுக்காதீர்கள். இளையோர் என்றால், உங்களின் பிள்ளைகளை உறவினரின் பிள்ளைகளை இணைத்து விடுங்கள்.. கிளப்புக்களில் போய் ஆடுகின்ற மனநிலையில் இருந்து அவர்கள் விடுதலையாகட்டும்..

இறுதியாக, தலைவர் வருவார். வந்து போராட்டத்தைத் தொடருவார் என்று நம்புவர்களுக்கு,

இத்தனை மக்கள் சிங்கள அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட போது, அதைத் தடுக்கின்ற சக்தியோ, பலமோ புலத்தமிழர்களிடமோ, தமிழ்நாட்டுத் தமிழர்களிடமோ இருக்கவில்லை. அதை இப்பொழுதும் நாம் ஏற்படுத்தவில்லை. அப்படியான சூழ்நிலையில் மீண்டும் ஒரு போராட்டத்தைத் தொடங்கி அதே அழிவை சிங்கள தேசம் ஏற்படுத்தினால், நாம் என்ன செய்ய முடியும். அந்த தடுக்கும் சக்தியை முதலில் உருவகியுங்கள்.

---

Edited by இளைஞன்
மூலக்கருத்து நீக்கப்பட்டுள்ளது

????

Edited by விசுகு

இந்த உறைநிலை கரைய வேணுமானால்,மக்கள்சக்தி திரளவேணுமானால்,

'37வருடங்களுக்கு மேலாக விடுதலைப்போராட்டத்தை நடாத்திய தலைவரையோ அமைப்பையோ போராளிகளையோ மீள்பார்வை என்றபோர்வையிலோ,விமரிசனம் என்ற படுதாவுக்குள்ளாலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கி எழுதினால்தான் சொன்னால்தான் அடுத்தகட்ட நகர்வுக்குபோகலாம் என்ற மாயையை ஏற்படுத்துவதை நிறுத்தவேண்டும்.'

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனைபேர் இதில் சுயமாக ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகின்றீர்கள்... மற்றவர்கள் போகின்றார்கள் இல்லையே என்று திட்டுகின்றவர்கள்இ தங்களின் பங்களிப்பு என்ன என்று சிந்திப்பதும் நன்று... ஏதோ பணம் கொடுத்தோம்இ ஆர்ப்பாட்டங்களுக்குப் போனோம்இ அத்தோடு சரி என்ற நிலைமையில் தான் நிறையப் பேர்கள்

உண்மையைச்சொன்னால்

வெட்கத்தை விட்டு சொன்னால்

நானும் இந்த வட்டத்திற்குள்தான் நிற்கின்றேன்

இந்த உறைநிலை கரைய வேணுமானால்,மக்கள்சக்தி திரளவேணுமானால்,

'37வருடங்களுக்கு மேலாக விடுதலைப்போராட்டத்தை நடாத்திய தலைவரையோ அமைப்பையோ போராளிகளையோ மீள்பார்வை என்றபோர்வையிலோ,விமரிசனம் என்ற படுதாவுக்குள்ளாலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கி எழுதினால்தான் சொன்னால்தான் அடுத்தகட்ட நகர்வுக்குபோகலாம் என்ற மாயையை ஏற்படுத்துவதை நிறுத்தவேண்டும்.'

நாம் மீண்டும் வீதியில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த அகதிகளின் பிரச்சினையை மையப் பிரச்சினையாக்கி நாம் போராட்டத்தை தீவிரப்படுத்துவதனூடாக எமது விடுதலைப் போராட்டத்தை வேறு ஒரு தளத்தை நோக்கி நகர்த்த முடியும். “இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்” என்ற சொல்லாடலுடன் “கூட்டு அரசியல் தஞ்சம்” என்ற கருத்துருவாக்கத்தை மையப்படுத்துவதனூடாக தாயகத்தில் எமது இருப்பு தொடர்பான காத்திரமான சில செய்திகளை உலகுக்கு சொல்ல முடியும்.

சிங்களம் முள்ளி வாய்க்காலில் நிகழ்த்திய இனப்படுகொலை புலம் பெயர்தேசமெங்கும் வாழும் தமிழ் மக்களைத் தொடர்ச்சியாகத் தெருவில் இறங்கிப் போராடுவதற்கான சந்தர்ப்பத்தைக்கொடுத்தது. புலம் பெயர்வாழ் தமிழ் மக்களும் எழுச்சியின் உச்சத்தில் இருந்தனர். தெருவில் நின்றுதான் போராடினார்கள்.

எல்லாவற்றையும் நாசமாக்கிவிட்டார்களே! நாதாரிகள்

முள்ளிவாய்க்காலின் முடிவு பிராந்திய, சர்வதேச சக்திகளின் நலன் சார்ந்த முரன்பாட்டை வெளிப்படையாக்கியுள்ளது.

சர்வதேச சக்திகள் எம் களத்தில் நிற்கின்றார்கள்.

நம் புலம் பெயயர்தேசத் தலைவர்வர்கள், நாடுகடந்த தமிழீழ அரசு, மக்களவை அமைத்துத்தான் விடுதலைக்கான அரசியல் செய்வதற்கான அறிக்கைவிட்டு அடித்தளம் இட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.

இப்போது நாம் ஒன்று திரண்ட தமிழ்த் தேசிய சக்தியாக முள்ளிவாய்க்காலுக்கு முன்பிருந்ததுபோல் அணிதிரளவேண்டும்.

பிரபாகரன் என்ற ஒற்றைச்சொல் இல்லாமல் தமிழ்த்Nசிய இனத்தை இந்த நூற்றாண்டில் அணிதிரட்டமுடியுமா?

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கட்டத்திற்கு போவதாயின்

37 வருடங்களை சுய விமர்சனம் செய்யத்தான் வேண்டும்

ஆனால் அது எமது லட்சியத்தை நோக்கி பயணிக்கும் முடிவோடு செய்யப்படவேண்டும்

அவர்களது தியாகங்களுக்கு மதிப்பளிப்பதாக இருக்கவேண்டும்

இந்த உறைநிலை கரைய வேணுமானால்,மக்கள்சக்தி திரளவேணுமானால்,

'37வருடங்களுக்கு மேலாக விடுதலைப்போராட்டத்தை நடாத்திய தலைவரையோ அமைப்பையோ போராளிகளையோ மீள்பார்வை என்றபோர்வையிலோ,விமரிசனம் என்ற படுதாவுக்குள்ளாலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கி எழுதினால்தான் சொன்னால்தான் அடுத்தகட்ட நகர்வுக்குபோகலாம் என்ற மாயையை ஏற்படுத்துவதை நிறுத்தவேண்டும்.'

இப்போது நாம் ஒன்று திரண்ட தமிழ்த் தேசிய சக்தியாக முள்ளிவாய்க்காலுக்கு முன்பிருந்ததுபோல் அணிதிரளவேண்டும்.

பிரபாகரன் என்ற ஒற்றைச்சொல் இல்லாமல் தமிழ்த்Nசிய இனத்தை இந்த நூற்றாண்டில் அணிதிரட்டமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் என்ற ஒற்றைச்சொல் இல்லாமல் தமிழ்த்தேசிய இனத்தை இந்த நூற்றாண்டில் அணிதிரட்டமுடியுமா?

அதைத்தானே அவர்கள் செய்கின்றார்கள்

அவர்களது செயல்களுக்கு துணைநிற்போம்

  • கருத்துக்கள உறவுகள்

சரி.. நாடு கடந்த அரசு வேண்டாம் என்றால் என்ன தீர்வு வைத்திருக்கின்றீர்கள் சொல்லுங்கள்...

தூயவன் பார்த்தீங்களா.இப்படிக் கதைப்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது.

இந்த முரண்எங்கு ஆரம்பிக்கிறது என்றுபாருங்கள்.மே 19ல் இருந்து தலைவர் களத்தில் இல்லை.(இறந்துவிட்டார் என்றும் களத்தைவிட்டு வெளியேறிவிட்டார் என்றும் எடுப்பது அவரவர் விருப்பு).இது நடந்து ஓரிருநாட்களுக்குள் தலைவரின் மீதான வன்மமும் வசையும் வழுதியை வைத்து சிலரால் தொடங்கப்படுகிறது.ஏதொ அரசியல் செய்யவில்லை என்றும் அதைவடிவாக செய்திருந்தால் இன்னும் ஓரிரு நாட்கள் அதிகமாக முள்ளிவாய்க்காலில் நிற்கவிட்டிருப்பார்கள் என்பதுமாதிரியான கதைகள்(!) புனையப்பட்டு இந்த தோல்விக்கு புலிகள் மட்டுமே ஒற்றைக் காரணம் என்று நிறுவியவர்களால் வைக்கப்பட்ட வடிவம் நா.க.அரசு என்பதால் அதை அதன் தொடக்கமே முடிவாக்கிவிட்டது.

இந்த பாரிய இனஅழிப்புக்கு துணைநின்ற சர்வதேசசக்திகளை விமர்சிக்க வக்கில்லாமல் புலிகளை மட்டுமே விமர்சிப்பவர்களால் உருவாக்கப்படும் எத்தகைய முயற்சியும் மறுபரிசீலனைக்குகூட தேவையற்றது.எதிர்க்கவேண்டியது.

இந்த இனஅழிப்பை முன்னின்றுசெய்வித்த இந்தியாவே எங்களின் விடுதலையை எடுத்துத்தரும் என்று நம்புவர்களால் (பார்க்க கே.பியின் இந்தியடுடே பேட்டி) உருவாக்கப்படும் எதுவும் நிராகரிக்கப்படக்கூடியது.

தமிழீழவிடுதலைக்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கும் நிலையில் தமிழீழவிடுதலை ஒன்றே தீர்வு.

எல்லாம் அவரவர் நம்பிக்கை,அதற்காக தான் சொல்வது தான் சரியென அடம் பிடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

"... தலைவர் பிழை விடுகிறார் எண்று இண்று கண்டு பிடித்தவர்கள் அண்று ஏன் கண்டு பிடிக்க முடியவில்லை எண்று கேட்டால், அதை கண்டு பிடித்து விமர்சனம் செய்பவர்களுக்கு தூரநோக்கு கிடையாது என்பதும் தெளிவும் கிடையாது..." தயா.

யார் சொன்ன‌து இன்று க‌ண்டு பிடித்தது என்று. இதைத்தான் காலம் காலமாக அரசியல் தெரிந்தவர்கள் சொல்லிக் கொண்டும்,எழுதிக்கொண்டும் இருக்கின்றார்கள். "கெடு குடி சொல் கேளாது‌" என்ப‌த‌ற்கு உதார‌ண‌மாக‌ ந‌ட‌ந்தார்க‌ள்.நீங்க‌ள் வாசிக்க‌வில்லை என்ப‌த‌ற்காக‌ ஒருவ‌ரும் சொல்ல‌வில்லை என‌ சொல்லாதீர்க‌ள்.

சிங்க‌ள‌வ‌ன் செய்யும் அநியாய‌த்திற்கு புலிக‌ள் செய்வ‌து ச‌ரி என‌ நினைத்‌தார்க‌ளே ஒழிய, ஒரு அர‌சிய‌ல் இயக்கமாக தமிழனே புலிகளைப் பார்க்கவில்லை. கனடாவில் 10,12 வருடங்களுக்கு முன் வெளிவந்த "தாயகம்" எனும் பத்திரிகையை பார்த்தால் விளங்கும்.இப்பவும் இடைகிடை இணைய பத்திரிகையாக வந்துகொண்டிருக்கின்றது.

அப்படி எழுதியவர்கள் சொன்னவர்கள் எல்லாம் எந்த தளத்தில் இருந்து சொன்னார்கள்... அவர்களின் அடிப்படை என்னவாக இருந்தது என்பது எங்களுக்கு தெரியாது எண்றா நினைக்கிறீர்கள்...???

குடுகுடுப்பை காறனும் தான் நிறைய சொல்வான்... சொன்னவனின் தகுதி என்ன என்பதுதான் மிக முக்கியம்.... சொன்னவர்கள் தமிழ்மக்களில் அக்கறை கொண்டு என்ன செய்தார்கள்... ஒரு துரும்பை கூட தமிழர்களுக்காக நகர்த்தி இருக்கிறார்களா...??? இல்லை சிங்களவனின் சிறையில் ஒருநாள் வாடி இருக்கிறார்களா...??

ஆனால் புலிகள் இல்லாது வெளியில் இருந்து செய்தவர்கள் சொன்னவர்கள் யாரும் ( சிவராம் அண்ணா, குமார் பொன்னம்பலம் போண்றவர்கள்) இண்று உயிருடன் இல்லை... அவர்களின் விமர்சனங்களை தமிழ் மக்களோ புலிகளோ ஏற்று கொள்ளாமலும் இருக்கவில்லை... ஆனால் புலிகளின் ஜால்றாக்கள் எனும் பெயரில் அவர்களி படு கொலைகளுக்காக நீங்கள் யார் கவலைப்பட்டீர்கள்...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிறுத்த உலகமெல்லாம் திரண்ட தமிழர்கள், தம்மால் படுகொலைகளை நிறுத்த முடியாமல் போன இயலாமையை உணர்ந்துள்ளனர். இதனால்தான் படுமோசமான நிலையில் தமிழினம் உள்ளபோதும் தங்களால் எதுவும் செய்யமுடியாது என்ற விரக்தியினால் அல்லது தங்கள் போராட்டங்களால் எதுவித நன்மையும் ஏற்படப் போவதில்லை என்ற நம்பிக்கையீனத்தினால் பெருமளவு மக்கள் வீதிகளில் இறங்குவதில்லை.

மக்களை ஒன்றுதிரட்ட ஒரே கோஷத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைக்கவேண்டும். ஆனால் அவர்கள் தாமும் குழம்பி, மக்களையும் குழப்பி, தாங்களும் ஒன்றுபடாமல், மக்களையும் ஒன்றுபடுத்தாமல் காலத்தை விரயப்படுத்துகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்றை மட்டும் தெளிவாக சொல்ல முடியும்... செயலில் இறங்கி இருக்கும் பலருக்கு தலைமை தாங்கும் எண்ணம் இல்லை.. தலைமை தாங்கும் எண்ணம் இருந்தோர் போட்டுத்தள்ளப்பட்டார்கள் அல்லது விரட்டியடிக்கப்பட்டார்கள் என்றும் கூறலாம்!

தலைமை தாங்க வெளிக்கிட்டவர்கள் மக்களிடம் கொள்ளையடித்ததை சுவிஸ் வங்கியில் போட்டதும், மாலைதீவை ()கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தது போல் கண்டு பிடித்ததும், இனவெறி அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களையும் புலிகளையும் காட்டி கொடுத்தது, சிறுமிகளை கற்பழித்தது போன்ற நல்ல வேலைகளை செய்துள்ளார்கள் என்பதையும் இத்தால் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

உண்மையைச் சொல்லப் போனால் ஆட்கள் பற்றாக்குறையால் எதுவுமே செய்ய முடியாத நிலைமையில் தான் அமைப்புக்கள் இருக்கின்றன... எத்தனைபேர் இதில் சுயமாக ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகின்றீர்கள்... மற்றவர்கள் போகின்றார்கள் இல்லையே என்று திட்டுகின்றவர்கள், தங்களின் பங்களிப்பு என்ன என்று சிந்திப்பதும் நன்று... ஏதோ பணம் கொடுத்தோம், ஆர்ப்பாட்டங்களுக்குப் போனோம், அத்தோடு சரி என்ற நிலைமையில் தான் நிறையப் பேர்கள்...

நாம் போராட்டத்தில் தோற்று விட்டோம் என்பது உண்மை தான். அதுவும் படுபயங்கரமான விதத்தில், பல்லாயிரம் உறவுகளை இழந்து... ஆனால் அந்தத் தோல்விகளுக்கூடாக நாம் பெற்ற வலிகள், வேதனைகள் என்பன எம் எண்ணத்தை முடக்கி விடக்கூடாது.

அவன் காசு அடிக்கின்றான், இவன் இப்படிப் புடுங்குகின்றான் என்ற கதைகளை விடுங்கள். நீங்கள் நேரில் அதைப் பார்த்தீர்களா என்ன? இவ்வறானா கதைகள் எங்களைப் பலவீனப்படுத்தும், செயற்பாடே.. சரியோ பிழையோ ஏதோ அமைப்பில் இணையுங்கள்.. தோள் கொடுங்கள்.. ஒரு ஆள், பல அமைப்புக்களிலும், பல பொறுப்புக்களிலும் சுமக்கின்ற வலியைக் கொடுக்காதீர்கள். இளையோர் என்றால், உங்களின் பிள்ளைகளை உறவினரின் பிள்ளைகளை இணைத்து விடுங்கள்.. கிளப்புக்களில் போய் ஆடுகின்ற மனநிலையில் இருந்து அவர்கள் விடுதலையாகட்டும்..

உண்மை தான் ஆனாலும் எல்லோரும் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள்

ஒரு லட்சம் மக்கள் திரண்ட ஆர்பாட்டங்கள் எல்லாம் ஒரு ஜம்பது பேர்களின் இரவு பகலான கடின உழைப்பில் தான் நடந்த்தன என்பதை ஒருவரும் அறியக் கூட முயற்சிப்பதில்லை

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பிலிருந்து பதாகைகள் ஒட்டுவது முதல் இதே 50 பேர் தான்

இன்னும் தொடர்ந்து இவர்களும் இவர்களும் நண்பர் வட்டமும் தான் இன்னும் வீதிகளில் சில நூறுக்களாக இருக்கின்றன

உங்கள் ஊர்ச் சங்கங்களுடன் சேர்ந்து இவர்களை பல படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிறுத்த உலகமெல்லாம் திரண்ட தமிழர்கள், தம்மால் படுகொலைகளை நிறுத்த முடியாமல் போன இயலாமையை உணர்ந்துள்ளனர். இதனால்தான் படுமோசமான நிலையில் தமிழினம் உள்ளபோதும் தங்களால் எதுவும் செய்யமுடியாது என்ற விரக்தியினால் அல்லது தங்கள் போராட்டங்களால் எதுவித நன்மையும் ஏற்படப் போவதில்லை என்ற நம்பிக்கையீனத்தினால் பெருமளவு மக்கள் வீதிகளில் இறங்குவதில்லை.

மக்களை ஒன்றுதிரட்ட ஒரே கோஷத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைக்கவேண்டும். ஆனால் அவர்கள் தாமும் குழம்பி, மக்களையும் குழப்பி, தாங்களும் ஒன்றுபடாமல், மக்களையும் ஒன்றுபடுத்தாமல் காலத்தை விரயப்படுத்துகின்றனர்.

மக்களின் பிரதிநிதிகள் என்று புலத்தில் சொல்லும்படியாக யாருமில்லை.இன்றைய சூழ்நிலையில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பில் தான் இருக்கின்றது. சரியோ, பிழையோ கனடாவைப் பொறுத்தவரை நடந்த ஆர்ப்பாட்டங்கள் சாதாரண பொதுமக்களின் சுய முடிவால் தான் நடந்தன. வீதியை மறித்து, செய்தது முதல், பொதுவாக நடந்தவை எல்லாமே, ஒரு சில மனிதர்கள் சுயமாகச் செய்ததைப் பின்பற்றி மக்கள் தொடர்ந்து சென்றது தான்.

பூனைக்கு மணி கட்டுவது யார் என்பது தான் இப்போதைய பிரச்சனை.

மக்கள் பிரதிநிதிகளிடம் அவ்வாறன செய்கை இல்லை எனில், உங்களின் ஆலோசனைகளையும் பங்களிப்பையும் ஒவ்வொரும் வழங்குங்கள். ஏதோ சம்பந்தமில்லாதவர்கள் போல நடந்து கொள்ளாதீர்கள். இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொருவரின் பெங்களிப்பில் தான் மாற்றம் இருக்கின்றது..

மக்கள் "பீல்" பண்ணுகின்றார்கள் என்று ஏமாற்றுவதில் எனக்கு எவ்வித உடன்பாடுமில்லை. தடுக்கமுடியவில்லை என்ற குற்ற உணர்வு இருக்கலாம். மற்றும்படி கோடை விடுமுறையில் கடற்கரைக்கும், விடுமுறையை பொதுவாக எல்லோரும் கழிக்கத் தான் செய்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிறுத்த உலகமெல்லாம் திரண்ட தமிழர்கள்இ தம்மால் படுகொலைகளை நிறுத்த முடியாமல் போன இயலாமையை உணர்ந்துள்ளனர். இதனால்தான் படுமோசமான நிலையில் தமிழினம் உள்ளபோதும் தங்களால் எதுவும் செய்யமுடியாது என்ற விரக்தியினால் அல்லது தங்கள் போராட்டங்களால் எதுவித நன்மையும் ஏற்படப் போவதில்லை என்ற நம்பிக்கையீனத்தினால் பெருமளவு மக்கள் வீதிகளில் இறங்குவதில்லை.

மக்களை ஒன்றுதிரட்ட ஒரே கோஷத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைக்கவேண்டும். ஆனால் அவர்கள் தாமும் குழம்பிஇ மக்களையும் குழப்பிஇ தாங்களும் ஒன்றுபடாமல்இ மக்களையும் ஒன்றுபடுத்தாமல் காலத்தை விரயப்படுத்துகின்றனர்.

மேற்கூறிய கருத்தினில் நானும் உடன்படுகிறேன், அதேவேளை இப்படுகொலைகளை சர்வதேசநாடுகளும் இந்திய நாசகாரியுடன் சேர்ந்தேதான் நிகழ்தியது. அதனை யாரும் மறுக்க முடியாது. யாராவது தமிழர் பிரதிநிதிகள் எனக்கூறுபவர்கள் இத்தேசங்களை நோக்கி நீங்கள்தான் இப்படுகொலைகளின் காரணகர்த்தா எனறோ, அன்றேல் ஒட்டுமொத்த தமிழசமூகமோ கூறுவதற்க்கான சந்தர்ப்பத்தை அவர்கட்கு ஏற்படுத்திக் கொடுக்குமாவிருந்தாலே தமிழர்கள் மீண்டும் ஒன்றுசேரும் சந்தர்ப்பம் வரும். நான் அறிந்த பலர் கேட்கும் கேள்வி யாரிடம் போய் முறையிடுவது? யாரெல்லாம் கொலை செய்தார்களோ அன்றேல் இனஅழிப்பினிற்கு உடந்தையாகவிருந்தார்களோ அவர்களிடம் போய் திரும்பவும் நீதி கேட்பதா என. இதுக்குப்பதிலாக நாம் வாழ்கின்ற நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு பீமுட்டியடிக்கக் கூப்படுங்கோ நாம் வருகிறோம் எனக்கூட ஒருசிலர் கூறினார்கள்.

தமிழனுக்கு ஆதரவாக தமிழனே இல்லாத நிலை மாற முதலில் இதயசுத்தி வேண்டும்....

போராட்டம் என்றால் களபோராட்டம் மட்டுமல்ல வீதி போராட்டமும்தான் என்று இன்றும் வெள்ளை மாளிகை முன்னும் 360 யுனிவர்சிட்டி அவன்யுவிலும் நடக்கும் போராட்டங்கள் ஏளனமாக பார்க்கும் யாரையும் புறந்தள்ளும் போராட்டமே!

விடுதலை போராட்ட காலத்தில் இதுவரை (மே 19 வரை)தமிழனாக மௌனியாக நின்ற சில அறிவுக்கொழுந்துகள், புலிகளே தோல்விக்கு காரணம் என ஓலமிடுகிறார்கள்.

துரோகிகள்....உங்களைச் சொல்லவில்லை...இந்த உலகத்தை சொல்கிறேன், மனித இனத்துரோகிகள் ஆட்சி செய்யும் நாடுகளிலிருந்து உதவிகள் வந்ததையும், காசுக்காக எதையும் செய்யத் துணிந்த நன்றி கெட்ட கூட்டம் செய்த அட்டூழியங்கள் தான் தமிழனை தோல்வி அடைய செய்தது....மகிந்தவின் ராச தந்திரமல்ல!

புதிதாக உங்களுக்கு விளக்கப்படுத்த எதுவும் தேவையில்லை...ஒன்றுமட்டும் நிச்சயம் குலைக்கிற நாய் வேட்டைக்கு உதவாது அது போல அறிவுக்கொழுந்துகளே, யார் என்ன வேண்டுமென்றாலும் எழுதுங்க ஒரு நாள் வரும்...., அந்த நாள் தவறுகளுக்கு வெட்க்கி குனியும் நாளாகவே இருக்கும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.