Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர் ராம் கைது

Featured Replies

சின்னப்பாம்பெண்டாலும் பெரிய தடியால் அடிக்கோனும் எண்டு இருக்கேக்க..

பெரியபாம்புடன் நட்பாக இருக்கலாம் என்னுபோதே.........

எமது எதிர்காலம் போய்விட்டது.

தமிழர்களின் எதிர்காலத்தைப்பற்றி நினைக்கவே பயமாக இருக்கிறது!

வேலவன் பார்த்தீர்களா கருத்து எழுதியுள்ள ஒரு சிலரின் குள்ளத்தனத்தை

தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்கள் பற்றிய சிறு உதாரணம் மட்டுமே இது

பணத்துக்காகவும் தமது சுகபோக வாழ்வுக்காகவும் இது போல பல பேர்

தமிழ்த்தேசியத்தை அழித்துக் கொண்டும் காட்டிக் கொடுத்துக்கொண்டுமிருக்கிறார்கள்

நீங்கள் சொல்வதுபோல தமிழர்களின் எதிர்காலத்தை நினைக்கப பயமாகத்தான் இருக்கிறது

தமிழ்தேசியம் இன்றும் அதற்குப்பிறகு இன்னும் நூறுஆண்டுகளுக்கும் பிரபாகரன் என்னும்

பெயரின் வீச்சுடன்மட்டுமே வாழும்! போராடும்!!

இதை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கவைக்கமுடியும் என்ற நினைப்பிலும் நப்பாசையிலும் இப்போது

பலர் பலவிதமான அணிகளின் பெயர்களுக்குள் இருந்து முயன்றுவருகிறார்கள்.

ஏதொ இனித்தான் தாங்கள் ராசதந்திரமுறைகளில் மாற்றுமுறைகளில் செய்யப்போவதாக சொல்லுகிறார்கள்.

மே19க்கு முன்னர் ஏன் இவர்களால் இதே ராசதந்திரமுறைகளில் முயன்று அவலங்களை தடுக்கமுடியவில்லை.

ராசதந்திரமுறைகளில் இவர்கள் முயற்சிக்க தடையாக யார் இருந்தார்கள்? வன்னி மக்களா?

நான் இந்த நா.க.அரச திட்டத்தை எதிர்க்கவில்லை. ***

Edited by இளைஞன்
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பாம்பெண்டாலும் பெரிய தடியால் அடிக்கோனும்

இந்த வசனத்தை எங்கேயோ கேட்டமாதிரியிருக்கு பனங்காய் :)

ஆனால் இந்தத் திட்டமானது 'பிரபாகரன் சரியாக அரசியல் செய்யவில்லை' என்ற கோசத்துடன் முன்னெடுக்கப்படும் கேவலமான நன்றிகொன்ற தனத்தை எப்போதும எதிர்ப்பேன்.

இவை எப்ப நீங்கள் சொல்றமாதிரிச் சொன்னவை ?

தயா,ராம் எப்போது சிங்களராணுவத்துக்கு எதிராக தாக்குதல்களை நடாத்தினார்??மே19 க்கு பிறகா முன்பா??

ஏன் கேட்கிறேன் என்றால் ராம் அவர்களின் கையெழுத்துடனேயே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனித்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டு

ஒரு அறிவிப்பு முன்னர் வந்தது.

அப்படி மௌனித்தாக சொன்ன ராம் தாக்குதல்களை நடாத்திஇருப்பார் என்பது கேள்வியே???

ஆற்றையேன் கனவிலை கடவுள் அருள் குடுத்தமாதிரி தளபதி ராமும் கனவில தாக்குதல் நடத்தினாரோ தெரியவில்லை.

***

Edited by இளைஞன்
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த தமிழீழ அரசென்பது தேசியத் தலைவர் அவர்களின் தூரநோக்கற்ற சிந்தனையைக் குற்றம்சாற்றிக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்று என்பதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எமது அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு தற்போதைக்கு ஈழத்தில் ராணுவ ரீதியிலான விடுதலைப் போரென்பது சாத்தியமாகப்படாதபோது ராஜதந்திர ரீதியில் அதை முன்னெடுப்பதற்கான அவசியத் தேவை ஒன்றிருக்கிறது. அதைத்தான் புலத்திலுள்ள பல அமைப்புகள் ஒன்றாகச் சேர்ந்து செய்துவருகின்றன. இவ்வாறான நடவடிக்கைகளை தேசியத்தை ஆதரிப்பவர்களே எதிர்ப்பதென்பது துரதிஷ்ட்டம். தேசியத்தலைவர் அவர்களின் இலட்சியத்துக்கும் கொள்கைக்கும் எதிராகவே இவ்வாறான அரசியல் செயல்ப்பாடுகள் பயணிக்கின்றன என்று எண்ண நினைப்பது உண்மையிலேயே வருந்தத் தக்கது.

என்னைப்பொறுத்தவரையில் தேசியத் தலைவர் எதைச் செய்ய விரும்பியிருந்தாரோ அதைத்தான் இன்னொரு வழியில் புலம்பெயர் அமைப்புகள் செய்ய நினைக்கின்றன என்று எண்ணுகிறேன்.

சிலர் இங்கு குறிப்பிட்டது போல, புலிகளியக்கம் ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது அதற்குச் சமாந்தரமாகவும் , அதற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் புலத்தில் தேவையான அர்சியல் செயல்ப்பாடுகள் நடைபெறவில்லை என்பதை ஓரளவிற்கு ஏற்றுக்கொள்கிறேன். இதற்குப் பல காரணங்கள் உண்டு.முதலாவது புலிகளியாக்கத்தின் ராணுவ ரீதியிலான பலம் பற்றி எம் அனைவருக்குமிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை. அதாவது ஒரு அரசிய அழுத்தம் ஒன்றின் மூலம் அல்லாது ராணுவ ரீதியிலான வெற்றி ஒன்றின் மூலம் தனி ஈழம் அமைத்து விட முடியும் என்று நாம் வைத்திருந்த நம்பிக்கை. இதற்குப் பதில் கூற வேன்டியவர்கள் புலம் பெயர் நாட்டிலுள்ள நாமேயன்றி தேசியத் தலைவரோ போராளிகளோ அல்ல. ஏனென்றால் போரின் இறுதிக்கட்டத்திலும் கூட, அதன் தீவிரம் உணராது நாம் காட்டிய அசமந்தப் போக்கு.

ரெண்டாவ்து, ராணூவ ரீதியான முயற்சி என்பது சாத்தியமாகப்படாத போது அதற்கு மாற்றாக எதையுமே நாம் ஆயத்தப்படுத்தியும், எதிர்பார்த்தும் இருக்கவில்லை என்பது.

ஆனாலும், சிறிது காலம் தாழ்த்தியாவது புலம் பெயர் தமிழரின் அரசியல் எழுச்சியென்பது வளர்ந்து வருகிறதென்பதுதான் உண்மை. இவ்வாறான நடவடிக்கைகளில் ஒன்றுதான் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான அறை கூவலும், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீளுருவாக்கமும் என்று நான் நினைக்கிறேன்.

பலர் இவ்வாறான நடவடிக்கைகள் தேவையற்றவை, வீண் விரயமானவை என்கிற போக்கை எடுக்க நினைப்பது உண்மையிலேயே அறியாமை என்றுதான் கூறவேண்டும். இன்னும் சிலர், முகாம் மக்களின் அவலங்களைத் தீர்க்க முன்னர் இவை போன்ற அரசியல் நடவடிக்கைகள் தேவைதானா, அல்லது இவ்வாறான அரசியல் ரீதியிலான அழுத்தங்கள் அம்முகாம் மக்களின் அவலங்களை அதிகமாக்கிவிடும் என்று வாதிடுவதையும் காண முடிகிறது.

உண்மையிலேயே, முகாம் மக்களின் அவலங்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பது சிங்களப் பயங்கரவாதம் தான். ஏனென்றால், முகாம் மக்களின் அவலத்திலும் அவ்வாறான அவலங்களைத் தீர்ப்பதில் தான் கண்ணும் கருத்துமாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதன் மூலம், மொத்த தமிழர் அவலங்களையும், அபிலாஷைகளையும் உலகின் கவனத்திலிருந்து மறைத்து முகாம் மக்களின் பிரச்சினை தீர்ந்தால் முழுப் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்கிற மாயையை ஏற்படுத்த விரும்புகிறது. ஆகவே முகாம் மக்களின் அவலங்கள் உடனடியாகத் தீர்க்கப்பட்டு அதற்குச் சமாந்தரமாக அரசியல், அழுத்தங்களும் தீவிரமாக்கப்பட வேன்டுமென்பதே தேவையானது.

இவை எப்ப நீங்கள் சொல்றமாதிரிச் சொன்னவை ?
அதுக்கு ஒரு நீண்ட பதில் எழுதலாம்.ஆனாலும் சாந்திஅக்கா,இப்ப கடைசியாக கனடாவில் நா.க.அரசு பத்திரிகை வெளியீட்டுவிழா(?)வில் கூட

பேசிய எல்லாரும் புதிதாக கண்டுபிடித்தது என்னவென்றால் 'பிரபாகரன் அரசியல் செய்யவில்லை' என்பதுதான்.

அப்பிடி என்றால் ஏன் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வழிநடாத்தப்பட்டு வந்த விடுதலைப்புலிகளின் தீர்வாக நா.க.அரசை இவர்கள் சொல்கிறார்கள்??

மக்கள் தங்களை ஏற்பார்கள் என்று நம்பினால் 'இது எங்களின் திட்டம்' 'இது ...... ஐயாவின் திட்டம் என்று சொல்லி இவர்கள் மக்கள்முன் வரட்டும்

பார்க்கலாம்!!

இப்பவரும் ஐந்து,பத்து பேரும்கூட வரமாட்டான்!

Edited by archunan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருச்சுனன் குறி வைக்கும் போது அவனின் கண்களில் இலக்கைத் தவிர வேறு ஏதும் தெரியாதாம். இவரும் உண்மையிலேய ஒரு அருச்சுனன் தான். எப்போதும் குறி நா.க.அ வில் தான். :)

என்னைப்பொறுத்தவரையில் தேசியத் தலைவர் எதைச் செய்ய விரும்பியிருந்தாரோ அதைத்தான் இன்னொரு வழியில் புலம்பெயர் அமைப்புகள் செய்ய நினைக்கின்றன என்று எண்ணுகிறேன்.

கிட்டு அண்ணைக்குப் பின் புலம் பெயர் தேசத்து அமைப்புகளிள், தேசியத் தலைமைக்கு விசுவாசமில்லாதவர்கள் பலர் பெரும் எண்ணிக்கையில் செயற்பாட்டாளர்களாக உள்வாங்கப் பட்டு முடிவெடுக்கும் அதிகாரத்திற்கும் வந்து விட்டார்கள். சமாதனக்காலத்தில், புலம் பெயர் அமைப்புகளில் இருந்த சிக்கல்களின் கதைகளை கேட்பதிலும், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முயற்சித்தே, வன்னியில் இருந்த பொறுப்பாளர்களின் சமாதனக்காலம் கரைந்துவிட்டது.

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனின் நிலைபாடே எனதும்...! தனிபட்ட குரோதங்கள் குழுமங்களை புரியாமை போன்ற தவறுகளால் பலர் நஞ்சுகளை கக்குவதற்கு யாழ்களம் ஒரு சிறந்த இடமாக இப்போது இருக்கின்றது. இதில் நிர்வாகம் உரிய கடமையை செய்வது நன்று. கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் பகிhந்துகொள்ளலாம்......... ஆனால் ஆதாரமற்ற காழ்புணர்வுகளால் சேறாவது அதைகாவும் யாழ்களமுமே என்பதை புரிந்தால் நன்று!

தூயவனின் நிலைபாடே எனதும்...!

கவனமாக நகரவேண்டியதருணத்தை புரிந்திருந்தும்

விசத்தை விதைப்பவர்களை ஏற்கமுடியாது

சின்னப்பாம்பெண்டாலும் பெரிய தடியால் அடிக்கோனும் எண்டு இருக்கேக்க..

பெரியபாம்புடன் நட்பாக இருக்கலாம் என்னுபோதே.........

எமது எதிர்காலம் போய்விட்டது.

தமிழனின் தலைவிதியை நிர்ணயித்த விதி இது

தடியைக்கொடுத்து அடி வாங்கியதுபோல்......

ஆனால் உலகமே ஒன்று திரண்டுவந்தபோது.....

அது பெரிய பாம்பு என்று எழுதுவது சுலபம்

ஆனால்........????

கிட்டு அண்ணைக்குப் பின் புலம் பெயர் தேசத்து அமைப்புகளிள், தேசியத் தலைமைக்கு விசுவாசமில்லாதவர்கள் பலர் பெரும் எண்ணிக்கையில் செயற்பாட்டாளர்களாக உள்வாங்கப் பட்டு முடிவெடுக்கும் அதிகாரத்திற்கும் வந்து விட்டார்கள். சமாதனக்காலத்தில், புலம் பெயர் அமைப்புகளில் இருந்த சிக்கல்களின் கதைகளை கேட்பதிலும், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முயற்சித்தே, வன்னியில் இருந்த பொறுப்பாளர்களின் சமாதனக்காலம் கரைந்துவிட்டது.

***

நீங்கள் குளப்பமாகவே எழுதியுள்ளீர்கள்

இதில் எதையும் நீங்கள் ஆதரிக்கவில்லை

முன்பு பிழை நடந்திருந்தால்

தற்போது அவர்களை அரவணைப்பதையும் நீங்கள் ஏற்கவில்லை

கிட்டு அண்ணையை நாம் இழந்ததாலோ

பாலா அண்ணையை நாம் இழந்ததாலோ

ஏற்பட்ட வெற்றிடங்கள் நிரப்பப்படவும் நீங்கள் தயாராக இல்லை

அப்படியாயின் தங்கள் முடிவென்ன????

எல்லாவற்றையும் சிங்களம் பார்த்துக்கொள்ளும் என்பதா???

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

இடங்கள் நிரப்பப்படவேண்டும்

என்பதே எனது கருத்து

மற்றது கிட்டண்ணா வருவதை இந்தியா அறிந்து கொள்வதற்கு நாம் தகவல் கொடுத்தால் முடியும் என்பது தங்களது ..... தனத்தைத்தான் காட்டுகிறது???

அவர் பலருடனும் பேசி ஒரு அறிக்கையுடன் சென்றவர் என்பதை தாங்கள் அறிந்திருந்தால்.....

எத்தனை ஆயிரம் பேருடன் பேசியிருப்பார் என்பதை ஊகிக்கக்கூட முயற்சி செய்யாத தங்களுக்கு தமிழனின் பிரச்சினைக்கு முடிவை கோருவது எவ்வளவு முட்டாள்தனம் என்பது கருத்து

இடங்கள் நிரப்பப்படவேண்டும்

என்பதே எனது கருத்து

கிட்டண்ணா மரணித்து 16வருசத்துக்கு பிறகுதன்னும் அந்தஇடம் நிரப்பப்படவேண்டும் என்ற உங்களின் ஆதங்கம் நல்லது.

மற்றது கிட்டண்ணா வருவதை இந்தியா அறிந்து கொள்வதற்கு நாம் தகவல் கொடுத்தால் முடியும் என்பது தங்களது ..... தனத்தைத்தான் காட்டுகிறது
???

தகவல் ஒன்று சரியாகபோகாமல் சர்வதேசகடலில் நான்குநாட்கள் இந்தியகடற்படைகப்பல 'விவேக்' நின்றிருக்காது.இதை விளங்கிக் கொள்வதற்கு கப்பல்பாதை

பயணதூரம்,கப்பலின் பதிவு என்று நீண்டபுரிதல் வேண்டும்.கிட்டண்ணாவின் கப்பல் மறிக்கப்பட்ட விசாகபட்டிணத்துக்கு 200மைல்களுக்கு அப்பால் கடலில்

ஒருநாளுக்கு 500க்கும் மேற்பட்ட கப்பல்கள் போயும் வந்தும்கொண்டிருக்கும்.இதற்குள் கிட்டண்ணாவின் கப்பலை கண்டறியவும் பிடிக்கவும் கட்டாயம் ஒரு

தகவல் போயிருக்கு!

அவர் பலருடனும் பேசி ஒரு அறிக்கையுடன் சென்றவர் என்பதை தாங்கள் அறிந்திருந்தால்.....
கிட்டண்ணா ஆயிரம்பேருடன் கதைத்திருக்கலாம்.ஆனால் யாருக்கும் தான்போகும் திகதியையும் கப்பலின்பெயரையும் சொல்லமாட்டார்.இதற்கு கிட்டண்ணாவின் நீண்ட போராட்டவரலாற்றையும் அதில் அவரின் இரகசியம்காக்கும் தன்மையையும் விளங்கினால் தெளியும்.

அவர்தான் கிடைத்தாரா 'குவேக்கா' சமாதானதிட்ட கடதாசிகளை கொண்டுபோக??யாழ் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அந்தநேரம்fax 'மூலம் அனுப்பாமல் ஒரு மூத்ததளபதிதான் கிடைத்தாரா?

Edited by archunan

  • கருத்துக்கள உறவுகள்

இதை எல்லாம் ஆராய்ந்து தலையைப்போட்டு பிச்சுக்கொள்வதைவிட

இலகுவாக எம்மவன் எவனுடைய தலையிலாவது போட்டு மூடிவிடுவது சுலபம்தான்

ஆனால் போராட்டம் தொடரப்படவேண்டும் என்றல்லவா சிங்களம் தொடர்கிறது அழிவை.....

இடங்கள் நிரப்பப்படவேண்டும்

என்பதே எனது கருத்து

வரலாறு வெற்றிடங்களை நிரப்பிச்செல்லும் என்ற சொல்லாடன் ஒன்று இருக்கின்றது, எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல போராளிகளின் வெற்றிடங்கள் நிரப்ப முடியாதவைகளாகவே இருந்து வந்துள்ளன.

புலம் பெயர்ந்து வந்தவர்களிடம் இருந்து, கிட்டு அண்ணை போன்றவர்களின் வெற்றிடங்களை நிரப்பலாம் என்ற சிலரின் ஆசைகள் தான் எமது விடுதலைப் போராட்டத்தை நாசமாக்கி நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.

Edited by kalaivani

ஆனால் போராட்டம் தொடரப்படவேண்டும் என்றல்லவா சிங்களம் தொடர்கிறது அழிவை
போராட்டம் தேவையில்லை என்றால் பிறகு ஏன் கிட்டண்ணாவினதும் பாலசிங்கத்தினதும் இடம் நிரப்பப்படவேண்டும் என்கிறீர்கள்??

இந்தியாதான் விடுதலையை எடுத்துதரும் என்றால் பேசாமல் டில்லியில் போய் ஒரு அலுவலகம்திறந்து ராச'தந்திர' நகர்வுகளை செய்யலாம்தானே?

பிறகு ஏன் பிரதிநிதிகள் தேர்தல்,நா.க.அரசு என்று ச்சும்மா சொல்லிக்கொண்டு......!

Edited by archunan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் எதிர்காலத்தைப்பற்றி நினைக்கவே பயமாக இருக்கிறது!

வேலவன், தனிமடலிலிலும் இது பற்றிக் கேட்டிருந்தீர்கள். உண்மையில் மிக வேதனையானது தான். சொல்லப் போனால் எம் விடுடுதலைப் போராட்டம் சந்தித்த சவால்களைத் தலைவர் எவ்வளவு கடினமாகக் கையாண்டிருப்பார் என்பதை நினைக்கும்போது அவர் மீதான மரியாதையும், ஈர்ப்பும் அதிகமாகும். எதிரிகள் என்று அவன் ஒரு பக்கம் இருக்க, தமிழனாக குத்துப்பாடுகள்.

இங்கே சில பேருக்குத் தங்களுடைய பெயரும் லிஸ்ட்டில் வர வேண்டும் என்ற ஆசை. ஏதாவது செய்தாலும், வரலாற்றில் தன்னுடைய பெயரும் இடம் பெற வேண்டும் என்ற வெறி. அதற்காகவும் நாட்டுப்பற்றாளர்கள் போல நடிப்பார்கள். அருச்சுனன் போன்றவர்கள் ரகம் வேறு என்றால், இந்த ரகம் என்னுமொரு மாதிரியானது.

இன்றைய சூழ்நிலையில் தமிழீழத்தில் நடந்த இறுதி அழிவில் இப்படி எல்லாம் நடந்திருக்குமா என்று நம்ப முடியாத அழிவுகள். பலருக்கு என்ன நடந்தது என்ன ஆச்சு என்றே யாருக்கும் தெரியாது. தளபதிகள், அவர்களின் குடும்பங்கள், குழந்தைகள், சாதாரண பொதுமக்கள் பலரைப் பற்றி என்னமும் தெரியாது. சொல்லப் போனால் தலைவரின் மனைவி, பிள்ளைகள் நிலை கூட என்ன ஆச்சு என்று என்றே தெரியாது. பாலச்சந்திரனின் படம் என்று ஏற்கனவே ஒரு படம் வெளியாகி வேதனைப்பட வைத்தது. அது போல மற்றய தளபதிகளின் குடும்பங்களுக்கு ஆனா நிலை தெரியாது. இன்றைய சூழ்நிலையில் சிங்களப் பயங்கரவாத அரசு யாரை வேண்டுமானாலும், அங்கு கொல்லலாம்,. கொன்று கொண்டு தான் இருக்கின்றது.

அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அதுக்கு ஏதாவது செய்யணும் என்று ஒரு நாய்க்கும் கவலை கிடையாது. விட்டால் இங்கு புலத்தில் ஏதாவது பெயர் வாங்கிச் சாகணும் என்ற வக்கிரப்புத்தி. அருச்சுனன், கலைவாணியின் குழப்புகின்ற கருத்துக்கள், சிங்கள பயங்கரவாதத்தின் வெளிப்பாடக குழப்புகின்ற நிலையாகக் கருதினாலும், சில புலத்து வக்கிரப்புத்திக்காரின் அடையாளம் தான் இவை.

இன்றைய சூழ்நிலையில் இவர்கள் மட்டுமல்ல என்னமும் பல பேர் வருவார்கள் பாருங்கள். நாடு கடந்த அரசில் தம்முடைய பெயரும் வரவில்லை என்றதற்காக கேவலமாக எழுதுவார்கள். தங்களை விட்டால் தலைவர் மேல பற்றுக் கொண்டோர் வேறு யாருமில்லை என்று நடிப்பார்கள்.

எனக்குத் தெரியும். பல தமிழ்நாட்டு நண்பர்கள், தலைவர் மீதும், தமிழீழம் மீதும் பற்றுக் கொண்டார்கள் என்று. ஆனால் ஒன்று மட்டும் சொல்லலாம். நாட்டில் உருத்தெரியாமல், தங்களின் உயிரைத் தியாகம் செய்த கரும்புலிகள், மாவீரர்கள்,நாட்டுப்பற்றாளர்கள் ஒரு ரகம் என்றால், மறுபுறம் உருத்தெரிய வேண்டும் என்பதற்காக வேடம் போடும் வேடதாரிகள் மறுபுறம்...

நீங்கள் மாவீரர்களுக்கு மட்டும் தலை வணங்குங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தலைமை ஏற்கப்புறப்பட்டவர்களும், பின் இருந்து காய்நகர்த்தும் முன்னாள் செயற்பாட்டாளர்களுக்கும், தேசிய உணர்வும், தேசிய தலைமைக்கும் விசுவாசமாக இருப்பதற்குரிய குணச்சிறப்பும், தலைமைத்துவப் பண்பும் இருந்திருக்குமேயானால் மே 19 இற்குப்பின் உலகத்திடம் எமக்கான நியாயத்தைக்

இல்லாமல் அனுராதபுரம். கட்டுநாயக்கா போன்ற இடங்களில் தாக்குதல்கள் எப்படி வெற்றிகரமாக நடைபெற்றிருக்கும்?

உலகத்துக்கான தேவை தமிழ் மக்களிடம் இல்லை சிங்களத்திடமே இருந்தது.எனவே சிங்களவர் பக்கம் உலகம் சாய்கிறது.உங்களால் இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல் போன்றவர்களின் அப்பாவிகள் மீதான தாக்குதல்களை எப்படி உலகம் நியாயப்படுத்துகிறதோ அதே பாணியில் சிங்கள அரசும் செயற்படுகிறது. அதாவது அதே அச்சில் செயல்படுகிறது.

தேசிய தலைமைக்கு குணசிறப்பிலாமலோ 30 வருடம் போராட முடிந்தது? எண்ணி பாருங்கள் 100க்கும் குறைவான இந்திய இராணுவத்தின் துணையுடன் ஜே.வி.பியை முறியடிததை.எப்போதுமே உங்களுக்கு ஒப்பிடும் அறிவு இல்லாவிட்டால் இன்றே தொடங்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த தமிழீழ அரசென்பது தேசியத் தலைவர் அவர்களின் தூரநோக்கற்ற சிந்தனையைக் குற்றம்சாற்றிக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்று என்பதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எமது அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு தற்போதைக்கு ஈழத்தில் ராணுவ ரீதியிலான விடுதலைப் போரென்பது சாத்தியமாகப்படாதபோது ராஜதந்திர ரீதியில் அதை முன்னெடுப்பதற்கான அவசியத் தேவை ஒன்றிருக்கிறது. அதைத்தான் புலத்திலுள்ள பல அமைப்புகள் ஒன்றாகச் சேர்ந்து செய்துவருகின்றன. இவ்வாறான நடவடிக்கைகளை தேசியத்தை ஆதரிப்பவர்களே எதிர்ப்பதென்பது துரதிஷ்ட்டம். தேசியத்தலைவர் அவர்களின் இலட்சியத்துக்கும் கொள்கைக்கும் எதிராகவே இவ்வாறான அரசியல் செயல்ப்பாடுகள் பயணிக்கின்றன என்று எண்ண நினைப்பது உண்மையிலேயே வருந்தத் தக்கது.

என்னைப்பொறுத்தவரையில் தேசியத் தலைவர் எதைச் செய்ய விரும்பியிருந்தாரோ அதைத்தான் இன்னொரு வழியில் புலம்பெயர் அமைப்புகள் செய்ய நினைக்கின்றன என்று எண்ணுகிறேன்.

சிலர் இங்கு குறிப்பிட்டது போலஇ புலிகளியக்கம் ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது அதற்குச் சமாந்தரமாகவும் இ அதற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் புலத்தில் தேவையான அர்சியல் செயல்ப்பாடுகள் நடைபெறவில்லை என்பதை ஓரளவிற்கு ஏற்றுக்கொள்கிறேன். இதற்குப் பல காரணங்கள் உண்டு.முதலாவது புலிகளியாக்கத்தின் ராணுவ ரீதியிலான பலம் பற்றி எம் அனைவருக்குமிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை. அதாவது ஒரு அரசிய அழுத்தம் ஒன்றின் மூலம் அல்லாது ராணுவ ரீதியிலான வெற்றி ஒன்றின் மூலம் தனி ஈழம் அமைத்து விட முடியும் என்று நாம் வைத்திருந்த நம்பிக்கை. இதற்குப் பதில் கூற வேன்டியவர்கள் புலம் பெயர் நாட்டிலுள்ள நாமேயன்றி தேசியத் தலைவரோ போராளிகளோ அல்ல. ஏனென்றால் போரின் இறுதிக்கட்டத்திலும் கூடஇ அதன் தீவிரம் உணராது நாம் காட்டிய அசமந்தப் போக்கு.

ரெண்டாவ்துஇ ராணூவ ரீதியான முயற்சி என்பது சாத்தியமாகப்படாத போது அதற்கு மாற்றாக எதையுமே நாம் ஆயத்தப்படுத்தியும்இ எதிர்பார்த்தும் இருக்கவில்லை என்பது.

ஆனாலும்இ சிறிது காலம் தாழ்த்தியாவது புலம் பெயர் தமிழரின் அரசியல் எழுச்சியென்பது வளர்ந்து வருகிறதென்பதுதான் உண்மை. இவ்வாறான நடவடிக்கைகளில் ஒன்றுதான் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான அறை கூவலும்இ வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீளுருவாக்கமும் என்று நான் நினைக்கிறேன்.

பலர் இவ்வாறான நடவடிக்கைகள் தேவையற்றவைஇ வீண் விரயமானவை என்கிற போக்கை எடுக்க நினைப்பது உண்மையிலேயே அறியாமை என்றுதான் கூறவேண்டும். இன்னும் சிலர்இ முகாம் மக்களின் அவலங்களைத் தீர்க்க முன்னர் இவை போன்ற அரசியல் நடவடிக்கைகள் தேவைதானாஇ அல்லது இவ்வாறான அரசியல் ரீதியிலான அழுத்தங்கள் அம்முகாம் மக்களின் அவலங்களை அதிகமாக்கிவிடும் என்று வாதிடுவதையும் காண முடிகிறது.

உண்மையிலேயேஇ முகாம் மக்களின் அவலங்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பது சிங்களப் பயங்கரவாதம் தான். ஏனென்றால்இ முகாம் மக்களின் அவலத்திலும் அவ்வாறான அவலங்களைத் தீர்ப்பதில் தான் கண்ணும் கருத்துமாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதன் மூலம்இ மொத்த தமிழர் அவலங்களையும்இ அபிலாஷைகளையும் உலகின் கவனத்திலிருந்து மறைத்து முகாம் மக்களின் பிரச்சினை தீர்ந்தால் முழுப் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்கிற மாயையை ஏற்படுத்த விரும்புகிறது. ஆகவே முகாம் மக்களின் அவலங்கள் உடனடியாகத் தீர்க்கப்பட்டு அதற்குச் சமாந்தரமாக அரசியல்இ அழுத்தங்களும் தீவிரமாக்கப்பட வேன்டுமென்பதே தேவையானது.

இதுவே எனது கருத்துமாகும்.

ஆனால் ''உலகமே'' ஒன்று திரண்டுவந்தபோது.....

யாருக்கு விளங்குது?

ஒரு கேள்விப்பட்ட கதை.

உண்மை பொய் தெரியா.

சைனாவின் கை புரியாமல்/புரிந்து கொள்வதற்க்கு. மேற்குலகால் (இந்தியாவால்) வழங்கப்பட்ட அட்வைஸின் பேரில் (ஒரு குண்டுக்கு ஒரு ஆர்மி டக்டிக்..) போரில் இறங்கிய சிரி லன்கா, ஒரு லச்சத்துக்கும் (2006->) அதிகமான இராணுவத்தை இழந்து/இழக்கவைத்து நிண்டபோது... (கடைசி 8 மாசம் சொச்சம்..) இந்தியா நேரடியாக பல்லயிரக்கணக்கில் இறங்கியுள்ளது.

இன்னும் நிப்பதாக சொல்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.